Tuesday, 22 May 2012

சரத் பொன்சேக்கா: ஒரு தறுதலையின் விடுதலையின் பின்னணியில் நடந்தவை

காலம்: 08-02-2010 இரவு 10 மணி,
இடம்
: இராஜ்கீய மாவத்த( ரோயல் கல்லூரிக்கு எதிரே), கொழும்பு.
பாத்திரங்கள்
: சரத் பொன்சேக்கா, மனோகணேசன், சோமவன்ச அமரசிங்க, ரவு ஹக்கீம், கப்டன் சேனக்க ஹரிப்பிரிய சில்வா.
இப்படிப்பட்டவர்கள் இப்படிப்பட்ட இடத்தில் ஒரு கலந்துரையாடாலைச் செய்துகொண்டிருக்கும் போது இராணுவக் காவற்துறைப் பிரிகேடியர் விஜயசிரி, மேஜர் ஜெனரல் மானாவடுகே ஆகியோர் தலைமையில் ஒரு இராணுவக் காவல்துறைப் படையினர் அங்கு நுழைந்தனர். அவர்களை எதிர்த்துப் பேசிய கப்டன் சேனக்க ஹரிப்பிரிய சில்வா என்னும் சரத் பொன்சேகாவின் ஊடகத்துறைப் பேச்சாளர் முதலில் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து சரத் பொன்சேக்காவிற்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப் பட்டது:
  • இராணுவத்தில் இருந்தபோது அரசியலில் ஈடுபட்டமை.
  • பதவியில் இருக்கும்போது ஆயுதப் படைத் தலைவருக்கு( மஹிந்த ராஜபக்ச) எதிராக சதிசெய்தமை.
  • படையிலிருந்து தப்பி ஓடிய 1500இற்கு மேற்பட்டோரை தனனுடன் வைத்திருந்தமை.
  • படைத்துறை கொள்வனவுகளில் முறைகேடாக நடந்தமை.
ஆகியவை சரத் புரிந்த குற்றங்களாக தெரிவிக்கப் பட்டது. அதை எதிர்த்து உரையாடி கைது செய்யப்பட மறுத்தமையால் சரத் பொன்சேக்கா பலவந்தமாக இழுத்துச் செல்லப் பட்டார்.
இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தான் தயார் என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா கைது செய்யப்படுவதற்கு முதல் நாள் கொழும்பில் செய்தியாளர்களிடம் ஒரு அதிரடி அறிக்கை விட்டார். பொன்சேகா மேலும் தெரிவிக்கையில் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக எனக்கு தெரிந்தவை, நான் கேள்விப்பட்டவை, எனக்கு தெரியப்படுத்தப் பட்டவை அனைத்தையும் நிச்சயம் வெளியிடவுள்ளேன்.
போர்க்குற்றங்கள் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும்"
இந்த அறிக்கையை விட்டதால்தான கைது செய்யப்பட்டார் என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் உண்மையில் தான் கைது செய்யப் படப் போகிறேன் எபதை அறிந்தே சரத் பொன்சேக்கா இந்த அறிக்கையை விட்டார். சரத் பொன்சேக்காவிற்கு ஆதரவானதாகக் கருதப்படும் சிங்கப் படையணியைக் கலைத்த பின்னரே அவரைக் கைதுசெய்வதாக அரசு திட்டமிட்டிருந்ததாம். ஆனால் அவர் அதற்கு முன் போர்குற்றங்கள் சம்பந்தமாக பகிரங்கப் படுத்தலாம் என்று அஞ்சியே அவசரக் கைது நடந்தேறியது.

சட்டப் பிரச்சனை

இராணுவ சேவையில் இல்லாத ஒருவரை இராணுவக் காவற்துறையினர் கைது செய்ய முடியாது என்று சரத் பொன்சேக்கா சட்டப் பிரச்சனையை எழுப்பி முரண்பட்டார். அதனால் அவர் தாக்கி நிலத்தில் விழுத்தப் பட்டு காலில்பிடித்து இழுத்துச் செல்லப் பட்டார்.
2009 நவெம்பரில் சரத் பொன்சேக்கா அமெரிக்காவில் இருந்து வந்தவுடன் ராஜபக்சே சகோதரர்கள் சரத் பொன்சேக்காவிற்குப் பாதுகாப்பு அதிகரிப்பது என்ற போர்வையில் அவருக்கு கஜபா படையணியினரை (Gajaba Regiment) அவரைச் சுற்றி வளைத்துவிட்டனர். அவருக்கு இதுவரை சிங்க படையணியினர்(Singhe Regiment) பாதுகாப்பு வழங்கி வந்தனர். அதை அகற்றும் படியும் உத்தரவிடப் பட்டது. ஆனால் சரத் சிங்கப் படையணியை தொடர்ந்து தனக்குப் பாதுகாப்பு வழங்கும்படி உத்தரவு இட்டிருந்தார்.

தேர்தல் தோல்வியை ஏற்க மறுத்த சரத் பொன்சேக்கா

2010 ஜனவரி இலங்கைக் குடியரசுத் தேர்தலில் போட்டியிட்ட சரத் பொன்சேக்கா அதில் தோல்வி கண்டார். தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடக்கும் போது அவர் தங்கியிருந்த உல்லாச விடுதியில் இலங்கைப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு காவல் வைக்கப்படிருந்தார். தேர்தல் முடிவுகளை சரத் ஏற்க மறுத்திருந்தார். தேர்தல் ஆணையாளர் துப்பாக்கி முனையில் வைக்கப்பட்டு தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்ததாக குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இலங்கையின் உயர் பௌத்த பீடாதிபதிகள் தேர்தல் மீள நடத்தைப்பட வேண்டும் என்றனர். அது மட்டுமல்ல தேர்தலின் போது தடுத்து வைத்திருக்கப் பட்ட ரணில் விகிரமசிங்கே அமெரிக்கத் தலையீட்டால் விடுவிக்கப் பட்டார். தேர்தலைப் பற்றி டெய்லி மிரர் இணையத்தளம் இப்படித் தெரிவித்தது: The election monitoring body Centre for Monitoring Election Violence (CMEV) reported that some counting officers and agents of the main opposition candidate at counting stations in Anuradhapura, Polonnaruwa, Kurunegala and Matale had been physically assaulted when they were carrying out their duties.

வாக்களிக்க முடியாத சரத் பொன்சேக்கா.
இலங்கைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளர்களில் ஒருவரான சரத் பொன்சேக்கா வாக்களிக்கவில்லை. 2008-ம் ஆண்டு வாக்காளர் பதிவேட்டில் தனது பெயரைப் பதிவுசெய்ததாக அவர் கூறினார். ஆனாலும் அவர் பெயர் வாக்காளர் பதிவேட்டில் இடம் பெற்றிருக்கவில்லை.

மஹிந்த அயோக்கியன், தேர்தல் வெற்றியைத் திருடியவன், பொறாமை பிடித்தவன்
ராஜபக்ச சகோதரர்கள் சர்த் பொன்சேக்காவை சிறையில் போட்ட பின்னர் சனல்-4 தொலைக்கட்சிக்கு இரகசியமாக சிறையில் இருந்து சரத் பொன்சேக்கா பேட்டியளித்துள்ளார். சனல்-4 இன் சார்பாக சிறையில் இருக்கும் சரத் பொன்சேக்காவிற்கு இரகசியமாகக் கேள்விகள் அனுப்பப் பட்டன. அவற்றிற்கு சரத் எழுத்து மூலம் பதில் அளித்துள்ளார்.
தனது பதிலில் இலங்கைக் குடியரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்சவை அயோக்கியன் என்றும் தேர்தல் வெற்றியைத் திருடியவன் என்றும் சரத் பொன்சேக்கா குற்றம் சுமத்தியுள்ளார்.
"But I will never give up exposing rogue president for sake of country," இப்படிக் கூறினார் சரத்.
"He is jealous of me as I got more votes than him although he rigged he knows that I can challenge him [sic]," the general wrote, adding that he believed he was being held illegally and that his life remains at risk.
இப்படிப்பட்ட கடுமையான வாசகங்களை சரத் பாவித்துள்ளார்.


இந்தியாவின் குட்டை அம்பலப்படுத்திய சரத்
இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் ஒரு போர் நிறுத்தத்தை உண்டாக்கி சரணடைய முயன்ற விடுதலைப் புலிகளின் அரசியற் துறைப் பிரிவினரையும் படுகாயப் பட்ட போராளிகளையும் பாதுகாப்பாக சரணடைய அமெரிக்கா நோர்வே மூலம் இலங்கைக்குக் கொடுத்த அழுத்தம் இந்தியாவின் உதவியுடன் தவிர்ககப் பட்டது என்று சரத் பொன்சேக்கா வெளியிட்ட தகவல் இந்தியாவின் கபடத்தை அம்பலப் படுத்தியது. பல நோர்டிக் நாடுகள் இறுதிப் போரில் போர் நிறுத்தம் வேண்டி இலங்கையுடன் தொடர்பு கொண்டது உண்மை. இலங்கைக்குப் பின்னால் இந்தியா நின்றபடியால் அவை எல்லாம் பயனற்றுப் போயின.

கருணாநிதியின் கபட நாடகத்தை அம்பலப் படுத்தினார் சரத்
சரத் பொன்சேக்கா Outlook India விற்கு வழங்கிய பேட்டியில் கலைஞர் கருணாநிதியின் குட்டு உடைபட்டிருக்கிறது. தமிழ்நாட்டு அரசியல்வாதிகளால் அழுத்தங்கள் கொடுக்கப் பட்ட போதும் இந்தியா தமது நடவடிக்கைகளில் தேர்தல் வேளையில் கூட தலையிடவில்லை என்று சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.
Did India help with satellites or intelligence inputs? என்று சரத் பொன்ச்சேக்காவிடம் கேட்கக்ப் பட்டபோது அவர் வழங்கிய பதில்:Not really, but even (if) they did...I can’t tell you (laughs). We didn’t expect that kind of support from India. India was always against the terrorism here. So, despite the pressure which Tamil Nadu politicians had put on the central government even when general elections were being held in India (May ’09), India didn’t interfere in our operations.
கருணாநிதியின் உண்ணாவிரதத்தின் பின் ஒருநாளில் மட்டும் இருபதினாயிரத்திற்கு மேலான தமிழர்கள் கொல்லப் பட்டனர். இந்தக் கபட நாடக்த்திற்கும் கருணாநிதி தனக்குத் தானே விருது கொடுத்துக் கொள்ளலாம்.

பேரினவாதி சரத்
சரத் பொன்சேக்கா கனடாவில் கூறியது:"I strongly believe, that this country belongs to the Sinhalese, but there are minority communities and we treat them like our people...We being the majority of the country, 75%, we will never give in and we have the right to protect this country...We are also a strong nation ... They (the minorities) can live in this country with us. “ தமிழர்கள் எங்கள் நாட்டில் வாழலாம் ஆள முடியாது.

போருக்குப் பின்னர் இலங்கை ராஜபக்சேக்கள் தலைமையில் சீனாவின் பக்கம் சார்வதை அமெரிக்காவிற்கு பெரும் எரிச்சலை மூட்டியது. அவர்களுக்கு கிடைத்த துருப்புச் சீட்டு தமிழர்களுக்கு எதிரான போரில் ராஜபக்சேக்கள் செய்த போர்க்குற்றம். அதை வைத்து இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழக்த்தில் தீர்மானம் நிறைவேற்றினர். இலங்கையில் சீன ஆதீக்கத்தைக் குறைக்க இந்தியாவையும் தம்முடன் இணைத்துள்ளது அமெரிக்கா. அமெரிக்கா இலங்கைக்கு பகிரங்கமாக போர்க்குற்றம் தொடர்பாக விசாரனை தேவை என்று பலதடவை சொல்கின்றபோதும், அதன் உள் நோக்கம் ராஜபக்சேக்களை தமக்கு ஆதரவாக கொண்டு வருவது அல்லது அவர்களை ஆட்சியில் இருந்து விரட்டி ரனின் விக்கிரமசிங்கவையும் சரத் பொன்சேக்காவையும் குடியரசுத் தலைவராகவும் பிரதம மந்திரியாகவும் ஆக்குவதே. சரத் பொன்சேக்கா விடுதலை செய்யப்பட வேண்டும் என்று ராஜபக்சேக்களுக்கு அமெரிக்கா திரை மறைவில் கடும் அழுத்தம் பிரயோகித்து வந்தது.

ராஜபக்சேக்களுக்குள் முரண்பாடு
சரத் பொன்சேக்காவை விடுதலை செய்ய வேண்டும் என கோத்தபாயவும் விடுதலை செய்யக் கூடாது என மஹிந்தவும் கருத்து முரண்பாடு கொண்டிருந்தார்களாம். இதனால் சரத் பொன்சேக்காவின் விடுதலை தொடர்பாக பல முரண்பாடான செய்திகளும் விடுதலையாவதில் பல இழுபறிகளும் நடந்து கொண்டிருந்தன. சரத் பொன்சேக்காவின் விடுதலையில் அதிக அக்கறை காட்டியது அமெரிக்காவே. சரத் பொன்சேக்காவை சிறையில் இருந்து விடுவிக்காமல் அவரின் சுகவீனம் காரணமாக தனியார் மருத்துவ மனையில் வைத்திருக்கும் முன் மொழிவு ராஜபக்சேக்களாம் முன்வைக்கப்பட்டதாம் ஆனால் அதில் அமெரிக்கவிற்கு திருப்தி இருந்திருக்க வில்லையாம். சரத் பொன்சேக்காவை குடிமக்களுக்கு உரிய உரிமையின்று விடுதலை செய்வது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. அதனால் அவர் அரசியலில் ராஜபக்சேக்களுக்கு எதிராக செயற்படுவதை தடுக்கலாம். மஹிந்த தனது நண்பர் ஒருவரிடம் சரத்தைப் பல்லுப் புடுங்கிய பாம்பாகவே வெளியில் விடுவேன். அது படமெடுத்தாடலாம் ஆனால் கடிக்க முடியாது என்று தெரிவித்திருந்தார். இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரிஸ் அமெரிக்கா போகமுன்னர் சரத் பொன்சேக்கா விடுதலை செய்யப்பட வேண்டும் என்று அமெரிக்கா அழுத்தம் கொடுத்திருந்ததாம். அது நடக்கவில்லை. போர் வெற்றி விழாவில் மஹிந்த 19-ம் திகதி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அது நடக்கவில்லை சரத்தின் விடுதலையில் இழுபறி நடந்து கொண்டிருக்கும் வேளையில் இலங்கைக்கு இன்னொரு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இலங்கையில் தமிழர்கள் மத்தியில் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்க்கோவின் ஆசியப் பிராந்தியப் பிரதிநிதியால் ஒரு அறிக்கை விடப்பட்டது. அமெரிக்கா பொறுமை இழப்பதை உணர்ந்த ராஜபக்சேக்கள் அவரை இறுதியில் விடுதலை செய்தனர். ஆனால் சரத் பொன்சேக்கா தேர்தலில் போட்டியிடவோ அல்லது வாக்களிக்கவோ முடியாது என்று சொல்லப்படுகிறது. மஹிந்த எந்த அடிப்படையில் சரத்தை விடுதலை செய்தார் என்பதில் இதுவரை ஒரு குழப்பம் நிலவுகிறது. சரத் பொன்சேக்காவின் இரு புதல்விகள் அமெரிக்காவில் இருந்து வந்து தந்தையை இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்ன்னர் சந்தித்தனர்.

அமெரிக்கா உட்படப் பல நாடுகளின் அழுத்தம், சரத் பொன்சேக்காவின் உடல் ஆரோக்கியமின்மை ஆகியவை சரத்தை விடுவிக்கக் காரணமாக இருந்த போதும் இன்னொரு காரணமும் உண்டு. எதிர்க்கட்சிகளிடை பல பிளவுகள் இப்போது உண்டு. அந்தப் பிளவு சரத் வெளியில் இருந்து அரசியலில் ஈடுபட்டால் மேலும் மோசமடையும் என ராஜபக்ச சகோதரர்கள் நம்புகின்றனர்.

தமிழர்களைப் பொறுத்தவரை போர்க்குற்றம் புரிந்ததாகக் கருதப்படும் ஒருவர் போர்க்குற்றம் புரிந்ததாகக் கருதப்படும் இன்னொருவரை விடுதலை செய்திருக்கிறார். தேர்தலில் தோல்வியுற்ற பின்னர் தான் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தப் போகிறேன் என்று சொன்ன சரத் அதைச் செய்வாரா?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...