Friday, 6 July 2012

குதிக்கும் ஈரானும் கொதிக்கும் மத்திய கிழக்கும்

ஈரானின் ஏவுகணைப் பரிசோதனையின் வெற்றிக்களிப்பில் புரட்சீகரக் காவற்படையினர்.
04/07/2012 புதன்கிழமை ஈரான் வெற்றீகரமாக பல தரப்பட்ட ஏவுகணைப் பரிசோதனைகளைச் செய்ததாக ஈரானிய செய்தி நிறுவனமான ஃபாஸ் அறிவித்துள்ளது. இவற்றில் "Persian Gulf" எனப் பெயரிடப்பட்டுள்ள தரையில் இருந்து கடலுக்கு செலுத்தி(shore-to-sea ballistic missile) பெரிய கடற்படைக் கப்பல்களைத் தாக்கியளிக்கும் வல்லமையுள்ள ஏவுகணைகளும் Shahab-3 எனப் பெயரிடப்பட்ட தரையில் இருந்து தரைக்குச் செலுத்தி 2000கிலோ மீற்றர் வரை சென்று தாக்கக் கூடிய ஏவுகணைகளும் முக்கியமானவை.

மார்தட்டிக் குதிக்கும் ஈரான்

ஈரானின் அணுக்குண்டு உற்பத்தித் திட்டத்திற்கு எதிராக மேற்கு நாடுகள் தமது பொருளாதாரத் தடையைத் தீவிரப்படுத்தி வரும் வேளையில் ஈரான் பாரிய படை ஒத்திகையையும் ஏவுகணைப் பரிசோதானைகளையும் ஒன்றாக நடாத்திக் காட்டியதுட்டன் இஸ்ரேலின் படை நிலைகளையும் வளைகுடாப்பகுதியில் உள்ள அமெரிக்கப் படை நிலைகளையும் தன்னால் தாக்கி அழிக்க முடியும் எனச் சூளுரைத்துள்ளது. ஈரான் தான் மூன்று நாட்களாக மேற்கொண்ட இந்த இணை படைத்துறை ஒத்திகைக்கு The Great Prophet 7என்னும் குறியீட்டுப் பெயரைச் சூட்டியிருந்த்தது. தனது 200 kilometers (120 miles) தூரம் வரை சென்று தாக்கக் கூடிய "Persian Gulf" எனப் பெயரிடப்பட்டுள்ள shore-to-sea ballistic missile களால் பாஹ்ரேயினில் உள்ள அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களைத் தாக்கி அழிக்க முடியும் என ஈரான் மார்தட்டுகிறது. 300 கிலோ மீற்றர்களில் இருந்து 1300 கிலோ மீற்றர்கள் வரை சென்று தாக்கக் கூடிய பலதரப்பட்ட ஏவுகணைகளை நாம் சோதனை செய்து பார்த்துள்ளோம். இஸ்ரேல் ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கிறது என்கிறார் ஈரானியப் படைத் தளபதி Amir Ali Hajizadeh. அத்துடன் ஆளுள்ள விமானங்களையும் ஆளில்லா விமானங்களையும் பயன்படுத்திப் பல சோதனத் தாக்குதல்களை நாம் செய்துள்ளோம் என்கிறார் Amir Ali Hajizadeh. இதுபற்றிக் கருத்துத் தெரிவித்த அமெரிக்க அரசத் துறைப் பேச்சாளர் விக்டோரியா நூலண்ட் ஈரானின் இந்தப் பரிசோதனைகள் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சமையின் தீர்மானத்திற்கு விரோதமானது என்றார். அத்தீர்மானம் ஈரான் அணுக் குண்டுகள் காவக்கூடிய ஏவுகணைக்களை உருவாக்கக் கூடாது என்று சொல்கிறது. தன் மீது தாக்குதல் நடாத்தப்பட்டால் ஒரு சில நிமிடங்களுக்குள் அமெரிக்காவின் வளை குடாப் படை நிலைகளில் மீதும் இஸ்ரேல் மீதும் பதிலடி கொடுக்க தம்மால் முடியும் என்று ஈரான் சொல்கிறது.

அமெரிக்காவின் தன்வினை தன்னைச் சுடுகிறது
அமெரிக்கா பல புதிய ரகப் படைக்கலன்களை வழங்கியது அவற்றின் தொழில் நுட்பங்கள் பாக்கிஸ்த்தானூடாக ஈரானைச் சென்றடைந்தது. பாக்கிஸ்தானிய அணு விஞ்ஞானிகளை ஈரான் பயன்படுத்துகிறது.

பொருளாதாரத் தடையை உதாசீனம் செய்யும் ஈரான்
ஈரான் தனது மசகு எண்ணெய் உற்பத்தியை 30% குறைத்துள்ளது. அப்படியும் அதன் மசகு எண்ணெய் உறபத்தியை பொருளாதாரத் தடையால் முழுமையாகச் சந்தைப்படுத்த முடியவில்லை. அதன் எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் இப்போது மசகு எண்ணெய்க் களஞ்சியங்களாகப் பயன்படுத்தப்படுகிறது. இருந்தும் ஈரானிய ஆட்சியாளர்கள் பொருளாதாரத் தடையைப் பற்றிக் கவலைப் படாமல் தனது அணு ஆராய்ச்சிகளைத் தொடர்கிறது.

மத்திய கிழக்கில் பிரச்சனை தீவிரமடைகிறது
சிரியாவில் நடக்கும் கிளர்ச்சிகள் தீவிரமடைகிறது. சிரியக் கிளர்ச்சியாளர்களுக்கு படைக்கலன்கள் துருக்கியில் இருந்து வழங்கப்படுவதால் சிரிய துருக்கி எல்லையில் கொந்தளிப்பு நிலை உருவாகியுள்ளது. ஈரானின் அணுக் குண்டு உற்பத்தித் திட்டம் பொருளாதாரத் தடையையும் மீறி நிறை வேற்றும் பாதையில் சென்றால் ஈரான் மீது தாக்குதல் நடாத்தப்படும் என அமெரிக்காவும் இஸ்ரேலும் தெரிவித்து விட்டன. ஈரான் தனது அணு ஆராய்ச்சியை நிறுத்தாமல் தொடர்கிறது. ஈரானுக்கான தமது உதவிகளை சீனாவும் இரசியாவும் தொடர்கின்றன. சிரியக் கிளர்ச்சியாளார்களை அடக்க சிரிய ஆட்சியாளர் பஷர் அல் அசாத்திற்கு ஈரானிய அரசு படைத்துறை உதவிகளைச் செய்கிறது. இந்நிலையில் எகிப்திற்கும் இஸ்ரேலுக்கும் அமெரிக்க அரசத்துறைச் செயலர் ஹிலரி கிளிண்டன் ஜூலை 15-ம் திகதி செல்லவிருக்கிறார். இதே வேளை இஸ்ரேலிற்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையில் நல்லுறவுகளை வளர்க்க அமெரிக்கா தீவிரமாக முயற்ச்சிக்கிறது. இஸ்ரேலின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஈரானுடன் நேரத்தை வீணடிக்காமல் அதன் அணுக்குண்டு உறப்பத்திக்கு எதிராக தாக்குதல் நடாத்த வேண்டும் என்கிறார். அதே வேளை ஈரானின் parliamentary speaker Ali Larijani உலகத்தில் இருந்து மேற்கு நாடுகளும் இஸ்ரேலும் ஒழிக்கப்படவேண்டிய தருணம் வந்துவிட்டது என்றார் எனப் பிரஸ் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. உண்மையில் மத்திய கிழக்கு கொதிக்கிறது.

1 comment:

Pregnancy Calculator said...

மூன்றாம் உலகப்போருக்கான நேரம் வந்துவிட்டது என்று தோன்றுகிறது...

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...