Monday, 2 July 2012

சிவ சங்கர் மேனன் கொழும்பில் என்ன பேசியிருந்திருப்பார்?

2009 மே மாத்திற்கு முன்னர் இலங்கையில் போர் நடந்து கொண்டிருக்கும் போது சிவ் சங்கர் மேனனனும் எம் கே நாராயணனனும் அடிக்கடி கொழும்பு சென்று இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடாத்துவதாகச் செய்திகள் வரும். அச்செய்திகளில் அவர்கள் இலங்கை இனப்பிரச்சனைக்கு போர் மூலாமாகத் தீர்வு காணமுடியாது என்று கூறவும்  போர் நிறுத்தத்தை வலியுறுத்தவும் செல்வதாகக் கூறப்படும். ஆனால் இலங்கையின் இன அழிப்புப் போரில் சிவ் சங்கர் மேனனும் எம் கே நாராயணனும் மிக முக்கிய பங்காளிகள் ஆவார்கள். இவர்கள் இலங்கைக்குப் பயணங்கள் மேற்கொண்டமை இலங்கையின் இன அழிப்புப் போரில் எப்படி இந்தியா உதவி செய்ய வேண்டும் என்பதைப் பற்றி ஆராயவும் இன அழிப்புப் போர் நடந்து கொண்டிருக்கும் முறைமை பற்றி மீளாய்வு செய்யவும் ஆலோசனை வழங்கவுமே. ஒரு கட்டத்தில் அப்பாவி மக்களின் உயிரிழப்புக்களைக் கருத்தில் கொள்ளாமல் போரை நடாத்தி இந்தியப் பாராளமன்றத் தேர்தலுக்கு முன்னர் விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டுங்கள் என இவ்விருவரும் சொல்லியதாகக் கூடச் செய்திகள் வெளிவந்தன.

சோனியா குடும்பத்தின் பாதுகாப்பு
இந்தியப் பொதுத் தேர்தலுக்கு முன்னர் விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டுவதில் சோனியா காந்தியில் அரசு முனைப்புக் காட்டப்பட்டமைக்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. 2009 மேமாதம் நடந்த இந்தியப் பாராளமன்றத் தேர்தலில் காங்கிரசுக் கட்சி தோல்வியடைந்தால் அதன் பின்னர் வரும் அரசு சோனியா குடும்பத்தினருக்குப் போதிய பாதுகாப்பு வழங்காவிடில் அவர்களின் உயிருக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து ஏற்படலாம் என்பதால் தேர்தலுக்கு முன்னர் விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்ட திட சங்கற்பம் பூணப்பட்டது. போருக்குப் பின்னர் இந்தியா இலங்கை அரசு மேற்கொண்ட இன அழிப்புப் போரில் புரிந்த போர்க்குறம் தொடர்பான தனது செய்மதிப் படங்களைக் காட்டி இலங்கையை மிரட்ட முற்பட இலங்கை பதிலுக்கு தம்முடன் இந்தியாவில் இருந்து மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி உரையாடல்களின் ஒலிப்பதிவுகளைப் பதிலுக்குக் காட்டி இவையும் போர்க்குற்றத்திற்கு உடனதையாக இருந்தமைக்கான ஆதாரங்கள் என்று மிரட்டி இந்தியாவைப் பணிய வைத்தது. இதனால்தான் 2009ம் ஆண்டு நடந்த ஐக்கிய நாடுகள் சபையின்மனித உரிமைக்கழகக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவந்த தீர்மானத்தை இந்தியா இலங்கைக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானமாக மாற்றியது. அது மட்டுமல்ல 2012 மார்ச் மாதம் நடந்த கூட்டத் தொடரில் அமெரிக்காவை அடுத்து நிற்பது போல் நடித்து அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானதின் கடும் போக்கை குறைத்து இலங்கைக்குச் சாதகமாக்கியது.


கருணாநிதியை சந்தித்த மேனனும் நாராயணனும்
2009 மே மாதத்திற்கு முன்னர் சிவ் சங்கர் மேனனும் எம் கே நாராணனும் இலங்கை செல்ல முன்னர் அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதியைச் சந்திப்பதும் உண்டு. அப்போது வெளிவரும் செய்தி இலங்கையில் போர் நிறுத்தம் தொடர்பாக கருணாநிதியுடன் கலந்து ஆலோசித்ததாக இருக்கும். ஆனால் உண்மையில் இலங்கையில் தமிழர்கள் அழிக்கப்படும் செய்தியால் தமிழ்நாட்டில் கொந்தளிப்பு ஏற்படாமல் செய்திகளை மூடி மறைப்பது, கொந்தளிப்பைத் தடுப்பது, மக்களைத் திசை திருப்புவது எப்படி என்பது பற்றியே இருக்கும்.

செய்தி வேறு உண்மை வேறு
இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தைப் பொறுத்தவரை இந்தியா சொல்வதும் செய்திகளாகக் கசிய விடுவதும் வேறு அதன் உண்மை நிலைப்பாடு வேறு. இந்தியாவின் இப்போதைய உண்மையான திட்டம் வடக்கிலும் கிழக்கிலும் சிங்களவர்களைக் குடியேற்றி அங்கு தமிழர்களின் தேர்தல் வாக்கு பலத்தைக் குறைத்து அவர்களை மலையகத்தில் வாழும் தமிழர்கள் போல் ஆக்குவதுதான். இதன் பின்னர் எந்த ஒரு நாடும் இலங்கைத் தமிழர் பிரச்சனையை முன் வைத்து இலங்கையில் தலையிடாது. இதைச் செய்வதே இந்தியாவின் நோக்கமாகும்.

சிவ் சங்கர் மேனனின் பரம்பரைத் தொழில்
இந்தியாவை ஒரு பரம்பரை ஆண்டு கொண்டிருக்க இன்னொரு பரம்பரை அந்த ஆளும் பரம்பரைக்கு ஆலோசனை சொல்லிக் கொண்டிருக்கிறது. சிவ் சங்கர் மேனனின் தாத்தா ஜவஹர்லால் நேருவிற்கு நெருக்கமானவர். சிவ் சங்கரின் தந்தை தந்தையின் சகோதரர் இப்படி இவர்கள் பரம்பரையும் இந்தியாவில் உயர் பதவிகளில் இருந்தார்கள். இக்குடும்பம் சீனாவிற்கு நெருக்கமானது என்று கூறப்படுகிறது. சிலர் இவர்களைச் சீனக் கைக்கூலிகள் என்றும் கூறுவர். ஜீ பார்த்தசாரதி இந்திரா காந்தியின் ஆலோசகராக இருந்த போது இலங்கையில் அமெரிக்க ஆதிக்கம் ஏற்படாமல் இருப்பதில் அதிக அக்கறை கட்டி வெற்றி கண்டனர். சிவ் சங்கர் மேனன் புது டில்லியின் ஆலோகராக இருக்கும் போது சீனா இலங்கையில் தனது ஆதிக்கத்தை வலுவாகக் கட்டியெழுப்பி வருகிறது

 சிவ் சங்கர் மேனனின் பயணம்
 29-06-2012 இலன்று சிவ் சங்கர் மேனனின் 24 மணித்தியால இலங்கைப் பயணம் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் இலங்கை அரசு செய்யும் இழுத்தடிப்புக்கள் மீதான இந்தியாவின் அதிருப்தியை இலங்கைக்கு கடும் தொனியில் தெரிவிக்கவே என்று செய்திகள் வெளிவந்தன. இந்தச் செய்தியின் உண்மைத் தன்மையை நாம் பாக்க வேண்டும். பிரேசில் ரியோ நகரில் நடந்த G-20 மாநாட்டின் பின்னர் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சவும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் சந்தித்த போது இந்தக் "கடும் தொனி" செய்தியை தெரிவித்திருக்கலாம்.  அப்போது தெரிவிக்காததை இப்போது தெரிவிக்க மேனன் இலங்கை சென்றாரா? இலங்கை இனப் பிரச்சனை தொடர்பான கலந்துரையாடல் என்றால் அதற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் இலங்கை செல்லாமல் இந்திய தேசிய பாதுகாப்புத் துறை ஆலோசகரான சிவ் சங்கர் மேனன் சென்றது ஏன்? இந்திய தேசிய பாதுகாப்புத் துறை ஆலோசகர் சென்றமையால் இப்பயணத்தின் முக்கிய நோக்கம் இந்திய பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டமையே அன்றி வேறல்ல. 2012 மார்ச் மாதத்தின் பின்னர் இலங்கை இந்தியாவை ஓரம் கட்டுவதை அதிகரித்துள்ளது. இலங்கை போருக்கு உதவியமைக்கு பிரதி உபகாரமாக போர் முடிந்ததும் இலங்கை இந்திய இருதரப்பு வர்தக உடன்பாடு கைச்சாத்திடுவதாக இலங்கை இந்தியாவிடம் வாக்குறுதி அளித்திருந்தது. இலங்கையிடம் சமர்ப்பிக்கப்ப ட்ட இந்த உடன்பாட்டில் இதுவரை இலங்கை கையொப்பமிடவில்லை. திருமலை எண்ணெய்க் குதங்களை இந்தியாவிற்கு கொடுத்த குத்தகையை இரத்துச் செய்வது பற்றி இலங்கை தீவிரமாக ஆராய்கிறது. பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய இந்தியா முன் வந்ததை இலங்கை நிராகரித்து விட்டது. மன்னார் எண்ணெய் வள ஆய்வில் இந்தியா புறக்கணிக்கப்படுகிறது. சம்பூர் அனல் மின்னிலையத்திலும் இந்தியா ஏமாற்றப்பட்டுள்ளது. இப்படி பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்தியாவைப் புறக்கணிப்பதும் சீனாவுடன் உறவை வளர்ப்பதிலும் இந்தியா அதிக அக்கறை காட்டி வருகிறது. இது இந்தியப் பாது காப்பிற்கு அச்சுறுத்தல் என்பதால்தான் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரான சிவ் சங்கர் மேனன் இலங்கை சென்றார். அவர் அங்கு உண்மையில் பேசியவை தொடர்பான செய்திகள் வெளிவராது.

தனது சந்திப்பு தொடர்பாக மேனன் கூறியமை:
 "I discussed recent developments, bilateral relations and areas of common concern. I was also briefed about steps being taken by the government of Sri Lanka on political reconciliation and settlement. While this is a Sri Lankan issue and something that Sri Lanka has to do, we will continue to remain engaged with all concerned and offer any support required in this regard. My visit to Sri Lanka today has been in the context of regular consultations and exchange of views between the government of India and the government of Sri Lanka. We agreed that fishermen's associations on both sides, which had met in the past and reached some understandings, needed to meet again to work on developing this further. This could then serve as the basis for finding a solution to this humanitarian issue," he said.

 பழைய பல்லவியில் ஒரு புதிய சாகித்தியம்
சிவ் சங்கர் மேனன் தனது வழமையான "இலங்கைய பிளவு படாத ஒரு நாடாக வைத்திருக்க இந்தியா எப்போதும் உதவும்" என்னும் பல்லவியை இம்முறையும் பாடத் தவறவில்லை. ஆனால் மேனன் இம்முறை தனது வழமையான பாடலிற்குப் புது சாகித்தியத்தை இணைத்துள்ளார். அது இலங்கை தனது மக்களின் மனித உரிமைகளைப் பேணவேண்டும் என்பதே. இது ஹிலரி கிளிண்டன் அக்காவின் வேண்டுகோளாகத்தான் இருக்க வேண்டும். இந்திய அரசியல்வாதிகள் பாடும் 13இற்கு மேல் சென்று இனப்பிரச்சனைக்குத் தீர்வுகாண்பதாக மஹிந்த ராஜபக்ச என்னிடம் வாக்குறுதியளித்தார் என்ற பாடலை மேனன் இசைக்கவில்லை. அந்தப் பாடலுக்கான இசையமைப்பும் வரிகளுக்கும் சொந்தக்காரனே மேனன்தான். இந்திய அரசியல்வாதிகளையும் தமிழ்நாட்டு மக்களையும் ஏமாற்ற புதுடில்லியின் தென்மண்டல பூனூல் கும்பலும் கொழும்பும் இணைந்து உருவாக்கிய பாடல்தான் "13இற்கு மேல் சென்று இனப்பிரச்சனைக்குத் தீர்வுகாண்பதாக மஹிந்த ராஜபக்ச என்னிடம் வாக்குறுதியளித்தார்".

உதவிக்குப் பதில் ஏமாற்றம்
இப்போது இலங்கைக்கு உதவி செய்யும் நாடுகளில் இந்தியா சீனாவை முந்திவிட்டது. இந்த ஆண்டில் இந்தியா 740.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது. இதில் 275.1 மில்லியன் டொலர்கள் நன்கொடையாகும். ஜப்பான் 12.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடை உள்ளிட்ட 175.3 மில்லியன் டொலர்கள் நிதியுதவியை இலங்கைக்கு வழங்கியுள்ளது. மூன்றாவது இடத்தில் இருக்கும் நெதர்லாந்து 102.5 மில்லியன் டொலர்களை நிதியுதவியாக அளித்துள்ளது.கடந்த ஆண்டில் முதலிடத்தில் இருந்த சீனா இம்முறை நான்காவது இடத்துக்கு இறங்கியுள்ளது. சீனா இந்த ஆண்டில் 32.5 மில்லியன் டொலர்களை மட்டுமே இலங்கைக்கு வழங்கியுள்ளது. ஆனால் இந்தியாவை ஏமாற்றும் நாடுகள் பட்டியலில் இலங்கை முதலாமிடம் வகிக்கிறது. இதைப் பல சிங்கள அரசியல்வாதிகளும் ஆய்வாளர்களும் தெளிவுபடக் கூறியுள்ளார்கள்.

ஏன் இந்தத் தமிழின விரோதி
சிவ் சங்கர் மேனன் இலங்கை செல்கிறார் என்ற செய்தி வந்தவுடன் இந்திய வால்பிடித் தமிழ் ஊடகங்கள் அவர் இலங்கை அரசு தமிழர் பிரச்சனையில் காட்டும் அசமந்தப் போக்குத் தொடர்பாக இந்தியாவின் அதிருப்தியைக் கடுமையான தொனியில் தெரிவிக்கப்  போகிறார் என்று செய்திகள் வெளிவிட்டன. இந்திய உளவுத்துறை தினமணியில் இப்படிப் பொய்ச் செய்தியை வேண்டுமென்றே கசியவிட அதை பிரதி செய்து பல இணையத் தளங்களும் தம்மை அரசியல் விமர்சகர்கள் என்று நினைப்போரும் (முள்ளி வாய்க்காலின் பின் முளைத்த காளான்கள்) பிரசுரித்தனர். இலங்கையில் வாழ் தமிழர்களின்மேல் அக்கறை இருந்தால் இந்தியா தமிழர்களின் நலன்களில் அக்கறை உள்ள ஒருவரை இலங்கைக்கு அனுப்பியிருக்கும். அதை விட்டு தமிழின விரோதியும் தமிழின அழிப்புப் போரின் முக்கிய பங்காளியுமான பாலக்காட்டானை இலங்கைக்கு  அனுப்பியது ஏன்?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...