Saturday, 2 June 2012

ஈரான் மீது இணையவெளித் தாக்குதல் (Cyber Attack). அமெரிக்காவும் இஸ்ரேலும் இணந்து நடத்தின

ஈரானின் அணுக்குண்டு உற்பத்தியைத் தடுக்க அமெரிக்காவும் இஸ்ரேலும் பல வழிகளைக் கையாண்டு வருகின்றன. ஈரானின் அணு விஞ்ஞானிகள் மூவர் கொல்லப்பட்டனர். இன்னும் ஒருவர் படுகாயமடைந்தார். ஈரானின் அணு ஆராய்ச்சி நிலையத்தில் பலத்த வெடி விபத்து நடந்தது.  ஈரானை அணுக்குண்டு தயாரிக்கவிடாமல் தடுக்க ஐக்கிய அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதித்தன.

விடாது முயலும் ஈரான்
இந்த ஆண்டு ஆரம்பத்தில் பாரசீக வளைகுடாவிற்குள் வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள் வருவததைத் தடுக்கும் சட்டமூலம் ஈரானியப் பாராளமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அத்துடன் ஈரானியப் படைத் தளபதி அமெரிக்கப் போர்க்கப்பல்கள் பாரசீகக் குடாவையும் ஓமான் வளைகுடாவையும் இணைக்கும் எரிபொருள் விநியோக முக்கியத்துவம் வாய்ந்த ஹோமஸ் நீரிணைக்குள் வரக்கூடது என்று எச்சரித்தார். 2011 ஆகஸ்ட் மாதம் ஈரானுக்குச் சென்ற பன்னாட்டு அணுசக்தி முகவரகம் ஈரான் இரகசியமாக அணுக்குண்டு தயாரிக்கிறது என்பதையிட்டு தாம் கரிசனை கொண்டுள்ளதாக தெரிவித்தது. அதைத் தொடர்ந்து ஈரான் மீது யாராவது தாக்குதல் நடாத்தினால் அவர்கள் ஈரானின் இரும்புக் கரங்களைச் சந்திக்க வேண்டிவரும் என்று எச்சரித்தது. பின்னர் நவம்பர் மாதம் ஈரானில் உள்ள பிரித்தானியத் தூதுவரகம் ஈரானியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது.

துரிதப்படுத்திய ஒபாமா
31-01-2012இலன்று ஐக்கிய அமெரிக்க மூதவையின் உளவுக் குழுவிற்கு ஐக்கிய அமெரிக்க உளவுத்துறை இயக்குனர் ஜேம்ஸ் ஆர் கிலப்பர் வழங்கிய அறிக்கையில் ஈரான் அமெரிக்க மண்ணில் தாக்குதல் நடத்தலாம் எனத் தெரிவித்தார். ஈரானின் உச்ச தலைவரான அலி கமயினி போன்றோர் ஈரான் மீது மேற்குலகம் திணிக்கும் பொருளாதாரத் தடை ஈரானிய அரசைக் கவிழ்க்கும் எண்ணம் கொண்டதாயின், தேவை ஏற்படின், அமெரிக்க மண்ணில் தாக்குதல் நடத்தும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் ஐக்கிய அமெரிக்கவினதோ அல்லது வேறு மேற்கு ஐரோப்பிய நாடுகளினதோ நலன்கள் மீது ஈரானிய ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்றும் ஜேம் ஆர் கிலப்பப்ர் எச்சரித்திருந்தார். ஜோர்ஜ் புஷ் ஐக்கிய அமெரிக்காவின் அதிபராக இருந்தபோதே ஈரானுக்கு எதிரான இணையவெளித் தாக்குதல் செய்து அதன் அணுக்குண்டு உற்பத்தியை சீர்குலைக்கும் நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கு Olympic Games எனப் பெயரிடப்பட்டிருந்தது. பராக் ஒபாமா ஆட்சிக்கு வந்தவுடன் ஈரான் மீதான இணையவெளித் தாக்குதல் நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் படி உத்தரவிட்டிருந்தார்.

 2010இல் Stuxnet வைரஸ்
இஸ்ரேல் உருவாக்கியதாக நம்பப்ப்டும் கணனி வைரஸ் 2010ஜூனில் தவறுதலாக வெளிவந்து உலகெங்கும் பல கணனிகளைத் தாக்கியிருந்தது. தவறுதலாக ஈரானிய விஞ்ஞானியின் மடிக்கணனியிக்குச் செலுத்தப்பட்ட வைரஸ் அவரது மடிக்கணனியில் இருந்து உலகெங்கும் பரவியது. அந்த வைரஸ் Stuxnet என்று அழைக்கப்படிருந்தது. இந்த வைரஸ் ஜெர்மானிய எந்திரவியல் நிறுவனமான சீமன்ஸைத் தாக்கியிருந்தது. சீமன்ஸ் நிறுவனம் ஈரானிற்குத் அணுக்குண்டு உற்பத்திக்குக் தேவையான உபரகரணங்களை உற்பத்தி செய்து வருகின்றது. அத்துடன் பல ஈரானியக் கணனிகளையும் செயலிழக்கச் செய்தது. ஈரானின் Natanzஇல் இருக்கும் அணு ஆராய்ச்சி நிலையத்தில் இருந்த கண்காணிப்பு காணொளிப்பதிவுக் கருவிகளில் இருந்து கிடைத்த தகவல்களின்படி Stuxnet வைரஸ் 900முதல் 1000வரையிலான மையநீக்கிக்(centrifuges) கருவிகள் பிரித்தெடுத்து அகற்றிச் செயலிழக்கச் செய்தது. நிலமையைச் சரிவரப் புரியாத ஈரானிய ஆட்சியாளர்களுக்கு தங்கள் விஞ்ஞானிகளின் திறமை மீது ஐயம் ஏற்படவும் செய்தது

 இஸ்ரேலும் அமெரிக்காவும் தனித்தனியாகவும் இணைந்தும் ஈரானிய அணுக்குண்டு உற்பத்தி நிலையங்கள் மீது தொடர்ந்து பல கணனி வைரஸ் தாக்குதல்களை நடாத்தி வருவதாக நம்பப்படுகிறது. மேமாதம்31-ம் திகதி அதாவது நேற்று இன்னும் ஒரு இணையவெளித் தாக்குதல் ஈரானிய அணு ஆராய்ச்சி நிலைகள் மீது நடாத்தப்பட்டுள்ளது. Flamer என்னும் பெயர் கொண்ட இந்த வைரஸ் Stuxnet வைரஸிலும் பார்க்க 40மடங்கு வலுக்கொண்டதாக நம்பப்படுகிறது. அத்துடன் முதல் தடவையாக ஒரு வைரஸ் bluetooth capabilityஉடன் வந்துள்ளது.கணனியை இயக்குபவர்களின் உரையாடல்களையும் Flamerவைரஸ் ஒற்றுக்கேட்டு ஒளிப்பதிவு செய்துவிடும்.ஈரானின் Natanzஇல் இருக்கும் அணு ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள கணனிகள் இணைய வெளியுடன் தொடர்பற்ற முறையில் இயங்குகிறது. ஆனால் அங்கு உளவாளிகள் மூலம் Flamer வைரஸ் உட்புகுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. அது அங்கு உள்ள உபகரணங்களை வழமையான தவறுகளால் பழுதடைவது போல் பழுதடையச் செய்திருக்கிறது. அதனால் நடந்த தவறுகள் பிழையான உதிரிப்பாகங்களால் நடந்தவை என ஈரானியர்களை நம்பவைக்கப்பட்டது.

முனைப்படையப் போகும் இணையவெளிப்போர்
லிபியாவில் மும்மர் கடாஃபியைப் பதவியில் இருந்து அகற்றும் போரை நேட்டோப்படைகள் ஆரம்பித்த போது லிபியாவின் மீது ஒரு இணையவெளித்தாக்குதல் நடாத்தி அதன் படைத்துறையின் கணனிகளை முக்கியமாக விமான எதிர்ப்பு முறைமையைச் செயலிழக்கும் திட்டம் பரிசீலிக்கப்பட்டது. இது வரும் காலங்களில் சீனா இரசியா போன்ற நாடுகளை இணையவெளிப்போரை ஆரம்பிப்பதை நியாயப்படுத்தலாம் என்பதால் கைவிடப்பட்டது. இப்போது அம்பலமாகியுள்ள ஈரான் மீதான இணையவெளித் தாக்குதல் இனி மற்ற நாடுகளை இத்துறையில் அதிக ஈடுபாட்டைக் காட்டச் செய்யும். இணையவெளிப் போர் முறைமையில் சீனா அதிக அக்கறை காட்டி வளர்த்து வருகிறது. அத்துடன் பல வளர்ச்சியடைந்த நாடுகளின் தொழில்துறை இரகசியங்களை இணையவெளி ஊடுருவல்கள் மூலம் சீனா திருடுவதாகக் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இப்போது பல முன்ன்ணி நாடுகள் தமது படைத்துறையில் இணையவெளிப் படையணியை அமைத்துள்ளன. தீவிரவாத இயக்கங்களும் இதில் அக்கறை காட்டிவருகின்றன. அல் கெய்தாவின் இணையத் தளங்கள் பல அமெரிக்க பிரித்தானிய கணனி நிபுணர்களால் ஊடுருவப்பட்டு வருகின்றன.

Friday, 1 June 2012

தேர்ந்தெடுத்த எஸ்.எம்.எஸ் நகைச்சுவைகள் Selected SMS Jokes

A person who surrenders when he's WRONG, is HONEST.
A person who SURRENDERS when not SURE, is WISE.
A person who surrenders even if he's RIGHT, is a HUSBAND.!
 by Rahat
Karachi, Pakistan

Teacher: Where is the CAPITAL of INDIA?
Student: In Swiss Bank :>)
 by Baba Ji
Haridwar, Uttarakhand


~:Men are like Bluetooth:~
He is connected to you when you are nearby,
but searches for other devices when you are away..
~:Women are like Wi-Fi:~
She sees all available devices
but connects to the strongest one...
by Ravi
N.Delhi


Never talk about feelings, if they aren’t really there
Never hold my hand, if you going to break my heart
Never say you are going to, if you don’t plan to start
Never look in my eyes, if all you do is lie
Never say hello, if you really mean goodbye...
 by Shraddha
Navi Mumbai

My life
Was in darkness
B4 I met u
But now
My life is so ..
BRIGHT
U know y?

Because, u r a
](::::::::::::::::::::::::::::::::::::::)[
TUBE LIGHT
 by Millie Thakur
MumbaiA Doctor and Engineer Love the Same Girl.
Dr. Used to Give her a Rose But
Engineer Used to Give her Apple Daily.
One day, Doctor Asks Why????
Engineer: "An Apple a Day Keeps the Doctor Away"
Doctor Shocked, Engineer Rocks!!
 by Kiran Nayak
Pathumwan, Bangkok


You are strong as Rum,
Fine as Wine,
Cool as Beer,
Sophisticated as Vodka,
Classic as Whisky,
in short I am totally tun in your friendship.
 by Pralaya"Negative Attitude is
Like a Punctured Tyre.
We Can not Reach Anywhere
Until We Change It..!"I was born the day I met you, lived a while when you loved me, died a little when we broke apart.I Will Wait ..
Till The Day
“I” Can Forget “You” ..
Or
The Day
You Realize
“You” Cannot Forget “Me”


I love you, not for what you are, but for what I am when I am with you.
Roy Croft

It’s the thing that satisfies
Your mind, body & soul!
Do it on bed, on a sofa,
In the car or anywhere!
It’s called Prayer!
God bless your naughty mind!


When an APPLE becomes red...
It is ready to eat,
When a girl becomes 18 she is ready to..
VOTE...!!


  I think U r very careless!!!
U come & leave things behind!!!!
See now what u have left??
U just came in my mind & left a smile on my face....

Every Girl Wants A Guy
Who Hugs Her When They're Watching A Scary Or Romantic Movie,
Who Gives Her His Jacket Even When He Himself Is Feeling Cold,
Who Will Always Be The One To Make Her Laugh,
Most Importantly He Will Love Her For Who She Is !
That Guy Is What Google Calls "No Result Found" ..!! :) :D
by Minal Shah

Thursday, 31 May 2012

மொழி பெயர்த்த நகைச்சுவைகளும் மொழி பெயர்க்கக் கூடாத நகைச்சுவைகளும்.

நடுத்தர வயது நண்பர்கள் ஒன்றாக துடுப்பட்டம் (கிரிக்கெட்) விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவனுக்கு கிரிக்கெட் பைத்தியம். அவன் ஆட்டத்தின் மத்தியில் தனது தொப்பியைக் கழற்றி கண்ணை மூடிக் கொண்டு தெருவோரம் சென்ற அமரர் ஊர்திக்கு(Funeral Car) அமைதியாக அஞ்சலி செலுத்தினான். அவனை ஆச்சரியத்துடன் பார்ந்த அவனது நண்பர்கள் மச்சி நல்ல பண்படா இது என்றனர். அதற்கு அவன் என்ன இருந்தாலும் 12 ஆண்டுகள் நாங்கள் திருமணமாகி ஒன்றாக நேற்றுவரை இருந்தோம்ல என்றான்.


தெருவில் ஒருவன் ஓடிக் கொண்டிருந்தான் அனுக்கு அண்மையில் இன்னொருவர் நாம் இருவரும் ஒன்றாக ஓடுவோமா என்றார். பதில்: ஏனய்ய நீயும் பிக் பாக்கெட்டா?வெளியில் பெரிதாகச் சத்தமிடுவதாலும் உள்ளே அடங்கிக் கிடத்தலாலும் remote control ஆல் இயக்கப்படுதலாலும் குளிரூட்டியும்(air conditioner) கணவனும் ஒன்றே.

 வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது பாதையைத் தவறவிட்ட ஒரு பேராசிரியர் வழியில் ஒருவனைக் கண்டதும் வாகனத்தை நிறுத்தி அவனிடம் திருச்சிக்குப் போகும் வழி தெரியுமா எனக் கேட்டார். அவனது பதில் தெரியாது.
அண்மையில் தொலைபேசி நிலையம் ஏதாவது இருக்கிறதா எனக் கேட்டார். அவனது பதில் தெரியாது. உனக்குத் தெரிந்த மருந்துக் கடை  ஏதாவது இருக்கிறதா  எனவும் கேட்டார். அவனது பதில் தெரியாது. நீ ஒன்றுமே தெரியாத முட்டாளாய் இருக்கிறாயே. உனக்கு என்ன தெரியும். இப்போது அவனது பதில்: நான் என்கு நிற்கிறேன் என்பது தெரியும். நான் போகும் இடம் எதுவென்று தெரியும். எப்படிப் போவது என்றும் தெரியும்.


 மொழி பெயர்க்கக் கூடாத நகைச்சுவைகள்

 blind என்ற சொல்லிற்கு இரு அர்த்தங்கள் உண்டு:
Mother Superior was taking a bath. There's a knock on the door.
She says, "Who is it?"
A male voice responds, "The blind man."
After a few moments of deliberation the nun says, "Come in."
The man enters and says, "Nice tits, Mrs Nun. Where do you want me to hang the blind?" 

So I went in to a pet shop. I said, "Can I buy a goldfish?" The guy said, "Do you want an aquarium?" I said, "I don't care what star sign it is."

Girls are like roads, more the curves, more the dangerous they are.

The fight we had last night was my fault,
my wife asked me what was on the TV and i said dust.

பொருளாதாரப் பிரச்சனையால் மாறிப்போன அர்த்தங்கள்:

1. CEO -- Chief Embezzlement Officer.
2. CFO -- Corporate Fraud Officer.
3. BULL MARKET -- A random market movement causing an investor to mistake himself for a
financial genius.
4. BEAR MARKET -- A 6 to 18 month period when the kids get no allowance the wife gets no
jewelry, and the husband gets no sex.
5. VALUE INVESTING -- The art of buying low and selling lower.
6. P/E RATIO -- The percentage of investors wetting their pants as the market keeps
crashing.
7. BROKER -- What my broker has made me.
8. STANDARD & POOR -- Your life in a nutshell.
9. STOCK ANALYST -- Idiot who just downgraded your stock.
10. STOCK SPLIT -- When your ex-wife and her lawyer split your assets equally between
themselves.

The pretty secretary came in late for work the third day in a row.
The boss called her into his office and said, "Now look Sharon, I
know we had a wild fling for a while, but that's over. I expect
you to conduct yourself like any other employee around here. 
The boss pressed on, " Who told you you could come and go as you
please around here ?" 
Sharon simply smiled, lit up a cigarette, and while exhaling said,
...."My lawyer."

Wednesday, 30 May 2012

நகைச்சுவைக் கதை: ஒரு சுப்பர் ஃபிகர் வேணும்

திநகர் குமரன்ஸ் புடவை கடையில் ஒருவர் ஒரு ஒட்டகச் சிவிங்கியுடன் போனார். அங்கு அவர் நிறைய ஆடைகளை வாங்கி விட்டு அவர் சட்டைப் பைக்குள் கை வைத்தார் பை அவ்வளவு கனமாக இல்லாததை அவதானித்தேன் ஆனால் கடைக்காரர் கேட்ட சரியான தொகையை அவர் தன் சட்டைப்பையில் இருந்து எடுத்துக் கொடுத்தார். பணத்தை எண்ணக் கூடவில்லை. மிகவும் ஆச்சரியமாக இருந்தது.  பின்னர் வெளியே வந்தார். அவர் பின்னே ஒட்டகச் சிவிங்கியும் சென்றது. அவர் பிரின்ஸ் ஜுவல்லேர்ஸ் நகைக் கடைக்குள் போனார். ஆவல் மீதியால் அவர் பின்னே சென்றேன் அங்கும் நிறைய நகைகளை வாங்கிவிட்டு கடைக்காரர் கேட்ட தொகையை பைக்குள் இருந்து எடுத்துக் கொடுத்தார். என் கண்களையே நம்ப முடியவில்லை. அவர் பின்னே அவர் ஒட்டகச் சிவிங்கியும் செல்ல நானும் தொடர்ந்தேன். இப்போது அவர் ரங்கநாதன் தெருவில் சரவணா ஸ்டோர்ஸ் சென்றார். மீண்டும் அதே கதை.

என்னால் எனது ஆர்வத்தைத் தடுக்க முடியவில்லை. அவரை சரவணா ஸ்டோர்ஸின் வெளியில் வைத்து மறித்து எப்படி ஐயா இப்படி உங்களால் வெறும் சட்டைப்பையில் இருந்து சரியான தொகைப் பணத்தை ஒவ்வொரு தடவையும் எடுக்க முடிகிறது என்றேன். அவர் என்னைப் பனகல் பார்க்கிற்கு அழைத்துச் சென்று தன் கதையைக் கூறினார். நான் பொருளியலிலும் அரசற்வியலிலும் முதுமானப் பட்டம் பெற்ற பின்னர் எனக்கு கல்லூரியொன்றில் விரிவுரையாளராக வேலை கிடைத்தது. அந்த வருமானம் போதாததால் சவுதி அரேபியாவில் ஒரு செல்வந்தர் வீட்டில் வேலைக்காரனாக வேலைக்குச் சென்றேன். அங்கு ஒன்றரை ஆண்டுகள் வேலை செய்த பின்னர் ஒரு நாள் வீட்டில் இருந்த பழைய பொருட்களைத் துப்பரவு செய்யும் போது ஒரு விளக்கை தேய்த்த போது அதில் இருந்து ஒரு பூதம் கிளம்பி வந்து வேண்டும் வரம்  இரண்டு கேள் என்றது. திருமணமாகாத எனது மூன்று தங்கைகளை மனதில் நினைத்துக் கொண்டு பெரும் தொகைப்பணம் கேட்க யோசித்தேன். பின்னர் பெரும் தொகைப்பணம் கையில் இருந்தால் வருமானவரி செலுத்துவது, தாதாக்களுக்கு அளப்பது, அரசியல்வாதிகளுக்கு அளப்பது அது இது எல்லாவற்றையும் நினைத்து விட்டு நான் சட்டைப்பைக்குள் கைவைக்கும் போதெல்லாம் வேண்டிய பணம் வேண்டும் என்று வரம் தரும்படி கேட்டேன். என்று சொல்லித் தன் கதையை முடித்தார். நன்கு படித்தவர் என்றபடியால் பூதத்திடம் நன்கு யோசித்து உங்கள் வரத்தை கேட்டீரகள் என்று அவரைப் பாராட்டினேன். பின்னர் அது சரி ஐயா ஏன் இந்த ஒட்டகச் சிவிங்கி உங்கள் பின்னால் தொடர்ந்த படியே வருகிறது என்றேன்.
அவர் சிரித்து விட்டு பூதம் இரண்டு வரங்கள் எனக்குக் கொடுத்தது. தீபிகா படுகோனை மனதில் நினைத்துக் கொண்டு நான் கேட்ட இரண்டாவது வரம் நிண்ட அழகிய பளபளப்பான கால்கள் நீண்ட கழுத்துடன் என்பின்னால் வாலைச் சுருட்டிக் கொண்டு தொடரக்கூடிய ஒரு சுப்பர் ஃபிகர் வேண்டும் எனக் கேட்டேன், கிடைத்தது இதுதான் என்றார்.

கதையின் நீதி: ஒருவன் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் தனக்கான பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் தன் அறிவைக் கோட்டை விட்டு விடுவான்.

Tuesday, 29 May 2012

மஞ்சளின் மகிமை சொல்லும் அமெரிக்கப் பேராசிரியர்.

திருமணமான பெண்கள் தினமும் முகத்திற்கு மஞ்சள் பூசிக் குளிப்பது கணவனின் உதட்டால் தங்கள் முகத்திற்கு கிருமிகள் பரவாமல் இருக்க என்ற நம்பிக்க்கை காலம் காலமாக தமிழ் மக்களிடை இருந்து வருகிறது. மஞ்சள் கிருமிகளைக் கொல்லும் சாப்பாட்டில் சேர்த்தால் அது உடலில் உள்ள அதிலும் முக்கியமாகக் குடலில் உள்ள கிருமிகளைக் கொல்லும் என்று அமெரிக்க Oregon State University இன் பேராசிரியர்  Adrian Gombart தெரிவித்துள்ளார்.

மஞ்சளின் இருக்கும் குர்குமின் என்னும் உட்பொருளே இந்த நல்ல காரியங்களைச் செய்கின்றது.
"Curcumin caused levels of the protein, cathelicidin anti-microbial peptide, to almost triple" என்பது Adrian Gombart என்னும் பேராசிரியரின் கருத்தாகும். அது மட்டுமல்ல Curcumin is also believed to have anti-inflammatory and antioxidant properties என்றும் சொல்கிறார் அப் பேராசிரியர்.

மஞ்சளின் இருக்கும் குர்குமின் என்னும் உட்பொருள் மூளைக்கு அமிலத்தன்மை பரவாமல் தடுக்கிறது இது ஞாபக சக்தியை அதிகரிக்கும் அத்துடன் வயோதிபர்கள் மத்தியில் வரும் மூளை அழுகல் என்னும் நோயையும் தடுக்கிறது. நல்ல பயன் பெறுவதற்கு குறைந்தது வாரத்தில் மூன்று நாட்களாவது உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக மஞ்சளை தினசரி உணவில் கலந்தும் அழகு சாதனப் பொருளாகவும் பாவித்து வருகின்றனர். அத்துடன் அதை ஒரு மங்களமான பொருளாகவும் கருதுகின்றனர்.


தமிழ் மருத்துவர்கள் மஞ்சளில் இருந்து பெறும் எண்ணெயை சிறந்த கிருமிக் கொல்லியாகப் பாவித்து வருகின்றனர். அவர்களின் கருத்துப்படி பெண்களின் பிறப்பு உறுப்பில் தோன்றும் கிரந்திப் புண்ணுக்கு, மஞ்சளை அரைத்துப் பூசினால், புண் சுகமாகும். பெண்களுக்கு பிரசவத்தின் பின்னர் ஏற்படும் வயிற்று வலி, மாதவிடாய்ச் சிக்கலுக்கு மஞ்சள் பொடி சாப்பிடுவதால், நல்ல பலன் கிடைக்கிறது.மஞ்சளைச் சுட்டு எரித்து அதில் எழும் புகையை மூக்கு வழியாக உள்ளுக்கு இழுத்தால், ஜலதோஷம், கொடிய தலைவலி, தலைக்கனம், தும்மல் போன்றவை குணமாகும். மஞ்சள் புகையை வாய் வழியாக இழுத்தால், மதுபோதை விலகும்.


உணவு வகைக்கள் கெட்டுப் போகாமல் இருக்கவும் மஞ்சள் உதவும். அதிலும் முக்கியமாக இறைச்சிக் கறிகள் கெட்டுப் போகாமல் இருக்க மஞ்சள் உதவும்.


Monday, 28 May 2012

இந்தியப் பேரினவாதத்தின் அசிங்க முகமும் தமிழ்த் தலைமையும்

இந்தியாவின் எல்லை தாண்டிய பேரினவாதமும் இலங்கை அரசின் எல்லை மீறிய பயங்கரவாதமும் இணைந்து ஏற்படுத்திய முள்ளிவாய்க்கால் அழிவின் பின்னர் தமிழர்களிடை அதிக செல்வாக்குப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஓர் எடுப்பார் கைப்பிள்ளையாகவே செயற்பட்டு வருகிறது. முள்ளிவாய்க்கால் அழிவின் முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நெருங்கி இணைந்து செயற்பட்டது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தாக்கி அதன் தலைவர் இரா சம்பந்தன் அறிக்கை விடத் தொடங்கினார். அப்போது அவர்கள் ராஜபக்ச சகோதரர்களின் கைப்பிள்ளையாக்கப்பட்டனர். பின்னர் அவர்களது இருப்புக் கேள்விக் குறியானபோது இந்தியாவின் கைப்பிள்ளையாகவும் ஆக்கப்பட்டனர். இலங்கையில் சீனாவின் தலையீடு அதிகரித்து விட்டது அதை இந்தியா வெறுமனவே பார்த்துக் கொண்டிருக்கிறது என்று ஐக்கிய அமெரிக்கா இலங்கை விவகாரத்தில் தீவிர அக்கறை காட்டத் தொடங்கியது. அதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்காவின் கைப்பிள்ளையாகவும் ஆக்கப்பட்டது. கைப்பிள்ளையின் சொல்லும் செயலும் கட்டத்துரைக்கு இசைவாகவே இருக்க வேண்டும். அல்லாவிடில் உடம்பு ரணகளமாகிவிடும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய அங்கமான தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு இப்போது மட்டக்களப்பில் நடந்து கொண்டிருக்கிறது.
27-05-2012இலன்று தொடங்கிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 14வது தேசிய மநாட்டில் உரையாற்றிய அதன் தலைவர் திரு இரா சம்பந்தன் கூறியது:
  • இந்தியாவின் தலையீடு என்பது ஒரு தவிர்க்க முடியாத வரலாற்று நியதியாக எமது போராட்டத்தில் இடம்பெற்றது. எமது விருப்புக்கள் என்னவாக இருந்தாலும் இந்தியாவின் தேசிய நலன்களுக்கு ஒத்திசைவாக அமையாத எந்த ஒர் அரசியல் தீர்வையும் இலங்கைத் தீவில் நாம் பெற்றுவிடுவதை இந்தியா வரவேற்காது என்பதுவே இந்தியத் தலையீடு எமக்கு உணர்த்திய கட்டாயப் பாடமாக அமைந்தது. எனினும் இந்தியத் தலையீடு என்ற அம்சத்தையே சாதகமாகப் பயன்படுத்தி இந்தியாவின் துணையுடனும் ஆசீர்வாதத்துடனும் எமது இனம் மதிப்புடன் வாழக்கூடிய ஒரு தீர்வினை ஒன்றுபட்ட இலங்கைக்குள் பெறக் கூடிய ஒரு வாய்ப்பினை நாம் பற்றி நின்றோம். எமது விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் காலம் இட்ட ஒரு கட்டாயக் கோலமாக இந்தியத் தலையீடு அமைந்தது.
 இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் இந்தியத் தலையீடு அல்லது அள்ளிவைப்பு இன்று நேற்றோ அல்லது ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டபின்னர் ஆரம்பமானதல்ல. ஜவகர்லால் நேரு காலத்தில் இருந்தே ஆரம்பமானது. மலையகத் தமிழர்களையும் வடக்குக் கிழக்கு வாழ் தமிழர்களையும் ஒன்றாக இணைக்க திரு ஜீ ஜீ பொன்னம்பலம் முனைந்த போது அதைச் செய்யவிடாமல் நீ பெரும்பான்மை இனத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்று திரு எஸ் தொண்டமானைத் தடுத்தவர் ஜவகர்லால் நேரு என்ற பேரினவாதி. அவர் பின்னர் மலையகத் தமிழர்களின் வாக்குரைமை பறிக்கப் பட்ட போது தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று தொண்டமானைக் கைகழுவி விட்டவர். பேரினவாதி நேரு அத்துடன் நிற்கவில்லை மலையகத் தமிழர்களுக்கு எதிராகவும் அவர்களைக் கலந்து ஆலோசிக்காமலும் அப்போதைய இலங்கைப் பிரதமர் ஜோன் கொத்தலாவலையுடன் தனது நாட்டு நலனை மட்டும் கருத்தில் கொண்டு ஒப்பந்தம் செய்தவர். இது இந்தியப் பேரினவாதம் தனது அசிங்க முகத்தை இலங்கைத் தமிழர்களுக்கு இப்படித்தான் காட்டியது. அதை அன்று தமிழர்கள் கண்டு கொள்ளவில்லை.

தணியாத இந்தியத் துரோகம்
நேரு மட்டுமா தமிழர்களுக்கு அள்ளி வைத்தார். அவருக்குப் பின்னர் வந்த லால் பகதூர் சாஸ்த்திரி சிறிமாவோ பண்டாரநாயக்காவுடன் ஒப்பந்தம் செய்து 150,000 தமிழர்களை பன்னாட்டு நியமங்களுக்கு மாறாக நாடற்றவர்களாக்கினார்.இந்தியத் துரோகம் சாஸ்த்திரியுடனும் நிற்கவில்லை. இந்திரா காந்தி இலங்கையில் அமெரிக்கத் தலையீட்டைத் தவிர்க்க தமிழர்களை படைக் கலன்களை வழங்கியும் தமிழர்களிடை ஒன்றுடன் ஒன்ரு முரண்பட்ட படைக்கலனகள் ஏந்திய பல குழுக்களை உருவாக்கியும் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான பெரும் மோதலை உருவாக்கினார். பின்னர் வந்த ராஜீவ் காந்தி தமிழ்ப் போராட்டக் குழுக்களை அவர்களது படைக்கலன்களை சிங்களவர்களிடம் ஒப்படைக்கும் படி வற்புறுத்தினார். தமிழர்களின் பாதுகாப்பிற்கு தான் உறுதி வழங்குவதாயும் பொய் கூறினார். அதன் பின்னர் இலங்கையில் 300,000இற்கு மேற்பட்ட அப்பவித் தமிழர்களைக் கொல்ல இந்தியா இலங்கைக்கு உதவி செய்தது. செய்து கொண்டும் இருக்கிறது. இந்தியப் பேரினவாதத்தின் அசிங்க முகத்தை இன்றும் பல தமிழர்கள் உணரவில்லை.

மீண்டும் அடுத்துக் கெடுக்கும் இந்தியா
இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவதும் அதனால் தமிழர்களுக்கு ஏதாவது நல்லது நடந்து விடக்கூடும் என்பதை தடுக்க இந்தியா முயல்கிறது. அதற்கு அது அடுத்துக் கெடுக்கும் தந்திரத்திரத்தை மீண்டும் கையாள்கிறது. 2012 மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கழகத்தில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது அதனை முதலில் எதிர்க்க இந்தியா தீர்மானித்திருந்தது. தீர்மானத்தைக் கொண்டு வந்த அமெரிக்கா தீர்மானம் கொண்டுவர அரச பிரதானிகளிடை கடுமையாக உழைத்ததால் அத்தீர்மானம் தான் எதிர்த்தாலும் நிறைவேறும் என்பதை உணர்ந்து அமெரிக்காவுடன் இணைந்து தீர்மானத்தின் கடும் போக்கை இலங்கை ஆட்சியாளர்களுக்கு சாதகமாக மாற்றி தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தது. இது இந்தியப் பேரினவாதம் ஒரு பவுடர் பூசித் தன் அசிங்க முகத்தை தமிழரக்ளுக்குக் காட்டியது. சில தமிழர்களுக்கு இது அழகாகத் தெரிந்தது. இப்போது ஐநா மரித உரிமைக்கழகத்தினர் இலங்கைக்குப் பயணம் செய்ய விரும்பும் போது அதை மறுக்கும் நிலையில் இலங்கை இருக்கிறது. அந்த அளவிற்கு தீர்மானம் இந்தியாவால் பலவீனப்படுத்தப்பட்டிருக்கிறது. Building strong but basement week. இந்தியா எத்தனை வாட்டி உதைச்சாலும் தாங்கும் ரெம்ப ரெம்ப நல்லவர்கள் தமிழர்களா?
ஒரு நாய்க்கு இருக்கும் அறிவு கூட சில தமிழர்களுக்கு இல்லை.


தமிழர்களை உய்ய விடாது இந்தியா
இப்போது இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவுடன் இணைந்து செயற்படும் இந்தியா இலங்கையில் தமிழர்களுக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்காமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளும். இலங்கை அரசியல் அமைபிற்கான 13வது திருத்தத்தை 25 ஆண்டுகளாக நிறைவேற்ற முடியாமல் இந்தியா இருக்கவில்லை. 13வது திருத்தம் நிறைவேற்றப்படுவதை இந்தியா விரும்பவில்லை. உதட்டளவின் 13வது திருத்தத்தின் மூலம் இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்தியா சொல்லிக் கொண்டு இருந்தாலும் அது வடக்குக் கிழக்கில் வாழும் தமிழர்கள் மலையகத் தமிழர்கள் போல் சிங்களவர்களுக்கு அடங்கி வாழவேண்டும் என்ற கொள்கையையே இந்தியா கடைப்பிடிக்கிறது.


இந்தியாவின் தேசிய நலனிலும் சாதிய நலன் பெரிது
"""எமது விருப்புக்கள் என்னவாக இருந்தாலும் இந்தியாவின் தேசிய நலன்களுக்கு ஒத்திசைவாக அமையாத எந்த ஒர் அரசியல் தீர்வையும் இலங்கைத் தீவில் நாம் பெற்றுவிடுவதை இந்தியா வரவேற்காது என்பதுவே இந்தியத் தலையீடு எமக்கு உணர்த்திய கட்டாயப் பாடமாக அமைந் தது."" என்று திரு இரா சம்பந்தன் கூறுயதில் முக்கிய தவறு இருக்கிறது. இந்தியாவின் தேசிய நலன்களுக்கு தமிழர்கள் அதிக உரிமை பெறுவதோ அல்லது தனிநாடு பெறுவதோ அமையாது. ஆனால் இந்தியாவின் அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்களின் சாதிய நலன்களுக்கு தமிழர்கள் அதிக உரிமை பெறுவது அமையும் என அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். சோ இராமசாமி, இந்து ராம், சுப்பிரமணிய சுவாமி போன்றவர்கள் சிங்களவர்களுடன் இணைந்து செயற்படுவதும் தமிழ்த் தேசியத்திற்கு எதிராக நஞ்சு கக்குவதும் அதற்காகவே.

இந்திய அரச அதிகாரியான நிருபாமா ராவின் வீட்டுத் திருமணத்திற்கு கோத்தாபாய ராஜபக்ச அழைக்கப்படும் அளவிற்கு இந்திய அதிகாரிகளுக்கும் இலங்கை ஆட்சியாளர்களுக்கும் இடையில் நல்லுறவு எப்படி ஏற்பட்டது? இலங்கைப் போரில் சிங்களவர்கள் வெல்ல வேண்டும் என தமிழ்நாட்டுக் கோவில்களிலும் திருப்பதியிலும் யாகங்கள் செய்யப்பட்டது ஏன்?  இவற்றைத் தமிழ்த் தலைமை உணர்ந்து கொண்டு தமது நம்பிக்கையை இந்தியாமேல் வைக்க வேண்டும். வடக்குக் கிழக்கில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டு அங்கு தமிழர்கள் சிறுபானமையினர் ஆக்கப் படும் வரை இலங்கை பிரச்சனை தொடர்பான தீர்வை இழுத்தடிக்க இந்தியா சிங்களவர்களுக்கு உதவும். அந்த மறை முக நோக்கத்துடனேயே அமெரிக்காவுடன் இந்தியா இப்பொது  இணைந்து செயற்படுகிறது என்பதை தமிழ்த் தலைமை உணர வேண்டும்.

கட்டத்துரையின் உண்மையான நோக்கம் அறியாமல் கைப்பிள்ளையால் எதையும் சாதிக்க முடியாது. இலங்கையில் தமிழர்கள் பேரினமான சிங்களவர்களுக்கு அடங்கியே வாழவேண்டும் என்ற இந்திய நிலைப்பாட்டையும் அதற்குக் காரணமான சாதி வெறியையும் உணராத எடுப்பார் கைப்பிள்ளை திரு இரா சம்பந்தனால் தமிழர்களுக்கு எதையும் சாதிக்க முடியாது.சம்பந்தன ஐயா உங்க ஜட்ஜ்மென்ர் ரெம்பத் தப்பு. தமிழர்கள் இன்னும் ஒரு முறை ரவுண்டு கட்டித் தாக்கப்படக் கூடிய நிலையில் இல்லை.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...