Saturday, 29 October 2011

பாக்கிஸ்த்தான் அதிபர் சார்தாரிக்கு எதிராகக் கிளர்ந்தெழும் மக்கள்.

சர்தாரி பிள்ளைகளுடன்
உங்கள் தலைவிதியை மாற்ற வாருங்கள்! உங்கள் நாட்டைக் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாக்க வருங்கள்!! என்ற கோரிக்கைகளுடன் பாக்கிஸ்த்தானிய அதிபர் அசிஃப் அல் சர்தாரிக்கு எதிராக மக்களைக் கிளர்ந்து எழச் செய்கிறார் பாக்கிஸ்தானிய முன்னாள் பாக்கிஸ்தானியப் பிரதம மந்திரி நவாஸ் சரிஃப். பாக்கிஸ்த்தானின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் நவாஸ் சரிஃப்பின் பாக்கிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சி {Pakistan Muslim League-Nawaz (PML-N) party} ஆட்சியில் உள்ளது. அதன் தலை நகரமான லாகூரில் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

அசிஃப் அல் சர்தாரி

2008-ம் ஆண்டு நடந்த தேர்தல் மூலம் பதவிக்கு வந்த பாக்கிஸ்தான் அதிபர் அசிஃப் அல் சர்தாரி பாக்கிஸ்தானின் முன்னாள் பிரதமர் சுல்பிகார் அலி பூட்டோவின் மகளும் முன்னாள் பிரதம மந்திரியுமான பெனாஸீர் பூட்டோவைத் திருமணம் செய்ததன் மூலம் அரசியலில் பிரபலாமானவர். 1996இல் ஊழலுக்காக கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டவர். 1990இல் பாராளமன்றத்திற்கும் 1997இல் மூதவைக்கும் தெரிவு செய்யப்பட்டவர். 2008இல் அமெரிக்க உப அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் பெண் வேட்பாளர் சேரா பெயினுடன் கிசுகிசுக்கப்பட்டவர் அசிஃப் அல் சர்தாரி. முன்னாள் பாக்கிஸ்தானிய அதிபர் பெர்வஸ் முசரஃப்பை பதவியில் இருந்து விரட்டியவர் அசிஃப் அல் சர்தாரி. முன்னள் அதிபர் முசரஃப் அதிபர்  சல்தாரியை ‘Asif Zardari is a criminal and a fraud. He’ll do anything to save himself. He’s not a patriot and he’s got no love for Pakistan. He’s a third-rater’ என்று விமர்சித்தார். 2003இல் சுவிஸ் நீதிமன்றில் நிதி மோசடிக்காக ஆறு மாதச் சிறைத்தண்டனையும் $50,000 அபராதமும் விதிக்கப்பட்டவர் அசிஃப் அல் சர்தாரி. இதில் இருந்து அசிஃப் அல் சர்தாரியை முசரப்பே விடுவித்தார். பாக்கிஸ்த்தானில்


வசூல்ராசா சர்தாரி

சர்தாரியை அவரது ஊழலுக்காக Mr. Ten Percent என்று அழைப்பர். சர்தாரிக்கு எதிராக நகைச்சுவைகள் கிண்டல்களைப் பகிரங்கப் படுத்தினால் 14 மாதச் சிறைத்தண்டனைக்குள்ளாகலாம். சர்தாரிக்கு பணம் கொடுக்க வேண்டிய ஒருவரிடம் பணத்தை வசூலிப்பதற்கக அவரது அடியாட்கள் அவரது காலில் ரிமோட் கொன்ரூலில் வெடிக்கக் கூடிய குண்டைப் பொருத்தி விட்டு அவரை அவரது வங்கிக்குச் சென்று பணம் எடுத்துத் தராவிடில் அதை வெடிக்க வைப்போம் என மிரட்டிப் பணத்தைப் பெற்றனர். பாக்கிஸ்த்தானில் முகவேடு போன்ற சமூக வலைத் தளங்களும் யூரியூப்பும் தடைச் செய்யப்பட்டுள்ளன. இவற்றினூடாக சர்தாரிக்கு எதிரான பிரச்சாரங்களை முன்னெடுக்கப்படுவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை.


அசிஃப் அல் சர்தாரியின் அமெரிக்காவுடனான இரட்டை வேட நட்பு

அமெரிக்காவின் நெருங்கிய நண்பரான அசிஃப் அல் சர்தாரி அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிகாவுடன் ஒத்துழைத்துக் கொண்டே பாக்கிஸ்த்தானில் செயற்படும் இசுலாமியத் தீவிரவாதிகளுடனும் தொடர்புகளை வைத்திருப்பவர். அமெரிக்காவிற்கு சர்தாரியின் இரட்டை வேடம் நன்கு புரியும். அப்படி ஒரு இரட்டை வேடம் போடாமல் பாக்கிஸ்த்தானில் ஆட்சியில் இருக்க முடியாதென்பதை அமெரிக்க உணர்ந்து கொண்டுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவும் பாக்கிஸ்த்தானும் பகிரங்கமாக அடிக்கடி முரண்பட்டு அறிக்கை விடுவது இரண்டு பகுதியினரதும் இரட்டை வேடம்.

அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதல்
பாக்கிஸ்த்தான் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் அடிக்கடி பாக்கிஸ்த்தான் பிரதேசத்துக்குள் புகுந்து அங்குள்ள இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தும். அதில் பல அப்பாவிகள் கொல்லப் படுவதுண்டு. அப்பிரதேசங்களில் வாழும் மக்கள் அல் கெய்தா, தலிபன் போன்ற தீவிரவாதிகளால் கொல்லப்படும் அப்பாவிகளிலும் பார்க்க அமெரிக்கரகளால் கொல்லப் படும் அப்பாவிகளின் எண்ணிக்கை அதிகம் என்று ஆட்சேபம் தெரிவிக்கின்றனர். அசிஃப் அல் சர்தாரிக்கு எதிராக பாக்-ஆப் எல்லைப் பகுதி வாழ் மக்கள் மிகவும் ஆத்திரம் அடைந்துள்ளனர். பல ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதல்களுக்கு எதிராக நடக்கின்றன.

பாக்கிஸ்த்தானிலும் மல்லிகைப் புரட்சி
சர்தாரி ஆட்சியின் ஊழலுக்கும் நாட்டில் அதிகரிக்கும் விலைவாசிக்கும் எதிராக 28-10-2011 வெள்ளிக் கிழமை பாக்கிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரமும் பாக்கிஸ்தானிய அரசியல் அதிகார மையமுமான லாகூரில் எதிர்க்கட்சியான முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சி ஆயிரக் கணக்கில் மக்களைத் திரட்டி பெரும் ஆர்ப்பாட்டத்தைச் செய்தது. பாக்கிஸ்தானிலும் ஒரு மல்லிகைப் புரட்சியை ஏற்படுத்தி சர்தாரியைப் பதவியில் இருந்து விரட்ட முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியினர் முயல்கின்றனர். கூட்டத்தில் போ! சர்தாரி போ!! என்ற முழக்கம் அதிர்ந்தது. கொள்ளையிட்ட நாட்டுச் சொத்தை திருப்பிக் கொடு என்றனர். சர்தாரி பதவி விலகாவிடில் கைபரில் இருந்து கராச்சிவரை எகிப்திய தரிஹ் சதுக்கமாக மாறிப் பெரும் ஆர்ப்பாட்டம் வெடிக்கும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. பிற்பகல் இரண்டு மணிக்கு ஆரம்பமாக இருந்த கூட்டம் 5.30 இற்குப் பிறகுதான் ஆரம்பித்தது. முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பாக்கிஸ்தானில் ஊழலற்ற ஆட்சியை ஏற்படுத்த முடியாது.

Friday, 28 October 2011

காதலன் காதலி நகைச்சுவைகள் - தேர்ந்தெடுத்தவை

காதலி: மோட்டார் சைக்கிளுக்கும் காதலனுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?
காதலன்: தெரியாது நீயே சொல்லு...
காதலி: மோட்டார் சைக்கிளை உதைத்துவிட்டு சவாரி செய்வோம். ஆண்களை சவாரி செய்து விட்டு உதைப்போம்.

காதலி: நீ ஏதாவது துணீகரமான செய்து சாதித்துக் காட்டு உன்னைத் திருமணம் செய்கிறேன்.
காதலன்: உன்னைத் திருமணம் செய்வதைவிட வேறு என்ன துணீகரமான செயல் இருக்கிறது.

Good girls are bad girls that never get caught

காதலன்: ஆண்களில் 25% மானவர்கள் மட்டுமே புத்திசாலிகள்.
காதலி: மிகுதி ஆண்கள்?
காதலன்: காதலில் விழுகிறார்கள்.

சீனப் பழமொழி: Foolish man give wife grand piano, wise man give wife upright organ.காதலன்: எனக்கு ஒரு முத்தம் தருவாயா?
காதலி: சீ போ....
காதலன்: (சிறிது நேரம் கழித்து) நான் உன்னை என்ன கேட்டேன் என்று ஞாபகம் இருக்கிறதா?
காதலி: எனக்கு ஒரு முத்தம் தருவாயா?
காதலி: ஓகே இந்தா....உம்மா...

காதலன்(எழுத்தாளர் ): எனது புத்தகங்களில் உனக்குப் பிடித்து எது?
காதலி: cheque book

Man:Before marriage, a man yearn for the women he loves.
After marriage the "y" become silent.

காதலன்: நீ என்னை மட்டும்தான் காதலிக்கிறாயா?
காதலி: இந்தக் கேள்வியை எத்தனை பேர் கேட்கிறீர்கள்..

காதலன்: இந்த அழகிய விழிகளை எங்கிருந்து பெற்றாய்?
காதலி: அது என் முகத்தோடு வந்தவை..

சீனப் பழமொழி: Panties not best thing on earth! but next to best thing on earth.

காதலி: நாளை எனது பிறந்த நாளுக்கு என்ன பரிசு தருவாய்?
காதலன்: என்னையே தருவேன்.
காதலி: இப்படி ஒரு மட்டமான பரிசு கிடைக்கும் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை.

Three dreams of a man:
To be as handsome as his mother thinks.
To be as rich as his child believes.
To have as many women as his wife suspects...

Thursday, 27 October 2011

நகைச்சுவைக் கதை: மனைவியின் மார்பில் மறைந்த தலையிடி

சுமனும் அமரும் நண்பர்கள். அந்த இரு நண்பர்களும் ஒரு மதுபானச் சாலையில் 
ஒருவருக்கு ஒருவர் அறிமுகமானவர்கள். அடிக்கடி சந்தித்துக் கொள்வார்கள். 
ஒரு நாள் மதுபானச் சாலையில் அமர் கவலையுடன் அமர்ந்திருப்பதைக் கண்ட சுமன் 
என்ன பிரச்சனை என்று கேட்டான். 
கடுமையான தலைவலி தாங்க முடியவில்லை என்றான் அமர். 
இதற்கு சரியான மருந்து என்னிடமுள்ளது.எனக்கு இப்படி தலையிடிவந்தால் 
நான் வீடு போய் மனைவியின் மார்பிடை எனது முகத்தை வைத்தபடி ஒரு 
மணித்தியாலம் தூங்குவேன். தலையிடி இருந்த இடம் தெரியாமல் போய்விடும் என்றான். 
உடனடியாகப் நீயும் போய் அப்படியே செய் என்றான். 
அமரும் உடனேயே கிளம்பிச் சென்று விட்டான். 
மூன்று நாட்கள் கழித்து இருவரும் மீண்டும்
சந்தித்தனர். நான் சொன்னபடி செய்தாயா என்று ஆவலுடன் கேட்டான் சுமன். 
ஆம் என்றான் அமர். சுகமாகிவிட்டதா என்று கேட்டான் சுமன். 
ஆம் நீ சொன்னபடியே ஒரு மணித்தியாலத்தில் சுகமாகிவிட்டது 
அத்துடன் உனது படுக்கை அறை 
ரெம்ப அழகாக இருந்தது என்றான் அமர்.
 
 
 
 யேசு நாதருக்கும் அவர் படத்திற்கும் என்ன வித்தியாசம்?
படத்தை தொங்கவிட் ஒரு ஆணி போதும்.
அந்த மருத்துவரை மது போதையில் வாகனம் ஓட்டும் போது காவற்துறையினர் பிடித்து விட்டனர். ஆனால் அவர் அவசர சத்திர சிகிச்சைக்காகப் போய்க் கொண்டிருந்ததால்அவரைப் போகவிட்டுவிட்டனர்.

Wednesday, 26 October 2011

நகைச்சுவை எஸ் எம் எஸ் கவிதைகள் - மொழிபெயர்த்தவை

நான் Facebookஇற்கு அடிமையாகவில்லை.
வேலை செய்யும் போது பாவிப்பேன்
ஓய்வு நேரத்தில் பாவிப்பேன்
காலையில் பாவிப்பேன்
மதியத்தில் பாவிப்பேன்
இரவு இரவாகப் பாவிப்பேன்
அவ்வளவுதான்.

கூகிளும் என் மனைவி போலே
வசனத்தை முடிக்கமுன்
தனது பரிந்துரையைத் தருவதால்.

அன்று பெற்றோர்
எனக்கு ஆப்பிளையும்
பிளக்பெரியையும்
கொடுத்து வளர்த்தனர்
இன்று ஆப்பிளையும்
பிளக்பெரியையும்
எப்படிப் பாவிப்பதென்று
என்னிடம் இருந்து
அறிந்து கொள்கின்றனர்.

காலையில்
புது உத்வேகத்துடன்
எழும்புவர்
பின்னர்
Facebook status
update செய்தவுடன்
எல்லாம்
நிறைவேற்றியது போல்
ஒரு போலித் திருப்தி


Wi-fiஇற்கும் Wifeஇற்கும்
என்ன ஒற்றுமை
இரண்டையும்
அயலவரிடமிருந்து
பாதுகாக்க வேண்டும்.

இருவர் மட்டும்
காதலைப் பற்றிச்
சிந்திக்கின்றனர்
மற்றவர் யாவரும்
உணவைப் பற்றிச்
சிந்திக்கின்றனர்
திருமணத்தில்


சில கணங்கள்
இன்பமாயிருக்க
தம்
சிறிது நேரம்
இன்பமாயிருக்க
குவாட்டர்
சற்று அதிக நேரம்
இன்பமாயிருக்க
காதல்
வாழ்நாள் முழுதும்
இன்பமாயிருக்க
இவை மூன்றையும் தவிர்.

இளமைப் பருவம்
என்பது குவாட்டர்
அடித்து விட்டு இருப்பது போல்
நீ செய்த லூட்டிகள்
உனக்கு நினைவிருக்காது
மற்றவர்களுக்கு நினைவிருக்கும்

நானும் ஆப்பிள் போல்
Jobஐ இழந்து நிற்பதால்

Tuesday, 25 October 2011

அடுத்து சிரிய ஆட்சியாளர்களா?

அமெரிக்காவால் சுற்றி வளைக்கப்படும் ஈரான்

மேற்குலக நாடுகள் பிரித்தாளும் கொள்கையுடையவை. நாம் பிரிந்திருக்கும்போது அவை எம்மை ஆள்வது சுலபம். இப்போது சிரியா பிரிந்து நிற்கிறது. வந்து தலையிடவும் என்று மேற்குலக நாடுகளுக்கு அழைப்பு விடப்படுகிறது. அமெரிக்கக் குடியரசுக் கட்சியின் மூதவை உறுப்பினர் ஜோன் மக்கெயின் அமெரிக்காவின் நிரலில் முதலாவதாக உள்ளது சிரியா என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். 2011 ஏப்ரல் மாதத்தில் இருந்தே சிரியாவில் ஒரு "மனிதாபிமானத் தலையீடு" அவசியம் என்ற கூக்குரல் எழுப்பப்பட்டுவருகிறது. கடாஃபி கொல்லப்பட்டவுடன் பல மேற்குலக ஊடகங்கள் அடுத்தது சிரியாவின் பஷார் அல் அசாத்தான் என்று எழுதி மகிழ்ந்தன. சிரியாவில் ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராடிவரும் குழுக்களும் கடாஃபியின் வீழ்ச்சியால் புது உத்வேகம் பெற்றன. லிபியாவில் நேட்டோத் தலையீட்டை முன்னின்று நடாத்திய பிரான்ஸ் சிரியாதான் அடுத்த இலக்கு என்று அக்டோபர் 5-ம் திகதியே தெரிவித்து விட்டது.

மல்லிகைப் புரட்சி
மத்திய கிழக்கிலேயே மிக மோசமான அடக்கு முறையை மக்களின் மீது பிரயோகிக்கும் நாடாக சிரியா இருக்கிறது. துனிசியாவில் படித்துவிட்டு வேலை இல்லாமல் மரக்கறிக் கடை வைத்து தன் குடும்பத்தைப் பாதுகாத்து வந்த இளைஞர் பெண் காவல் துறை அதிகாரியால் தாக்கப்பட்டு முகத்தில் காறி உமிழப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த மல்லிகைப் புரட்சி துனிசிய ஆட்சியக் கலைத்துப் பின்னர் அப்புரட்சி எகிப்திற்குப் பரவி ஹஸ்னி முபாராக்கைப் பதவியில் இருந்து விரட்டி கடாஃபியை ஆட்சியைக் கவிழ்த்து அவரைக் கொலையும் செய்தது. 2011 மார்ச் மாதத்தில் இருந்தே சிரியாவில் மக்கள் பஷார் அல் அசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்து வருகிறார்கள். 1982இல் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு சிரிய ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்தபோது இருபதினாயிரத்துக்கும் அதிகமான கிளர்ச்சிக்காரர்கள் கொல்லப்பட்டனர்.

சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்யத் தொடங்கியதில் இருந்து இதுவரை மூவாயிரத்துக்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவிலும் லிபியாவைப் போல் சிரியத் தேசிய சபை அமைக்கப்பட்டுள்ளது. சிரியாவில் மக்களைப் பாதுகாக்க மற்ற நாடுகள் தலையிட வேண்டும் என சில அரச எதிர்ப்பாளர்கள் கோருகின்றனர். சில எதிர்க் கட்சிகள் மற்ற நாடுகளின் படைகள் சிரியாவுக்குள் வருவதை விரும்பவில்லை. அன்னியப் படைகள் சிரியாவுக்குள் வந்தால் சிரியாவின் ஆட்சியாளர்கள் பலமிக்க படையணிகளைக் கொண்டிருப்பதால் பெரிய போரும் பெரிய அழிவும் தவிர்க்க முடியாததாகிவிடும் என்று இவர்கள் கருதுகிறார்கள். லிபியாவில் கடாஃபியின் விமானங்கள் பொதுமக்களைக் கொல்கின்றன என்பதால் பொதுமக்களைப் பாதுகாக்க அங்கு விமானப்பறப்பற்ற பிரதேசம் ஒன்றை ஏற்படுத்துகிறோம் என்று நேட்டோ நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு ஆணையைப் பெற்றுக் கொண்டு தமது விமானங்களை லிபியாவில் பறக்கவிட்டு லிபியாவின் பொதுக் கட்டிடங்களை குண்டு வீசித் தகர்த்தன.

சிரியாவும் ஈரானும்
லிபியாவிற்கு அடுத்ததாக சிரியா என்றால் சிரியாவிற்கு அடுத்தபடியாக ஈரான்! இதை ஈரானிய ஆட்சியாளர்கள் நன்குணர்வர். சிரியாவில் ஒரு மேற்குலகு ஆதரவு அரசு அமைவதை ஈரான் சகல விதத்திலும் எதிர்த்து வருகிறது. சிரியாவில் மேற்குலக சார்பு நாடு அமைந்தால் அது ஈரானின் இருப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்பது பல படைத்துறை ஆய்வாளர்களின் கருத்தாகும். சிரியாவில் ஆட்சியாளர்களுக்கு எதிராக நடக்கும் கிளர்ச்சிகளில் பெரும்பாலானவை அமெரிக்க ஆதரவு நாடான ஜோர்டானுடனான எல்லை நகர்களிலேயே நடக்கின்றன. சிரிய ஆட்சியாளர்களுக்கான கிளர்ச்சி ஒரு அமெரிக்க - ஈரானிப் போட்டியாகவே பார்க்கப்படுகிறது. அண்மையில் சிரியாவிற்கான அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட் போர்ட்டுக்கு ஈரானியச் சதியால் கொலை அச்சுறுத்தல் ஏற்பட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. அமெரிக்கா ரொபேர்ட் போர்ட்டை திரும்ப அழைத்தும் விட்டது. கடாஃபி கொல்லப்பட்ட விதம் அமெரிக்காவிற்கு சாதகமாக அமையாது. சிரியாவிற்கு எதிராக பொருளாதரத் தடை விதிக்க ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் சீனாவாலும் இரசியாவாலும் இரட்டை வீட்டோவிற்கு(இரத்து) உள்ளானது. சிரியாவின் படைபலமும் ஈரான், சீனா, இரசிய உதவிகளும் மேற்குலகிற்கு சாதகமாக இல்லை. சிரியாவின் ஆட்சியாளர்கள் சில விட்டுக் கொடுப்புக்களை மேற் கொள்ள வேண்டியிருக்கும்.

Monday, 24 October 2011

கடாஃபி லிபிய மக்களுக்குச் செய்த நன்மைகள்.

விடுதலை வீரர்களின் நண்பன்
உலக எண்ணெய் வளத்திலேயே லிபியாவில் உள்ள எண்ணெய் வளம்தான் மிகத் தூய்மையானது. சதாம் ஹுசேயின் அரபு நாடுகள் தமது எண்ணெய் விலையை அமெரிக்க டொலர்களில் நிர்ணயம் செய்யாமல் யூரோ நாணயத்தில் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கூறியதற்காக கொல்லப்பட்டார். மும்மர் கடாஃபி எண்ணெய விலையை தங்கத்தில் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கூறியதற்காகக் கொல்லப்பட்டார். கடாஃபியை கொல்லாமல் உயிருடன் பிடித்து விசாரித்திருந்தால் அவர் பல ஐரோப்பிய அரசியல்வாதிகளுக்குக் கொடுத்த இலஞ்சங்கள் வெளி வந்திருக்கும். ஒரு மடிக்கணனி(Laptop) இலவசமாகக் கொடுத்து ஐந்து ஆண்டுகாலம் ஆட்சியில் அமர்ந்து கொள்கிறார்கள். காடாஃபியோ அள்ளி அள்ளிக் கொடுத்தார்.

புரட்சி வீரர்களின் நண்பன்.

மூன்றாம் உலக நாடுகளின் தலைவர்களின் நண்பன்
லிபியர்களுக்கு அவர் செய்த நன்மைகள்.

1. அனைவருக்கும் மின்சாரம் இலவசம்.
2. லிபிய வங்கிகள் வழங்கும் கடன்களுக்கு வட்டி அறவிடப்படுவதில்லை.
3. மக்களுக்கு வீடு என்பது அடிப்படை உரிமை. லிபிய நாட்டின் அனைத்து மக்களுக்கும் வீடு கிடைக்கும் வரை தனது தந்தைக்கு கடாஃபி வீடு கொடுக்கவில்லை. கடாஃபியின் தந்தை இறக்கும் வரை ஒரு கூடாரத்திலேயே வசித்தார்.
4. லிபியாவில் திருமணமான தம்பதிகளுக்கு அறுபதினாயிரம் டினார்கள் (50,000அமெரிக்க டொலர்கள்) இலவசமாக அவர்கள் வீடு வாங்கவும் வாழ்க்கையை ஆரம்பிக்கவும் வழங்கப்படும்.
5 அனைவருக்கும் இலவசக் கல்வி. கடாஃபி ஆட்சிக்கு வரமுன் லிபியாவின் படித்தவர்கள் 25%. இப்போது 83%
6. அனைவருக்கும் இலவச மருத்துவ வசதி.
7. லிபிய மக்கள் எவராவது விவசாயம் செய்ய விரும்பினால் அவர்களுக்கு இலவசக் காணி, வீடு, விவசாய உபகரணங்கள் வழங்கப்படும்.
8. லிபிய மக்களில் எவருக்காவது தேவையான கல்வியோ அல்லது மருத்துவ வசதியோ லிபியாவில் கிடைக்கவில்லை என்றால் அவர்கள் வெளி நாடு சென்று அவற்றைப் பெற அதற்குரிய செலவை லிபிய அரசு பொறுப்பேற்கும். அத்துடன் மாதமொன்றுக்கு அவர்களுக்கு அமெரிக்க டாலர்கள் 2300ஐ இலவசமாக வழங்கும்.
9 லிபிய மக்கள் எவராவது மகிழூர்தி(Car)வாங்க விரும்பினால் அரைவாசிச் செலவை லிபிய அரசு வழங்கும்.
10 லிபியாவில் பெட்ரல் விலை US $0.14. per litre.
11 லிபியாவிற்கு வெளிநாட்டுக் கடன் எதுவுமில்லை.அதன் வெளிநாட்டுச் சொத்து $150பில்லியன்கள்
12. பட்டதாரி ஒருவருக்கு வேலை கிடைக்கும் வரை சராசரி பட்டதாரிக்குரிய சம்பளத்தை லிபிய அரசு வழங்கும்.
13. லிபிய எண்ணெய் விற்பனை வருமானத்தின் ஒரு பகுதி நேரடியாக ஒவ்வொரு லிபிய மக்களினது வங்கிக்கணக்கில் வைப்பிலடப்படும்.
14. பிள்ளை பெறும் ஒரு தாய்க்கு அரசு US $5,000 வழங்கும்.
15 லிபியாவில் 40துண்டங்கள் அடங்கிய பாணின் விலை US $0.15
16. லிபிய மக்களில் 25% மானோர் பல்கலைக்கழகப் பட்டதாரிகள்.
17. உலகத்திலேயே பாரிய நீர்ப்பாசனத் திட்டம் - செயற்கை ஆறு லிபியாவில் மேற்கொள்ளபட்டது.
18. ஆபிரிக்காவிற்கான தொலை தொடர்புச் செய்மதியை ஒழுங்கு செய்ய கடாஃபி பணம் கொடுத்தார்.
19. ஆபிரிக்கக் கண்டத்திலேயே லிபியா மிகச் செல்வந்த நாடு.
20. ஆபிரிக்கக் கண்டத்திலேயே வாழ்கைத் தரம் மிக உயர்ந்தவர்கள் லிபியர்கள்.


கடாஃபிக்கு எதிரான கருத்துக்கள்
 • லிபியாவின் வெளிநாட்டுச் சொத்து $150பில்லியன்கள் ஆனால் கடாஃபியின் சொத்து $200 பில்லியன்கள். 
 • கடாஃபி சவுதி மன்னரிலும் பார்க்க மூன்று மடங்கு செல்வந்தர்.
 • கடாஃபி சிறப்பாக பொருளாதாரத்தை நிர்வகிக்கவில்லை.
லிபிய வருமானத்தின் 5% கடாஃபியைப் போய்ச் சேரும். கடாஃபி நாட்டின் கட்டமைப்புக்களை(infrastructure) சரியாக அபிவிருத்தி செய்யவில்லை.

அணிசேரா நாடுகளின் மாநாட்டிற்கு கொழும்பு வந்திருந்தபோது கடாஃபியின் படத்தில் கையெழுத்து வாங்கப் பல இலங்கை அதிகாரிகள் திரண்டனர்.
கடாஃபியை மேற்குலகினர் ஏன் வெறுத்தனர்.
 • கடாஃபியின் பெயரை எப்படி எழுதுவது என்பதில் மேற்குலக ஊடகங்களிடை பெரும் குழப்பம்.
 • ஆபிரிக்காவிற்கான தொலை தொடர்புச் செய்மதியை ஒழுங்கு செய்ய கடாஃபி பணம் கொடுத்தார். இதனால் மேற்கத்திய வர்த்தகர்களுக்கு பெரு நட்டம் ஏற்பட்டது.
 • கடாஃபி தனது நாட்டில் சீனாவின் முதலீட்டை அதிகரித்தார். பல அபிவிருத்தித் திட்டங்களில் சீனாவிற்கு அதிக வாய்ப்புக்கள் வழங்கினார். காடாஃபிக்கு எதிரான கிளர்ச்சி ஆரம்பித்தவுடன் லிபியாவில் இருந்து 30,000க்கு அதிகமான சீனர்கள் வெளியேறினர்.
 • கடாஃபி ஒரு ஆபிரிக்க நாணய நிதியத்தை உருவாக்க முயன்றார். இது மேற்குலக ஆதிக்கத்தில் உள்ள பன்னாட்டு நாணய நிதியத்திற்கு பெரும் சவாலாக அமையும்.

Sunday, 23 October 2011

இலங்கைக்கு அமெரிக்கா போடும் தூண்டில்கள்


இலங்கையில் அதிகரித்து வரும் சீன ஆதிக்கத்தை அமெரிக்கா தொடர்ந்து அவதானித்து வருகிறது. இதை இந்தியாவால் சமாளிக்க முடியாமல் இருப்பதையும் அமெரிக்கா அறியும். இந்தியாவின் தற்போதைய ஆட்சியாளர்கள் இதியாவின் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. தங்கள் குடும்பத்தின் எதிர் காலத்தைப் பற்றித்தான் அவர்களது கவலை. இந்தியா ஆட்சியாளர்களின் ஆலோசகர்களுக்கு தங்கள் சாதி நலன்களை முன்வைத்துச் செயற்படுகின்றனர். தமிழன் என்பவன் சூத்திரன் அவன் ஆளப்படவேண்டியவன்; அவன் ஆளக்கூடாது என்பதில் அவர்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர். இலங்கையின் தமிழர்களின் சுதந்திரப் போராட்டத்தை அடக்க சீனாவின் உதவி சிங்களவர்களுக்கு அதிகம் தேவை என்று உணர்ந்து அவர்கள் இலங்கையில் தமிழர்கள் போராட்டத்தை அடக்குவதற்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தியாவின் பிராந்திய நலன்களைக் கோட்டை விடவும் தயாராகினர். விளைவு அம்பாந்தோட்டையில் சீனா துறைமுகம் அமைப்பதை இந்தியா அனுமதித்தது. 2009இல் இந்திய படைத்துறை ஆய்வாளர்கள் கேர்ணல் ஹரிகரன், பி. ராமன் போன்றோம் அம்பாந்தோட்டையில் சீன துறை முகம் கட்டுவதையிட்டு இந்தியா கவலைப்படத் தேவையில்லை பகிரங்கமாக எழுதினர். ஆனால் பல பன்னாட்டு படைத்துறை ஆய்வாளர்கள் அம்பாந்தோட்டை இந்தியாவிற்கு எதிராக சீனா முத்து மாலை என்ற பெயரில் போடும் சுருக்குக் கயிறு என்று எழுதினர். ஹரிகரனதும் ராமானினதும் கூற்றுப் பிழையானவை என 2010இலேயே உணரப்பட்டுவிட்டது. இது தொடர்பான பதிவை இங்கு காணலாம்: http://veltharma.blogspot.com/2010/11/blog-post.html

சீனா தனது பிடியை இலங்கையில் மெல்ல மெல்ல இறுக்கி வருகிறது. இப்போது இலங்கையில் சீன செயற்படுத்தும் பல்வேறு திட்டங்களில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட சீனர்கள் இருப்பதாக லங்கா ஈ நியூஸ் இணையத் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் சீனாவின் செம்படை உறுப்பினர்களும் சிறைக்கைதிகளும் ஆவர்கள்.

2009-ம் ஆண்டிலிருந்து இலங்கைக்கு அதிக கடனுதவி செய்யும் நாடாக சீனா மாறியுள்ளது. வீதி அபிவிருத்திக்கு 1.2பில்லியன் அமெரிக்க டொலர்களை சீனா வழங்கியது. உதவித் தொகையாக 2.2பில்லியன் அமெரிக்க டொலர்களை சீனா வழங்கியது.
CHINA has emerged as Sri Lanka's biggest single lender in 2009, overtaking the World Bank and the Asian Development Bank, the treasury said on Wednesday. China lent US$1.2 billion to build roads, a coal power project and a port in the island's south last year, more than half the total of US$2.2 billion in foreign aid in 2009.
Project loans accounted for US$1.9 billion of the total, with another US$279.6 million in grants, the treasury said ahead of the 2010 budget.

உலக வர்த்தகத்தின் மூன்றில் இரண்டு பங்கு இந்து சமுத்திரத்தின் ஊடாக நடை பெறுகிறது என்பதை சீனா உணர்ந்து இந்து சமுத்திரத்தில் தனது ஆதிக்கத்தை வலுவாக்கிவருகிறது.

இந்தியா தொடர்ந்தும் இலங்கையில் சீன ஆதிக்க வளர்ச்சியை கண்டு கொள்ளாமல் இருக்க அமெரிக்கா இது தொடர்பாக கரிசனை கொண்டுள்ளது.

2008ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலேயே நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை இது பற்றிக் குறிப்பிடுகையில்:
 • Today, a shifting world order is bearing new fruits for Sri Lanka. Most notably, China’s quiet assertion in India’s backyard has put Sri Lanka’s government in a position not only to play China off against India, but also to ignore complaints from outside Asia about human rights violations in the war.

இலங்கையில் நடந்த போர்க்குற்றத்தை தனது துருப்புச் சீட்டாக அமெரிக்கா பாவித்து இலங்கையைத் தன் வழிக்குக் கொண்டுவரும் முயற்ச்சியில் இறங்கியுள்ளது. அமெரிக்கா இலங்கைக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகள்:
 • இலங்கையில் நடந்த போர்க்குற்றத்தைப் பற்றிய விசாரணை தேவை என அமெரிக்க கூறுகிறது.
 •  அமெரிக்கா இப்போது கனடாவையும் ஒஸ்ரேலியாவையும் இலங்கைப் போர்க்குற்றம் தொடர்பாக அக்கறை காட்ட வைத்துள்ளது. 
 • தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை அமெரிக்கவிற்கு அழைத்துப் பேச்சு வார்த்தை நடாத்துகிறது.

இலங்கைக்கு அமெரிக்கா போடும் தூண்டில்கள்:
 • இலங்கைக்கான ஜீ.எஸ்.பி வரிச் சலுகையை நீடித்தது.
 • அமெரிக்க மக்களவை உறுப்பினர்கள் மூவரை இலங்கைக்கு அனுப்பி இலங்கையை சாந்தப்படுத்துகிறது.

அமெரிக்க மக்களவை உறுப்பினர்கள் தங்கள் பயணத்தின் நோக்கத்தை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டனர்:
 • இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் தலையீடுகள் அதிகரித்துள்ளமை அதிகம் கவலையை ஏற்படுத்துகிறது. 
 • இலங்கையுடனான அரசியல், படைத்துறை மற்றும் வர்த்தக ரீதியிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதன் ஊடாகவே இலங்கையில் சீனாவின் தலையீட்டைக் குறைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.புவியியல் ரீதியாக இலங்கையில் அமைவிடம் மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், இலங்கை மீதான கவனத்தை அமெரிக்கா இழக்கவில்லை.
இக்கூற்றுக்கள் மூலம் அமெரிக்கா இலங்கையில் தனக்கு ஒரு வர்த்தகச் சுரண்டல் தேவை என்றும் சீன ஆதிக்கம் குறைக்கப்பட வேண்டும் என்றும் கருதிகிறது என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மறைமுகப் பொருள் இவை நடக்காவிட்டால் போர்க்குற்றத்தை இலங்கை ஆட்சியாளர்கள் சந்திக்க வேண்டிவரும் என்பதாகும். ராஜபக்சேக்கள் இந்தியாவை ஏமாற்றுவது போல் அமெரிக்காவை ஏமாற்ற முடியுமா?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...