மூடப்பட்ட வரலாற்றுப் புத்தகத்தின்
பக்கங்களல்ல எம் போராட்டம்
வரலாறு படைக்கும் போராட்டம்
எம் போராட்டம்
ஓயாத கொலைகளுக்கும்
அஞ்சி ஓயாத அலை
எம்போராட்டம்
முள்ளி வாய்க்காலின் பின்
முளைத்திருக்கின்றன
பல காளான்கள்
எம்மை மீண்டும்
பழமைக்குள் கொண்டு செல்ல
இந்தியா பிராந்திய வல்லரசு
அதை அனுசரித்துப் போக வேண்டும்
என எம்மை மீண்டும்
87இல் புளித்துப் போன்
பழைய வட்டத்திற்குள்
எம்மை இழுக்கின்றன
சில காளான்கள்
படைக்கலனை நீ ஒப்படை
உன் பாதுகாப்புக்கு நான் உத்தரவாதம்
என்னும் கனவான் ஒப்பந்தத்தை
காற்றிலே பறக்க விட்ட
அயோக்கிய இந்தியா
நல்லரசும் ஆகாது
வல்லரசும் ஆகாது
இந்திய வட்டத்தை விட்டுப்
புது திட்டத்தில் இணைவோம்
முள்ளி வாய்க்காலின் பின் முளைத்த
இன்னும் சில காளான்கள்
புதிய திசை காட்டுகிறோம் எனக் கூறி
சிங்களத் தொழிலாளரோடு
இணைந்து போராடுங்கள் என்கின்றன
இதுவும் பழைய வட்டம்தான்
தோழர்கள் வி பொன்னம்பலமும்
எஸ் சண்முகதாசனும்
சுற்றிச் சென்று சறுக்கி விழுந்த வட்டம்
தோழர் விக்கிரமபாகு பின்னால்
எத்தனை சிங்களவர்கள்
அறப் போர் செய்தவர் மேல்
கழிவுத் திரவம் பாய்ச்சியதை
எதிர்த்தது எத்தனை
சிங்களத் தொழிலாளர்கள்
பழைய வட்டம் புதிய திசைகள்
என்னும் பெயரில் வேண்டாம்
உருப்படியான திட்டத்தில்
இறங்கிடுவோம்
ஜெனிவாத் தீர்மானமும்
இலண்டனில் மஹிந்தரை விரட்டலும்
பட்டினியில் கதறும் குழந்தை முன்
ஆட்டிடும் கிலுகிலுப்பைகள்
சுதந்திரப் பட்டினியை தீர்க்க
பழைய வட்டங்களை விட்டு
புதுத் திட்டங்களில் இணைந்திடுவோம்
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...


-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
-
F-22, F-35 ஆகிய உலகின் மிகச் சிறந்த ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை உற்பத்தி செய்யும் அமெரிக்கா மிக மிக இரகசியமாக தனது அடுத்த தலைமுறைப் ...
-
இரண்டாயிரமாம் ஆண்டு முதல் நோர்வேயின் இலங்கைக்கான அமைதித் தூதுவர் எனவும் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான அமைதிப் பே...

2 comments:
//ஜெனிவாத் தீர்மானமும்
இலண்டனில் மஹிந்தரை விரட்டலும்
பட்டினியில் கதறும் குழந்தை முன்
ஆட்டிடும் கிலுகிலுப்பைகள்//
Absoulutly correct
முள்ளி வாய்க்காலின் பின்
முளைத்திருக்கின்றன
பல காளான்கள்
எம்மை மீண்டும்
பழமைக்குள் கொண்டு செல்ல.
Post a comment