Wednesday, 7 November 2012

ஜெனிவாவில் தமிழர்களின் காலை இந்தியா ஏன் வாரியது?

இலங்கைத் தமிழர்களின் காலை இந்தியா வாருவது, இலங்கைத் தமிழர்களுக்கு அள்ளி வைப்பது, கொள்ளி வைப்பது இன்று நேற்றல்ல தொடர்ந்து பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. 2012 மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைக் கழகக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை அமெரிக்காவுடன் சேர்ந்து இலங்கை மீதான தீர்மானத்தின் கடுமையைக் குறைத்தது. அண்மைக் காலங்களில் இந்தியா இலங்கையின் சில்லறைக் கைக்கூலி போல காவல் நாய் போலச் செயற்படுகிறது.

இந்தியா தமிழர்களுக்குச் செய்த துரோகங்களைப் பற்றி கீழுள்ள இணைப்புக்களில் காணவும்:
இந்தியத் துரோகம் - 1
இந்தியத் துரோகம் - 2

இலங்கையின் மனித உரிமை நிலை தொடர்பாக ஜெனிவாவில்உள்ள ஐநா மனித உரிமைக் கழக்த்தில் நவம்பர் முதலாம் திகதி முதல் ஐந்தாம் திகதி வரை நடந்த அகில காலந்தர மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது.  இதில் இலங்கையின் மனித உரிமை தொடர்பாக ஆய்வு செய்யும் மூவர் குழுவில் ஸ்பெயின் பெனின் ஆகிய நாடுகளுடன் இந்தியாவும் இடம்பெற்றிருந்தது. நவம்பர் முதலாம் திகதி இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக ஒவ்வொரு நாடுகளும் தமது கருத்துக்களைத் தெரிவித்தன.கலாந்தர மீளாய்வு என்றால் என்ன என்பது பற்றி அறிய கீழ்க் காணும் இணைப்பைச் சொடுக்கவும்:
http://veltharma.blogspot.co.uk/2012/09/universal-periodic-review.html


நவம்பர் முதலாம் திகதி உரையாற்றிய இந்தியா இலங்கையின் அரசியலமைப்பிற்கான 13வது திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டும், வடக்கு மாகாணத்திற்கான தேர்தல் நடாத்தப்படவேண்டும், வடக்குக் கிழக்கில் படைகளை அகற்றுதல், உயர்பாதுகாப்பு வலயங்களைக் குறைத்தல், காணிப்பிரச்சனை தீர்த்தல், மனித உரிமை மீறல்கள் தொடர்பான நம்பகரமான விசாரணை, மீளிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுதல் போன்ற பரிந்துரைகளைச் செய்தது. இந்தியப் பிரதிநிதியின் உரையை கீழுள்ள காணொளியின் 2மணி 6நிமிடமளவில் உள்ளது:நவம்பர் முதலாம் திகதி இலங்கைக்குப் பரிந்துரைகளைச் செய்த இந்தியா நவம்பர் 5-ம் திகதி சமர்ப்பித்த இறுதி அறிக்கையில் தனது பரிந்துரைகளை நீக்கிவிட்டது. இது ஜெனிவா மனித உரிமைக் கழகத்தில் இருந்தவர்களை உலுக்கிவிட்டது. அங்கிருந்த பலரும் இலங்கைக்கும் இந்தியாவிற்கும்  இடையில் ஏதோ ஒரு இரகசிய உடன்பாடு ஏற்பட்டிருக்க வேண்டும் என்றே நம்புகின்றனர். கொழும்பில் உள்ள சிங்கள ஆய்வாளர்களையும் இது ஆச்சரியப்படுத்தியது. அமெரிக்கா சுவிஸ்லாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் சில நாடுகள் முன்னுக்குப் பின்னர் முரணாக நடந்து கொள்கின்றன என்று இந்தியாவை மறைமுகமாகச் சாடின. இந்தியாவிற்கு இலங்கை என்ன செய்தது இப்படி இந்தியா குத்துக்கரணம் அடிக்க என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் போது வந்த செய்தி:

  • இந்தியப் படைத் தளபதி விக்ரம சிங் இலங்கை பயணம். அவருடைய பயண தேதியை இரு நாட்டு அதிகாரிகளும் கலந்து பேசி முடிவு செய்வார்கள். இந்தியா-இலங்கை ராணுவத்துக்கு இடையே ராணுவ உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இந்த சுற்றுப் பயணத்தின்போது முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது.
மீண்டும் தமிழர்கள் முதுகில் இந்தியா குத்தியது

மற்ற நாடுகள் இலங்கைக்குச் செய்த பரிந்துரை:பிரான்ஸ்1 comment:

Anonymous said...

நேற்று மட்டுமல்ல இன்று மட்டுமல்ல நாளையும் இந்தியா இதைத்தான் செய்யும். அதை விடுத்து இந்தியா அப்படிச் செய்யும் இப்படிச் செய்யும் என கற்பனை பண்ணிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. இன்று நேற்றா முதுகில் குத்தியது. என்று ஒரு மான ரோசமுள்ள தமிழ் உணர்வுள்ள ஒரு தலைவன் தமிழகத்திற்குக் கிடைக்கின்றானோ அன்று தான் தமிழக, ஈழ தமிழருக்கு விமோசனம். அது வரை இந்தியா புடுங்கும் என்று நினைப்பது கானல் நீரை தாகத்திற்கு அருந்தமுயற்சிப்பது போலவே இருக்கும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...