Friday, 10 August 2012

ஒலிம்பிக் பெண்களின் மார்புகளைப்பற்றி எழுதியதால் பெரும் சர்ச்சை

துருக்கியைச் சேர்ந்த Yuksel Aytug என்ற பிரபல பத்தி எழுத்தாளர் ஒலிம்பிக் போட்டிகளால் பெண்மை இறக்கிறது என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பெண்மையினதும் தாய்மையினதும் முக்கிய அம்சமான மார்பு ஒலிம்பிக்கில் போட்டியிடும் பெண்களுக்கு சிறியதாக இருக்கிறது என்று எழுதியமை பல பெண்ணியவாதிகளை ஆத்திரப்படுத்தியுள்ளது. அவர் பெண்களின் உடலைப் பார்க்க வேண்டுமானால் உள்ளாடைகளுக்கான fashion showவை போய்ப் பார்க்கட்டும். ஒலிம்பிக் பார்க்க வேண்டாம் என்கிறார் ஒரு பெண்ணியவாதி
எல்லாம் அழகுதான்...

விளையாட்டு வீராங்கனைகள் தொடர்ச்சியான உடற்பயிற்ச்சியாலும் தசைகளைப் பலப்படுத்தும் உணவுகளாலும் தமது உடலில் தசைகளை வளர்த்துப் பலப்படுத்துகின்றனர். Yuksel Aytug தட்டையான மார்பும் அகன்ற தோள்களும் பெண்மையின் அடையாளங்கள் அல்ல என்கிறார். ஒலிம்பிக் போட்டிகள் பெண்களை இப்படித் தோற்றமளிக்க நிர்ப்பந்திக்கின்றன என்கிறார் அவர்.  பெண்களின் மார்பு வேகத்துக்கு தடையாக ஒலிம்பிக்கில் கருதப்படுகிறது ; ஒலிம்பிக்கில் போட்டியிடும் பல பெண்களின் தோற்றங்கள் பரிதாபகரமானவையாக இருக்கின்றன. பெண்களின் அமைப்புக்கள் இதை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும் என்கிறார் Yuksel Aytug.
சிக்ஸ் பக் பெண்மை
Yuksel Aytug இன் கருத்துக்கு பெண்ணியவாதிகளிடமிருந்தும் ஒலிம்பிக்கில் போட்டியிடும் வீராங்கனைகளிடமிருந்தும் பெரும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. பெண்களை அவர்களின் மார்பை மட்டும் வைத்துப் பார்க்க வேண்டாம் என்கின்றனர் அவர்கள். பெண்களை தசைகளின் தொகுப்பாக சில ஆணாதிக்கவாதிகள் பார்க்கின்றனர் என்று கண்டனம் செய்கின்றனர் பெண்ணியவாதிகள்.
"தாரளமான பெண்மை!"
Zoe Smith: அளவான பெண்மைதான் அழகான பெண்மை
தனது எடையிலும் பார்க்க இருமடங்கு எடையைத் தூக்கிச் சாதனை புரிந்த பிரித்தானிய வீராங்கனை Zoe Smith ஆண்கள் தம்மிலும் பார்க்க பெண்கள் பலமாக இருப்பதை விரும்புவதில்லை அந்தப் பொறாமையில் பிதற்றுகிறார்கள்; சில பன்றித்தலையர்களின் கூச்சல இது என்கிறார். அவர் காரசாரமாகக் கூறியது:
The obvious choice of slander when talking about female weightlifting is “how unfeminine, girls shouldn’t be strong or have muscles, this is wrong”. And maybe they’re right… in the Victorian era… This may sound like a sweeping generalization, but most of the people that do think like this seem to be chauvinistic, pigheaded blokes who feel emasculated by the fact that we, three small, fairly feminine girls, are stronger than them. Simple as that. I confronted one guy that said “we’re probably all lesbians and look like blokes”, purely to explain the fact that his opinion is invalid cause he’s a moron. And wrong. He came up with the original comeback that I should get back in the kitchen. I laughed.

திரைப்பட நடிகைக்களின் தோற்றம் வேறு fashion show இல் நடந்துசெல்லும் பெண்களின் தோற்றம் வேறு விளையாட்டு வீராங்கனைக்களின் தோற்றம் வேறு. விளையாட்டு வீராங்கனைகளிடையிலும் வேறு வேறு விளையாட்டுக்களில் ஈடுபடும் பெண்களிடையே தோற்றங்களும் வேறுபடுகின்றனர்.
முன்ன்ள் இந்திய ஒலிம்பிக் தாரகை உஷா
உஷாவின் கணவர் சீனிவாசன் காணத பெண்மையை இயக்குனர் சுந்தர் சீ கண்டிருப்பாரா?
எவன் சொல்வான் இது பெண்மை இல்லை என?

2 comments:

Thozhirkalam Channel said...

தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி

வாருங்கள் ஒன்று திரள்வோம்!!!!!!!!!!!!!!!

தமிழின் பெருமையை உலகிற்கு உரைத்து சொல்ல ஒன்று கூடுவோம்.....

ஆகஸ்ட் - 26-ல் சென்னை மாநகரில்.....

அனைத்துலகத் தமிழ் பதிவர்களின் சந்திப்பு வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி (ஞாயிறு) சென்னையில் நடைபெற இருப்பதால் தமிழ் வலைப் பதிவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வருகை தாருங்கள்.....


மதுமதி மற்றும் குழுவினருடன் மக்கள் சந்தை.com
95666 61214/95666 61215
9894124021

kk said...

அப்ப ஹன்சிகா மாதிரி தாராளமயப்படுத்தல்கள் சிலர் வந்து ஒலிம்பிக் விளியாடணுமாமா? ஒலிம்பிக்கில் பெண்கள் பங்குபற்றுவதற்கு பட்டபாடு ஒலிம்பிக் வராலாற்றைப்படித்தால் தெரியும்.விட்டால் மீண்டும் அவர்களை தடுத்துவிடுவார்கள் போல் இருக்கின்றதே

(கிருத்திகன்(வெங்காயம்))

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...