Saturday, 3 December 2011

கடைந்தெடுத்த SMS நகைச்சுவைகள்

கண்கள் பேசிக்கொண்டால்: காதல்
கண்ணீர் பேசிக்கொண்டால்: அனுதாபம்
ஆயுதங்கள் பேசினால்: போர்
பலர் பேசினால்: பாராளமன்றம்
நீ மட்டும் பேசினால்: பைத்தியம்.

மனித மூளை என்பது ஒரு அற்புதமான கருவி
நாம் பிறந்ததில் இருந்து வேலை செய்யும்
365 நாளும் 24 மணித்தியாலமும் வேலை செய்யும்
ஆனால் தேர்வு வினாத்தாளைப் பார்த்தவுடன் வேலை செய்ய மறுக்கும்.

அவள் மீது காதல் கொண்டதில் இருந்து
நான் புகைப்பதில்லை மது அருந்துவதில்லை
அவள் உன்னைத் திருத்தி விட்டாளா
இல்லை எனது பணத்தைக் காலி செய்துவிட்டாள்.

It’s Sad For A Girl
To Reach An Age When
Men Consider Her
CHARMLESS
But
Its Worse For A Man
To Reach An Age When
Girl Considers Him
HARMLESS ..

கண்ணீர் வரவைப்பவை:
  - காதலில் உடைந்த இதயம்
  - பிரிந்த நட்பு
  - மறைந்த உறவு
  - உரித்த வெங்காயம்

அழகு என்பது வெளித் தோற்றத்தில் இல்லை
அது உனக்குள் இருக்கிறது
எனவே
உன் உள்ளாடைகளை அடிக்கடி துவைத்துச் சுத்தப்படுத்து

அரசியல் சமையல்:
பணம் பல கோடி
ஏமாளிகள் சில கோடி
தாதாக்கள் இருபத்தைந்து
கைக்கூலிகள் சில ஆயிரம்
பொய் தேவையான அளவு


உண்மையில் வாயில்லா சீவன்களைக் கொன்று புசிப்பவர்கள் யார்?
சைவச் சாப்பாடுக்காரர்கள். ஆட்டுக்கும் கோழிக்கும் மாட்டுக்கும் வாய் உண்டு தாவரங்களுக்கு இல்லை.

கழிப்பறையில் ஒரு அறிவிப்பு:
என்னைத் துப்பரவாக இருக்க விடுங்கள்
என்னை அழுக்காக்காதீர்கள்
அதற்கு நன்றிக் கடனாய்
நான் பார்ததை யாரிடமும்
சொல்ல மாட்டேன்

வரிசை மாறினால் கருத்து கந்தல்:
......ஆனால் உன்னை விரும்புகிறேன்.
உன்னை விரும்புகிறேன் ஆனல்.......

உனக்கும் நடக்கும் பொறுத்திரு
ஒரு நாள் அழகிய பெண் உன் வாழ்வில் வருவாள்
உன்னைப் பிடித்திருக்கிறது அப்பா என்பாள்.

Friday, 2 December 2011

கைப்பேசிகளில் தகவல் திருடும் செயலி (application) - வழக்குத் தொடர ஆலோசனை

The Carrier IQ என்னும் அமெரிக்க நிறுவனம் Android, BlackBerry, Apple and Symbian ஆகிய smartphoneகளில் இரகசியமாக புகுத்தியுள்ள செயலி(application) படு மோசமானது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மட்டும் 140மில்லியன் கைப்பேசிகளின் இந்த The Carrier IQஇன் செயலி(application) புகுத்தப்பட்டுள்ளது.

இந்த The Carrier IQஇன் செயலி(application)  நீங்கள் ஒவ்வொரு முறையும் உங்கள் கைப்பேசியை அழுத்தும் போதும் சகல தகவல்களையும் The Carrier IQ நிறுவனம் பெற்றுக் கொள்ளும். இந்தச் செயலி உங்கள் சொந்த விபரங்கள் அனைத்தையும் திருடும் வல்லமை கொண்டதுடன் உரையாடல்கள், குறுந்தகவல்கள், கடவுச்சொற்கள் போன்றவற்றை அறியும் திறனும் கொண்டது.

நொக்கியா, பிளக்பெரி ஆகிய நிறுவனங்கள் தங்கள் கைப்பேசிகளில் இந்த The Carrier IQஇன் செயலி(application) இல்லை என்று சொல்கின்றது. ஆப்பிள் நிறுவனம் தங்கள் கைப்பேசிகளில் இனி இந்தச் செயலி இருக்காது என்று கூறியுள்ளது.

Carrier IQநிறுவனம் தமது செயலி கைப்பேசிகளின் செயற்படு திறன்கள் தொடர்பான தகவல்களை மட்டுமே சேகரிக்கும். கைப்பேசிப் பாவனையாளர்களின் தனிப்பட்ட தகவல்களைச் சேகரிப்பதில்லை என்று அறிவித்துள்ளது. ஆனால் சட்டவியலாளர்கள் Carrier IQவின் செயல் சட்ட விரோதமானது கைப்பேசிப் பாவனையாளர்கள் அவர்கள் மீது வழக்குத் தொடர முடியும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

 Carrier IQ என்பது என்ன?
Carrier IQ is software that comes per-installed on certain hand-held devices. It collects usage data that mobile operators and device manufactures analyze so they can make hardware, network and service improvements, according to Carrier IQ. It runs all the time and cannot be turned off, although it can be removed by unlocking the phone and gaining administrator access, which typically voids the warranty.

Carrier IQ நிறுவனம் தாம் மூன்று செயற்பாடுகளை மட்டுமே செய்வதாக அடித்துக் கூறுகின்றனர்.Three of the main complaints we hear from mobile device users are (1) dropped calls, (2) poor customer service, and (3) having to constantly recharge the device.

ஏற்கனவே அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ முகவேட்டின் மூலமாக பல தகவல்களைச் சேகரிப்பதாக அதிலும் குறிப்பாக எகிப்தியப் புரட்ச்சிக்குப் பின்னர், குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. எகிப்திய மக்களின் எழுச்சி அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ முன்கூட்டியே அறிந்திருக்காதது அமெரிக்க ஆட்சியாளர்களைப் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எகிப்த்தியர்களின் முகவேட்டுப் பக்கங்களை சாதாரணமாக பார்த்திருந்தாலே எகிப்தியப் புரட்சியை எதிர்வு கூறியிருக்கலாம்.

காதலின்றி எதுவும் இல்லை

களத்தில் போராளிகளிடையும் காதல்
முகாம்களில் ஏதிலிகளிடையும் காதல்
புலத்தில் பெயர்ந்தவர்களிடையும் காதல்
ஆர்ப்பாட்டப் பேரணியிலும் காதல்
ஜெனிவா நோக்கிச் செல்கையிலும் காதல்
புறநானூற்றிலும் காதல் அகநானுற்றிலும் காதல்

காதலே இலக்கியம் காதலே இலட்சியம்
அன்றும் காதல் இன்றும் காதல்
எங்கும் காதல் எதிலும் காதல்
காதலின்றி எதுவும் இல்லை

உருமாற்றத்தால் ஒரு கருவாய்
கருவறையில் ஒரு சிசுவாய்
என்னை ஈன்ற போதில்
அன்னை கொண்டாள் காதல்

தத்தி நடை பயில
கத்தி மொழி பேச
பெற்றோருடன் காதல்
உற்றோருடனும் காதல்

துள்ளித் திரிந்தோடி
பள்ளிக் கூடம் நாடி
நண்பர்கள் மீது காதல்
பல உணர்வுகளுடன் மோதல்

அரும்பும் மீசைப் பருவம்
கரும்பு போல் ஒரு உருவம்
ஓரவிழிப்பார்வை உசுப்பேற்றும்
இதயத்தை  ரணகளமாக்கும்
அவள் நினைவுகள் எப்போதும்
ரவுண்டு கட்டி என்னைத் தாக்கும்

தெருவிலும் தொடரும்
ஆலயத்திலும் வழிபடும்
மெழுகு திரியொளியில்
மெருகூட்டும்
நடனத்தில் இணைந்து
உடல்கள் உரசும்
தினசரி மூன்று வேளை
சாப்பாட்டிற்கு முன்னும் பின்னும்
பார்க்க வேண்டும் போல்இருக்கும்டுவிட்டரிலும் தொடரும்
sms பல பறக்கும்
முகவேட்டில் அரட்டை அடிக்கும்
உடலெங்கும் ஏதோ போல் இருக்கும்
உணவையும் வாய் மறுக்கும்
நினைவிலும் காதல் கனவிலும் காதல்
எங்கும் காதல் எதிலும் காதல்
இதமான ஒரு வேதனை
அனுபவித்தவனுக்கே இது புரியும்

Thursday, 1 December 2011

நேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்


நேட்டோப் படைகள் அவள் விழிதேடி வரும்
Weapons of mass destruction என்று
அமெரிக்க ஆளில்லாவிமானங்கள் அவள் விழி தேடி வரும்...
பலர் நெஞ்சங்களில் பயங்கரவாதம் செய்வதால்
ஐநா பாது காப்புச் சபையும் தீர்மானம் போடும்
இளைஞர்கள் சிந்தனைகளில் சர்வாதிகாரம் புரிவதால்
பன்னாட்டு மன்னிப்புச் சபையும் அறிக்கை விடும்
பல பாவிகளைச் சித்திரவதை செய்வதால்.


உன் விழியடி பேரிடியடி
என் இதயத்தில் சுழியோடி
என் வழியடி தடுமாறுதடி
என் நெஞ்சில் கழியாடி
இரவே பெரும் பழியடி
 
ஓரப் பார்வையால் என்னை ஒளிப்பதிவு செய்வதால்
குறுந்தகவல்கள் பல எனக்கு அனுப்புவதால்
காமச் செயலிகள் பல நிறைந்ததால்
கன்னியவள் விழியும்  ஐஃபோன் போலே

Wednesday, 30 November 2011

நாயானது கொடிய மனைவியிலும் மேலானது

 சூரியக் காதலன்
மேகக் காதலியை
மெல்ல நோக்க

மேலாடையாம்  முகில்
மெல்ல விலக
மேகத்தாள் தேகம் பார்த்து 

மோகத்தால் ஒரு
மின்னலாய் கண் சிமிட்ட
நாணத்தால் வானவில்லாய்
முகம் சிவக்க
பொங்கிய காமத்தால்
கட்டியணைக்க
கட்டில் ஒலியாய்
இடி முழக்கம்
வியவைத்  துளிகளாய்
மழைத் துளிகள்திட்டும் போது திருப்பி திட்டாமையினால்
கடைத் தெருவில் பணம் காலி செய்யாமையினால்
தேவையான நேரத்தில் பிகு பண்ணாமையினால்
நாயானது கொடிய மனைவியிலும் மேலானது

Tuesday, 29 November 2011

ஐ-ஃபோன் நகைச்சுவைகள்


Steve Jobs இன் கல்லறையில் என்ன எழுதியிருப்பார்கள்?
iCame, iSaw, iConquered, iThoughtdifferent, iPod, iPhone, iPad and iLeft.

கடவுள் அனுப்பிய குறுந்தகவல்: Hello, this is GOD. I make few bad creations but you are the worst monster I ever realised. My apologies on behalf of the whole world..

உன் iPhone ஏன் இவ்வளவு சூடாக இருக்கிறது?
நமீதாவின் படத்தை download பண்ணினேன்

20% of the population is now drinking coffee, 60% is having sex, 19% is watching television and one yokel is now holding his mobile in his hand

எனது iPhone மிக மெதுவாக download பண்ணுகிறது?
எதை வைத்துச் சொல்கிறாய்?
ஒரு 18வயதுப் பெண்ணின் பலான படத்தை download பண்ணினேன். downloadமுடியும் போது அந்தப் பெண் 40 வயதுப் பெண்ணாகத் தோற்றமளித்தாள்.An apple a day keep the IT guy away

புதிதாக வரவிருக்கும்Applications for iPhones
வேலைக்காரிநியூஸ் - அடுத்த வீட்டு சண்டைகளையும் கிசுகிசுக்களையும் உடனுக்குடன் உங்கள் iPhoneஇற்கு கொண்டுவரும்.
டக்கர் ஃபிகர் ஸ்ராண்ட்: எந்த எந்த பஸ் ஸ்ராண்டில் நல்ல ஃபிகர்கள் நிற்கின்றன என்று உங்களுக்கு அறியத் தரும்.
wifemood: நீங்கள் வீடு செல்லும் போது உங்கள் மனைவி என்ன மனநிலையில் இருக்கிறாள் என்பதை உங்களுக்கு அறியத்தரும்.
ஜெயாமாற்றம்: தமிழ்நாட்டு முதல்வர் ஜெயலலிதா எதை மாற்றுவார் எதை உயர்த்துவார் என எச்சரிக்கும்.
கலைஞர்விரதம்: இது உங்கள் iPhoneஐ நாலரை மணித்தியாலம் பட்டரி இல்லாமல் இருப்பதாகச் சொல்லி ஏமாற்றும்.
எக்ஸாம்பிட்: இது எந்த எந்த தேர்வுக்கு எந்த எந்த பிட் கொண்டு போக வேண்டும் என்று உங்களுக்கு அறிவுறுத்தும்.

GALILEO : great mind.
EINSTEIN : genius mind.
NEWTON : extra-ordinary mind.
BILL GATES : brilliant mind.
YOU : Never mind.

Monday, 28 November 2011

பிரபாகரன் இறந்த கட்சியும் இறவாத கட்சியும் பிளவு பட்டு நிற்கின்றன வெளிநாடுகளில்.


வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கிடையிலான பிளவு மாவீரர் தின ஏற்பாட்டில் பிரித்தானியா உடபட சில நாடுகளில் இரு வேறு போட்டிக் குழுக்கள் ஒழுங்கு செய்தமை மூலம் பகிரங்கமானது. வெளிநாட்டில் வாழும் தமிழர்களிடையே மூன்று குழுக்கள் இருக்கின்றன என்று இக்குழுவினரே  பகிரங்கமாக ஒத்துக் கொணடுள்ளனர். மூன்று குழுக்கள் இருக்கின்றன என்றால் அதில் ஒன்று கொழும்பின் கைக்கூலி என்றும் இரண்டாவது டில்லியின் கைக்கூலி என்றும் முன்றாவது தமிழர்களுக்கானது அல்லது சுயநலம் கொண்டது அல்லது மேற்கு நாடுகளின் வால் பிடிகள் என்று ஈழத் தமிழர்களின் பிரச்சனைகள் பற்றி அறிந்தவர்களால் இலகுவில் ஊகிக்க முடியும். இந்த முன்று குழுக்களும் எந்த வகையைச் சேர்ந்தவை என்பதை அறிய ஒவ்வொன்றும் தம்மைப் பற்றிச் சொல்வதையும் ஒவ்வொன்றைப் பற்றி மற்றையவை சொல்பவற்றை வைத்துத்தான் அறிந்து கொள்ள முடியும்.

குமரன் பத்மநாதன் என்னும் KP
பிரபாகரன் இறக்கவில்லை என்று முதல் அறிக்கை விட்ட பத்மநாதன் பின்னர் ஒரு குத்துக் கரணம் அடித்து அவரது எஜமானர்களின் கட்டளைக்கு இணங்க பிரபாகரன் இறந்துவிட்டார் என்று அறிக்கை விட்டார். இதை ஜீரீவி தொலைக்காட்சி செய்தியாய் வெளிவிட மக்கள் கொதித்து எழுந்தார்கள். ஜீரிவி ஒளிபரப்பையே நிறுத்த வேண்டிய சூழ் நிலை உருவாகியது. பின்னர் ஜீரீவி குத்துக்கரணம் அடித்தது. தமக்கு ஒன்றும் தெரியாது தமக்கு வழங்கிய செய்தியைத் மட்டுமே ஒளிபரப்பினோம் என்று திருப்பித் திருப்பி மன்னிப்புக் கோரினார்கள். பத்மநாதன் தன்னைத் தானே இனி விடுதலைப் புலிகளின் தலைவர் என்றும் பிரகடனப் படுத்திக் கொண்டார். பின்னர் பத்மநாதன் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டார். தனது கைதைப்பற்றி பத்மநாதன் இப்படிக் கூறினார்:

  • நான் கைது செய்யப்பட்டபோது அதிர்ச்சியடைந்தேன். சுமார் ஒரு மணித்தியாலம் பெரும் திகைப்பாக இருந்தது. இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட போதும் கவலையடைந்தேன். ஆனால், நான் கடவுளை நம்புகிறேன். மோசமான நிலை ஏற்படலாம் என அச்சமடைந்த போதிலும் நான் அதிஷ்டசாலி. நான் கைது செய்யப்பட்டமை எனக்கு நன்மையளித்துள்ளது. துன்பப்படும் தமிழ் மக்களுக்கு சேவையாற்ற எனக்கு இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. எமது போராட்டம் இலங்கையிலுள்ள எமது மக்களை குறிப்பாக வன்னியிலுள்ள மக்களை பரிதாபகரமான நிலைக்குத் தள்ளியுள்ளது. இப்போது NERDO (வடக்கு கிழக்கு புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி அமைப்பு) ஊடாக சிறிய வழியிலேனும் என்னால் அவர்களுக்கு உதவ முடிகிறது.

"கைது" செய்யப்பட்ட பத்மநாதன் இப்போது ஆடம்பர மாளிகையில் இருக்கிறார். பத்மநாதன் கைது செய்யப்படவில்லை அவர் இலங்கை அரசுடன் இணைந்து செயற்படுகிறார் என்று அவருக்கு எதிரானவர்கள் கூறுகிறார்கள். அவரது NERDO (வடக்கு கிழக்கு புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி அமைப்பு)இனால் எவருக்கும் குறிப்பிடத்தக்க எந்த நன்மையும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் கூறுகின்றனர்.

புலிகளின் தலைமைச் செயலகம் - விநாயகமும் தப்பி ஓடிவந்த புலிகளும்
பத்மநாதனின் "கைது"க்குப் பின்னர் ஐரோப்பிய நாடுகளில் தாம் இறுதிவரை களத்தில் நின்று போராடிய புலிகள் இப்போது தப்பி வந்துள்ளோம் என்று கூறிக் கொண்டு சிலர் புதிதாகத் தோன்றினர். இவர்கள் தம்மை விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகத்தினர் எனக் கூறுகின்றனர். இவர்களில் விநாயகமூர்த்தியும்(விநாயகம்) சங்கீதன் என்பவரும் முக்கியமானவர்கள். இவர்கள் தாங்கள்தான் இனி விடுதலைப் புலிகள் என்கின்றனர். இதில் விநாயகம் கொழும்பில் விடுதலைப்புலிகளின் புலானாய்வில் இருந்தவர். சங்கீதன் தான் இறுதிவரை முள்ளிவாய்க்காலில் தலைவருடன் இருந்து போராடிப் பின்னர் தப்பி வந்தவர் என்கிறார்.  இவர்கள் இலங்கை அரசிடம் பிடிபட்டு பின்னர் அவர்களுடன் இணைந்து செயற்படுகிறார்கள். இவர்களை இலங்கை அரசும் பத்மநாதனுமே அனுப்பி வைத்துள்ளனர். இவர்களுக்கு வழங்கப்பட்ட பணி புலம் பெயர்ந்த மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதும் அங்குள்ள தமிழ்த் தேசிய ஆதரவுக் கட்டமைப்பை கைப்பற்றுவதுமே. இப்படி இவர்களுக்கு எதிரானவர்கள் கூறுகின்றனர். அகதியாக அண்மையில் வந்த சங்கீதன் எப்படி பல நாடுகளில் பிரயாணம் செய்கிறார். இவர் பல கூட்டங்களை ஆடம்பர உணவகங்களில் எப்படி நடத்துகிறார். இவருக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்ற கேள்விகளும் முன்வைக்கப்படுகின்றன.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
2009மே மாதத்திற்குப் பின்னர் நாடுகடந்த அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் அது சனநாயக அடிப்படையிலும் வெளிப்படைத் தன்மையுடனும் செயற்படவேண்டும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் சட்ட ஆலோசகர் வி. உருத்ரகுமார் சொல்லிக் கொண்டு தமிழர் முன் வந்து பல ஐரோப்பிய வட அமெரிக்க நாடுகளில் தேர்தல் வைத்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றை அமைத்தார். அதற்கு அவரே பிரதம மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நாடுகடந்த அரசாங்கத்துக்கு எதிராகவும் குற்றச் சாட்டுகள் வைக்கப்படுகின்றன. அதில் இவர்கள் பிரபாகரன் இறந்துவிட்டார் என நம்புகிறார்கள் அதை வெளியில் சொன்னால் தமது செல்வாக்கிற்கு பாதகம் வரும் என்பதால் அதை வெளியில் சொல்வதில்லை. வி. உருத்திரகுமார் இனி தானே தலைவன் இனிப் பிரபாகரனைப்பற்றி பாடல்கள் எழுதி இசைத்தட்டுகளாய் வெளிவிடுவதைப் போல் தன்னைப் பற்றி பாடல் எழுதவும் என்று கூறினார் என்றும் சொல்கிறார்கள். தானே இனி பிரபாகரனைப்போல் மாவீரர் நாள் உரை நிகழ்த்த வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பதாகவும் சொல்கிறார்கள். நாடுகடந்த அரசுக்கு நடந்த தேர்தலில் பல குளறுபடிகள் நடந்தன என்ற குற்றச் சாட்டும் உண்டு. தெற்கு இலண்டன் பிரதேசத்திற்கான நாடுகடந்த தமிழீழ அரசிற்கான பிரதிநிதி தேர்வில் 90%இற்கு மேற்பட்ட வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற மருத்துவர் மூர்த்தியையும் பரராஜசிங்கத்தையும் திரை மறைவில் மிரட்டி பதவி விலகச் செய்தனர். தேர்தலில் தோல்வி கண்டவர்களை உறுப்பினர்களாக்கினர். இப்படி வேறு சில  தேர்தல் தொகுதிகளிலும் நடந்தது. சில தொகுதிகளில் தேர்தல் இரத்துச் செய்யப்பட்டு உருத்திரகுமாரே உறுப்பினர்களை நியமித்தார். ஒரு தொகுதியில் தேர்தல் நடந்தது பிழை என்றால் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டவர் பதவி விலகினால் தேர்தல் மீள நடத்தப்படவேண்டும். அந்த இடத்திற்கு தோற்றவர்களை நியமிப்பது சனநாயகமா என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. பிரபாகரன் சனநாயக வழியிலும் வெளிப்படைத் தன்மையுடனும் நடக்கவில்லை என்றும் திரை மறைவில் குற்றம் சாட்டி தாம் சனநாயக முறைப்படியும் வெளிப்படைத் தன்மையுடனும்  ருத்திரகுமாரும் அவரது ஆதரவாளர்களும் சொல்லிக் கொள்கிறார்கள் ஆனால் அவர்களிடம் இது இரண்டும் இல்லை என்று ருத்திரகுமாருக்கு எதிரானவர்கள் சொல்கிறார்கள். அத்துடன் நாடுகடந்த அரசிடம் ஆட்பலமோ அல்லது பணபலமோ இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர்கள் இன்னொரு குழுவுடன் ஒட்டிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. திரைமறைவில் உருத்திரகுமாரும் அவரது ஆதரவாளர்களும் இந்தியாவின் ஆதரவுடனேயே தமிழர்கள் எதையாவது பெற முடியும் என்றுக் கூறுகிறார்கள் என்று அவர்கள் மீது குற்றம் சாட்டப்படுகிறது.

விடுதலைப்புலிகளின் சர்வதேசக் கட்டமைப்பு - காசு சேர்த்த கூட்டம் - உண்டியல் குலுக்கிகள் - அமைப்பு
வெளிநாடுகளில் தமிழ்த் தேசியத்திற்கான ஆதரவுத் தளம் அங்கு அகதியாகச் சென்ற தமிழர்கள் தமக்கு நிரந்தர வதிவிடம் கிடைக்க வேண்டும் என்ற ஆதங்கத்தால் உருவானது என்று தமிழ்த் தேசியத்தின் எதிரிகள் அடிக்கடி கூறுவதுண்டு. இலங்கையில் எப்போது ஆயுத போராட்டம் உருவானதோ அன்றில் இருந்தே இலங்கை விடுதலை அமைப்புக்களுக்கு சமாந்தரமான அமைப்புக்கள் ஐரோப்பியாவிலும் அமெரிக்காவிலும் உருவானது. விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் அதாவது எழுபதுகளில் இன்ஸ்பெக்டர் பஸ்தியாம் பிள்ளை கொல்லப்பட்டுவிட்டார் என்பதை அவரது குடும்பத்தினருக்கு இலண்டனில் இருந்து சென்ற தொலைபேசியூடாகவே அறிவிக்கப்பட்டது. ஈழத்தில் விடுதலைப் போராட்டத்திற்கு அன்றிலிருந்தே நிதி உதவி மற்றும் ஆலோசனைகள் ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் இருந்தே வழங்கப்பட்டன. பிரபாகரன் இதற்காக ஒரு சர்வதேசக் கட்டமைப்பை உருவாக்கி இருந்தார். இதற்கு வேறு வேறு கட்டங்களில் வேறு வேறு பேர்கள் பொறுப்பாக இருந்தனர். இப்போது இதற்குப் பொறுப்பாக இருப்பவர் நெடியவன் எனப்படும் சிவபரன் பொறுப்பாக இருக்கின்றார்.  இதுவரை ஈழ விடுதலைப் போருக்கு நிதி திரட்டியவர்கள் நாம் என்று இவர்கள் கூறுகின்றனர். இலண்டனிலும் சரி ஜெனிவாவிலும் சரி மற்றும் எந்த மேற்கு நாடுகளிலும் சரி பாரிய ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் கச்சிதமாக ஒழுங்கு படுத்தியவர்கள் நாம் என்றும் இவர்கள் கூறுகின்றனர். அத்துடன் இவர்கள் பிரபாகரன் இறக்கவில்லை என்று கூறுகின்றனர். போராட்டம் முடியவில்லை. முள்ளிவாய்க்கால் முடிவல்ல ஆரம்பமே, விழ விழ் எழுவோம் என்கின்றனர். இந்தியா எமது எதிரி என்று இவர்கள் திரைமறைவில் அடித்துச் சொல்கின்றனர்.  இவர்கள் சட்டப் பிரச்சனைகளில் இருந்து தப்ப வேறு வேறு காலங்களில் வேறு வேறு பெயர்களில் செயற்படுவார்கள். இப்போது இவர்கள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு என்ற பெயரில் செயற்படுகிறார்கள். பிரித்தானியாவில் இவர்கள் தம்மை அமைப்பு என்று அழைத்துக் கொள்வர். மற்ற நாடுகளில் கட்டமைப்பு என்று தம்மை இவர்கள் அழைக்கிறார்கள். இவர்களுக்கு எதிராக மற்றவர்களால் சொல்லப்படுவது: இது காசு சேர்த்த கூட்டம், உண்டியல் குலுக்கிக் கொண்டு திரிந்த கூட்டம். இவர்களுக்கு பிரபாகரன் எந்த அதிகாரத்தையும் கொடுக்கவில்லை. இவர்கள் கமிஷனுக்கு காசு சேர்த்தவர்கள். காசு சேர்ப்பதற்காகவே இவர்கள் போராட்டம் தொடரும் என்கிறார்கள். சிலர் இவர்கள் அப்பாவிகள் இவ்வளவு காலமும் பல சிரமப்பட்ட்டு போராட்டத்திற்கு உதவியவர்கள் என்றும் இவர்கள் அதிக உணர்ச்சி வசப்பட்டு நிற்கிறார்கள் என்றும், யாதார்த்த நிலையை உணர்கிறார்கள் இல்லை என்றும் கூறுகிறார்கள். கட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் பலர் இலண்டனிலும் பாரிஸிலும் தாக்கப்பட்டுள்ளனர். பலருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதை விநாயகம் குழுவே செய்ததாக கட்டமைபினர் கூறுகின்றனர. 2009இல் போரின் இறுதிக் கட்டதில் இந்த கட்டமைப்பினர் தாம் மக்களிடம் சேர்த்த பணத்தை கையாடிவிட்டனர் என்று இவர்கள் மீது குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் தாம் சேர்த்த பணம்  முழுவதும் பத்மநாதனுக்கு அனுப்பினோம் என்கின்றனர்.

முரண்பாட்டின் ஆரம்பம்
புலிகளின் தலைமைச் செயலகம் எனப் படும் விநாயகம் குழு மாவீரர் தினத்தை இனித் தாமே நடத்த வேண்டும் என சர்வதேசக் கட்டமைப்பைக் கேட்டது முரண்பாடு ஆரம்பித்தது. மாவீரர் தினம் முற்றிலும் இலவசமாக நடத்தப்பட வேண்டும் என்று விநாயகம் குழு கூறியது தமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதாக கட்டமைப்பு கூறுகிறது. மாவீரர் நாளைக் குழப்பதுவதே இவர்களின் நோக்கம் என கட்டமைப்பு அடித்துச் சொல்கிறது. கட்டமைப்பில் இருந்து சிலர் விநாயகம் குழுவிற்குத் தாவிவிட்டனர். நாடுகடந்த அரசாங்கத்திற்கான தேர்தலில் உருத்திரகுமார் குழுவிற்கும் கட்டமைப்பு எனப்படும் நெடியவன் குழுவிற்கும் மோதல் ஆரம்பித்துவிட்டது. உருத்திரகுமாரின் மாபெரும் கனவான மாவீரர் உரையாற்றுதலிற்கு விநாயகம் குழு சம்மதித்ததால் அவரது குழு  அவர்களுடன் இணைந்து விட்டது. அத்துடன் இருவருமே பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற கொள்கையுடையவர்கள் என்றும்  இந்தியக் கைக்கூலிகளான உருத்திரகுமாரின் குழுவும் இலங்கைக் கைக்கூலிகளான விநாயகம் குழுவும் இலங்கையும் இந்தியாவும் இணைந்து தமிழ்த்தேசியத்திற்கு எதிராகச் செயற்படுவது போல கைகோர்த்து நிற்கிறார்கள் என்கின்றனர் கட்டமைப்பினர்.

தமிழ்நாட்டிலும் பிளவு
சுபவீரபாண்டியனும் திருமாவளவனும் விநாயகம் குழுவுடனும் நெடுமாறன்ஐயா வைக்கோஐயா போன்றவர்கள் கட்டமைப்பு எனப்படும் நெடியவன் குழுவினருடனும் இணைந்து விட்டனர் போலத் தெரிகிறது. இது உறுதி செய்யப்பட முடியாத் ஒன்று. ஈழக் கவிஞரும் அரசியல்வாதியுமான காசி ஆனந்தன் கட்டமைப்பினருடன் இணைந்து நிற்கிறார்.

Sunday, 27 November 2011

கல்லறைக் காதலியே கண்வளராய்

கண்வளராய் கண்வளராய்
 கல்லறைக் காதலியே
கண்வளராய் கண்வளராய்
கண்ணில் நிறைந்தவளே
மண்ணிற்காக வாழ்ந்தவளே
மண்ணில் மறைந்தவளே
கண்வளராய் கண்வளராய்
என் கல்லறைக் காதலியே

இரட்டைப் பின்னல் காதலியே
ஒற்றை நோக்கம் ஒற்றைத் தலைமை
ஒற்றை நோக்கம் கொண்டவளே
ஒற்றர்க்கும் அஞ்சா நெஞ்சத்தவளே
கண்வளராய் கண்வளராய்
மண் மீட்க மாதரசியே
கண்வளராய் கண்வளராய்

கழுத்தில் நஞ்சு நீ சுமந்தாய்
தமிழ் மானம் காக்க
கருத்தில் நஞ்சு சுமந்து
புலத்தைப் பிரிக்கின்றனர் கயவர்
கண்வளராய் கண்வளராய்
என் கல்லறைக் காதலியே
கண்வளராய் கண்வளராய்

உன் செவ்வாயிற் தவழ்ந்ததனால்
தமிழ் மொழியும் செம்மொழியானது
உன்னிரு கைகள் பட்டதனால்
பிஸ்டலும் பீராங்கியானது
எதிரிக் கோட்டை துவம்சமானது
கண்வளராய் கண்வளராய்
கல்லறைக் காதலியே கண்வளராய்

போகும்  இடம்
எதுவென்று புரியவில்லை
போக வேண்டிய இடமும் 
எதுவென்று புரியவில்லை
மீண்டெழுந்து வந்து
எம் இழிநிலை பாராமல்
கண்வளராய் கண்வளராய்
என் கல்லறைக் காதலிய
கண்வளராய் கண்வளராய்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...