Tuesday, 2 April 2013

பல முனைகளில் சீனா பாதுகாப்பு இரகசியங்களைத் திருடுகிறது.

அமெரிக்கப் பாதுகாப்புத்துறையின் ஒப்பந்தக்காரர் பெஞ்சமின் பிஷப் அமெரிக்க பாதுகாப்பு இரகசியங்களை திருடி தன்னிலும் அரைப்பங்கு வயதுடைய தனது காதலிக்கு கொடுத்தமை தொடர்ப்பாக கைது செய்யப்பட்டது சீனா மற்ற நாடுகளின் பாதுகாப்பு இரகசியங்களை பல முனைகளில் திருடுகிறது என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

எனக்கு 59 உனக்கு 27
பெஞமின் பிஷப் அமெரிக்காவின் பசுபிக் பிராந்தியத்தில் எதிரிகளைக் கையாளும் முறைமை தொடர்பான ஒப்பந்த வேலைகளைச் செய்தவர். 59வயதான பெஞமின் பிஷப் 2011இல் அமெரிக்காவில் உள்ள ஹவாயில் நடந்த ஒரு பாதுகாப்புத்துறை தொடர்பான மாநாட்டில் 27வயதான சீன மாணவியைச் சந்தித்தார். அன்றிலிருந்து அவர்கள் இருவரும் காதலர்களானார்கள். சீன மாணவியின் பெயர் இதுவரை வெளிவிடப்படவில்லை பெஞமின் பிஷப் எதிராக நடக்கும் வழக்கில் அவர் நபர் - 1 எனவே குறிப்பிடப்பட்டுள்ளார். சீன மாணவி மாணவ அனுமதிப்பத்திரத்தில் அமெரிக்காவில் வசித்தவர். பெஞ்சமின் பிஷப் அமெரிக்க பசுபிக் கட்டளையகத்தில்  lieutenant colonel in the U.S. Army Reserve ஆகப் பணிபுரிந்தவர்.

பெஞ்சமின் பிஷப்பின் வீட்டைச் சோதனையிட்ட போது அமெரிக்கப் படைத்துறையின் பல இரகசிய தகவல்களடங்கிய பத்திரங்களை கண்டெடுத்தனர்.

2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் தாய்வானைச் சேர்ந்த  Ko-Suen Moo என்பவர் அமெரிக்காவில் F-16 jet engine and cruise missiles போன்றவற்றை வாங்க முயன்றமைக்காக கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் தான் சீனாவிற்காகவே இவற்றை வாங்க முயன்றாதாகவும் ஒப்புக் கொண்டார்.

Noshir Gowadia என்னும் இன்னொருவர் அமெரிக்க விமானப்படையின் B-2 விமானங்களின் உந்து முறைமைக்கு ((propulsion system) பொறுப்பானவர். இவரும் வெளிநாடுகளுக்கு இரகசியங்களை விற்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். இவர் சீனாவிடமிருந்து $110,000 ஐப் பெற்றது கண்டறியப்பட்டது.

அமெரிக்கா தாயாரிக்கும் புதிய படைத்துறை உபகரணங்கள் ஆராய்ச்சிக்களுக்காகப் பெரும் செலவு செய்து  உருவாக்கப்படுகின்றன. அவை மிகவும் புதியரக ட்தொழில்நுட்பங்களைக் கொண்டிருக்கும். சீனா இத்துறையில் பல ஆண்டுகல் பின் தங்கிய நிலையில் இருக்கிறது. இந்த இடைவெளியை அமெரிக்கத் தொழில்நுட்பங்களைத் திருடுவதன் மூலம் விரைவில் நிரப்ப முடியும்.

இணையவெளி ஊடுருவல்கள் செய்யப்பட்டு வர்த்தகரீதியான தகவல்களும் திருடப்படுகின்றன. ஒரு நிறுவனம் பெரும் தொகப் பணம் செலவழித்து கண்டுபிடித்த தொழில்நுட்பங்களை மற்ற நிறுவனங்கள் இணையவெளியூடாகத் திருடி விடுகின்றன. பல அமெரிக்க நிறுவங்களின் தொழில்நுட்ப இரகசியங்கள் பல சீனாவில் இருந்து திருடப்படுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

சீனாவிடம் "இணையவெளி நீலப் படைப்பிரிவு" என்ற பெயரில் இணையவெளி நிபுணர்களைக் கொண்ட ஒரு படைப் பிரிவு உண்டு. இவை "இரவு யாளி" என்னும் பெயரில் பிரித்தானியாவிற்கு எதிராக ஒரு படை நடவடிக்கையை மேற் கொண்டதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்கவிற்கு பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் லொக்கீட் நிறுவனத்தின் கணனிகள் தொடர் ஊடுருவல் முயற்ச்சிகளுக்கு உள்ளாகி வருகிறது. முழுக்க முழுக்க கூகிளின் இணையத் தளம் போல் போலியான ஒரு இணையத்தளத்தை சீனாவில் உருவாக்கி அதில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையினர் உண்மை என நம்பி உள் நுழைந்து தமது மின்னஞ்சல்களின் கடவுச்சொற்களை பதிந்தனர். இதனால் பல இரகசியங்கள் திருடப்பட்டன. இணையவெளிப் போர்முனையில் சீனா முன்னணியில் இருக்கிறது என்று ஐக்கிய அமெரிக்கா அஞ்சுகிறது. இதனால்  அமெரிக்கப் பாதுகாப்புத் துறை தனது இணையவெளிப் போர் முறைமைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளதாக 27-01-2013இலன்று செய்திகள் வெளிவந்தன. 

பெஞ்சமின் பிஷப் விவகாரத்தின் பின்னர் சீனா இணைய வெளியூடாகவும் மரபுவழியாகவும் அமெரிக்க படைத்துறை மற்றும் தொழில்நுட்பத்துறை இரகசியங்களைத் திருடுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

1 comment:

thiyaa said...

ஆசை ஆரைத்தான் விட்டது

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...