Tuesday, 11 September 2012

ஐ-போனில் அதிரடி மாற்றம் செய்யவிருக்கிறது ஆப்பிள்

சம்சங் தனது கலக்சியால் கைப்பேசிச் சந்தையைக் கலக்கடித்து உலகில் அதிக கைப்பேசிகளை விற்றுக் கொண்டிருந்த நொக்கியாவை இரண்டாம் இடத்திற்கு தள்ளியது. ஆப்பிள் நிறுவனம் தனது கைப்பேசியின் பகுதிகளை உற்பத்தி செய்யும் பணிகளை சம்சங் நிறுவனதிற்கு ஒப்படைக்க, சம்சங் ஆப்பிளின் தொழில்நுட்பத்தைச் சுட்டெடுக்க, நீதிமன்றம் வரை பிரச்சனை சென்றது.


சம்சங் கலக்சி எஸ் 3 தனது திரையைப் 4.8 அங்குலத்திற்குப் பெரிதாக்கி ஆப்பிளுக்கு ஒரு சவாலை விட்டது. கைப்பேசிகள் வெறும் கைப்பேசிகளாக மட்டும் இல்லாமல் இணையத் தளங்களைப் பார்வையிடவும் காணொளிப்பதிவு செய்து பார்த்து மகிழவும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் 4.8" திரையைக் கொண்ட சம்சங் கலக்சி எஸ் 3 பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனால் அப்பிளின் புதிய ஐ-போன் - 5 நான்கு அங்குலத் திரையைக் கொண்டதாக வெளிவரவிருக்கிறது. தற்போதைய ஐ-போன்களின் திரை 3.5அங்குலங்கள் மட்டுமே. புதிய ஐ-போன் - 5 செப்டம்பர் 12-ம் திகதி அறிமுகம் செய்யப்பட்டு 21-ம் திகதி விற்பனைக்கு வரவிருக்கிறது. பலரினதும் பெரு வரவேற்பைப் பெற்ற ஐ-பாட் மூன்றில் உள்ள ரெட்டீனா புதிய ஐ-போன் 5 இல் இருக்கும்.

இசைப் பிரியரகளுக்கு ஒரு பெரும் திருப்தியை ஐ-போன் 5இல் இருக்கும் Streaming media தொழில்நுட்பம் கொடுக்கும்.

வங்கி அட்டை மூலமான பணம் செலுத்துவதற்குப் பதிலாக  அப்பிளின் புதிய ஐ-போன் - 5இன் மூலம் பாவனையாளர் பணங்களை செலுத்தும் முகமாக NFC chip புதிய ஐபோனில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அத்துடன் PassBook என்னும் செயலி மூலமாக கடைகளில் வழங்கப்படும் கூப்பன்களை ஐ-போனில் பதிவேற்றிக் கொள்ளலாம். அத்துடன் விமானப் பயணச்சீட்டுக்களையும் airport boarding passesகளையும் ஐ-போனில் பதிவேற்றலாம். இதற்குப் பல விமானச் சேவை நிறுவனங்கள் ஒத்துக் கொண்டிருக்கின்றன.

புதிய ஐ-போன் - 5 இல் 4G LTE தொழில் நுட்பத்தைக் கொண்டிருக்கும். இது தொலைபேசித் தொடர்புகளை மிக விரைவாக்கும். அத்துடன் பதிவிறக்கங்களையும் விரைவாக்கும். LTEயின் குறைபாடான அதிக மின்சாரப் பாவனையும் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. ஐ-போன் 5 இல் CPU மேலும் விரைவானதாகவும் குறைந்த அளவு மின்சாரம் பாவிப்பதாகவும் இருக்கும். LTE, short for Long Term Evolution, is considered by many to be the obvious successor to the current generation of UMTS 3G technology, which is based upon WCDMA, HSDPA, HSUPA, and HSPA. LTE is not a replacement for UMTS in the way that UMTS was a replacement for GSM, but rather an update to the UMTS technology that will enable it to provide significantly faster data rates for both uploading and downloading. Verizon Wireless was the first U.S. carrier to widely deploy LTE, though MetroPCS and AT&T have also done so, and Sprint and T-Mobile USA both have plans for LTE. In fact, Sprint is phasing out its WiMAX network in favor of LTE. Verizon Wireless and AT&T currently have incompatible LTE networks, even though they both make use of 700MHz spectrum. AT&T and Verizon Wireless LTE customers often see download speeds that exceed 15Mbps, and upload speeds in the 10Mbps range. -From Mobileburn

 ஆப்பிளிற் சவால்விடும் HTC உம் சம்சங்கும்
ஆப்பிள் LTE தொழில்நுட்பத்தை தமது கருவிகளில் இணைத்து தமது காப்புரிமையை மீறியதாக HTC உம் சம்சங்கும் ஆப்பிள் மீது வழக்குத் தொடுத்துள்ளன. இது ஐ-போன் 5 இன் வெளியீட்டைப் பாதிக்கலாம் என அஞ்சப்படுகிறது. HTC பிரித்தானியாவில் தொடுத்த வழக்கில் வெற்றி பெற்றுள்ளது.

புதிய ஐ-போன் 5 இன் dock connectors சிறியதாக்கப்படவிருக்கிறது. அத்துடன் headphone jack போனின் மேல் பாகத்தில் இருந்து அடிப்பாகத்திற்கு மாற்றப்படவிருக்கிறது.

கடவுச் சொல்லாக பெருவிரல் அடையாளம்
சென்ற ஆண்டு 'flash memory' தொழில் நுட்ப நிறுவனத்தை வாங்கிய அப்பிள்  ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு பெருவிரல் அடையாளத்தை பாதுகாப்புத் தொழில்நுட்பத்தில் பாவிக்கும் AuthentTec நிறுவனத்தை முன்னுற்று அறுபத்தைந்து மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வங்க இருக்கிறது. இனிமேல் ஐ-போன்களைத் தொடக்குவதற்கு கடவுச் சொற்களுக்குப் பதிலாக் உங்கல் பெருவிரலை ஐ-போனில் பதிய வேண்டும். இது அதிக பாதுகாப்பை ஐ-போன்களுக்கு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐ-போன் 5இல் இந்தத் தொழில் நுட்பத்தைக் கொண்டிருக்குமா என்பது சந்தேகம். சிலர் பெருவிரலடையாளம் ஐ-போன் 5 இல் நிச்சயம் இருக்கும் என்கின்றனர். ஆனால் பெருவிரலடையாளத் தொழில் நுட்பம் நிச்சயம் அடுத்த ஆண்டு முற்பகுதியில் வெளிவர இருக்கும் ஐ-பாட் 4 இல் நிச்சயம் இருக்கும்.

3 comments:

Tamilmovieszone said...

புதிய திரட்ட்டி http://tamiltoplink.com தமிழ் தொடர்பான பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Unknown said...

Nice news keep. It up

Unknown said...

Nice news keep. It up

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...