Thursday, 14 March 2013

ஜெனிவா: இலங்கையை ஆத்திரப்படுத்தும் திருத்தங்கள்

ஜெனிவாவில் நடக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித  உரிமைக்கழக 22வது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டுவரவிருக்கும் தீர்மானத்தில் செய்த சில திருத்தங்கள் இலங்கையை ஆத்திரப் படுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித  உரிமைக்கழகத்தில் தான் கொண்டு வரும் தீர்மானம் தொடர்பாக அமெரிக்கா அடுத்தடுத்து அதிகார பூர்வமற்ற கூட்டங்களை நடாத்தியுள்ளது. கடைசியாக மார்ச் 13-ம் திகதி புதன்கிழமை ஒரு கூட்டம் நடந்தது. அவற்றில் தனது இலங்கை தொடர்பான தீர்மானத்தின் வரைபைச் சமர்ப்பித்துள்ளது.  தீர்மானம் மூன்று தடவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது தடவை திருத்தியமைக்கப்பட்ட வரைபில் செய்யப் பட்ட சில மாற்றங்கள் இலங்கையை அதிருப்தியடைய வைத்துள்ளது. மார்ச் 13-ம் திகதி புதன்கிழமை நடந்த கூட்டத்தில் இலங்கை கலந்து கொள்ளவில்லை

 அயோக்கிய இந்தியாவின் கள்ள மௌனம்
அமெரிக்கா ஏற்பாடு செய்த கூட்டங்களில் சீனா, இரசியா, கியூபா, பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகள் தீர்மானத்தின் கடுமையைக் குறைக்க வாதிட்டன. கனடாவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் தீர்மானத்தைக் கடுமையாக்க வாதிட்டன. ஆரம்பத்தில் ஜப்பானும் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்பட்டது. ஆனால் கடைசியாக நடந்த கூட்டத்தில் ஜப்பான் பெரும் எதிர்ப்பைக் காட்டியதாகத் தெரிவில்லை. இக் கூட்டங்களில் இந்தியா மௌனமாக இருப்பது பலரையும் ஆத்திரப்படுத்தியுள்ளது. தீர்மானம் எப்படியும் நிறைவேறத்தான் போகிறது அதை எதிர்க்காமல் விடுங்கள் என்று இலங்கைக்கு இந்தியா விடுத்த வேண்டுகோளை இலங்கை நிராகரித்து விட்டது. இதன் மூலம் தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விடாமல் செய்ய இந்தியா நினைத்தது. வாக்கெடுப்புக்கு வந்து இந்தியா ஆதரித்து வாக்களித்தால் இந்தியா இலங்கைச் சிங்களப் பேரினவாதிகளிடம் முறையாக வாங்கிக் கட்டும். ஆதரித்து வாக்களிக்காவிட்டால் தமிழ்நாட்டில் எதிர்ப்புக் கிளம்பும். கலைஞர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் அனுப்புவார்.

வரைபு தீர்மானத்தில் ஆறாவது பத்தியில்:
"Requests the OHCHR, with input from relevant special procedures mandate holders, as appropriate, to present an oral report at the twenty-fourth session and a comprehensive report followed by a dedicated general debate at the twenty-fifth session of the HRC, on implementation of this resolution".

முதல் சமர்பிக்கப்பட்ட வரைபில் general debate என இருந்த சொற்தொடர் பின்னர் dedicated general debateஎன மாற்றப்பட்டது. இந்தத் திருத்ததை னா, இரசியா, கியூபா, பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகள்கடுமையாக எதிர்த்தன. 24வது கூட்டத்த் தொடரில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்பதை தமிழர் தரப்பு எதிர்த்தது. அது இரண்டரை ஆண்டு கால அவகாசத்தை இலங்கைக்குக் கொடுக்கிறது. அதற்குள் இலங்கை இந்தியாவின் உதவியுடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சிங்கள மயமாக்கி விடும். இந்தியா சிங்களக் குடியேற்றத்திற்கு வசதியாக யாழ்ப்பாணத்திற்கு தொடரூந்து சேவையை ஏற்படுத்திக் கொடுக்கிறது. இந்த இரண்டரை ஆண்டுகள் இழுத்தடிப்பு இந்தியாவின் கைங்கரியமாக இருக்கலாம்.

வரைபு தீர்மானத்தின் 5வ்து பத்தியில்:
"Taking Note of the Government of Sri Lanka's National Plan of Action to implement the Recommendations of the LLRC and its commitments as set forth in response to the findings and recommendations of the LLRC".

இந்த to implement என்ற சொற்தொடரை அமெரிக்கா புதிதாகச் சேர்த்துள்ளது.

தீர்மானத்தின் 8வது பத்தியில் ;
"Noting with concern that the National Action Plan and the LLRC's report do not adequately address serious allegations of violation of international human rights law and international humanitarian law".

இந்த international human rights law and international humanitarian law" என்ற சொற்தொடர் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. அத்துடன் புதிய வரைபில் "discrimination on the basis of religion or belief" என்ற பதமும் சேர்க்கப்பட்டுள்ளது. 

மூன்றாவதாகச் சமர்ப்பிக்கப்பட்ட வரைபுதான் இறுதி வரைபாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இனி அமெரிக்கா தனது நட்பு நாடுகளுடன் கலந்தாலோசித்து மேலும் மாற்றங்களை மார்ச் 19-ம் திகதிவரை கொண்டு வரலாம். இலங்கைக்குச் சாதகமாக ஏதாவது திருத்தங்கள் செய்யப்பட்டால அது நிச்சயம் இதியாவின் கைவரிசையாகத்தான் இருக்கும் என உறுதியாகக் கூறலாம்.

உளவியல் போர்க்கலனாக சுப்பிரமணிய சுவாமி
ஜெனிவாவில் செயற்படும் தமிழர் தரப்பினர் அமெரிக்க அரசதந்திரிகளிடம் சுப்பியமணிய சுவாமி பற்றிக் கதைத்த போது அவரால் தமது நிலைப்பாடு மாறாது எனத் தெரிவித்தன்ர். அமெரிக்க அதிபர் பராக ஒபாமாவை சுவாமி சந்தித்தார் என்பது படு பொய் என அவர்கள் தெரிவித்தனர். சிங்கள மக்களைத் திருப்திப்படுத்தவும் தமிழர்கள் மீதான இலங்கை அரசின் தொடர்  உளவியல் போரின் ஒரு அம்சமாகவும் சுவாமி பயன்படுத்தப் படுகிறாரா?

தமிழர்கள் இன்னும் சில ஆண்டுகள் பொறுத்திருக்க வேண்டும்
தாங்க முடியாத துயரில் அல்லல்படும் தமிழர்கள் இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் இன்னும் பொறுத்திருக்க வேண்டும் தமக்கு ஏதாவது நீதி கிடைக்குமா என்ற நம்பிக்கை ஏற்பட. ஐக்கிய அமெரிக்கா பல காரணிகளைக் கருத்தில் கொண்டுதான் 24வது கூட்டத் தொடரில் அறிக்கை சமர்பிக்கக் காத்திருக்கிறது. அப்போது காங்கிரசுக் கட்சி ஆட்சியில் இருக்காது. 2015இல் பான் கீ மூன் ஐக்கிய நாடுகள் சபையில் பதவிக் காலம் முடிந்து வெள்யேறி விடுவார். அமெரிக்க சார்புடைய ஒரு ஆபிரிக்கர் அல்லது கிழக்கு ஐரோப்பியர் ஐநா பொதுச் செயலராக வர வாய்ப்பிருக்கிறது. ஈழத் தமிழர்களுக்கான உண்மையான விடிவு வெளிக்காரணிகளில் இல்லை. உலகெங்கும் வாழும் மக்கள் ஒன்றுமையாக ஒன்று கூடும் போது மட்டுமே எமது விடிவு சாத்தியமாகும். ஜெனிவாத் தீர்மானம் மற்ற நாடுகளை எதிர்காலத்தில் எமது பக்கம் திருப்புவதற்கு வாய்ப்பளிக்கும்.

1 comment:

Anonymous said...

நிச்சயமாக வெளியார் கைகளில் அல்ல எமது ஒற்றுமையிலேயே எமது எதிர்காலம தங்கியுள்ளது. இனியாவது அனைத்து தமிழரும் ஒன்றுபட்டால் நன்மை உண்டாக வழியுண்டு. அதை விட்டால் அவன் செய்வான் இவன் செய்வான் என வானத்தை அண்ணாந்த பார்த்து இடுப்பில் இருக்கும் கிழிந்த கோவணத்தையும் பறிகொடுக்க வேண்டியதே.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...