Saturday, 21 April 2012

இலங்கையில் இந்தியாவின் அசிங்கம் இறுதியில் அம்பலம்

இந்தியாவில் வாழும் பார்ப்பனர்கள் தங்கள் ஆலோசனைப் படியே இந்தியா ஆளப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். அதனால் இந்தியாவின் பல உயர் பதவிகளில் அவர்கள் இருக்கிறார்கள். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை அவர்களே தீர்மானிக்கிறார்கள். இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் தங்கள் சாதிய நலன்களுக்கு இலங்கைத் தமிழர்கள் ஆளக்கூடாது என்று கருதுகின்றனர். அவர்களைப் பொறுத்தவரை தமிழர்கள் சூத்திரர்கள் அவர்கள் அடிமையாக இருக்க வேண்டியவர்கள். அவர்களின் திட்டம் வடக்குக் கிழக்கில் வாழும் தமிழர்களும் மலையகத்தில் வாழும் தமிழர்களைப் போலவே வாழ வேண்டும் என்பதே. இதற்காக அவர்கள் இந்தியாவின் பிராந்திய நலன்களைக் கூடக் கருத்தில் கொள்ளாமல் இலங்கையில் சீன ஆதிக்கத்தை வளரவிட்டனர். சீனாவின் உதவியுடந்தான் இலங்கையில் தமிழர்களின் ஆயுத போராட்டத்தை ஒழிக்க முடியும் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். சிங்கள் ஆட்சியாளர்களுடன் இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் நல்ல நெருக்கமான உறவுகளைப் பேணி வருகிறார்கள். அவர்களின் வீட்டுத் திருமண வைபவங்களுக்கு கோத்தபாய ராஜபக்ச போன்றவர்கள் அழைக்கப்பட்டுகிறார்கள்.

இலங்கை தொடர்பாக இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் தற்போதைய பிரச்சனைகள் இரண்டு. ஒன்று 2014-ம் ஆண்டு நடக்கவிருக்கும் இந்தியப் பாராளமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை அடிபடக் கூடாது. இரண்டாவது 2014இல் இந்தியாவில் ஆட்சி மாறினாலும் இந்தியாவின் இலங்கைத் தமிழர்களை அடக்கி வைக்கும் கொள்கை மாறக்கூடாது. இதற்காகவே இந்தியப் பாராளமன்றக் குழுவின் இலங்கைப் பயணத்தை அவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இலங்கையில் போருக்குப் பின்னர் தமிழர்களின் நிலைபற்றி அறிந்து கொள்வதே இந்தியப் பாராளமன்றக் குழுவின் இலங்கைப் பயணத்தின் நோக்கம் என்று கூறப்பட்ட போதிலும் மறை முகத்திட்டம் இந்திய எதிர்கட்சியும் தமிழர்களை அடக்கி வைக்கும் கொள்கையைக் கடைப்பிடிக்கச் செய்வதே. இதன் மூலம் 2014 பாராளமன்றத் தேர்தலில் இலங்கைப் பிரச்சனைய முன்வைத்து எதிர்கட்சி தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்யாமல் பார்த்துக் கொள்ளலாம். ஆளும் கட்சியும் எதிர்க் கட்சியும் தமிழர்கள் தொடர்பாக ஒரே கொள்கையுடையதாக ஆக்கிவிட்டால். தேர்தல் முடிவுகளை தமிழர்கள் பிரச்சனை பாதிக்காது. காங்கிரசு தோல்வியடைந்து எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இலங்கைத் தமிழர்கள் அடக்கப்படும் கொள்கை மாறாது.


இறுதியில் அசிங்கம் அம்பலம்
சுஸ்மா இலங்கையில் இருக்கும் போதே இந்தியா இலங்கையில் பல்லாயிரக் கணக்கான் அப்பாவித் தமிழர்களைக் கொன்றும் 3500இற்கு மேற்பட்ட பெண்களை மானபங்கப்படுத்தியும் இலட்சக் கணக்கானோரை வீடிழக்கச் செய்தும் கொண்டுவந்த  இலங்கை அரசமைப்பிற்கான 13வது திருத்தத்தில் சொல்லப்பட்டபடி தமிழர்களுக்கு காணி மற்றும் காவல்துறை தொடர்ப்பான அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது என இலங்கை அதிபர் திட்டவட்டமாக அறிவித்து இந்தியாவின் முகத்தில் கரி பூசினார். ஏற்கனவே இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் மஹிந்த தன்னிடம் 13வது திருத்தத்தில் உள்ள அதிகாரங்களிலும் பார்க்க அதிக அதிகாரங்களைத் தமிழர்களுக்கு வழங்குவேன் எனத் தெரிவித்ததாக பீற்றிக் கொண்டார். பின்னர் மஹ்ந்த தனது நண்பர் ஒருவரின் பிறந்த நாள் வைபவத்தில் தான் இந்திய வெள்யுறவுத் துறை அமைச்சரை ஏமாற்றியதாகச் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டர். இலங்கை சென்ற சுஸ்மா சுவராஜ் இறுதியில் மஹிந்த ராஜபக்சவைத் தனியாகச் சென்று சந்தித்தார். இது தூதுக் குழுவின் நிகழ்ச்சி நிரலில் இருந்திருக்கவில்லை. இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் இரகசிய நிகழ்ச்சி நிரலின் படி நடந்ததா? சந்திப்பில் தட்சணை பரிமாறப்பட்டதா?  இந்தக் கேள்விகளுக்கு விடை தெரியும். இறுதியில் சுஸ்மா சுவராஜ் தனது உண்மையான வடிவத்தை வெளிப்படுத்தினார். ஒன்று பட்ட இலங்கையே தமது கொள்கை என்றார். இலங்கை அரச ஊடகங்கள் தொடர்ந்து இந்தியப் பாராளமன்றக் குழு இலங்கை அரசைப் பாராட்டுவதாக செய்திகளை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறது.

Friday, 20 April 2012

ஜெயலலிதா சொன்னது யாழ்ப்பாணத்தில் உண்மையானது

இந்தியப் பாராளமன்றக் குழு இலங்கை செல்லும் என்றவுடன் ஜெயலலிதா குழுவின் நிகழ்ச்சி நிரலைப் பார்த்தேன் அதில் விருந்துகளும், அரசின் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுமே அதிகம் இடம்பெற்றுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடம் பேசுவதற்கு போதுமான சந்தர்ப்பங்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. இந்தப் பயணம் வெறும் கண் துடைப்பாகத் தான் அமையும் என்பது தெளிவாகியுள்ளது. சிறிலங்கா அதிபருடன் தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்கும் ஒழுங்குகள் கூட இல்லை. அவருடன் விருந்து உண்ணவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

ஜெயலலிதா சொன்னது போல் இந்தியப் பாராளமன்றக் குழு மஹிந்தவைச் சந்தித்து சலாம் போட்டு வணங்கி விருந்துண்டது. இந்தியப் பாராளமன்றக் குழு விமானத்தில் இலங்கை செல்லாமல் மீனவர் படகில் சென்றிருந்தால்?????
யார் யாரோ எல்லம் சேர்ந்திருந்து வெட்டுறாங்கள்

இந்தியப் பாராளமன்றக் குழுவிறு எதிராக ஆர்ப்பாட்டம்
யாழ்ப்பாணம் சென்ற சுஸ்மா சுவராஜ் தலைமையிலான  இந்தியப் பாராளமன்றக் குழு 18-ம் திகதி புதன் கிழமை அதிக தமிழ்ப் பாராளமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய உதவித் தூதுவரகத்தில் சந்திக்க ஏற்பாடாகி இருந்தது. அந்தச் சந்திப்பில் தாமும் கலந்து கொள்ள இலங்கைப் படைத்துறை அதிகாரியும் வட மாகாண ஆளுனருமான ஜீ.ஏ.சந்திரசிறியும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் சென்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இந்தியப் பாராளமன்றக் குழு என்ன உரையாடுகிறது என்பதை அறிவதே இவர்களின் நோக்கம். ஆனால் இந்திய உதவித் தூதுவர் இவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இந்தியப் பாராளமன்றக் குழுவும் நடாத்திய சந்திப்பில் இருவரையும் அனுமதிக்காமல் வெளியில் இரண்டு மணித்தியாலங்கள் காக்க வைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த இவர்கள். மறுநாள் நல்லூர் முருகன் கோவிலுக்கு இந்தியப் பாராளமன்றக் குழு செல்லும் போது அவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய பலரை பேருந்து வண்டிகளில் கொண்டு வந்து இறக்கி வைத்திருந்தனர். இதனை அறிந்த இந்தியத் தரப்பினர் தமது நல்லூர் முருகன் கோவில் தரிசனத்தை இரத்துச் செய்தனர். இலங்கையில் இந்தியா வாக்களித்த 50,000வீடுகளின் கட்டுமானம் தடைபட்டமைக்கு இந்தியாவைக் குற்றம் சாட்டினார் வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி. இந்தியா ஐந்து இலட்சம் ரூப்பாக்கள் செலவில் ஒரு வீடு அமைப்பதாக உறுதி அளித்துவிட்டு இப்போது ஒன்றரை இலட்சம் செலவில் அமைக்கிற்து என்பதையும் அவர் அம்பலப்படுத்தினார்.


யாழ் அரச செயலக ஊழியர்களுக்குத் தடை
இலங்கை அரசு யாழ்ப்பாண அரச செயலக ஊழியர்களுக்கு இந்தியப் பாராளமன்றக் குழுவைச் சந்திக்கக் கூடாது என உத்தரவிட்டார். போருக்குப் பின்னர் யாழ்ப்பாணம் வந்த சகல வெளிநாட்டுப் பிரதிநிதிகளையும் சந்தித்து இலங்கை அரசுக்கு ஆதரவாகக் கதைத்த யாழ்ப்பாண அரசாங்க அதிபர் (இந்தியாவின் மாவட்டக் கலேக்டர்) கூட இந்தியப் பாராளமன்றக் குழுவைச் சந்திக்காதது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.


கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிப்பு
இந்தியப் பாராளமன்றக் குழு கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பிற்கு செல்லும் போது நடக்கவிருக்கும் சந்திப்பிற்கு உள்ளூர் நாடாளமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகியோர் அழைக்கப்படவில்லை. கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனும், அரசாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களும், இந்திய பாராளுமன்ற குழுவின் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடாத்துவது உண்மை கண்டறிய எவ்விதத்திலும் உதவமாட்டாது. இந்தியக் குழு ஏதாவது விதத்தில் இவர்களைச் சந்திக்க வேண்டும்.

எம்ஜீஆரின் பெயருக்கு இழுக்கு
மஹிந்த ராஜபக்சவின் கைக்கூலி எனக் கருதப்படுபவரும் ஈழத் தமிழர்களின் விரோதியாகக் கருதப்படுபவரும் கடந்த இந்தியப் பாராளமன்றக் குழு இலங்கை வந்த போது மஹிந்தவிற்குப் பொன்னாடை போர்த்திய பன்னாடையுமான சுதர்சன நாச்சியப்பன் உள்ளூர் அரசியல்வாதி ஒருவரை மறைந்த தமிழ்நாட்டு முதல்வர் எம் ஜீ இராமச்சந்திரனுக்கு ஒப்பிட்டு ஈழத்தமிழர்களுக்கு ஒரு காலகட்டத்தில் பேருதவி புரிந்த எம் ஜீ இராமச்சந்திரனை கேவல்ப்படுத்தியுள்ளார்.

பேரினவாதிகளுக்குத் தமிழர் பிரச்சனை புரியாது.
ஒரு பேரினவாதியும் பேரினவாதக் கட்சியைச் சேர்ந்தவருமான சுஸ்மா சுவராஜ் அவர்களுக்கு இலங்கை இனப்பிரச்சனையைப் புரிந்து கொள்வது மிகக் கடினம். இவர்கள் இந்தியாவில் உள்ள அதிகாரப் பரவலாக்கத்திற்கு அதிகாமான எதுவும் இலங்கைத் தமிழர்களுக்குக் கிடைக்க சம்மதிக்க மாட்டார்கள். உண்மையில் இந்தியாவில் உள்ளது அதிகாரப் பரவலாக்கம் அல்ல அது ஒரு நிர்வாகப் பரவலாக்கமே. இந்திய மாநில அரசுகளை மினுக்கப்பட்ட மாநகரசபைகள் (glorified municipal councils) என்றே அரசறிவியலாளர்கள் சொல்லுவர். இந்தியப் பாராளமன்றக் குழு இலங்கை சென்ற நாள் முதலாய் இலங்கை அரச ஊடகங்கள் இந்தியப் பாராளமன்றக் குழு அதற்குப் பாராட்டுத் தெரிவித்தது இதற்குப் பாராட்டுத் தெரிவித்தது என்று தொடர்ந்து செய்திகளை வெளிவிட்ட வண்ணம் இருக்கின்றன. யாழ்ப்பாணத்திற்கு சென்றவுடன் சுஸ்மா தான் யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி கண்டு ஆச்சரியமடைந்தேன் என்றார். எப்படி இருக்க வேண்டிய யாழ் அன்னியர் ஆட்டியால் இப்படி இருக்கிறது என்று அந்தப் பேரினவாதி அறிந்திருக்க முடியாது. உள்ளூர் அரசியல் தொடர்பாக அவரது அறிவு அவர் நெற்றியில் இருக்கும் பொட்டை விடச் சிறியதே.
நமஸ்தே மஹராஜ்ஜீ நான் சுவராஜ்

ஜெயலலிதா தனது சொந்த அரசியல் செல்வாக்கை மனதில் கொண்டு முடிவு எடுத்தாலும் அவர் தனது கட்சியைச் சேர்ந்த பாராளமன்ற உறுப்பினர்கள் இலங்கை செல்ல மாட்டார்கள் என எடுத்த முடிவு சரியானதே.

Thursday, 19 April 2012

இலங்கைப் பயணம்: சுஸ்மாவைச் செல்லாக் காசாக்கிய ஜெயலலிதா

இந்த ஆண்டு இலங்கைப் பத்திரிகைகளில் இதுவரை வந்த நகைச்சுவைகளில் மிகச் சிறந்த நகைச்சுவை இந்திய இணை அமைச்சர் வி நராயாணசுவாமி இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா பாதுகாப்பாக இருக்கும் என்று கூறியதே. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இந்தியப் பாராளமன்ற உறுப்பினர்களின் குழு ஒன்று சுஸ்மா சுவராஜ் தலைமையில் போருக்கு பிந்திய ஈழத்தமிழர்களின் மறுவாழ்வு குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக என்று சொல்லிக் கொண்டு இலங்கை சென்றது. அது பசில் ராஜபக்ச, மலையத் தொழிற்சங்கவாதிகள், மலையக அரசியல்வாதிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடபடப் பலதரப்பினரைச் சந்தித்தனர். இக்குழுவின் பயணம் தொடர்பாகக் கேட்டபோதே அமைச்சர் வி நராயாணசுவாமி தனது திருவாய் மலர்ந்தருளினார். இக்குழுவினர் 15-ம் திகதியில் இருந்து 21-ம் திகதிவரை இலங்கையில் தங்கியிருப்பர்.

இந்திய உளவுத் துறைக்குத் தெரியாதா?

இலங்கையில் இப்போதைய நிலைமை எப்படி இருக்கிறது என்பதை இலங்கைப் பத்திரிகைகளைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம். இந்திய உளவுத் துறை இலங்கையில் செயற்படுகிறது. இலங்கை நிலைமையைப் பற்றி இந்திய உளவுத் துறைக்குத் தெரியாததை சுஸ்மிதா சுவராஜ் கண்டறியப் போகிறாரா? இதிலும் பார்க்க நடிகை சுஷ்மிதா சென்னை அனுப்பி இருக்கலாம். அவருக்கு இலங்கை ஆட்சியாளர்கள் காட்டு காட்டு என்று காட்டியிருப்பார்கள்.


மீண்டும் பதின்மூன்று பல்லவி மீண்டும் நாமம்

இலங்கை அரசியல் அமைப்பின் 13வது திருத்தம் இந்த ஆண்டு இறுதியில் தனது இருபத்து ஐந்தாவது ஆண்டு விழாவைக் கொண்டாட இருக்கிறது. இலங்கை ஆட்சியாளர்களைச் சந்தித்த சுஸ்மா சுவராஜ் பதின்மூன்றாம் திருத்தத்தை அமூல் செய்யும் படி வலியுற்த்தினார். ஐக்கிய நாடுகள் சபையில் போர்த்துகீசியப் பிரதி நிதியியின் உரையைத் தனது உரை என்று எண்ணி வாசித்துச் சாதனை புரிந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணாவிடம் பதின்மூன்றுக்கு மேல் சென்று தமிழர்களின் பிரச்சனையைத் தீர்ப்பேன் என்று கூறிவிட்டுப் பின்னர் அப்படி ஒன்றும் கூறவில்லை என்று மஹிந்த ஏமாற்றினார். சுஸ்மா ஏற்கனவே நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு வைத்திருப்பதால் அவருக்கு காது குத்தப்படலாம். சுஸ்மா சுவராஜ் அவர்களும் ஒரு அப்பட்டமான பேரினவாதியே. அவர் இலங்கைப் பேரினவாதிகளுக்கு தொடர்ச்சியாகப் புகழாரம் சூட்டினார்.

உண்மையான நோக்கம்
இலங்கை அரசு ஒரு தூதுக் குழுவை இலங்கை அனுப்பியதன் நோக்கத்தை கலாநிதி விக்கிரமபாகு
"ஜெனீவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை இந்தியா ஆதரவளித்துள்ளமையால் ஆத்திரமடைந்துள்ள இலங்கை அரசாங்கத்தை ஆசுவாசப்படுத்தவே இக் குழு இங்கு வருகிறது. இதன் மூலம் மன்மோகன்சிங்கை மகிழ்ச்சிப்படுத்தி மஹிந்தவை ஆசுவாசப்படுத்தி வடக்கிலுள்ள தமிழ் மக்களின் கடல்வளம், கனிய வளம் மற்றும் காணிகளை கொள்ளையடிப்பதே இக்குழுவின் திட்டம்" என குற்றம் சாட்டினார். ஆனால் தூதுக் குழுவின் முக்கிய நோக்கம் வேறு. இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கை சில முக்கிய காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது:
1. இந்தியாவின் அதிகார மையமான தென்மண்டலத்தில் இருப்பவர்களின் சாதிய நலன்கள்.
2. இந்தியாவை ஆள்பவர்களின் குடும்ப நலன்கள்
3. இலங்கையில் வர்த்தகம் செய்யும் இந்தியப் பெரும் முதலாளிகளின் நலன்கள்.
இந்த மூன்றையும் வைத்துக் கொண்டு இலங்கை தொடர்பாக இந்தியா தனது செயற்திட்டங்களை வகுத்துக் கொள்கிறது. இதற்கு சிங்கள மக்களுடன் ஒரு சிறந்த நட்பை இந்தியா பேண வேண்டியது அவசியமாகிறது. அப்படி வகுத்த கொள்கைகளும் செயற்திட்டங்களும் ஆளும் காங்கிரசுக் கட்சிக்கு தமிழ்நாட்டில் 2011இல் ஒரு பெரும் தேர்தல் தோல்வியைக் கொடுத்தது. இந்த தேர்தல் காரணங்களுக்காக இந்தியா தனது வெளிநாட்டுக் கொள்கையை மாற்றி அமைக்கத் தயாரில்லை. இலங்கையில் சீனா அதிக ஆதிக்கம் செலுத்துவதைப்பற்றி இந்திய ஆட்சியாளர்களோ கொள்கை வகுப்பாளர்களோ அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் இலங்கையில் பெருகிவரும் சீன ஆதிக்கம் மேற்கு ஐரோப்பிய நாடுகளையும் ஐக்கிய அமெரிக்காவையும் அதிகம் கவலையடைய வைத்தது. அதனால் இலங்கையின் மனித உரிமை மீறல்களை அவர்கள் கையில் எடுத்துக் கொண்டனர். வட இந்தியாவில் இடைத் தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வியால் அதிகரித்த தமிழ்நாட்டு வாக்காளர்களின் தேவையும் அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் நெருக்குதல்களும் இந்தியாவை இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வைத்தது. இதனால் இலங்கை அதிருப்தி அடைந்தது. இதனால் இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் சகல அரசியல் கட்சிகளும் ஒருமித்து இலங்கை தொடர்பான இந்தியாவின் தற்போதைய கொள்கைகளை ஏற்றுக் கொண்டால் தேர்தல் காரணங்களுக்காக கொள்கை மாற்றம் தேவைப்படாது என்று எண்ணினர். அதனால் இந்தியாவின் சகல கட்சிகளைச் சேர்ந்தவரகளை இலங்கைக்கு அனுப்பி அவர்களை இலங்கை கவனிக்க வேண்டிய மாதிரிக் கவனித்தால் அவர்கள் இலங்கை சார்பான இந்தியாவின் தற்போதைய கொள்கைகளை ஏற்றுக் கொள்வர் என நினைத்தது. அதில் முதல் இடியைப் போட்டவர் ஜெயலலிதா.


ஜெயாவின் அதிரடிக் காய் நகர்த்தல்
சட்டசபைத் தேர்தலில் தமிழின உணர்வாளர்களின் ஆதரவுடன் பெரும் வெற்றியீட்டிய ஜெயலலிதாவின் அடுத்த கனவு 2014இல் நடகக இருக்கும் பாராளமன்றத் தேர்தலில் நாற்பது தொகுதிகளிலும் வெற்றியீட்டி தான் அடுத்த இந்தியப் பிரதமராக வேண்டும் என்பதே. ஏற்கனவே அவரது சோதிடர்கள் அவருக்கு இந்தியப் பிரதமராகும் யோகம் உண்டு என்று சொல்லிவிட்டனர். தான் ஒரு ஈழத் தமிழர்களைன் தீவிர ஆதரவாளர் என்று தன்னைக் காட்டிக் கொள்வதில் ஜெயலலிதா இப்போது அதிக கவனத்துடன் செயற்படுகிறார். இந்தியப் பாராளமன்றக் குழு இலங்கை செல்லும் என்றவுடன் ஜெயலலிதா குழுவின் நிகழ்ச்சி நிரலைப் பார்த்தேன் அதில் விருந்துகளும், அரசின் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுமே அதிகம் இடம்பெற்றுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடம் பேசுவதற்கு போதுமான சந்தர்ப்பங்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. இந்தப் பயணம் வெறும் கண் துடைப்பாகத் தான் அமையும் என்பது தெளிவாகியுள்ளது. சிறிலங்கா அதிபருடன் தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்கும் ஒழுங்குகள் கூட இல்லை. அவருடன் விருந்து உண்ணவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனது கட்சியின் சார்பில் யாரும் போகமாட்டார்கள் என்றேல்லாம் கூறிப் போட்டார் ஒரு போடு. ஜெயலலிதாவைத் தொடர்ந்து உண்ணாவிரத நாடகமாடிய கலைஞர் கருணாநிதியும் தனது அரசியல் எதிர்காலத்திற்கு இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை முக்கியம் என்பதால் தனது கட்சிப் பாராளமன்ற உறுப்பினர்கள் இடம் பெறமாட்டார்கள் என்றார். ஜெயலலிதா அத்துடன் நிற்கவில்லை முதலமைச்சர்கள் மாநாட்டுக்குச் சென்ற இடத்தில் சில சந்திப்புக்களை மேற்கொண்டார். திரிணாமுல் காங்கிரசும், ஐக்கிய ஜனதா தளமும் இலங்கை செல்லும் குழுவில் இருந்து விலகிக் கொண்டன. இதனால் சுஸ்மிதா குழு பெரும் பலவீனம் அடைந்தது. தமிழகக் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. தாம் மஹிந்த ராஜபக்சவுடன் அமர்ந்து விருந்து உண்டால் தமது அரசியல் எதிர்காலம் பெரிதும் பாதிக்கப்படும் என்று உணர்ந்து அந்த விருந்து உபசாரத்தை இரத்துச் செய்யும்படி இந்திய வெளியுறவுத் துறையைக் கெஞ்சினர்.

Wednesday, 18 April 2012

சீனாவிற்கு ஆப்பு வைக்கும் இந்தியாவின் அடுத்த ஏவுகணை அக்னி -5.

அக்னி - 5
 இந்தியா தனது அக்னி - 5 என்னும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் எறியியல் ஏவுகணைகளைப்(Inter-Continental Ballistic Missile-ICBM) பரிசோதிக்க விருக்கிறது. ஒடிசாவின் வீலர் தீவில் இருந்து அக்னி - 5 ஏவப்படவிருக்கிறது. இதற்கு முந்திய அக்னி ஏவுகணைகள் பாக்கிஸ்த்தானைப் பதம் பார்க்கும் வல்லமை கொண்டவை. அக்னி - 5 சீனாவை இலக்கு வைத்து உருவாக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. அக்னி - 5 ஏவுகணைகள் 5000கிமீ இற்கு அப்பால் சென்று தாக்கக் கூடியதாக இருக்கலாம். இலக்கை laser gyroscope தொழில் நுட்பம் மூலம் கண்டறிந்து தாக்கும் திறனை அக்னி - 5 ஏவுகணைகள் கொண்டிருக்கும். அக்னி - 4  3500கிமீ வரை சென்று தாக்கும் வல்லமை உடையது.இந்தியாவின் படை வல்லமையில் இது ஒரு மைல்கல்லாக அமையலாம் என்று கூறப்படுகிறது.
click on picture to enlarge..

உலகில் ஐக்கிய அமெரிக்கா, இரசியா, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் மட்டுமே கண்டம் விட்டுக் கண்டம் பாயும் எறியியல் ஏவுகணைகளைப்(Inter-Continental Ballistic Missile) பாவிக்கும் திறன் கொண்டவை. வட கொரியா அண்மையில் பரிசோதித்த ஏவுகணை நிலத்தில் இருந்து ஏவப்பட்ட 90 நொடிகளில் வெடித்துச் சிதறியதால் பல படைக்கல விற்பன்னர்கள் தங்கள் கவனத்தை இந்தியாவின்பால் ஆர்வத்துடன் திருப்பியுள்ளனர்.
 
அக்னி-3 இன் தாக்கும் திறன்
 அக்னி - 5 ஆல் அமெரிக்கக் கண்டத்தைத் தவிர மற்ற நான்கு கண்டங்களையும் அணுக் குண்டால தாக்கும் வல்லமையை இந்தியா பெறும். ஆயிரம் கிலோ எடையுள்ள குண்டுகளை இதனால் வீச முடியும். இலகுவாக தெருவில் வைத்தும் ஏவக்கூடிய வகையில் அக்னி - 5 வடிவமைக்கப்பட்டுள்ளது. அகனி - 5 இன் அடுத்த கட்டமாக செய்மதிகளைக் அழிக்கக் கூடிய ஏவுகணைகளை இந்தியா தயாரிக்கலாம்.

2012 மார்ச் 5-ம் திகதி பாக்கிஸ்த்தான் Hatf-II battlefield range ballistic missile பரிசோதனையை வெற்றீகரமாக முடித்ததாக அறிவித்திருந்தது.

கடல் தரை வான் ஆகிய மும் முனைகளிலும் இந்தியா அணுக்குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்ளும் திறனை அக்னி - 5 வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்னி - 5 மூன்று தட்டுக்கள் கொண்டதும் திரவ எரிபொருளில் இயங்கக் கூடியதுமாகும். அதன் மொத்த உயரம் 17 மீட்டர்கள்.
 மூன்று தட்டும் ஒன்றன் பின் ஒன்றாக வெடித்து தேவையான உயரத்திற்கு செல்ல உதவும். முதல் தட்டு இயந்திரம் 40 கிமீ உயரத்திற்கும் இரண்டாவது 150 கி மீ உயரத்திற்கும், மூன்றாவது 300 கி மீ உயரத்திற்கும் எடுத்துச் செல்லும்.

தமிழர்களைப் பொறுத்தவரை இந்தியா வல்லரசாக முன் நல்லரசாக வேண்டும் என்பதே.
பிந்திக் கிடைத்த செய்திகளின்படி சீரற்ற கால நிலை காரணமக இன்று918/04/2012) இந்திய நேரப்படி மாலை 7-00 மணிக்கு ஏவவிருந்த அக்னி -5 பின் போடப்ப்ட்டுள்ளது.
ஏவுகணை வெற்றீகரமாக ஏவப்பட்டது: 19/04/2012 காலை இந்தியா தனது அக்னி - 5 ஏவுகணையை வெற்றீகரமாக ஏவியது. பன்னாட்டு அணு ஆயுத மற்றும் ஏவுகணை ஒப்பந்தங்களை இந்தியா மீறுவதை மேற்குலக நாடுகள் கண்டும் காணாமல் விட்டுவிடுவதாகவும் இந்தியா தனது பலத்தை மிகைப்படுத்தி எண்ணக் கூடாது என்றும் சீன ஆளும் கட்சியின் ஏடு ஒன்று தெரிவித்தது/

Tuesday, 17 April 2012

ஆப்கான் தாக்குதல்கள் உணர்த்துவது என்ன?

ஏப்ரல் 15-ம் திகதி ஆப்கானிஸ்த்தானில் பல நகரங்களில் நன்கு ஒருங்கிணத்து நடாத்திய தாக்குதல்கள் பல செய்திகளைக் கூறுவதுடன் பல சந்தேககங்களையும் கிளப்புகின்றன. 9-11எனப்படும் 2001 செம்படம்பர் 11-ம் திகதி அமெரிக்காவில் நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்காவின் உளவுத் துறையான சிஐஏயில் பிஏடி(PAD) எனப்படும் பாக்கிஸ்த்தான் ஆப்கானிஸ்தான் பிரிவு உருவாக்கப்பட்டது. இதற்கிணங்க அமெரிக்க வெளியுறவுத்துறையும் ஆப்-பாக் கொள்கை ஒன்றை வகுத்துக் கொண்டது. அமெரிக்கா பாக்கிஸ்த்தானுடன் தனது உறவையும் புதுப்பித்துக் கொண்டது. சிஐஏயின் பயங்கரவாத எதிர்ப்பு நிலையமும் பிஏடியும் இணைந்து ஆப்கானிஸ்தானில் பல அல் கெய்தா எதிர்ப்பு நடவடிக்க்கைகள வெற்றிகரமாகச் செய்து முடித்தன.

வெறும் உளவு நிறுவனமாக இருந்து கொண்டு முதலாளித்துவக் கட்டமைப்புக்கு எதிராகச் செயற்படும் அரசுகளைக் கவிழ்த்தல் ஆட்சியாளர்களைக் கொல்லுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த சிஐஏ  9-11இற்குப்பின்னர் ஒரு படைப்பிரிவையும் தனக்கென அமைத்துக் கொண்டது. அமெரிக்காவின் படைத்துறையினர் அமெரிக்க சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அமெரிக்கப் பாராளமன்றத்திற்கு பொறுப்புக் கூறவும் வகை சொல்லவும் கடப்பாடுடையவர்கள். ஆனால் சிஐஏயின் படைப்பிரிவு அப்படி அல்ல. அப்படி ஒரு பிரிவு இருப்பதாக சிஐஏ பகிரங்கமாக சொல்வதுமில்லை. அமெரிக்க அரசைப் பொறுத்தவரை அப்படி ஒரு படைப்பிரிவு இல்லை என்றே கூறமுடியும். இதனால் சிஐஏயின் படைப்பிரிவு தன்னிச்சையாக பயங்கர நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. சிஐஏ உலகின் பல பாகங்களிலும் ஆளில்லாப் விமானத் தளங்களை அமைத்து தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராகத் தாக்குதல்களில் ஈடுபடுகிறது.

சிஐஏயின் ஆளில்லா விமானங்கள்
சிஐஏயின் படைப் பிரிவினர் ஆளில்லாப் போர் விமானங்கள் பலவற்றைத் தம்வசம் வைத்திருக்கின்றன. இவை உண்மையில் கொல்லும் எந்திரங்கள். ஆப்கானிஸ்தானிலும் பாக்கிஸ்தானிலும் அல் கெய்தாவிற்கு எதிரான வெற்றியில் இந்த ஆளில்லாப் போர் விமானங்களுக்குப் பெரும் பங்கு உண்டு. சிஐஏ மேலும் நவீன மயப்படுத்தப்பட்ட ஆளில்லாப் போர் விமானங்களை உற்பத்தி செய்வதற்கான ஆராச்சிக்குப் பெரும் பணம் செலவழித்துள்ளது. ஆப்-பாக் எல்லையில் உள்ள அல் கெய்தாவினர் பற்றிய தகவல்களை அறிந்து அதை அமெரிக்கப்படியினருக்கு அறிவித்து அவர்கள் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட முன்னர் அல் கெய்தாவினர் நகர்ந்து விடுவார்கள். தாக்குதலுக்கான பெரிய விமானங்கள் தளத்தில் இருந்து கிளம்பும் தகவல் அல் கெய்தாவினருக்குச் சென்று விடும். சிஐஏ தனது சொந்த ஆளில்லா விமானங்கள் மூலம் உடனடித் தாக்குதல்களை மேற் கொள்ளலாம். சிஐஏயின் ஆளில்லாப் போர்விமானங்கள் இதுவரை இரண்டாயிரத்திற்கும் அதிகமான அல் கெய்தா உறுப்பினர்களைக் கொன்றுவிட்டன. அல் கெய்தாவில் இணைபவர்களிலும் பார்க்க அதிகமானவர்களைத் தாம் கொல்கிறோம் என்று சிஐஏ பெருமைப்பட்டுக் கொள்கிறது. கடந்த ஒரு வருடமாக யேமனிலும் சிஐஏயின் ஆளில்லா விமானங்கள் பல தாக்குதல்களை மேற் கொண்டன. ஆப்கானிஸ்த்தானிலும் பாக்கிஸ்தானிலும் சிஐஏ தளங்களை அமைத்து இந்த ஆளில்லா விமானங்களை இயக்குகின்றது. சிஐஏயின் படைப்பிரிவினர் பாக்கிஸ்தான் அரசுக்கோ படைத்துறைக்கோ தெரியாமல் அங்கு பல தாக்குதல்கள், கைதுகள், கடத்தல்கள், கொலைகள் பலவற்றைச் செய்கின்றனர். இதன் உச்சக்கட்டம்தான் பில் லாடன் கொலை. அதைத் தொடர்ந்து இன்னொரு அல் கெய்தா தலைவர் அன்வர் அல் அவ்லாக்கியும் கொல்லப்பட்டார். பின்னர் அதியா அப் அல் ரஹ்மான் என்ற ஒரு முக்கிய அல் கெயதா தலைவரும் கொல்லப்பட்டார்.

பின் லாடன் கொல்லப்பட்ட பின்னர் 2011-ம் ஆண்டு ஜூலையில் அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏயின் முன்னாள் தலைவரும் தற்போதைய அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலருமான லியோன் இ பானெற்றா பாக்கிஸ்த்தான் பயணம் மேற் கொண்டிருந்தபோது "We are within reach of strategically defeating al-Qaeda" தந்திரோபாய ரீதியில் நாம் அல்-கெய்தாவைத் தோற்கடிக்கும் நிலையை அண்மித்து விட்டோம்" என்றார். ஆனால் ஏப்ரல் 15 திகதி பாக்கிஸ்தானில் நடந்த தாக்குதல்கள் அவரது கூற்றை மறுதலிக்கின்றன.

தலிபான் / ஹக்கானி கூட்டமைப்பு

ஆப்கானிஸ்த்தானில் ஏப்ரல் 15-ம் திகதி நடந்த தாக்குதல்கள் தலிபான் அமைப்பும் ஹக்கானி அமைப்பும் இணைந்து நடாத்திய தாக்குதல்கள் ஆகும். ஆப்கானிஸ்த்தானில் கட்டத் தொடங்கி பாதியில் நிற்கும் பல மாடிக் கட்டிடங்கள் பல உண்டு. அவற்றை தீவிரவாதிகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். பெண்கள் போல் பார்தா அணிந்து பல நகரங்களுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவினர். ஆங்காங்கு இருக்கும் சோதனைச் சாவடிகளுக்குள் அவசரமாக போக வேண்டும் என்று ஏதாவது சாட்டுக்களைச் சொல்லி காவலாளியின் கையில் சில பண நோட்டுக்களைத் திணித்துவிட்டு ஆப்கானிஸ்தானுக்குள் எங்கும் செல்லலாம். பாதியில் நிற்கும் பல் மாடிக் கட்டிடங்களில் அவர்கள் நிலை எடுத்துக் கொண்டு உழங்கு வானூர்தித் தாக்குதல்களுக்கும் கனரகத் துப்பாக்கித் தாக்குதல்களுக்கும் எதிராக சுமார் 20 மணித்தியாலங்கள் தாக்குப் பிடித்தனர். மாடிக்கட்டிடத்தின் தூண்களுக்குப் பின்னால் மறைந்திருந்து கொண்டு எறிகணை செலுத்திகள் மூலம் rocket propelled grenades தமது தாக்குதல்களை மேற்கொண்டனர். ஞாயிறு மதியத்திற்கு முன்னர் தொடங்கிய தாக்குதல்கள் திங்கள் காலைவரை தொடர்ந்தது.

ஆப்கான் தாக்குதல்கள் உணர்த்துபவை:
1. இசுலாமியத் தீவிரவாதம் முறியடிக்கப்பட முடியாத ஒன்று. அது பாலஸ்த்தீனம் முதல் பாக்கிஸ்த்தான் வரை பல உலகப் பிரச்சனைகளைத் தன்னுள் கொண்டுள்ளது. அவை சுமூகமாகத் தீர்க்காமல் திவிரவாதம் ஒழியாது.

2. உலகின் மிகப் பெரிய உளவுத் துறையாலும் தீவிரவாதிகளின் தாக்குதலை எதிர்வு கூறமுடியாது. அல்லது இப்படி ஒரு தாக்குதல் ஆப்கானிஸ்த்தான் அரசை மேலும் மேற்குலகைச் சார்ந்து நிற்கச் செய்யும் என்பதற்காக அமெரிக்கா இத்தாக்குதல்கள் நடப்பதைத் தடுக்காமல் இருந்ததா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

3. இசுலாமியத் தீவிரவாதிகள் தாம் பலமிழந்து விடவில்லை என்பதை தமது ஆதரவாளர்களுக்கு உணர்த்த வேண்டிட அவசியம் ஏற்பட்டுள்ளது

4. பல பின்னடைவுகளுக்கு மத்தியிலும் அல் கெய்தா இனித் தாக்குப் பிடிக்குமா என்பது சந்தேகம் என்று எண்ணத் தோன்றும். ஆனால் அல் கெய்தா தனது உத்திகளை மாற்றிக் கொண்டுள்ளது. அண்மைக் காலமாக அல் கெய்தா இயக்கம் தனது நடவடிக்கைகளை மட்டுப் படுத்திக் கொண்டது. ஒரு தீவிரவாத கரந்தடி இயக்கத்திற்கு எப்போது பதுங்க வேண்டும் என்று தெரியும். அல் கெய்தாவும் தலிபானும் தாம் பதுங்கிக் கொண்டு பாக்கிஸ்தானின் செல்லப் பிள்ளையாகக் கருதப்படும் ஹக்கானி இயக்கத்தை ஆப்க்கானிஸ்தானில் தாக்குதல் நடத்தத் இவ்விரு இயக்கங்களும் தூண்டின. ஹக்கானியை இந்தியா ஆப்கானிஸ்த்தானில் காலுன்றுவதைத் தடுக்க பாக்கிஸ்த்தான் பயன்படுத்துவதாகக் கருதப்படுகிறது.

5. பல நேட்டோப் படைகளின் நிலைகளிலும் தூதுவரகங்களிலும் தாக்குதல்கள் நடாத்தப்பட்ட போதும் நேட்டோப் படைகளை சேர்ந்த எவரும் கொல்லப்படவில்லை. அத்துடன் பாரிய இழப்புக்கள் எதுவும் நடக்கவில்லை. இதனால் நடந்த தாக்குதல் அல் கெய்தா/ஹக்கானியின் தாக்கும் திறனில் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

6. இனிப் பாகிஸ்த்தானும் அமெரிக்காவும் இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு எதிராக மேலும் நெருங்கிச் செயற்படுவார்கள்

7. ஆப்கானிஸ்த்தானுக்குள் பெருமளவு ஆயுதங்களை தீவிரவாதிகளால் கடத்திச் செல்ல முடியும்.

8. ஹக்கானி அமைப்பு பெரும் வளர்ச்சி கண்டு வருகிறது.

9. நேட்டோப் படைகள் விலகிய பின்னர் ஆப்கானிஸ்த்தானை இசுலாமியத் தீவிரவாத்கள் கைப்பற்றலாம்.

தொடர்புடைய பதிவு: மீண்டும் புதிய உத்தியுடன் மீசையை முறுக்கும் அல் கெய்தா/தலிபான் இயக்கங்கள்

Monday, 16 April 2012

நகைச்சுவைக் கதை: பூனூல் போட்ட பூதம்

சவுதி அரேபியாவில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு தமிழ் இளைஞன் ஒரு நாள் பாலைவனத்தில் பாதையைத் தொலைத்து விட்டு நீண்ட தூரம் நடந்து களைப்பும் தாகமும் அடைந்தான் அவன் தனக்குத் தெரிந்த காயத்திரி மந்திரம், லிங்காஷ்டகம், விநாயகர் அஷ்டகம், கந்தசஷ்டிக் கவசம் எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டே நடந்தான். கடைசியில் களைத்துப் போய் சகல சக்தியையும் இழந்து ஓர் இடத்தில் சுடு மணலில் பதை பதைத்து உட்கார்ந்தான். அவன் கையில் சுடு மணலுக்குள் ஏதோ ஒன்று தட்டுப் படுவதைப் போல் உணர்ந்தான். மணலைக் கிளறிப் பார்த்தபோது ஒரு புட்டி இருப்பதை கண்டான். அதற்குள் குடிக்க ஏதாவது இருக்கலாம் என்று அவசரமாக அப்புட்டியைத் திறந்தான் என்ன ஆச்சரியம் அதனுள் இருந்து ஒரு பூதம் வெளிவந்தது.

புட்டிக்குள் இருந்து வெளிவந்த பூதம் நன்றி மனிடா மிக்க நன்றி இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தப் புட்டிக்குள் அடைப்பட்டுக் கிடந்த என்னை மீட்டெடுத்தாய். உனக்கு வேண்டிய மூன்று வரங்களைக் கேள் என்றது. அவ்விளைஞன் எனது தாகம் தீர்க்கத் தண்ணீர் கொடு என்றான். உடனே அவனுக்கு குடிக்க தண்ணீரைப் பூதம் கொடுத்தது.

அடுத்துப் பூதம் உனது இரண்டாவது வேண்டுதல் என்ன என்றது. அதற்கு இளைஞன் எனக்கு இந்த இடத்தில் ஒரு பாலைவனச் சோலை மாளிகை ஒன்றுடன் வேண்டும் என்றது. உடனே அங்கு ஒரு பாலைவனச் சோலையும் மாளிகையும் தோன்றியது.

இப்போது பூதம் உனது மூன்றாவது வேண்டுதல் என்ன சொல் மானிட நண்பனே என்றது. அப்போதுதான் அந்த இளைஞனுக்கு தனது வறுமையான குடும்பம் நினைவுக்கு வந்தது. தனது குடும்பத்தை நல்லாக்க வேண்டும் என்று நினைத்த இளைஞன் திடீரென தன் குடும்பம் மட்டுமா வாழச் சிரமப் படுகிறது, முழுத் தமிழினமுமே வாழச் சிரமப்படுகிறதல்லவா என்று எண்ணினான். பூதத்தைப் பார்த்து உலகெங்கும் தமிழர்கள் இனியாவது நிம்மதியாக வாழ வேண்டும் என்றது.  உடனே பூதம் கோரமாக ஆத்திரத்துடன் சிரித்தது. உடனே இளைஞன் கையில் இருந்த தண்ணீர் மறைந்தது. இளைஞன் ஆச்சரியப்பட்டு நிற்க பாலைவனச்சோலையும் மாளிகையும் மறைந்தது. பூதம் அவனி எட்டி உதைத்து விட்டுச் சென்றது. அதன் திறந்த முதுகைப் பார்க்கும் போது பூதத்தின் தோளில் பூனூல் தொங்குவதை அவதானித்தான்.

இந்தக் கதையின் நீதி: பூதம் துக்ளக் சோவைப் போலவோ, இந்து ராமைப் போலவோ அல்லது சுப்பிரமணி சுவாமியைப் போலவோ இருக்கலாம்.

Sunday, 15 April 2012

வட கொரியாவின் ஏவுகணை ஏன் புஷ்வாணம் ஆகியது? - காணொளியுடன்


Rocket science என்னும் சொற்தொடர் ஆங்கிலத்தில் அடிக்கடி பலராலும் பாவிக்கப்படுகிறது. அதிக புத்திசாலித்தனம் நுட்பமான முயற்சி கடும் உழைப்பு ஆகியவை தேவைப்படும் செய்கைகளை rocket science என்று கூறுவர். வட கொரியா கண்டம் கண்டம் விட்டுப் பாயக் கூடிய ஏவுகணையை விண் வெளிக்குச் செலுத்தப் போகின்றன என்றவுடன் ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான் தென் கொரியா ஆகிய நாடுகளில் பெரும் அதிர்ச்சிகளும் ஆட்சேபங்களும் தெரிவிக்கப்பட்டன. வட கொரியாவின் ஏவுகணை ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கு விரோதமானது என்ற குற்றச் சாட்டும்  முன் வைக்கப்பட்டது.

விண்வெளிக்கு ஏவுகணைகளைச் செலுத்துவதற்கு எளிதில் தீங்கு விளைக்கும் நிலையை அடையக்கூடிய இரசாயனப் பதார்த்தங்களை கடும் அதிர்வுகளுக்கும் அதிர்ச்சிக்கும் மத்தியில் கையாளும் திறன் தேவைபடும். மிக மிகச் சிறிய தவறும் விபரீதத்தில் முடியும். இதில் ஈடுபடும் காய்ச்சி இணைக்கும்(welding) தொழிலாளர்கள் கூட மிக நுட்பமாகாச் செயற்படவேண்டும்.

இதுவரை இரசியா, ஐக்கிய அமெரிக்கா, சீனா, உக்ரேய்ன். பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம், இந்தியா, ஈரான், ஜப்பான், இஸ்ரேல் ஆகிய நாடுகள் விண்வெளிக்கு ஏவுகணைகளைச் செலுத்துவதில் வெற்றி கண்டுள்ளன.  ஈராக், பிரேசில் வட கொரியா ஆகிய நாடுகள் தோல்வியடைந்துள்ளன. ஏவுகணைத் தொழில்நுட்பம் முதலில் சீனாவில் 800 ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது. 1429இல் பிரெஞ்சுப் படையினர் ஏவுகணைகளைப் பயன்படுத்தினர். 1782இல் இந்தியாமீது படை எடுத்த பிரித்தானியத் துருப்புக்கள் மீது முனையில் இரும்புக் குண்டுகளைக் கொண்ட ஏவுகணைகள் வீசப்பட்டன. பின்னர் பிரித்தானியர் அவற்றில் ஆராய்ச்சிகள் மேற்கொண்டனர். முதலாம் உலகப் போரில் பிரித்தானியப் படைகள்
ballistic missiles என்னும் ஏவுகணைகளை ஜேர்மனிய விமானங்களுக்கு எதிராகப் பயன்படுத்தின. தொடர்ந்து ஜேர்மனியரும் ஏவுகணைகளை உருவாக்கினர். 1926இல் திரவ எரிபொருள் கொண்ட ஏவுகணைகளை அமெரிக்க உருவாக்கியது. தொடர்ந்து சோவியத் ஒன்றியம் பெரிய ஏவுகணைகளை உருவாக்கியது. அதனால் அவர்களால் விண்வெளிக்கு செய்மதியை முதலில் செலுத்தும் தொழில் நுட்பத்தைக் கொடுத்தது. நியூட்டனின் மூன்றாம் இயக்க விதி ஏவுகணைத் தொழில்நுட்பத்தின் அடிப்படையாகும்.

1988இல் இருந்து வட கொரியாவின் நான்கு ஏவுகணைப் பரிசோதனைகள் படு தோல்வியில் முடிவடைந்துள்ளன. சிலர் இவை பரிசோதனைகள் அல்ல பிராந்திய ஆதிக்க ஆர்வக் கோளாறே என்றும் சொல்கின்றனர். வட கொரியா ஏற்கனவே இரு அணுக் குண்டு வெடிப்புப் பரிசோதனைகளை முடித்துவிட்டது. மூன்றாவதற்குத் தயாராகின்றது.
உன்ஹா - 3 எனும் மூன்று தட்டுச் செயற்கை கோளை வட பியோங்யன் மாநிலத்தின் சோல்சான் மாவட்டத்தில் உள்ள தொங்சாங்ரியில் அமைந்துள்ள மேற்கு கடல் செயற்கை கோள் ஏவு மையத்தில் இருந்து வட கொரியா ஏவியது. அது 90 நொடிகளில் இருபது துண்டுகளாகச் சிதறி மஞ்சள் கடலில் விழுந்தது. வட கொரியாவின் தந்தை எனப்படும் கிம் இல் சுங்கின் 100வது பிறந்த நாளில் ஏவுகணை ஏவப்பட்டது.
இதன் காணொளி:


வட கொரியாவின் தோல்வியைப் பற்றி இப்படிக் கூறப்படுகிறது.
“Not only are they short on money, but also expertise. Developing this technology requires expertise across a range of fields, from fluid dynamics to metallurgy to materials science to flight dynamics,” says Brian Weeden, a former officer with the U.S. Air Force Space Command. “Countries that have been successful in this area all have extensive science, technology, engineering and mathematics programs to develop people with expertise in those fields.

மேலும் வடகொரியா பல தட்டுக்கள் கொண்ட ஏவுகணைத் தாயாரிப்பில் வெற்றி காணவில்லை. விண்வெளிக்கு ஏவுகணை செலுத்தி செய்மதியை மிதக்க விடவும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் அணு ஆயுதங்களை எடுத்துச் செல்லவும் பல்தட்டு ஏவுகணைத் தொழில் நுட்பம் முக்கியமானதாகும்.

பல்தட்டு ஏவுகணை. இப்பல்தட்டு தொழில்நுட்பத்தில் வட கொரியா கோட்டை விட்டது


வட கொரியாவின் ஏவுகணைச் செலுத்தலைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை கூடி வட கொரியவிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகத் தீர்மானித்தது. ஐக்கிய அமெரிக்கா தான் வட கொரியாவின் ஏழைகளுக்கு அனுப்ப இருந்த 240,000 தொன்கள் உணவை இரத்துச் செய்து விட்டது. ஏவுகணைச் செலுத்தல் தோல்வி வட கொரிய ஆட்சியாளர்கள் மீது பலத்த தாக்கத்தை ஏற்படுத்தும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...