Saturday, 5 May 2012

கணவன் இறப்பதை SKYPEஇல் பார்த்த மனைவி


ஆப்கானிஸ்த்தானில் நிலை கொண்டிருக்கும் ஐக்கிய அமெரிக்காவின் படையில் மருத்துவப் பிரிவில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒரு அதிகாரி அமெரிக்காவில் இருக்கும் தனது மனைவியுடன் SKYPEஇல் காணொளி மூலமாக உரையாடிக் கொண்டிருக்கும் போது இறந்துள்ளார். Capt. Bruce Kevin Clark என்பவருக்கே இந்த பரிதாபகர இறப்பு நடந்துள்ளது.

குடும்பத்தில் மிகுந்த அக்கறையுடையவரானவர் 43 வயதான Capt. Bruce Kevin Clarkஎன்று அவரின் மனைவியில் சகோதரர் தெரிவித்துள்ளார். படையில் சேவை செய்து கொண்டிருக்கும் போது  பல விருதுகளையும் பதக்கங்களையும் Capt. Bruce Kevin Clark பெற்றிருந்தார்.
குடும்பத்துடன் Capt. Bruce Kevin Clark


Capt. Bruce Kevin Clark இன் இறப்புத் தொடர்ப்பாக அமெரிக்கப் படையினர் தீவிர விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர்.

Thursday, 3 May 2012

படைபலப் போட்டி: குழம்பிய ஆசியக் குட்டையில் மீன் பிடிக்கும் அமெரிக்கா

அமெரிக்கா தனது உலக வல்லாதிக்கத்தைப் பாதுக்காக்க தனது படை பலத்தைக் கூட்டுகிறது. அமெரிக்காவிற்கு ஈடு கொடுக்க சீனா தனது படை பலத்தைப் பெருக்குகிறது. சீனாவின் படை பலத்திறு ஈடு கொடுக்க இந்தியா தனது படைபலத்தைப் பெருக்கிறது. இந்தியாவிற்கு ஈடு கொடுக்க பாக்கிஸ்த்தான் தனது படை பலத்தைப் பெருக்குகிறது. சீனாவின் படை பல அதிகரிப்பு ஒஸ்ரேலியா முதல் ஜப்பான ஈறாக மத்திய கிழக்கு நாடுகள் வரை ஒரு பயத்தை ஏற்படுத்துகிறது. சின்னஞ்சிறு சிங்கப்பூரில் இருந்து பென்னம் பெரிய ஜப்பான் வரை படைக்கலன்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்குகின்றன. அமெரிக்கா இலாபமீட்டுகிறது. சிங்கப்பூர் உலகின் பத்தாவது பெரிய படைக்கலன் இறக்குமதி செய்யும் நாடு. வியட்னாம், சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், ஒஸ்ரேலியா ஆகிய நாடுகள் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கிக் குவிக்கின்றன.

தீர்க்கப்படாத ஆசியப்பிரச்சனைகள்
இந்தியா சீனாவிடை எல்லைப் பதட்டம். தீர்க்கப்படாத எல்லைப் பிரச்சனை. அப்படியே இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானிடையும். தென் கொரியாவை அழிக்க நினைக்கும் வட கொரியா. ஜப்பானின் வர்த்தகக் கடற்போக்குவரத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க நினைக்கும் சீனா. தென் சீனக் கடல் முழுவதும் (மற்ற நாட்டுக் கடற்படுக்கை உட்பட) தனது என அடம்பிடிக்கும் சீனா. இப்படி ஒரு கொதி நிலை ஆசியா எங்கும். ஏபரல் மாதம் வட கொரியா, இந்தியா, பாக்கிஸ்த்தான் ஆகிய மூன்று நாடுகளும் தங்கள் நீண்ட தூர ஏவுகணைகளைச் பரீட்சித்துப் பார்த்தன.

 இந்திய சீனப் போட்டி
சீனா தனது வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும் தனது தடங்கலற்ற கடல் வழி வழங்கற்பாதையை உறுதி செய்யவும் தனது பாது காப்ப்புச் செலவீனங்களை அதிகரித்தது. 2011இல் சீனாவின் அச்சுறுத்தல் காரணமாக ஒஸ்ரேலியா தனது தேசிய பாதுகாப்புக் கொள்கையை மீளாய்வு செய்தது. மொத்த ஆபிரிக்கக் கண்டத்தில் உள்ள வறியவர்களிலும் அதிக வறியவர்களைக் கொண்ட இந்தியா உலகின் மிகப்பெரிய படைக்கலன் இறக்குமதி நாடாகியது. கடந்த பத்து ஆண்டுகளாக இந்தியா தனது அணுப் படைக்கலன்களை இரட்டிப்பாக்கியுள்ளது. பாக்கிஸ்த்தானிடம் இந்தியாவிலும் பார்க்க அதிகமான அளவு அணுப் படைக்கலன்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. பாக்கிஸ்தானிடம் உள்ள அணுப்படைக்கலனகள் தீவிரவாதிகள் கைக்குப் போய்ச்சேரும் ஆபத்து உள்ளது. 2015இல் இந்தியாவின் பாதுகாப்புச் செலவீனம் 80 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனிவரும் காலங்களில் இந்தியா நூற்றுக்கு மேற்பட்ட கடபடைக் கப்பல்களை தனது படைக்குச் சேர்க்கவிருக்கிறது. இந்தியா சீனாவிலும் பார்க்க கிட்டத்த்தட்ட இரு மடங்கு தனது கடற்படையை நவீன மயப்படுத்தச் செலவு செய்கிறது. சீனாவின் படை பலம் இந்தியாவிலும் இரண்டு மடங்கு என்று சொல்லலாம். சில அம்சங்களைப் பொறுத்தவரை மூன்று மடங்கு என்றும் சொல்லலாம். ஆனால் கடற்படை வலிமையில் சினாவிற்கு இந்தியா பெரும் சவாலாக இருக்கிறது. சீனப் பொருளாதாரம் இந்தியாவினதிலும் பார்க்க மூன்று மடங்கு பெரியது. சீனாவிற்கு படைக்கலன் அதிகரிப்புப் போட்டியில் இந்தியா ஈடாகமாட்டாது என்பது பலரது கருத்து. ஆசிய நாடுகளின் 2011இல் தமது பாதுகாப்பிற்கு செலவிட்ட தொகை

சீனாவின் தாழ்வு மனப்பான்மை

நேட்டோப் படைகள் அடிக்கடி உலகின் பல பகுதிகளிலும் சென்று படை நடவடிக்கைக்களில் ஈடுபட்டு வருகின்றன. சீனா 1979இல் வியட்னாமில் மூக்குடை பட்டதன் பின்னர் வேறு எங்கும் போரில் ஈடுபட்டதில்லை. சீனாவின் கடற்படை ஒரு கடற் போரில் கூட ஈடுபட்டதாக சரித்திரம் இல்லை. தனது படையின அனுபவமற்றவர்கள் என்ற தாழ்வு மனப்பான்மை சீனாவிற்கு உண்டு. சீனா தனது படை பலத்தைப் பரீட்சிக்கவும் கள அனுபவம் பெறவும் முயலுமா என்ற அச்சம் பலரிடம் உண்டு. சுவிட்சலாந்தின் நிலப்பரப்பிலும் முன்று மடங்கு நிலப்பரப்புக் கொண்ட இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தை தன்னுடையது என்கிறது சீனா. இந்தியாவின் எல்லைகளுக்குள் பல இடங்களில் சீனா புகுந்து படை நிலைகளை அமைத்துள்ளது.

 ஆசியாவும் மக்களாட்சியும்
ஆசியர்கள் மக்கள் தொகையிலும் உழைப்பிலும் மூளைத் திறனிலும் ஐரோப்பா வாழ் ஐரோப்பியர்களையும் வட அமெரிக்கா வாழ் ஐரோப்பியர்களையும் மிஞ்சக் கூடியவர்கள். இவர்கள் தங்களுக்குள் மோதிக் கொள்வதாலும் சரியான ஆட்சியாளர்களையோ சரியான ஆட்சி முறைமையையோ கொண்டிருக்காததால் பின் தங்கி விடுகிறார்கள். சீனாவில் அரச முதலாளித்துவம். இந்தியாவில் மக்களாட்சி முறைமை. ஆனால் மக்களாட்சி முறைமைக்குத் தேவையான அரசியல் கட்சிகளுக்குள் மக்களாட்சி முறைமை இல்லை. கட்சிகள் தனிப்பட்ட குடும்பங்கள் அல்லது தனிப்பட்ட குழுவினர்களின் பிடியில் இருக்கின்றன. கட்சிக்குள் மக்களாட்சி முறைமை சரியாக இல்லாவிடில் மக்களாட்சி முறமை வேலை செய்யாது. ஊழல் நாட்டில் தவிக்க முடியாத ஒரு அம்சமாகிவிட்டது.

ஊர் இரண்டுபடக் கொண்டாடும் கூத்தாடியாக அமெரிக்கா
சீனா தனது படைத்துறையை அபரிமிதமாகப் பெருக்க ஆசிய-பசுபிக் நாடுகள் சீனாவிற்கு அஞ்சி அமெரிக்காவிடம் படைக்கலனகளை வாங்குவதுடன் தமது பாதுகாப்பிற்கு அமெரிக்காவை நாடுகின்றன. அமெரிக்க இந்த நாடுகளுடன் தனது வர்த்தகத்தை வளர்த்தும் படைத்துறை ஒத்துழைப்பை அதிகரித்தும் தனது உலக ஆதிக்கத்தைப் பெருக்குகிறது.

Wednesday, 2 May 2012

பின் லாடன் கொல்லப்பட்டு ஒராண்டின் பின்னர்????

ஒசாமா பின் லாடன் கொல்லப்பட்டு இன்றுடன் ஒரு ஆண்டு ஆகிவிட்டது. இன்று அது இரு வகையில் முக்கியத்துவம் பெறுகிறது. ஒன்று இன்னும் அவரது இயக்கமான அல் கெய்தா அழிவு விளைவிக்கக்கூடிய ஒரு தீவிரவாத இயக்கமா? மற்றது ஒசமா பின் லாடன் கொலை பராக் ஒபாமாவின் வெற்றிக்கு வழிவகுக்குமா? பின் லாடன் கொல்லப்படதைத் தொடர்ந்து இன்னொரு அல் கெய்தா தலைவர் அன்வர் அல் அவ்லாக்கியும் கொல்லப்பட்டார். இவர் அமெரிக்காவில் பிறந்த இசுலாமிய மதபோதகர். பின்னர் அதியா அப் அல் ரஹ்மான் என்ற ஒரு முக்கிய அல் கெயதா தலைவரும் கொல்லப்பட்டார்.

பின் லாடன் கொலைக்கு பராக் ஒபாமா பெருமைப்பட முடியாது அவரது இடத்தில் ஜிம்மி காட்டர் இருந்திருந்தாலும் ஒசாமா பின் லாடனைக் கொல்ல உத்தரவிட்டிருந்திருப்பார் என்கிறார் பராக் ஒபாமாவுடன் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவிருப்பவராகக் கருதப்படும் மிட் ரூணி. பின் லாடன் கொலை செய்யப்பட்டு ஓராண்டு நிறைவு நாளில் பராக் ஒபாமா ஆப்கானிஸ்த்தானிற்கு திடீர்ப் பயணத்தை மேற்கொண்டு அங்கிருந்த அமெரிக்கர்களுக்கு உரையாற்றவிருக்கிறார். இது அவரது தேர்தல் உத்தி. இனி வரும் நாட்களில் அமெரிக்கத் தேர்தல் களத்தில் பின் லாடன் கொலை பெரிதாக அடிபடலாம்.

பின் லாடன் இருக்கும் போதே அவர் தனது இயக்கத்தை ஒரு franchise இயக்கமாக மாற்றிவிட்டார்.  அதன் படி அல் கெய்தாவின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு தமது நடவடிக்கைகளை தமது எண்ணப்படி மேலிடத்தின் கட்டளைக்குக் காத்திராமல் செய்ய முடியும். அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதல்களுக்குப் பின்னர் பின் லாடன் கடுமையாகத் தேடப்பட்டதால் அவரால் தனது இயக்கத்தினருடன் தொடர்பாடல்கள் மேற்கொள்வது கடினம் என்ற நிலை ஏற்பட்டது. இதைச் சமாளிக்க தனது இயக்கத்தை ஒரு franchise இயக்கமாக மாற்றியிருந்தார் பின் லாடன். பின் லாடன் கொல்லப்பட்ட பின்னர் இந்த franchise இயக்கங்களுக்கிடையே ஒற்றுமை குறைந்து விட்டது. அல் கெய்தாவின் தற்போதைய தலைவரான அன்வர் அல் அவ்லாக்கி இந்த இயக்கங்களை ஒருங்கிணைத்து செயற்படுத்த மிகுந்த சிரமத்தை எதிர் நோக்குகிறார். சோமலியா, யேமன், ஈராக் போன்ற நாடுகளில் செயற்படும் அல் கெய்தாவினர் அன்வர் அல் அவ்லாக்கியின் தலமையில் திருப்தியடையவில்லை. அரபு வசந்தத்தில் ஈடுபட்ட போராளிகள் அல் கொய்தாவின் கொள்கைகளால் கவரப்பட்டவர்களுமல்ல. அமெரிக்க எதிர்ப்பை முக்கிய நோக்கமாகக் கொண்டவர்களுமல்லர்.

அய்மன் அல் ஜவாஹ்ரி  Ayman al-Zawahri தற்போது அல் கெய்தாவின் தலைவராகக் கருதப்படுகிறார். அவரது தற்போதைய பிரச்சனை அமெரிக்கவிற்கு எதிராகத் தாக்குதல் நடத்துவதிலும் பார்க்க  அமெரிக்க ஆளில்லா விமானங்களிடமிருந்து தன்னையும் தனது அமைப்பையும் பாதுகாப்பதே. ஆப்கானிஸ்த்தானில் பதுங்கும் அல் கெய்தா Al Qaeda in the Arabian Peninsula (AQAP) அரபு குடாநாட்டில் அல் கெய்தா என்னும் பெயரில் யேமனில் வளர்ந்து வருகிறது. யேமனில் அதிக ஆளில்லா விமானத் தாக்குதல் நடாத்த அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ பராக் ஒபாமாவிடம் அனுமதி கோரியுள்ளது.

இலண்டன் ஒலிம்பிக் மைதானத்தில் அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதல் பாணியில் தற்கொலை விமானத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தில் ஒலிம்பிக் மைதானக் கூரைகளில் ஆறு இடங்களில் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன. இது அல் கெய்தா பற்றிய பயம் இன்னும் மேற்கு நாடுகளை ஆட்டிப் படைக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது.

பின் லாடன் கொல்லப்பட்ட பின்னர் 2011-ம் ஆண்டு ஜூலையில் அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏயின் முன்னாள் தலைவரும் தற்போதைய அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலருமான லியோன் இ பானெற்றா பாக்கிஸ்த்தான் பயணம் மேற் கொண்டிருந்தபோது "We are within reach of strategically defeating al-Qaeda" தந்திரோபாய ரீதியில் நாம் அல்-கெய்தாவைத் தோற்கடிக்கும் நிலையை அண்மித்து விட்டோம்" என்றார். ஆனால் 2012 ஏப்ரல் 15 திகதி ஆப்கானிஸ்த்தானில் பல இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் அவரது கூற்றை மறுதலித்தன.

அல் கெய்தா பலவீனப்பட்டுவிட்டது என்று மேற்கு நாடுகளின் படைத்துறை ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்த போதும் மேற்கு நாடுகளுக்கு குறிப்பாக ஐக்கிய அமெரிக்கவிற்கு எதிரான இசுலாமியர்களின் எதிர்ப்பு உணர்வு மாறியதாகவோ அல்லது குறைந்ததாகவோ இல்லை. அதே வேளை அல் கெய்தவிற்கு அமெரிக்க ஆதரவு இசுலாமிய நாடுகளான எகிப்து, ஜோர்தான், துருக்கி மற்றும் பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகளில் குறைவாகக் காணப்படுவதாக வாஷிங்டன் போஸ்ற் பத்திரிகையின் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

பின் லாடனின் கடைசிக் கனவு 9-11 இரட்டைக் கோபுரத் தாக்குதல் போல் அமெரிக்கவின் பொருளாதாரத்திற்கு நெற்றியடி கொடுக்கக் கூடிய ஒரு தாக்குதல் நடத்த வேண்டும் என்பதே. பின் லாடன் இறந்து ஒரு ஆண்டு கடந்தும் அக்கனவை அல் கெய்தா நிறைவேற்றவும் இல்லை பின் லாடனின் கொலைக்குப் பழிவாங்கவுமில்லை. இது அல் கெய்தாவின் பலவீனத்தின் எடுத்துக் கட்டா?

Tuesday, 1 May 2012

மேதினம்: தகவல்களும் நகைச்சுவைகளும்

 அமெரிக்காவில் இம்முறை மேதின ஆர்ப்பாட்டங்கள் வேலை நிறுத்தங்கள் நடக்க விருக்கிறது. காவல்துறையினர் பெரும் எடுப்பில் பாதுகாப்பு நடவடிக்கைக்களை எடுக்கின்றனர். உலகெங்கும் மே முதல் நாள் தொழிலாளர் தினமாகாக் கொண்டாடப் படுகிறது. ஆனால் அமெரிக்காவிலும் கனாடாவிலும் அது தடை செய்யப்பட்டு அன்றைய தினம் சட்ட நாளாகக் கொண்டாடப்படுகிறது.

பிரித்தானியாவில் கம்ப நடனம்
பிரித்தானியாவில் மே முதல் நாள் கம்ப நடனநாளாகக் கொண்டாடப் படுவதுண்டு. மே முதல் நாள் விடுமுறை இல்லை. மே மாதத்து முதல் திங்கட் கிழமை விடுமுறை நாளாகும்.

மேதினம் குளிர்காலம் முடிந்து கோடைகாலம் ஆரம்பமாகும் தினம் என்று சிலர் கொண்டாடுகிறார்கள்.

சிலர் மேதினத்தை கருத்தரிக்க உகந்த தினம் என்று அதுவும் மரங்களுக்கு அடியில் உடலுறவு கொண்டால் கருத்தரிக்கும் என்று கருதுகிறார்கள்.

பொதுவுடமை(கம்யூனிசம்) நாடுகள் என்று தம்மைச் சொல்லிக் கொள்ளும் அரச முதலாளித்துவ நாடுகளில் மேதினத்தன்று படை அணிவகுப்புக்கள் பெரிய அளவில் நடக்கும். இரசியாவும் சீனாவும் இலங்கை இன அழிப்புக்கு இந்தியாவுடன் இணைந்து துணை போனதையும் உலக அரங்கில் இலங்கை அரசு தண்டிக்கப்படுவதை தடுப்பதையும் நாம் அறிவோம்.அமெரிக்காவில் தொலைக்காட்சியை நீ பார்ப்பாய். சீனாவில் தொலைக்காட்சி உன்னைப் பார்க்கும்.

அமெரிக்காவில் பார்ட்டிக்கு(கேளிக்கை) நீ அடிமையாகிவிடுவய். சீனாவிலும் பார்ட்டிக்கு(கம்யூனிஸ் கட்சி) நீ அடிமையாகிவிடுவாய்.

God give me work, till my life shall end
And life, till my work is done.
Happy May Day

Monday, 30 April 2012

பிரித்தானியாவில் அதி உயர் செல்வந்தராக ஒரு இந்தியர்

பிரித்தானியாவின் செல்வந்தர்களின் பட்டியலில் முதலாவது இடத்தை ஒரு இந்தியர் பிடித்திருக்கிறார். பிரித்தானியாவில் எழுபத்து ஏழு பேர் பில்லியன் பவுண்கள் சொத்துக்களுக்கு மேல் வைத்திருக்கிறார்கள். பிரித்தானியப் பொருளாதாரம் பல நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையிலும் இவர்கள் தமது செல்வங்களைப் பெருக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

அறுபத்தி ஒரு வயதான இந்தியரான லக்ஷ்மி மிட்டல் பிரித்தானியாவின் செல்வந்தர்களில் பட்டியலில் முதலாம் இடத்தில் இருக்கிறார்.  கடந்த ஏழுஆண்டுகளாக லக்ஷ்மி மிட்டல் பிரித்தானியாவின் முதலாவது செல்வந்தராக இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு கடந்த ஆண்டு 27% வீழ்ச்சியடைந்த போதிலும் இவர் முதலாமிடத்தில் இருந்து அசையவில்லை.

சண்டே ரைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செல்வந்தர்கள் பட்டியலில் முதல் 10 பேர்:


1 - Lakshmi Mittal and family - £12.7bn.
2 - Alisher Usmanov - £12.3bn.
3 - Roman Abramovich - £9.5bn.
4 - Sri and Gopi Hinduja - £8.6bn.
5 - Leonard Blavatnik - £7.58bn.
6 - Ernesto and Kirsty Bertarelli - £7.4bn.
7 - The Duke of Westminster - £7.35bn.
8 - David and Simon Reuben - £7.08bn.
9 - John Fredriksen and family - £6.6bn.
10 - Galen and George Weston and family - £5.9bn.

Sunday, 29 April 2012

போர்க்குற்றம்: விசாரிக்காத விசாரணைக் குழுக்கள்

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரின் போது நிகழ்ந்த அத்துமீறல்கள் பற்றி ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவும் இலங்கை அரசு நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவும் விசாரித்தன.  இதில் ஐக்கிய நாடுகள் சபையின் ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவை இலங்கைக்குள் இலங்கை அரசு அனுமதிக்கவில்லை. இதன் விசாரணையையும் அறிக்கையையும் இலங்கை அரசு கடுமையாக எதிர்த்தது. இந்த ஆணைக்குழு அமைப்பதையும் விசாரணை அறிக்கையை வெளிவிடுவதையும்  ஐக்கிய நாடுகள் சபையில் இருக்கும் வில்லங்கம் பிடித்த ஒரு வில்லன் மூலமாக இழுத்தடிப்பதில் ஒரு தமிழின விரோத நாடு வெற்றிகண்டது.

இலங்கை அரசு நியமித்த நல்லிணக்க ஆணைக் குழு ஒரு கண்துடைப்பு அறிக்கையை வெளிவிட்டது. இப்போது அந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற மாட்டேன் என்றும் ஆணைக்குழு தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மீறிச் செயற்பட்டது என்றும் இலங்கை அரசு அடம் பிடிக்கிறது.

ஐநா மனித உரிமைக்கழகம்
2009இல் இலங்கை அரசுக்கு எதிராக ஒரு கண்டனத் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கழகத்தில் கொண்டுவந்தபோது அதை இந்தியா இலங்கைக்கு பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானமாக இந்தியா மாற்றி இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் படி இலங்கை தனது நாட்டின் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணவேண்டும் என்று சதி செய்தது. இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை தொடர்பான கதை வரும்போதெல்லாம் இந்திய 13வது திருத்தம் என்னும் கிலுகிலுப்பையை கிலுக்க மறப்பதில்லை. அத்தீர்மானம் நிறைவேற்றி மூன்று ஆண்டுகளாகியும் 13வது திருத்தம் மேற்கொண்டு 25 ஆண்டுகளாகியும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது, இலங்கையில் பல்லாயிரம் மக்களைக் கொன்றும் ஆயிரக்கணக்கான பெண்களின் மானத்தைப் பறித்தும் பல இலட்சக் கணக்கனவர்களை வீடற்றவர்களாக்கியும் உருவாக்கப்பட்ட 13வது திருத்தம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இந்தத் திருத்தம் நிறைவேற்றப்படும் போது இதை நிறைவேற்றத்தேவையில்லை என இந்திய அதிகாரிகள் இலங்கை அரசுக்குத் தெரிவித்திருந்தனர் என்று கொழ்ம்பில் பரவிய வதந்தி இப்போது உண்மையாகிவிட்டது.

இலங்கையில் நடந்த போர் குற்றம் தொடர்பான செய்மதிப் பதிவுகள் இந்தியாவிடமும் அமெரிக்காவிடமும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இரு நாடுகளும் அவற்றை இதுவரை வெளிவிடவில்லை. இலங்கைப் படைகள் போரின் போது கொத்தணிக் குண்டுகள் பாவித்தன என்பதற்கான ஆதாரங்கள் நிறைய உண்டு. அதனால் காயமடைந்தவர்களின்  சாட்சியங்கள் உண்டு. கடந்தவாரம் தமிழர்களுக்கு எதிரான போர் உக்கிரமாக நடந்த இடமான புதுக்குடியிருப்பில் வெடிக்காத் கொத்தணிக் குண்டுகள் ஐக்கிய நாடுகள் சபையின் கண்ணி வெடி அகற்றும் பிரிவினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது அது கொத்தணிக் குண்டு என்பதை ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இலங்கைப் போரில் தமிழர்களுக்கு எதிராக தடை செய்யப் பட்ட குண்டுகள் பாவிக்கப் பட்டது என்பதை ஐநா நிபுணர்குழுவோ இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவோ தமது அறிக்கையில் தெரிவிக்க்கவில்லை. நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னர் கொத்தணிக் குண்டுகளால் காயமடைந்தவர்கள் சாட்சியமளித்தனர். இந்த இரு விசாரணைக் குழுக்களாலும் இலங்கைப் போர் தொடர்பாக சரியான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது இங்கு உறுதியாகிறது. இன்னும் பல தகவல்கள் மறைந்திருக்கின்றன. இலங்கைக்கு தடைசெய்யப்பட்ட குண்டுகளைக் கொடுத்தவர்கள் யார்?

கொத்தணிக் குண்டுகள் பற்றி விக்கிபீடியா:
A cluster munition is a form of air-dropped or ground-launched explosive weapon that releases or ejects smaller sub-munitions. Commonly, this is a cluster bomb that ejects explosive bomblets that are designed to kill enemy personnel and destroy vehicles. Other cluster munitions are designed to destroy runways, electric power transmission lines, disperse chemical or biological weapons, or to scatter land mines. Some submunition-based weapons can disperse non-munitions, such as leaflets.

Because cluster bombs release many small bomblets over a wide area they pose risks to civilians both during attacks and afterwards. During attacks the weapons are prone to indiscriminate effects, especially in populated areas. Unexploded bomblets can kill or maim civilians long after a conflict has ended, and are costly to locate and remove.

Cluster munitions are prohibited for those nations that ratify the Convention on Cluster Munitions, adopted in Dublin, Ireland in May 2008. The Convention entered into force and became binding international law upon ratifying states on 1 August 2010, six months after being ratified by 30 states;[1] as of February 2012, a total of 111 states had signed the Convention and 68 of those have ratified it

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...