Saturday, 16 February 2013

நகைச்சுவை: மிக விநோதமான இழப்பீடுகள்

அம்பர் காசன் என்ற பெண் ஒரு உணவகத்தில் வழுக்கி விழுந்து தன் இடுப்பு எலுமபை முறித்தமைக்கு இழப்பீடாக $113,500 அமெரிக்காவின் ஃபிலடெல்ஃபியா நீதிமன்றம் உத்தரவிட்டது. அம்பர் காசன் வழுக்கி விழுந்தது நிலத்தில் சிந்திக் கிடந்த பானத்தில். அவள் வழுக்கி விழுவதற்குச் சற்று முன்னர் அவளுக்கும் அவள் காதலனுக்கும் இடையில் நடந்த சண்டையின் போது அவள் தனது காதலின் முகத்தில் வீசிய பானமே நிலத்தில் சிந்திக் கிடந்தது அதிலேயே அவள் வழுக்கி விழுந்தாள்.

டெரென்ஸ் டிக்சன் என்னும் திருடன் ஒரு வீட்டுக்குள் புகுந்து திருடிய பின்னர் அவனால் வெளியில் வர முடியாதபடி அவன் கடைசியாக கைவரிசையக் காட்டிய வண்டிக் கொட்டகை (garage) மூடிக் கொண்டுவிட்டது. அதனால் விடுமுறையில் வெளியூர் சென்றிருந்த வீட்டு உரிமையாளர்கள் திரும்பி வரும்வரை ஒரு வாரம் அவன் அந்தக் கொட்டகைக்குள் இருந்த பெப்சியிலும் நாய் பிஸ்கட்டுக்களுடனும் வாழ வேண்டி இருந்தது. வீட்டு உரிமையாளர்மேல் அவன் வழக்குத் தொடுத்து அவனுக்கு ஏற்பட்ட மனப்பாதிப்பிற்காக  $500,000 இழப்பீடாகப் பெற்றுக் கொண்டான்.

 A German court ruled on that people have the right to claim compensation from service providers if their Internet access is disrupted, because the Internet is an “essential” part of life.

காப்பீடு கோரும் விண்ணப்பப் பத்திரங்களில் எழுதப்பட்ட விநோதமான காரணங்கள்:

1. எனது வீட்டிலிருந்து எனது வண்டியை வெளியே செலுத்திக் கொண்டு வந்த போது ஒரு பேருந்தில் மோதினேன். அந்தப் பேருந்து வழமையிலும் பார்க்க ஐந்து நிமிடம் முந்தி வந்ததால் விபத்து ஏற்பட்டது.

2. நான் காரைத் திரும்பும் போது எனது ஒரு கண் முன்னால் நின்ற லொறிமீதும், மற்றக் கண் தெருவைக் கடக்க முயன்ற பாதசாரி மீதும் இன்னொருகண் என்பின்னால் வந்த வண்டியின் மீதும் இருந்தபடியால் விபத்து நிகழ்ந்தது.

3. 100 கிமீ வேகத்தில் நான் வண்டியைச் செலுத்திக் கொண்டிருக்கும் போது பக்கத்தில் இருந்த என் காதலி ...............இல் தடவினாள் இதனால் நான் வண்டிமீதான கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து நடந்தது.

4. ஒரு பாதசாரி வந்து எனது வண்டியில் மோதி விழுந்தான்

Friday, 15 February 2013

வட கொரிய அணுக்குண்டு: உண்மைகளும் விளைவுகளும்

அணுக்குண்டு தயாரிக்கவில்லை தயாரிக்கவில்லை என்று சொல்லிக் கொண்டு ஒரு அணு வல்லரசாக ஈரான் முயன்று கொண்டிருக்கையில் வட கொரியா 2013 ஃபெப்ரவரி 12-ம் திகதி மூன்று அணுக்குண்டுகளை வெடித்ததாகச் சொல்கிறது.

முடியைப் பிய்ந்துக் கொண்ட அமெரிக்கா
 நிலக்கீழ் அதிர்வுகளை (seismic activity) வைத்துக் கணிக்கையில் 6000 முதல் 7000 தொன் வரையிலான உயர் வெடி பொருள்கள் வெடித்தமைக்கு ஒப்பான நிகழ்வு ஒன்று வட கொரியாவில் நடந்திருக்கிறது என்பதை நிபுணர்கள் உறுதி செய்கின்றனர். ஆனால் இந்தக் கொண்டு ஜப்பானின் ஹிரோசிமாவில் அமெரிக்க போட்ட அணுக் குண்டுடன் ஒப்பிடுகையில் மிகச் சிறிய அளவானது என்று சொல்லப்படுகிறது. மேலும் தற்போதைய மற்ற நாடுகள் வைத்திருக்கும் அணுக்குண்டுகளுடன் ஒப்பிடுகையில் மிக மிகச் சிறிய அளவான அணுக்குண்டையே வட கொரியா வெடிக்க வைத்துள்ளது. ஆனாலும் எதிரியாகக் கருதப்படும் தென் கொரியாவின் தலைநகர் சேயோலிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய குண்டு அது என்கிறார் அமெரிக்க விஞ்ஞானப் பேரவைத் தலைவர். வட கொரியாவின் அணுக்குண்டுச் சோதனைகள் தொடர்பான சரியான தகவல்கல் பெற இன்னும் சிலகாலம் எடுக்கும் என்றும் கருதப்படுகிறது. வட கொரியாவின் அணுக் குண்டு வெடிப்புச் சோதனையில் பயன்படுத்தப்பட்டது புளூடோனியாமா அல்லது பதப்படுத்தப்பட்ட யூரேனியமா என்று தெரியாமல் ஐக்கிய் அமெரிக்க பாதுகாப்புத் துறையின முடியைப் பிய்த்துக் கொண்டனர்

வட கொரியப் பின்னணி
1910இல் இருந்து 1945வரை ஜப்பானிய அட்டூழிய ஆட்சிக்குக் கீழ் இருந்த கொரியாவை ஜப்பானிடம் இருந்து அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் பிடுங்கிப் பங்கு போட்டுக் கொண்டன. கொரியா வட கொரியா தென் கொரியா என இரு நாடுகளாகப் பிரிந்தன. 1950இல் அமெரிக்காவிற்காகவும் சோவியத்திற்காகவும் இரு கொரியாக்களும் பலமாக மோதிக் கொண்டன. இருபது இலட்சம் பேர் பலியாகினர். 1953-ல் போர் முடிவுக்கு வந்தது. பின்னர் இரு நாட்டுக்கும் இடையில் தொடர்ந்து முறுகல் நிலை இருந்து வருகிறது. தென் கொரியா பொருளாதாரத்தில் பெரும் வளர்ச்சி கண்டு ஆசியாவில் உள்ள அபிவிருத்தி அடைந்த இரண்டு நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இரு நாடுகளும் ஒன்றை ஒன்று பெரும் பகையாளிகளாகக் கருதுகின்றன. மோசமான பொருளாதரத்தைக் கொண்ட வட கொரியா தனது படை வலிமையை பெருக்கிக் கொண்டே இருக்கிறது. நீண்ட தூர ஏவுகணைகளையும் வட கொரியா பரிசோதித்து வெற்றிகண்டுள்ளது. தென் கொரியா அமெரிக்காவிடமிருந்து பெருமளவு படைக்கலனகளை வாங்கி வைத்திருப்பதுடன் அமெரிக்காவுடன் மிக நெருங்கிய உறவைப் பேணுகிறது. தென் கொரியாவில் அமெரிக்க படைத்தளமும் இருக்கிறது. 1953இன் பின்னர் மிகவும் கொதி நிலையில் இருக்கும் எல்லையாக  வட-தென் கொரிய எல்லை இருந்து வருகிறது. வட கொரியா தனது நாட்டின் பொருளாதாரப் பிரச்சனையை தனது படைபலப் பெருக்கத்தால் மறைத்து வருகிறது எனப்படுகிறது. இப்படிப் போட்டியுள்ள இரு நாடுகளில் ஒன்று அணுக் குண்டு தயாரித்தமை உலகை உலுக்கியுள்ளது.

உண்மையில் வட கொரியா தென் கொரியாவிற்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய ஒரு அணுக் குண்டைத் தயாரிக்க இன்னும் சில ஆண்டுகள் செல்லும் என்கின்றனர் அணுக் குண்டு நிபுணர்கள். அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கக் கூடிய நிலையை வட் கொரியா அடைவதற்கு அதிலும் அதிக ஆண்டுகள் எடுக்கும் என்கிறார்கள் அவர்கள்.

தென் சீனக் கடலிலும் கிழக்குச் சீனக் கடலிலும் சீனா ஜப்பான் உடபடப் பலநாடுகளுடன் கடல் எல்லைகள் தொடர்பாகவும் அக் கடல்களில் இருக்கும் தீவுகள் தொடர்பாகவும் பெரும் முறுகல் பட்டுக்கொண்டிருக்கும் வேளையில் வட கொரியா அணுக்குண்டை வெடிக்க வைத்து பரிசோதித்துள்ளது.

வட கொரிய அணுக்குண்டு தயாரிப்பின் நோக்கம்
இரண்டு உலகப் போரிற்குப் பின்னர் பல நாடுகள் தமது படைக்கலன்களை அதிகரிப்பதிலும் புதிய தொழில்நுட்பங்களை படைத்துறையில் உருவாக்குவதிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.  அநேக நாடுகள் தம்மீது மற்ற நாடுகள் போர் தொடுக்காமல் இருக்கவே தமது படைபலத்தைப் பெருக்குகின்றன. இரண்டாம் உலகப் போரின் பின்னர் அமெரிக்கா அணுக்குண்டைத் தயாரிக்க அதற்குப் போட்டியாக சோவியத் ஒன்றியமும் அணுக்குண்டைத் தயாரித்தது. இப்படி இரு நாடுகளும் ஒரு படைப்பலச் சமநிலையை பேண தமது படைபலத்தைப் பெருக்கிக் கொண்டிருந்ததால் போர் நிகழவில்லை. ஈராக்கைத் தவிர மற்ற நாடுகள் பெரும்பாலும் தமது படைப்பலத்தைப் பெருக்கியே போரைத் தவிர்த்தன. வட கொரியா தன்னை தென் கொரியாவில் இருந்து பாதுகாக்க மட்டுமல்ல அதை தன்னுடன் இணைக்கவும் பல தடவை முயன்றதுண்டு. வட கொரியாவின் புரவலர் (Patron) என விமர்சிக்கப்படும் சீனாவும் வட கொரியா அணுப் படைக்கலன்கள் உற்பத்தி செய்வ்தை விரும்பவில்லை. இதைச் சாட்டாக வைத்துக் கொண்டு ஐக்கிய அமெரிக்கா தனது படை பலத்தை சீனாவைச் சுற்றிப் பெருக்கும் என சீனா கருதுகிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்புச் சபையில் சீனா உடனடியாகவே வட கொரிய அணுக்குண்டுத் தயாரிப்புக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து விட்டது. சீன வெளிநாட்டமைச்சர் வட கொரியத்தூதுவரை உடன் அழைத்து தனது கரிசனையையும் தெரிவித்தார். வட தென் கொரியாக்களிடையே வளர்ந்து வரும் பொருளாதாரப் பல இடைவெளியை வட கொரியா தன் படைப்பலப் பெருக்கத்தின் மூலம் நிரப்ப முயல்கிறது. கொரியத் தீபகற்பத்தின் தனது நிலையை ஒரு படைப்பல மிரட்டல் மூலம் உறுதி செய்ய முனைகிறது. வட கொரியாவின் இளம் தலைவரான கிம் ஜோங் யுன்அணுக்குண்டு உற்பத்தி தனது நாட்டின் இருப்பிற்கு முக்கியமானதும் பேச்சு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட அவசியமனதென்றும் உறுதியாக நம்புகிறார்.

ஜப்பானின் மிரட்டல்
வட கொரியா அணுக்குணுட்களை வெடித்துப் பரிசோதனை செய்தவுடன் தனது நாட்டின் மீது வேறு எந்த நாடாவது தாக்குதல் நடாத்தும் என்ற தகவல் கிடைத்தவுடன் ஜப்பான் அந்த நாட்டின் மீது முன் கூட்டியே தாக்குதல் நடாத்தும் என்று எச்சரித்துள்ளது.

சீனாவின் தடுமாற்றம்
வட கொரியாவிற்கான தனது பொருளாதார உதவிகளை நிறுத்துதல், அதனுடனான வர்த்தகத்தைத் தடை செய்தல் அதற்கு வழங்கும் எரிபொருட்களை நிறுத்தல் போன்றவை வட கொரிய அரசை கவிழ்த்துவிடும் என்று சீனா அஞ்சுகிறது. அப்படிக் கவிழும் நிலையில் வட கொரியா தென் கொரியாவுடன் இணைந்து ஒரு ஐக்கிய அமெரிக்க சார்பு நாடாகி விடும் என சீனா கருதுகிறது. உலக வல்லரசுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்ட வல்லரசு சீனா எனச் சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். தன் ஒரே நட்பு அயல் நாட்டை சீனா இழக்க விரும்பாது.

வட கொரியாவின் புதிய உத்தியா
அணுக்குண்டை சிறிய அளவினதாக்கும் உத்தியில் வட கொரியா ஈடுபட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. தென் கொரியாவில் பெரும் சேதம் விளைவிக்கக் கூடிய  நகரைத் தரைமட்டமாக்கும் (city-buster) குண்டுகள் எனப்படும் சிறுகுண்டுகளை வட கொரியா உற்பத்தி செய்யப் போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் வட கொரியா வெற்றியடையுமானால். அது அணு குண்டு வர்த்தகத்தை மற்ற நாடுகளுடன் மட்டுமல்ல தீவிரவாத இயக்கங்களுடனும் ஈடுபடலாம். இது பல நாடுகளை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கலாம். ஈரானும் வட கொரியா போல் சிறு அணுக்குண்டை உற்பத்தியாக்கினால் இஸ்ரேல்லுக்கு பெரும் அச்சுறுத்தலாகும்.

அணுக்குண்டைப் புஸ் வாணமாக்கும் முக்கூட்டுப் பாதுகாப்பு
அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து ஏவுகணைகளுக்கு எதிரான ஒரு பாதுகாப்பு முறைமைய ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத் தொழில் நுட்பம் இன்னும் வளர்ச்சி நிலையிலேயே இருக்கிறது. இஸ்ரேலில் ஹமாஸ் இயக்கத்தினரின் ஏவுகணை மற்றும் எறிகணைத்தாக்குதல்களில் இருந்து தடுக்க பாவிக்கப்பட்ட இரும்புக் கூரை எனப்படும் பாதுகாப்பு முறைமையில் சில குறைபாடுகள் காணப்பட்டன. இக் குறைபாடுகளைத் தவிர்த்து மேம்படுத்தப்பட்ட ஒரு ஏவுகணைகளுக்கு எதிரான பாதுகாப்புத் திட்டத்தை இந்த மூன்று நாடுகளாலும் உருவாக்க முடியும். அதற்குரிய தொழில்நுட்ப வளம் பொருளாதார வளம் இம்மூன்று நாடுகளிடமும் இருக்கின்றன. இந்தப் பாதுகாப்பு முறைமைத் தொழில் நுட்பம் வெற்றியளிக்கும் இடத்து அணுக்குண்டை ஏவும் நாட்டில் வைத்தே அதை வெடிக்க வைக்கச் செய்ய முடியும் எனக் கருதப்படுகிறது. அப்படிப்பட்ட நிலையில் ஈரானும் வட கொரியாவும் உருவாக்கப் போகும் அணுக்குண்டுகள் அந்த நாடுகளுக்கே ஆபத்து விளைவிக்கக் கூடியதாக அமையும்.

Thursday, 14 February 2013

ஈரானின் போலி போர் விமானம்

ஈரான் தான் தயாரித்ததாக சொல்லிய Qaher-313 என்னும் stealth fighter போர் விமானங்கள் போலியானது என பதிவர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர்.  கதுவி(ராடார்)களால் அடையாளம் காண முடியாத தொழில் நுட்பம் கொண்ட போர் விமானங்களை Stealth Fighter எனப்படும். உலகிலேயே சிறந்த ரக Stealth Fighter தன்னுடைய Qaher F313போர் விமானம் என ஈரான் தெரிவித்திருந்தது.

ஈரானின் Qaher F313 இன் தன்மைகள்:
ஒற்றை இருக்கை மட்டும் கொண்ட சிறிய விமானம்.
புதியரக படைக்கலன்களைத் தாங்கிச் செல்லக்கூடியது.
தாக்குதலும் வேவும் செய்யக்கூடியது.
விமானத்தில் இருந்து விமானத்திற்கும் விமானத்திலிருந்து தரைக்கும் தாக்குதல் நடத்தக் கூடியது.
தற்கால போர் விமானங்களுடன் ஒப்பிடுகையில் இதன் cockpit பெரியதாக இருப்பதுடன் அடிப்படையானதாகவும் இருக்கிறது.
மூக்குப் பகுதி மிகச் சிறியதாக இருக்கிறது. இதில் ரடார் பொருத்த முடியாது.

பல போர் விமான வல்லுனர்கள் ஈரானின் Qaher-313 விமானம் சந்தேகத்துக்கு உரிய வகையில் மிகச் சிறியதாக இருக்கிறது என்று உடன் தெரிவித்திருந்தனர். ஐக்கிய அமெரிக்காவின் F-22, F-35 ஆகிய போர்விமாங்களின் தன்மைகளை ஈரானின் Qaher-313 விமானம் கொண்டிருப்பதாகச் சொல்லப்பட்டது.

ஆனால் ஈரான் வெளிவிட்ட படம் ஒன்றை அவதானித்த பதிவர்கள் சிலர் அப்படம் PickyWallpapers.com என்னும் இணையத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஈரானிய Mount Damavandஇன் படத்தின் மேல் போட்டோஷோப்பில் ஈரானிய விமானத்தின் படம் மேற்பதிவு செய்யப்பட்டிருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

David Cenciotti என்னும் பதிவர் The plane appeared to be “nothing more than a large mock-up model made out of plastic”, lacking “the characteristic rivets (and) bolts all aircraft, including stealthy ones, feature.” என்கிறார்.

ஈரான் வெளியிட்ட காணொளி ஒரு ரிமோட் கொன்ரூளில் இயக்கிய விமானத்தின் ஒளிப்பதிவே என்கின்றனர்


காதலர் தினம்: நாம் காதல் செய்வது.......


வானில் இருந்து விழும் மழைத்துளிகளை
கணக்கிட்டுப் பார்
காற்றில் இருக்கும் அணுக்களை
கணக்கிட்டுப்பார்
விண்ணில் மீன்னும் உடுக்களை
கணக்கிட்டுப்பார்
கடற்கரை மணல்களை
எண்ணிக்கை இட்டுப்பார்
எந்த அளவு உன்னை நான்
விரும்புகிறேன் என்பதற்கு
விடை கிடைக்கும்

காதலர் தினம் இன்றென்று
நேற்றிரவு விழித்திருந்து
போட்டோஷோப்பில்
வாழ்த்து படம் தயாரிக்கவுமில்லை
கூகிளில் தேடோ தேடேன்று தேடி
நல்ல வசனங்கள் தேர்தெடுக்கவ்மில்லை
நள்ளிரவு குறுந்தகவல்கள் அனுப்புவுமில்லை
காலை எழுந்து சிவப்பு ரோஜா வாங்கவுமில்லை
கண்ட பெண்கள் பின்னால் நான் அலைவதுமில்லை
எனக்கென ஒருத்தி பிறந்திருக்கிறாள்
என்னை அடைய வேண்டி விரதமிருக்கிறாள்
வேண்டுதல்கள் விடுக்கின்றாள் கோவிலிலே
நான் நல்லவனாக இருக்கும் வரை
என்னவள் எனக்காகவே
இன்றைய இடைவெளி சிறு இடைவேளையே
இணைவது என்பது நிச்சயம்
இன்பம் என்பது வாழ்நாள் உத்தரவாதம்
365 நாளும் எமக்குக் காதலர் தினமே

சிலர் கண்களால் காதல் செய்வர்
சிலர் கைகளால் காதல் செய்வர்
சில உதடுகளால் காதல் செய்வர்
சிலர் உடம்பால் காதல் செய்வர்
நாம் செய்வது இதயத்தால்

இது குறுந்தகவல் அல்ல
என் இதயக் கிடக்கை:
  • நிலம் உனக்கு
    வானம் உனக்கு
    கடலும் உனக்கு
    எதுவும் உனக்கு
    என்றும் நீ எனக்கு
சிரிக்க:
The Best VALENTINE Gift this YEAR is to gift ONIONS,
bcoz
1)Got colour of Love (Pink)
2)High Market Value.
3)U can see tears of happiness.

Sardar: Will you marry , after i die .
Wife : No i will live with my sister.
Wife : Will u marry , after i die .
Sardar: No i will also live with your sister.


One day one boy and girl came late to school.
Teacher Asked Girl why were they late,
Girl: Sir i lost my 1 rupee coin on the way while i was coming to school, i searched for that for that i got late.
Teacher asked the boy why were u late,
Boy replied:i was standing on that coin to hide. 

Wednesday, 13 February 2013

பின் லாடன் கொலையும் ஆப்கானில் அப்பாவிச் சிறுவர்களைக் கொன்ற நேட்டோவும்

சும்மா இருந்த ஆப்கானிஸ்த்தானிற்கு 1979இல்ஒரு தொலைத் தொடர்புக் கோபுரம் அமைத்துக் கொடுத்தது அமெரிக்கா. அதில் இருந்து அமெரிக்காவால் சோவியத் யூனியனை உளவு பார்க்க முடியும் என்பதால் ஆப்கானிஸ்த்தானில் இருந்த அமெரிக்க சார்பு அரசைக் கவிழ்க்க சோவியத் யூனியன் ஆப்கானிஸ்த்தான் மீது ஆக்கிரமிப்புப் போர் தொடுத்தது. அன்றிலிருந்து இன்றுவரை ஆப்கான் மக்கள் மோசமான துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.

ஆப்கானில் நிலை கொண்ட சோவியத் படைகளுக்கு எதிராக இசுலாமியத் தீவிரவாதிகளை அமெரிக்கா உருவாக்கியது. அமெரிக்கா உருவாக்கியவர்களில் முக்கியமானவர் பின் லாடன். சோவியத் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து அமெரிக்க கைக்கூலிகளுக்கும் சோவியத் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இடையில் நடந்த போரில் ஆப்கானிஸ்தான் மக்கள் அகப்பட்டுத் தவித்தனர். பின்னர் இசுலாமியத் தீவிரவாதிகளின் பிடியில் தவித்தனர். 2001இல் இருந்து அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இசுலாமியத் தீவிரவாதிகளுக்கும் இடையில் நடக்கும் போரில் ஆப்கானிஸ்த்தானிய மக்கள் அகப்பட்டுத் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

2014-ம் ஆண்டுடன் நேட்டோப் படைகள் ஆப்கானில் இருந்து வெளியேறத் திட்டமிட்டுள்ளன. அதற்கு முன்னர் ஆப்கானில் போராடும் இசுலாமியப் போராளிகளுக்கு எதிராக நேட்டோப் படையினர் தமது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன. தமது கைக்கூலி ஊடுருவிகள் மூலம் உளவுத் தகவல்களைத் திரட்டி தலிபான், அல் கெய்தா போன்ற அமைப்புக்களின் போராளிகளுக்கு எதிராக ஆளில்லா விமானங்கள் மூலம் குண்டுத் தாக்குதலக்ளை மேற்கொள்கின்றன.

2012-02-12-ம் திகதி ஆப்கானின் குனர் மகாண ஆளுனர் ஃபஜ்லுல்லா வாஹிதி தங்களுக்கு அறிவிக்காமல் அந்நியப் படைகள் நடாத்திய தாக்குதலில் ஐந்து சிறுவர்கள் உடபட பத்து அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என அறிவித்துள்ளார். மேலும் இத்தாக்குதலில் ஐந்து தலிபான் போராளிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இந்த மாதிரியான தாக்குதல்கள் பல இனி அடிக்கடி ஆப்கானில் நடக்கும் என எதிர்பார்க்கலாம். தவிக்கும் ஆப்கான் மக்களின் துயரங்களைக் கருத்தில் கொள்ளாமல் அவர்களுக்குள் இந்திய உளவாளிகள் வேறு நுழைந்து ஆப்கானிற்கு அள்ளி வைப்பது போல் படம் தயாரித்து பணம் சம்பாதிக்கிறார்கள் சிலர். தமிழ்ப்படக் கதாநாயகர்கள் இந்தியாவில் உள்ள தீவிரவாதிகளைக் கொல்வதைப் பார்த்து தமிழ்ப்பட ரசிகர்கள் சலிப்படைந்து விட்டார்கள். அதனால் இப்போது தமிழ்ப்பட கதாநாயகர்கள் ஆப்கானிற்கும் சென்று தீவிரவாதிகளைக் கொல்கிறார்கள். ஆக்கிரமித்திருக்கும் அமெரிக்காவிற்கு உளவாளிகளாகிறார்கள். 1979இல் இருந்து பெரும் அவலத்திற்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் ஆப்கான் மக்களைப் பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. Hasan பெயரிற்கே அமெரிக்க விமான நிலையத்தில் கிடைத்த தொந்தரவைக் கூட மறந்துவிட்டார்கள். ஒரு சில போராளிகள் மும்பாய் நகரைத் தாக்க வருவதைத் தடுக்க முடியாத ரோ உளவாளி 64 மணித்தியாலங்கள் அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள் ஒரு சிலர் ஒரு நகரத் தம்து கட்டுப்பாட்டில் வைத்திருந்ததைத் தடுக்க முடியாத ரோ உளவாளி நியூரோர்க் நகரத்தை அணுக்குண்டுத் தாக்குதலில் இருந்து தாக்குகிறார்.
ஆப்கானில் கொல்லப்பட்ட தலிபான் போராளிகள் மீது ஒன்றுக்கிருந்து அசிங்கப்படுத்திய அமெரிக்கப் படையினரை அசிங்கமாகச் சித்தரிக்காமல் பெண்களையும் சிறுவர்களையும் கொல்லாதவர்களாகச் சித்தரிக்கின்றனர். உலக நாயகன் அமெரிக்க உளவு நாயகனாக எப்போது மாறினார்?
பின் லாடனைக் கொன்றவரின் பேட்டி
2011 மேமாதம் 3-ம் திகதி அமெரிக்க சிறப்புபக் கடற் படையணியின் சீல் பிரிவினர் பின் லாடனை அவரது பாக்கிஸ்த்தான் மாளிகையின் மூன்றாம் மாடியில் வைத்துச் சுட்டுக் கொன்றனர். பில் லாடனைக் சுட்டுக் கொன்ற அமெரிக்கர் Esquire என்னும் சஞ்சிகைக்குப் பேட்டியளித்துள்ளார். அவர் தான் பின் லாடன் முன் நின்றபோது அவர் குழப்பமடைந்திருந்தார் எனவும் பின் லாடன் தான் எதிர்பார்த்ததிலும் பார்க்க உயரமாக இருந்தார் எனவும் கூறினார். மேலும் அவர் கூறுகையில் பின் லாடனுக்கு அண்மையில் அவரது ஏகே-47 துப்பாக்கி இருந்தது. அவர் தனது இளைய மனைவியின் தோள்களைப் பிடித்தபடி நின்றிருந்தார். மனைவி தற்கொலைக் குண்டுகள் பொருத்திய உள்ளாடையை அணிந்திருக்கலாம் என்ற அச்சம் எம்மிடமிருந்தது. பின் லாடன் தனது துப்பாக்கியை எடுக்காமல் இருக்க அவரது தலையில் சுட்டேன். இரண்டு சூடுகளுடன் அவர் இறந்து நாக்குத் தொங்கையபடி விழுந்தார். அவரது இளைய மனைவியை ஒரு படைவீரன் அப்புறப்படுத்தினான். பயந்து அழுது கொண்டு நின்ற பின் லாடனின் மகனைத் தூக்கி அவரது தாயாருடன் சேர்த்தேன். பேட்டியளித்த அமெரிக்க படை வீரர் தான் ஓய்வு பெற்ற பின்னர் மன் அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தன்னை அமெரிக்க அரசு கவனிக்கவில்லை எனவும் தெரிவித்திருப்பது அமெரிக்காவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Monday, 11 February 2013

நகைச்சுவை: சோனியாவின் முத்தத்திற்கும் ராஜீவின் முத்தத்திற்கும் என்ன வித்தியாசம்?

ஆசிரியை: "நான் திருமணம் செய்கிறேன்" இதை எதிர்கால வசனமாக மாற்றுக
மாணவன்: நீங்கள் விவாகரத்துச் செய்வீர்கள்

ஒரு குரங்கு செய்ததைக் கூட ராஜிவால் செய்ய முடியவில்லை. குரங்கு ஒரு மனிதனைப் பெற்றுப் போட்டது.

Sonia Gandhi:  Microsoft bought Skype for 8.5 billions!..
Rahul Gandhi:  What a bunch of idiots! I downloaded it for free!

சோனியாவின் முத்தத்திற்கும் ராஜிவின் முத்தத்திற்கும் என்ன வித்தியாசம்?
ஒன்று முட்டாளாக்கிய முத்தம். மற்றது முட்டாளின் முத்தம்.

உடன் பிறந்தவர்கள் எல்லோரும் நண்பர்களாவதில்லை
நண்பன் எப்போதும் உடன் பிறந்தவனாகிறான்.

திருடர்களை ஏன் இந்தியாவில் கைது செய்கிறார்கள்?
இந்திய ஆட்சியாளர்கள் தமக்கு போட்டியாக யாரும் உருவாகுவதை விரும்புவதில்லை.

பல கதைகளில் தவளையை முத்தமிட்டதால் அரச குமாரர்களாக வந்ததாகச் சொல்கிறார்களே! இது உண்மையா? ராஜிவ் காந்தி பிரதமரானது அப்படித்தான்.

எமக்கு நாமே கொடுக்கும் பரிசு: நட்பு
எமக்கு நாமே கொடுக்கும் தண்டனை: காதல்

ராகுல் காந்தி ஏன் திருமணம் செய்யவில்லை?
தன் தந்தை விட்ட பிழையைத் தானும் செய்யக்கூடாது என்று. ஒரு மொக்கையைத் திருமணம் செய்து இரு மொக்கைகளைப் பெற்றுப் போட்டதுதான் ராஜிவ் செய்த தவறு.

இந்திய உளவுத் துறைக்கும் ராஜபக்சேவிற்கும் இடையிலான உரையாடல்

ஜவகர்லால் நேரு காலத்தில் இருந்தே இலங்கையில் தமிழர்களுக்கு அள்ளிவைக்கும் கைங்கரியத்தை இந்தியா செய்து கொண்டே இருக்கிறது. இலங்கையில் மரபு வழியாக வடகுக் கிழக்கில் வாழும் தமிழர்களையும் மலையகத்தில் வாழும் தமிழர்களையும் பிரித்து வைத்து நேரு இந்த அள்ளி வைப்பை ஆரம்பித்து வைத்தார். இப்போது பன்னாட்டு அரங்கிலும் தொடர்கிறது.

இந்தியாவின் தமிழர்க்கு எதிரான அள்ளிவைப்பை எண்ணி பொருமிக் கொண்டிருக்கும் போது 2013 பெப்ரவரியின் இரண்டாம் வாரம் கிடைத்த செய்தி இந்திய உளவுத் துறைத் தலைவர் அலோக் ஜோசிக்கும் இலங்கை அதிபர மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் இரகசியச் சந்திப்பு நடந்தது என்பது.  இதை எண்ணிக் கொதித்த படியே ஒரு தமிழன் கண்ணை மூடினான்.

அலோக் ஜோசி: வணக்கம்
மஹிந்த: வணக்கம்

அலோக் ஜோசி: உங்களை புதுடில்லிக்கு அழைத்து உங்களுடன் பேச்சுவாத்தை தலைமை அமைச்சர் மட்டத்தில் பேச்சு வார்த்தை நடாத்தினால் அது இப்போது உள்நாட்டிலும் பன்னாட்டு மட்டத்திலும் பெரும் சர்ச்சையைக் கிளப்பலாம் என்பதற்காக அனைவருக்கும் லட்டுக் கொடுத்துவிட்டு நீங்கள் தனிப்பட்ட ரீதியில் ஒரு புனிதப் பயணத்தை செய்வது போல உங்கள் இந்தியப் பயணத்தை ஒழுங்கு செய்துள்ளோம்.
மஹிந்த: அதற்கு உங்களுக்கு முதலில் எனது நன்றியைத் தெரிவிக்கிறேன்.

அலோக் ஜோசி: இலங்கை இந்திய உறவு தொடர்பாக உங்கள் எதிர்காலத் திட்டத்தைச் சொல்லுங்கள்.
மஹிந்த: அதற்கு முதலில் 2013 மார்ச் மாதம் நடக்க விருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகக் கூட்டத் தொடரில் அமெரிக்கா எங்களுக்கு எதிராக முன்மோழிவு எதையும் கொண்டு வராமல் இருக்கும் படி நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் இலங்கை இந்திய உறவைப் பற்றிக் உரையாடுவோம்.

அலோக் ஜோசி: பன்னாட்டு மட்டத்திலும் பிராந்திய ரீதியிலும் எமக்குள்ள பிரச்சனைகளை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அரபுக் கடலில் உள்ள் பாக்கிஸ்த்தானிய குவாடர் துறை முகம் அதிகாரபூர்வமாக சீனாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இது இந்து மாக்கடல் படைத்துறைச் சமநிலையை எமக்குப் பாதகமாக்கியுள்ளது. இந்தியாவின் மேற்குக் கரையோரம் அதிலும் முக்கியமாக எமது வர்த்தகத் தலைநகரான மும்பாய் ஆபத்துக்குள்ளாகியுள்ளது. தென் சீனக் கடலில் சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுமானால் அது எமக்கும் தூர கிழக்கு நாடுகளுக்கும் இடையிலான கடற்போக்குவரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும். இப்படி நாம் சீனாவின் அச்சுறுத்தலுக்கு பல முனைகளில் உள்ளாகி இருக்கும் நிலையில் நாம் அமெரிக்காவுடனும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடனும் ஒத்துழைக்க வேண்டியுள்ளது. இலங்கையைப் பொறுத்தவரை அவர்களது நிலைப்பாடு எமது நிலைப்பாட்டிலும் வித்தியாசமாக உள்ளது. அவர்கள் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த போரின் போது நடந்த அத்து மீறல்களுக்குப் பொறுப்புக் கூறப்படவேண்டும் என்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாகவும் விரைவாகவும் நடை முறைப் படுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். அவர்களைச் சமாளிக்க வேண்டியது ஒரு சவாலாக உள்ளது.
மஹிந்த: அவர்கள் பொறுப்புக் கூறல் நல்லிணக்கம் என்று அடிக்கடி கூறுகிறார்கள். நீங்கள் பன்னாட்டு அரங்கில் நாம் சொல்பவற்றைச் செய்யாவிடில் இலங்கைப் போரின் போது நீங்கள் எமக்கு இரகசியமாகச் செய்த உதவிகள்; நாம் 2009 ஆகஸ்ட் மாதம் முடிக்க இருந்த போரை இந்தியப் பொதுத் தேர்தலுக்கு முன்னர் முடிக்க வேண்டும் என்று நீங்கள் எம்மை வேண்டிக்கொண்டது; போரில் பொது மக்களின் உயிரிழப்பைப்பற்றி கவலைப்படாமல் குண்டுகளைக் கண்மூடித்தனமாக வீசி போரை மே மாதம் நடுப்பகுதிக்குள் முடிக்கச் சொல்லி நீங்கள் எம்மை நிர்ப்பந்தித்தது; நீங்கள் உங்கள் படையினரை இரகசியமாக எமது நாட்டுக்கு அனுப்பி தமிழர்களை இலட்சக் கணக்கில் கொல்ல உதவியது எல்லாம் பொறுப்புக் கூறல் தொடர்பான பாராபட்சமான விசாரணையின் போது வெளிவரும். அதற்கு நீங்கள் தயாரா?

அலோக் ஜோசி: (சற்றுக் கடுப்படைகிறார். ஆனாலும் வேறு வழியின்றி தன்னத் தானே அடக்கிக் கொள்கிறார்) போரில் நமது பங்கு தொடர்பாக வெளியிடாமல் இருக்க நீங்களும் நாமும் ஒரு உடன்பாட்டிற்கு ஏற்கனவே வந்துள்ளோம். அதன்படி உங்களுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை வராமல் நாங்கள் பார்த்துக் கொள்வோம். உங்களுக்கு எதிரான கடுமையான தீர்மானங்கள் எதுவும் வராமல் நாங்கள் பார்த்துக் கொள்வோம். 13வது தீர்மானத்திற்கு நீங்கள் என்ன வேண்டுமானலும் செய்யலாம். ஆனால மனித உரிமைக் கழகத்தில் வரும் தீர்மானங்களிற்கு எதிராக நாம் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது. அவற்றால் உங்களுக்குப் பெரும் பாதிப்பு எதுவும் வராது. ஜெனிவாவில் உங்களுக்கு எதிரான கடும் தீர்மானங்கள் ஏதும் வராமல் பார்த்துக் கொள்வோம்.
மஹிந்த: மனித உரிமைக்கழக ஆணையாளர் எமக்கு எதிராக ஐநா பாதுகாப்புச் சபையில் தீர்மானம் தன்னிச்சையாகக் கொண்டுவரப்பார்க்கிறார் என  நினைக்கிறேன்.

அலோக் ஜோசி: (இடை மறித்து) பாதுகாப்புச் சபையைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். அங்கு உங்களுக்கு எதிரான தீர்மானத்தை இரத்துச் (வீட்டோ) செய்யும்படி இரசியாவிடம் நாம் சொன்னால் அவர்கள் செய்வார்கள்.
மஹிந்த: எங்களுக்காக எதையும் செய்ய சீனா தயாராக இருக்கிறது. ஜெனிவாவின் எமக்கு எதிரான பொருளாதரத் தடை கொண்டுவந்தால்.....

அலோக் ஜோசி: அதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள் கடுமையான தீர்மானம் வராமல் நாம் பார்த்துக்கொள்வோம். அப்படித் தீர்மானம் வரப்போவதாக சில தமிழ் ஊடகங்கள் பரபரப்பு ஊட்டுவதற்காகச் சொல்கின்றன. உங்கள் மீது பொருளாதரத் தடை வந்தால் அதை ஈடுகட்டும்படி நாங்கள் ஆவன செய்வோம்.
மஹிந்த: உங்களுடன் போட்டி போட்டுக் கொண்டு சீனாவும் செய்யும். என்னை பிஹரில் இரகசியமாகச் சந்தித்த உங்கள் வெளியுறவுத் துறை அதிகாரிகளிடமும் இதைத்தான் சொன்னேன்.

அலோக் ஜோசி: (கடுப்படைகிறார். பின்னர் அடக்கிக் கொள்கிறார்.) சரி வடக்க்குக் கிழக்கில் விரைவாக தமிழர்களைச் சிறுபான்மையினராக்க்கவும். அதற்கு வசதியாக நாம் வடக்கிற்கான தொடரூந்துப் பாதையை அமைத்து அது முடிக்கும் தறுவாயில் உள்ளது. தமிழர்களுக்கு எதிரான எமது நீண்டகாலத் திட்ட அடிப்படியிலான வெற்றிக்கு வடக்குக் கிழக்கில் அவர்கள் சிறுபானமையினராக்கப் பட வேண்டும்.
மஹிந்த: கிழக்கைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் அங்கு ஏற்கனவே அவர்களை சிறுபான்மையினராக்குவதில் முக்கால் வாசி வெற்றி கண்டுள்ளோம். வடக்கில் நிலக் கொண்டிருக்கும் படையினர் ஐந்து இலட்சம் பேரையும் அங்கு குடும்பத்தினருடன் குடியேற்றினால் பாதி வெற்றி. மேலும் ஒரு இலட்சம் மக்களை அங்கு குடியேற்றினால் வடக்கிலும் தமிழர்கள் சிறுபானமையினராகி விடுவார்கள். அதன் பின்னர் அதிகாரப் பரவலாக்கம் பற்றி யாரும் கதைக்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் சிலர் இன்னும் அடங்குகிறார்கள் இல்லை.

அலோக் ஜோசி: அந்தக் கோமாளிகளைப்பற்றிக் கவலைப் பட வேண்டாம் என்று எத்தனை தடவை உங்களுக்குச் சொல்வது. (சிரிக்கிறார்)
மஹிந்த: (சிரிக்கிறார்)

அலோக் ஜோசி: நன்று. எனது மகளுக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருக்கிறது.( தலையைச் சொறிகிறார்)
மஹிந்த: அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் ஜெனிவாவில் பார்த்துக் கொள்ளுங்கள்.

அலோக் ஜோசி: நன்றி வணக்கம் மீண்டும் சந்திப்போம்.
மஹிந்த: நன்றி வணக்கம்.

இப்போது தூங்கிய தமிழன் விழித்துக் கொண்டான். தான் அலோக் ஜோசிக்கும் மஹிந்தவிற்கும் உரையாடல் நடப்பது போலக் கனவு கண்டேன் என்பதை உணர்ந்து கொண்டான். கண்டது கனவு என் எண்ணி அவன் திருப்தியடையவில்லை. அதுதான் யாதார்தமாகவும் இருக்கும் என அவன் எண்ணினான்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...