Wednesday, 3 July 2013

தமிழர்களுக்கு எதிராக நஞ்சு கக்கும் மலையாளி

Prokerala News என்னும் இணையத் தளத்தில் M. R Narayan Swamy என்பவர் "It is time India corrects its Sri Lanka policy" என்னும் தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். இலங்கை தொடர்பாக இந்தியாவின் கொள்கை தவறு என்பதை எல்லோரும் அறிவர். அது திருத்தப்பட வேண்டும் என்பதையும் எல்லோரும் அறிவர். ஆனால் எம் ஆர் நாராயண் சுவாமி சொல்லுவது சுப்பிரமணிய சுவாமி சொல்லுவதிலும் கேவலமாக இருக்கிறது. இந்த நாராயண் சுவாமியும் நிச்சயம் ஒரு பார்ப்பனராக இருக்க வேண்டும் என எவராலும் உறுதியாகச் சொல்ல முடியும்.

"தமிழ்நாடு வெலிங்டனில் பயிற்ச்சிக்கு வந்த இலங்கைப்படை வீரர்களை நிர்பந்தத்தின் பேரில் இலங்கை அரசு திருப்பப் பெற்றமை இலங்கை இந்திய உறவைப் பாதிக்காது என்பது நம்ப முடியாமல் இருக்கிறது" என்று  தனது கட்டுரையை ஆரம்பித்த எம் ஆர் நாராயண் சுவாமி புது டில்லி "இலங்கைப் படையினரை அழைத்திருந்திருக்கக் கூடாது; அழைத்த பின்னர் இறுதிவரை பயிற்ச்சியை முடித்திருந்திருக்க வேண்டும்" என்கிறார். அவரது தத்துவம் தொடர்கிறது: "ஒரு கூட்டாட்சி அமைப்பின் கீழ் ஒரு மாநிலம் சொல்வதை மைய அரசு செவி மடுக்க வேண்டும் ஆனால் தொடர்ச்சியாக மிரட்டி அலுவல் பார்ப்பதை (blackmail) அனுமதிக்கக் கூடாது. விடுதலைப் புலிகள் உயிருடன் இருக்கும் போது அவர்களுக்குப் புத்திமதி சொல்லாத தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அவர்கள் தோற்கடிக்கப்பட்டபின்னர் அதற்கு பழிவாங்கும் முகமாக 'நான் இலங்கையை வெறுக்கிறேன்' என்ற கொள்கையைப் பின்பற்றுகிறார்கள்"

எம் ஆர் நாராயண் சுவாமி மேலும் இப்படி நஞ்சைக் கக்குகிறார்: "இலங்கை அரசின் படைத்துறைக் கொள்கைக்கோ அல்லது வெளியுறவுக் கொள்கைக்கோ எந்தவித சம்பந்தமும் இல்லாத இலங்கையர்கள் மீது தமிழ்நாட்டில் தாக்குதல் நடத்துகிறார்கள்"  முல்லைப் பெரியாறு அணையோடு எந்த விதத் தொடர்புமில்லாத அப்பவித் தமிழர்களை கொடூரமாகத் தாக்கிய போதும் தமிழ்ப்பெண் தொழிலாளிகளை மேலாடை களைந்து அவமானப் படுத்தியபோதும் இந்த நாராயண் சுவாமி எங்கிருந்தார்? 1983-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் குண்டு வெடிப்பில் 13 சிங்களப் படையினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் சிங்கள அரச ஆதரவுடன் தமிழர்கள் மீதும் இலங்கை வாழ் வட இந்தியர்கள்மீதும் தாக்குதல் நடாத்தி அவர்கள் வீடுகளையும் சொத்துக்களையும் அழித்த போது இந்த நாராயண சுவாமி எங்கிருந்தார்? கொழும்பில் மருத்துவ மனைக்குச் சென்ற கற்பிணிப்பெண்ணின் வயிற்றை உள்ளே புலிக்குட்டி இருக்கிறது என்று சொல்லி வெட்டிக் கிழித்த போது இந்த நாராயண் சுவாமி சஹஸ்ரநாமம் ஓதிக் கொண்டிருந்தாரா?

போரின் இறுதிக்கட்டத்தில் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டமைக்கு புலிகள்தான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறார். இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படத் தொடங்கியமை புலிகள் அமைப்புத் தொடங்க முன்னர் என்பதையோ; 1956இல் கொதிதாரில் தமிழ் குழந்தையைப் போட்டுக் கொன்ற கொடூரத்தையோ; அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதன் விளைவுதான் விடுதலைப்புலிகளின் உருவாக்கம் என்பதையோ, இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் மாமாங்கத்துக்கு ஒருமுறை (சில சமயம் அதிலும் குறைவான காலப்பகுதிகளிலோ இலங்கையில் இனக்கலவரம் என்னும் போர்வையில் தமிழர்கள் கொல்லப்பட்டமையையோ சொத்துக்கள் கொள்ளை அடிக்கப்பட்டமையையோ இந்த நாராயணனுக்குத் தெரியாதா?

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் 2008 தேர்தலில் காங்கிரசுக் கட்சி தோல்வியடைந்துவிடும் நீங்கள் தொடர்ந்து போராடுங்கள் என்று சொல்லி விடுதலைப் புலிகளை தவறாக நடாத்தினர் என நாராயண் சுவாமி போதிக்கிறார். 2008 ஆகஸ்ட் மாதம் இலங்கை அரசு முடிக்க இருந்த போரை வேண்டாம் 2008 மேமாதம் நடக்க விருக்கும் எமது தேர்தலுக்கு முன்னர் முடியுங்கள் என இலங்கை அரசை நிர்பந்தித்தது யார் என்பதை இந்தக் கேடு கெட்ட மலையாளச் சுவாமி அறிய மாட்டார். அதற்காக பேரழிவு விளைவிக்கும் சரின் குண்டுகளை இலங்கைக்கு யார் கொடுத்தார் என்பதை நாராயண் சுவாமி எழுத மாட்டார்.

அம்பாந்தோட்டையில் துறைமுகம் அமைக்க இலங்கை விடுத்த வேண்டுகோளை இந்தியா தமிழர்களுக்காக் நிராகரித்தது என்கிறார் நாராயண் சுவாமி. துறைமுக அமைப்பில் இந்திய ஆட்சியாளர்களுக்கு போதிய வெட்டுக் கிடைக்குமாக இருந்தால் அவர்கள் அம்பாந்தோட்டையில் என்ன கண்டியிலேயே துறைமுகம் கட்டுவார்கள்.

 நாராயண் சுவாமி இந்தியா தனது இலங்கை தொடர்பான பார்வையை தமிழ்நாட்டினூடாகப் பார்க்கக் கூடாது என்கிறார் நாராயண். இலங்கை-இந்திய உறவில் ஏற்படும் ஒவ்வொரு வளர்ச்சியும் பாக்கு நீரிணைக்கு இருபுறமும் வாழும் தமிழர்களின் கழுத்துக்களில் வைக்கப்படும் கத்தி என்பதை தமிழர்கள் அறிவார்கள்.

நாராயண் சுவாமி கட்டுரையை முடிக்கும் விதம் மிக மிக முட்டாள்த் தனமானது.
If attacking innocent Sri Lankans or asking their military officers to go home is right because of what happened in the war, then India should be ready to face similar music when its military officers go abroad. After all, have there been no rights violations in places like Kashmir? இலங்கைப்ப் போரில் நடந்தமைக்காக இலங்கைப் படையினரைத் திருப்பி அனுப்புவதும் தமிழ்நாட்டில் அப்பாவி இலங்கையரைத்(சிங்களவரைத்) தாக்குவதும் சரி என்றால் இந்தியா இதே மாதிரியான நடவடிக்கைகளை தனக்கு எதிராக தனது படையினர் வெளிநாடுகளிற்கு செல்லும் போது அவர்கள் கஷ்மீரில் செய்பவற்றிற்காக எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். இங்கு நாராயண் சொல்வது:
1. இலங்கையில் சிங்களவர் தமிழர்களுக்கு எதிராகப் புரிந்த கொடுமைகளையும் மனித உரிமை மீறல்களையும் இந்தியா கஷ்மீரில் புரிகிறது,
2. கேடு கெட்ட சிங்கள அரசைப் போலவே இந்திய அரசும் செயற்படுகிறது.
3. இலங்கைப் படையினரும் சிங்களப்படையினரும் ஒரே இனக்கொலையைச் செய்கிறார்கள்.

கஷ்மீரில் உரிமைகள் மீறப்படவில்லையா? என்ற கேள்வியே நாராயண் சுவாமியின் இறுதி வரி. ஹலோ சீனா... ஹலோ பாக்கிஸ்த்தான்...... அடுத்த ஜெனிவா மனித உரிமைக்கழகத் தொடரில் இந்தியாவிற்கு எதிராக ஒரு முன்மொழிவைச் செய்யுங்களய்யா

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...