Friday, 9 October 2015

சீனா நிர்மாணித்த தீவுகளுக்கு சவால் விடத் தீர்மானித்த அமெரிக்கா

தென் சீனக் கடலில் உள்ள பவளப் பாறைகளின் மேல் கடற்படுக்கையில் இருந்து மணலை வாரி இறைத்துப் போட்டு நிரவி சீனா பல தீவுகளை உருவாக்கி வருகின்றது. இந்தத் தீவுகளில் விமான ஓடுபாதைகளையும் படைத் தளங்சீனா களையும் நிர்மானிக்கின்றது. சீனா தீவுகளைக் கட்டி எழுப்பும் கடற்பரப்பு பன்னாட்டுக் கடற்பரப்பு என சீனாவின் அயல் நாடுகளும் ஐக்கிய அமெரிக்காவும் வலியுறுத்தி வருகின்றன. சில நாடுகள் இது தமக்கு சொந்தமான பிரதேசம் எனவும் சொல்கின்றன. இத்தீவுகளைச் சுற்றிய 12 கடல் மைல்கள் தனது ஆதிக்கத்திற்கு உட்பட்டது என்றது சீனா. இதற்குச் சவால்விடும் வகையில் அந்த 12 கடல் மைல் பரப்பினுள் ஐக்கிய அமெரிக்காவின் கடற்படைக் கலன்களை இரண்டு வாரங்களுக்குள் அனுப்பப் போவதாக ஐக்கிய அமெரிக்கா அறிவித்துள்ளது.
எரிபொருள் வளம், கனிம வளம், மீன் வளம் கப்பற் போக்கு வரத்து முக்கியத்துவம் ஆகியவற்றைக் கொண்ட தென் சீனக் கடல் இப்போது உலகில் கொதி நிலையில் உள்ள பிராந்தியங்களில் ஒன்றாக உருவாகிவிட்டது. தென் சீனக் கடற்பிராந்தியம் முழுவதும் சீனா தன்னுடையது என்று அடம்பிடிக்கிறது. தென் சீனக் கடற்பிராந்தியத்திலும் கிழக்குச் சீனக் கடற்பிராந்தியத்திலும் உள்ள தீவுகள் தொடர்பாக ஜப்பான், தாய்வான், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்னாம், கம்போடியா, இந்தோனேசியாஆகிய நாடுகள் சீனாவுடன் பலமாக முரண்படுகின்றன. தென் சீனக் கடலில் 17.7 பில்லியன் தொன் எரிபொருள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது குவைத்தில் உள்ள 13 பில்லியன் தொன்னிலும் அதிகமாகும். சீன அரசு தென் சீனக் கடலின் எரிபொருள் ஆய்விற்க்கு முப்பது பில்லியன் டொலர்களைச் செலவிடத் திட்டமிட்டுள்ளது. தென் சீனக் கடலை சீனா இரண்டாவது பாரசீகக் கடல் என்கின்றது. 

உலகக் கடற் போக்கு வரத்தில் 30 விழுக்காடு செல்லும் தென்சீனக் கடற்பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் வளர்வதை பல நாடுகள் விரும்பவில்ல்லை. தென் சீனக் கடலில் ஸ்பிராட்லி தீவுக் கூட்டத்தில் உள்ள பவளப்பாறைகளை மேடுறுத்தி சீனா உருவாக்கிய தீவுகளின் மேல் 2015-05-20-ம் திகதி புதன் கிழமை ஐக்கிய அமெரிக்காவின் P8-A Poseidon என்னும் வேவு விமானம் சி.என்.என் தொலைக்காட்சிக் சேவையினர் சகிதம் பறந்து சென்றது. அமெரிக்காவின் விமானத்திற்கு சீனக் கடற்படையினர் எட்டுத் தடவைகள் எச்சரிக்கைச் செய்திகளை அனுப்பினர். ஸ்பிராட்லி தீவுக் கூட்டங்களில் உள்ள பியரி குரொஸ் என்னும் பவளப்பாறையை மேடாக்கி சீனா உருவாக்கிய தீவின் மேல் இச் சம்பவம் நடந்தது.

பியரி குரோஸில் சீனா அமைத்த தீவில் 3000 மீட்டர் நீளமான விமான ஓடுபாதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஓடுபாதை 2015-ம் ஆண்டின் இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகின்றது. அங்கு சீனக் கடற்படையினர் பெருமளவில் இருந்ததாக சி.என்.என் தொலைக்காட்ச்சிச் சேவையினர் தெரிவித்தனர். ஸ்பார்ட்லித் தீவுகளில் சீனா உருவாக்கும் தீவுகள் அத் தீவுகளுக்கு உரிமை கொண்டாடும் பிலிப்பைன்ஸ், வியட்னாம், மலேசியா, தாய்வான். புரூனே ஆகிய நாடுகளைக் கலக்கமடைய வைத்துள்ளது. இந்த நாடுகளுக்கு நம்பிக்கை கொடுக்கவும் தென் சீனக் கடலினூடாக உலகக் கப்பற் போக்கு வரத்துக்குள் சுந்ததிரமாக நடமாடுவதை உறுதி செய்யவும் தான் முயற்ச்சிப்பதாக அமெரிக்கா சொல்கின்றது.

சீனாவின் ஒன்பது புள்ளிக் கோடு
1947-ம் ஆண்டில் இருந்த சீன ஆட்சியாளர்கள் தென் சீனக் கடலில் தங்கள் ஆதிக்கத்தை ஒரு 11துண்டுக் கோடுகள் வரைபடத்தின் மூலம் வெளிப்படுத்தி இருந்தனர். பின்னர் 1949இல் சீனாவில் ஆட்சிக்கு வந்த பொதுவுடமை ஆட்சியாளரான சூ என் லாய் ஒரு 9 துண்டுக் கோடுகள் மூலம் தென் சீனக் கடலில் தமது ஆதிக்கத்தை வரையறை செய்தார். இதன்படி பரசெல்ஸ் தீவுகளும் ஸ்பிராட்லி தீவுகளும் தன்னுடையவை என்றது சீனா. பரசெல்ஸ் தீவுகள் தம்முடையவை என வியட்னாமும் தாய்வானும் சொல்கின்றன. பரசெல்ஸ் தீவுகளில் சில தமது நாடுகளுக்கு அண்மையில் இருப்பதால் அவை தம்முடையவை என்கின்றன இந்தோனேசியாவும் பிலிப்பைன்ஸும் புரூனியும், மலேசியாவும். தாய்வானும் சீனாவும் ஸ்பிராட்லி தீவுகளையும், பரசெல்ஸ் தீவுகளையும் தம்மிடம் ஜப்பான் கையளிக்க வேண்டும் என்கின்றன. தாய்வான் 1947இல் செய்யப்பட்ட 11 துண்டுக் கோடுகள் வரைபடத்தை ஒட்டி நிற்கிறது. சீனாவினதும் தாய்வானினதுக் கோரிக்கைகளிற்கு எந்த ஒரு பன்னாட்டு உடன்படிக்கையும் அடிப்படையாக அமையாவில்லை என வியட்னாம் வாதாடுகிறது. முழுத் தாய்வானும் தன்னுடையது என்று சீனா சொல்வதால் மேலும் சிக்கல்கள் இருக்கின்றன. சீனா தனது ஒன்பது புள்ளிக் கோட்டின் மூலம் தென் சீனக் கடலின் 90 விழுக்காடு பரப்பளவிற்கு உரிமை கொண்டாடுகின்றது.

The United Nations Law of the Sea Convention
1982இல் ஐக்கிய நாடுகள் சபையால் உருவாக்கப்பட்ட கடல் மரபொழுங்குச் சட்டத்தின்படி  (The United Nations Law of the Sea Convention) தென் சீனக் கடலில் உள்ள 40 தீவுகள் யாருக்குச் சொந்தம் என்பதைத் தீர்மானிக்க வேண்டும் என வியட்னாமும் மலேசியாவும் இணைந்து ஐநாவிடம் ஒரு மனுவைச் சமர்ப்பித்தன. உடனே சீனாவும் தனது ஒன்பது துண்டுக் கோட்டு வரைபடத்தை இணைத்து ஒரு மனுவை ஐநாவிடம் சமர்ப்பித்தது. சீனாவின் மனுவை எதிர்த்து வியட்னாம் தனது அறிக்கையை ஐநாவிடம் சமர்ப்பித்தது.
தென் சீனக் கடலில் உள்ள பவளப் பாறைகளின் மேல் கடற்படுக்கையில் இருந்து மணலை வாரி இறைத்துப் போட்டு நிரவி சீனா பல தீவுகளை உருவாக்கி வருகின்றது. இந்தத் தீவுகளில் விமான ஓடுபாதைகளையும் படைத் தளங்களையும் சீனா நிர்மானிக்கின்றது. சீனா தீவுகளைக் கட்டி எழுப்பும் கடற்பரப்பு பன்னாட்டுக் கடற்பரப்பு என சீனாவின் அயல் நாடுகளும் ஐக்கிய அமெரிக்காவும் வலியுறுத்தி வருகின்றன. இத்தீவுகளைச் சுற்றிய 12 கடல் மைல்கள் தனது ஆதிக்கத்திற்கு உட்பட்டது என்றது சீனா. இதற்குச் சவால்விடும் வகையில் அந்த 12 கடல் மைல் பரப்பினுள் ஐக்கிய அமெரிக்காவின் கடற்படைக் கலன்களை இரண்டு வாரங்களுக்குள் அனுப்பப் போவதாக ஐக்கிய அமெரிக்கா அறிவித்துள்ளது.

எரிபொருள் வளம், கனிம வளம், மீன் வளம் கப்பற் போக்கு வரத்து முக்கியத்துவம் ஆகியவற்றைக் கொண்ட தென் சீனக் கடல் இப்போது உலகில் கொதி நிலையில் உள்ள பிராந்தியங்களில் ஒன்றாக உருவாகிவிட்டது. தென் சீனக் கடற்பிராந்தியம் முழுவதும் சீனா தன்னுடையது என்று அடம்பிடிக்கிறது. தென் சீனக் கடற்பிராந்தியத்திலும் கிழக்குச் சீனக் கடற்பிராந்தியத்திலும் உள்ள தீவுகள் தொடர்பாக ஜப்பான், தாய்வான், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்னாம், கம்போடியா, இந்தோனேசியாஆகிய நாடுகள் சீனாவுடன் பலமாக முரண்படுகின்றன.

உலகக் கடற் போக்கு வரத்தில் 30 விழுக்காடு செல்லும் தென்சீனக் கடற்பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் வளர்வதை பல நாடுகள் விரும்பவில்ல்லை. தென் சீனக் கடலில் ஸ்பிராட்லி தீவுக் கூட்டத்தில் உள்ள பவளப்பாறைகளை மேடுறுத்தி சீனா உருவாக்கிய தீவுகளின் மேல் 2015-05-20-ம் திகதி புதன் கிழமை ஐக்கிய அமெரிக்காவின் P8-A Poseidon என்னும் வேவு விமானம் சி.என்.என் தொலைக்காட்சிக் சேவையினர் சகிதம் பறந்து சென்றது. அமெரிக்காவின் விமானத்திற்கு சீனக் கடற்படையினர் எட்டுத் தடவைகள் எச்சரிக்கைச் செய்திகளை அனுப்பினர். ஸ்பிராட்லி தீவுக் கூட்டங்களில் உள்ள பியரி குரொஸ் என்னும் பவளப்பாறையை மேடாக்கி சீனா உருவாக்கிய தீவின் மேல் இச் சம்பவம் நடந்தது.

பியரி குரோஸில் சீனா அமைத்த தீவில் 3000 மீட்டர் நீளமான விமான ஓடுபாதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஓடுபாதை 2015-ம் ஆண்டின் இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகின்றது. அங்கு சீனக் கடற்படையினர் பெருமளவில் இருந்ததாக சி.என்.என் தொலைக்காட்ச்சிச் சேவையினர் தெரிவித்தனர். ஸ்பார்ட்லித் தீவுகளில் சீனா உருவாக்கும் தீவுகள் அத் தீவுகளுக்கு உரிமை கொண்டாடும் பிலிப்பைன்ஸ், வியட்னாம், மலேசியா, தாய்வான். புரூனே ஆகிய நாடுகளைக் கலக்கமடைய வைத்துள்ளது. இந்த நாடுகளுக்கு நம்பிக்கை கொடுக்கவும் தென் சீனக் கடலினூடாக உலகக் கப்பற் போக்கு வரத்துக்குள் சுந்ததிரமாக நடமாடுவதை உறுதி செய்யவும் தான் முயற்ச்சிப்பதாக அமெரிக்கா சொல்கின்றது.

சீனாவின் ஒன்பது புள்ளிக் கோடு
1947-ம் ஆண்டில் இருந்த சீன ஆட்சியாளர்கள் தென் சீனக் கடலில் தங்கள் ஆதிக்கத்தை ஒரு 11துண்டுக் கோடுகள் வரைபடத்தின் மூலம் வெளிப்படுத்தி இருந்தனர். பின்னர் 1949இல் சீனாவில் ஆட்சிக்கு வந்த பொதுவுடமை ஆட்சியாளரான சூ என் லாய் ஒரு 9 துண்டுக் கோடுகள் மூலம் தென் சீனக் கடலில் தமது ஆதிக்கத்தை வரையறை செய்தார். இதன்படி பரசெல்ஸ் தீவுகளும் ஸ்பிராட்லி தீவுகளும் தன்னுடையவை என்றது சீனா. பரசெல்ஸ் தீவுகள் தம்முடையவை என வியட்னாமும் தாய்வானும் சொல்கின்றன. பரசெல்ஸ் தீவுகளில் சில தமது நாடுகளுக்கு அண்மையில் இருப்பதால் அவை தம்முடையவை என்கின்றன இந்தோனேசியாவும் பிலிப்பைன்ஸும் புரூனியும், மலேசியாவும். தாய்வானும் சீனாவும் ஸ்பிராட்லி தீவுகளையும், பரசெல்ஸ் தீவுகளையும் தம்மிடம் ஜப்பான் கையளிக்க வேண்டும் என்கின்றன. தாய்வான் 1947இல் செய்யப்பட்ட 11 துண்டுக் கோடுகள் வரைபடத்தை ஒட்டி நிற்கிறது. சீனாவினதும் தாய்வானினதுக் கோரிக்கைகளிற்கு எந்த ஒரு பன்னாட்டு உடன்படிக்கையும் அடிப்படையாக அமையாவில்லை என வியட்னாம் வாதாடுகிறது. முழுத் தாய்வானும் தன்னுடையது என்று சீனா சொல்வதால் மேலும் சிக்கல்கள் இருக்கின்றன. சீனா தனது ஒன்பது புள்ளிக் கோட்டின் மூலம் தென் சீனக் கடலின் 90 விழுக்காடு பரப்பளவிற்கு உரிமை கொண்டாடுகின்றது.

சரித்திரப் பின்னணி
1951-ம் ஆண்டு 48 நாடுகள் சன் பிரான்சிஸ்கோ நகரில் கூடி இரண்டாம் உலகப்போரை அதிகாரபூர்வமாக முடிவுற்கு கொண்டு வரும் சன் பிரான்சிஸ்கோ உடன் படிக்கையில் கையொப்பமிட்டன.  மாநாட்டில் கலந்து கொண்ட சோவியத் ஒன்றியம், போலந்து, செக்கோஸ்லாவாக்கியா ஆகிய நாடுகள் கையொப்பமிட்டன. மாவோ சே துங் பெரும் உள்ளூர்ப் போரில் ஈடுபட்டிருந்தபடியால் சீனா கலந்து கொள்ளவில்லை. மாநாடு ஜப்பானிற்கு பாதகமானது என்று சொல்லி இந்தியா கலந்து கொள்ளவில்லை. ஆனால் ஜப்பான் கலந்து கொண்டு கையொப்பமிட்டது. சன் பிரன்சிஸ்க்கோ உடன்படிக்கையின் படி ஜப்பானின் ஆதிக்கத்தில் இருந்து கொரியா, தாய்வான்,  பேஸ்கடோர்ஸ், ஹாங்காங், அண்டார்டிக்கா, ஸ்பிரட்லி தீவுகள், கியூரில் தீவுகள் ஆகியவை உத்தியோக பூர்வமாக விடுவிக்கப்பட்டன. தென் சீனக் கடலில் உள்ள தீவுகள் யாருக்கு சொந்தம் என்று சன் பிரான்சிஸ்கோ உடன்படிக்கையில் வரையறை செய்யவில்லை. அப்பகுதியில்  பொனின் தீவுகளும் ஒக்கினாவா அமானி, மியக்கோ யேயாமா ஆகியவற்றை உள்ளடக்கிய ரியாக்கு தீவுகளும் (Bonin Islands and the Ryukyu Islands, which included Okinawa and the Amami, Miyako and Yaeyama Islands groups) அமெரிக்காவின் நம்பிக்கைப் பொறுப்பில் விடப்பட்டன. பசுபிக் மாக்கடலின் இரு புறமும் உள்ள 12 நாடுகள் இணைந்து  பசுபிக்தாண்டிய கூட்டாண்மையை Trans Pacific Partnership (TPP ) உருவாக்கும் ஒப்பந்தம் கைச்சாத்திட்டன.  ஐக்கிய அமெரிக்கா ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த தென் சீனக் கடல் ஒரு ஆபத்து நிறைந்த ஆரம்பப் புள்ளியாகும்.   சீனாவிற்கு எதிரான  பொருளாதார, பூகோள அரசியல், மற்றும் கேந்திரோபாய நகர்வுகளின் முக்கிய பகுதியே இந்தக் கூட்டாண்மை உருவாக்கமாகும்.

 ஐக்கிய அமெரிக்கா ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த தென் சீனக் கடல் ஒரு ஆபத்து நிறைந்த ஆரம்பப் புள்ளியாகும்.  சீனா உருவாக்கிய தீவுகளுக்கு அண்மையாக அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களை அனுப்ப வேண்டும் என அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் அஸ்டன் கார்ட்டர் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தார். Trans Pacific Partnership உடன்படிக்கை கைச் சாத்திட்ட பின்னரே வெள்ளை மாளிகை இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. அஸ்டன் கார்ட்டர் அமெரிக்கப் படைகள் பன்னாட்டுச் சட்டங்களுக்கு அமைய உலகின் எப்பாகத்திற்கும் செல்லும் என்றார். ஒஸ்ரேலியாவில் நடந்த கடற்பயணம் தொடர்பான மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்காவின்  பசுப்பிராந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் Scott Swift சில நாடுகள் பன்னாட்டுச் சட்டத்திற்கு அமையாமல் செயற்படுகின்றன என்றார். அந்த நாடுகள் கடற்போக்கு வரத்திற்கு கண்டபடி கட்டுப்பாடுகளும் எச்சரிக்கைகளும் விடுக்கின்றன எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

அமேரிக்காவிற்கு சவால் விடக் கூடிய வகையில் வட துருவத்தில் உள்ள அமெரிக்காவிற்குச் சொந்தமான அலாஸ்க்காவிற்கு பராக் ஒபாமா வடதுருவ நாடுகளின் கூட்டத்திற்குச் சென்ற போது சீனா தனது ஐந்து கடற்கப்பல்களை அலாஸ்க்காவை ஒட்டிய கடற்பிராந்தியத்திற்கு அனுப்பி இருந்தது.

சீனாவின் எதிர்வினை
தான் நிர்மாணிக்கும் தீவுகள் தொடர்பாக அமெரிக்காவுடன் ஏற்கனவே பல பேச்சு வார்த்தைகள் நடத்திவிட்டோம் என்கின்றது சீனா. அமெரிக்கா தனது தீவுகளுக்கு அண்மையாக தனது கடற்படைக் கப்பல்களை அனுப்புவது தொடர்பாக தனது ஆட்சேபனையை ஏற்கனவே அமெரிக்காவிற்கு சீனா தெரிவித்து விட்டது. சீனாவும் தனது கடற்படைக்கப்பல்கலை தனது தீவுகளுக்கு அனுப்பும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.  சுதந்திரக் கடற்பயணம் என்னும் பெயரில் தனது கடல் எல்லைக்குள்
 
No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...