எகிப்தின் முன்னாள் அதிபர் மொஹமட் மேர்சியும் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பைச் சேர்ந்த 14பேரும் எகிப்தின் தற்போதைய படைத்துறை ஆட்சியாளர்களால் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் நீதி மன்றத்திற்கு வந்த மேர்சி தானே எகிப்தின் சட்டபூர்வ அதிபர் என்றார்.
எகிப்திய நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிற்பவர் வெள்ளை நிற ஆடை அணிய வேண்டும். ஆனால் மேர்சி அப்படிச் செய்ய மறுத்து நீல நிற சூட்டில் நிதிமன்றத்திற்கு வந்தார். காவற்துறையினர் மேர்சியைக் குற்றவாளிகளுக்குரிய வெள்ளை ஆடை அணிய வேண்டும் என்றார்.
நீதிபதி மேர்சியை அவரை அறிமுகப்படுத்தும் படி கேட்டபோது "நான் கலாநிதி மொஹமட் மேரி எகிப்தியக் குடியரசின் அதிபர். என்னை விசாரிக்க உங்களுக்கு எந்த வித அதிகாரமும் இல்லை." என்றார். பின்னர் நீதிபதியைப் பேச விடாமல் மேர்சி தானே எகிப்தின் அதிபர் என உரத்துக் கூறிக் கொண்டிருந்தார். நீதிமன்றம் இடைவேளை விட்டுப் பின்னர் கூடியது.மேர்சியுடன் இணைந்து மற்றப் 14 பேரும் நீதிமன்றத்தில் உரக்கச் சத்தமிட்டனர். இதனால் நிதிபதி விசாரணையை 2014 ஜனவரி 8-ம் திகதி வரை ஒத்தி வைத்தார்.
விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது மேர்சியை தூக்கிலிட வேண்டும் என ஒரு பெண் ஊடகவியலாளர் உரத்துக் கத்தியதால் நீதிமன்றில் பரபரப்பு ஏற்பட்டது. மேர்சியின் ஆதரவாளரகளும் நீதிமன்றத்தின் வெளியே ஆர்ப்பாட்டம் நடாத்தினர். மேர்சியின் ஆட்சியின்போது அவர் செய்த அட்டூழியங்களால் பாதிக்கப்பட்டவர்களும் மேர்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.
எகிப்தியப் படைத்துறையினர் ஆட்சியின் கீழ் மேர்சிக்கு ஆயுள் தண்டனையோ அல்லது இறப்புத் தண்டனையோ வழங்கும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.
நான்கு மாதங்களாக சிறையில் இருக்கும் மேர்சி அவரது வழக்கறிஞர்களைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. இரண்டு தடவை மட்டும் அவரது குடும்பத்தினருடன் தொலைபேசியில் உரையாட அனுமதிக்கப்பட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...

-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
-
“எரிபொருள் இன்றி கைவிடப்பட்ட போர்த்தாங்கிகள், உணவின்றி தவிக்கும் படையினர், சுட்டு வீழ்த்தப்பட்ட விநியோக விமானங்கள்” இப்படிப்பட்ட செய்திகள...
-
உலகத்தி லேயே சீனர்கள் அதிகம் வெறுக்கும் நாடாக ஜப்பான் இருக்கின்றது. 1937இல் இருந்து 1945வரை ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையில் கடும் போர்...
No comments:
Post a Comment