Wednesday, 11 September 2013

சரியாகாத இரசியாவின் முன்மொழிவும் கரியாகும் சிரிய மக்களும்

சிரியாவிற்கு எதிரான மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா காங்கிரஸ் (Congress) எனப்படும் அமெரிக்கப் பாராளமன்றத்தின் இரு அவைகளான மக்கள் பிரதிநிதிகள் சபையினதும் மூதவையினதும் (Senate) ஆதரவை வேண்டி மிகக் கடுமையான பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில் இரசியா சிரியப் பிரச்சனைக்கு தனது முன்மொழிவை வைத்தது.

இரசியாவின் முன்மொழிவில் இரு முக்கிய அம்சங்கள் இருந்தன: முதலாவது சிரியா தனது வேதியியல் படைக்கலன்களை ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளிப்பது, இரண்டாவது அப்படைக்கலன்களை பகுதிகளாகப்பிரித்து செயற்படாமல் பண்ணுவது.  இரசிய வெளிநாட்டமைச்சர் சேர்கி லவ்ரொவின் (Sergei Lavrov) இந்த முன்மொழிவை சீனாவும் ஆதரித்தது. சிரிய வெளிநாட்டமைச்சர் வலிட் அல் மௌலம் (Walid al-Moualem) இரசிய முன்மொழிவிற்கு ஒத்துக் கொண்டார். தாம் தமது வேதியியல் படைக்கலன்களை இரசியாவிற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளுக்கும் காட்டுவதற்குத் தயார் என்றார் சிரிய வெளிநாட்டமைச்சர்.

இரசியாவின் முன்மொழிவை அமெரிக்கா முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. வேதியியல் படைக்கலன்களை சிரியா ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளிப்பதும் அவற்றை பிரித்து செயலிழக்கச் செய்வதும் ஒரு கால அட்டவணையில் அடிப்படையிலேயே நடக்க வேண்டும் என்றது. இது சிரிய அதிபருக்கு ஒரு கால அவகாசத்துடன் மேற்கொள்ள வேண்டும் என்றது. சிரியாமீதான மட்டுப்படுத்தப்பட்ட தக்குதலுக்கு அமெரிக்கப் பாராளமன்றத்தின் ஒப்புதல் பெறும் முயற்ச்சி தொடரும் என்கிறார் பராக் ஒபாமா. இதைத் தொடர்ந்து இரசியாவின் முன்மொழிவின் அடிப்படையில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் ஒரு தீர்மானத்தை தான் கொண்டுவரப்போவதாக அறிவித்தது. பிரெஞ்சு ஒரு கால அட்டவணையுடன் கூடிய கடுமையான தீர்மானத்தை கொண்டுவர முயன்றது.  அதில் சிரியா வேதியியல் படைக்கல ஒழிப்பிற்கான பன்னாட்டு உடன்படிக்கையில் கையொப்பமிட வேண்டும் எனவும் நிர்பந்திக்கும் வாசகம் இடம்பெறுவதை பிரான்ஸ் வலியுறுத்தியது.                                                                                                                                                                             இது தொடர்பாக பிரெஞ்சு வெளியுறவுத் துறை அமைச்சர் லொரெண்ட் ஃபபியஸ் (Laurent Fabius) இரசிய வெளிநாட்டமைச்சர் சேர்கி லவ்ரொவினுடன் தொடர்பு கொண்டு உரையாடினார். அவர்கள் இருவருக்கும் இடையில் கடுமையான வேறுபாடுகள் காணப்பட்டது.  பிரான்ஸ் ஒரு கடுமையான தீர்மானத்தைக் கொண்டுவர முயல்கிறது. இரசியா சிரியாமீது தாக்குதல் நடத்தப்படமாட்டாது என்ற உறுதி மொழியை அமெரிக்காவிடமும் அதன் நட்பு நாடுகளிடமும் இருநநது பெற முயல்கிறது. இரசியா பாதுகாப்புச் சபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படுவதை விரும்பவில்லை. பதிலாக சிரிய அதிபரின் வேதியியல் படைக்கலன்கள் தொடர்பாக ஒரு உறுதி மொழி போதும் என இரசியா கருதுகிறது.

அமெரிக்கா தமது நாட்டின் மீது தாக்குதல் நடாத்தினால் பதிலடி கொடுக்கப்படும் என்றும் தனது நண்பர்கள் அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள் என்றும் சிரிய அதிபர் பஷார் அல் அசாத் எச்சரித்தார். அதற்குப் பதிலடி கொடுத்த பராக் ஒபாமா சிரிய அதிபர் பதில் தாக்குதல் செய்தால் அது அவரினதும் அவரது நண்பர்களினதும் உயிர்களுக்கு ஆபத்தாக முடியும் என்றார். அவரது வாசகம் இப்படி அமைந்தது: “Neither Assad nor his allies have any interest in escalation that would lead to his demise,” . இரசியாவின் முன்மொழிவு பராக் ஒபாமாவிற்கு அவரது சிரியாமீதான தாக்குதல் திட்டத்திற்கு உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆதரவு திரட்டும் முயற்ச்சிக்கு போதிய கால அவகாசத்தை வழங்கியுள்ளது. அதே வேளை சிரிய அரசுக்கும் தம்மிடம் இருக்கும்

மொத்தத்தில் யாரும் சிரிய மக்களின் உயிர்கள் பலியாகிக் கொண்டிருப்பதைப் பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. வேதியியல்(இரசாயன) படைக்கலன்களால் 1400 சிரியர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் மரபுவழிப் படைக்கலன்களால் ஒரு இலட்சத்திற்கும் மேலானவர்கள் கொல்லப்பட்டுவிட்டனர். இப்போது போரை நிறுத்தி அமைதியை ஏற்படுத்தும் முயற்ச்சியில் யாரும் ஈடுபடவில்லை. போர் இன்னும் நீண்டகாலம் தொடரும் போல் தெரிகிறது. உயிரழந்தவர்களின் உண்மையான தொகை இரண்டு இலட்சம் இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. பத்து இலட்சத்திற்கும் அதிகமானோர் இடம் பெயர்ந்துள்ளனர் வேதியியல் படைக்கலன்களை மட்டும் அழித்து சிரியாவில் அமைதி ஏற்படுத்த முடியாது.

சிரியா தொடர்பான் முந்தைய பதிவுகளைக்காண இங்கு சொடுக்கவும்: சிரியா

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...