Saturday, 7 July 2012

மாவோயிஸ்ட்டுகள் ஈழத்திற்கு ஆதரவு: ரோவின் சதியா?

இலங்கைப்படையினர் சமையலறைக்குள் அத்து மீறிப் புகுந்து தமக்கு காப்பி(கோப்பி) தரும்படி மிரட்டுகின்றனர் என வாஷிங்டன் போஸ்ற் பத்திரிகைக்கு கூறிய ஒரு ஈழப் பெண்மணி இது பயமூட்டுவது மட்டுமல்ல விரக்கியடைய வைப்பதும் ஆத்திரக் கொள்ளச் செய்வதுமாகும் என்றும் தெரிவித்துள்ளார். ஆம் இலங்கைப் படையினரின் சகல செயற்பாடுகளும் தமிழர்களுக்கு ஆத்திரமூட்டுபவையாகவே இருக்கின்றன. போரின் மூலம் அடைக்கப் பட்ட ஒரு எழுச்சிக்கான காரணிகள் போரின் பின்னர் அறியப்பட்டு அது தீர்த்து வைக்கப்படாவிட்டால் ஐந்து வருடத்தில் அடுத்த கிளர்ச்சி ஆரமபமாகும் என்கின்றனர் அரசறிவியலாளர்கள்.

இலங்கைப் படையினரின் தரத்தைப் பொறுத்தவரை அவர்கள் ஒரு தமிழரின் வீட்டுக்குள் சென்று செய்யும் மிக மிக கண்ணியமான செயல் காப்பி கேட்டு மிரட்டுவதாகும்.

இலங்கையில் அடுத்த ஒரு எழுச்சி உருவாகுவதற்கான சூழ்நிலை இப்போது தீவிரமடைந்து வருகிறது. ராஜபக்சேக்களின் ஆட்சியை மனித உரிமை மீறல்களை அடிப்படையாக வைத்து தமது வழிக்குக் கொண்டு வரமுடியாவிடில் அவருக்கு எதிராக ஒரு பெரும் கிளர்ச்சியை மேற்கு நாடுகள் இலங்கை முழுவதும் உருவாக்கலாம். 29-06-2012-ம் திகதி இலங்கைக்குச் சென்ற இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர் மேனன் இலங்கையின் அடாவாடித் தனத்தை நன்கு புரிந்திருப்பார். இலங்கைக்கு எதிரான தனது நடவடிக்கைகளில் அமெரிக்கா இந்தியா தன்னுடன் நெருங்கி ஒத்துழைப்பதை அமெரிக்கா விரும்புகிறது. வாஷிங்டனிலிருக்கும் நிருபாமா ராவும் புதுடில்லியில் இருக்கும் சிவ் சங்கர் மேனனும் அமெரிக்காவின் இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் ஈழத் தமிழர்களுக்கு சாதகமாக அமையாமல் இருப்பதை உறுதி செய்து கொள்வார்கள்.

இலங்கைத் தமிழர்களிடை ஏற்படவிருக்கும் எழுச்சி மீண்டும் ஒரு படைக்கலன்கள் ஏந்திய பெரும் போராட்டமாக உருவெடுக்காமல் இருப்பதை இந்திய ஆட்சியாளர்கள் முளையிலேயே கிள்ளி எறிய விரும்புவார்கள் என்பதில் எந்த வித ஐயமும் யாருக்கும் இருக்காது.  2009 மே மாதம் போர் முடிவடைந்த கையோடு இலங்கையின் கிழக்கு மாகாணக் காட்டு பகுதிகளில் இருந்த விடுதலைப் புலிகளின் படையணித் தலைவரை அயல் நாட்டுப் பத்திரிகையாளர் ஒருவர் பேட்டி காணப் போவதாக தகவல் அனுப்பப்பட்டது. அவரும் பேட்டிக்குச் சம்மத்தித்தார். ஆனால் அவரைப் பேட்டி எடுக்கப் போனது பத்திரிகையாளர் அல்ல பக்கத்து நாட்டு உளவுத்துறை. விடுதலைப் புலிகளின் இருப்பிடமறியப்பட்டு அவர்கள் அழிக்கப்பட்டனர்.  அந்த உளவுத்துறை அத்துடன் நிற்கவில்லை. சனல் - 4 இறுதிப் போரில் நடந்த மனித உரிமைகள் மீறல் தொடர்ப்பாக ஒரு ஆவணப்படம் தயாரிப்பதாகச் சொல்லி தனது உளவாளிகளை போலியாக சனல் - 4 நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களைப் போல் நடகமாடவைத்து தனது நாட்டில் மறைந்திருந்த சில முன்னாள் விடுதலைப் புலிகளைக் கைது செய்தது.

இப்போது இனியொரு டொட் காம் என்னும் இணையத்தளம் இந்திய மாவோயிஸ்டுகள் ஈழத்தமிழர்களுக்கு உதவத் தயார் என்னும் செய்தியை வெளியிட்டுள்ளது. அது வெளியிட்ட செய்தி:

  • இந்திய மாவோயிட்டுக்கள் சார்பில் பேசவல்ல ஒருவர் இலங்கையில் இனப்படுகொலையைத் திட்டமிட்டு நடத்தியதே இந்தியா தான் என்றும், இந்தியாவுடன் இணைந்து அனைத்து உலக ஏகாதிபத்தியங்களும் மக்களையும் போராட்டத்தையும் அழித்தனர் என்று தெரிவித்தார். தாம் இந்தியாவில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் போராட்டத்தை நடத்திவருவதாகக் குறிப்பிட்ட அவர், பலவீனமடைந்துள்ள ஈழப் போராட்டத்திற்கு தமது முழுமையான ஆதரவும் பங்களிப்பும் உண்டு என்றார். இந்தியாவின் ஹைதராபாத் பகுதியிலிருந்து இனியொருவிற்கு நேர்காணல் வாழங்கினார்.

இது உண்மையில் இந்திய மாவோயிஸ்ட்டுக்களிடம் இருந்துதான் வந்ததா அல்லது இது இப்போது ஈழப் போராட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க இருப்பவர்களை கண்டறிய இந்திய உளவுத்துறையான ரோ(RAW -  Research & Analysis Wing) செய்கின்ற சதியா என்னும் கேள்விகள்ளா தமிழர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். சிவ் சங்கர் மேனன் இலங்கை சென்று திரும்பிய சில தினங்களில் இச்செய்தி வெளி வந்திருப்பதைக் கவனிக்க வேண்டும். ராஜபக்சேக்கள் ஒரு வழிக்கு வருகிறார்கள் இல்லை. அவர்களின் அடக்கு முறையும் அடாவடித்தனமும் அடுத்த கிளர்ச்சிக்கு வழிகோலும் என இந்திய பாதுகாப்புத் துறை கருதலாம். அதனால் அடுத்த கிளர்ச்சிகளின் முன்னோடிகள் யார் என்பதை இந்திய உளவுத் துறை ஆரம்பித்தில் இருந்தே அறிந்து அவர்களை ஒழித்துக் கட்ட விரும்புவதால் இப்படி ஒரு செய்தி இந்திய உளவுத்துறையின் சதியால் வெளிவிடப்பட்டதா?

Friday, 6 July 2012

குதிக்கும் ஈரானும் கொதிக்கும் மத்திய கிழக்கும்

ஈரானின் ஏவுகணைப் பரிசோதனையின் வெற்றிக்களிப்பில் புரட்சீகரக் காவற்படையினர்.
04/07/2012 புதன்கிழமை ஈரான் வெற்றீகரமாக பல தரப்பட்ட ஏவுகணைப் பரிசோதனைகளைச் செய்ததாக ஈரானிய செய்தி நிறுவனமான ஃபாஸ் அறிவித்துள்ளது. இவற்றில் "Persian Gulf" எனப் பெயரிடப்பட்டுள்ள தரையில் இருந்து கடலுக்கு செலுத்தி(shore-to-sea ballistic missile) பெரிய கடற்படைக் கப்பல்களைத் தாக்கியளிக்கும் வல்லமையுள்ள ஏவுகணைகளும் Shahab-3 எனப் பெயரிடப்பட்ட தரையில் இருந்து தரைக்குச் செலுத்தி 2000கிலோ மீற்றர் வரை சென்று தாக்கக் கூடிய ஏவுகணைகளும் முக்கியமானவை.

மார்தட்டிக் குதிக்கும் ஈரான்

ஈரானின் அணுக்குண்டு உற்பத்தித் திட்டத்திற்கு எதிராக மேற்கு நாடுகள் தமது பொருளாதாரத் தடையைத் தீவிரப்படுத்தி வரும் வேளையில் ஈரான் பாரிய படை ஒத்திகையையும் ஏவுகணைப் பரிசோதானைகளையும் ஒன்றாக நடாத்திக் காட்டியதுட்டன் இஸ்ரேலின் படை நிலைகளையும் வளைகுடாப்பகுதியில் உள்ள அமெரிக்கப் படை நிலைகளையும் தன்னால் தாக்கி அழிக்க முடியும் எனச் சூளுரைத்துள்ளது. ஈரான் தான் மூன்று நாட்களாக மேற்கொண்ட இந்த இணை படைத்துறை ஒத்திகைக்கு The Great Prophet 7என்னும் குறியீட்டுப் பெயரைச் சூட்டியிருந்த்தது. தனது 200 kilometers (120 miles) தூரம் வரை சென்று தாக்கக் கூடிய "Persian Gulf" எனப் பெயரிடப்பட்டுள்ள shore-to-sea ballistic missile களால் பாஹ்ரேயினில் உள்ள அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களைத் தாக்கி அழிக்க முடியும் என ஈரான் மார்தட்டுகிறது. 300 கிலோ மீற்றர்களில் இருந்து 1300 கிலோ மீற்றர்கள் வரை சென்று தாக்கக் கூடிய பலதரப்பட்ட ஏவுகணைகளை நாம் சோதனை செய்து பார்த்துள்ளோம். இஸ்ரேல் ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கிறது என்கிறார் ஈரானியப் படைத் தளபதி Amir Ali Hajizadeh. அத்துடன் ஆளுள்ள விமானங்களையும் ஆளில்லா விமானங்களையும் பயன்படுத்திப் பல சோதனத் தாக்குதல்களை நாம் செய்துள்ளோம் என்கிறார் Amir Ali Hajizadeh. இதுபற்றிக் கருத்துத் தெரிவித்த அமெரிக்க அரசத் துறைப் பேச்சாளர் விக்டோரியா நூலண்ட் ஈரானின் இந்தப் பரிசோதனைகள் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சமையின் தீர்மானத்திற்கு விரோதமானது என்றார். அத்தீர்மானம் ஈரான் அணுக் குண்டுகள் காவக்கூடிய ஏவுகணைக்களை உருவாக்கக் கூடாது என்று சொல்கிறது. தன் மீது தாக்குதல் நடாத்தப்பட்டால் ஒரு சில நிமிடங்களுக்குள் அமெரிக்காவின் வளை குடாப் படை நிலைகளில் மீதும் இஸ்ரேல் மீதும் பதிலடி கொடுக்க தம்மால் முடியும் என்று ஈரான் சொல்கிறது.

அமெரிக்காவின் தன்வினை தன்னைச் சுடுகிறது
அமெரிக்கா பல புதிய ரகப் படைக்கலன்களை வழங்கியது அவற்றின் தொழில் நுட்பங்கள் பாக்கிஸ்த்தானூடாக ஈரானைச் சென்றடைந்தது. பாக்கிஸ்தானிய அணு விஞ்ஞானிகளை ஈரான் பயன்படுத்துகிறது.

பொருளாதாரத் தடையை உதாசீனம் செய்யும் ஈரான்
ஈரான் தனது மசகு எண்ணெய் உற்பத்தியை 30% குறைத்துள்ளது. அப்படியும் அதன் மசகு எண்ணெய் உறபத்தியை பொருளாதாரத் தடையால் முழுமையாகச் சந்தைப்படுத்த முடியவில்லை. அதன் எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் இப்போது மசகு எண்ணெய்க் களஞ்சியங்களாகப் பயன்படுத்தப்படுகிறது. இருந்தும் ஈரானிய ஆட்சியாளர்கள் பொருளாதாரத் தடையைப் பற்றிக் கவலைப் படாமல் தனது அணு ஆராய்ச்சிகளைத் தொடர்கிறது.

மத்திய கிழக்கில் பிரச்சனை தீவிரமடைகிறது
சிரியாவில் நடக்கும் கிளர்ச்சிகள் தீவிரமடைகிறது. சிரியக் கிளர்ச்சியாளர்களுக்கு படைக்கலன்கள் துருக்கியில் இருந்து வழங்கப்படுவதால் சிரிய துருக்கி எல்லையில் கொந்தளிப்பு நிலை உருவாகியுள்ளது. ஈரானின் அணுக் குண்டு உற்பத்தித் திட்டம் பொருளாதாரத் தடையையும் மீறி நிறை வேற்றும் பாதையில் சென்றால் ஈரான் மீது தாக்குதல் நடாத்தப்படும் என அமெரிக்காவும் இஸ்ரேலும் தெரிவித்து விட்டன. ஈரான் தனது அணு ஆராய்ச்சியை நிறுத்தாமல் தொடர்கிறது. ஈரானுக்கான தமது உதவிகளை சீனாவும் இரசியாவும் தொடர்கின்றன. சிரியக் கிளர்ச்சியாளார்களை அடக்க சிரிய ஆட்சியாளர் பஷர் அல் அசாத்திற்கு ஈரானிய அரசு படைத்துறை உதவிகளைச் செய்கிறது. இந்நிலையில் எகிப்திற்கும் இஸ்ரேலுக்கும் அமெரிக்க அரசத்துறைச் செயலர் ஹிலரி கிளிண்டன் ஜூலை 15-ம் திகதி செல்லவிருக்கிறார். இதே வேளை இஸ்ரேலிற்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையில் நல்லுறவுகளை வளர்க்க அமெரிக்கா தீவிரமாக முயற்ச்சிக்கிறது. இஸ்ரேலின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஈரானுடன் நேரத்தை வீணடிக்காமல் அதன் அணுக்குண்டு உறப்பத்திக்கு எதிராக தாக்குதல் நடாத்த வேண்டும் என்கிறார். அதே வேளை ஈரானின் parliamentary speaker Ali Larijani உலகத்தில் இருந்து மேற்கு நாடுகளும் இஸ்ரேலும் ஒழிக்கப்படவேண்டிய தருணம் வந்துவிட்டது என்றார் எனப் பிரஸ் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. உண்மையில் மத்திய கிழக்கு கொதிக்கிறது.

Thursday, 5 July 2012

பன்னாட்டு நீதி இலங்கைக்கு வேறு சிரியாவிற்கு வேறு

அரபு நாடுகளில் எழுந்த மல்லிகைப் புரட்சி, அரபு வசந்தத்தின் விளைவாக மேற்கு நாடுகளுக்கு எதிரான தனித்தன்னாட்சியாளர்கள் பதவியில் இருந்து விரட்டப்படுகின்றனர். சவுதி அரோபியா, பாரெயின் போன்ற மேற்குலகிற்கு சார்பான ஆட்சியாளர்களைக் கொண்ட நாடுகளில் தனித்தன்னாட்சியாளர்களுக்கு எதிரான கிளர்ச்சிகள் வெளியார் உதவிகள் இல்லாமையால் அடக்கப்பட்டுவிட்டன.

சிரியக் கிளர்ச்சியின் பின்னணி
சிரியாவில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக பாத் கட்சி ஆட்சியில் இருக்கிறது.  மக்களுக்கு சரியான அடிப்படைஅக்கட்சியின் தலைவர் அல் பஷார் அதாத். பிரித்தானியாவில் மருத்துவம் கற்ற அல் பஷார் அசாத் அவரது தந்தையின் இறப்பின் பின்னர் பதவிக்கு வந்தார். இவரது ஆட்சியில் சிரியாவில் அரசியல் சீர்திருத்தங்கள் ஏற்படும் என்று எதிர்பார்த்தபோதிலும் அப்படி எதுவும் நடக்கவில்லை.  துனிசியாவில் பென் அலிக்கு எதிரான அரபு வசந்தம் சிரியாவிற்கும் பரவி அங்கு 15-03-2011இல் இருந்து அசாத்திற்கு எதிராக கிளர்ச்சி ஆரம்பித்தன. லிபியாவில் ஆட்சியில் இருந்த மும்மர் கடாந்பிக்கு எதிராக மேற்கு ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளின் படைத்துறைக் கூட்டமைப்பான நேட்டோ ஐக்கிய நாடுகள் சபையில் லிபிய விமானப் பறப்பபுக்களைத் தடுக்கும் தீர்மானத்தை வெற்றீகரமாகத்  நிறைவேற்றி விமானப்பறப்புக்களைத் தடுக்கும் போர்வையில் கடாஃபியின் படைகளை அழித்தன. ஆனால் அப்படியான தீர்மானம் ஒன்றும் சிரியாவிற்கு எதிராக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் நிறைவேற்ற முடியாமல் சீனாவும் இரசியாவும் தமது ஆபிரிக்கப் பிராந்திய நலன்களைக் கருத்தில் கொண்டு தம் இரத்து அதிகாரத்தைப் பாவித்து தடுத்து விட்டன.


கொடுக்க வேண்டியதைக் கொடுக்காமல் கெடுக்கின்றனர்.
சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக நேட்டோ நாடுகள் துருக்கியினூடாக படைக்கலன்களை வழங்கினாலும் அவை ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருக்கின்றன. தாம் வழங்கும் படைக்கலன்கள் இசுலாமியத் தீவிரவாதிகளின் கையில் போய்ச் சேர்ந்துவிடும் என்று அமெரிக்கா அஞ்சுகிறது. சிரிய ஆட்சியாளர்களுக்கு இரசியாவும் ஈரானும் படைக்கலன்களை கிளர்ச்சியை அடக்க வழங்குகின்றன. இந்த இரு அயோக்கியக் கும்பல்களிடை சிரிய மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.

சிரியா தொடர்பான முந்தைய பதிவு:போட்டிகளுக்குள் சிக்கிய சிரியக் கிளர்ச்சி

சிரியக் கொடுமைகள்
பஷார் அசாத்தின் படைகள் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக கடுமையாக நடந்து கொள்கின்றன. கடந்த பதினைந்து மாதங்களில் பதினையாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். கிளர்ச்சியாளர்கள் கடுமையாகச் சித்திரவதை செய்கின்றனர். சிரிய மக்களின் அவலத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை எதுவும் செய்ய முடியாமல் இருக்கின்றது. அதிகாரம் எதுவுமற்ற முன்னாள் ஐநா செயலர் கோபி அனானின் சமாதான முயற்ச்சிகள் படு தோல்வியைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது.

நவி பிள்ளை அம்மையார்
லிபிய மக்களின் அவலத்தைக் கண்ட ஐக்கிய நாடுகளின் சபையின் மனித உரிமைக்கழகத்தின் ஆணையாளர் நவி பிள்ளை எனப்படும் நவநீதம் பிள்ளை அவர்கள் சிரியாவில் மக்களுக்கு எதிராக நடக்கும் அட்டூழியங்களுக்கான சாட்சியங்கள் கிடைத்திருப்பதால் பன்னாட்டு நீதிமன்றத்திற்கு இது எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அந்த அம்மையாரின் திருவாசகம் இப்படி இருந்தது:

  • "I believe the evidence points the commission of crimes against humanity." She quoted several human rights violations that provide rationale for referral of Syria’s case to International Criminal Court, like arbitrary detention, attacks on hospitals, extreme use of artillery and killings of suspected government informants.
சிரியாவில் ஒரு நாளில் மட்டும் இருபத்தி ஐந்தாயிரம் பேர் கொல்லப்படவில்லை. மொத்தமாக மூன்று இலட்சம் பேர் கொல்லப்படவில்லை. எந்த ஒரு ஐநா விசாரணைக்குழுவும் சிரியாவில் போர்க்குற்றமும் மானிடத்திற்கு எதிரான குற்றமும் நடந்ததமைக்கான போதிய ஆதாரங்கள் இருப்பதாகச் சொல்லவில்லை. சிரியப் படையினர் பெண்களை மானபங்கப்படுத்தி மார்புகளை கத்திகளால் குதறிக் கொல்லவில்லை. சிரியாவில் காயப்பட்டவர்கள் உயிரோடு புதைக்கப்படவில்லை.  சிரியாவில் சரணடையுங்கள் மறு வாழ்வு தருகிறோம் என்று சொல்லிவிட்டு சரணடைய வந்தவர்களைச் சுட்டுத் தள்ளவில்லை. ஆனாலும் சிரிய ஆட்சியாளர்களை பன்னாட்டு குற்றவியல் நீதி மன்றத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்கிறார் நவி பிள்ளை அம்மையார். அவரின் இத் துணிச்சலான கூற்றுக்குப் பாராட்டும் நன்றியும் தெரிவித்துக் கொண்டு இலங்கையில் இவ்வளவு அட்டூளியங்கள் நடந்தும் அவற்றிற்கான காத்திரமான சாட்சியங்கள் இருப்பதாக ஐநா நிபுணர் குழு அறிக்கை தெரிவித்திருந்தும், டப்ளின் தீர்ப்பாயம் இலங்கையில் போர்க்குற்றம் நடந்தது விசாரணை தேவை எனத் தெரிவித்திருந்த போதும், பல காணொளிப் பதிவுகள் வெளி வந்த போதும் இலங்கை ஆட்சியாளர்கள் பன்னாட்டுக் குற்றவியல் நீதி மன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்று நவி பிள்ளை அம்மையாரோ வேறு எந்த ஐக்கிய நாடுகள் உயர் அதிகாரிகளோ தெரிவிக்க வில்லை. கொலையாளிகளையும் கொல்லப்பட்டவர்களையும் நல்லிணக்கம் செய்யும் படி தீர்மானம் நிறைவேற்றாமல் ஏன் பன்னட்டுக் குற்றவியல் நீதி மன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படவேண்டும்? பன்னாட்டு நீதி என்பது தண்ணீருக்கு வேறு மசகு எண்ணெய்க்கு வேறு.

Wednesday, 4 July 2012

உடற்பயி|ற்ச்சி செய்தும் எடை குறையாதது ஏன்?

இப்போது உலகின் பல பாகங்களிலும் உள்ள பெரும் பிரச்சனை உடல் எடையை உரிய நிலையில் வைத்திருப்பதே. மனிதனின் வேலைகளை இலகுவாக்க பல இயந்திரங்கள் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மனிதனுக்கு உடலால் செய்யக் கூடிய வேலை குறைந்து விட்டது. இதனால் மனிதனின் உடல் எறையைக் குறைக்க உடற்பயிற்ச்சி இயந்திரங்கள் உருவாக்கப்பட்டன.  நகரங்கள் தோறும் உடற்பயிற்ச்சி நிலையங்கள் பல அமைக்கப்பட்டுள்ளன. உடற்பயிற்ச்சி செய்தும் எடை குறையாமைக்கான காரணங்கள்:

1. காலையில் போதிய உணவு எடுக்காவிடில் உடல் எடை கூடும். காலையில் தானியங்களை உண்பவர்கள் பின்னர் பசியால் அதிக உணவை உண்பார்கள். காலையில் முட்டை உண்பவர்கள் போதிய கலோரியும் புரதமும் பெறுவதால் அவர்கள் பின்னர் அதிக உணவு உண்பதில்லை.

2. காலையில் தேநீருக்குள் பால் கலத்தல். தேநீரில் உள்ள theaflavins and thearubigins ஆகியவை எமது குடல் கொழுப்பை உறிஞ்சுவதைக் குறைக்கும் தன்மை கொண்டவை என இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆனால் தேநீருக்குள் பால் கலக்கும் போது அவை இந்தக் குடலில் கொழுப்பு உறிஞ்சும் தன்மையைக் கூட்டி விடுகின்றன.

3. வெள்ளைதான் எனக்குப் பிடிக்காத கலரு. வெள்ளைப் பாண், வெள்ளை அரிசிச் சாதம் போன்றவற்றை தவிர்த்து விட்டு மண்ணிறப்பாண் கறுப்பரிசிச் சாதம் சாப்பிடவேண்டும்.

4. உறைகளை (Lables) வாசிக்காதல். நீங்கள் உண்ணும் உணவுகளில் இருக்கும் கலோரிகள் மற்றும் கொழுப்பு சம்பந்தமான தகவல்கள் உணவுப் பொதிகளின் உறைகளில் இருக்கும் அவற்றை வாசித்து அதற்கேற்ப உங்கள் உணவுகளை உண்ணவும். உடற்பயிற்ச்சி செய்பவர்களிடை செய்த ஆய்வின்படி உறையில் இருப்பவற்றை வாசித்து அறியும் பழக்கம் உள்ளவர்கள் அப்பழக்கம் இல்லாதவர்களிலும் பார்க்க அதிக எடை இழப்பைச் செய்கிறார்கள் என்று அறியப்பட்டுள்ளது.

5. பழரசங்கள் அதிகம் அருந்துதல். பழரசங்களில் அதிக சீனி(சர்க்கரை) உள்ளது. அளவிற்கு அதிகமாக பழரசம் அருந்துதல் எடையை அதிகரிக்கும்.

6. தயிர்(yoghurt) உண்ணாமை. கொழுப்பு இல்லாத தயிர் உண்டால் அது உடலில் கொழுப்பு சேர்வதை அதிலும் முக்கியமாக வயிற்றுப் பகுதியில் கொழுப்புச் சேர்வதைக் குறைக்கும்.

7. உணவுப் படங்களைப் பார்த்தல். சஞ்சிகைகளில் வரும் உணவுப் படங்களைப் பார்த்தல் எமது உணவின் மீதான ஆசையைத் தூண்டி அதிகம் உண்ண வைகிறது என்று Professor Kathleen Page, a psychologist at the University of Southern California, செய்த ஆய்வு கூறுகிறது.

8. வேலையிடத்தில் நண்பர்களுடன் இணைந்து உண்ணுதல். வேலையிடத்தில் நண்பர்களுடன் இணைந்து உண்பவர்கள் அதிகமாக உண்பார்களாம்.

9. உணவுப் பாத்திரம். நீங்கள் உண்ணும் உணவும் உணவுப் பாத்திரமும் ஒரே மாதிரியான நிறத்தில் இருந்தால் அது உங்களை அதிகம் உண்ணத் தூண்டுமாம்.

10. உறக்கமின்மை. போதிய உறக்கமின்மை உங்கள் உடற்கூறுகளை அதிக எடை அதிகரிப்பை விரும்பச் செய்யும்.

11.  தனித்து எடைக் குறைப்புச் செய்தல். நீங்கள் உங்கள் நண்பர்களுடன் இணைந்து எடைக்க்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டால் தனித்து ஈடுபடுவதிலும் பார்க்க அதிக எடை இழப்பை ஏற்படுத்தலாம்.

12. சாப்பிடும் இடத்தில் கண்ணாடி இல்லாமை. நீங்கள் சாப்பிடும் இடத்திற்கு அருகில் முகக் கண்ணாடி இருந்தால் அது உங்களை குறைத்து உண்ணச் செய்யும்.

13. தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு உண்ணுதல். கையேந்தி நிலையில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு உண்ணும் போது நீங்கள் தேவைக்கு அதிகமாக உண்கிறீர்கள்.

14. பலதரப்பட்ட உணவுகளை வீட்டில் வாங்கிக் குவித்தல். வீட்டில் பலதரப்பட்ட உணவுகள் இருந்தால் நீங்கள் அதிகம் உண்பீர்கள். மிகக் குறைந்த தரப்பட்ட உணவுகள் வீட்டில் இருந்தால் ஒரே உணவைத் திருப்பித் திருப்பு உண்பதால் அலுப்புத் தட்டி நீங்கள் சிறிதளவே உண்பீர்கள்.

15. இணைவும் பிரிவும். புதிதாகத் திருமணமானவர்களும் விவாக இரத்துச் செய்தவர்களும் அதிக உணவை உண்டு அதிக எடை அதிகரிப்பைப் பெறுவதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

16  தனியாக உடற்பயிற்ச்சி செய்தல். நீங்கள் தனியாக உடற்பயிற்ச்சி செய்வதிலும் பார்க்க நண்பர்களுடன் இணைந்து உடற்பயிற்ச்சி செய்தால் அதிக எடையை இழக்கலாம்.

17 வீட்டிற்குள் உடற்பயிற்ச்சி செய்தல். வீட்டிற்குள் உடற்பயிற்ச்சி செய்வதிலும் பார்க்க வெளியில் உடற்பயிற்ச்சி செய்தால் அதிக எடையை இழக்கலாம். வீட்டிற்குள் செய்தவதாயின் இசை கேட்ட படி செய்ய வேண்டும்.

18 மென்று உண்ணாமை. உணவை நன்கு மென்று உண்ண வேண்டும். நன்கு மென்று உண்ணாவிடில் எடை அதிகரிக்கும்.

19 உங்கள் வயது. உங்கள் வயது அதிகரிக்கும் போது உங்கள் உணவைக் குறைக்க வேண்டும்.

20. உங்கள் பெற்றோர்கள். உங்கள் உடலில் உள்ள பரம்பரைக் குணத்திற்கும் எடை அதிகரிப்பிற்கும் சம்பந்தம் உண்டு. சிலர் எவ்வளவு சாப்பிட்டலும் மெலிதாக இருப்பதற்கு இதுதான் காரணம்.

Tuesday, 3 July 2012

நகைச்சுவை: விநோதமான அமெரிக்கா

உலகிலேயே விநோதமான மக்களாக அமெரிக்கர்கள் கருதப்படுகின்றனர். சமூக வலைத்தளமான Badoo.com  நடாத்திய ஆய்விலேயே இது தெரிய வந்துள்ளது. உலகிலேயே விநோதம் குறைந்த மக்கள் ஜேர்மனியர்கள்

அமெரிக்காவில் கொலைகள் குறைந்து வருகின்றன. ஆனால் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. ஒரு காலத்தில் அமெரிக்கா கொலைகள் நிறைந்த அபிவிருத்தியடைந்த(?) நாடு எனக் கூறப்பட்டது. ஆனால் அமெரிக்கர்கள் இப்போது மற்றவர்களைக் கொல்வதிலும் பார்க்க தம்மைக் கொல்வதில் அதிக திருப்தியடைகிறார்களா?

துணைக் குடியரசுத் தலைவர்
சாரா பலின் எனப்படும் இவர் அடுத்த துணைக் குடியரசுத்தலைவராவாராம்.

பல சிறிய வறிய நாடுகளில் இருப்பதை விட அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு இருக்கும் சட்ட ரீதியான பாதுகாப்பு குறைவானதாகும்.

92% மான அமெரிக்கர்கள் தம்மை Guardian Angel எனப்படும் காவல் தேவதைகள் பாதுகாப்பதாக நம்புகிறார்கள்.

அமெரிக்க ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் சிறுமியர்கள் நாய்கள் பூனைகள் போன்ற செல்லப்பிராணிகள் அனைத்துமே குண்டாகிக் கொண்டு போகிறார்கள்.
பாவம்....லிபியத் தலைவர் கடாஃபி இதை வாசிக்கவில்லை..

ஒரு இலகுவான கேள்விக்குப் பதில் சொல்ல அமெரிக்கர்கள் படும் பாடு:1. Only in America......can a pizza get to your house faster than an ambulance.

2. Only in America......are there handicap parking places in front of a skating rink.

3. Only in America......do drugstores make the sick walk all the way to the back of the store to get their prescriptions while healthy people can buy cigarettes at the front.

4. Only in America......do people order double cheese burgers, large fries, and a diet coke.

5. Only in America......do banks leave both doors open and then chain the pens to the counters.

6. Only in America......do we leave cars worth thousands of dollars in the driveway and put our useless junk in the garage.

7. Only in America......do we use answering machines to screen calls and then have call waiting so we won't miss a call from someone we didn't want to talk to in the first place.

8. Only in America......do we buy hot dogs in packages of ten and buns in packages of eight.

9. Only in America.....do we use the word 'politics' to describe the process so well: 'Poli' in Latin meaning 'many' and 'tics' meaning 'bloodsucking creatures'.

10. Only in America......do they have drive-up ATM machines with Braille lettering.

11. Only in America......can a homeless combat veteran live in a cardboard box and a draft dodger live in the White House. (This was popular when Clinton was in office)

முன்னாள் அதிபர் புஷ்சின் மூடத்தனம்:

Monday, 2 July 2012

சிவ சங்கர் மேனன் கொழும்பில் என்ன பேசியிருந்திருப்பார்?

2009 மே மாத்திற்கு முன்னர் இலங்கையில் போர் நடந்து கொண்டிருக்கும் போது சிவ் சங்கர் மேனனனும் எம் கே நாராயணனனும் அடிக்கடி கொழும்பு சென்று இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடாத்துவதாகச் செய்திகள் வரும். அச்செய்திகளில் அவர்கள் இலங்கை இனப்பிரச்சனைக்கு போர் மூலாமாகத் தீர்வு காணமுடியாது என்று கூறவும்  போர் நிறுத்தத்தை வலியுறுத்தவும் செல்வதாகக் கூறப்படும். ஆனால் இலங்கையின் இன அழிப்புப் போரில் சிவ் சங்கர் மேனனும் எம் கே நாராயணனும் மிக முக்கிய பங்காளிகள் ஆவார்கள். இவர்கள் இலங்கைக்குப் பயணங்கள் மேற்கொண்டமை இலங்கையின் இன அழிப்புப் போரில் எப்படி இந்தியா உதவி செய்ய வேண்டும் என்பதைப் பற்றி ஆராயவும் இன அழிப்புப் போர் நடந்து கொண்டிருக்கும் முறைமை பற்றி மீளாய்வு செய்யவும் ஆலோசனை வழங்கவுமே. ஒரு கட்டத்தில் அப்பாவி மக்களின் உயிரிழப்புக்களைக் கருத்தில் கொள்ளாமல் போரை நடாத்தி இந்தியப் பாராளமன்றத் தேர்தலுக்கு முன்னர் விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டுங்கள் என இவ்விருவரும் சொல்லியதாகக் கூடச் செய்திகள் வெளிவந்தன.

சோனியா குடும்பத்தின் பாதுகாப்பு
இந்தியப் பொதுத் தேர்தலுக்கு முன்னர் விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டுவதில் சோனியா காந்தியில் அரசு முனைப்புக் காட்டப்பட்டமைக்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. 2009 மேமாதம் நடந்த இந்தியப் பாராளமன்றத் தேர்தலில் காங்கிரசுக் கட்சி தோல்வியடைந்தால் அதன் பின்னர் வரும் அரசு சோனியா குடும்பத்தினருக்குப் போதிய பாதுகாப்பு வழங்காவிடில் அவர்களின் உயிருக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து ஏற்படலாம் என்பதால் தேர்தலுக்கு முன்னர் விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்ட திட சங்கற்பம் பூணப்பட்டது. போருக்குப் பின்னர் இந்தியா இலங்கை அரசு மேற்கொண்ட இன அழிப்புப் போரில் புரிந்த போர்க்குறம் தொடர்பான தனது செய்மதிப் படங்களைக் காட்டி இலங்கையை மிரட்ட முற்பட இலங்கை பதிலுக்கு தம்முடன் இந்தியாவில் இருந்து மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி உரையாடல்களின் ஒலிப்பதிவுகளைப் பதிலுக்குக் காட்டி இவையும் போர்க்குற்றத்திற்கு உடனதையாக இருந்தமைக்கான ஆதாரங்கள் என்று மிரட்டி இந்தியாவைப் பணிய வைத்தது. இதனால்தான் 2009ம் ஆண்டு நடந்த ஐக்கிய நாடுகள் சபையின்மனித உரிமைக்கழகக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவந்த தீர்மானத்தை இந்தியா இலங்கைக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானமாக மாற்றியது. அது மட்டுமல்ல 2012 மார்ச் மாதம் நடந்த கூட்டத் தொடரில் அமெரிக்காவை அடுத்து நிற்பது போல் நடித்து அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானதின் கடும் போக்கை குறைத்து இலங்கைக்குச் சாதகமாக்கியது.


கருணாநிதியை சந்தித்த மேனனும் நாராயணனும்
2009 மே மாதத்திற்கு முன்னர் சிவ் சங்கர் மேனனும் எம் கே நாராணனும் இலங்கை செல்ல முன்னர் அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதியைச் சந்திப்பதும் உண்டு. அப்போது வெளிவரும் செய்தி இலங்கையில் போர் நிறுத்தம் தொடர்பாக கருணாநிதியுடன் கலந்து ஆலோசித்ததாக இருக்கும். ஆனால் உண்மையில் இலங்கையில் தமிழர்கள் அழிக்கப்படும் செய்தியால் தமிழ்நாட்டில் கொந்தளிப்பு ஏற்படாமல் செய்திகளை மூடி மறைப்பது, கொந்தளிப்பைத் தடுப்பது, மக்களைத் திசை திருப்புவது எப்படி என்பது பற்றியே இருக்கும்.

செய்தி வேறு உண்மை வேறு
இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தைப் பொறுத்தவரை இந்தியா சொல்வதும் செய்திகளாகக் கசிய விடுவதும் வேறு அதன் உண்மை நிலைப்பாடு வேறு. இந்தியாவின் இப்போதைய உண்மையான திட்டம் வடக்கிலும் கிழக்கிலும் சிங்களவர்களைக் குடியேற்றி அங்கு தமிழர்களின் தேர்தல் வாக்கு பலத்தைக் குறைத்து அவர்களை மலையகத்தில் வாழும் தமிழர்கள் போல் ஆக்குவதுதான். இதன் பின்னர் எந்த ஒரு நாடும் இலங்கைத் தமிழர் பிரச்சனையை முன் வைத்து இலங்கையில் தலையிடாது. இதைச் செய்வதே இந்தியாவின் நோக்கமாகும்.

சிவ் சங்கர் மேனனின் பரம்பரைத் தொழில்
இந்தியாவை ஒரு பரம்பரை ஆண்டு கொண்டிருக்க இன்னொரு பரம்பரை அந்த ஆளும் பரம்பரைக்கு ஆலோசனை சொல்லிக் கொண்டிருக்கிறது. சிவ் சங்கர் மேனனின் தாத்தா ஜவஹர்லால் நேருவிற்கு நெருக்கமானவர். சிவ் சங்கரின் தந்தை தந்தையின் சகோதரர் இப்படி இவர்கள் பரம்பரையும் இந்தியாவில் உயர் பதவிகளில் இருந்தார்கள். இக்குடும்பம் சீனாவிற்கு நெருக்கமானது என்று கூறப்படுகிறது. சிலர் இவர்களைச் சீனக் கைக்கூலிகள் என்றும் கூறுவர். ஜீ பார்த்தசாரதி இந்திரா காந்தியின் ஆலோசகராக இருந்த போது இலங்கையில் அமெரிக்க ஆதிக்கம் ஏற்படாமல் இருப்பதில் அதிக அக்கறை கட்டி வெற்றி கண்டனர். சிவ் சங்கர் மேனன் புது டில்லியின் ஆலோகராக இருக்கும் போது சீனா இலங்கையில் தனது ஆதிக்கத்தை வலுவாகக் கட்டியெழுப்பி வருகிறது

 சிவ் சங்கர் மேனனின் பயணம்
 29-06-2012 இலன்று சிவ் சங்கர் மேனனின் 24 மணித்தியால இலங்கைப் பயணம் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் இலங்கை அரசு செய்யும் இழுத்தடிப்புக்கள் மீதான இந்தியாவின் அதிருப்தியை இலங்கைக்கு கடும் தொனியில் தெரிவிக்கவே என்று செய்திகள் வெளிவந்தன. இந்தச் செய்தியின் உண்மைத் தன்மையை நாம் பாக்க வேண்டும். பிரேசில் ரியோ நகரில் நடந்த G-20 மாநாட்டின் பின்னர் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சவும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் சந்தித்த போது இந்தக் "கடும் தொனி" செய்தியை தெரிவித்திருக்கலாம்.  அப்போது தெரிவிக்காததை இப்போது தெரிவிக்க மேனன் இலங்கை சென்றாரா? இலங்கை இனப் பிரச்சனை தொடர்பான கலந்துரையாடல் என்றால் அதற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் இலங்கை செல்லாமல் இந்திய தேசிய பாதுகாப்புத் துறை ஆலோசகரான சிவ் சங்கர் மேனன் சென்றது ஏன்? இந்திய தேசிய பாதுகாப்புத் துறை ஆலோசகர் சென்றமையால் இப்பயணத்தின் முக்கிய நோக்கம் இந்திய பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டமையே அன்றி வேறல்ல. 2012 மார்ச் மாதத்தின் பின்னர் இலங்கை இந்தியாவை ஓரம் கட்டுவதை அதிகரித்துள்ளது. இலங்கை போருக்கு உதவியமைக்கு பிரதி உபகாரமாக போர் முடிந்ததும் இலங்கை இந்திய இருதரப்பு வர்தக உடன்பாடு கைச்சாத்திடுவதாக இலங்கை இந்தியாவிடம் வாக்குறுதி அளித்திருந்தது. இலங்கையிடம் சமர்ப்பிக்கப்ப ட்ட இந்த உடன்பாட்டில் இதுவரை இலங்கை கையொப்பமிடவில்லை. திருமலை எண்ணெய்க் குதங்களை இந்தியாவிற்கு கொடுத்த குத்தகையை இரத்துச் செய்வது பற்றி இலங்கை தீவிரமாக ஆராய்கிறது. பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய இந்தியா முன் வந்ததை இலங்கை நிராகரித்து விட்டது. மன்னார் எண்ணெய் வள ஆய்வில் இந்தியா புறக்கணிக்கப்படுகிறது. சம்பூர் அனல் மின்னிலையத்திலும் இந்தியா ஏமாற்றப்பட்டுள்ளது. இப்படி பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்தியாவைப் புறக்கணிப்பதும் சீனாவுடன் உறவை வளர்ப்பதிலும் இந்தியா அதிக அக்கறை காட்டி வருகிறது. இது இந்தியப் பாது காப்பிற்கு அச்சுறுத்தல் என்பதால்தான் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரான சிவ் சங்கர் மேனன் இலங்கை சென்றார். அவர் அங்கு உண்மையில் பேசியவை தொடர்பான செய்திகள் வெளிவராது.

தனது சந்திப்பு தொடர்பாக மேனன் கூறியமை:
 "I discussed recent developments, bilateral relations and areas of common concern. I was also briefed about steps being taken by the government of Sri Lanka on political reconciliation and settlement. While this is a Sri Lankan issue and something that Sri Lanka has to do, we will continue to remain engaged with all concerned and offer any support required in this regard. My visit to Sri Lanka today has been in the context of regular consultations and exchange of views between the government of India and the government of Sri Lanka. We agreed that fishermen's associations on both sides, which had met in the past and reached some understandings, needed to meet again to work on developing this further. This could then serve as the basis for finding a solution to this humanitarian issue," he said.

 பழைய பல்லவியில் ஒரு புதிய சாகித்தியம்
சிவ் சங்கர் மேனன் தனது வழமையான "இலங்கைய பிளவு படாத ஒரு நாடாக வைத்திருக்க இந்தியா எப்போதும் உதவும்" என்னும் பல்லவியை இம்முறையும் பாடத் தவறவில்லை. ஆனால் மேனன் இம்முறை தனது வழமையான பாடலிற்குப் புது சாகித்தியத்தை இணைத்துள்ளார். அது இலங்கை தனது மக்களின் மனித உரிமைகளைப் பேணவேண்டும் என்பதே. இது ஹிலரி கிளிண்டன் அக்காவின் வேண்டுகோளாகத்தான் இருக்க வேண்டும். இந்திய அரசியல்வாதிகள் பாடும் 13இற்கு மேல் சென்று இனப்பிரச்சனைக்குத் தீர்வுகாண்பதாக மஹிந்த ராஜபக்ச என்னிடம் வாக்குறுதியளித்தார் என்ற பாடலை மேனன் இசைக்கவில்லை. அந்தப் பாடலுக்கான இசையமைப்பும் வரிகளுக்கும் சொந்தக்காரனே மேனன்தான். இந்திய அரசியல்வாதிகளையும் தமிழ்நாட்டு மக்களையும் ஏமாற்ற புதுடில்லியின் தென்மண்டல பூனூல் கும்பலும் கொழும்பும் இணைந்து உருவாக்கிய பாடல்தான் "13இற்கு மேல் சென்று இனப்பிரச்சனைக்குத் தீர்வுகாண்பதாக மஹிந்த ராஜபக்ச என்னிடம் வாக்குறுதியளித்தார்".

உதவிக்குப் பதில் ஏமாற்றம்
இப்போது இலங்கைக்கு உதவி செய்யும் நாடுகளில் இந்தியா சீனாவை முந்திவிட்டது. இந்த ஆண்டில் இந்தியா 740.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது. இதில் 275.1 மில்லியன் டொலர்கள் நன்கொடையாகும். ஜப்பான் 12.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடை உள்ளிட்ட 175.3 மில்லியன் டொலர்கள் நிதியுதவியை இலங்கைக்கு வழங்கியுள்ளது. மூன்றாவது இடத்தில் இருக்கும் நெதர்லாந்து 102.5 மில்லியன் டொலர்களை நிதியுதவியாக அளித்துள்ளது.கடந்த ஆண்டில் முதலிடத்தில் இருந்த சீனா இம்முறை நான்காவது இடத்துக்கு இறங்கியுள்ளது. சீனா இந்த ஆண்டில் 32.5 மில்லியன் டொலர்களை மட்டுமே இலங்கைக்கு வழங்கியுள்ளது. ஆனால் இந்தியாவை ஏமாற்றும் நாடுகள் பட்டியலில் இலங்கை முதலாமிடம் வகிக்கிறது. இதைப் பல சிங்கள அரசியல்வாதிகளும் ஆய்வாளர்களும் தெளிவுபடக் கூறியுள்ளார்கள்.

ஏன் இந்தத் தமிழின விரோதி
சிவ் சங்கர் மேனன் இலங்கை செல்கிறார் என்ற செய்தி வந்தவுடன் இந்திய வால்பிடித் தமிழ் ஊடகங்கள் அவர் இலங்கை அரசு தமிழர் பிரச்சனையில் காட்டும் அசமந்தப் போக்குத் தொடர்பாக இந்தியாவின் அதிருப்தியைக் கடுமையான தொனியில் தெரிவிக்கப்  போகிறார் என்று செய்திகள் வெளிவிட்டன. இந்திய உளவுத்துறை தினமணியில் இப்படிப் பொய்ச் செய்தியை வேண்டுமென்றே கசியவிட அதை பிரதி செய்து பல இணையத் தளங்களும் தம்மை அரசியல் விமர்சகர்கள் என்று நினைப்போரும் (முள்ளி வாய்க்காலின் பின் முளைத்த காளான்கள்) பிரசுரித்தனர். இலங்கையில் வாழ் தமிழர்களின்மேல் அக்கறை இருந்தால் இந்தியா தமிழர்களின் நலன்களில் அக்கறை உள்ள ஒருவரை இலங்கைக்கு அனுப்பியிருக்கும். அதை விட்டு தமிழின விரோதியும் தமிழின அழிப்புப் போரின் முக்கிய பங்காளியுமான பாலக்காட்டானை இலங்கைக்கு  அனுப்பியது ஏன்?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...