Tuesday, 20 March 2012

ஜெனீவா தீர்மானம்: மீண்டும் கோபாலபுரம்-கொழும்பு-டில்லி சதி.

2009 மே மாதம் இந்தியப் பாராளமன்றத்திற்கான தேர்தல் பிரச்சாரங்கள் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்க இந்தியாவின் உதவியுடன் இலங்கையில் பெரும் இன அழிப்புப் போர் நடந்து கொண்டிருக்கின்றது. இந்தியப் பொதுத் தேர்தலில் காங்கிரசுக் கட்சி தோற்றால் காங்கிரசுத் தலைகளிற்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து ஏற்படலாம் என்ற பயம் காங்கிரசின் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டு விட்டது. இந்தியப் பொதுத் தேர்தலுக்கு முன்னர் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரை அப்பாவித் தமிழர்களின் உயிரிழப்பைக் கருத்தில் கொள்ளாமல் முடிக்க வேண்டும் என்று இலங்கை மீது நிர்ப்பந்தம் பிரயோகிக்கப்பட்டது. இலங்கைப் படைத்துறை ஆகஸ்ட் மாதம் முடிக்க திட்டமிட்டு இருந்த போர் மே மாதம் முடிக்க தமிழர்கள் மீது நடந்து கொண்டிருந்த தாக்குதல் மேலும் உக்கிரப்படுத்தப்பட்டது. தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் தமிழர்கள் மீது ஏவப்பட்டன. இலங்கையில் தமிழர்கள் பெரிய அளவில் அழிக்கப்படுவது தேர்தலில் தமது வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும் என்று கருணாநிதியும் ப சிதம்பரமும் அதிக அக்கறை கொண்டனர்.

தமிழர்களின் சுதந்திரப் போரை வேரோடு அறுப்போம் என இந்தியப் பாதுகாப்புத் துறை ஆலோசகர் நாராயணனும் வெளியுறவுத் துறைச் செயலர் சிவ சங்கர மேனனும் திட சங்கற்பம் பூண்டு கொண்டு செயற்பட்டுக் கொண்டிருந்தனர். ப. சிதம்பரம், மு கருணாநிதி ஆகியோரின் தேர்தல் கவலையை நீக்கப் பெரிய சதி ஒன்று உருவாக்கப்பட்டது. போரில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் மிகவும் சுருங்கிவிட்டது. இதை வாய்ப்பாக வைத்துச் சதி தீட்டப்பட்டது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் மிகவும் சிறியதாகையாலும் அதை நாலு புறமும் சிங்களப்படைகளும் அதற்குப் பின்பலமாக ஈழத்துக்குள் பின்கதவால் நுழைந்த்த ஆரியப் படைகளும் நின்று கொண்டிருந்தமையாலும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக கனரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்த முடியாத சூழல் உருவாகி விட்டது. ஒரு சிங்களப் படையணி ஏவு கணைகளை வீசினால் அது விடுதலைப் புலிகளின் பிரதேசத்தை மற்றப் பக்கத்தில் சூழ்ந்திருக்கும் சிங்களப்படையணி மீதுதான் விழும். உடனே கருணாநிதி ஒரு உண்ணாவிரத் நாடகத்தை ஆரம்பித்தார். அவர் உண்ணாவிரதம் செய்யும் போது இலங்கை அரசு தாம் இனி கனரக ஆயுதத்தைப் பிரயோகிக்க மாட்டோம் என்று அறிவித்தது. அது உடனே திரித்து இலங்கை அரசு போர் நிறுத்தத்தை அறிவித்து விட்டது என்று தமிழ்நாட்டில் பொய்யாக ஊடகங்களிலும் தேர்தல் பிரச்சார மேடைகளிலும் பரப்புரை செய்யப்பட்டது. கருணாநிதி தனது நாலரை மணித்தியால உண்ணா விரதத்தால் போரை நிறுத்தி விட்டார் அங்கு இப்போது அமைதி நிலவுகிறது என்ற பொய்ப்பிரச் சாரத்தால் 2009 மே 13-ம் திகதி நடந்த இந்தியப் பாராளமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ்-திமுக கூட்டணை வெற்றி பெற்றது. இந்தியப் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற மஹிந்த ராஜபக்சே உதவினார் என்று இலங்கை அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்திருந்தார்.

பெப்ரவரி மாதம் 27-ம் திகதி தொடங்கி ஜெனீவாவில் நடந்து கொண்டிருக்கும்  மனித உரிமைக்கழகத்தின் 19வது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக முன்மொழியப்பட்ட தீர்மானத்தை எதிர்ப்பது என்று இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் ஏற்கனவே முடிவு செய்ந்திருந்தனர். அதை இந்தியாவின் தற்போதைய  நிதியமைச்சர் பிரணாப் முஹர்ஜீ(இவர் 2009இல் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்து சிங்களவர்களுடன் பெரிதும் ஒத்துழைத்தவர்)  ஏற்கனவே பகிரங்கமாக அறிவித்து விட்டார். இலங்கைக்கு ஆதரவாக இந்தியா செயற்பட்டால் 2012இல் நடக்க இருக்கும் இந்தியப் பாராளமன்றத் தேர்தலில் ப சிதம்பரம் சிவகங்கைத் தொகுதியில் தில்லு முல்லு செய்தாலும் வெல்ல முடியாத நிலை ஏற்படும். காங்கிரசுடன் சேர்ந்தால் திமுக ஒரு தொகுதியில் தன்னும் வெல்ல முடியாத நிலை ஏற்படும். இதனால் ப சிதம்பரம் அவசரமாக சோனியா காந்தியைத் தேடி ஓடினார். ஆனால் சோனியாவோ ஏற்கனவே மஹிந்த ராஜபக்சவால் கடுமையாக மிரட்டப்பட்டுள்ளார். இந்தியா இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்தால் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்புப் போரில் இந்தியா செய்த பங்களிப்புக்களை பகிரங்கப் படுத்துவேன் என்பதே மஹிந்த விடுக்கும் மிரட்டல். ஆதரித்தால் இன அழிப்புக்கு செய்த பங்களிப்பு அம்பலமாகும் ஆதரிக்காவிட்டால் தமிழ்நாட்டில் 2014 நடக்கவிருக்கும் தேர்தலில் படுதோல்வியைச் சந்திக்க வேண்டும்.

அடுத்த சிதம்பரச் சதி
இலங்கையிடம் இந்தியா தான் இலங்கைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமைக் கழகக் கூட்டத் தொடரில் வரவிருக்கும் பிரேரணையை எதிர்ப்பதாயின் இலங்கை ராஜிவ்-ஜேஆர் ஒப்பந்தம் மூலம் ஏற்படுத்தப்பட்ட இலங்கை அரசியல் அமைப்பிற்கு செய்யப் பட்ட 13வது திருத்தத்தை அமூலாக்க வேண்டும் என்று ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளது என்ற ஒரு பொய்யான செய்தி இந்தியத் தரப்பால் ஏற்கனவே பரப்பப்பட்டுள்ளது. ப. சிதம்பரம் சோனியாவைச் சந்தித்தார் என்ற செய்தியும் வெளிவந்தது.

மீண்டும் பொய்! மீண்டும் உண்ணாவிரத நாடகம்.
இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்கப் போகிறது என்று இந்தியப் பிரதமர் அறிவித்து விட்டார் என்ற செய்தி நேற்று (மார்ச் 19-ம்திகதி) பொய்யாகப் பரப்பப்பட்டுவிட்டது. இந்தியப் பிரதமர் சொன்ன திருவாசகம் இதுதான்:
  • “We are inclined to vote in favour of a resolution that, we hope, will advance our objective, namely, the achievement of the future for the Tamil community in Sri Lanka that is marked by equality, dignity, justice and self-respect.”
எமது நோக்கமான இலங்கை வாழ் தமிழ் சமூகத்தின் எதிர்காலத்தை சமத்துவம், தன்மானம், நீதி, சுய மரியாதை அடிப்படையில் நிறைவேற்றக் கூடிய ஒரு தீர்மானத்திற்குச் சார்பாக நாம் வாக்களிக்கும் சார்பு நிலையில் இருக்கிறோம். கருணாநிதி இந்த அறிக்கை மன்மோகன் சிங் வெளிவிடப்போகிறார் என்று அறிந்து கொண்டு தனது உண்ணாவிரத நாடகத்தை ஆரம்பித்தார். அவரைப் பாராட்டும் படங்களும் முன்கூட்டியே தயாரிக்கப்பட்டன.
மன்மோகன் சிங் அறிக்கைவிட்டவுடன் திமுக வெளிவிட்ட படம். முன் கூட்டியே தயாரிக்கப்பட்டதா?
இங்கு சில சந்தேகங்கள் எழுகின்றன:
மன்மோகன் சிங் We will vote என்று சொல்லாமல் ஏன் We are inclined to voteஎன்று சொன்னார்?
இலங்கையில் நடந்ததாகக் கருதப்படும் போர்க்குற்றம் தொடர்பாக ஒரு பன்னாட்டு விசாரணை தேவை என்ற தீர்மானம் வந்தால் இந்தியா ஆதரிக்குமா? இதற்கான பதில் மன்மோகன் சிங்கின் பதிலில் இல்லை.
கைது செய்து வைக்கப்பட்டிருக்கும் பாத்தாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்களின் கதி என்ன?
பல இலட்சம் சிங்களப் படைகளால் தமிழர்களின் நிலத்தில் ஆக்கிரமித்துள்ளனர். தமிழர்கள் துப்பாக்கி முனையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தமிழர்களின் நிலங்களில் இருந்து சிங்களப்படைகள் வெளியேற்றப்படும் என்ற தீர்மானம் வந்தால் இந்தியா என்ன செய்யும்? முன்பு செய்தது போல் மீண்டும் சதீஸ் நம்பியாரை இலங்கைக்கு அனுப்பு சிங்களப்படையினர் தமிழர்கள் வாழும் பகுதியில் இருந்து சிங்களப்படையினர் வெளியேறக் கூடாது என்று சொல்லுமா?
மன் மோகன் சிங்கின் அறிக்கையில் அதிகாரப் பரவலாக்கம் என்ற சொற்தொடர் உள்ளடக்கப் படாதது ஏன்? அது சிங்களவர்களை ஆத்திரப்படுத்தும் என்றா அல்லது டில்லித் தென்மண்டல அதிகார மையத்தில் இருக்கும் பார்ப்பனர்களுக்கு அது பிடிக்காது என்றா?
ஜெனிவாவில் நடந்து கொண்டிருக்கும்  மனித உரிமைக்கழகத்தின் 19வது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக முன்மொழியப்பட்ட தீர்மானத்தில் என்ன உள்ளடக்கப்படவேண்டும் என்பது பற்றி அமெரிக்க-இந்திய அதிகாரிகள் தொடார்ந்து விவாதித்துக் கொண்டிருக்கையில் வரவிருக்கும் தீர்மான முன்மொழிவில் என்ன இடம்பெறப்போகிறது என்று தனக்குத் தெரியாது என மன்மோகன் சிங் பொய் சொல்வது ஏன்?

இன்னும் ஓரிரு தினங்களில் பல உண்மைகள் வெளிவரும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...