Monday, 19 November 2012

எம்மைக் கொல்லும் எமது பழக்கங்கள்

மது அருந்துதல், புகைப்பிடித்தல் கண்ட உணவுகளையும் அருந்துதல் மட்டும் எமது உடல் நலனுக்கு கெடுதலான பழங்கங்கள் அல்ல. வேறும் பல பழங்கங்கள் எமது ஆரோக்கியத்திற்கு கெடுதல் விளைவிக்கக் கூடியவை. நாம் கெடுதல் இல்லை என்று நினைக்கும் சில பழக்கங்கள் எமக்கு உயிராபத்து விளைவிக்கக் கூடியவை.

1. பொய் சொல்லக் கூடாது தாத்தா
நீங்கள் வாங்கிய ஆடைகளின் விலைகளைப் பற்றியோ, உங்கள் வயதைப்பற்றியோ பொய் சொல்வது அல்லது உங்கள் நண்பர்களைப்பற்றி பொய்யாகப் புகழ்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு கெடுதலானது. நொற்றே டேம் பல்கலைக்கழகத்தில் செய்த ஆராய்ச்சியின் படி பொய் சொல்வது உங்கள் மன அழுத்தத்தைக் கூட்டும், தலையிடி வரச் செய்யும், தொண்டைக் கரகரப்பு ஏற்படுத்தும்.

2. நீங்கள் வேலை செய்யும் மேசையில் இருந்த படியே உண்ணுதல்
உங்கள் பணிமனையில் உங்கள் மேசையில் இருந்த படியே உங்கள் மதிய உணவை உண்ணுதல் உங்கள் ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல. இது உங்கள் மன அழுத்த மட்டத்தை உயர்த்தும். உங்களை அதிகம் உண்ணச் செய்யும். உங்களின் உடற் செயற்பாட்டையும் குறைக்கும். அரிசோனா பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட ஆய்வின் படி உங்கள் பணி மனை மேசையில் அதிக பக்டிரியாக்கள் இருக்கின்றன என்று அறியப்பட்டுள்ளது. பணிமனை மேசையில் கழிப்பறை இருக்கையில் இருப்பதிலும் பார்க்க பல மடங்கு நுண் கிருமிகள் இருக்கின்றனவாம்.

3. வீட்டு வேலைகள்
பணிமனையில் இருந்து வீடு திரும்பியவுடன் வீட்டு வேலைகளில் ஈடுபடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு கெடுதலானது. வீட்டு வேலைகளை வீட்டில் உள்ள மற்றவர்களுடன் கூடிச் செய்யுங்கள்.

4. ATM machines 
வங்கிகளில் உள்ள ATM machines இல் அடிக்கடி பணம் எடுப்பது ஆரோக்கியத்திற்கு கெடுதல். பணம் எடுத்தால் வங்கியில் பணம் குறைவதால் ஆரோக்கியம் கெடுகிறது என்று நினைக்க வேண்டாம். ATM machines அதிக அளவு நுண் கிருமிகள் இருக்கின்றன. அவை உங்கள் ஆரோக்கியத்திற்கு கெடுதலானது. ATM machines பாவித்தவுடன் கைகளை நன்கு சோப் போட்டுக் கழுவுங்கள்.

5. உங்கள் திட்டங்களை அடிக்கடி ஒத்தி வைத்தல்
உங்கள் நடவடிக்கைகளை நன்கு திட்டமிடவும். பின்னர் இயன்ற அளவு அத்திட்டத்தின் படி நடந்து கொள்ளவும். செய்ய வேண்டியவற்றை ஒத்தி வைக்காமல் செய்யவும். திட்டங்களை நேரத்திற்கு முடிக்காததால் உங்கள் சமூக வாழ்வு பாதிக்கப்படுகிறது. அதனால் உங்கள் ஆரோக்கியத்திற்கு கெடுதல் ஏற்படுகிறது.

உங்கள் ஆரோக்கியத்திற்கு உகந்த சில பழக்கங்கள்:

1. அடிக்கடி ஒளிப்படம் எடுத்தல்.
உங்கள் மகிழ்ச்சியான தருணங்களை ஒளிப்படம் எடுத்துப் பதிவு செய்து வைத்துக்கொள்ளுதல் நல்லது. பின்னர் அதை திரும்பிப் பார்க்கும் போது உங்கள் மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.

2. சிறு கோபம் பெரும் போகம்
அவ்வப் போது உங்கள் நியாயமான கோபங்களை அடக்காமல் வெளிப்படுத்துவது உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கும்.

3. சிறு மன அழுத்தத்திற்கு உள்ளாவது சிறந்தது.
அவ்வப் போது சிறு "டென்ஷன்" இற்கு உள்ளாவதும் சிறந்தது. அது உங்கள் நோய் எதிர்ப்பு வலுவை அதிகரிக்கும்.


4. வலையமப்பா மூளைக்கு வலுவப்பா
சமூக வலயத் தளங்களில் நேரம் செலவழிப்பதும் பிரபலங்கள் பற்றிய கிசு கிசுக்களை வலயத் தளங்களில் அறிந்து கொள்வதும் மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது என்கின்றனர் லொஸ் ஏஞ்சலிஸில் உள்ள கலிபோர்ணியா பல்கலைக் கழக்த்தினர். நடுவயதினருக்கும் வயதானவர்களுக்கும் இவை மூளை முதுமை அடைவதைத் தடுக்குமாம். அதுமட்டுமல்ல வலய உலாவருபவர்களின் மூளையின் பல பகுதிகள் செயற்பாட்டிற்கு உள்ளாகின்றன. அது தீர்மானம் எடுக்கும் திறனையும் ஞாபக வலுவையும் மொழித்திறனையும் அதிகரிக்கின்றது.


5 அழுது தீருங்கள்
அவ்வப்போது கண்ணீர் சிந்துவதும் ஆரோக்கியத்திற்கு உகந்தது. புளோரிடாப் பல்கலைக் கழக்த்தின் ஆய்வின் படி 88.8%மானவர்கள் அழுதபின்னர் ஆறுதலடைகின்றனர். மன அழுத்தத்தின் போது எமது உடலில் உருவாகும் வேதிப் பொருட்கள்(chemicals) அழுவதால் அகற்றப்படுகின்றனவாம். தொலைக்காட்சி நாடகங்கள் அல்லது திரைப்படங்கள் பார்த்து அழுவதும் இதில் அடங்குகின்றன.

6. திருமணம் தரும் நலம்
பல ஆய்வுகள் திருமணமானவர்கள் திருமணம் ஆகாதவர்களிலும் பார்க்க  நீண்ட காலம் வாழ்வதாகத் தெரிவிக்கின்றன. பிள்ளைகள் இருப்பது இன்னும் சிறப்பாம். 1.5 மில்லியன் பேர்களை வைத்துச் செய்த ஆய்வின்படி இரு பிள்ளைகள் இருக்கும் தாய்மார்களுக்கு புற்று நோய் இருதய நோய் போன்றவை வருவது குறைவாம்.


7 வீட்டு வேலை சிறந்த உடற்பயிற்ச்சி
Cancer Research UK செய்த ஆய்வின்படி உடற்பயிற்சி செய்வதிலும் பார்க்க வழமையான் வீட்டு வேலைகள் செய்வது உடலுக்கு ஆரோக்கியமானது.

1 comment:

Easy (EZ) Editorial Calendar said...

நல்ல பயனுள்ள தகவல்கள்.....பகிர்வுக்கு மிக்க நன்றி........

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...