Monday, 23 January 2012

நகைச்சுவைக் கதை: இலண்டனில் சாப்பிட்ட இந்தியனும் இலங்கையனும் பாக்கிஸ்த்தானியும்

இலண்டன் பல்கலைக் கழகம் ஒன்றில் கல்வி பயிலும் இலங்கை இந்திய பாக்கிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் ஒரு அறையில் தங்கி இருந்தனர். இலங்கை மாணவர் சுரேன் தனது மாமனாரின் எரிப் பொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பகுதி நேரம் வேலை செய்தான். இந்திய மாணவன் அனில் தனது தகப்பனாரின் ஒன்றுவிட்ட சகோதரனின் மனைவியின் சித்தாப்பாவின் மருகனின் நண்பரின் மூலைக் கடை ஒன்றில் பகுதி நேர வேலை செய்து வந்தான். பாக்க்கிஸ்தான் மாணவன் அன்வர் ஒரு ஈரானிய இறைச்சிக் கடையில் பகுதி நேர வேலை செய்து வந்தான். இவர்கள் உழைக்கும் பணத்துடன் சிக்கனமாகச் சீவித்து வந்தனர். சுரேன் அவ்வப்போது தந்தைக்குப் பணம் அனுப்புவான். தந்தை அதில் ஊரில் கோவிலுக்கு தன் பையன் நல்லாக இருக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் அபிசேகம் செய்வார். அனில் தனது தகப்பனுக்கு அனுப்பும் பணத்தை அவர் இந்தியாவில் வட்டிக்குக் கடன் கொடுப்பார். அனவர் தன் பணத்தில் மிச்சம் பிடித்து ஆப்கானிஸ்தானுக்கு அனுப்புவான்.

சுரேனுக்கும் அனிலுக்கும் அன்வருக்கும் இலண்டனில் உள்ள உயர்தர உணவகத்தில் சாப்பிட வேண்டும் என்பது நீண்ட நாள் விருப்பம். ஒரு நாள் அதை எப்படியாவது நிறைவேற்றிவிடவேண்டுமென்று திட்டமிட்டு நல்ல பகட்டான ஆடைகளை வாடகைக்கு எடுத்துக் கொண்டு ஒரு ஆடம்பர இத்தாலிய உணவகத்திற்கு ஒருவர் பின் ஒருவராகப் போய்ச் சாப்பிடுவது என்று திட்ட மிட்டனர். முதலில் இலங்கை மாணவன் சுரேன் உணவகத்திற்குள் போய் பஸ்ராவும் கோழியும் நல்ல ஐஸ் கிரீமும் சாப்பிட்டு விட்டு கடைசியில் பில்லை கொண்டு வந்து அவன் முன் வைக்க தான் ஏற்கனவே பில்லுக்கான பணத்தைச் செலுத்தி விட்டதாகச் சொன்னான். ஒரு கனவான் போல் ஆடை உடுத்திய பையனுடன் தகராறு போட்டு உணவகத்தில் உள்ள மற்ற கனவான் வாடிக்கையாளர்கள் அமைதியாக உண்டு கொண்டிருப்பதைக் ஏன் கெடுப்பான் என்று நான் மறந்து விட்டேன் என்று சொல்லி மன்னிப்புக் கேட்டு சுரேனை குட் நைட் சொல்லி வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.

அடுத்து உணவகத்திற்குச் சென்ற இந்திய மாணவன் அனில் அங்குள்ள சிறந்த சைவ உணவுகளைச் சாப்பிட்டு உயர்தர மது பானங்களையும் அருந்திவிட்டு பில் வரும்போது சுரேன் சொன்னமாதிரிச் சொல்லி அவனுக்கு நடந்த மரியாதையை தானும் பெற்றுக் கொண்டு வெளியில் வந்து விட்டான்.

அடுத்து உணவகத்திற்குள் சென்ற பாக்கிஸ்தானிய மாணவன் அனவர் அங்குள்ள சகல உணவுகளையும் ஒரு வெட்டு வெட்டிவிட்டினான். எல்லாம் முடிந்தவுடன் அவனிடம் உணவக முகாமையாளர் சென்று உங்களுக்கு முன்னர் இரு ஆசிய மாணவர்கள் இங்கு வந்து சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் கொடுத்தோம் என்று சொன்னார்கள்.....என்று சொல்ல அன்வர் இடைமறித்து "I dont want to hear the story of those bloody f*****g Indian and Srilankan.....bring my balance என்றான். (அந்த இந்தியனதும் இலங்கையனதும் கதை எனக்கு வேண்டாம் எனது மிகுதிப் பணத்தைக் கொண்டுவா என்றான்.)

3 comments:

karthikeyan.kg. said...

கதை நன்றாக இருந்தது. கதை என்றால் எந்த ஒரு பத்தியையும் விட முடியாதவாறு இருக்க வேண்டும் என்பது என் விருப்பம். உங்கள் கதையில் முதல் பத்தியை நான் படிக்கவில்லை(பத்தி நீளமாக இருந்ததால் ).ஆயினும் கதை புரிந்தது. ஆதலால் அணைத்து இடங்களிலும் விறுவிறுப்பு கூட்டவும். கருத்து தவறு என்றால் மன்னிக்கவும்

பி.அமல்ராஜ் said...

ஹி ஹி ஹி... நல்ல கதை. ஆசிய மாணவர்கள் இப்படித்தான் இருப்பார்களோ??

sathiyendraan said...

It gives the good message to us from ASIAN students who show their country's culture and behavior at aboard countries

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...