Sunday, 4 March 2012

ஜெனீவாவில் இலங்கையை இந்தியா ஆதரிக்கும்.

சிங்களப் படையும் இந்தியப்படையும்
இலங்கையில் சிங்களப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் தொடங்கும். சிங்களப் படைகளின் கைகள் ஓங்கி அவர்கள் முன்னேறும் நிலை ஏற்பட்டால் விடுதலைப் புலிகள் பின் வாங்குவது போல் பின்வாங்கிக் கொண்டே சிங்களப் படைகள் மீது தாக்குதல் தொடுத்து ஆளணி இழப்புக்களை சிங்களப்படைகளுக்கு ஏற்படுத்துவார்கள். முன்னேறும் படைகள் மீது அவ்வப்போது பக்கவாட்டில் ஊடறுப்புத் தாக்குதல்களும் பின்னால் சென்று பின்னிருந்து தாக்குதல்களும்  நடக்கும். இதனால் ஏற்படும் ஆளணி இழப்புக்களையும் காயப்பட்டு களமுனையில் இருந்து வெளியேறும் ஆளணிக் குறைவையும் சமாளிக்க முடியாமல் ஒரு கட்டத்தில் சிங்களப்படைகள் பின்வாங்கும். பல சிங்களப் படையினர் உயிர் தப்புவதற்காக தம்மைத் தாமே காயப் படுத்திக்கொண்டு களமுனையில் இருந்து வெளியேறுவர். பலர் தப்பி ஓடுவர்.

2008இலும் 2009இலும் கடும் போர் நடந்த போது சிங்களப்படைகளுக்கு ஏற்பட்ட ஆளணி இழப்புக்களை இலங்கையின் அயல் நாடு ஒன்றில் இருந்து வந்த படையினர் ஈடு செய்தனர். முதலில் 10,000 படையினரும் பின்னர் இன்னொரு 10,000 படையினரும் அந்த அயல் நாட்டில் இருந்து வந்தனர். பல சிங்கள ஊடகங்கள் இதை அம்பலப்படுத்தின. அவை பொட்டு வைத்த படையினரும் தலைப்பாகை அணிந்த படையினரும் இலங்கையில் தமிழர்க்கு எதிரான போரில் பங்கேற்பதை புகைப்படங்கள் காணொளிகள் மூலம் அம்பலப் படுத்தின. இப்படைகள் எந்த நாட்டில் இருந்து வந்தன என்பதை எம்மால் இலகுவில் ஊகிக்க முடியும்.

மனித உரிமைக் கழகத்தில் எருமையாகச் செயற்பட்ட இந்தியா
2009மே மாதத்தில் இலங்கைப் போர் முடிந்தவுடன் அதற்கு இந்தியா வழங்கிய பங்களிப்பு சரித்திரதில் இடம்பெறாமல முடி மறைக்கப்படலாம் என ஒரு படைத்துறை ஆய்வாளர் எழுதினார். இலங்கையில் அதிபர் மஹிந்த ராஜ்பக்ச உடபடப் பலர் நாம் இந்தியாவின் போரை நடாத்தி முடித்தோம் என்றும் இந்தியாவின் உதவியின்றி நம்மால் போரை நடாத்தி முடித்திருக்க முடியாது என்றும் தெரிவித்து வருகின்றனர். போர் முடிந்தவுடன் இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவை அழைத்து இந்தியா தன்னிடம் இலங்கை போர்க்குற்றம் புரிந்தமைக்கான செய்மதி ஆதாரப் படங்கள் இருப்பதாகக் கூறி இனி நீங்கள் எம் சொற்படி கேட்க வேண்டும் என்று கூறினர். இந்தியாவின் நோக்கம் இலங்கையில் 13வது திருத்தத்தை அமூல் படுத்த இந்தியா சொல்வதை இலங்கை கேட்க வேண்டும் என்பதே.  அப்போது இலங்கை போரின் போது கொழும்பு டில்லி இடையிலான உரையாடல்களின் ஒலிப்பதிவுகள் தம்மிடம் இருப்பதாகக் கூறி அதை தாம் அம்பலப் படுத்துவோம் என்றார். அதன் பின்னர் இந்தியா அடங்கி விட்டது. இதன் பின்னர் இலங்கை சொற்படி ஆடிய இந்தியா 2009இல் ஜெனிவாவில் நடந்த மனித உரிமைக் கழகக் கூட்டத் தொடரில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் போரின் போது மனித உரிமைகள் மீறியதைக் கண்டிக்கும் தீர்மானத்தை மனித உரிமைக் கழக நாடுகளிடை கடும் பிரசாரம் செய்து அதை இலங்கைக்குப் பாராட்டும் தீர்மானமாக மாற்றியது. அப்படிச் செய்ததை இலங்கைப் போரின் பொறுப்புக் கூறல் தொடர்பாக அமைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு பெரிய தவறு எனச் சுட்டிக்காட்டியது.

இப்போது பெப்ரவரி 27-ம் திகதி முதல் மார்ச் 23-ம் திகதி வரை ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. மேற்கு நாடுகள் முதலில் இலங்கை அரசின் மீளிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை அடிப்படையில் தீர்மான முன் மொழிவை வரைய இருந்தன. இலங்கைக்கு  கணிசமான ஆதரவு கிடைக்காது என்பதை உணர்ந்து கொண்ட மேற்கு நாடுகள் இப்போது தீர்மானத்தை ஐநா நிபுணர்குழு அறிக்கையை அடிப்படையாக வைத்து தீர்மான முன் மொழிவை வரையும் சாத்தியம் இருக்கிறது.


இலங்கையின் சில்லறைக் கைக்கூலியாக இந்தியா
அண்மைக் காலங்களில் இந்தியா ஒரு இலங்கையின் சில்லறைக் கைக்கூலி போல் செயற்பட்டு வருகிறது.  அப்படிப் பட்ட இந்தியாவால் இலங்கைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமைக் கழகத்தில் வாக்களிக்க முடியாது. தமிழ்நாட்டு மக்களின் "கொந்தளிப்பை" கருத்தில் கொள்ள வேண்டிய அவசியம் டில்லிக்கு இல்லை. அவை வெறும் கூச்சல்கள் மட்டுமே என்று டில்லி நன்கு அறியும். தேர்தலில் காங்கிரசுக் கட்சி தமிழ்நாட்டில் பெரும் தோல்வியைச் சந்திக்கலாம் என்ற பயம் ஆளும் கட்சிக்கு இல்லை. ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்பட்டால் என்ன எதிராகச் செயற்பட்டால் என்ன காங்கிரசுக் கட்சி தமிழ்நாட்டில் தோல்வியடைவது நிச்சயம். தமிழ்நாட்டில் வெற்றி பெற்று வரும் கட்சிக்கு சில மந்திரிப்பதவிகளைக் கொடுத்து அவற்றை கூட்டணியில் இணைத்து காங்கிரசால ஆட்சி அமைக்க முடியும். இலங்கைக்கு ஆதரவாகச் செயற்படாவிடில் இந்தியாவின் தமிழர்களுக்கு எதிரான பல குற்றங்கள் அம்பலமாகும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...