கரிய இருளினில் கடினவழியினில்
நேற்று நாம் நடந்தோம்
கொடிய போரினில் அரிய ஊரினில்
அனைத்தும் நாம் இழந்தோம்
வாழ்ந்த மனையினில் ஆழ்ந்த துயரினில்
தாழ்ந்து நாம் சரிந்தோம்
பச்சிளம் குழவியும் பட்டிளம் கன்னியும்
பாதகர்க்கு இரைகொடுத்தோம்
கருவிலும் கருகிட உருவின்றிப் பொசுங்கிட
செருவினில் நாம் வீழ்ந்தோம்
சூழ்ந்திட்ட பகையின் சூழ்ச்சிவலையில்
சீக்குண்டு நாம் தாழ்ந்தோம்
ஒன்றுபடா குணத்தில் கூறுபட்ட நிலையில்
இழக்கக் கூடாததெல்லாம் இழந்தோம்
வாய்பொன்று வருகுது ஒளியொன்று தெரியுது
வீழ்ச்சியது நிலையிலை என உணர்வோம்
வீறு கொண்டு நாம் எழுவோம்
தலைப் பா பாடிட தலைப்பாகை கிடைத்திட
தலைவன் வழி நீ நட
மாட்சியினைத் தேடி மீட்சியினை நாடி
ஆட்சியினை நாம் எடுப்போம்
இனிவா வாழ்வென துணிவாய் நீ எழ
ஜெனிவா நகர் அதிரும்
பொய் நாக்கள் அடக்கிட ஐநா முன்றலில்
நாம் திரள்வோம்
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...

-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
-
“எரிபொருள் இன்றி கைவிடப்பட்ட போர்த்தாங்கிகள், உணவின்றி தவிக்கும் படையினர், சுட்டு வீழ்த்தப்பட்ட விநியோக விமானங்கள்” இப்படிப்பட்ட செய்திகள...
-
உலகத்தி லேயே சீனர்கள் அதிகம் வெறுக்கும் நாடாக ஜப்பான் இருக்கின்றது. 1937இல் இருந்து 1945வரை ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையில் கடும் போர்...
No comments:
Post a Comment