Tuesday, 25 September 2012

சிறந்த ஃபேஸ்புக் தத்துவங்கள்

 ஃபேஸ்புக் இப்போது  பலர் தினமும் படிக்கும் ஒரு புத்தகமாக மாறிவிட்டது. இதில் நல்லவையும் உண்டு. சிறந்த படைப்பாளிகளின் ஆக்கங்கள். நாளைய சிறந்த படைப்பாளிகள் பலர் அதில் இருக்கின்றனர். பல நகச்சுவைகள் மிளிரும். தத்துவங்கள் அங்கு தும்பு பறக்கும். Petrol விலை அதிகரித்ததால் தன் வயித்தெரிச்சலை ஒருவர் இப்படிக் கொட்டுகிறார்: If your girlfriend complains that you never take her anywhere expensive...take her to the petrol station.

e-bayஐ இப்படிக் கலாய்த்தார்கள்: ʎɐqǝ uo pɹɐoqʎǝʞ ɐ ʎnq ı ǝɯıʇ ʇsɐן ǝɥʇ sı sıɥʇ

McDonald இப்படிக் கலாய்த்தார்கள்: If McDonald's is the official restaurant of the Olympics, cigarettes might as well be the official medicine of cancer.

வாழ்க்கை என்பது இருசில்லு வண்டி ஓட்டுவது போல். சமநிலை பேணு வேண்டுமாயின் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும்.

உறவு என்பது நல்ல புத்தகம் போல். உருவாக்க பல நாட்கள் எடுக்கும். ஒரு சில நிமிடங்களில் தீக்கிரையாக்கி விடலாம்.

Please don't wear skinny jeans, if you don't have any skinny genes.

என் நினைவு என்பது கைப்பேசியின் உள்பெட்டகம்(Inbox) போல் இருந்தால் எவ்வளவு நிம்மதியாக இருக்கும். தேவையற்றவற்றை அவ்வப்போது அழித்து விடலாம்.

உடலின் அழகிய வளைவு புன்னகைக்கும் உதடே.

தம்மைப் பற்றி நல்லது சொல்ல ஒன்றும் இல்லாதவர்களே உன்னைப்பற்றி குறை சொல்லுவார்கள்.

சிறந்த உறவு என்பது நெருங்கிய நண்பர்களைப் போல் கருத்துக்களைப் பரிமாறும்; நெருங்கிய கணவன் மனைவிபோல் விவாதிக்கும்; தந்தையைப் போல் பாதுகாக்கும்; அன்னையைப் போல் அன்பு காட்டும்; சகோதரர்களைப் போல் ஆதரவு செய்யும்.

நேற்று என்பது அனுபவம். இன்று என்பது சோதனை. நாளை என்பது எதிர்பார்ப்பு. சோதனையில் உங்கள் அனுபவத்தை நன்கு பாவித்து உங்கள் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுங்கள்.

உங்கள் ஒவ்வொரு மகிழ்ச்சிக்கும் கடவுளுக்கு நன்றி சொல்லாவிடில் உங்கள் கவலைகளை கடவுளிடம் முறையிடும் உரிமை உங்களுக்கு இல்லை.

உங்கள் பேச்சுக்கள் நிலைமையை விபரிக்க மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.

உங்கள் உடல் தைரியத்தை உங்களால் எவ்வளவு சுமை தூக்க முடியும் என்பதை வைத்து அளவிடலாம். உங்கள் மனத் தைரியத்தை உங்களால் எந்த அளவு தாங்க முடியும் என்பதை வைத்து அளவிடலாம்.

வாழ்க்கை என்பது உங்கள் உணர்வுகளை ஒளித்து வைக்கக் கூடிய அளவு நீண்டதல்ல. உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தத் தயங்காதீர்கள்.

உங்கள் எதிரியைப் பழிவாங்கச் சிறந்த வழி நீங்கள் மகிழ்ச்சியாய் இருப்பதே. நீங்கள் மகிழ்ச்சியாய் இருப்பது உங்கள் எதிரியைக் கலங்கடிக்கும்.

ஒருவர் தன் மனைவியின் நச்சரிப்பை இப்படிக் கொட்டுகிறார்: I was furious when I found my wife's profile on an on-line dating website. That lying bitch isn't, 'Fun to be around.'

If you treat me like an option, I’ll leave you like a choice.

சீன மக்களின் எல்லாரினதும் முகம் ஒரேமாதிரியாக இருக்கிறது என்று பல மேற்குலகினர் நினைக்கிறார்கள். அவர்கள் சொல்லுவது:
1. I think the woman who invented the phrase 'All Men Are The Same' was a chinese woman who lost her husband in the crowd. 
2. Hardest job in the world: Police sketch artist in China.


சிலவற்றை மொழி பெயர்த்தால் நன்றாக இருக்காது.(எனது மட்டமான மொழி பெயர்ப்புத் திறனை இப்படியும் மறைக்கலாம்) :
If you treat me like an option, I’ll leave you like a choice.

Happiness is the only thing you can give without having.

Please don't wear skinny jeans, if you don't have any skinny genes. 


 I am wondering if one can grow marijuana on Farmville then sell it on Mafia Wars?

ஒரு பெண்ணின் மீதான வெறுப்பை இப்படியா காட்டுவது????: I don't hate you. I just hope your next period happens while you're in a shark tank!

If you can’t be a good example, be a terrible warning.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...