Saturday, 14 March 2015

அம்மா

ஆதி பராசக்தியோ ஆதாமின் ஏவாளோ
பரிசுத்த ஆவியால் கருவுற்ற மேரியோ
இறைதூதரை இங்கு தந்த ஆமினாவோ
போதி மரத்தானைக்  கருவுற்ற மாயாவோ
அகிலத்தின் கரு அம்மா அன்பின் உரு அம்மா
வாழ்வின் திரு அம்மா உயிரின் வழி அம்மா

இறைவன் ஆக்குவான் காப்பான் அழிப்பான்
அன்னை ஆக்குவாள் காப்பாள் அழிக்க மாட்டாள்
அதனால் அன்னை இறவனிலும் மேலான இறைவன்
அன்னை மடி தவழச் சிவனுக்கும் பாக்கியமில்லை
அன்னை மேரி ஒரு பாலனுக்கு அன்னை
அல்பேனியாவில் பிறந்த அன்னை திரேசா
அரவணைத்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு
அகிலத்தில் அளவே இல்லை அளவே இல்லை
சொர்க்கம் எங்கே எனக் கேட்டதற்கு
நபி நாயகம் கொடுத்த விடை
சொர்க்கம் அன்னையில் காலடியில்

அன்போடு பாக்கும் அக்காவும் அம்மா
பாசத்தோடு தோள் சாயும் தங்கையும் அம்மா
வாஞ்சையோடு கால் பிடிக்கும் மகளும் அம்மா
உரிமையோடு உதவும் மனைவியும் அம்மா
எத்தனை பெண்களைப் பார்த்தாலும்
அம்மம்மா அப்பம்மா காட்டும்
பாசம் பரிவுக்கு அகிலத்தில் ஈடில்லை

அம்மா எனும் நிலைவந்தால்
புள்ளி மானும் அன்பால்
கொடிய மிருகத்தையும்
விரட்டியடிக்கும்

கையளவு இதயத்தின் அன்பில்
கோடானு கோடி உலகங்களும்
அளவிட முடியா அண்ட வெளியும்
அடங்கிப் போகும்
அந்த அன்பின்
உற்பத்தி நிலையம் அம்மா

காகக் கூட்டில் முட்டையிட்ட
குயிலும் ஓர் அம்மா
பொரித்த  குஞ்சைத் துரத்திய
காகமும் ஓர் அம்மா

மழையைப் பொழிந்து
மண்ணில் உணவாகி
உணவாக்கும் முகிலும் அம்மா

மண்ணை உழுது
வியர்வை சிந்தி
உணவாக்கு உழவனும் அம்மா

அன்பின் வற்றாத ஊற்று அம்மா
அழகு எது என்றால் அதுவும் அம்மா
அறிவின் ஆரம்பப் புள்ளி அம்மா
வெற்றியின் கரு அம்மா
தோல்வியின் மறைவிடம் அம்மா

அம்மாவின் கடையில்
பிள்ளைகளுக்கு என்றும் இலவசமே
அம்மாவின் நீதிமன்றில்
பிள்ளைகளுக்கு என்றும் மன்னிப்பே
அம்மாவின் பாடசாலையில்
பிள்ளைகளுக்கு என்றும் சித்தியே
அம்மாவின் பணிமனையில்
பிள்ளைகளுக்கு என்றும் ஊக்கத் தொகையே

வானில் இருந்து விழும் மழைத்துளிகளை
கணக்கிட்டுப் பார்
காற்றில் இருக்கும் அணுக்களை
கணக்கிட்டுப்பார்
விண்ணில் மீன்னும் உடுக்களை
கணக்கிட்டுப்பார்
கடற்கரை மணல்களை
எண்ணிக்கை இட்டுப்பார்
உன் அன்னையின்
அன்பின் அளவு கிடைக்கும்

தலைவன் வழி நடந்து
பிறர் வாழத் தன்னுயிர்
கொடுத்த வீரனும் ஓர் அம்மா

எட்டரை மணி நேரம்
எட்டாத் தூரம் நீந்திச் சென்று
சாதனை படைத்த
அங்கயற்கண்ணியும் ஓர் அம்மா

பேசும் மொழியும் அம்மா
வாழும் நாடும் அம்மா
மொத்தத்தில் பூமியே அம்மா

Friday, 13 March 2015

நகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்!!!!!!!!!

ஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ஒன்றும் தெரியாது. முதலில் ஒரு சிறு புற்தரையைக் கண்டு அதிசயித்தது நின்றது அப்போது ஒரு பெண் முயல் அதனிடம் வந்தது.

தன்னிடம் வந்த பெண் முயலை ஆச்சரியத்துடன் ஆய்வுகூட முயல் பார்த்தது. தனக்கு வெளி உலகம் பற்றித் தெரியாது என்று தன் கதையைச் சொன்னது. அதற்கு அந்தப் பெண் முயல் உலகம் மிகவும் இனிமையானது என்று சொல்லி முயலை ஒரு தோட்டத்திற்கு கூட்டிச் சென்று அங்கு உள்ள கரட்களை எப்படித் தோண்டி வெளியில் எடுப்பது என்பதைக் காட்டிக் கொடுத்தது. இரண்டும் நிறையக் கரட்களை உண்டு மகிழ்ந்தன. இந்தக் கரட் மட்டும்தானா உலகம் என்று ஆய்வுகூட ஆண் முயல் கேட்டது. பின்னர் அந்தப் பெண் முயல் ஒரு மலையும் ஒரு தடாகமும் உள்ள இடத்திற்கு ஆய்வு கூட முயலை அழைத்துச் சென்று உலகம் மிகவும் அழகானது என்றது. ஆய்வுகூட முயலும் இயற்கை அழகுகளைப் பார்த்து இரசித்தது. பின்னர் இவ்வளவு தான உலகம் என்று ஆய்வு ஆண் கூட முயல் கேட்டது. பின்னர் வேறு இரு முயல்கள் ஒன்றுடன் ஒன்று காதல் புரிவதைக் காட்டியது பெண் முயல். பின்னர் ஆய்வுகூடமுயலும் பெண் முயலும் காதல் புரிந்தன. இப்போது இந்த உலகம் உண்மையில் மகிழ்ச்சி நிறைந்ததுதான் என்றது ஆய்வுகூட ஆண் முயல். அப்போ என்னுடன் இனி வாழ்நாள் பூராவும் இருப்பாயா என்று கேட்டது பெண் முயல். அதற்கு ஆண் முயல் இல்லை நான் மீண்டும் ஆய்வு கூடம் போகப்போகிறேன் என்றது. பெண் முயல் ஆச்சரியப்பட்டு ஏன் என்றது. அதற்கு அந்த ஆய்வுகூட ஆண் முயல் என்னால் சிகரட் இல்லாமல் இருக்க முடியவில்லை என்றது.

Six stages of married life:

1: Tri-weekly

2: Try weekly

3: Try weakly

4. Try oysters

5: Try anything

6: Try to remember

ஒரு வகுப்பில் ஒரு ஆசிரியை கடைசிப்பாடத்தை எடுத்துக் கொண்டிருந்தார். தான் சொல்லும் கூற்றுகளை யார் சொன்னார்கள் என்று கண்டுபிடித்துச் சொல்பவர்கள் உடனே வீடு செல்ல அனுமதிக்கப்படுவீர்கள் என்று சொல்லி முத்லாவதாக "இது இங்கிலாந்தின் உன்னதமான தருணம்" என்ற கூற்றை யார் சொன்னார்கள் எனக் கேட்டார்.
ஒரு மாணவி எழுந்து வின்ஸ்டன் சேர்ச்சில் எனப்பதிலளித்தாள். சரியான பதில் நீ உடன் வீடு செல்லலாம் என்றார் ஆசிரியை.

அடுத்து "நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காமல் நீ நாட்டுக்கு என்ன செய்தாய் என்று கேட்டுப்பார்." என்ற கூற்றை யார் சொன்னார் என வினவினார் ஆசிரியை.
 ஒரு மாணவி எழுந்து ஜோன் எஃப் கெனடி என்றாள் அவளைப் பாராட்டி வீட்டுக்கு அனுப்பினார் ஆசிரியை.
 தனக்குத் தெரிந்த பதிலை இரு மாணவிகள் தன்னை முந்திக் கொண்டு சொல்லிவிட்டார்கள் என ஆத்திரம் அடைந்த ஒரு மாணவன் "இரண்டு தேவடியாளும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்" என்றான்.
அது யார் சொன்னது என ஆத்திரத்துடன் கேட்டார் ஆசிரியை.
இன்னொரு மாணவி எழுந்து பில் கிளிண்டன் என்றாள்.
அதிர்ச்சி அடைந்த ஆசிரியை முழு வகுப்பையும் வீடு செல்லச் சொன்னார்.

Monday, 9 March 2015

உலக அரங்கில் தனிமைப்படுத்தப்படும் பாக்கிஸ்த்தானின் பொறாமை இந்தியாவின் மேல்

பாக்கிஸ்த்தானில் ஒரு நகைச்சுவைக் கதை: ஓர் இந்தியனும், ஓர் அமெரிக்கனும் ஓர் யூதனும் ஒன்றாக மது அருந்திக் கொண்டிருந்தார்கள். அப்போது இந்தியன் ஜன கணமன அதி நாயக.... என்று பாடி இந்து தான் பாக்கிஸ்ட்தானின் தேசிய கீதம் என்றான். அமெரிக்கன் ஒரு பாவித்த Sanitary Napkinஐ எடுத்துக் காட்டி இதுதான் பாக்கிஸ்த்தானின் தேசியக் கொடி என்றான். பின்னர் யூதன் ஒரு உலக வரைபடத்தை எடுத்து மேசையில் விரித்தான். அதில் பாக்கிஸ்த்தான் என ஒரு நாடு இருக்கவில்லை. இதை அறிந்த பாக்கிஸ்த்தானியர்கள் இஸ்லாமபாத்தில் பெரும் ஆர்ப்பாட்டம் செய்து டேவிட் கமரூனின் உருவப்பொம்மையை கொழுத்தினர். ஏன் டேவி காம்ரூனின் உருவப் பொம்மை எனக் கேட்டதிற்கு பாக்கிஸ்த்தானியர்களின் உலக அரசியல் அறிவு அப்படிப்பட்டது எனப் பதில் வழங்கப்பட்டது.

 சீன அதிபர் ஸி ஜின்பிங், ஜப்பானியத் தலைமை அமைச்சர் சின்சோ அபே,அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆகியோரின் இந்தியப் பயணம் பாக்கிஸ்த்தானில் பலரையும் பொறாமைப்படுத்தியதுடன் கலவரப்படுத்தியும் உள்ளது. இதைத் தொடர்ந்து பாக்கிஸ்த்தான் தனிமைப்படுத்தப் படுகிறதா என்ற கேள்வி பாக்கிஸ்த்தானில் பரவலாக எழுந்துள்ளது. 2014- ஜனவரியில் ஸி ஜின்பிங்கின் பயணத்தின் போது இந்தியாவும் சீனாவும் பன்னிரண்டு உடன்படிக்கைகள் கைச்சாத்திட்டத்திட்டதுடன் சீனா இந்தியாவில் இருபது பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான முதலீட்டைச் செய்வதாகவும் உடனடிக்கை செய்யப்பட்டது.

வயித்தெரிச்சலைக் கிளறும் இந்தியா!
ஜப்பானித் தலைமை அமைச்சரின் இந்தியப் பணம் வெறும் பொருளாதார மட்டத்தில் இருந்த இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை அரசியல் மட்டத்திற்கும் பாதுகாப்பு ஒத்துழைப்பு மட்டத்திற்கும் உயர்த்தியது. பராக் ஒபாமா இந்தியாவிற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாது காப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமை பெறுவதை அமெரிக்கா ஆதரிக்கின்றது என்பதை மீண்டும் எடுத்துரைத்தார். இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் பாக்கிஸ்த்தான் தனது நாட்டில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 2008-ம் ஆண்டு பாக்கிஸ்த்தானில் இருந்து மும்பாய் சென்று தாக்குதல் நடாத்திய பயங்கரவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப் பட்டது பாக்கிஸ்த்தானில் ஆத்திரத்தைக் கிளறியது. இஸ்லாமாபாத் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கொடுக்கின்றது என்ற புது டில்லியின் நிலைப்பாட்டை வாஷிங்க்டன் ஆதரிப்பது பாக்கிஸ்த்தானியர்களைக் கடும் விசனத்துக்கு உள்ளாக்குகின்றது.

உள் நாட்டுப் பிரச்சனையைப் பார்க்கவே நேரமில்லை
பாக்கிஸ்த்தான் தலைமை அமைச்சர் ஷெரிப் நவாஸிற்கு உள் நாட்டில் அவரைப் பதியில் இருந்து தூக்கி எறியப் பெரும் கிளர்ச்சிகளைச் செய்து கொண்டிருக்கும் இம்ரான் கானையும் அவரது பாக்கிஸ்த்தானின் நீதிக்கான கட்சியினரையும் சமாளிக்கவே நேரம் போதாது. ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றச் சென்ற நரேந்திர மோடி அங்குள்ள இந்தியர்களுடன் பெரிய சந்திப்பை ஏற்பாடு செய்தார். ஆனால் நவாஸ் அவசர அவசரமாக நாடு திரும்பினார். தாமதித்தால் அவர் பதவிக்கே ஆப்பு வைக்கப்படும் என்ற அச்சம். நவாஸ் ஐநா பாதுகாப்புச்சபையில் உரையாற்றும் போது பலர் அவையில் இருந்து வெளியேறிவிட்டனர். வெளியில் வந்த் நவாஸை "போ நாவாஸ் போ" என்னும் பாக்கிஸ்த்தானிய ஆர்ப்பாட்டக்காரர்களின் குரலே வரவேற்றது. பாக்கிஸ்த்தானியர்கள் தம் அழுக்குத் துணிகளை நியூரோர்க்கிலா கழுவுவது எனக் கேள்வி எழுப்பினார் பாக்கிஸ்த்தான் ருடேயின் ஆசிரியர். அந்த ஆர்ப்பாட்டம் இம்ரான் கானின் பாக்கிஸ்த்தானிற்கான நீதிக் கட்சியின் அசிங்கமான தந்திரோபாயம் என்றார் ஆசிரியர் அரிஃப் நிஜாமி. அவரது ஆத்திரம் நரேந்திர மோடி அமெரிக்காவில் தன்னைச் சிறப்பாகக் காட்சிப்படுத்தியதில் உள்ள பொறாமையின் வெளிப்பாடு போல் தெரிந்தது. பாக்கிஸ்த்தானிடம் உலகிற்கு வழங்க இந்தியாவைப் போல் ஏதும் இல்லை எனப் பாக்கிஸ்த்தானியர்கள் பலர் அஞ்சுகின்றார்கள்.

பாக்கிஸ்த்தானில் ஈரான் சவுதி போட்டி
ஈரானை மன்னர் ஷா ஆண்ட காலத்தில் பாக்கிஸ்த்தானுக்கும் ஈரானுக்கும் இடையில் நல்லுறவு இருந்தது. இந்தியாவில் இருந்து பிரிந்த போது பாக்கிஸ்த்தானை முதலில் அங்கீகரித்த நாடு ஈரான் என்பதுடன் பாக்கிஸ்த்தானுக்கு முதலில் பயணம் செய்த முதல் வெளிநாட்டுத் தலைவர் அப்போதைய ஈரான் மன்னர் ஷா ஆகும். 1977-ம் ஆண்டு சுல்பிகார் அலி பூட்டோ தனது அணுக்குண்டு உற்பத்தித் திட்டத்திற்கு ஈரான் நிதி உதவி செய்யக் கோரிய போது ஷா மறுத்து விட்டார். இதன் பின்னணியில் அமெரிக்கா இருந்தது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஷாவின் ஆட்சி கவிழ்ந்து அயத்துல்லா கொமெய்னி தலைமையில் புதிய அரசு உருவான போது அதை முதலில் அங்கீகரித்த நாடு பாக்கிஸ்த்தான் ஆகும்.  பாக்கிஸ்த்தானிடமிருந்து  அணுக் குண்டு உற்பத்தித் தொழில் நுட்பத்தைப் பெற ஈரான் பாக்கிஸ்த்தானுடனான நட்புறவில் அதிக அக்கறை காட்டத் தொடங்கியது. பாக்கிஸ்த்தானிய விஞ்ஞானி ஏ கியூ கான் ஈரானின் அணுக்குண்டு ஆராய்ச்சிக்கு உதவி செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டது. பாக்கிஸ்த்தானில் ஈரான் அக்கறைக் காட்டியதைத் தொடர்ந்து அதற்குப் போட்டியாக சவுதி அரேபியாவும் பாக்கிஸ்த்தானுடன் நட்பை வளர்க்க முயன்றது. இதன் விளைவாக 1987-ம் ஆண்டில் இருந்து பக்கிஸ்த்தானில் சுனி, சியா முஸ்லிம்களுக்கு இடையிலான மோதல் உருவானது. 80 விழுக்காடு சுனி முஸ்லிம்கள் இருக்கின்றனர். இருந்தும் பாக்கிஸ்த்தானில் சியா முசுலிம்களும் சுனி முசுலிம்களும் ஒற்றுமையாகவே வாழ்ந்து வந்தனர்.பாக்கிஸ்த்தானில் சுனி முசுலிம்கள் ஒதுக்கப்படாத நிலை இருந்தது. எண்பது விழுக்காடு சுனி முஸ்லிம்களைக் கொண்ட பாக்கிஸ்த்தானில் பாக்கிஸ்த்தானை உருவாக்கிய அலி ஜின்னா, காயித் அஜாம் ஆகியவர்களில் இருந்து சுல்பிகார் அலி பூட்டோ அவரது மருமகன் வரையும் பல பாக்கிஸ்தானிய ஆட்சியாளர்கள் படைத்துறை உயர் தளபதிகள் அனைவரும் சியா முஸ்லிம்களே. அணுக்குண்டு வல்லரசாக முயலும் சியா ஈரானிற்கும் பிராந்திய வல்லரசாக முயலும் சுனி சவுதி அரேபியாவிற்கும் இடையிலான போட்டியால் பாக்கிஸ்த்தானில் பலர் கொல்லப்பட்டனர். இந்த மோதல்களுக்கு அல் கெய்தா ஒரு புறமும் சவுதி அரேபியா மறுபுறமும் நின்று சுனி முசுலிம்களுக்கு உதவின. ஈரான் என்றாவது ஒரு நாள் அணுக்குண்டை உற்பத்தி செய்யலாம் என சவுதி அரேபியா அஞ்சுகிறது. தான் அணுக்குண்டை உற்பத்தி செய்வதிலும் பார்க்க சுனி முசுலிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பாக்கிஸ்த்தானிடம் இருந்து அணுக்குண்டை வாங்குவது சவுதி அரேபியாவிண் மாற்றுக் கொள்கைகளில் ஒன்றாக இருக்கின்றது. சவுதியின் கைக்கு அணுக்குண்டு போவதைத் தடுக்க இஸ்ரேல்  இந்தியாவுடன் இணைந்து பாக்கிஸ்த்தானின் அணுக்குண்டுகளை அழிக்க முயலலாம். பாக்கிஸ்த்தானிடம் இருக்கும் அணுக்குண்டுகளை சுற்றி வட்டமிடுபவர்களால் பாக்கிஸ்த்தானிற்கு ஆபத்தே.  பாக்கிஸ்த்தானில் சவுதி அரேபியாவும் ஈரானும் புகுந்து அங்கு ஒற்றுமையாக இருந்த சியா, சுனி முஸ்லிம்களிடையே மோதல்களை உருவாக்கி விட்டார்கள்.

தேவையான நேரங்களில் கைவிட்ட சீனா
இந்தியாவிற்கு எதிராக பாக்கிஸ்த்தானை சீனா பாவித்தாலும் தேவையான கட்டங்களில் சீனா பாக்கிஸ்த்தானிற்கு தேவையான உதவிகளைச் செய்ததில்லை. பங்களாதேசப் பிரிவினைப் போரின் போது இந்தியாவைத் திசை திருப்ப சீனப் படைகளை இந்திய எல்லைகளை நோக்கி நகர்த்தும் படி அமெரிக்கா விடுத்த வேண்டுகோளைச் சீனா நிராகரித்து விட்டது. ஆனால் இந்தியாவின் அணுக்குண்டு உற்பத்தி வேகத்திற்கு ஈடு கொடுக்கக் கூடியவகையில் பாக்கிஸ்த்தானிய அணுக்குண்டு உற்பத்தி செய்ய சீனா பாக்கிஸ்த்தானிற்குப் பதப்படுத்தப்பட்ட யுரேனியம் வழங்கி இருந்தது. பாக்கிஸ்த்தானில் உள்ள இஸ்லாமியத் தீவிரவாதிகள் தனது நாட்டின் சின் ஜியாங் மாகாணத்தில் உள்ள இஸ்லாமியர்களுக்கு உதவி செய்வது சீனாவிற்கு கடும் அதிருப்தியைக் கொடுத்தது. 1999-ம் ஆண்டு இந்தியாவிற்கும் பாக்கிஸ்த்தானிற்கும் இடையில் நடந்த கார்கில் போரில் பாக்கிஸ்த்தானிற்குப் படைக்கலன்கள் வழங்க மட்டுமல்ல இராசதந்திர உதவிகளைக் கூட சீனா மறுத்துவிட்டது. கார்கிலில் இருந்து பாக்கிஸ்த்தானியப் படைகள் வெளியேற வேண்டும் என்பதில் சீனா அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட்டது. 2008-ம் ஆண்டு பாக்கிஸ்த்தானிய லக்சர் இ தொய்பா அமைப்பினர் மும்பாய் நகரில் செய்த தாக்குதலைத் தொடர்ந்து பாக்கிஸ்த்தானின் ஜ்மத் உத் தவா அமைப்பிற்கு எதிராகப் பொருளாதாரத் தடை செய்ய வேண்டும் என ஐநா பாதுகாப்புச் சபையில் கொண்டு வந்த தீர்மானத்தை தனது இரத்து அதிகாரத்தைக் கொண்டு தடை செய்ய சீனா மறுத்து விட்டது.

அமெரிக்க பாக்கிஸ்த்தானிய நட்பு: பூக்காத பூ
அமெரிக்காவிற்கும் பாக்கிஸ்த்தானிற்கும் இடையிலான உறவு மூன்று கட்டங்களைக் கொண்டது. முதலாவது கூட்டுச் சேரா நாடுகள் அமைப்பில் பாக்கிஸ்த்தானை இணையாமல் தடுக்க அமெரிக்க மேற்கொண்ட் முயற்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. இரண்டாவது சோவியத் அல்லது சீன அல்லது இரண்டும் இணைந்த படை எடுப்பு ஒன்றினால் பாக்கிஸ்த்தான் பொதுவுடமை நாடாகாமல் தடுப்பதை அடிப்படையாகக் கொண்டது. மூன்றாவது ஆப்கானிஸ்த்தானையும் இஸ்லாமியத் தீவிரவாதத்தையும் அடிப்படையகாகக் கொண்டது. அமெரிக்காவிற்கும் பாக்கிஸ்த்தானிற்கும் இடையிலான தற்போதைய உறவிற்கும் பாக்கிஸ்த்தானில் உள்ள தீவிரவாதத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.  அமெரிக்காவிற்கும் பாக்கிஸ்த்தானிற்கும் இடையிலான உறவு 1954-ம் ஆண்டு கட்டி எழுப்பப்பட்டது. இந்தியா கூட்டுச் சேரக் கொள்கை என்னும் பெயரில் சோவியத் ஒன்றியத்துடன் நெருக்கமாகியதைச் சமாளிக்க பாக்கிஸ்த்தான் அமெரிக்காவுடன் அப்போது இணைந்து கொண்டது. பின்னர் 1971-ம் ஆண்டு நடந்த பங்களாதேசப் பிரிவினைப் போரின் போது அமெரிக்கா பாக்கிஸ்த்தானிற்கு நிறையப் படைக்கலன்களைக் கொடுத்து உதவியது. 1989-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்த்தானை ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து அமெரிக்க பாக்கிஸ்த்தானிய உறவு நெருக்கமடைந்தது. அமெரிக்கா பல பில்லியன் கணக்கில் செலவழித்து பாக்கிஸ்த்தான் உளவுத் துறையுடன் இணைந்து ஆப்கானிஸ்த்தானை ஆக்கிரமித்துள்ள சோவியத் படைகளுக்கு எதிராக மதவாதப் போராளிகளை பயிற்றுவித்தது. அரபு ஆப்கானிஸ்த்தானியர் என்னும் பெயரில் உருவாக்கப்பட்ட போராளி அமைப்பில் பின் லாடனும் ஒருவராவர். பின் லாடனுக்கு அமெரிக்க உளவுத் துறையான சிஐஏ பயிற்ச்சி வழங்கியதாக நம்ப்பப்படுகின்றது. சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்த்தானில் இருந்து வெளியேறிய பின்னர் சவுதி அரேபிய செல்வந்தரும் பொறியியலாளருமான பில் லாடனும், எகிப்தில் வாழ்நாள் முழுக்கப் போராளியாக இருந்த ஜவாகிரி, பாக்கிஸ்த்தானியக் கல்விமானுமாகிய ஃப்டல் ஆகியோர் இணைந்து அல் கெய்தா அமைப்பை 1988-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11-ம் திகதி உருவாக்கினர்கள். இவர்கள் தீவிர அமெரிக்க எதிர்ப்பாளர்களாக மாறினார்கள். இவர்களின் அமெரிக்க எதிர்ப்பின் உச்சக் கட்டமாக 2001 செப்டெம்பர் 11-ம் திகதி நிகழ்ந்த அமெரிக்காவின் நியூயோர்க் நகரின் இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடந்தது.  1998-ம் ஆண்டு பாக்கிஸ்த்தான் அணுக்குண்டுப் பரிசோதனை செய்ததைத் தொடர்ந்து அமெரிக்கா பாக்கிஸ்த்தானிற்கு வழங்கி வந்த எல்லா உதவிகளும் நிறுத்தப்பட்டன. 2001-ம் ஆண்டு அமெரிக்கா பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாக்கிஸ்த்தானையும் இணைக்க மீண்டும் பாக்கிஸ்த்தானுக்கான அமெரிக்க உதவி வழங்குதல் ஆரம்பிக்கப்பட்டது. 2009-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆப்-பாக் கேந்திரோபாயம் ஒன்றை வகுத்தார். அமெரிக்கா பாக்கிஸ்த்தானிற்கு 7.5 பில்லியன் டொலர்கள் உதவியை ஐந்து ஆண்டுகளுக்கு வழங்குவதாக அறிவித்தது.  பின் லாடனைக் கொல்ல வந்த அமெரிக்க கடற்படையின் சீல் பிரிவினர் பின் லாடன் தங்கி இருந்த மாளிகையில் இருந்து பல கணனிகளையும் கைப்பேசிகளையும் எடுத்துச் சென்றனர். அதிலிருந்து பாக் படையினர் மற்றும் உளவுத் துறையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையிலான தொடர்புகள் பற்றிய தகவல்களை அமெரிக்கா பெற்றுக் கொண்டது. இது பாக்கிஸ்த்தானின் நம்பகத்தன்மையின்மையை மேலும் உறுதி செய்தது. ஆப்கானிஸ்த்தானில் அமைதி திரும்பினால் பாக்கிஸ்த்தானை அமெரிக்காவிற்கு அதிகம் தேவைப்படாது என்பதை பாக்கிஸ்த்தான் அறியும்.

2013-ம் ஆண்டு பாக்கிஸ்த்தானில் வெளிநாட்டு முதலீடு 1.4 பில்லியன் டொலர்கள் மட்டுமே, இந்தியாவில் இது 28 பில்லியன் டொலர்களாக இருந்தது. மற்ற வளர்முக நாடுகளில் இது மொத்தம் 759 பில்லியன் டொலர்களாகும். பாக்கிஸ்த்தானில் உள்ள தீவிரவாதப் பிரச்சனை, ஊழல் மிக்க நிர்வாகம் போன்றவை வெளிநாட்டு முதலீடுகளுக்குத் தடையாக அமைந்துள்ளது. பாக்கிஸ்த்தானுடாகப் பறப்புக்கள் செய்வதையே பல விமானச் சேவைகள் தவிர்க்கின்றன. பன்னாட்டு விமான நிலையங்களில் இஸ்லாமாபாத் விமான நிலையம் மிக மோசமானஓன்றாகக் கருதப்படுகின்றது.  பாக்கிஸ்த்தானில் பெரிய பன்னாட்டு மாநாடுகளோ அல்லது விளையாட்டுப் போட்டிகளோ பெரிதாக நடப்பதில்லை.

அடுத்த 50 ஆண்டுகளில் சீனாவிலும் பார்க்க இந்தியா வேகமான பொருளாதார வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப் பொருளாதார வளர்ச்சி சீனாவை இந்தியாவின் பகையாளி என்ற நிலையிலும் பார்க்க பங்காளி என்ற நிலைக்கு இட்டுச் செல்லும். இந்த நிலை பாக்கிஸ்த்தானை மேலும் தனிமைப்படுத்தும். இந்தியா தனது பொருளாதாரத்தையும் படைவலுவையும் மேம்படுத்தி சீனா, அமெரிக்கா, இரசியா ஆகிய நாடுகளுடனான தனது உறவை கவனமாகவும் சிறப்பாகவும் கையாளும் போது பாக்கிஸ்த்தான் தனிமைப்படுத்தப்படலாம்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...