சவுதி அரேபியாவில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு தமிழ் இளைஞன் ஒரு நாள் பாலைவனத்தில் பாதையைத் தொலைத்து விட்டு நீண்ட தூரம் நடந்து களைப்பும் தாகமும் அடைந்தான் அவன் தனக்குத் தெரிந்த காயத்திரி மந்திரம், லிங்காஷ்டகம், விநாயகர் அஷ்டகம், கந்தசஷ்டிக் கவசம் எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டே நடந்தான். கடைசியில் களைத்துப் போய் சகல சக்தியையும் இழந்து ஓர் இடத்தில் சுடு மணலில் பதை பதைத்து உட்கார்ந்தான். அவன் கையில் சுடு மணலுக்குள் ஏதோ ஒன்று தட்டுப் படுவதைப் போல் உணர்ந்தான். மணலைக் கிளறிப் பார்த்தபோது ஒரு புட்டி இருப்பதை கண்டான். அதற்குள் குடிக்க ஏதாவது இருக்கலாம் என்று அவசரமாக அப்புட்டியைத் திறந்தான் என்ன ஆச்சரியம் அதனுள் இருந்து ஒரு பூதம் வெளிவந்தது.
புட்டிக்குள் இருந்து வெளிவந்த பூதம் நன்றி மனிடா மிக்க நன்றி இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தப் புட்டிக்குள் அடைப்பட்டுக் கிடந்த என்னை மீட்டெடுத்தாய். உனக்கு வேண்டிய மூன்று வரங்களைக் கேள் என்றது. அவ்விளைஞன் எனது தாகம் தீர்க்கத் தண்ணீர் கொடு என்றான். உடனே அவனுக்கு குடிக்க தண்ணீரைப் பூதம் கொடுத்தது.
அடுத்துப் பூதம் உனது இரண்டாவது வேண்டுதல் என்ன என்றது. அதற்கு இளைஞன் எனக்கு இந்த இடத்தில் ஒரு பாலைவனச் சோலை மாளிகை ஒன்றுடன் வேண்டும் என்றது. உடனே அங்கு ஒரு பாலைவனச் சோலையும் மாளிகையும் தோன்றியது.
இப்போது பூதம் உனது மூன்றாவது வேண்டுதல் என்ன சொல் மானிட நண்பனே என்றது. அப்போதுதான் அந்த இளைஞனுக்கு தனது வறுமையான குடும்பம் நினைவுக்கு வந்தது. தனது குடும்பத்தை நல்லாக்க வேண்டும் என்று நினைத்த இளைஞன் திடீரென தன் குடும்பம் மட்டுமா வாழச் சிரமப் படுகிறது, முழுத் தமிழினமுமே வாழச் சிரமப்படுகிறதல்லவா என்று எண்ணினான். பூதத்தைப் பார்த்து உலகெங்கும் தமிழர்கள் இனியாவது நிம்மதியாக வாழ வேண்டும் என்றது. உடனே பூதம் கோரமாக ஆத்திரத்துடன் சிரித்தது. உடனே இளைஞன் கையில் இருந்த தண்ணீர் மறைந்தது. இளைஞன் ஆச்சரியப்பட்டு நிற்க பாலைவனச்சோலையும் மாளிகையும் மறைந்தது. பூதம் அவனை எட்டி உதைத்து விட்டுச் சென்றது. அதன் திறந்த முதுகைப் பார்க்கும் போது பூதத்தின் தோளில் பூனூல் தொங்குவதை அவதானித்தான்.
இந்தக் கதையின் நீதி: பூதம் துக்ளக் சோவைப் போலவோ, இந்து ராமைப் போலவோ அல்லது சுப்பிரமணி சுவாமியைப் போலவோ இருக்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...


-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
-
ஒரு நாட்டில் ஒரு அரசன் ஒரு அரசி ஒரு மந்திரி ஒரு அரச வைத்தியர் இருந்தனர். அரசிக்கு அழகான மார்பு. அதன் மேல் மந்திரிக்கு தீராத மோகம். தனது ஆசை...
-
ஆரம்பத்தில் கிரேக்கர் கருங்கடலை உபசரிப்பில்லாக் கடல் என அழைத்தனர். அதனூடாக பயணிப்பது சிரமம் என்பதாலும் அதன் கரையோரங்களில் வாழ்பவர்கள் எத...

No comments:
Post a comment