Saturday, 22 October 2011

கேவலப்படுத்தப்பட்ட கடாஃபி

 கடாபி சித்திரவதை செய்யப் படும் புதிய காணொளி வெளிவிடப்பட்டுள்ளது. அது மிகவும் கொடூரமாக உள்ளது அதை கீழே காணலாம்.

மும்மர் கடாஃபி ஆட்சியில் இருக்கும் போது கிளர்ச்சி செய்த மாணவர்களைப் பொது இடத்தில் வைத்துக்கொலை செய்து விட்டு அவர்களின் உடல்களை அந்த இடத்திலேயே பல நாட்களாக அழுகும் வரை கிடக்கச் செய்தார்.  மற்ற வீதிகளை மூடி வாகனங்களை அந்த அழுகும் உடல்கல் கிடக்கும் வீதிவழியாக போகச் செய்தார். தன்னை எதிர்ப்பவர்களுக்கு என்ன நடக்கும் என்பதப் பலருக்கும் உணர்த்த இந்த ஏற்பாடு. ஒரு புரட்சியாளராகவும் உலகெங்கும் உள்ளவிடுதலை இயக்கங்களுக்கு  உதவி செய்பவராகவும் நிறவெறிக்கு எதிரான தென் ஆபிரிக்க மக்களின் போராட்டத்திற்கு  பேருதவி செய்பவராகவும் கருதப்பட்ட கடாஃபி தனது 42 கால ஆட்சியின் இறுதிப் பகுதியில் ஒரு அடக்கு முறையாளராகவே செயற்பட்டார். அவர் மீது மக்களுக்கு இருந்த வெறுப்பை அவர் இறந்தபின் மக்கள் ஆர்பரித்து மகிழ்வதில் காண முடியும்.கடாஃபியின் தங்கப் துப்பாக்கியால் கடாஃபி சுடப்பட்டார்.
மும்மர் கடாஃபி பிடிபட்ட பின் அவர் நீண்ட நேரம் சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். இரத்தம் வழிய வழிய அவர் தாக்கப்பட்டுள்ளார். கடாஃபி வைத்திருந்த தங்கத் கைத்துப்பாக்கியல் அவர் சுடப்பட்டார். அவரை கொன்றபின்னரும் தாக்குதல் தொடர்ந்தது. அவரது இறந்த உடலை தெருவில் போட்டுக் கால்களால் உதைத்தும் உடைகளைக் கழற்றியும் கேவலப் படுத்தினர்.

கடாஃபி சித்திரவதை செய்யப் படும் புதிய காணொளி
குளோபல் போஸ்ற் இணையத்தளம் கடாஃபி சித்திரவதை செய்யப்படும் காணொளியை வெளிவிட்டுள்ளது. கடாஃபி நடத்தப்படும் விதம் பன்னாட்டுப் போர் விதிகளுக்கு முற்றிலும் முரணானது.


காணொளியில் அல்லாஹு அக்பர் என்று கூச்சலிடுபவர்கள் அல்லாவின் போதனைகளை மறந்தது ஏன்?
ஒரு அமெரிக்க ஊடகத்தில் வாசகர் தெரிவித்த கருத்து: Khadafy deserved to face justice for his actions. However, this seemed to be a tad barbaric. Civilized people do not dispense justice in that manner. Seeing these images plastered over the screen has to make the average person a little sick to the stomach

பழைய இறைச்சிக் கடையில் கடாஃபியின் சடலம்
பின் லாடனைக் கொன்றபின் அமெரிக்கர்கள் பன்னாட்டு சட்டங்களுக்கு ஏற்பவும் இசுலாமிய விதிகளுக்கு ஏற்பவும் இறுதி ஏற்பாடுகளைச் செய்தனர்.  சாதாம் ஹுசேயின் பிடிபட்ட பின்னர் அவர் மீது எந்த ஒரு வன்முறையும் பிரயோகிக்கப்படவில்லை. அவர் மருத்துவப் பரிசோதனை செய்யும் காணொளி வெளிவிடப்பட்ட போது அவரது உடலில் எந்த ஒரு கீறல் கூட இல்லை. கடாஃபியைக் கொன்றவர்கள் அவரது உடலத்தை ஒரு மருத்துவமனையின் குளிரூட்டிய அறையில் வைக்கவும் இல்லை. கேவலமாக ஒரு பழைய இறைச்சிக் கடையில் வைத்து அவரது உடலத்தை காட்சிப் பொருளாக்கியுள்ளனர். இசுலாமிய விதிகளுக்கு ஏற்ப 24 மணித்தியாலத்துள் அடக்கம் செய்யவுமில்லை. அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கும் திட்டமும் இல்லை.

 நீர்க் குழாய்க்கும் சாக்கடைக்கும் வித்தியாசம் உண்டு
கடாஃபி வாகனத் தொடரணியில் தப்பி ஓட முயற்ச்சித்த போது பிரித்தானிய விமானங்கள் அவற்றை அடையாளம் கண்டு அமெரிக்க ஆளில்லா விமானப் படைக்கு அதை அறிவித்தன. முதலில் அமெரிக்க ஆளில்லா விமானங்களும் பின்னர் பிரெஞ்சு விமானங்களும் குண்டுகளை வீசின. குண்டு வீச்சுக்களில் இருந்து தப்ப கடாஃபி கொங்கிரீட்டால் ஆன நீர்க் குழாய்குள் அவரது பாதுகாப்புப் படையினரால் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் மேற்கத்திய ஊடகங்கள் கடாஃபி சாக்கடைக்குள் ஒழிந்தார் என்று அவரை கேவல்பபடுத்த செய்திகளை வெளியிட்டன.

நீர்ப்பாசனத்திற்கு அமைக்கப்பட்ட குழாய். சாக்கடை அல்ல...
 மௌனமாகிப் போன கடாஃபியின் நண்பர்கள்
அடைகு முறையாளர்  மும்மர் கடாபிக்கு இலங்கை இந்தியா போன்ற நாட்டை ஆளும் கேவலமானவர்களின் நட்பு நிறைய உண்டு. அவரின் இறப்புத் தொடர்பாக இந்த நண்பர்கள் மௌனமாக இருக்கின்றனர். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கழகப் பேச்சாளர் ரூபேர்ட் கொல்வில் காடாஃபியின் கொலை தொடர்பாக விசாரணை தேவை என்று சொல்லியுள்ளார். பனனாட்டு மன்னிப்புச் சபை கடாஃபியை பிடித்தவர்கள் அவரை கொன்றிருந்தால் அது ஒரு போர்க்குற்றம் என்கின்றது.

லிபியாவின் புதிய அரசைச் சேர்ந்தவர்கள் கடாஃபியைக் கொன்றவர் யாரென்று தமக்குத் தெரியும் என்கின்றனர். அவர் ஒரு வயது குறைந்தவர் என்கின்றனர். அவர் ஒரு லிபியக் குடிமகன் என்ற வகையில் அவரைத் தாம் பாது காப்போம் என்கின்றனர்.  அவர் ஒரு லிபியக் கதாநாயகன் என்றும் சொல்கின்றனர். அவர் குறைந்த வயதினர் என்றபடியால் அவரைச் நீதி மன்றில் நிறுத்த முடியாது என்று சொல்கின்றனர். குறைந்த வயதினர் என்பது ஒரு நாடகமா?

Friday, 21 October 2011

தன்னைப் பிடித்தவர்களிடம் மன்றாடிய கடாஃபி

எச்சரிக்கை: கீழுள்ள படங்களும் காணொளிகளும் மிகக் கொடூரமானவை.

கிளர்ச்சிக்காரர்களால் சுற்றி வளைக்கப்பட்ட லிபிய முன்னாள் தலைவர் தளபதி கடாஃபி காலை 15 வாகனங்களைக் கொண்ட ஒரு வாகனத் தொடரணியில் தப்பி ஓட முயற்ச்சித்தார். அந்த வாகனத் தொடரணியின் மீது காலை 8.30 அளவில் நேட்டோ விமானங்கள் குண்டு தாக்குதல் நடாத்தி அழித்தன. இதில் அமெரிக்க ஆளில்லா விமானங்களே ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்க ஆளில்லா விமானங்கள் முதலில் முன்னர் சென்ற ஒரு வாகனத்தைத் தாக்கி மற்ற வாகனங்களைத் தடை செய்தன. பின்னர் வீசிய குண்டுகள் சுமார் ஆறு வாகனங்களைத் தாக்கிச் சேதப் படுத்தின.  மொத்தமாக 70 வாகனங்கள் தப்பி ஓட முயற்ச்சித்ததாக இன்னொரு செய்தி தெரிவிக்கிறது. நேட்டோ தாம் தனிப்பட்டவர்களை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்துவதில்லை என்றும் தமக்கு கடாஃப் அந்த வாகனங்களுக்குள் இருப்பது தாக்கும் போது தெரியாது என்றும் கூறியது.

குண்டு வீச்சிலிருந்து தப்ப கடாஃபி ஒரு தண்ணீர் வாய்க்கால் குழாய்க்குள் ஒளிந்து கொண்டார். நீண்ட நாட்களாக கடாஃபி ஆதரவுப் படைகள் சரணடையாமல் மூர்க்கத் தனமாக  பதில் தாக்குதல் தொடுத்ததில் இருந்தே கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களுக்கு கடாஃபி Sirte சேர்டேநகரில் ஒளிந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருந்தது.

இப்படி இருந்தவரை...

இப்படிப் பண்ணினார்கள்....
வாகனத் தொடரணி மீது விமானத் தாக்குதல் நடந்திய பின்னர் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள் கடும் தேடுதல் மேற்கொண்டனர். கடாஃபியின் ஆதரவுப் படையினரில் ஒருவர் கொடுத்த தகவலை அடிப்படையாக வைத்து 12..30 மணியளவில் கடாஃபி இருந்த இடத்தைச் சூழ்ந்து கொண்டனர். கடாஃபியின் மெய்ப் பாதுகாவலர்கள் சரனடைந்தனர். அவர்கள் தங்கள் தலைவனை ஒன்றும் செய்ய வேண்டாம் அவர் காயப்பட்டுள்ளார் என்றனர். யார் தலைவர் என்று வினவிய போது அவர்கள் யாரென்று சொல்லவில்லை. பின்னர் தண்ணீர் வாய்க்காலுக்குள் இருந்து வந்த கடாஃபி எனது மகன்களே.... இங்கு என்ன நடக்கிறது?...... என்ன பிழை இங்கு..... என்றபடி வந்தார். தனது எதிரிகளை எலிகள் என்று அடிக்கடி விமர்சித்த கடாஃபி ஒரு வாய்க்காலுக்குள் எலிபோல் ஒளித்திருந்தார். அவரது தங்கக் கைத் துப்பாக்கியுடன் வெளிவந்த கடாஃபி தன்னைச் சுடவேண்டாம் என்று கத்தினார். அவரை இனம் கண்டு கொண்ட அவரது எதிரிகள் அவரை மூர்க்கமாகத் தாக்கினர்.ஒரு கட்டத்தில் 69வயதான கடாஃபி தன்மீது கருணை காட்டுமாறு கெஞ்சினார். நீங்கள் செய்வது இசுலாமியச் சட்டங்களுக்கு விரோதமானது என்று கடாஃபி கூற அவரைத் தாக்குபவர்கள் நாயே பொத்தடா வாயை என்றனர். கடாஃபி தாக்கப்படுவதையும் அவர் கெஞ்சுவதையும் கீழுள்ள காணொளியில் காணலாம்:கெஞ்சும் கடாஃபி
கடுமையான தாக்குதலால் கடாஃபி கொல்லப் பட்டார். அவர் ஒரு கைத்துப்பாகியால் கொல்லப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. கொல்லப்பட்ட பின்னர் அவரது உடலை தெருவில் போட்டு காலால் உதைத்தும் உடைகளைக் கழற்றியும் அசிங்கப்படுத்தினர் அவரது எதிரிகள். ஒரு நல்ல இசுலாமியர்களாக எதிரியின் உடலுக்கு மரியாதை செலுத்த கிளர்ச்சிக்காரர்கள் தவறி விட்டனர். எனது மண்ணில் இருந்து கடைசிவரை போராடுவேன் என்று அடிக்கடி அறை கூவல் விடுத்த கடாஃபி, தான் சொன்ன படியே செய்தார். கட்ஃபியின் உடல் அசிங்கமான முறையில் தாக்கப்படுவதைக் கீளுள்ள காணொளியில் காணலாம்:


 கடாஃபியின் குடும்பம்


கடாஃபியின் மகன்களில் ஒருவரான சயிஃ அல் இஸ்லாம் கடாஃபி காயங்களுடன் கைப்பற்றப்பட்டார். ஒரு மகன் சயிஃப் அல் அரப் கொல்லப்பட்டார். இன்னும் ஒரு மகன் முத்தாசிமும் கைது செய்யப்பட்டுள்ளார் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது அவரும் கொல்லப்பட்டுவிட்டார். முஹம்மட், சாதி, ஹானிபல் ஆகிய மூன்று மகன்களும் ஒரே ஒரு மகளான ஆயிஷாவும் கடாஃபியின் மனைவியும் தப்பி விட்டனர். ஒரு மகன் காசிமிற்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.

கடாஃபியின் உடல்
காடாஃபி ஒளிந்திருந்த இடம்
கடாஃபியின் தங்கத் துப்பாக்கி
கொடூரமாகத் தாக்கப்பட்டார்.
 கொடூரமான தாக்குதல்:
நீதிக்குப் பு'றம்பான கொலை
கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள் கடாஃபி தப்பி ஓட முயற்சித்த போது காலில் முதலில் சுடப்பட்டதாகவும் கடாஃபியை தாம்  முதலில் கைது செய்ததாகவும் அப்போது அவர் ஏற்கனவே முதுகிலும் தலையிலும் காயப்பட்டிருந்ததாகவும் அவரை ஒரு வாகனத்தில் தாம் ஏற்ற முயன்ற போது தமக்கும் கடாஃபியின் மெய்ப்பாதுகாவலர்களுக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் கடாஃபி அவரது மெய்ப்பாதுகாவலரால் கொல்லப்பட்டதாகவும் சொல்கிறார்கள். கடாஃபியை பிடித்து வைத்திருக்கும் காணொளிப் பதிவுகள் வெளி வந்துள்ளன. பின்னர் அவர் கொடூரமாகக் கொல்லப்பட்டார் என்பதற்கான ஆதாரங்கள் அவரடு உடலில் உள்ள காயங்கள் இரத்தக் கறைகள் என்பவற்றில் இருந்து தெரிகின்றன. கைது செய்த கடாஃபியின் உயிரைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருந்து கிளர்ச்சிக்காரர்கள் தவறிவிட்டனர். பிரித்தானிய வெளியுறவுத் துறை அமைச்சர் வில்லியம் ஹேக் இந்த நீதிக்குப் புறம்பான கொலையைத் தாம் அங்கீகரிக்கவில்லை என்றார். பன்னாட்டு மன்னிப்புச் சபை கடாஃபியின் இறப்புத் தொடர்பாக முழு அறிக்கையைக் கோரியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையும் கடாஃபியின் இறப்புத் தொடர்பாக விசாரணை தேவை என்று கூறியுள்ளது.

அரபு வசந்தத்தில் முதலில் கொல்லப்பட்ட சர்வாதிகாரி மும்மர் கடாஃபியாகும். 

கடாஃபின் கொலைக்குப் பின்னரான நகைச்சுவைகள்.
கடாஃபியின் பெயரை எப்படி எழுதுவது என்பது பல ஊடகவியலாளர்களுக்கு பெரும் பிரச்சனையாக இருந்தது. ‘Gaddafi’, ‘Khaddafi’ 'Qaddafi, 'Qadhafi', 'Gathafi',  or ‘Ghaddafi’ என்று பலவிதமாக எனப் பலவிதமாக அவரது பெயரை எழுதுவார்கள். இது தொடர்பாக சில நகைச்சுவைகள் உலாவத் தொடங்கிவிட்டன:

  • On Twitter by user @rameshsrivats -- "Gaddafi couldn't have been a very good dictator. Else he'd have at least given enough dictation to ensure that people spell his name right."
  • On Twitter by user @MohHKamel -- "Wait, wait!!! Don't kill Gaddafi before he tells us how to spell his name on the tombstone!"

காடாஃபியின் கொலையைக் கொண்டாடும் மக்கள்.


பிரித்தானியப் பாராளமன்றத்தில் பிரித்தானியா வாழ் இந்து சமயப் பிரமுகர்களிடை தீபாவளி வரவேற்பு வைபவத்தில் உரையாற்றும் போது கடாஃபியை பிரதம மந்திரி டேவிட் கமரூன் நரகாசூரனுக்கு ஒப்பிட்டார்.

Thursday, 20 October 2011

தத்துவார்த்த SMS நகைச்சுவைகள்.

நல் வாய்ப்பு
ஒரு முறைதான் கதவைத் தட்டும்
தீய வாய்ப்போ
கதவைத் தட்டிக் கொண்டே இருக்கும்.

எத்தனை அழுதாலும் தீராது கவலை
எத்தனை நட்புக்கள் இருந்தாலும் தாளாது தனிமை
எத்தனை உறவுகள் இருந்தாலும் போகாது வெறுமை
எத்தனை முறை சிரித்தாலும் வாராது இனிமை
நீயின்றி இங்கு எதுவும் இல்லைக் கண்ணே

மகிழ்ச்சியுடையவன்
எல்லாம் நல்லவையாக
அமைபவன் அல்ல
எல்லாவற்றையும்
நல்லவையாக
ஆக்குபவன்தான்
மகிழ்ச்சியானவன்.

மூன்று ஆப்பிள்கள்
உலகை மாற்றின
ஆதாமின் ஆப்பிள்
நியூட்டனின் ஆப்பிள்
Steve Job இன் ஆப்பிள்

நட்பா? உறவா? இப்படியுமா?
Girlfri(END),
Boyfri(END),
Fri(END),
All has an END at the end!
except Fam(ILY)!
It Has 3 Letters at the end I.L.Y
that says I.LOVE.YOU

அன்பும்
நட்பும்
மதிப்பும்
இணைபிரியாதவை
ஒன்று தவறினால்
மற்றயவையும் தவறும்

அந்தக்காலத்தில்
எல்லோரிடமும் நேரமிருந்தது
ஆனால் கடிகாரம் இல்லை
இன்று எல்லோரிடமும்
கடிகாரம் இருக்கிறது
ஆனால் நேரம் இல்லை

மீன் சொன்னது
உன்னுள் நானிருப்பதால்
என் கண்ணீரை நீயறியாய்
கடல் சொன்னது
என்னோடு நீயிருப்பதால்
உன் கண்ணீரை நான் உணர்வேன்.

உனக்குத் தேவையானவளைத் தேடாதே
உன்னைத் தேவைப்படுபவளைத் தேடு
உன்னை ஒதுக்குபவர்கள் பற்றிக் கவலைப்படாதே
உனக்காக மற்றவர்களை ஒதுக்குபவர்கள் பற்றி யோசி

அவள் என்னருகில் இருந்த நாட்கள்
உணவகத்தில் பணம் செலவானது
அவள் தொலைவில் இருந்த நாட்கள்
தொலைபேசிக்குப் பணம் செலவானது
அவள் பிரிந்து போனதன் பின்
மதுவில் பணம் செலவாகிறது.

Wednesday, 19 October 2011

நகைச்சுவைக் கதை: சுருட்டுப் புகைத்த வழக்கு

சுருட்டுப் புகைத்தலில் பிரிய முள்ள ஒரு இளம் தம்பதியர் மிக மிக விலை உயர்ந்த சுருட்டுக்களை வாங்கினார்கள். அவற்றைத் தாம் எப்போதும் வைத்துப் பாதுகாக்க வேண்டும் என்றும் முடிவு செய்தார்கள். அவற்றுக்கு சகல ஆபத்துக்களில் இருந்து காப்புறுதியும் பெற்றுக் கொண்டார்கள்.

சுருட்டுப் பிரியர்களான அவர்களுக்கு அந்த உயர்ரக சுடுட்டுக்களைப் புகைக்காமல் இருக்க முடியவில்லை. முழுவதையும் புகைத்துத் தள்ளிவிட்டனர். எல்லாம் முடிந்த பின்னர் தான் தாம் செய்த தவறை உணர்ந்து கொண்டனர். தமது சுருட்டுக்கள் எரிந்துவிட்டன என்றும் அதற்கு இழப்பீடு வழங்கும் படி காப்புறுதி நிறுவனத்திடம் வேண்டு கோள் விடுத்தனர். காப்புறுதி நிறுவனம் புகைத்தலினால் ஏற்பட்ட இழப்புக்கு ஈடு செய்ய முடியாது என்று மறுத்தது.  இளம் தம்பதிகள் நீதி மன்றம் சென்றனர். தாம் சகலவிதமான இழப்புக்களுக்கும் எதிராக காப்புறுதி செய்ததாக அவர்களது வாதம் அமைந்திருந்தது. வழக்கு பல நீதிமன்றங்களில் பல நாட்கள் நடந்தன. உச்ச நீதிமன்றம் இழப்பீடு வழங்கும் படி உத்தரவிட்டது. மகிழ்ச்சியாக வீடு திரும்பிய தம்பதிகளுக்குக் காத்திருந்தது அதிர்ச்சி! விலை உயர்ந்த பொருட்களைத் தீமூட்டி அழித்தமைக்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Tuesday, 18 October 2011

நகைச்சுவை: புராணகாலத்தில் டுவிட்டர் ஃபேஸ்புக் இருந்திருந்தால்

திருநாவுக்கரசர்: எழுபதாயிரம் சமணர்களை கழுவில் ஏற்றிக் கொல்ல வைத்தேன். அன்பே சிவம்.
சனீஸ்வரன்: நடுக்காட்டில் நளன் மனைவி தமயந்தி தவியோ தவிப்பு. நைசாக நழுவினார் நளன். lol.

அரிச்சந்திரன்: Wife for sale. Buy wife and get son free.


பரராச முனிவர்: படகுக்குள் நல்ல கிக்காக இருந்த சத்தியவதியை பக்காவாக சுவைத்தேன்

 
வியாசர்: ஒரு பெண்ணை ஐந்து ஆண்களுக்கு திருமணம் செய்து வைத்துச் சாதனை செய்தேன்.


கண்ணன்: அஸ்தினாபுரத்தில் சேலைத் தட்டுப்பாடு. கடைகளில் உள்ள சேலைகள் யாவற்றையும் கொள்முதல் செய்துவிட்டேன்.

சஞ்சயன்:
Gurushestram war will be live telecast.

ஜடாயு: Aerila interception ended in disaster.


சகுந்தலை: I gave birth to a bastard child

கைகேயி: சிதை இரண்டாம் தேன் நிலவுக்கு இரண்டு ஆண்களுடன் காட்டுக்குச் சென்றாள்.
 
இலட்சுமணன்: Sis-law என்மேல் அபாண்டமான குற்றச் சாட்டு.

 
அனுமான்: சீதை கடத்தப்பட்டாள். I booked a flight to Colombo.


ராமர்: Contractors urgently needed to build bridge across palk straight

விராடன்: நள்ளிரவில் தளபதி கீசகன் மர்மப்படுகொலை. ஆட்டம் காண்கிறது எனது அரசு.

Monday, 17 October 2011

Days were not days without you

Without you my life is not be a life
It was so cruel that you ve gone away
Days were not days without you
Nights lasted longer without you

Thinking about the days I lost
All the happy moments I cost
For the one I wanted most
All sorrow gone in a burst
With the arrival of you baby

The past is going away from me
The colourful future is coming to me
It is coming on yes it is coming
With the sweet smile of yours

With your head on my shoulder
And your arms on my neck
What else I need here
When you are so near

Sunday, 16 October 2011

அரசியல் தரகர்களும் பதவி விலகிய பிரித்தானிய அமைச்சர் லியாம் ஃபொக்சும்

மணமகன் ஃபொக்ஸும் மாப்புக்கு ஆப்பு வைத்த தோழனும்
ஆட்சியாளர்களை அரசியல் தரகர்கள்(Lobbyists) மூலம் கருத்து மாற்றங்களுக்கு உள்ளாக்குவது ஒரு நூற்றாண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. அமெரிக்காவில் 1869இல் அரசியல் தரகுச் செயல்கள் புகையிரதப் பாதை நிர்மாணம் தொடர்பாக அரசின் நடைமுறைகளை மாற்றுவதில் ஆரம்பித்தது. இது இப்போது பெரிய ஒரு தொழிற்துறையாக(Industry) வளர்ச்சி பெற்றுள்ளது. இத்துறையில் பல தனிப்பட்டவர்களும் நிறுவனங்களும் பணியாற்றுகின்றன. அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் மட்டும் 18,000க்கும் அதிகமானோர் இத்துறையில் பணிபுரிகின்றனர். ஐரோப்பியப் பாராளமன்றம் செயற்படும் பிரஸல்சில் 15,000இற்கு மேற்பட்டவர்கள் பணிபுரிகின்றனர்.

Lobby என்ற ஆங்கிலச் சொல்லிற்கு முகப்பறை, கூடுமிடம் என்று பொருள்படும். அரசியல் தரகர்கள்(Lobbyists)பாராளமன்றின் Lobby பகுதியில் பாராளமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து அவர்களின் அபிப்பிராயத்தை மாற்றி பாராளமன்றின் செயற்பாடுகளில், முடிவுகளில், வாக்கெடுப்புக்களில் அவர்களை  தாம் பிரதிநிதித்துவப் படுத்தும் நிறுவனங்களுக்கு சாதகமாக நடக்க வைக்க எடுக்கும் முயல்வர். இதனால்தான் இவர்களை Lobbyists என அழைப்பர். பல நாடுகள் அரசியல் தரகர்களின்(Lobbyists) நடைமுறை தொடர்பாக பல சட்டங்களையும் உருவாக்கியுள்ளன.

அரசியல் தரகர்கள்(Lobbyists) முன்னாள் பாராளமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மந்திரிகள் மற்றும் முன்னாள் உயர் அதிகாரிகளைப் பணிக்கமர்த்தி தமது பிரச்சார வேலைகளுக்குப் பயன்படுத்துகின்றனர். யூதர்கள் அரசியல் தரகர்கள் மூலம் அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களை இஸ்ரேலுக்குச் சாதகமாக வெற்றிகரமாக மாற்றியமைத்தனர். மத அமைப்புக்கள் பசுமை இயக்கங்கள் போன்றவை கூட அரசியல் தரகர்கள் மூலம் தமக்குச் சாதகமாக அரச முடிவுகளை மாற்றியமைக்க முயல்வதும் உண்டு. அரசியல் தரகர்கள் பத்திரிகைகளையும் தமக்கு ஏற்புடையதாக செய்திகளைப் பிரசுரிக்கச் செய்வதுண்டு.

அரசியல் தரகர்கள் பொறுப்பான பதவியில் உள்ளவர்களின் பலவீனங்களை அறிந்து அதன் மூலம் அவர்களை தம் வழிக்குக் கொண்டுவருவதுண்டு. பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவியில் இருந்து விலகிய லியோம் ஃபொக்ஸின் நண்பர் அடம் வெர்ரிட்டிக்கு அரசியல் தரகர்களுடன் நெருங்கிய தொடர்பு உண்டு. லியோம் ஃபொக்ஸ் முன்னாள் பிரித்தானிய பிரதமர் மார்கரெட் தட்சர் வழியில் இயங்கும் ஒரு தீவிர வலது சாரி அரசியல் வாதி. ஸ்கொட்லாந்தில் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஃபொக்ஸ் அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் விசுவாசி. பிரித்தானியா மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் பார்க்க அமெரிக்காவுடன் அதிக நட்புப் பாராட்ட வேண்டும் என்ற கொள்கையுடையவர்களான அத்லாந்திக்வாதிகள் (Atlantists) கூட்டத்தைச் சேர்ந்தவர்.

ஃபொக்ஸும் வெர்ரிட்டியும்
ஃபொக்ஸும் வெர்ரிட்டியும் பதின் மூன்று ஆண்டுகள் நண்பர்களாக இருக்கிறார்கள். அடம் வெர்ரிட்டி எடின்பரோ பல்கலைக் கழகத்தில் மாணவனாக இருந்த போது அங்கு உரையாற்றச் சென்ற லியாம் ஃபொக்ஸுடன் நண்பரானார். பின்னர் இருவரும் ஒன்றாக மாடித் தொடர் வீட்டில் குடியிருந்தனர். ஃபொக்ஸின் திருமணத்தில் வெர்ரிட்டி மாப்பிள்ளைத் தோழனாகவும் இருந்தார். இருவரும் எப்போதும் ஓரே மாதிரியாக ஆடை அணிந்திருப்பர். அவர்களுக்கான ஆடைகள் ஹாங்காங்கில் உள்ள ஒரு சிறப்பு ஆடை தாயாரிப்பாளரால் தைக்கப்படுகின்றன. தையல்ச் செலவுகள் பர்கவ் என்னும் வெர்ரிட்டியின் பெயரில் உள்ள அறக்கட்டளையில் இருந்து செலுத்தப்படும். பர்கவ் அறக்கட்டளைக்கு பல வெளிநாட்டு உள்நாட்டு வர்த்தகப் பிரமுகர்களிடம் இருந்து நன்கொடைகள் கிடைத்துள்ளன. பர்கவ் அறக் கட்டளை எந்த "அற" நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. ஃபொக்ஸின் 18 அரச முறை வெளிநாட்டுப் பயணங்களில் வெர்ரிட்டியும் உடன் சென்றிருக்கிறார். மே 2010இல் ஃபொக்ஸ் பாதுகாப்பு அமைச்சரானபின்னர் வெர்ரிட்டி 22 தடவை பாதுகாப்பு அமைச்சுக்குச் சென்றிருக்கிறார். அடம் வெர்ரிட்டியின் தொழில் அட்டையில்( Business Card)பிரித்தானியப் பாராளமன்ற இலச்சனையுடன் லியாம் ஃபொக்ஸின் ஆலோசகர் என அடம் வெர்ரிட்டியை அடையாளப் படுத்தப்பட்டுள்ளது. அடம் வெர்ரிட்டி அரசியல் தரகர்களுடன் நெருக்கமானவர் என்று கருதப்படுகிறது. இஸ்ரேலின் அரசியல் தரகர்களாகக் கருதப்படுவர்கள் பலர் வெர்ரிட்டிக்கும் அவரது பெயரில் உள்ள நிறுவனங்களுக்கும் அறக்கட்டளைக்கும் பணம் வழங்கியுள்ளனர். அவரது போக்கு வரத்துச் செலவுகள் இந்த அறக்கட்டளையில் இருந்து செலுத்தப்பட்டுள்ளன. அரசியல் தரகு வேலைக்காக வெர்ரிட்டிக்குப் பணம் வழங்கிய நிறுவனங்கள் அவர் தனது தொழிலைச் செய்யாமல் துபாயில் உள்ள உயர்தர உல்லாச விடுதி உட்படப் பல விடுதிகளில் ஆடம்பரமாகச் செலவு செய்த்தை இட்டு ஆத்திரமடைந்துள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது. வெர்ரிட்டிக்கும் இஸ்ரேலிய உளவுத் துறையான மொசாட்டிற்கும் தொடர்பு உள்ளதா இஸ்ரேலிய அரசியல் தரகர்களுக்கும் அவருக்கும் உள்ள தொடர்புகள் என்ன என்ற கேள்விக்களுக்கான விடைகள் இன்னும் வெளிவரவில்லை.

தன்னினச் சேர்க்கையாளரா?
50 வயதான லியாப் ஃபொக்ஸிற்கும் அடம் வெர்ரிட்டிக்கும் இடையிலான உறவு பாலியல் ரீதியானதா என்ற கேள்வியும் அண்மைக்காலங்களாக பிரித்தானியப் பத்திரிகைகளில் இடம்பெற்றிருந்தன. லியோம் ஃபொக்ஸிற்கு நெருக்கமானவார்கள் அவர் தனது மனைவி ஜெஸ்மியுடன் ஒற்றுமையாகக் குடும்பம் நடாத்துவதாகக் கூறுகின்றனர். பிரித்தானியப் படையில் பணிபுருந்த சாதாரணமான ஒருவருக்கு பல அதிகாரிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் லியோம் ஃபொக்ஸ் பாதுகாப்புத் துறை பணிமனையின் உயர் பதவி வழங்கினார். ஒரு வீட்டில் திருட்டுப் போன சமயம் இருவரும் அங்கு இரவு தங்கியிருந்தது பகிரங்கமானது. இருவரும் ஒன்றாக ஸ்பெயினில் விடுமுறையைக் கழித்ததும் பகிரங்கமாகியுள்ளது.


விநோதமான உறவுகளுக்குப் பெயர் போன வெஸ்ற்மின்ஸ்ரர் பிராந்தியம்.
உலக மக்களாட்சியின் தாய் எனக் கருதப் படும் பிரித்தானியப் பாராளமன்றம் அமைந்துள்ள வெஸ்ற்மின்ஸ்ரர் பிராந்தியம் விநோதமான உறவுகளுக்குப் பெயர் போனது. சகல அரசியல் கட்சிகளிலும் உள்ள அரசியல்வாதிகளைப் பற்றி விநோதமான சர்ச்சைக்குரிய கதைகள் அங்கு நடமாடுவது ஒரு சாதாரண விடயம்.3M உடன் சரியாக ஒட்டவில்லை.
லியோம் ஃபொக்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சரான பின்பு  3M என்னும் அமெரிக்க நிறுவனத்துடன் செய்து கொண்ட பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்கள் பிரச்சனைக்கு உரியதாகின. இது தொடர்பாக நீதி மன்ற வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ஃபொக்ஸிற்கும் 3M நிறுவன அதிகாரிகளுக்கும் இடையில் பரிமாறப்பட்ட மின்னஞ்சலை கார்டியன் பத்திரிகை அம்பலப்படுத்தியது.

அடம் வெர்ரிட்டியினால் உருவாக்கப்பட்ட பகவ் லிமிரெட் என்னும் இலாப நோக்கற்ற நிறுவனத்திற்கு இஸ்ரேலின் அரசியல் தரகர்களிடம் இருந்து $230,000 அமெரிக்க டாலர்கள் கிடைத்த செய்தி லியாம் பொக்ஸின் பதவிக்கான கடைசி ஆணியாக அமைந்தது. இந்த பணத்தில் இருந்துதான் அடம் வெர்ரிட்டியினதும் லியாப் ஃபொக்ஸினதும் பல வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவு செலுத்தப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

இனக் கொலையாளிகளின் நண்பர்
கடந்த பத்து வருடங்களாக லியோம் ஃபொக்ஸும் அவரது தோழர் அடம் வெர்ரிட்டியும் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் பயணம் செய்திருக்கின்றனர் என்று சனல்-4 அம்பலப் படுத்தியது. 2009இல் பிரித்தானிய மக்களவையில் இலங்கை உள்நாட்டுப் போர் தொடர்பாக  நடந்த விவாத்தில் லியோம் ஃபொக்ஸ் இலங்கை அரசுக்கு ஆதரவாகப் பேசினார். அவர் பேசியதற்கு ஒரு வாரத்திர்கு முன்னர் ( 2009 நவம்பர் 14-17) அவர் இலங்கை அபிவிருத்தி அறக்கட்டளையின் செலவில் இலங்கைக்கு ஒரு வாரப் பயணத்தை மேற் கொண்டிருந்தார். பிரித்தானியப் பாராளமன்ற ஒழுக்காற்றுக் கோவையின் படி அவரது உரையில் அவர் இலங்கை சென்றதைக் குறிப்பிட்டிருந்திருக்க வேண்டும். 2009 மார்ச்சிலும் ஓகஸ்டிலும் லியோம் ஃபொக்ஸ் இலங்கை அரசின் செலவில் இலங்கை சென்றிருந்தார்.  2010 டிசெம்பரில் இலங்கைக்கு ப் பயணம் செய்ய இருந்த லியோம் ஃபொக்ஸ் பல வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் பிரித்தானிய வெளிநாட்டமைச்சரின் பலத்த வற்புறுத்தலுக்கு மத்தியில் தனது இலங்கைப் பயணத்தக் கைவிட்டார். அடம் வெர்ரிட்டி பயணம் ஒத்தி வைத்ததாக அறிவிப்பு விடப் பண்ணியதுடன் 2011 ஜூலையில் முன்னாள் இலங்கை வெளிநாட்டமைச்சர் சாம் கதிர்காமரின் நினைவு நாளில் ஃபொக்ஸை உரையாற்றாவும் வைத்தார். இலங்கைக்கு பிரித்தானியா ஆயுதங்கள் விற்க வேண்டும் என இலங்கை அரசு அடம் வெர்ரிட்டி மூலம் அரசியல் தரகு செய்தது என்றும் சனல்-4 அம்பலப்படுத்தியது. அடம் வெர்ரிட்டியின் பல இலங்கைப் பயணங்கள் ஆயுத விற்பனை சம்பந்தமானதாகவே இருந்ததாம். ஃபொக்ஸும் வெர்ரிட்டியும் இலங்கை அபிவிருத்தி அறக்கட்டளையை ஆரம்பித்து இலங்கைக்கு நிதி திரட்டும் வேலைகளிலும் ஈடுபட்டனர். உலக அரங்கில் இலங்கையின் போருக்குப் பின்னரான அதன் மதிப்பைச் சீர் செய்யும் வழிவகைகள் பற்றி இலங்கை அரசு இருவருடனும் கலந்தாசோதித்து. மஹிந்த ராஜபக்ச 2010 டிசம்பரில் (தோல்வியில் முடிந்த) ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றுவதற்காக பிரித்தானியா வந்திருந்த வேளை அவரை பிரித்தானிய அரசு சார்பில் எவரும் சந்திக்கவில்லை. ஃபொக்ஸ் தனிப்பட்ட ரீதியில் தனது மஹிந்த மாத்தையாவைச் சந்தித்தார்.

முன்னுக்குப் பின்னர் முரணான தகவல்கள்

பாரளமன்றத்தில் எதிர்க் கட்சியினரால் கேட்கப் பட்ட கேள்விக்கு செப்டம்பர் 15-ம் திகதி பதிலளித்த ஃபொக்ஸ் வெர்ரிட்டி ஒரு அரச ஊழியர் அல்ல என்றும் எந்த ஒரு வெளிநாட்டுப் பயணத்திலும் வெர்ரிட்டி தன்னுடன் வரவில்லை என்றும் தெரிவித்தார். தனது பணிமனைக்கு வெர்ரிட்டி வந்து போனது பணி நிமித்தமற்றது என்றும் கூறினார். பின்னர் அக்டோபர் 9-ம் திததி தனது 3M உயர் அதிகாரி பௌட்லருடனான சந்திப்புத் தவறானது என்பதை ஒத்துக் கொண்டார்.

தன் மீதான குற்றங்களை ஆரம்பத்தில் வன்மையாக மறுத்து வந்த லியோம் ஃபொக்ஸ் தொடர்ந்து அவர் மீதான குற்றச் சாட்டுக்கள் வரவே இறுதியாக 14-ம் திகதி வெள்ளிக் கிழமை பதவி விலகினார். இன்னும் ஒரு வாரத்தில் லியோம் ஃபொக்ஸின் மீதான பாராளமன்ற விசாரணை முடிந்ததும் இன்னும் பல தகவல்கள் வெளிவரும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...