Thursday, 27 September 2012
கலையும் நாழிகையில் கலையாவண்ணமாக
என்னருகில் நீ இருந்தால்
என் நினைவில் நீ இருந்தால்
என் கனவில் நீ இருந்தால்
கற்பனைகள் சிற்கடிக்கும்
கவி வரிகள் வழிந்தோடும்
பார்வை மேகங்களின் மோதல்
இதயத்தில் இடியும் மின்னலும்
காதல்
அந்திச் சாரலில் கைகோர்த்து
நடக்கும் நாள் என்னாளோ
காதோரக் குழல் காற்றோடும
ஆடும் அழகு பார்க்கும் நாள் என்னாளோ
கலையும் நாழிகையில்
கலையாவண்ணமாக
உன்னோடு நானாக
இக் கவி கலையாக் கலையாக
நெஞ்சில் அழகுச் சிலையாகப்
படிந்தது உன் அழகு முகம்
உடலெங்கும் பெரும் கிளர்ச்சி செய்வதால்
உணர்விலே கொடும் தீப்பற்ற வைத்ததால்
இதயத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தியதால்
உன் முத்தமும் அரபு வசந்தம் போலடி
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...

-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
-
“எரிபொருள் இன்றி கைவிடப்பட்ட போர்த்தாங்கிகள், உணவின்றி தவிக்கும் படையினர், சுட்டு வீழ்த்தப்பட்ட விநியோக விமானங்கள்” இப்படிப்பட்ட செய்திகள...
-
உலகத்தி லேயே சீனர்கள் அதிகம் வெறுக்கும் நாடாக ஜப்பான் இருக்கின்றது. 1937இல் இருந்து 1945வரை ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையில் கடும் போர்...
2 comments:
மிக அருமையான கவிதை..பகிர்வுக்கு நன்றி...
நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
மிக அருமையான கவிதை வரிகள்.....உங்கள் பகிர்வுக்கு நன்றி.....
நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
Post a Comment