Saturday, 6 October 2012

நகைச்சுவைக் கதைகள்: பாக்கிஸ்த்தானிலும் இல்லை..ஆப்கானிஸ்தானிலும் இல்லை.

 இடம்: குடிவரவுப் பணிமனை, இஸ்லாமபாத் விமானநிலையம்
ஒரு ஆப்கானிஸ்தான்  பயணியிடம் குடிவரவு அதிகாரி நீ ஆப்கானிஸ்த்தானிலில் என்ன வேலை பார்க்கிறீர்  என்று கேட்டார். அதற்கு அப்பயணியின் பதில் நான் அங்கு துறைமுகத் துறை அமைச்சராக இருக்கிறேன். அதிர்ச்சியடைந்த குடிவரவு அதிகாரி ஆப்கானிஸ்தானில் துறைமுகமே இல்லை. எப்படி துறைமுகத்துறை மந்திரியாக நீர் இருக்கிறீர்கள். அதற்கு அந்தப் பயணி உங்கள் நாட்டில் சட்டமும் இல்லை நீதியும் இல்லை ஆனால் சட்டத்துறை அமைச்சர் நீதித் துறை அமைச்சர் இருக்கவில்லையா என்றார்.அது ஒரு மனநோயாளர் மருத்துவ மனை. அங்கு ஒரு நோயாளி கிணற்றில் தவறி விழ அவனை நீந்தத் தெரிந்த இன்னொரு நோயாளி காப்பாற்றி விட்டான்.  அதைக் கேள்விப்பட்ட மருத்துவ நிபுணர் காப்பாற்றிய நோயாளியை அழைத்து உனக்கு ஒரு நல்ல செய்தியும் துக்கமான செய்தியும் சொல்லப் போகிறேன். நீ உனது நண்பனைக் காப்பாற்றிய படியால் நீ சுகமடைந்து விட்டாய் என நினைக்கிறேன். நீ வீடு செல்லலாம். துக்கமான செய்தி நீ கிணற்றில் இருந்து காப்பாற்றிய உனது நண்பன்
தூக்கிட்டுத் தற்கொலை செய்துவிட்டான். அப்போது இடைமறித்த நோயாளி அவன் சாகவில்லை. கிணறில் விழுந்து நனைந்தவனை நான்தான் மரத்தில் கட்டி ஈரம் காயட்டும் என்று தொங்க விட்டிருக்கிறேன். ஈரம் காய்ந்ததும் அவன் சுகமாகிவிடுவான் என்றான். இதைக் கேட்டு மருத்துவார் நோயாளியானார்.

அது ஒரு மனநோயாளர் மருத்துவ மனை. அங்கு ஒரு நோயாளி கிணற்றில் தவறி விழ அவனை நீந்தத் தெரிந்த இன்னொரு நோயாளி காப்பாற்றி விட்டான்.  அதைக் கேள்விப்பட்ட மருத்துவ நிபுணர் காப்பாற்றிய நோயாளியை அழைத்து உனக்கு ஒரு நல்ல செய்தியும் துக்கமான செய்தியும் சொல்லப் போகிறேன். நீ உனது நண்பனைக் காப்பாற்றிய படியால் நீ சுகமடைந்து விட்டாய் என நினைக்கிறேன். நீ வீடு செல்லலாம். துக்கமான செய்தி நீ கிணற்றில் இருந்து காப்பாற்றிய உனது நண்பன்
தூக்கிட்டுத் தற்கொலை செய்துவிட்டான். அப்போது இடைமறித்த நோயாளி அவன் சாகவில்லை. கிணறில் விழுந்து நனைந்தவனை நான்தான் மரத்தில் கட்டி ஈரம் காயட்டும் என்று தொங்க விட்டிருக்கிறேன். ஈரம் காய்ந்ததும் அவன் சுகமாகிவிடுவான் என்றான். இதைக் கேட்டு மருத்துவார் நோயாளியானார்.

வியாபாரத்தில் முன்னேறுவதற்குத் தேவையான Law என்ன என்ற கேள்விக்கு
ஒரு ஐரோப்பியனின் பதில்: Business Law
ஒரு அமெரிக்கனின் பதில்: Law of Economics
ஒரு இந்தியனின் பதில்: Father-in-law

இந்த நகைச்சுவை இந்தியத் தந்தைகளுக்கு விளங்காது. அவர்கள் after sale-service செய்யவேணும் தங்கள் பெண்களுக்கு:
 Bride's Fathers Luckiest day
The bride kissed her father and placed some thing in his hand. Everyone in the room was wondering what was given to the father by the bride.
The father could feel the suspense in the air and all eyes were on him to divulge the secret and say something.
So he announced "Ladies and Gentlemen today is the luckiest day of my life." Then he raised his hands with what his daughter gave him and continued.....
"My daughter finally, finally returned my Credit card to me."
The whole audience including the priest erupted in laughter.......... all except......
 the poor Groom!!

Friday, 5 October 2012

மானம் கெட்ட நாட்டை நம்பி மாணிக்கங்களை இழந்தோம்.

கண்ணுவ முனிவரின் கைப்பாவையாம்
சகுந்தலை காமம் மேலிட
கிழவன் துஷ்யந்தனைக்
திருமணம் செய்யமுன் புணர்ந்து
பெற்ற மகன் பரதன் ஆண்டபூமி
என்பதால் பாரததேசம் எனப்
பெயர் பெற்ற மானம் கெட்ட நாட்டின்
அமைதிப்படையை நம்பி
நெஞ்சுரம் மிக்க வீரன்
குமரப்பாவை இழந்தோம்


வந்த மருமகளை சபை நடுவில்
வைத்துத் துகிலுரிந்த
பாவியர் ஆண்ட
மானம் கெட்ட நாட்டின்
அமைதி உடன்படிக்கையை நம்பி
தீரத்திலகம் புலேந்திரனை இழந்தோம்


ஜீயாசுதீன் காஜி என்றொரு இசுலாமியன்
வெள்ளையர் ஆட்சிக்குப் பயந்து
தன் பெயரை கந்தககார் நேரு
என மாற்றிக் கொண்டான்
அந்த வழிவந்த அயோக்கியன்
ராஜீவ் என்பவனின் பேச்சை நம்பி
அருமைப் போராளி அபுதுல்லாவை
அநியாயமாய் பலிகொடுத்தோம்


மவுண்ட் பேட்டனின்
மனைவியின் கள்ளக்காதலனாய்
கருதப்படுக் காமுகன் நேரு
சரோஜினி நாயுடுவையும்
விட்டுவைத்தவனல்லன்
அவன் பேரனாம் ராஜீவிடம்
படைக்கலன்களை ஒப்படைத்து
வீரப் போராளி ரகுவை இழந்தோம்


தமிழ்க் காங்கிரசுத் தலைவன்
பொன்னம்பலத்தையும்
தோட்டத் தொழிலாளர் காங்கிரசுத்
தலைவன் தொண்டமானையும்
ஒன்றுபடாமல் தடுத்துப் பிரித்த
பேரினவாதப் பேய் நேருவின்
பேரனாம் ராஜீவின் பேச்சை நம்பி
நற்றமிழ் வீரன் நளனைப் பலி கொடுத்தோம்


சாந்திநிகேதன் பலகலைக் கழகத்தில்
ஜேர்மானிய விரிவுரையாளன் அறையில்
தனியய் இருக்கையில் பிடிபட்டு
ரவீந்திரநாத் பெருந்தகையால்
விரட்டியடிக்கப்பட்ட சிறுக்கி
இந்திரா காந்தியின் பொறுக்கி
மகனாம் ராஜீவின் உறுதி மொழியை நம்பி
பச்சைத் தமிழ் வீரன் பழனியை இழந்தோம்


மைமுனா பேகம் எனத் தன்பெயரை மாற்றி
சொந்தத் தாயின் நெருங்கிய நண்பனான
பெரோஸ் கான என்னும் இஸ்லாமியனை

இலண்டனில்
நிக்காஹ் செய்த இந்திரா
இந்திரா கான் என்றால்
இந்திய அரசியலில் பிழைக்க
முடியாதென்பதால்
காந்தியின் புகழைத் திருட
காந்தியின் பெயரைக் குடும்பப் பெயராக்கிய
இந்திரா காந்தியின் மகன் தான் ராஜீவ்
அவனைத் தூயவன் என நம்பி
மின்னலடி வீரன் மிரேசை இழந்தோம்


இலண்டனில் திருட்டு மகிழூர்தியை வாங்கி
சிக்கலில் மாட்டி சஞ்சீவ் என்னும் பெயரை
சஞ்சய் ஆக மாற்றித் தப்பிய அயோக்கியனின்
உடன் பிறப்பு ராஜீவ் கான்
அவனுக்குத் தெரியுமா விடுதலைபற்றி
அவனை நம்பி வீரன் ரெஜினோல்டைப்
பலி கொடுத்தோம்


பிரித்தானியக் கேம்பிரிட்ஜ் நகரில்
தனியார் பள்ளியில்படித்துவிட்டு
கேம்பிரிட்ஜ் பல்கலைகழகப் பட்டதாரி
எனப் பொய்யுரைத்து மாட்டியவள் மட்டுமல்ல
மாஃபியா கொள்ளைக் கும்பலுக்கு பெயர் போன
நகரின் நாஜிப்படையாளின் மகளும் ஆகிய சோனியாவை
தன் பெயரை ரொபோர்ட்டோ என மாற்றி
கைப்பிடித்த கயவன் ராஜிவிற்குத்
தெரியுமா தமிழர் துயர்

அவனை நம்பி தானைப் போராளி
தவக்குமாரை இழந்தோம்


போபஸ் ஊழலில் பல பில்லியன் டொலர்கள் சுருட்டி
சுவிஸ்வங்கியில் போட்ட திருடனுக்குத்
புரியுமா தியாகி திலீபா தமிழர் சுதந்திர வேட்கை
அந்தத் திருடனுக்குத் தெரியுமா
தமிழர் சுந்தந்திர வேட்கை
நம்ப வைத்துக் கழுத்தறுக்கும்
நாயை நம்பியதால் அன்பழகன் அநியாயமாய்ப் போனான்
தந்தை வழித் தனயனாக
சுன்னத்து செய்து கொண்டு
இந்து முகமூடி பூண்ட
கயவனுக்குத் தெரியுமா
விடுதலை வேங்கைகள் தியாகம்
அவனை நம்பி கரனும் மாவீரனாகினான்

குள்ள நரி ஜேஆரிடம் ஏமாந்த
அரசியல் கற்றுக் குட்டி
எம் துயர் தீர்ப்பான் என நம்பி
தியாகி ஆனந்தக் குமாரை
அநியாயமாய்ப் பலி கொடுத்தோம்


 அன்று எம்மை அழித்தது இந்தியா
இன்று எம்மை அழிக்கிறது இந்தியா
என்றும் எம்மை அழிக்கும் இந்தியா
பலியாகிப் போன பன்னிரு வேங்கைகளே
உம் தியாகத்தால் இந்த உண்மையை
என்றும் எம்மவர்க்கு உணர்த்திடுவீர்


பிற் குறிப்பு
கவிதையில் உள்ள தகவல்கள் K. N. Rao எழுதிய nehru gandhi dynasty என்ற நூலில் இருந்தும் Katherine Frank  எழுதிய “The Life of Indira Nehru Gandhi” என்ற நூலில் இருந்தும் மேலும் பல இணையத் தளங்களில் இருந்தும் பெறப்பட்டவை.

Thursday, 4 October 2012

சிரிய-துருக்கி மோதல் ஒரு சதி வலையா?

தமது நாட்டின் மீது சிரியப்படைகள் எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டதாகக் கூறி துருக்கி சிரியப் படை நிலைகள் மீது பலத்த எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டு பல சிரியப் படையினரைக் கொன்றுள்ளது. சிரியப் படையின் நடவடிக்கைக்குப் மேற்கு நாடுகள் கண்டனம் தெரிவித்தன. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன் சிரியா தனது அயல் நாடுகளின் இறைமையை மதிக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார்.

பாதுகாப்புச் சபையின் கண்டனத் தீர்மானம்.
ஐநா பாதுகாப்புச் சபையில் துருக்கி சிரியாவிற்கு எதிரான கண்டனத் தீர்மானத்தை கொண்டுவரவுள்ளது. இதற்கு மற்ற நாடுகளுடன் ஆலோசனை நடாத்தியுள்ளது. நேட்டோ நாடுகள் தமது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளனர். சிரிய ஆட்சியாளர்களுக்கு பெரும் ஆதரவு வழங்கும் இரசியா நாட்டின் ஐநாவிற்கான பிரதிநிதி தான் மாஸ்கோவுடன் கலந்தாலோசிக்க அவகாசம் கேட்டுள்ளார்.

சிரியாவிற்கு எதிரிகள் தேவையில்லை
சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சி உள்நாட்டில் பெரும் சவாலை எதிர் கொண்டு இருக்கும் வேளையில் துருக்கி மீது தாக்குதல் நடாத்த வேண்டிய அவசியமோ அல்லது அவசரமோ அவருக்கு இல்லை. துருக்கி மீது தாக்குதல் நடாத்தினால் அது தனது ஆட்சிக்கு தானே பறிக்கும் குழியாகிவிடும் என்று சிரிய அதிபர் நன்கு அறிவர். சிரிய அரச படையில் இருந்து பலர் விலகி கிளர்ச்சிக்காரர்களுடன் இணைந்து வந்துள்ளனர். இப்போது இந்த விலகல் குறைந்துள்ளது. சிரிய அதிபர் அசாத்திற்கு எதிராகத் திரும்பும் படையினர் இப்போது விலகிச் சென்று கிளர்ச்சிக்காரர்களுடன் இணையாமல் உள்ளேயே உறங்கு நிலை வெடிகளாக (sleeper cells) ஆகச் செயற்படலாம். கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சியில் லிபியத் தலைநகர் திரிப்போலி இலகுவாக கிளர்ச்சிக்காரர்கள் கையில் விழுவதற்கு இந்த உறங்கு நிலை வெடிகளாக (sleeper cells) ஆகச் செயற்பட்டவர்களே காரணம். துருக்கி மீதான எறிகணைத் தாக்குதல்களை இவர்கள் மேற்கொண்டிருக்கலாம். சிரிய அரசு துருக்கி மீதான தாக்குதல் ஒரு தற்செயலாக நடந்த விபத்து என்கிறது.

துருக்கிய சதி
முன்பு ஈராக்கில் உள்ள குர்திஷ் இன மக்கள் மீது எல்லை தாண்டித் தாக்குதல் நடாத்துவதற்காக துருக்கி தனது நாட்டின் மீது தானே ஏவுகணையை வீசிவிட்டு அது குர்திஷ் கிளர்ச்சிக்காரர்களின் வேலை எனக் குற்றம் சாட்டி ஈராக் எல்லை தாண்டிச் சென்று குர்திஷ் மக்களைத் தாக்கியது என்று முன்பு செய்திகள் வெளிவந்தன.  சிரியாவில் ஆட்சியாளர்களுக்கு எதிராக 18 மாதங்களாக நடக்கும் போராட்டத்தால் பாதிப்படைந்த பல்லாயிரம் சிரியர்கள் துருக்கி நாட்டில் தஞ்சமடைந்துள்ளனர். இது துருக்கிக்கு பெரும் தலையிடியாக அமைந்துள்ளது. இதனால் தனது படைகளை சிரியாவிற்குள் அனுப்பி அங்கு ஒரு பாதுகாப்பு வலயத்தை உருவாக்கி தனது நாட்டுக்குள் சிரிய மக்கள் வராமல் பார்த்துக்கொள்ள துருக்கி திட்டமிட்டுள்ளது. சிரிய ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து துருக்கிய பராளமன்றம் கூட்டப்பட்டு சிரியாவிற்குள் எல்லை தாண்டிப் படை நடவடிக்கைகள் மேற்கொள்ளும் ஆணையை துருக்கிய அரசு கோரியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலின் பின்னர் சிரியா மீது தாக்குதல்
சிரியா மீது தாக்குதல் செய்ய ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு தீர்மானம் கொண்டு வர முடியாது. ஏற்கனவே கொண்டுவரப்பட்ட இரு தீர்மானங்களை இரசியாவும் சீனாவும் தமது இரத்து அதிகாரத்தை(வீட்டோ) பாவித்து இரத்து செய்து விட்டன. சிரியாமீதான படை நடவடிக்கையை அமெரிக்க அரசு அதன் அதிபர் தேர்தலுக்குப் பின்னர் வரை ஒத்தி வைத்துள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்திருந்தன. நவம்பர் ஆறாம் திகதி அமெரிக்கத் தேர்ந்தல் முடிவடைந்த பின்னர் சிரியாமீது ஒரு படை நடவடிக்கை மேற் கொள்ள அமெரிக்காவிற்கும் மற்ற நேட்டோ நாடுகளுக்கும் ஒரு சாட்டு தேவை. நேட்டோ நாட்டின் ஓர் உறுப்பினரான துருக்கிக்கும் சிரியாவிற்கும் மோதல் என்பதை சாட்டாக வைத்து சிரியாமீது நேட்டோப் படைகள் தாக்குதல்களை மேற் கொள்ளலாம்.

Wednesday, 3 October 2012

மாறும் ஆறு வித்தியாசங்கள்


ஆறில் குடும்பம் இனிக்கும்
உலகம் அச்சுறுத்தும்
பன்னிரண்டில் கல்வி கசக்கும்
விளையாட்டு இனிக்கும்
பதினெட்டில் காதல் இனிக்கும்
குடும்பம் கசக்கும்
இருபத்து நான்கில் வேலை கசக்கும்
மனைவி தேவைப்படும்
முப்பதில் குழந்தை இன்பம் தரும்
பணம் தட்டுப்பாடாகும்
நாற்பத்திரெண்டில் அறிவு முதிரும்
அனுபவம் தேவைப்படும்
நாற்பத்தெட்டில் அனுபவம் பயந்தரும்
குடும்பம் கசக்கும்
ஐம்பத்து நான்கில் பிள்ளைகள் தொல்லை
வேலை பெரும் சுமை
அறுபதில் பேரர்கள் பேரின்பம்
மனைவியின் துணை தேவை
அறுபத்தாறில் வாழ்வின் இரைமீட்டல்
நிறைவேறாக் கனவுகளின் துயர்
எழுபத்திரெண்டில் உடல் சுமையாகும்
உள்ளம் கலங்கும்
எழுபத்தெட்டில் உலகம் எமை வெறுக்கும்
உறவுகள் தேவைப்படும்
எண்பத்து நான்கில் உலகை நாம் வெறுப்போம்
பிரியப் போகும் துயர் சூழும்

Tuesday, 2 October 2012

வலைத்தள வேகத்தை அதிகரிக்கும் கூகிளின் Tag Manager

இன்றிலிருந்து கூகுள் தனது சேவையில் Tag Managerஐ இணைக்கவிருக்கிறது. இது வலைத்தளங்களைத் தரவிறக்கும் வேகத்தை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த இலவசக் கருவி சகல வலைத்தள tagsகளையும் ஒன்று திரட்டி வலைத்தளத்தில் இருந்து நிர்வகிக்கக்கூடிய ஒரு குறியீடாக்கும்.GTM எனப்படும் Google Tag Manager  a free container tag system from Google. A container tag helps you manage different kinds of tags that you may have on your site. This include web analytics tags, advertising conversion tags, general JavaScript, etc. A container is basically a holder, or bucket, that you can populate with all of your other tags. Each container has it’s own JavaScript that you place on the site.

Google Tag Manager comes with a number of pre-configured macros:

  •     URL Macro: This holds the value of the URL for the current page.
  •     HTTP Referrer: This holds the value for the referrer of the current page.
  •     JavaScript Variable: This is the name of a JavaScript variable on your page. GTM searches the page, finds the JavaScript variable based on the name you enter, and then stores the value in a macro.
  •     DOM Text: This is the name of a DOM element ID in your page. GTM searches the page, finds the element, and then stores the value of that element in a macro.
  •     DOM Attribute: This is the name of a DOM element ID:attribute. GTM searches the page, finds the element ID:attribute, and then stores the value in a macro.
  •     Data Layer Variable: This is the name of a data layer variable. GTM searches the data layer, finds the variable with the name that you entered into the macro, and then stores the value in the macro.
  •     Constant String: The Constant String does not come from the page. It’s just a constant value that you input as a macro.
  •     Custom Event: This is a way to get custom data based on a visitor action. More about events in the a later section.

Tag Manager பற்றிய காணொளி:

Monday, 1 October 2012

கடாஃபியை பிரெஞ்சு உளவுத்துறை கொன்றதாம்.

2011-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20-ம் திகதி கிளர்ச்சிக்காரர்களால் சுற்றி வளைக்கப்பட்ட லிபிய முன்னாள் தலைவர் தளபதி கடாஃபி காலை 15 வாகனங்களைக் கொண்ட ஒரு வாகனத் தொடரணியில் தப்பி ஓட முயற்ச்சித்தார். அந்த வாகனத் தொடரணியின் மீது காலை 8.30 அளவில் நேட்டோ விமானங்களை குண்டு தாக்குதல் நடாத்தி அழித்தன. இதில் அமெரிக்க ஆளில்லா விமானங்களே முதலில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது.

கடாஃபியைக் கொல்லும் அதிகாரம் நேட்டோவிற்கு இல்லை
அமெரிக்க ஆளில்லா விமானங்கள் முதலில் முன்னர் சென்ற ஒரு வாகனத்தைத் தாக்கி மற்ற வாகனங்களைத் தடை செய்தன. பின்னர் வீசிய குண்டுகள் சுமார் ஆறு வாகனங்களைத் தாக்கிச் சேதப் படுத்தின.  மொத்தமாக 70 வாகனங்கள் தப்பி ஓட முயற்ச்சித்ததாக இன்னொரு செய்தி தெரிவித்தது. நேட்டோ தாம் தனிப்பட்டவர்களை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்துவதில்லை என்றும் தமக்கு கடாஃபி அந்த வாகனங்களுக்குள் இருப்பது தாக்கும் போது தெரியாது என்றும் கூறியது. ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் 1973இன் படி நேட்டோப் படைகள் லிபியாவில் ஒரு விமானப் பறப்பற்ற வலயத்தை நிலைநாட்டும் ஆணையை நேட்டோ நாடுகள் பெற்றிருந்தன. மும்மர் கடாஃபியைக் கொல்லும் ஐநா ஆணை நேட்டோவிடம் இருந்திருக்கவில்லை.

கடாஃபி உயிருடன் வேண்டும்
குண்டு வீச்சிலிருந்து தப்ப கடாஃபி ஒரு தண்ணீர் வாய்க்கால் குழாய்க்குள் ஒளிந்து கொண்டார். நீண்ட நாட்களாக கடாஃபி ஆதரவுப் படைகள் சரணடையாமல் மூர்க்கத் தனமாக  பதில் தாக்குதல் தொடுத்ததில் இருந்தே கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களுக்கு கடாஃபி சேர்டே (Sirte) நகரில் ஒளிந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருந்தது. மும்மர் கடாஃபியை உயிருடன் பிடிக்க வேண்டும் என்று கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களின் தலைமை கிளர்ச்சிக்காரர்களுக்கு உத்தரவிட்டிருந்தது. நீங்கள் கடாஃபியை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் ஆனால் கடாஃபி எமக்கு உயிருடன் வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்க்கப்பட்டிருந்தது.
கெஞ்சிய கடாஃபி
வாகனத் தொடரணி மீது விமானத் தாக்குதல் நடந்திய பின்னர் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள் கடும் தேடுதல் மேற்கொண்டனர். கடாஃபியின் ஆதரவுப் படையினரில் ஒருவர் கொடுத்த தகவலை அடிப்படையாக வைத்து 12..30 மணியளவில் கடாஃபி இருந்த இடத்தைச் சூழ்ந்து கொண்டனர். கடாஃபியின் மெய்ப் பாதுகாவலர்கள் சரணடைந்தனர். அவர்கள் தங்கள் தலைவனை ஒன்றும் செய்ய வேண்டாம் அவர் காயப்பட்டுள்ளார் என்றனர். யார் தலைவர் என்று வினவிய போது அவர்கள் யாரென்று சொல்லவில்லை. பின்னர் தண்ணீர் வாய்க்காலுக்குள் இருந்து வந்த கடாஃபி எனது மகன்களே.... இங்கு என்ன நடக்கிறது?...... என்ன பிழை இங்கு..... என்றபடி வந்தார். தனது எதிரிகளை எலிகள் என்று அடிக்கடி விமர்சித்த கடாஃபி ஒரு வாய்க்காலுக்குள் எலிபோல் ஒளித்திருந்தார். அவரது தங்கக் கைத் துப்பாக்கியுடன் வெளிவந்த கடாஃபி தன்னைச் சுடவேண்டாம் என்று கத்தினார். அவரை இனம் கண்டு கொண்ட அவரது எதிரிகள் அவரை மூர்க்கமாகத் தாக்கினர்.ஒரு கட்டத்தில் 69வயதான கடாஃபி தன்மீது கருணை காட்டுமாறு கெஞ்சினார். நீங்கள் செய்வது இசுலாமியச் சட்டங்களுக்கு விரோதமானது என்று கடாஃபி கூற அவரைத் தாக்குபவர்கள் நாயே பொத்தடா வாயை என்றனர்.


கடாஃபி கொலை ஒரு போர்க்குற்றம்
கடுமையான தாக்குதல்களின் பின்னர் வயது குறைந்த ஒரு ஆண் ஒரு கைத்துப்பாகியால் கடாஃபியைக் கொன்றார். கொல்லப்பட்ட பின்னர் அவரது உடலை தெருவில் போட்டு காலால் உதைத்தும் உடைகளைக் கழற்றியும் அசிங்கப்படுத்தினர் அவரது எதிரிகள். ஒரு நல்ல இசுலாமியர்களாக எதிரியின் உடலுக்கு மரியாதை செலுத்த கிளர்ச்சிக்காரர்கள் தவறி விட்டனர். எனது மண்ணில் இருந்து கடைசிவரை போராடுவேன் என்று அடிக்கடி அறை கூவல் விடுத்த கடாஃபி, தான் சொன்ன படியே செய்தார். கடாஃபி கொலை ஒரு போர்க்குற்றம் என மனித உரிமை ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

கடாஃபியுடன் இரகசியங்களும் கொல்லப்பட்டன
கடாஃபியை விசாரணை செய்தால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என்பதால் அவர் கொல்லப்பட்டார் என்று இப்போது சொல்லப்படுகிறது. பல ஐரோப்பிய அரசியல்வாதிகளுக்கு அவர்களின் அரசியக் கட்சி நடவடிக்கைகளுக்கு கடாஃபி பணம் கொடுத்து உதவியிருந்தார். இந்த வரிசையில் முன்னாள் பிரெஞ்சு அதிபர் நிக்கொலஸ் சார்க்கோசியும் முன்னாள் பிரித்தானியப் பிரதமர் ரொனி பிளேயரும் முக்கியமானவர்கள். கடாஃபி கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டிருந்தால் அவர் பல இரகசியங்களை அம்பலப் படுத்தியிருந்திருப்பார்.

இப்போது கடாஃபியைக் கொல்ல அப்போது பிரெஞ்சு அதிபராக இருந்த நிக்கோலஸ் சார்க்கோசி உத்தரவிட்டதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. சார்க்கோசியின் நேரடி உத்தரவின் பேரில் பிரெஞ்சு உளவுத் துறை கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக் காரர்களுக்குள் தனது கையாளை ஊடுருவச் செய்து அவர் மூலமாக கடாஃபியைச் சுட்டுக் கொன்றதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. சார்க்கோசியின் 2007ஆண்டு அதிபர் தேர்தலின் போது அவருக்கு கடாஃபி பல மில்லியன் டாலர்களை தேர்தல் செலவுகளுக்காக வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கொல்ல உத்தரவிட்டாரா சார்க்கோசி?
தற்போதைய லிபிய இடைக்காலப் பிரதமரான மஹ்மூட் ஜிப்ரில் கடாஃபியின் கொலையில் வெளிநாட்டு உளவாளி சம்பந்தப்பட்டிருப்பதாக எகிப்தியத் தொலைக்காட்சி ஒன்றிற்குத் தெரிவித்துள்ளார். இத்தாலியப் பத்திரிகையான கொரிரே டெல்லா அந்த வெளிநாட்டு உளவாளி ஒரு பிரெஞ்சு தேசத்தவர் என்கிறது. அப்பத்திரிகை கடாஃபிக்கு எதிரான போரில் நேட்டோப்படைகள் ஈடுபட்டதில் இருந்து கடாஃபி பல மேற்கு நாட்டுத் தலைவர்களைப்பற்றி பல அந்தரங்கச் செய்திகளை வெளியிடுவதாக மிரட்டி இருந்தார்   என மேலும் தெரிவிக்கிறது. வேறு செய்திகள் கடாஃபியின் சகல நடமாட்டத்தையும் நேட்டோப் படைகளின் செய்மதிகளும் விமான ராடார்களும் கடைசிவரை கண்கணித்தபடியே இருந்தன என்கிறது. கடாபியும் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தும் செய்மதித் தொலைபேசி மூலம் பேசியவற்றை நேட்டோப்படைகள் கண்காணித்தபடியே இருந்தன என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடாஃபியை காட்டிக் கொடுத்த சிரிய அதிபர்
கடாஃபியின் இறுதிக் காலத்தில் தனது விசுவாசியான யூசுப் சக்கீருடனும் சிரியாவில் இருந்த ஒரு பாலஸ்தீனப் போரளிக்குழுத் தலைவர் அகமத் ஜிப்ரில் உடனும் செய்மதித் தொலைத் தொடர்பு உரையாடல் நடந்தது. இதன் மூலம் கடாஃபியின் இருப்பிடத்தை அறிந்த சிரிய அதிபர் பஷார் அல் அசாத் கடாஃபியின் இருப்பிடத்தை பிரெஞ்சு உளவுத்துறைக்குக் காட்டிக் கொடுத்ததாக இன்னொரு சதிக் கோட்பாடு(conspiracy theory) சொல்கிறது. இதற்குப் பதிலாக சிரிய அதிபருக்கு எதிரான சீர்திருத்த அழுத்தங்களை பிரான்ஸ் சில காலம் தள்ளிவைப்பதாகப் பேரம் பேசப்பட்டதாம். இந்தத் தகவல்கள் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களின் உளவுத் துறைத் தலைவராக இருந்த அல் ஒபைதியிடம் இருந்து வந்துள்ளதாம்.

முன்பு பலதடவை தான் கடாஃபியிடம் இருந்து நிதி பெற்றதை நிக்கோலச் சார்க்காசி மறுத்துள்ளார்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...