இந்தியா அச்சமில்லை என்று பொருள்படும் நிர்பய் என்னும் வழிகாட்டல் (Cruise
Missiles) ஏவுகணைகளை 2014-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 17-ம் திகதி வெற்றீகரமாக
ஏவிப் பரிசோதித்துள்ளது. எதிரியின் கதுவிகளுக்கு அதாவது ரடார்களுக்குப்
புலப்படாமல் மிகவும் தாழ்வான உயரத்தில் பறக்க்கக் கூடிய நிர்பய் ஏவுகணைகள்
ஆயிரம் கிலோ எடையுடையவை. அணுக்குண்டுகளைத் தாங்கிச் செல்லவல்லவை.
இந்தியாவின் முப்படைகளும் இவற்றைப் பாவிக்கப் போகின்றன.
2013-ம் ஆண்டு
இந்த ஏவுகணையைப் பரீட்சித்தது தோல்வியில் முடிவடைந்தது. இப்போது நிர்பய்
வெற்றிகரமாகப் பரீட்சிக்கப்பட்டதால் இந்தியாவும் வழிகாட்டல் ஏவுகணைகளை
உற்பத்தி செய்யும் ஒரு நாடாக மாறிவிட்டது. மற்ற நாடுகளிலும் பார்க்க
இந்தியா மிகவும் சிக்கனமாக வழிகாட்டல் ஏவுகணைகளை உற்பத்தி செய்கின்றது.
முழுக்க முழுக்க உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைக் கொண்டு நிர்பய் உருவாக்கப்
பட்டுள்ளது.
ஆறு மீட்டர் நீளமும் அரை மீட்டருக்குச் சற்று அதிகமான
குறுக்களவும் கொண்ட நிர்பய் ஏவுகணைகள் ஆயிரம் முதல் ஆயிரத்து ஐநூறு கிலோ
மீட்டர்கள் தொலைவிற்குப் பாயக் கூடியவை. இவை ஒலியிலும் வேகம் குறைவாகவே
பயணிக்கும். இவற்றில் இறக்கைகளும் வாற்புறம் செதில்களும் இருக்கும்.
நிர்பய் ஏவுகணைகள் சூட்டிகை ஏவுகணைகள் எனப்படுகின்றது அதாவது smart
ஏவுகணைகள். இவை Fire and forget என்னும் முறைமைப் படி செயற்படக்கூடியன.
அதாவது இதை ஏவிவிட்டால் தானாகவே இலக்கை நோக்கிப் பயணிப்பதுடன் தேவை
ஏற்படும் போது இலைக்கை நோக்கி திசையை நிலைமைக்கு ஏற்ப மாற்றுக் கொண்டு
பறக்கும். ஒரு விமானத்தைப் போல் இலக்கைச் சுற்றிப் பறந்து சரியான இடத்தைத்
தெரிவு செய்து அதில் விழுந்து வெடிக்கும். அத்துடன் எல்லாவிதக் கால
நிலைகளிலும் செயற்படக்கூடியவை.
நிர்பய் ஏவுகணைகள் அமெரிக்காவின் Tomahawk ஏவுகணைகளுக்கும் பாக்கிஸ்த்தானின் பாபர் ஏவுகணைகளுக்கும் இந்தியாவின் பதிலடியாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...


-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
-
ஆரம்பத்தில் கிரேக்கர் கருங்கடலை உபசரிப்பில்லாக் கடல் என அழைத்தனர். அதனூடாக பயணிப்பது சிரமம் என்பதாலும் அதன் கரையோரங்களில் வாழ்பவர்கள் எத...
-
F-22, F-35 ஆகிய உலகின் மிகச் சிறந்த ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை உற்பத்தி செய்யும் அமெரிக்கா மிக மிக இரகசியமாக தனது அடுத்த தலைமுறைப் ...

No comments:
Post a comment