Saturday, 11 February 2012

தேவதைகளும் தேவாங்குகளும்

மாதங்கள் பலசுமந்து
பெற்றெடுத்து
அன்புகாட்டிய அன்னை
அன்புத் தேவதை

ஆதரவு காட்டி
கண்காணித்து
ஆளாக்கிய தந்தை
பாசத் தேவதை

உதவும் உடன் பிறப்புக்களும்
உற்றாரும் நண்பன்களூம்
நேசத் தேவதைகள்

கற்பித்த்து அறிவூட்டிய
ஆசிரியர்களும்
படித்த  பாடசாலைகளும்
அறிவுத் தேவதைகள்

கண்ணெதிரில் வந்து
நினைவு பறித்து
கனவு கெடுத்து
தேவதைகள் அவை
என்று எண்ண வைத்து
ஏமாற்றிய தேவாங்குகளும்
கண்டதுண்டு

பட்டறிவும்
காலம் கடந்த ஞானமும்
உற்ற தேவதையைக்
கடைசியில் தந்தன

Friday, 10 February 2012

கஞ்சா புகைத்த Steve Jobs - அந்தரங்கங்கள் பல அம்பலம்

இப்போதைய தலைமுறையின் முன்னணி சாதனையாளர்களில் ஒருவராகக் கருதப்படும்  Steve Jobs ஐப் பற்றிய பல அந்தரங்கத் தகவல்கள் இப்போது அம்பலத்திற்கு வந்துள்ளன. 1991-ம் ஆண்டு ஜோர்ஜ் H. W. புஸ் ஐக்கிய அமெரிக்காவின் அதிபராக இருந்தபோது  Steve Jobsஐ ஏற்றுமதிச் சபையின் உறுப்பினராக நியமிக்க ஆலோசனை முன்வைக்கப்பட்டது. இதற்காக அமெரிக்க உளவகமான FBI ஆனது  Steve Jobsஐப் பற்றிய தகவல்களைத் திரட்டியது. அதன் போது  Steve Jobsஐப் பற்றி அறிந்து கொண்டவை இப்போது அம்பலப் படுத்தப் பட்டுள்ளன.

  •  Steve Jobsதந்து இலக்குகளை அடைவதற்கு தவறான வழிகளையும் கைக்கொள்வார்.
  •  Steve Jobs Hasish LSD ஆகிய போதைப் பொருட்களைப் பாவித்திருந்தார்.
  •  Steve Jobs தனது இலக்குகளை அடையும் பாதக்கு குறுக்கே நிற்பவர்களை மிரட்டுவார்.
  •  Steve Jobs உடன் வேலை செய்வது மிகவும் சிரமமான காரியம்.
  •  Steve Jobs உண்மைகளைத் திரிப்பார் யாதார்த்தங்களைப் புரட்டுவார்.
  •  Steve Jobs ஒரு நேர்மையான மனிதர் அல்லர்.
  •  Steve Jobs இற்கும் அவரது காதலியான கிரிஸ் ஆன் பெனனிற்கும் பிறந்த Steve Jobsஇன் முதற் குழந்தையான லிசாவை பராமரிப்பதற்கு உரிய செலவுகளை அவர் செலுத்தவில்ல. ஆனால் பிற்காலத்தில் தனது மகளிடம் பரிவு காட்டினார்.
  • திருமணமாகாத ஒரு பெண்ணிற்குப் பிறந்த  Steve Jobs தனது தாயாரில் அன்பு கொண்டிருந்தார்.

Thursday, 9 February 2012

கவிதை: துயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்

வெங்காயம் பார்த்து
பெருங்காமப்பட்டு
என்ன்னகம் பறிகொடுத்து
நிம்மதியை இதயத்திற்பலிகொடுத்தேன்

துயரலை மோதகமாய் 
ஆனதென் சீரகம்
உன்விழியின்னிலைக்கஞ்சி
நிற்குமென்னிலைக்காய்
என்றுமிளகு முன் மனம்.

சுக்கு நூறாயுடைந்த உள்ளம்
பக்குவப்பட ஒருவார்த்தை
மல்லிகையெடுத்த
வாய்திறந்து சொல்லாயோ

கூட்டுத்தானில்லை
குலவல்தானில்லை
பிரியானீ என்றால்
இன்பம்வருமன்றோ

இல்லை இனிச்சா தம்மடி
புகைக்கிறது நெஞ்சம்போல்
பாரொட்டா கால்கள்
பதறித்தவிக்கிறது

ரவா நான் தேடி
ஊறுவாய் உலர்த்த
சேமியா நினைவுகள்
பூமியோடு புதைய


வெங்காயம் - வெறும் உடம்பு அல்லது வெள்ளை நிற உடம்பு
மோதகம் - மோதும் இடம்
சீரகம் - சீரான உள்ளம்
பாரொட்டா - பாரில் தொடாத
சேமியா - சேமிக்காத

Wednesday, 8 February 2012

ராஜபக்சவின் இறக்குமதித் தீர்வும் ஏற்றுமதிப் பொய்யும்

பெப்ரவரி 4-ம் திகதி இலங்கையின் சுதந்திர தினவிழாவில் உரையாற்றும் போது இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக இரு பெரும் கருத்துக்களை வெளிட்டார்: 1. இலங்கை இனப்பிரச்சனைக்கான இறக்குமதி செய்யப்பட்ட தீர்வில் தங்கியிருக்க முடியாது. 2. இனப் பிரச்சனைக்கான தீர்விற்கு வெளியார் செல்வாக்கைப் பாவிக்க முடியாது. இதில் முதலாவதான் இறக்குமதி செய்யப்பட்ட தீர்வு எனக் குறிப்பிட்டது அரசியல் முதுபெரும் நரியான ஜே. ஆர் ஜயவர்த்தனவும் அரசியன் கற்றுக் குட்டியான ராஜீவ் காந்தியும் 1987இல் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கை அரசியல் அமைப்பில் செய்யப்பட்ட 13வது திருத்தத்தையே.  மேலும் ராஜபக்ச இரண்டாவதாகக் குறிப்பிடும் வெளியார் செல்வாக்கு என்பது மேற்குலக நாடுகளாலும் இலங்கைமீது மேற்கொள்ளப்படுவதாகக் கருதப்படும் இனப்பிரச்சனைக்கான தீர்வுக்கு தேவை எனக் கொடுக்கப்படும் அழுத்தம். அதாவது மஹிந்த ராஜபக்ச 13 தமிழர்களுக்குக் கிடையவே கிடையாது என்கிறார்.

பாவம் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர்
இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா தனது பயணத்தின் முடிவில் பத்திரிகையாளர்களிடம் பேசும் போது இலங்கை அதிபர் ராஜபக்ச தன்னிடம் 13-ம் திருத்தத்தின் மேல் சென்று தீர்வு வழங்குவதாக உறுதியளித்தார் என்றார். அதற்குப் பின்னர் ராஜபக்ச தனது முதல் பத்திரிகையாளர் சந்திப்பிலேயே தான் அப்படி ஒரு வாக்குறுதி இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணாவிற்கு வழங்கவில்லை என்றார். அப்படியென்றால் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் தான் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் செய்தது போல் யாரோ யாருக்கோ எழுதிய வைத்ததை கொழும்புப் பத்திரிகையாளர் மாநாட்டில் வாசித்தாரா? அல்லது இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் பொய் சொன்னாரா? அல்லது மஹிந்த பொய் சொல்கிறாரா? இதுவரை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா மௌனமாக இருப்பது ஏன்? கிருஷ்ணா 13இற்கு மேல் என்று ராஜபக்ச சொன்னதாகச் சொல்கிறார். ஆனால் ராஜபக்ச பதின்மூன்றே கிடையாது என்கிறார். இதில் இருந்து நாம் ஒரு முடிவிற்கு மட்டுமே வர முடியும். அதாவது இருவரும் சேர்ந்த்து தமிழர்களையும் உலகத்தையும் ஏமாற்றுகிறார்கள். கொழும்பு ஊடகம் ஒன்றில் எழுதிய ஒரு சிங்கள அரசியல் ஆய்வாளர் 13 கிடையாது என்று ஒன்றல்ல இரண்டல்ல ஆறு தடவைகள் கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவை இலங்கை ஏமாற்றி விட்டது என்கிறார்.மஹிந்த ராஜபக்ச தன்னிடம் 13-ம் திருத்ததிற்கும் அதிகமான அதிகாரப் பரவலாக்கத்தை மேற்கொள்வதாக உறுதியளித்தார் என இந்திய வெளிநாட்டமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா பத்திரிகையாளர்கள் மாநாட்டில் சொன்னதை கொழும்புப் பத்திரிகைகள் இருட்டடிப்புச் செய்தது ஏன்?

இலங்கையில் தமிழர்களுக்கு போர் நடக்கும் போது வெளிநாட்டில் இருந்து படைக்கலங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. படைத்துறை ஆலோசகர்கள் இறக்குமதி செய்யப்பட்டனர். அயல் நாடு ஒன்றில் இருந்து இருபதினாயிரம் படையினரும் கள்ளத்தனமாக பின்கதவால் இறக்குமதி செய்யப்பட்டனர். போரின் போது ராஜபக்சவிற்குப் பயன்பட்ட இறக்குமதி தீர்வின் போது வேண்டாம்!

இலங்கையின் இனப்பிரச்சனைக்கு முதலில் சமஷ்டி என்னும் இணைப்பாட்சி முறைமை ஒரு தீர்வாக முன்வைக்கப்பட்டது. அதைப்பற்றிப் பல பொய்களைச் சொல்லிச் சொல்லி சமஷ்டி என்பதை ஒரு கெட்ட வார்த்தையாக்கிவிட்டனர் சிங்களவர்கள். இதில் சிங்கள இடதுசாரியினர் வலது சாரியினர் மதவாதிகள் பத்திரிகையாளர்கள் அனைவருமே திறமையாகப் பொய்களைச் சொல்லினர். தமிழர்களின் ஆயுத போராட்டத்தை பயங்கரவாதப் பிரச்சனையாகப் பொய் சொல்லிச் சொல்லி முழு உலகத்தையும் நம்ப வைத்தனர். பின்னர் அதிகாரப் பரவலாக்கம் என்பது ஒரு தீர்வாக முன் வைக்கப்பட்டது. அதைப் பற்றிப் பொய் சொல்லிச் சொல்லி அதை ஒரு கெட்ட வார்த்தையாக்கினார்கள் சிங்களவர்கள். இப்போது முன்வைக்கப்படும் சொல் நல்லிணக்கம். இது இன்னும் எத்தனை நாட்கள்.

Tuesday, 7 February 2012

முழு Microsfitஐயும் மிஞ்சிய தனி iPhone

Microsfitநிறுவனத்தின் முழு வருவாயையும் ஆப்பிள் நிறுவனத்தின் iPhone வருவாய் மிஞ்சி விட்டது. பிந்திக் கிடைத்த காலாண்டு விற்பனைத் தகவல்களின்படி Microsfitநிறுவனத்தின் சகல துறைகள்( Xbox, Windows, Microsoft Office and Windows Phone) மூலமாகக் கிடைத்த வருவாய் 20.9பில்லியன் டாலர்கள் அதேவேளை ஆப்பிள் நிறுவனம் iPhone விற்பனையில் மாத்திரம் 24.4பில்லியன் டாலர்கள் வருவாயை ஈட்டியுள்ளது. 37.04 பில்லியன் ஐபோன்கள் விற்பனையாகி உள்ளன. இப்போது 100பில்லியன் டாலர்கள் காசுக் கையிருப்புடன்ஆப்பிள் உலகின் மிகப் பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

Microsfitஇன் பதிலடி
Microsfit இன் உள்ளக காணொளிப் பதிவு ஒன்று வெளியே கசிந்ததால் அவர்களின் புதிய திட்டம் அம்பலமாகியுள்ளது.ஐபோன்களின் வெற்றிக்கு அவற்றில் பாவிக்கப்படும் செயலிகள் (applications) ஆகும். இதனால் Microsfit தனது விண்டோஸ் இல் பாவிக்கடும் செயலிகள் பாவிக்கப்படக் கூடிய வகையில் தனது விண்டோஸ் கைப்பேசிகளை மாற்றி அமைக்க விருக்கிறது. Microsfit நோக்கியா நிறுவனத்துடன் இணைந்து செயற்படுகிறது. அடுத்த விண்டோஸ் கைப்பேசிகள் ஆரம்பத்தில் ஒரு இலட்சம் செயலிகள் உடையதாக இருக்கும். அத்துடன் கடைகளில் பொருட்களை வாங்கி விட்டு விண்டோஸ் கைப்பேசி மூலம் பணத்தைச் செலுத்தும் முறைமையான NFC (near field communication) உள்ளடக்கப்பட்டிருக்கும்.


2015இல் ஐபோன்களை விண்டோஸ் கைபேசிகள் மிஞ்சும்
Microsfitஇன் புதிய திட்டங்களைப் பார்த்த தொழில்நுட்ப ஆய்வாளர்கள் 2015இல் விண்டோஸ் கைப் பேசிகள் ஐபோன்களை மிஞ்சும் என்கின்றனர். சென்ற ஆண்டு விண்டோஸ் கைப்பேசிகள் மொத்த smartphone விற்பனையில் 2% மட்டுமே. இது

Monday, 6 February 2012

ஆளில்லாப் போர்விமானங்கள்: அமெரிக்காவின் எல்லை தாண்டிய பயங்கரவாதம்

இனிவரும் காலங்களில் போர் முனையில் ஆளில்லாப் போர்விமானங்கள் பெரும் பங்குகள் வகிக்கவிருக்கின்றன. பல நாடுகளும் ஆளில்லாப் போர்விமானங்கள் தொடர்பாக பல ஆராய்ச்சிகளை மேற் கொள்கின்றன. ஆரம்பத்தில் வேவு பார்க்கவும் கண்காணிக்கவும் பயன்படுத்தப்படுத்தப்பட்டு வந்த ஆளில்லாப் போர் விமானங்கள்  இப்போது மேலும் நவீன மயப்படுத்தப்பட்டு தாக்குதல்களுக்கும் பயன்படுத்தப் படுகின்றன. ஆப்க்கானிஸ்தானிலும் பாக்கிஸ்தானின் வட பகுதியிலும் 2006-ம் ஆண்டிலிருந்து அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்கள் ஆயிரக்கணக்கான தீவிரவாதிகளைக் கொன்றுள்ளன.

அமெரிக்காவின் உளவுத் துறையான சிஐஏயும் அமெரிக்க சார்புப் படைத்துறை விமர்சகர்களும் அமெரிக்கா தனது ஆளில்லாத விமானங்கள் மூலம் அண்மைக்காலங்களாக தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் ஈட்டிவரும் வெற்றிகள் பற்றி மார்தட்டிப் பேசி வந்தனர். இசுலாமியத் தீவிரவாத அமைப்புக்களின் பல முக்கிய தலைவர்கள் உட்படப் பலரை அமெரிக்க ஆளில்லா விமானங்கள் கொன்றன. நவம்பர் 2-ம் திகதி சோமாலியாவில் 20 பேரை அமெரிக்க ஆளில்லா விமானங்கள் கொன்றன. கடாஃபி இறுதியாக 70இற்கு மேற்பட்ட வாகனத் தொடரணியில் தப்பி ஓட முயன்றபோது அதன் மீதான முதல் தாக்குதல் அமெரிக்க ஆளில்லா விமானங்களாற்தான் மேற் கொள்ளப்பட்டன.

பாக்கிஸ்த்தானிலும் யேமனிலும் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் பல இசுலாமியத் தீவிரவாதிகளையும் அவர்களின் முக்கிய தலைவர்களையும் கொன்றுள்ளது. அமெரிக்க உளவுத்துறையான சிஐஏயும் சொந்தமாக ஆளில்லா விமானத் தளங்களை உலகின் பலபாகங்களிலும் இரகசியமாக அமைத்துள்ளது. 2012இல் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தனது படைகளை விலக்கிக் கொள்ளும் முடிவு ஆளில்லா விமானங்கள் மூலம் எதிர்காலப் போரை முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கையுடனேயே எடுக்கப்பட்டது. ஆளில்லாப் போர் விமானங்கள் அமெரிக்காவின் மரபு வழிப்போரிலும் திரை மறைவுப் படை நடவடிக்கைகளிலும் முக்கிய இடம் வகிக்கிறது. கடற் கொள்ளையர்களுக்கு எதிராகவும் அமெரிக்கா ஆளில்லா விமானங்களை களமிறக்கியுள்ளது.
 அப்பாவிகள் கொலை
அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்கள் பல அப்பாவி மக்களையும் கொன்று குவித்துள்ளன என்று பாக்கிஸ்தானில் மக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். பாக்கிஸ்த்தானின் ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பிரதேச நகரான வாரிஸ்தானில் பல அப்பாவிகளை அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்கள் கொன்றுள்ளன. ஆளில்லாப் போர் விமானங்களில் இருந்து பார்க்கும் போது ஒரு இசுலாமியத்தீவிரவாதிக்கும் ஒரு சாதாரண இசுலாமியக் குடி மகனுக்கும் வித்தியாசம் காணமுடியாது என்கிறார் மிஸ்ரா ஷாசாத் அக்பர் என்னும் பாக்கிஸ்தானியச் சட்டவாளர்.

ஊர்ப் பிணக்கைத் தீர்க்கக் கூடியவர்கள் கொலை
வாரிஸ்த்தானில் ஒரு பகுதியில் குரோமைட் சுரங்கம் தொடர்பாக இரு குழுக்களிடை நடந்த மோதலைத் தவிர்க்க அவர்கள் பேச்சு வார்த்தைக்காக ஒரு இடத்தில் ஒன்று கூடினர். அவர்கள் கைகளில் ஆயுதங்கள் இருந்தன. அங்கு சென்ற  அமெரிக்க ஆளில்லா விமானம் அவர்கள் தலிபான்கள் எனக் கருதி அவர்கள் மீது மூன்று ஏவுகணைகளை வீசியது. நாற்பது அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.

அமெரிக்க அரச திணைக்களத்திடம் ஆளில்லாப் போர் விமானங்கள்
அண்மையில் அமெரிக்க அரச திணைக்களம் தனக்கென்று சில ஆளில்லாப் போர் விமானங்களை உருவாக்கியுள்ளதாகச் செய்திகள் வெளிவந்தன. ஏற்கனவே அமெரிக்க உளவுத்துறையான் சிஐஏ தனக்கென்று ஒரு படையணியை உருவாக்கி தனது நடவடிக்கைகளை அமெரிக்கச் சட்டத்திற்குப் புறம்பாக செய்துவருகிறது. அமெரிக்கப் படைகள் செய்யும் நடவடிக்கைகள் அமெரிக்க சட்ட வரையறைகளுக்கு உட்பட்டவை. ஆனால் இந்த சிஐஏயின் படைநடவடிக்கைகள் எந்த ஒரு சட்ட வரையறைக்கும் அப்பால் பட்டவையாகவே இருக்கின்றன. அமெரிக்க அரச திணைக்களம் எப்படி தனது ஆளில்லாப் போர்விமானங்களைப் பாவிக்கப் போகின்றன என்பதைப் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

பன்னாட்டு மன்னிப்புச் சபை
பன்னாட்டு மன்னிப்புச் சபையின் ஆசிய-பசுபிக் பிராந்திய இயக்குனர் சாம் ஜவாரி அவர்கள் ஐக்கிய அமெரிக்கா தனது ஆளில்லாப் போர் விமானங்களின் நடவடிக்கைகளின் சட்டபூர்வத்தைப் பற்றி விளக்க வேண்டும் என்றும் அவற்றின் தாக்குதல்களின் போது பொது மக்கள் கொல்லப்படாமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றித் தெரிவிக்க வேண்டும் என்றும் ஃபெப்ரவரி முதலாம திகதியன்று தெரிவித்தார்.  இது பற்றிக் கருத்துத் தெரிவித்த அமெரிக்க அதிபர் பராக ஒபாமா சிஐஏயின் ஆளில்லாவிமானங்கள் இனங்காணப்பட்ட பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவதாகத் தெரிவித்தார். இனங்காணப்பட்ட பயங்கரவாதிகள் நீதி விசாரணைக்கு உட்படுத்தாமல் கொல்ல முடியுமா? கடந்த 4 ஆண்டுகளாக பன்னாட்டு மன்னிப்புச் சபை மௌனமாக இருந்தது ஆச்சரியமே!

எல்லை தாண்டிய பயங்கரவாதம்
உலகத்தின் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேற்பட்ட நாடுகளில் ஐக்கிய அமெரிக்காவின் ஆளில்லாப் போர் விமாங்கள் ஊடுருவி வேவு பார்க்கின்றன. ஒளிப்பதிவு செய்கின்றன. இவை அந்த நாடுகளின் இறைமையை மீறும் செயலாகும். பராக் ஒபாமா பதவிக்கு வந்த பின்னர் அறுபது பிள்ளைகள் உட்பட ஐநூறிற்கு மேற்பட்ட பொதுமக்கள் ஆப்கானிஸ்தான் பாக்கிஸ்த்தான் எல்லைப் பிரதேசத்தில் கொல்லப்பட்டுள்ளனர். தனது படையினரஈராக்கில் இருந்து விலக்கிக் கொண்டபின்னர் ஐக்கிய அமெரிக்கா அங்கு பெரும் ஆளில்லாப் போர்விமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பது தெரிய வந்தமை ஈராக்கிய ஆட்சியாளர்களை ஆத்திரமூட்டியுள்ளது. அமெரிக்கப்படைகள் மற்ற நாட்டுக்குள் புகுந்து வேவு பார்ப்பதும் போராளிகளைக் கொல்வது ஓர் எல்லை தாண்டிய பயங்கரவாதமே.

Sunday, 5 February 2012

கல்லூரி நகைச்சுவைகள்

ஹாவார்ட் பல்கலைக் கழகத்தில் வணிகத்துறைப் பேராசிரியர் தனது மாணவர்களிடம் கேட்ட கேள்வி:
ஒரு வியாபாரத்தை விரிவாக்குவட்தற்கு  எங்கிருந்து நிதி பெறலாம்?
இதற்கு மாணவர்களின் பதில்கள்:
அமெரிக்க மாணவன்: பங்குச் சந்தையில் இருந்து
பிரித்தானிய மாணவன்: வங்கிகளிடம் இருந்து
அரபு நாட்டு மாணவன்: தந்தையிடம் இருந்து
இந்திய மாணவன்: சமையலறையில் காஸ் வெடித்து மனைவி இறக்க. அடுத்த திருமணம் செய்வதன் மூலம்.


பேராசிரியர் எப்படி லிஃப்டில் மாட்டுப்பட்டார்?
அதற்குள் இருந்த கண்ணாடியில் தன்னைப் பார்த்து இந்த ஆளை இதற்கும் முன்னர் எங்கோ கண்டிருக்கின்றேனே என்று யோசித்துக் கொண்டிருக்கையில் மாட்டுப்பட்டார்.

தேர்வு மண்டபத்தில் சிரமப்படும் மாணவர்களுக்கான சிறந்த மூச்சுப் பயிற்ச்சி
வினாத்தாளைப் புரட்டி வைக்கவும்
கால்களை நீட்டிக் கொள்ளவும்
நிமிர்ந்து நேராக உட்காரவும்
கண்களை மூடவும்
மூச்சை மெதுவாக உள் இழுக்கவும்
மெதுவாக வெளிவிடவும்
அடுத்த ஆண்டு என்று ஒன்று இருக்கிறது
என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளவும்.

தாய்: மகனே நேரமாகி விட்டது எழும்பிக் கல்லூரிக்கு போ.
மகன்: எனக்குக் கல்லூரிக்குப் போகப் பிடிக்கவில்லை
தாய்: ஏன் பிடிக்கவில்லை என்பதற்கு குறைந்தது இரு காரணங்களாவது சொல்லு.
மகன்: 1. ஒரு மாணவர்களுக்கும் என்னைப் பிடிக்கவில்லை.
             2. ஒரு விரிவுரையாளர்களுக்கும் என்னைப் பிடிக்கவில்லை.
தாய்: அது ஒன்றும் பெரிய பிரச்சனையில்லை நீ போய்த்தான் ஆக வேண்டும்.
மகன்: நான் ஏன் போக வேண்டும் என்பதர்கு இரு காரணங்காளாவது சொல்லுங்கள் அம்மா.
தாய்: 1. உனக்கு 57 வயது. 2. கல்லூரி முதல்வர்.TEACHER: "It's Better To Fail Than To Cheat"
Student :No,It's Better To Cheat Than To Repeat"

கடைசிப் பந்தில் ஆறடித்து வெல்வதுமுண்டு
கடைசிப் பந்தில் விக்கட் வீழ்த்தி வெல்வதுமுண்டு
கடைசி நிமிடத்தில் கோல் அடித்து வெல்வதுமுண்டு
கடைசி நாள் இரவு படித்து தேர்வில் சித்தியடைவதுமுண்டு

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...