Monday, 29 April 2013

ஆண் பெண் விவாதம் மோசமடைவதைத் தவிர்ப்பது எப்படி?

கணவன் மனைவி, காதலன் காதலி, இரு ஆண் பெண் நண்பர்களிடை சண்டை வருவது வழக்கம் அது முற்றி முறிவை நோக்கி இட்டுச் செல்லாமல் தவிர்ப்பதற்கான சில வழிகள்:

எதையும் பிளான் பண்னிச் செய்யணும்
எந்த விவாதத்தையும் தொடங்கு முன்னர் அதை எப்படி முன் வைப்பது மற்றவருக்கு ஆத்திரம் வராமல் இருக்க என்ன என்ன வார்த்தைகளைக் கையாள்வது போன்ற வற்றை முன் கூட்டியே திட்ட மிட்டுக் கொள்ளவும். விவாதம் சூடேறாமல் தவிர்ப்பதையும் சூடேறும் கட்டத்தில் அதை எப்படித் தவிர்ப்பது என்பதையும் முதலே சிந்தித்து வைக்கவும்.

ராங்கா தொடங்கினால் ரணகளமாகும்
எந்த விவாதத்தையும் தொடங்கும் போது பாவிக்கும் வார்த்தைகள் சரியானதாக இருக்க வேண்டும். தொடங்க முன்னர் எதாவது வகையில் மகிழ்ச்சியடைய வைத்து விட்டு விவாதத்தைத் தொடங்க வேண்டும்.


வேறு விடயத்திற்கு தாவுதல்.
விவாதித்துக் கொண்டிருக்கும் விடயத்தை விட்டு விட்டு வேறு விடயத்தைப் பற்றிக் கதைக்க முற்படுங்கள். அது இருவரையும் முரண்பட வைக்காத ஒரு விடயமாக இருத்தல் முக்கியம். அது இருவரையும் சாந்தப்படுத்தி ஒற்றுமையாக்கக் கூடியதாக இருந்தால் நல்லது. தியேட்டரில் புதிசா ஒரு படம் வந்திருக்குப் பார்க்கப் போகலாமா? அடுத்த மாதம் நடக்கவிருக்கும் உறவினரின் திருமணதிற்கு அணிய எப்ப சேலை வாங்கப்போகிறாய் போன்றவை நல்ல பலன் தரும்

எஸ்கேப்
இருவரிடையே விவாதம் முற்றி மோசமாகப் போகிறது என்ற தெரிந்தவுடன் விவாதம் நடக்கும் இடத்தில் இருந்து வெளியேறுதல். பின்னர் ஆற அமர இருந்து நன்கு சிந்தித்து விவாதத்தை எப்படி ஒருவரை ஒருவர் ஆத்திர மூட்டாலம் செய்ய முடியும் என்று அதன்படி பேசித் தீர்க்க முயலவேண்டும்.

Win - Win situatiion
விவாதத்தை மேலும் சூடாக்காமல் இருவருக்கும் வெற்றி கிடைக்கக் கூடிய வகையில் இருவருக்கும் திருப்தியழிக்கக் கூடிய வகையில் விவாதத்தை மாற்றும் வழிகளைத் தேடிப்பிடிக்க வேண்டும்.

நகைச்சுவை 
புன்னகையை முகத்தில் கொண்டு வரவும். விவாதத்தை நகைச்சுவையாக மாற்றி இருவரின் கோபத்தை தணிக்க முயலவும்.

கட்டிப்பிடி வைத்தியம்
விவாதத்தை தணிக்க கொஞ்சம் ரோமாண்டிக்கா மூட்டை கட்டிப்பிடித்தல் தடவுதல் சில்மிசம் செய்தல் போன்ற வழிகளை நாடவும்.

பொத்திக் கிட்டு போகவும்
திடீரென்று விவாதிப்பதை நிறுத்தி போய் ஒரு கரையில் இருந்து ஆழமாக உங்கள் மூச்சை இழுத்து வெளியில் விட்டு உங்கள் கோபத்தைத் தணிக்கவும். ஒன்று மே கதைக்காமல் விவாதத்தை இடையில் முறிப்பதும் ஒரு சரியான அடிதான். அது இருவரையும் சற்றுச் சிந்திக்க வைக்கும். 

மற்றான் கருத்துக்கு மதிப்பு
மற்றத் தரப்பு நியாயங்களையும் சிந்திக்கவும். அவரின் நிலையில் உங்களை வைத்துப் பார்க்கவும்.

சரண்டருக்கு சன்மானம்
விவாதத்தில் ஒருவர் விட்டுக் கொடுத்தால் அதை உங்கள் வெற்றியாகக் கருதாமல் அவரின் பெருந்தன்மையாகக் கருதி அதற்கு உரிய பாராட்டுதல் அதற்காகப் சிறிய பரிசுப் பொருள் வாங்கிக்கொடுத்தல் இனிமேல் வரும் விவாதங்களில் மேலும் விட்டுக் கொடுப்புக்கள் செய்ய ஊக்குவிக்கும்.

முரண்படுவதும் வாழ்க்கியின் ஒரு பகுதியே
இருவர் ஒன்றாக வாழும் போது நிறைய முரண்பாடுகள் வரும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இருவரும் அதை நன்குணர்ந்து விவாதங்களை விரோதங்களாக எடுக்காமல் இருக்கப் பழக வேண்டும்.

நன்றாக கூவவிடுங்கள்
ஒரு தரப்பு உரத்துச் சத்தமிடத் தொடங்கினால் அதையிட்டுக் கோபப்படாமல் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு பின்னர் உங்கள் கருத்தை அமைதியாகத் தெரிவியுங்கள். கூச்சலிடல் கோபத்தைக் குறைக்கும். கூச்சலிடுபவர் அதிக காற்றை வெளியேற்றி பின்னர் அதிக காற்றை உள் இழுப்பார். இது அவரைச் சாந்தப்படுத்தும்.

செவிகொடுப்பது விட்டுக் கொடுப்பதல்ல
ஒருவரின் விவாதத்தை நன்றாக செவிமடுக்கவும். இதுவே அவரை உங்களை விரும்பவைக்கும். பின்னர் நீ சொல்வதில் பிழையில்லைத்தான் ஆனால்....... என்று அமைதியாகத் தொடங்கி உங்கள் விவாதத்தை தர்க்க ரீதியாக முன்வைக்கவும்.

கேள்விகளை அமைதியாக்த் தொடுக்கவும்
மற்றவரின் விவாதத்தை மறுப்பதைத் தவிர்த்து அதில் உள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டும் விதத்தில் உங்கள் கருத்துக்களைக் கேள்வியாக நிதானத்துடன் உறுதியாக முன்வைக்கவும். மற்றவை முன்வைக்குக் கருத்துக்கள் எப்படிப் பிரச்சனையைத் தி

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...