Tuesday, 24 January 2012

மொழிபெயர்த்த நகைச்சுவைகள்

கண்ணும் கண்ணும் கதைத்தால் என்ன சொல்லும்?
எங்கள் இருவருக்கிடையில் ஒருத்தன் மூக்கை நுழைக்கிறான்

கைப்பேசிகள் எப்படித் திருமணம் செய்யும்?
Ringtone மாற்றி

உன்னிடம் இருக்கும்
பகிர்ந்து கொள்ள விரும்புவாய்
பகிர்ந்தால் அது உன்னிடம் இருக்காது
அது என்ன?
இரகசியம்

நாம்வெறுக்கிறோம் ஆனால் இழக்க விரும்பவில்லை: வேலை

ஏம்பா சட்னியில் ஒரு இலையான் இருக்கிறதே.
கவலைப் படாதீங்க சார். தோசையில் இருக்கும் சிலந்தி எப்படியும் அதைப் பிடித்துத் தின்றுவிடும்.

ஆங்கில இலக்கண வகுப்பில் ஆசிரியை: "He does not like girls". In this sentence who is "He"?
மாணவன் ஒருவனின் பதில்: "Gay"

தனது இரு மகன்களும் செய்யும் குளப்படி தாங்க முடியாமல் ஒரு தாய் அவர்களை பாதிரியாரிடம் அழைத்துச் சென்றார். பாதிரியார் முதலில் இளைய மகனைத் தன் அறைக்குள் கொண்டு போய் தனியாக கதைத்தார். முதலில் அவர் கேட்ட கேள்வி "கடவுள் எங்கே?" பையன் பதில் தெரியாமல் விழித்தான். தனது குரலை சற்று உயர்த்தி மீண்டும் "கடவுள் எங்கே?" என்றார். பையன் விழி பிதுங்கினான். இப்போது பாதிரியார் உரத்த குரலில் "கடவுள் எங்கே?" என்றார் பையன அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினான். அவனது அண்ணன் என்னடா நடந்தது என்று அவன் பின் ஓடினான். அதற்கு அவன் "அவங்கள் கடவுளைத் தொலைத்து விட்டாங்கள். நாங்கள் திருடியதாகச் சந்தேகிக்கிறாங்கள்" என்றான்.

வீடுகள் பெரிதாகின்றன
இல்லறம் சிறிதாகின்றது
மருத்துவம் வளர்கிறது
ஆரோக்கியம் குறைகிறது
பிரபஞ்சத்தில் எல்லை வரை அறியத் துடிக்கிறோம்
பக்கத்து வீட்டில் நடப்பதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை
மனிதர்கள் பெருகுகின்றனர்
மனிதாபிமானம் குறைகின்றது
நகைச்சுவகள் என்று மொக்கைகள் பல வருகின்றன
சிரிப்பு வருவதில்லை

எனக்கு என்று ஓரு இனியா வாழ்க்கை இருந்தது. நண்பர்களுடன் வெளியில் செல்வேன். அம்மா அப்பாவுடன் கோவில் செல்வேன். மாமா வீட்டிற்குச் சென்று அனபாகக் கதைத்துக் கொண்டிருப்பேன். புதிதாக வந்த படத்தைப் பற்றி பலருடன் கதைப்பேன். Facebook வந்ததில் இருந்து என் வாழ்க்கையே போச்சுது.

ஒரு ஆசிரியர் எனது அடுத்த கேள்விக்கு சரியான பதில் சொல்பவர் முதலில் வீடு போகலாம் என்றார். உடனே ஒரு பையன் தனது புத்தகத்தை வெளியே வீசினான். யாரடா புத்தகத்தை வெளியே வீசியது என்றார் ஆசிரியர் ஆத்திரத்துடன். நான் என்று சொல்லிவிட்டு அப்பையன் வகுப்பறையை விட்டு வெளியேறினான்.

பழக்கதோசம்
ஒரு அம்மா தனது மகளுடன் வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கையில் சிறு விபத்து நடந்து மகளுக்கு காயம் ஏற்பட்டு விட்டது. அண்மையில் உள்ள மருத்துவ மனைக்கு மகளை தாய் கொண்டு சென்றார். அங்கு மகளின் விபரத்தை கேட்ட போது மகள் சொன்ன பதில் 18 வயது,  50kg, 5அடி 6அங்குலம். உடனே தாயார் குறுக்கிட்டு இது Facebookஇல்லை உண்மையைச் சொல்லு.

இவற்றை மொழிபெயர்த்தால் நல்லாயிருக்காது.
Teacher: What’s the chemical formula for water?
Sam: “HIJKLMNO”.
Teacher: What?!
Sam: Yesterday you said it’s H to O!


Apple and Blackberry should team up and make a phone called the Pie...

My alarm clock is clearly jealous of my amazing relationship with my bed.

If you dont say it in the streets dont say it in your tweets


No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...