அது ஒரு பன்னாட்டு ஆட்சித்தலைவர்கள் கலந்து கொள்ளும் மாநாட்டை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓவியக் கண்காட்சி. அங்கிருந்த ஓவியங்களைப் பல தலைவர்களும் பார்த்து பலவிதமாகக் கருத்துத் தெரிவித்துக் கொண்டிருந்தனர். கருத்துக்கள் பலதரப்பட்டதாகவும் ஒன்றுக்கு ஒன்று முரண்படுபவையாகவும் இருந்தன. பலரும் தம் நாட்டுப் பெருமைகளைப் பறைசாற்றினர்.
அங்கு ஆதாமும் ஏவாளும் ஆடையின்றி ஒரு இலையால் மட்டும் தமது உடலில் சிறு பகுதியை மட்டும் மூடிக் கொண்டு கையில் ஒரு சிறிய கடித்த ஆப்பிளுடன் நின்று கொண்டிருந்த ஓவியம் பலரையும் கவர்ந்தது. அதைப் பார்த்த பிரித்தானியப் பிரதமர் அவர்கள் இருவரும் அமைதியாகவும் நிதானமாகவும் இருப்பதாக அவர்கள் முகம் பிரதி பலிக்கிறது. அதனால் அவர்கள் பிரித்தானியர்கள் என்றார்.
ஆனால் பிரெஞ்சு அதிபர் அதை ஒத்துக் கொள்ளவில்லை. ஆதாமும் ஏவாளும் ஆடையின்றி இருக்கின்றனர். மிகவும் கவர்ச்சிகரமாகத் தோற்றமளிக்கின்றனர். அவர்கள் முகத்தில் காதலும் காமமும் வடிகிறது. அதனால் அவர்கள் பிரெஞ்சு நாட்டினர் என்றார்.
அவர்கள் இருவரையும் பார்த்து ஏளனமாக நகைத்தார் இந்தியப் பிரதமர். நன்றாக பாருங்கள் அந்த ஓவியத்தை அவர்கள் இருவருக்கும் உடுக்க உடையில்லை. இருக்க வீடில்லை. உண்பதற்கு ஒரு சிறுபழத்தைத் தவிர வேறு எதுவுமில்லை. வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு நச்சுப் பாம்பு அவர்களை வழி நடத்துகிறது. ஆனாலும் அவர்கள் வாழுமிடம் புனித பூமி எனப்படுகிறது. ஆகையால் அவர்கள் நிச்சயம் இந்தியர்களே என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...


-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
-
ஆரம்பத்தில் கிரேக்கர் கருங்கடலை உபசரிப்பில்லாக் கடல் என அழைத்தனர். அதனூடாக பயணிப்பது சிரமம் என்பதாலும் அதன் கரையோரங்களில் வாழ்பவர்கள் எத...
-
ஒரு நாட்டில் ஒரு அரசன் ஒரு அரசி ஒரு மந்திரி ஒரு அரச வைத்தியர் இருந்தனர். அரசிக்கு அழகான மார்பு. அதன் மேல் மந்திரிக்கு தீராத மோகம். தனது ஆசை...

2 comments:
மிக அருமையாக உள்ளது
அட்டகாசமான பதிவு நண்பரே..
Post a comment