அமெரிக்க கடற்படையின் சீல் பிரிவினரால் கொல்லப்பட்ட இசுலாமிய அடிப்படைவாதியும் விடுதலைப் போராட்டத் தலைவருமாகிய ஒசாமா பின் லாடன் பாக்கிஸ்த்தானில் மறைந்திருந்த இன்னொரு மாளிகையை பாக்கிஸ்த்தானிய உளவுத்துறையினர் கண்டறிந்துள்ளனர். பாக்கிஸ்த்தான் ஆப்க்கனிஸ்த்தான் எல்லை நகரமான ஹரிப்பூரில் ஒரு சேறு நிறைந்த ஒரு வீதியில் ஒரு சாதாரண இரு மாடி வீட்டில் பின் லாடன் சுமார் ஒரு ஆண்டுகளாக மறைந்திருந்தார். அந்த வீட்டில் ஒரு நிலக் கீழ் அறையும் இருந்தது.
பாக்கிஸ்தானின் ஓய்வு பெற்ற பிரிகேடியர் ஷௌகத் கதீர் கடந்த எட்டு மாதங்களாக பின் லாடனின் இறுதிக்கால நகர்வுகளைத் தேடி வருகிறார். பின் லாடனின் இளைய மனைவி அம்ல் அஹமட் அட்பெல் ஃபற்றா அல்-சதாவிடமிருந்து பெற்ற தகவலகளின் அடிப்படையிலேயே இந்த மாளிகை கண்டறியப்பட்டது. இந்த மாளிகையில் இருந்து 2005-ம் ஆண்டு பின் லாடன் அவர் கடைசியாக இருந்த அபோட்டாபாத் மாளிகைக்கு மாறினார்.
2001-ம் ஆண்டு கிழக்கு ஆப்கானிஸ்தான் டோரா போரா மலைத் தொடர் பகுதியில் இருந்து பின் லாடன் பாக்கிஸ்தானிற்குள் நுழைந்தார். அவர் ஒன்பது ஆண்டுகளில் பாக்கிஸ்தானில் ஐந்து வேறு வேறு வீடுகளில் தங்கியிருந்தார். அப்போது அவருக்கு 4 பிள்ளைகளும் பிறந்தன. பின் லாடன் பாக்கிஸ்தானில் தங்கியிருந்தமை பாக்கிஸ்தானிய அதிகாரிகளுக்கு தெரிந்து இருந்தமைக்கான ஆதாரங்கள் எதுவும் தமக்கு இதுவரை கிடைக்கவில்லை என ஐக்கிய அமெரிக்காவின் உளவுத்துறை தெரிவித்துள்ளது.
பின் லாடன் இருந்த மாளிகையை அவரின் தொடர்பாடல் ஆளாகச் செயற்பட்ட அபு அஹமட் அல்-குவைத்தி என்பவர் வாடகைக்கு எடுத்திருந்தார்.
உக்கிரம் அடைந்த சக்களத்திச் சண்டை
29 வயதான் பின் லாடனின் இளைய மனைவி அமல் சதாவிற்கும் 61வயதான மூத்த மனைவி கைரியாவிற்கும் இடையில் நடந்த போட்டிதான் பின் லாடனின் இருப்பிடம் தொடர்பான செய்திகள் கசியக் காரணமாக இருந்தன என பாக்கிஸ்தானிய உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ அறிந்து கொண்டது. தற்போது பாக்கிஸ்தானியச் சிறையில் இருக்கும் இவர்கள் ஒரு பெரும் குடுமிச் சண்டையின் பின்னர் தனித்தனியான சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மூத்த மனைவியே பின் லாடனைக் காட்டிக் கொடுத்ததாக இளைய மனைவி பாக்கிஸ்த்தான் உளவுத் துறைக்குத் தெரிவித்துள்ளார்.
பின் லாடன் குடும்பத்தினருக்கு 45 நாள் சிறைவாசம்
பாக்கிஸ்த்தானில் சட்ட விரோதமாகக் குடியிருந்தமைக்காக பின் லாடன் மனைவிகள் பிள்ளைகள் உட்படப் 16 பேருக்கு பாக்கிஸ்த்தான் நீதி மன்றம் 45 நாள் சிறைத்தண்டனையை இன்று(02-04-2012) விதித்துள்ளதுடன் 10,000ரூபா அபராதமும் செலுத்தும் படி கட்டளை இட்டது.. சட்டப்படி இவர்கள் 14 நாட்கள் மட்டு மே சிறையில் இருக்க வேண்டி இருக்கும். இதன் பின்னர் இவர்கள் நாடு கடத்தப்பட வேண்டும். பாக்கிஸ்த்தான் அரசு இவர்களுக்கு ஒரு நீண்ட சிறைத்தணடனை வேண்டும் என்று எதிர்பார்த்தது. அது பாக்கிஸ்தான் உளவுத் துறைக்கு இவர்கள் பாக்கிஸ்தானுக்குள் இருந்தமை தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற உதவியாக இருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...


-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
-
ஆரம்பத்தில் கிரேக்கர் கருங்கடலை உபசரிப்பில்லாக் கடல் என அழைத்தனர். அதனூடாக பயணிப்பது சிரமம் என்பதாலும் அதன் கரையோரங்களில் வாழ்பவர்கள் எத...
-
F-22, F-35 ஆகிய உலகின் மிகச் சிறந்த ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை உற்பத்தி செய்யும் அமெரிக்கா மிக மிக இரகசியமாக தனது அடுத்த தலைமுறைப் ...

1 comment:
Latest information about Laden, and his old living in Pakistan hiding places and buildings.
Post a comment