நவம்பர் 23-ம் திகதி சர்ச்சைக்குரிய கிழக்குச் சீனக் கடலில் சீனா அறிவித்த பத்து இலட்சம் சதுர மைல்கள் கொண்ட வான் பாதுகாப்பு இனம்காட்டும் வலயத்திற்குப் பதிலடியாக தென் கொரியாவும் அதே மாதிரியான தனது வலயத்தை விரிவாக்குவதாக அறிவித்துள்ளது.
கிழக்குச் சீனக் கடலில் உள்ள தீவுக்கூட்டத்திற்கு ஜப்பானும் சீனாவும் உரிமை
கொண்டாடி வருகின்றன. மக்களற்ற இத்தீவுக் கூட்டங்களை ஜப்பானியர்கள்
செங்காகு எனவும் சீனர்கள் டயாகு எனவும் அழைக்கின்றனர். அமெரிக்கா இரு
நாடுகளுக்கும் இந்த தீவுக் கூடங்களிள் இறையாண்மை இல்லை எனவும் ஆனால்
ஜப்பானிற்கு அவற்றில் நிர்வாகக் கட்டுப்பாடு இருக்கின்றது எனவும்
கூறுகின்றது. ஜப்பானின் நிர்வாகக் கட்டுப்பாடு உள்ள பிரதேசத்தை அன்னியர் ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க வேண்டிய ஒப்பந்த ரீதியான கடப்பாடு அமெரிக்காவிற்கு உண்டு.
சீனா அறிவித்த வலயத்தில் ஜப்பானும் தென் கொரியாவுன் தமது என அறிவித்த பிரதேசங்களும் அடங்குகின்றன. சீனா வான் பாதுகாப்பு இனம்காட்டும் வலயத்திற்குள் பறக்கும் விமானங்கள் சீன அரசிற்கு தம்மை இனங்காட்ட வேண்டும் என சீனா எதிர்பார்த்தது. சீனாவின் அறிவிப்பிற்கு சவால் விடும் முகமாக அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்து தமது போர்விமானங்களையும் வர்த்தக விமானங்களையும் மாறி மாறிப் பறக்க விட்டன. இதனால் ஏற்பட்ட பதட்டத்தைத் தொடர்ந்து அமெரிக்கத் துணை அதிபர் ஜொ பிடன் ஜப்பானிற்கும் சீனாவிற்கும் பயணங்களை மேற் கொண்டார். இவரின் நோக்கம் அங்கு பதட்டத்தை தவிர்ப்பது மட்டுமல்ல சீனாவை மிரட்டுவதையும் கொண்டதாகக் கருதலாம். இவரின் பயணத்துடன் அமெரிக்காவின் பி-52 எனப்படும் நீர்முழ்கிகளை அழிக்கக் கூடிய போர் விமானங்களை ஜப்பானிற்கு அனுப்பியது. இரண்டாம் உலகப் போரின் பின்அமெரிக்காவும் ஜப்பானும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படியும் அதைத் தொடர்ந்த்து இரண்டு நாடுகளும் செய்த ஒப்பந்தங்களின் படியும் ஜப்பானின் நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அமெரிக்காவிற்கு உண்டு. இதன்படி அமெரிக்கா ஜப்பானில் தனது படைகளையும் நிறுத்தியுள்ளது.
அமெரிக்கத் துணை அதிபரின் பயணத்தைத் தொடர்ந்துதென் கொரியா தானும் ஒரு வான் பாதுகாப்பு இனம்காணும் பிராந்தியத்தைப் பிரகடனம் செய்தது அமெரிக்கத் துணை அதிபரின் பயணம் சீனாவை அடக்கும் நோக்கம் கொண்டதா எனச் சந்தேகிக்க வைக்கின்றது.
தென் கொரியாவின் அறிவிப்பு வருந்தத் தக்கது என சீனா அறிவித்துள்ளது. சீனாவின் பதிலில் கண்டனம் தெரிவிக்காமல் வருத்தம் தெரிவித்தது அதன் மென்மையான அணுகு முறையாகக் கொள்ளலாம் என சில பன்னாட்டு அரசியல் அவதானிகள் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...

-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
-
“எரிபொருள் இன்றி கைவிடப்பட்ட போர்த்தாங்கிகள், உணவின்றி தவிக்கும் படையினர், சுட்டு வீழ்த்தப்பட்ட விநியோக விமானங்கள்” இப்படிப்பட்ட செய்திகள...
-
உலகத்தி லேயே சீனர்கள் அதிகம் வெறுக்கும் நாடாக ஜப்பான் இருக்கின்றது. 1937இல் இருந்து 1945வரை ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையில் கடும் போர்...
No comments:
Post a Comment