Sunday, 29 July 2012

இலண்டன் ஒலிம்பிக்கும் அரசியலும்

இலண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு இலங்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடாத்துவதற்கு பிரித்தானியத் தமிழர் பேரவையினரும் தமிழ் இளையோர் அமைப்பினரும் பிரித்தானியக் காவற்துறையான ஸ்கொட்லண்ட் யார்ட்டின் பணிமனைக்குச் சென்றபோது. நீங்கள் வருவீர்கள் என்று எமக்குத் தெரியும் எமது முன்னேற்பாடுகளில் அதுவும் ஒன்று என்று பதில் கூறப்பட்டது. இலண்டன் ஒலிம்பிக்கை அப்படி முன்னேற்பாடுகளுடன் செய்திருந்தனர்.
 திருத்தம்: இதில் பிரித்தானியத் தமிழர் பேரவை என்று குறிப்பிட்டது தவறு தமிழர் ஒருக்கிணைப்புக் குழு என்று  இருக்க வேண்டும். தவறுக்கு மன்னிப்புக் கோருகிறேன்

இலண்டனுக்குள் உலகம்
மேற்கு நாடுகளில் இலண்டன் நகரில்தான் அதிக அளவு பள்ளிவாசல்கள் இருக்கின்றன. இலண்டனில் அதிக உல்லாசப் பிரயாணிகளைக் கவரும் இடமாக ஓர் இந்துக் கோவில் இருக்கிறது. சீனாவிலும் பார்க்க சிறந்த சீன உணவுகளை இலண்டன் உண்வகங்களில் உண்ணலாம். கடைசியாக ஒலிம்பிக் போட்டி இலண்டனில் 1948இல் நடந்தது. அப்போது உலகப் போர் நடந்து கொண்டிருந்ததால் மற்ற நாடுகள் ஒலிம்பிக் போட்டிநடாத்த முன்வராததால் பிரித்தானியா முன்வந்து நடாத்தியது. 2012இல் பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இலண்டலின் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கின்றன. இலண்டனில் 2012 ஒலிம்பிக் நடக்கும் என்று அறிவித்தவுடன் இலண்டன் நகரில் குண்டு வெடித்தது.

தேசப்பிரச்சனை

இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து ஆகிய நான்கு நாடுகளையும் சேர்த்து பெரிய பிரித்தானியா என்பர். இம்மூன்று தேசங்களும் ஒன்றாக இணைந்துதான் ஒலிம்பிக்கில் போட்டியிடும். உலக கால்பந்தாட்டம், துடுப்பாட்டம், ரக்பி போன்ற போட்டிகளில் இவை தனித் தனியாகப் போட்டியிடுவதுண்டு. ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க முன்னரே ஒலிம்பிக்கிற்கான கால் பாந்தட்டப் போட்டி ஆரம்பித்துவிடும். அதன் படி ஆரம்பித்த போட்டியில் பெரியபிரித்தானிய கால்பந்தாட்ட அணி விளையாடத் தொடங்கிய போது அதன் தேசிய கீதம் இசைத்த போது ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் வீரர்கள் தேசிய கீதத்தை சேர்ந்து பாடாதது பிரச்சனையைக் கிளப்பியது.
ஒலிம்பிக் போட்டிகளின் போது கோபி சிவங்தனின் தொடர் உண்ணாவிரதம்
சீன ஆடைகளைக் கொழுத்திய அமெரிக்கர்
அமெரிக்க விளையாட்டு வீரர்களுக்கான ஆடைகள் சீனவில் இருந்து தருவிக்கப்பட்டன. சீனா இருதரப்பு வர்த்தக நடவடிக்கைகளில் நேர்மையாக நடப்பதில்லை என்ற குற்றச்சாட்டில் அந்த ஆடைகளைக் கொழுத்திவிட்டு அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணிகின்றனர்.

பாதுகாப்புப் பிரச்சனை
மேற்கு நாடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் தீவிரவாதிகளின் தாக்குதல் நடக்கலாம் என்ற அச்சம் இப்போது பெரும் பிரச்சனை. இலண்டன் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் இடங்களில் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் நிறுத்தியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பொறுபேற்ற ஜீ-4 நிறுவனம் தேவையான அளவு பாதுகாப்பு ஊழியர்கள் கிடைக்காததால் பிரச்சனை உருவானது. இதனால் பிரித்தானியப் படைத்துறையினர் காவலில் ஈடுபடுத்தப்பட்டனர். பொதுவாக கையில் துப்பாக்கி இன்றிப் பெரும் கிளர்ச்சிகளையே கையாளும் பிரித்தானியக் காவற்துறையினர் ஒலிம்பிக்கில் துப்பாக்கியுடன் நிற்கின்றனர்.

திரைப்பட இயக்குனர் காட்டிய திரைப்படம்
27/07/2012 வெள்ளிக்கிழமை இலண்டனில் ஒலிம்பிக் தொடக்க விழா 27 பில்லியன் பவுண்கள் செலவிட்டு ஒழுங்கு செய்யப்பட்டது. இதற்கான பொறுப்பு பிரபல திரைப்பட இயக்குனர் டனி பொயிலிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.  இயக்குனர் டனி பொயில் ஸிலம்டோக் மில்லியனார் படத்திற்காக ஒஸ்கார் விருது பெற்றவர். அவர் ஜேம்ஸ் போண்ட் பாத்திரத்துடன் பிரித்தானிய மகராணியையும் அவரது இரு நாய்களையும் நடிக்க வைத்த ஒரு குறும்படத்துடன் நிகழ்ச்சியை ஆரம்பித்தார். குறும்படம் இலண்டனில் பிரபல இடங்களான பாராளமன்றம், பிக் பென், வின்ஸ்டன் சேர்ச்சில் சிலை, கோபுரப் பாலம், போன்றவற்றையும் ஹரி பொட்டர் கதாசிரியர் புத்தகம் வாசிப்பதையும் உள்ளடக்கி இருந்தது. பிரித்தானிய மகராணி உலங்கு வானூர்தியில் வந்து ஆகாயக் குடை மூலம் ஒலிம்பிக் மைதானத்தில் இறகுங்குவது போல் நிகழ்வை டனி பொயில் அமைத்திருந்தார். ஒலிம்பிக் போட்டிக்கான மொத்தச் செலவு 9பில்லியன் பவுண்கள். பிரித்தானியப் பொருளாதரத்திற்கு மொத்தம் 13 பில்லியன் பவுண்கள் பெறுமதியான நன்மை கிடைக்கும் என்று கருதப்படுகிறது. மொத்தத்தில் இரு ஒரு இலாபம் தரும் வியாபாரம். இதற்குத்தான் ஒலிம்பிக் போட்டிகள் தமது நாட்டில் நடக்க வேண்டும் என்று பல நாடுகளும் போட்டி போடுகின்றன.

பிரித்தானியா சொல்ல முயல்வது
உலகின் பெரும் பகுதியை ஆண்டவர்கள். கொடுமைகள் செய்தவர்கள் என்ற தமது விம்பத்தை மாற்றி பிரித்தானியா ஒரு பல்லின மக்களையும் கொண்ட ஒரு நாடு என்பதை உலகத்திற்கு தெரியப்படுத்த பிரித்தானிய ஒலிம்பிக் விழாவைப் பயன்படுத்திக் கொண்டது. பிரித்தானியா என்றவுடன் பலரின் நினைவில் வரும் கைத்தொழிற்புரட்சி, பசுமையான விவசாய நிலங்கள், ஆடு வளர்ப்பு  செல்லப்பிராணிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் போன்றவற்றை விழா பிரதிபலித்தது. பிரித்தானியர்களிடம் எனக்குப் பிடித்தவை அவர்களின் நகைச்சுவை உணர்வும் வீட்டின் பின்புறத்தில் வைத்திருக்கும் அழகிய பூந்தோட்டமும்தான். பிரித்தானியர்களின் நகைச்சுவை உணர்வை மிஸ்டர் பீன் என்னும் பாத்திரத்தின் மூலம் உலகப் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் ரோவான் அட்கின்ஸன் ஒலிம்பிக் விழாவில் மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தினார்.  நூற்றுக் கணக்கான மருத்துவமனைப் படுக்கைக்களை இளம் நோயாளர்கள் மருத்துவத் தாதியர்களுடன் நடுவில் கொண்டு வந்து காட்சிப்படுத்தியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. பிரித்தானிய பெரிதும் சிரமப்பட்டு தனது மக்களுக்கு இலவச சுகாதார சேவைகளை செய்து வருகிறது என்பதை உணர்த்த இதைச் செய்திருக்கலாம். பழம் பெரும் விளையாட்டு வீரர்கள் மூலம் ஒலிம்பிக் சுடரை ஏற்றாமல் ஏழு இளம் வீரர்களை வைத்து இருநூற்றுக்கு மேற்பட்ட சுடர்களை ஏற்ற வைத்தனர். பின்னர் அந்த இருநூற்றுக்கு மேற்பட்ட சுடர்கள் ஒன்றாகி ஒரு சுடராக எரிந்து கொண்டிருக்கிறது. அந்தச் சுடர்களுக்கு மத்தியில் காணொளிப்பதிவுக் கருவியை பிபிசி எப்படி வைத்துக்காட்டியதோ? ஆர்டிக் மங்கீஸ், போல் மக்காட்னி போன்றோர் மூலம் தனது இசைத் துறைப் பாரம்பரியத்தையும் பிரித்தானியா வெளிப்படுத்தத் தவறவில்லை. பிரித்தானியாவிற்கு பெருமை சேர்க்கும் பல்கலைக் கழகங்கள், ஷேக்ஸ்பியர் நாட்கங்கள், ஐசாக் நியூட்டன் கண்டுபிடித்த புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்த போன்றவை எப்படி மறக்கப்பட்டன?

மழை குளப்பவில்லை
இலண்டனில் ஒரு நிகழ்ச்சியின் போது மழை பொழியாவிட்டால் அதுவே அந்த நிகழ்ச்சிக்கு 25% வெற்றியைக் கொடுக்கும். போக்கு வரத்து நெரிசல் இல்லாவிடில் மேலும் 10% வெற்றி. அந்த வகையில் இலண்டன் ஒலிம்பிக் பெரும் வெற்றியே.

பத்திரிகை விமர்சனங்கள்
The Times of India called the ceremony "dazzling", adding that London had "presented a vibrant picture of Great Britain's rich heritage and culture".

LA Times reporter said: "The Queen acting, JK Rowling reading in public, can you top this?"

Chicago Tribune and Los Angeles Times journalist Philip Hersh tweeted: "Did MTV produce this?"

New York Times: "visually stunning". .......  "hilariously quirky" celebration as a "noisy, busy, witty, dizzying production".

Huffington Post: London 2012: World's Press Heaps Praise On The Olympic Opening Ceremony

Washington Post: They rolled out dancing nurses and smokestacks, poked fun at their weather and gave us Mr. Bean. Amid green and pleasant pastures, they read from the storybook that is Britain, not just Shakespeare but Peter Pan and Harry Potter. And if the Opening Ceremonies of the London Games sometimes seemed like the world’s biggest inside joke, the message from Britain resonated loud and clear: We may not always be your cup of tea, but you know — and so often love — our culture nonetheless.

அமெரிக்க வேட்பாளர்
அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் வேட்பாளர் மிட் ரொம்னி பிரித்தானிய ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக இல்லை என போட்டி தொடங்கமுன்னர் தெரிவித்து சர்ச்சையைக் கிளப்பினார். அமெரிக்க வேட்பாளர்கள் ஒவ்வொரு வார்த்தைகளையும் திறமை மிக்க ஆலோசகர்களின் ஆலோசனைகளுடன் தான் வெளிவிடுவார்கள். அவர் பிரித்தானியாவைத் தாக்கி தனது செல்வாக்கை அதிகரிக்க முயல்கிறார்.ஆனால் ஒலிம்பிக் அதிகாரிகள் பிரித்தானியாவின் தயார் நிலமை அண்மைக்காலங்களில் மற்ற நாடுகளில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளுக்கான தாயார் நிலைகளிலும் பார்க்க மிகவும் சிறப்பாக இருக்கிறது என்று தெரிவித்திருந்தனர்.

வலது சாரி அரசியல்வாதியின் தாக்குதல்
இலண்டன் ஒலிம்பிக் வெள்ளை இனத்தவருக்கு மட்டும் இந்த நாடு உரிமையானது அல்ல இது ஒரு பல்லின மக்கள் வாழும் நாடு என்ற செய்தியுடன் ஆரம்பித்தது பல வலது சாரி அரசியல் வாதிகளை ஆத்திரத்திற்கு உள்ளாக்கியுள்ளது. ஐடன் பேர்லி என்னும் பழமைவாதக் கட்சிப் பாராளமன்ற உறுப்பினர் டுவிட்டரில்: "The most leftie opening ceremony I have ever seen - more than Beijing, the capital of a communist state! Welfare tribute next?" "Thank God the athletes have arrived! Now we can move on from leftie multi-cultural crap. Bring back red arrows (sic), Shakespeare and the Stones!" ஆரம்ப விழாவில் இடது சாரித்தன்மை நிறைந்திருந்தது. பொதுவுடமை நாடான சீனத் தலைநகரில் நடந்ததிலும் பார்க்க இலண்டன் விழா அதிக இடதுசாரித்தனமும் பல்லினக் குப்பையும் நிறைந்திருந்தது என்றார் அவர். இவரது டுவிட்டர் பதிவு பல சர்ச்சையைகளைக் கிளப்ப உள்ளது.

வட கொரியா தென் "கொடியாப்" பிரச்சனை
பெரிய நிகழ்வுகளை ஒழுங்கு செய்வதில் தாம் விற்பன்னர்கள் என்று பிரித்தானியருக்கு ஒரு தற்பெருமை உண்டு. அதை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் நிரூபிக்கவேண்டும் என்று அவர்கள் கருதுகின்றனர். சீனாவில் கடந்த முறை ஒலிம்பிக் சிறப்பாக நடந்தது. ஆனால் அங்கு தீபெத்தியரின் ஆர்ப்பாட்டம் ஓர் இழுக்காக அமைந்தது. சீனர்கள் ஒலிம்பிக்கின் போது ஆர்ப்பாட்டங்களைத் தடை செய்திருந்தனர். தடையை மீறி தீபெத்தியர் ஆர்ப்பாட்டம் செய்ததால் பெரும் இரத்தக் களரி ஏற்பட்டது. ஆனால் இலண்டனில் ஆர்ப்பாட்டங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. கோபி சிவந்தன் என்னும் தமிழ் இளைஞன் தொடர் உண்ணாவிரதம் இருக்கிறான். தமிழர்கள் மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக பெரும் ஆர்ப்பாட்டம் செய்யதனர். பெண்களுக்கான கால்பந்தாட்டப் போட்டி வட கொரியாவிற்கும் கொலம்பியாவிற்கும் இடையில் நடந்த போது வட கொரிய வீராங்கனைகளை அறிமுகம் செய்யும் போது அவர்களின் படமும் அவர்களின் தேசியக் கொடியும் பெரிய காணொளித் திரையில் காண்பிக்கப்பட்டது. ஆனால் வட கொரியத் தேசியக் கொடிக்குப் பதிலாக அவர்களின் பரம விரோதிகளான தென்கொரியாவின் தேசியக் கொடி காண்பிக்கப்பட ஆத்திரப்பட்ட தென்கொரிய வீராங்கனைகள் மைதானத்தில் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டு விளையாட மறுத்தனர். சகலருக்கும் மன்னிப்புத் தெரிவிக்கப்பட்டு பின்னர் சரியாக கொடிகளைக் காட்டிய பின்னரே விளையாட்டு ஒரு மணி நேரம் தாமதித்து ஆரம்பமாகியது.


இனக்கொலையாளிகள் இலங்கையும் இந்தியாவும்
ஒலிம்பிக் போட்டிக்கு மஹிந்த ராஜபக்ச வருவாரா என்பது பெரும் கேள்வியாக இருந்தது. இம்முறையும் அவரின் வருகைக்கு  எதிராக பெரும் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஸ்கொட்லண்ட் யார்ட் மஹிந்த வரவில்லை இலங்கைப் பிரதம மந்திரிதான் வருகிறார் என்று பிரித்தானியத் தமிழர் பேரவையிடமும் தமிழ் இளையோர் அமைப்பிடமும் தெரிவித்திருந்தது. ஆனால் இண்டிப்பெண்டன்ற் பத்திரிகை மஹிந்த வருகிறார் என்றும் அவருக்கு எதிராகப் பெரும் ஆர்ப்பாட்டம் செய்யவிருப்பதாகவும் செய்தி வெளியிட்டிருந்தது. ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்ட நேரம் வரலட்சுமி விரதத்திற்காக இலண்டனில் உள்ள ஆலயங்களில் தமிழர்கள் நிரம்பி வழிந்தனர். சில செயற்ப்பாட்டாளர்கள் கூட ஆலயங்களில்தான் நின்றனர். இதனால் வழமையிலும் பார்க்க குறைந்த அளவில் ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் வந்திருந்தனர். ஒலிம்பிக் நிகழ்ச்சியின் போது ஒவ்வொரு நாட்டு விளையாட்டு வீரர்கள் ஊர்வலமாக வரும் போது அந்த நாட்டு தலைவர்களைக் காட்டுவார்கள். மஹிந்த ராஜபக்ச வந்தாரா என்பதை அறிய பலரும் காத்திருந்தனர். ஆனால் இலங்கை வீரர்களின் பவனியின் போது ஓரிரு கணங்கள் தான் காட்டினார்கள் அவர்களின் அரசத் தலைவர் இருந்த பக்கம் ஒளிப்பதிவுக் கருவிகள் திரும்பவில்லை. இந்திய வீரர்கள் வரும்போது  பிரித்தானிய மகாராணியின் முகம் காட்டப்பட்டது. இந்திய வீரர்கள் தலையில் காவி நிறத் தலைப்பாகை அணிந்து வருவதைப் பார்த்த தெரிந்த ஒரு குஜராத்தி சிறுமி They look like clowns என்றாள். இந்திய ஒலிம்பிக் சபையின் தலைவரை இலண்டன் சென்று ஒலிம்பிக் விழாவில் கலந்து கொள்வதை இந்திய நீதி மன்றம் தடை விதித்திருந்தது. இந்தியாவின் விளையாட்டுத் துறையின் ஊழல் நிலைமை அப்படி.

அத்து மீறி நுழைந்த ராகுல் மொக்கை காந்தியின் காதலி?
இந்திய வீரர்கள் அணிவகுத்துச் செல்லும் போது அவர்களுடன்  ஒரு மர்மமான பெண் நடந்து சென்றார். இவரிடம் ஒலிம்பிக்கின் அதிகாரபூர்வ அடையாள அட்டை இருக்கவில்லை. இந்திய மற் போர் வீரருடன் முன்னணியில் நடந்து சென்னார். இவர் ராகுல் காந்தியின் காதலி நோயெலா என்னும் பெண் என்று சொல்லப்படுகிறது. இதை உறுதி செய்ய முடியவில்லை. இவர் ஜாகீர் ஷாவின் என்பவரின் பேத்தியாம். இன்னொரு செய்தி இவர் பெயர் மதுரா ஹனி என்றும் சொல்கிறதுஇவர் அத்து மீறி நுழந்து நடந்து சென்றதாகக் கூறப்படுகிறது. இந்திய அணியினரை பத்து நொடிகள் மட்டுமே தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. இவரை அனுமதித்தமை தொடர்பாக இந்தியா தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளது. இந்திய அணியினருக்குத் தெரியாமல் இப்பெண் அவர்களுடன் கதைத்த படி இந்திய வீராங்கனைகளின் சீருடையான மஞ்சள் சேலை இன்றி எப்படி நடக்க முடியும்? டெல்லியில் சோனியாவின் அடுப்பங்கரையிலும் மந்திரி சபையிலுமாக இரு அதிகார மையங்கள் இருப்பது போல் இந்திய ஒலிம்பிக்கிலும் இரு அதிகார மையங்கள் இருக்கிறதா?


No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...