Saturday, 16 June 2012

சோனியாவின் பிரணாப் முஹர்ஜியும் கருணாநிதியின் டெசோவும்

இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டவுடன் தான்னைத் தான் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதம மந்திரியாக்குவார் என்று சொன்னதால் அப்போதைய முடிக்குரிய இளவரசர் ராஜீவ் காந்தியின் கோபத்திற்கு ஆளானவர் பிரணாப் முஹர்ஜி. இதனால் ராஜீவ் காந்தி பிரதம மந்திரியானபோது பிரணாப்பிற்கு மந்திரிப் பதவி கொடுக்க்காமல் ஓரங்கட்டப்பட்டார். பின்னர் அவர் காங்கிரசுக் கட்சியில் இருந்து விலகி தனியாக ராஷ்த்திரிய சமாஜ்வாதி காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்தவர்.

திருவாளர் நம்பிக்கைக்குரியவர்
தனியாகக் கட்சி ஆரம்பித்த பிரணாப் முஹர்ஜியை ராஜிவ் கொல்லப்பட்ட பின்னர் பிரதமரான பி வீ நரசிம்ம ராவ் மீண்டுக் காங்கிரசுக் கட்சிக்குக் கொண்டு வந்து அவரை திட்ட ஆணைக் குழுவின் பிரதித் தலைவராக்கினார். நீண்ட அரசியல் ஈடுபாடும் ஆழ்ந்த அரசியல் அறிவும் கொண்ட பிரணாப் முஹர்ஜி அரசறிவியலில் முதுமானிப் பட்டம் பெற்றவர். நிதி, வெளியுறவுத் துறை, வர்த்தகம், பாதுகாப்பு போன்ற முக்கிய அமைச்சுப் பதவிகளை வகித்தவர் பிரணாப் முஹர்ஜி. இரவு பகல் பாராத கடின உழைப்பு புத்திக் கூர்மை கட்சிக்கு விசுவாசம் போன்றவற்றால் இவர் திருவாளர் நம்பிக்கைக்குரியவர் (Mr Dependable) என்று அழைக்கப்படுபவர். தற்போது நிதியமைச்சராக இருக்கும் பிரணாப் முஹர்ஜி முன்னர் நிதியமைச்சராக இருந்த போது அவரின் கீழ் பணி புரிந்தவர் தற்போதைய பிரதம மந்திரி மன்மோகன் சிங்.

மொக்கை காந்திக்கு வழிவிட வேண்டும்
மொக்கை காந்தி என அழைக்கப் படும் ராகுல் காந்தி அடுத்த பிரதம மந்திரியாவதற்கு தடையாக இருப்பவர் பிரணாப் முஹர்ஜி. ஒரு பத்திரிகைப் பேட்டி கூட ஒழுங்காகக் கொடுக்கத் தெரியாமல் தடுமாறும் ராகுல் காந்தியின் திறமையின்மையும் அனுபவமின்மையும் அவரைப் பிரதம மந்திரியாக்குவதற்கு பலரிடம் இருந்து எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அனுபவமும் திறமையுமுள்ள பிரணாப்பை குடியரசுத் தலைவராக்கிவிட்டால் ராகுல் மொக்கை காந்தியை பிரதமராக்குவது இலகு என்று சோனியா காந்தி நினைக்கிறார்.

தமிழின விரோதப் பார்ப்பனர் பிரணாப் முஹர்ஜி
ஐந்தடி ஒரு அங்குல உயரமான பிரணாப் முஹர்ஜி மீன் கறியில் பிரியமுள்ள பார்ப்பனன். இசையிலும் வீட்டுத் தோட்டத்திலும் ஆர்வமுள்ள பிரணாப் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த போது இலங்கையின் இன அழிப்புப் போருக்கு பெரும் உதவி புரிந்தவர். இந்தியா இலங்கைக்கு படைக் கலன்கள் கொடுத்து உதவுவதை பகிரங்கமாக ஒப்புக் கொண்டவர். இறுதிப் போரின் போது போர் முனையில் நான்கு இலட்சம் மக்கள் சிக்கித் தவிக்கையில் அங்கு எழுபதினாயிரம் மக்கள் மட்டுமே இருக்கின்றனர் என்று இலங்கை அரசு பொய் கூறியது. போர் முனையில் நான்கு இலட்சம் மக்கள் சிக்கித் தவிக்கும் மக்களிற்கு உணவு, நீர், மருந்து அனுப்பாமல் தடுத்து அவர்களைப் பட்டினியால் கொல்வதற்காகவே இலங்கை அரசு பொய் கூறியது. எழுபதினாயிரம் மக்கள் மட்டுமே உள்ளனர் என்ற அதே பொய்யை வலியுறுத்திக் கூறியவர் இந்தப் பிரணாப் முஹர்ஜி. போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்த இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டதாக கூறிக் கொண்டு அங்கு சென்று இலங்கைக்கு போரை விரந்து முடிப்பதற்குத் தேவையான உதவிகளை செய்தவர் பிரணாம் என்ற குற்றச் சாட்டும் உண்டு.

டெசோ கருணாநிதி
முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி தனது அரசியல் வறுமையில் இருந்து விடுபட எடுத்த ஒரு கத்தி டெசொ எனப்படும் தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பு. 1985இல் உருவாக்கப்பட்ட டெசோ செய்த சாதனைகள் அண்டன் பாலசிங்கமும் செல்வநாயகம் சந்திரகாசனும் இந்தியாவில் இருந்து நாடுகடத்தப்பட்டமையை நிறுத்தியதும் 1985இல் அன்றைய ஆந்திர முதல்வர் என் டி ராமாராவ், வாஜ்பாய் (பாஜக), என்.டி. ராமராவ், பி.உபேந்திரா (தெலுங்கு தேசம்), எச்.என்.பகுகுணா (லோக்தள்) பல்வந்த் சிங் ராமுவாலியா எம்.பி.(அகாலிதளம்), பி.உன்னிகிருஷ்ணன் எம்.பி. (காங்கிரஸ்-எஸ்), ராச்சையா (ஜனதாக்கட்சி), அப்துல் ரஷீத் எம்.பி.(காஷ்மீர் மாநில தேசிய மாநாட்டுக் கட்சி), ஜஸ்வந்த் சிங் எம்.பி, இந்துஸ்தான் முன்னணி சார்பாக சுப்பிரமணிய சாமி எம்.பி., அஸ்ஸாம் கணபரிஷத்தைச் சேர்ந்த தினேஷ்கோஸ்வாமி எம்.பி, க.அன்பழகன், கி.வீரமணி, ப.நெடுமாறன், அய்யணன் அம்பலம், தேவசகாயம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாகவும் தலைவர்கள் கலந்துகொண்டனர். என்டிஆர், வாஜ்பாஸ் ஆகிய பிரபலமானவர்கள் உட்படப் பலரை கொண்ட ஒரு மாநாட்டை ஒழுங்கு செய்தமை மட்டுமே. இவற்றைத் தவிர வேறு எதையும் டெசோவால் சாதிக்க முடியவில்லை. ராஜிவ் காந்தி இறந்த பின்னர் இயங்காமல் போன டெசோவிற்கு இப்போது புத்துயிர் கொடுக்க கருணாநிதி முயல்கிறார். இனிவரும் தேர்தல்களின் சீமானின் சூறாவளிப் பிரசாரம் தனது கட்சியைத் தோல்வியடையாமல் செய்ய தான் ஒரு தீவிர ஈழ விடுதலை ஆதரவாளர் எனக் காட்டிக் கொள்ள கருணாநிதி முயல்கிறார்.

ஈழமும் காங்கிரசும்
ஈழவிடுதலைக்கு கருணாநிதி இருதய சுத்தியுடன் ஆதரவு தெரிவிப்பவராக இருந்தால் ஈழவிடுதலைக்குச் சார்பாக காங்கிரசு தன் கொள்கையை மாற்றிக் கொண்டால் மட்டுமே தன்னால் சோனியவின் குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரிக்க முடியும் என்று சொல்லியிருக்க வேண்டும்.  அல்லது இலங்கை இனப்பிரச்சனைக்கான தீர்வை விரைவு படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையாவது முன்வைத்திருக்க வேண்டும். மம்தா பனர்ஜி போல் சோனியா முன்னர் நிமிர்ந்து நிற்காமல் தனது குடும்ப நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டு கருணாநிதி நிபந்தனை எதுவுமில்லாமல் ஒரு தமிழின விரோதிக்கு ஆதரவு வழங்கியுள்ளார். பிரணப்பை தனது நண்பன் என்று அடிக்கடி சொல்லும் கருணாநிதி தனது செம்மொழி மாநாட்டை ஆரம்பித்து வைக்க அவரையே அழைத்தார். பிரணாப்பிற்கு ஆதரவு வழங்குபரகளில் முக்கியமானவர்கள் திமுகவினரே. பார்ப்பன விரோதப் பரப்புரை மூலம் அரசியலுக்கு வந்த கருணாநிதி ஒரு பார்ப்பனனை இந்தியக் குடியரசுத் தலைவராக்குவதில் முன்னிற்கிறார்.
மலேசியாவில் ஒரு மானத் தமிழன்

மலேசியாவில் ஒரு மானத் தமிழன்
மாண்பு மிகு துணை முதல்வன்
பீனாங்கு மாநிலப் புதல்வன்
கற்றுயர்ந்த கண்ணியவான்
பேராசான் இராமசாமி
உலகத் தமிழர் தலைவன்
மானத் தமிழன் அவன்
ஈனத் தமிழனல்லன்


கோடானு கோடியாகச்
சொத்துச் சேர்க்கவில்லை
ஈழத்தவரை வைத்து
அரசியல் செய்யவில்லை
புதல்வர்க்கு பதவி கேட்டுக்
காவடியெடுக்கவில்லை
ஈழத் தமிழர் துயர்கண்டு
கொதித்தெழுகின்றான்
மானத் தமிழன் அவன்
ஈனத் தமிழனல்லன்

போர்குற்றம் கண்டு
பொங்கி எழுகின்றான்
உலக மனச்சாட்சியைத்
தட்டிக் கேட்கின்றான்
தேர்தல் கூச்சலல்ல
வாக்கு வேட்டைக்கல்ல
வாய்ச்சவாடல் செய்யவில்லை
உண்ணா விரத நாடகமாடவில்லை
மானத் தமிழன் அவன்
ஈனத் தமிழனல்லன்

மொழி பேசுவோரை
அழிந்தொழிய விட்டு
மொழிக்கு மாநாடு கூட்டி
உமிழ் நீரும் தமிழ் நீரென
தம்பட்டம் அடிப்போரே
மலேசிய மானத் தமிழனின்
கழி நீருக்குத்தன்னும்
நீர் இணையாவீரோ

Friday, 15 June 2012

Funny Pictures & video from Euro 2012 footballThey dont wear any top. Just painted their favourite Jersey.
  2012 UEFA European Football Championship will be the 14th in the history.
• For the first time in the history the European Football Tournament will be held in the Eastern Europe.
• EURO 2012 will be the last with 16 teams in the final part. Beginning from the EURO 2012 there will be 24 finalists.
• The estimated value of the Cup made with pure silver that will get the winner is € 20.000. Its height – 60 cm, weight – 8 kg.
• One month before the EURO in Ukraine and Poland, the UEFA will lease 8 stadiums that will hold the matches. Therefore, the Union of European Football Organizations will pay the arena’s owners the rent during 2.5 months.
• The biggest of the host-stadiums in Ukraine will be National Sports Complex “Olympic” in Kyiv. It will have capacity about 70.000 spectators. The smallest arena is in Lviv and it can seat some 34 thousand fans.
Free advt
 Best part of Euro 2012 is fight between Polish and Russian fans.


Holland fan

Hollan tiger

windmill from Holland


England fan

He spent lots of money to travel from France to Ukraine and to buy tickets to sleep in the pavillion

Cheerful Germans

So sad - Greece fans

Only economy is in crisis

Poland

Irish Fan

Nice to hug a boy dressed as girl


Who cares about football

Portugese Fan


English people love thier queen...

Russian fan

tasteless Russian

Swedish fan

Thursday, 14 June 2012

சரத் பொன்சேக்கா விகடனுக்குப் பேட்டியளித்தது ஏன்?

இலங்கையில் போர்க்குற்றங்களும் மானிடத்திற்கு எதிரான குற்றங்களும் இழைக்கப்பட்டமைக்கான நம்பகரமான ஆதாரங்கள் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்குழு அறிக்கை தெரிவித்திருந்தது. இந்தப் போர்குற்றங்களிலும் மானிடத்திற்கு எதிரான குற்றங்களிலும் பங்காளியான முன்னாள் இலங்கைப் படைத் தளபதி சரத் பொன்சேக்கா ஆனந்த விகடன் சஞ்சிகைக்கு  ஒரு போட்டியை வழங்கியுள்ளார். பொய் பேசுவதில் உலக்த்தில் முதலிடம் வகிக்கும் படையினர் இலங்கைப் படையினரே என்பதை நாம் நன்கறிவோம்.

விகடனின் நஞ்சுத்தனம்
விகடன் ஈழத் தமிழர்களுக்கு சார்பாக எழுதுவது போல் எழுதி அவர்களுக்கு எதிராக நஞ்சு கக்குவதில் மிகவும் சாதுரியமாகச் செயற்படும். சில ஆண்டுகளுக்கு முன்னர் விகடன் விடுதலைப் புலிகளைப் பற்றியும் ஈழத்தைப் பற்றியும் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்தியது. அதன் முடிவுகள் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தின. முடிவுகள் புலிகளுக்கும் ஈழத்திற்கும் பலத்த ஆதரவு இருப்பதை எடுத்துக் காட்டியது. அதன் பிறகு விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை ஒரு நடுநிலையாளனாகவும் ஈழத்திற்கு ஆதரவாளன் போலவும் தன்னைக் காட்டிக் கொள்ளும்படி தொடர்ந்து பல கட்டுரைகளை ஆனந்தவிகடனிலும் ஜுனியர் விகடனிலும் மட்டுமல்ல அவள் விகடனிலும் வெளிவிட்டது. இவற்றில் விடுதலிப் புலிகள் மிகப் பலமுள்ளவர்களாகப் பொய்யாகப் பல தகவல்கள் வெளியிடப் பட்டது. கட்டுரை ஏதோ ஈழ ஆதரவாகத்தான் இருக்கும். வியாபாரம்!!!ஆனால் விகடனின் “அரசவை” பின்னுட்டக் காரர்களான பாலா, தமிழ் யூகே, வெங்கி, ஹரிஹரன், பார்த்த சாரதி ஆகியோர் மூலமாக விடுதலைப் புலிகளுக்கு எதிராக பற்பல நஞ்சுகள் கக்கப்படும். பின்னூட்டத்தில் ராஜபக்சே தமிழ் நன்கு படித்தவர் என்று கூடப் பொய் சொல்லப் பட்டது. இவர்கள் புலிகளுக்கு எதிராக எந்த விதமான பொய்க் கருத்துக்கள் கூறப்பட்டாலும் அவை பிரசுரிக்கப் படும். இவர்கள் விகடன் பணிமனைக்குள் இருப்பவர்களால் எழுதப் பட்டிருக்கலாம். நானும் எனது நண்பர்களும் இதற்கு எதிராக தெரிவித்த பல கருத்துக்கள் அங்கு பிரசுரிக்கப் படவில்லை. நாம் விகடனைப் பரிசோதிப்பதற்காக சில பார்ப்பனியர்களை தாக்கி பின்னூட்டம் எழுதுவோம். அவை பிரசுரிக்கப் படுவதில்லை. விகடனின் நிலைப்பாடு நஞ்சுத்தனமான நடுநிலை. விகடன் புலிகள் மிகப்பலமாக இருப்பது போல் செய்திகளை வெளியிட்டமை அவர்களுக்கு தமிழ்நாட்டில் ஆதரவு அதிகரிக்காமல் இருப்பதற்கே. விகடன் இந்திய உளவுத் துறையுடன் இணைந்து செயற்படுகிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

 விகடனுக்கும் இலங்கை அரசிற்கும் தொடர்பு உண்டா?
விகடனின் ஒரு உதவி ஆசிரியர் இலங்கையிடம் இலஞ்சம் வாங்கிச் செயற்பட்டதாக2009 அக்டோபர் மாதம் செய்திகள் வந்தன. 2009இல் "முடிந்தது புலி வேட்டை தொடங்கியது தங்க வேட்டை" என்ற கட்டுரை ஜூனியர் விகடனில் வந்தது. இலங்கையிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ இருந்து வெளிவரும் எந்த ஒரு பத்திரிகையிலும் வெளிவராத தகவல்கள் அந்தக் கட்டுரையில் இருந்தன:
 • கிட்டத்தட்ட 6,000 கிலோவுக்கும் அதிகமான தங்கத்தை சிங்களர் வசிக்கும் பகுதிகள் உட்பட பல இடங்களில் பரவலாக அவர்கள் மறைத்து வைத்ததாக இப்போது சிங்கள ராணுவம் கருதுகிறது.
 • இலங்கை முழுவ திலும் சுமார் 40 இடங்களில் ஆயுதப் புதையலும், 23 இடங் களில் தங்கப் புதையலையும் புலிகள் ஒளித்து வைத்திருப்பதாக போர் முடிந்ததுமே இலங்கை ராணுவ வட்டாரங்களுக்கு ரகசியத் தகவல் வந்து சேர்ந்தது.
 • இரு வாரங்களுக்கு முன்பு முல்லைத்தீவில் ஒரு பெரும் புதையலை கைப்பற்றியிருக் கிறார்கள். அடுத்த கட்டமாக மட்டக்களப்பு வாகரை பகுதி யிலும், இலுப்படிச்சேனை என்ற இடத்திலும் புதையலை எடுத்திருக்கிறார்கள். இதே மாதிரி கிழக்குப் பகுதியில் வெள்ளான்தோட்டத்திலும், கல்லடியிலும் புதையலைக் கைப்பற்றியிருக்கிறார்கள்.
 • கொட்டயனாவில் இருக்கும் பொன்னம்பல வனேஸ்வரம் கோயிலின் பூசாரியான ரவி குருக்களிடமும் அப்படித்தான் விசாரணை கொண்டுபோன மேப்பை விரித்து, அதில் குறிப்பிட்ட ஓர் இடத்தை அடையாளம் கண்டு தோண்டச் சொல்லியிருக்கிறார்கள். ஐந்து அடிகள் தோண்டியவுடன், ஒரு பாதாள அறை இருந்திருக்கிறது. அதை திறந்து பார்த்த ராணுவத்துக்கு பெரிய அதிர்ச்சி. ஒரு பெரிய பட்டாலியன் ராணுவத்துக்குத் தேவை யான அளவுக்கு பெரும் ஆயுதக்குவியலே அங்கே இருந்திருக்கிறது. அதனுடன், 1,000 கிலோ தங்கம் இருந்திருக்கிறது. அதற்கடியில் மிக மிக முக்கியமான ஆவணங்களும், டைரிகளும் கிடைத்திருக்கிறதாம்.
 • ராணுவத்தின் சிறப்பு புலனாய்வு பிரிவு டைரியில் குறிப்பிட்டிருந்த ஒரு வீட்டை முற்றுகையிட்டிருக்கிறது. அங்கு ஒளிந்திருந்த புலிகளின் கெரில்லா படைப்பிரிவு தலைவர் ராதாவை கடந்த 25-ம் தேதி கைது செய்திருக்கிறார்கள். மேலும் இருவரையும் கைது செய்திருக்கும் ராணுவம், அவர்களை பற்றிய தகவல்களை வெளியே கசிய விடவில்லை.
 • தாய்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு இரண்டு சரக்கு கப்பல் நிறுவனங்களும், இங்கிலாந்தில் 176 பெட்ரோல் பங்குகளும், கனடாவில் 193 பெட்ரோல் பங்குகளும் புலிகளுக்கு இருப்பதாக இப்போதைக்கு உறுதிப்பட்டிருக்கிறது
இவை எல்லாம் இலங்கையைப் பொறுத்தவரை மிகமிக இரகசியமான தகவல்கள். வேறு எங்கும் கிடைக்காத தகவல்கள். இவை எப்படி விகடனுக்குக் கிடைத்தன? இலங்கை அரசிற்கும் விகடனுக்கும் என்ன தொடர்பு?

இப்போது சரத் பொன்சேக்காவை நல்லவராக்கும் முயற்ச்சியில் விகடன் இறங்கியுள்ளது. அவனின் பொய்ப் பிரச்சாரத்திற்கு விகடன் மேடை அமைத்துக் கொடுத்துள்ளது.

சரத் பொன்சேக்கா ஆனந்த விகடனில் அவிழ்த்து விட்ட பொய்கள்:

 1. என்னைப் பொறுத்த அளவில், இந்தப் போர் பயங்கரவாதத்தில் இருந்து மக்களை விடுவிக்க நாங்கள் நடத்திய போர்.
 2. ''இல்லை. போருக்குப் பின் பல்வேறு தரப்பினரும் என்னைச் சந்தித்தபோது, ஊழலும் அடக்குமுறையும் கொண்ட ராஜபக்ஷே குடும்பத்தின் காட்டாட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற விஷயத்தைத் திரும்பத் திரும்ப வலியுறுத்தினார்கள். ஆனாலும், நான் அமைதியாகத்தான் இருந்தேன். ஒரு கட்டத்தில் ராஜபக்ஷேவே என்னை அரசியலை நோக்கித் தள்ளினார்.'
 3. புலிகள் நவீனப் போர் உத்திகள், தொழில்நுட்பங்களில் மிகவும் பின்தங்கி இருந்தார்கள்.
 4. ''இந்தப் போரைத் தொடங்கியபோதே என் வீரர்களுக்கு நான் பிறப்பித்த முக்கியமான உத்தரவு, பொதுமக்கள் உயிர் முக்கியம். கடைசி வரை அந்த உத்தரவை என் வீரர்கள் காப்பாற்றினார்கள்.
 5. ''ஒரே உண்மைதான். பிரபாகரன் இப்போது உயிரோடு இல்லை. போரில் அவர் இறந்துவிட்டர்". 
 6. இது (சரணடைவது) தொடர்பான பேச்சுவார்த்தைகள் எதிலும் ராணுவம் புலிகளுடன் ஈடுபடவில்லை."
விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவினர் சரணடைவது தொடர்பாகப் பேச்சு வார்த்தை நடாத்தியமையை ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலரின் ஆலொச்கரும் தமிழர்கள் தங்களுக்கு எதிராகச் செயற்பட்டவராகக் கருதியவருமான விஜய் நம்பியார் ஒப்புக் கொண்டுள்ளார். இதில் ஈடுபட்ட ஒரு பிரித்தானிய பத்திரிகையாளர் மேரி கொல்வினும் சரணடையப் பேச்சு வார்த்தை நடந்ததாகக் கூறி இருந்தார். சரத் பொன்சேக்கா தந்திரமாக வார்த்தைகளைக் கையாண்டார். ராணுவம் புலிகளுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடவில்லை என்று சொல்லித் தப்பிக்கப் பார்க்கிறார். பேச்சு வார்த்தை புலிகளின் அரசியல் பிரிவு, விஜய் நம்பியார், ப. சிதம்பரம், இலங்கைப் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரிடை நடைபெற்றது. இதை ஏற்பாடு செய்தவர் மேரி கொல்வின்.

தமிழர்கள் உடலில் எரிபொருள் தாயாரிப்பு
போரின் இறுதியில் குண்டு மழையில் காயப்பட்டுத் துடித்துக் கொண்டிருந்த மக்களை உயிருடன் புதையுங்கள் எங்களுக்கு அவர்கள் உடல்களின் இருந்து வருங்காலத்தில் எரிபொருள் கிடைக்கும் என்று உத்தரவிட்டது யார்?

சரத் பொன்சேக்கா முன்னிலைப் படுத்தப்படுவது ஏன்?
 அமெரிக்கா தனது சீன ஆதிக்கத்தை இலங்கையில் அகறும் செயற்திட்டத்தில் இந்தியாவை வலிந்து இழுத்துச் சேர்த்துக் கொண்டுள்ளது. அமெரிக்க நிகழ்ச்சி நிரலில் சரத் பொன்சேக்காவிற்கு முக்கிய இடமுண்டு. அமெரிக்காவும் இந்தியாவும் ரனில் விக்கிரமசிங்க, இரா சம்பந்தர், சரத் பொன்சேக்கா ஆகியோரைக் கொண்ட கூட்டணியால் ராஜபக்ச குடும்பத்தைப் பதவியில் இருந்து விரட்டி அதன் மூலம் சீன ஆதிக்கத்தை இலங்கையில் இருந்து அகற்ற முயல்கின்றன.  இக்கூட்டணி தேர்தலில் தமிழர்களின் வாக்குகளைப் பெறுவதற்கு சரத் பொன்சேக்கா மேல் தமிழர்களுக்கு இருக்கும் வெறுப்பு அகற்றப் பட வேண்டும். இதற்காக இனிவரும் காலங்களில் அமெரிக்க இந்திய உளவுத் துறைகள் சரத் பொன்சேக்கா தமிழர்களின் எதிரி அல்லர் என்ற மாயையை உருவாக்கும் பல முயற்ச்சிகளில் ஈடுபடும். இதன் முதற்கட்டமாக சரத் பொன்சேக்கா ஆனந்த விகடனுக்குப் பேட்டியளித்துள்ளார். ஆனாலும் சரத் பொன்சேக்கா தனது சிங்கள-பௌத்தத் தீவிரவாதிகளின் வெறுப்பைச் சம்பாதிக்காமல் மிகக் கவனமாகப் பேட்டியளித்துள்ளார். பேட்டியின் இறுதியில்:

கேள்வி: 'ஒருவேளை அதிபர் தேர்தலில் வென்றால், தமிழர்கள் பிரச்னைக்கு என்ன தீர்வை முன்வைப்பீர்கள்?''
பதில்: 'ஓட்டுக்காகப் பொய் பேசும் அரசியல்வாதி இல்லை நான். இந்தப் பிரச்னைக்கான தீர்வு காகிதங்களிலோ, வார்த்தைகளிலோ இல்லை. மனித மனங்களில் இருக்கிறது. அதை நான் சொல்ல விரும்பவில்லை. செய்துகாட்டுவேன்.''

இந்தப் பேட்டி பல நிபுணர்களின் ஆலோசனையுடன் மிகக் கவனமாகத் திட்டமிட்டு வழங்கப்பட்ட ஒன்று என்பது அரசியல் அனுபவமில்லாத சரத் மிகக் கவனமாக வார்த்தைகளைக் கையாண்டதில் இருந்து தெளிவாகிறது, இனி இலங்கை அரசியலில் சரத் முக்கிய பாத்திரமாக்கப்படுவார்.

Wednesday, 13 June 2012

அதிக கிருமிகள் இருக்கும் இடங்கள்

நுண் கிருமிகள்(bacteria) எங்கும் இருக்கின்|றன. அவற்றால் ஏற்படுக் ஆபத்துக்கள் அதிகம். அவை அதிகம் இருக்கும் இடங்களை அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். நாம் சவரம் செய்யும் ரெஸர், (Razor) பற்தூரிகை (toothbrush) என்பவற்றில் அதிக நுண்கிருமிகள் இருக்கின்றன. வீட்டுப் பொருட்களில் கணனி மௌஸில் அதிகம் கிருமிகள் இருக்கின்றன.

ஈரலிப்பான குளியலறையில் இருக்கும் சவர அலகில் (Razor) ஐந்து மில்லியன் நுண்கிருமிகள் இருக்கின்றன. நல்ல வெட்பக் கால நிலையில் இவை இருபது மில்லியன்களாக அதிகரிக்கும். பற்தூரிகை (toothbrush) கைப்பிடிகளில் இதே அளவு நுண்கிருமிகள் இருக்கின்றன.

ஒரு கைப்பேசியில் ஆயிரம் வரை நுண்கிருமிகள் இருக்கின்றன. ஒரு கழிப்பறை இருக்கையில் (toilet seat) இருப்பதிலும் பார்க்க ஐந்து மடங்கு நுண்கிருமிகள் கணனிவிசைப்பலகையில்(Keyboard) இருக்கின்றன.

Super market Trolley இன் கைப்பிடியிலும், மாடிகளின் ஏறும் போது கைப் பிடிக்க வைத்திருக்கும் இரும்புக் கம்பிகளிலும் நிறைய நுண்கிருமிகள் இருக்கின்ற்ன.

தலைவாரிகள்(சீப்புக்கள்)
வாரந்தோறும் சுடுநீரில் கழுவ வேண்டும். ஒரு மில்லி மீற்றர் தடிப்பான தலைமுடி சிக்குப்பட்டிருந்தால் அதில் 50,000 வரையிலான கிருமிகள் இருக்கலாம்.

காலணிகள்
250 இருந்து 500 மைல்கள் நடந்தவுடன் மாற்றவேண்டும். பழையகாலணிகளில் கழிப்பறையில் இருக்கும் கிருமிகளிலும் பார்க்க 100 மடங்கு அதிகமான கிருமிகள் இருக்க வாய்ப்புண்டு.

பற் தூரிகை(toothbrush)
பற்தூரிகைகள் மூன்று மாதத்திற்கு ஒருதடவை மாற்ற வேண்டும். அதற்கு மேல் பாவித்தால் அதன் பயன்படுதன்மை குறைகிறது.

Bras

உங்கள் Bra களை நாற்பது தடவை துவைத்த பின் பாவிக்கக் கூடாது அல்லது மூன்று மாதங்களுக்கு மேலும் பாவிக்கக் கூடாது. அதன் பின் அங்கு அதிக கிருமிகள் சேரும் அத்துடன் அதன் காப்புத் தன்மையும் குறைந்துவிடும். Department Of Sport And Exercise Science at the University of Portsmouth இன் கணிப்பின் படி ஒரு பெண் ஒரு மைல் அசைந்தால் அவளது மார்பு 135 மீட்டர் குலுங்குமாம். ( எப்படிக் கணக்குப் பண்ணினாங்க?)

படுக்கைகள்
வாரந்தோறும் கழுவ வேண்டும். எட்டு அல்லது பத்து வருடங்களுக்கு ஒருதடவை உங்கள் படுக்கைகளைப் புதுப்பிக்க வேண்டும். எமது படுக்கையில் ஒரு இரவில் அரைப் பைந்த் வேர்வையை நாம் வெளிவிடுகிறோம். ஆண்டு ஒன்றிற்கு ஒரு இறாத்தல் தோலை உதிர்க்கிறோம். house dust mitesஎன்னும் சிறு பூச்சிகள் 10,000 எமது படுக்கையில் இருக்கின்றன. அவை இருபது இலட்சம் மலம் கழிக்கின்றன.

துவாய்கள் (bath towels)
வாரந்தோறும் துவைக்க வேண்டும்.

தலையணைகள்
ஒவ்வொரு மூன்று மாதமும் துவைக்க வேண்டும். ஆறு மாதங்களில் புதிதாக மாற்ற வேண்டும்.
அங்குள்ள கிருமிகளின் கழிவுகளை சுவாசிப்பதால் பல நோய்கள் ஏற்படுகின்றன.

ஸ்பொன்ஞ்(Sponges)
தினசரி கிருமி நாசினி மூலம் துப்பரவாக்க வேண்டும். ஒரு நாள் பாவித்தவுடன் ஒரு பில்லியன் கிருமிகள் அங்கு வசிக்கும்.

ஒரு நாய்க்கு இருக்கும் உணர்வு கூட சில தமிழர்களுக்கு இல்லை.

Tuesday, 12 June 2012

நகைச்சுவைக்கதை: இலங்கையின் SLPL 20/20 கிரிக்கெட் போட்டியில் விளையாடிய ஆப்கானிதான் வீரன்

இந்தியாவின் IPLஇற்குப் போட்டியாக இலங்கையில் SLPL தொடங்கப்பட்டு 20ஓவர்களைக் கொண்ட கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதற்கான உரிமம் சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப்பட்டது. அதற்கான அந்த நிறுவனம் பெரும் தொகைப் பணத்தை பக்சராஜாவிற்க்ம் பாயகோத்தாவிற்கும் வழங்கியிருந்தது. அதில் விளையாடுவதற்கு பல பாக்கிஸ்த்தான் வீரர்கள் முன் வந்தனர். கியூபா, இரசியா, மாலை தீவு, சீனா, ஜிம்பாப்வே, தாய்லாந்து ஆகிய முன்னணிக் கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் இருந்து வீரர்கள் பங்கேற்றனர். Matara Murderers, Kandy Killers, Badulla Butchers, Colombo Criminals, Ruhunu Rioters, Rajaratta Rascals, Anuradhapura Assasins ஆகிய அணிகள் SLPL 20/20. தொடக்க நாள் விழாவில் நடிகை பிசின் கலந்து கொண்டு குத்து டான்ஸ் ஆடினார். முதல் நாள் இரவு முழுக்க பக்சராஜவின் குடும்பத்தால் குத்தப்பட்ட களைப்புடன் நடிகை பிசின் அற்புதமாக நடனமாடினார்.


சகல அணிகளும் வேறு வேறு நாடுகளில் இருந்து பல Kandy Killers மட்டும் ஆப்கானிஸ்த்தானில் இருந்து ஒரு வீரரை தமது அணியில் விளையாட விலைக்கு வாங்கி இருந்தனர். அப்துல் அகலவாய்பாத் என்னும் பெயர் கொண்ட அந்த வீரர் தான் முதல் நாள் ஆட்டத்தில் விளையாடப் போகிறேன் என்ற பெருமையுடன் இருந்தார். அவரது Kandy Killers அணி Matara Murderers அணியை எதிர்த்து விளையாடியது. முதலில் துடுபெடுத்து ஆடிய Matara Murderers அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 197 ஓட்டங்கள் பெற்றது. பின்னர் துடுப்பாடக் களமிறங்கிய Kandy Killersஅணி 19 ஓவர்களில் ஒன்பது விக்கெட்களை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்றது. கடைசி ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டும் கையில் வைத்துக் கொண்டு 24 ஓட்டங்கள் எடுப்பது சாத்தியமில்லை எனப் பலரும் கருதினர். Matara Murderers அணி நிச்சயம் வெற்றி பெறும் என்ற நிலையில் களமிறங்கிய ஆப்கானிஸ்த்தான் வீரன் அப்துல் அகலவாய்பாத் மிகவும் முதல் பந்தில் ஒரு சிக்ஸர், அடுத்த மூன்று பந்துகளுக்கும் மூன்று பவுண்டரி ஐந்தாவது பந்தில் ஒரு மீண்டும் ஒரு சிக்சர் அடித்து Kandy Killers அணியை வெற்றி பெறச் செய்தான்.

தனது முதல் நாள் ஆட்டத்திலேயே அசத்தி விட்டேன் என்ற பெருமையுடன் தனது தாயாருக்கு தனது கைப்பேசியில் அழைப்பு விடுத்து தனது சாதனையைக் கூறினான். அதற்குத் தாயார் "உனது தந்தையை யாரோ கடத்திக் கொண்டு போய்விட்டார்கள். கப்பம் கேட்கிறார்கள். உனது ஒரு அண்ணன் கைக்குண்டு வீச்சால் கொல்லப்பட்டான். இன்னொரு அண்ணன் கண்ணி வெடியில் கால் வைத்து இறந்து விட்டான். பத்திரிகை நிருபரான உனது அக்காளைக் காணவில்லை. உனது தங்கைகள் இருவரை யாரோ கற்பழித்துவிட்டார்கள். அதில் ஒருத்தியின் மூக்கை கடித்து துண்டெடுத்து விட்டாங்கள். மற்றவள் உடல் முழுக்கக் காயம். இருவரும் ஒரு பாலத்தின் கீழ் பிணமாகக் கிடந்தார்கள். என்னிடம் இருந்த பணம் யாவற்றையும் யாரோ திருடி விட்டாங்கள். உனது கிரிக்கெட் விளையாட்டை ஆசையுடன் பார்க்க இலங்கை வந்த எமது குடும்பத்திற்கு நடந்த கதியைப் பார்" என்றாள்.Monday, 11 June 2012

இந்த நடிகர்களைக் கண்டு பிடியுங்கள்
அன்று அப்படி இருந்த ஐஸ்வர்யா ராய் பின்னர் இப்படியானர். இது போல்
அன்று இப்படி இருந்தவர் இன்று எப்படி இருப்ப்பர் என்று நினைக்கிறீர்கள்? இங்குள்ள படங்களின் இருப்பவர்களை யாரென்று கண்டு பிடியுங்கள் பார்க்கலாம். விடை கீழே தரப்பட்டுள்ளது.

1
2


3

4

5


6

7

8

9

10

11

12
13


14

15

16

17

18

19
20


விடைகள்:
 1. சினேஹா
 2.  ஷில்பா ஷெட்டி
 3. அமிதாப் பச்சன்
 4. சேரன்
 5. தனுஷ்
 6. சூர்யா-கார்த்தி
 7. அஜித்
 8. ஜெனலியா
 9. கமலஹாசன்
 10. பிரியங்கா சோப்ரா
 11. சச்சின் - கங்குலி
 12. திரிஷா
 13. ஸ்ரீதேவி
 14. மாதவன்
 15. ராணி முஹர்ஜி
 16. ஜெயலலிதா
 17. அஜித்
 18. அசின்
 19. திரிஷா
 20. பாவனா
சினேகா இப்படியும் இருந்தார்.


Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...