Saturday, 17 September 2011

அவன் - அவள் SMS நகைச்சுவை

The perfect boyfriend
doesn’t cheat,
doesn’t smoke,
doesn’t drink,
doesn’t lie,
.
.
and doesn’t exist!!


ஜில்ஜக்

அருகில் இருக்கையில்
கிடைக்கும் இன்பத்தைவிட
தொலைவில் இருக்கையில்
நினைவுகள் தரும் இன்பம்
மிகப் பெரிது
நம்முடைய வலி
மற்றவர்களுக்கு
சிரிப்பாக இருக்கலாம்
ஆனால்
நம் சிரிப்பு
மற்ரவர்களுக்கு
வலியாகக் கூடாது.
        -லக்ஸ்மன்-

U r a part of a puzzle of someone else’s life.
U may never know where u fit but remember that
someone else’s life may never be complete without U in it,
So enjoy being special!!!

A question from a girl;
Hey guys what makes you different than anyone else?
Prove to me you are unique!
because the only difference i see in guys,
is they all got different names..
Really!!


 ஜில்ஜக்
கொடியில் பூத்த பூ மல்லிகை
செடியில் பூத்த பூ ரோஜா
என் மடியில் பூத்தது பூ அவள்

When another girl steals your guy
do not worry; there is no better revenge
than to let her keep him.

My heart beats so fast it won’t calm down
I feel like I cannot breath
I get nervous and I feel like I am on air
I do not know what is going on! anymore!
I really hate it, this has never happened to me before!
I hate this, what did you do to me!
I really hate you !!!
--
The answer came back really quickly saying
Yeah, I already know that.
I Hate You TOO.

Unbelievable!! You are the first person ever to appear in my life and actually able to make me a mess !!!
.... sounds like romantic and irritating at the same time

Usually boys believe in what they see and
girls believe in what they hear,
that is why ....
boys lie and girls wear make upA simple Hi can make some 1 feel worthwhile,
A little silence can change things all over,
A simple NO! can hurt so much,
A small mistake can haunt you 4 the rest of your life,
A single memory can make u cry like crazy,
A word YES can change some1’s entire life,
A phrase I love you can make u feel u own the world,
And a text sms sent with so much love and care make some1’s Day!
So keep texting ! ...

Sometimes you meet someone and
before you know who are they, or
where they are from or even without knowing their name,
you get a feeling that sometime in the future
this person is going to mean something to you!!!

The first Person that u think of in the morning is
either the cause of ur Happiness
or the cause of ur Pain.

Boys get mad easily, but usually do not show it.
Girls get sad easily and can cry like crazy! ...
.
Boys care about the quantity of love!.
Girls care about the quality of love ...
.
Boys can forget, but can not forgive.
Girls can forgive, but can not forget! ...
.
Boys can never reject a girl’s add friend request
But girls often reject it just to feel powerful!!
.
Boys prefer the phrase "Boys vs Girls"
Girls INSIST on saying "Girls vs Boys" !!

Friday, 16 September 2011

நகைச்சுவை: கலக்கும் கடன் நெருக்கடி..
அமெரிக்காவையும் ஐரோப்பிய நாடுகளையும் ஆட்டிப்படைக்கும் கடன் நெருக்கடி பற்றி பலசுவையான நகைச்சுவைகளும் கருத்துப் படங்களும் வெளிவந்தமுள்ளன. பாடகி Katie Price சிலிக்கன் மார்புடையவர். அவரையும் வர்த்தக வங்கிகளையும் இப்படி ஒப்பீடு செய்து கலாய்க்கிறார்கள்.


Q: What's the difference between a merchant bank and Katie Price?
A: Both are institutions whose reputation is built on assets that, on closer inspection, turn out to be entirely artificial, vastly over-inflated and in danger of going through the floor at any moment. But at least Katie Price is still worth something.

 கடன் நெருக்கடி மோசமானால் பிரித்தானிய மகராணியின் நிலை இப்படி ஆகுமா?:
மகராணி மக்டொனாடில் வேலை!
கேள்வி: இன்றுள்ள பொருளாதாரச் சூழலில் இலட்சாதிபதியாவது எப்படி?
பதில்: ஒரு கோடிக்கு மேல் முதலிட்டு வியாபாரத்தை ஆரம்பிக்க வேண்டும்.

மேலை நாடுகளில் பெரும் சம்பாத்தியம் செய்தவர்கள் investment bankers எனப்படும் முதலீட்டு வங்கிகளில் வேலைசெய்பவர்கள். அவர்களை இப்படிக் கலாய்க்கும்படி நிலமை!!!!
Q: What’s the difference between an investment banker and a large pizza?
A: A large pizza can feed a family of four.

என்னடா இந்தப் பெரிய வங்கிக்கு வந்த சோதனை!!!

பணம் கதைக்கும். அதற்கு தெரிந்த ஒரே வசனம் "சென்று வருகிறேன்".
Money talks. Trouble is, mine only knows one word - goodbye.

வர்த்தகத்தில் பணத்தை இழந்தவர் இப்படிக் கூறுகிறார்:
"THIS IS WORSE THAN A DIVORCE. I'VE LOST HALF MY NET WORTH AND I STILL HAVE A WIFE"

அரசுகள் மக்களின் பொருளாதார நிலைகளைப் பற்றிக் கவலைப்படாமல் பெரு முதலாளிகளின் நிலைபற்றி அதிக கவல கொண்டால்:
 நிதியியல் அகராதி:
CEO –Chief Embezzlement Officer.
CFO– Corporate Fraud Officer.
BULL MARKET — A random market movement causing an investor to mistake himself for a financial genius.
BEAR MARKET — A 6 to 18 month period when the kids get no allowance, the wife gets no jewelry, and the husband gets no sex.
VALUE INVESTING — The art of buying low and selling lower.
P/E RATIO — The percentage of investors wetting their pants as the market keeps crashing.
BROKER — What my broker has made me.
STANDARD & POOR — Your life in a nutshell.
STOCK ANALYST — Idiot who just downgraded your stock.
STOCK SPLIT — When your ex-wife and her lawyer split your assets equally between themselves.
FINANCIAL PLANNER — A guy whose phone has been disconnected.
MARKET CORRECTION — The day after you buy stocks.
CASH FLOW — The movement your money makes as it disappears down the toilet.
YAHOO — What you yell after selling it to some poor sucker for $240 per share.
WINDOWS — What you jump out of when you’re the sucker who bought Yahoo at $240 per share.
INSTITUTIONAL INVESTOR — Past year investor who’s now locked up in a nuthouse.
PROFIT — An archaic word no longer in use.

உலகத்துக்கு சாப்பாடு போட்டவர்களுக்கு இக்கதியா?;
• This shipping market is so bad...that the only guys taking ships are the Somalians
• This market stinks so bad …that on my drive home yesterday there was a guy at an intersection with a sign that read, “Will manage your money for food”.
• This market stinks so bad...that my broker recommended only 2 positions, Cash and Fetal
• This market stinks so bad...that it makes lawyers smell clean!
• This market stinks so bad...that it makes putting money on a Texans win look like a solid investment
• This market stinks so bad...that I am advising my mother-in-law to put more money in!
• This market stinks so bad...that I can finally afford that divorce. She/he will get what I’ve always wanted her/him to get - half of nothing!
• This market sucks so bad…that it’s not even funny anymore
• This market stinks so bad…that my dartboard got taken away in a margin call
• This market stinks so bad…that I wish CFA stood for Certified Flight Attendant
• This market stinks so bad…that I wish I would have tried harder in my freshman chemistry class
• This market stinks so bad…that I’m thinking about getting my real estate brokerage license

 நிலைமை மோசமானால் BRANDS இப்படி ஆகுமா?
அமெரிக்க கார் கிறிஸ்லர் இப்படியாகுமா?
ஆப்பிளை இந்தக்கடி கடிக்குமா கடன் நெருக்கடி?

பங்குக் குறியீடு ????

இங்க் கார்ட்ரிஜ் மாற்றாமல் இருந்தால்...

பிரெஞ்சுக் கார்
Money makes the world go 'round, debt makes the spin crash to ground.

 கிரேக்க மக்கள் சோம்பேறிகள் என்பதற்காக இப்படி:
The World Bank would be happy to loan Greece the money it needs, if only the Greeks would work long enough to fill out the application form.

The IMF could fix the worldwide money meltdown if only they would shut themselves down.Thursday, 15 September 2011

அமெரிக்காவின் மூக்குடைக்கத் தவறிய தலிபான் அமெரிக்கவின் முகத்தில் கரி பூசியது.

தீவிரவாத(அமெரிக்கவின் அகராதியில் பயங்கரவாத) பிரச்சனையானது நுளம்புப் பிரச்சனை போன்றது. நாம் ஒருவித கிருமி நாசினியைப் பாவித்து அதை ஒழித்து விட்டோம் என்று மார்தட்டிக் கொண்டிருக்கும் போது அந்தக் கிருமி நாசினிக்கு தப்பிப்பிழைக்க கூடிய இன்னொரு தலைமுறை நுளம்புகள் உருவாகும். நுளம்பில் இருந்து தப்ப ஒரு வழி எமது காணிகளைத் துப்பரவாக வைத்திருத்தலே. தீவிரவாதம் தலைதூக்காத வகையில் உலக சமூக, அரசியல், பொருளாதாரக் கட்டமைப்புக்கள் மாற்றப்படும் வரை தீவிரவாதப் பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும்.


கடந்த பத்து வருடங்களாக அமெரிக்காவிற்கு அதிக தலையிடி கொடுக்கும் பிராந்தியம் ஆப்கானிஸ்த்தானுக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையில் இருக்கும் எல்லைப் பகுதியே. அமெரிக்க வெள்யுறவுக் கொள்கையில் ஆப்-பாக் கொள்கை என்று ஒன்று வகுக்கப்பட்டது. அமெரிக்கப் பாதுகாப்புத் துறைத் தலைமைச் செயலகம் பெண்டகனிலும் அமெரிக்க உளவுத் துறையான சிஐஏயிலும் ஆப்-பாக் பிரிவு என்று ஒரு தனிப்பிரிவு உருவாக்கப்பட்டது. ஆப்-பாக் பிராந்தியத்தில் உள்ள தீவிரவாதிகளுக்கு எதிராக தாம் பெரும் வெற்றியை ஈட்டியுள்ளதாக கடந்த சில மாதங்களாக அமெரிக்காவின் படைத்துறை வல்லுனர்கள் பேசியும் எழுதியும் வருகின்றனர். 09-07-2011இலன்று தனது சிஐஏ இயக்குனர் பதவியில் இருந்து அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலராக பதவி ஏற்ற லியோன் பனெற்றா அல் கெய்தாவை தாம் கேந்திர முக்கியத்துவ ரீதியில் தோற்கடிக்கும் நிலையை எட்டி விட்டதாகத் தெரிவித்தார். அவர் அப்படிச் சொல்வதற்குப் பல காரணங்கள் இருந்தன. அமெரிக்க ஆளில்லாப் போர்விமானங்கள் பல தீவிரவாதிகளைக் கொல்வதுடன் அவர்களது நடமாட்டத்தையும் கட்டுப்படுத்தி வருகிறது. 2011 மே மாதம் பின் லாடனைக் கொன்றது. அவரது மாளிகையில் இருந்த அல் கெய்தாவின் கணனிப் பதிவேடுகளை அமெரிக்கப் படையினர் தம்முடன் எடுத்துச் சென்றுவிட்டனர். 

அல் கெய்தா பற்றிய முந்திய பதிவைக்காண கீழே சொடுக்கவும்:
ஆட்டம் காண்கிறதா அல் கெய்தா?

முக்கியத்துவம் வாய்ந்த 2011 செப்டம்பர்
2011 அமெரிக்கா தனது நாட்டு இரட்டைக் கோபுரத்தில் இரு விமானங்கள் மூலம் தாக்குதல் நடாத்திய பின் லாடனைக் கொன்ற ஆண்டு. அந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பத்தாம் ஆண்டு நிறைவு 2011 செப்டம்பர் இல் இடம் பெற்றது. பின் லாடனைக் கொன்ற பெருமிதத்துடன் அமெரிக்கா இரட்டைக் கோபுரத் தாக்குதலை நினைவு கூர்ந்தது. இப்படிப் பட்ட முக்கியத்துவம் வாய்ந்த 2011 செப்டம்பரில் இசுலாமியத் தீவிரவாதிகள் அமெரிக்காவிலோ ஐரோப்பியாவிலோ ஒரு பெரும் தாக்குதலை நடாத்தலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அமெரிக்கவின் மூக்குடைக்க வேண்டிய அவசியம்
பின் லாடனின் கொலைக்குப் பின்னரும் முன்னரும் பல இசுலாமியத் தீவிரவாதிகளின் முக்கிய தலைவர்களை அமெரிக்கா கொன்றுள்ளது. ஜூன் மாதத்தில் இலியாஸ் கஷ்மிரீயும் ஆகஸ்ட் மாதம் அதியா அப் அல் ரஹ்மானும் அமெரிக்காவால் கொல்லப்பட்டனர். இதனால் இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு அமெரிகாவிற்கு ஒரு மூக்குடைப்புச் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.


காபுலில் தாக்குதல் நடத்த கச்சிதமான ஒரு திட்டம்
பின் லாடனின் கொலைக்கு இரு வாரங்களின் பின்னர் பாக்கிஸ்த்தானின் மெஹான் கடற்படைத் தளத்துக்குள் ஆறு தலிபான் போரளிகள் நுழைந்து அங்கு இருந்த அமெரிக்காவால் வழங்கப்பட்ட ஆளில்லாப் போர் விமானங்களைத் தாக்கி அழித்ததுடன் பெரும் சேதத்தை அங்கு விளைவித்து 18 மணித்தியாலங்கள் தளத்தை தம் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர். இரட்டைக் கோபுர நினைவாக ஆப்கானிஸ்தான் தலைநகருக்குள் புகுந்து அமெரிக்க தூதுவரகத்தையும் நேட்டோ கூட்டமைபின் அலுவலகத்தையும் தாக்கும் திட்டத்தை தலிபான் வகுத்துக் கொண்டது. செப்டம்பர் 11-ம் திகதி உலகெங்கும் கண்காணிப்பாக இருந்த படியால் அந்த நாளை விட்டு செப்டம்பர் 13-ம் திகதியை அது தாக்குதலுக்கு உரிய நாளாக தெரிந்தெடுத்தது. 13-ம் திகதி நேரம் அதி காலை இசுலாமியப் பெண்கள் போல் பர்தா அணிந்து தலிபான் போராளிகள் வாகனம் நிறைந்த வெடி பொருள்களுடன் ஆப்கான் தலை நகர் காபுலுக்குள் நுழைகின்றனர். அவர்களைத் தடுக்க முயன்ற காவற்துறையினர் மீது துப்பாகிப் பிரயோகம் செய்து விட்டுப் போகும் போது வழியில் வந்த ஒரு பேருந்து மீதும் துப்பாக்கிப் பிரயோகம் செய்கின்றனர். காபுலில் புதிதாகக் கட்டப் பட்டுக் கொண்டிருக்கும் 13 மாடிக்கட்டிடத்துக்குள் அவர்கள் நுழைகின்றனர். முன் கூட்டியே அக் கட்டிடத்துக்குள் போராளிகள் ஆயுதங்களைப் பதுக்கி வைத்து விட்டனர். போராளிகள் ஏற்கனவே அக்கட்டிட வேலையில் தொழிலாளர்களாக இணைந்துள்ளனர். அக்கட்டிடம் அமெரிக்க தூதுவரகத்திற்கும் நேட்டோ அலுவலகத்திற்கும் மிக அண்மையில் இருக்கிறது. அங்கிருந்து கொண்டு அமெரிக்க தூதுவரகத்தின்மீதும் நேட்டோ அலுவலகத்தின்மீதும் ஆர்பிஜீ, ஏகே-47 போன்றவை மூலம் தாக்குதல் தொடுக்கின்றனர். தமது தாக்குதல் பற்றிய விபரங்களை உடனுக்குடன் ஊடகங்களுக்கு குறுந்தகவல்(எஸ் எம் எஸ்) மூலம் அறிவிக்கின்றனர். வேறு ஒரு பிரிவினர் ஷினோஜாடா மருத்த மனைக்கு அண்மையாக தாக்குதல் நடத்துகின்றனர். அங்கு ஆப்கானிஸ்த்தான் தகவல் துறை அமைச்சர் இருக்கிறார். அமெரிக்க வான்படையின் UH 60 Black Hawk  உலங்கு வானூர்தி திவிரவாதிகள் இருக்கும் கட்டிடத்தில் தாக்குதல் நடத்தச் செல்கிறது. இதை முன் கூட்டியே எதிர்பார்த்திருந்த போராளிகள் கட்டிடத்தின் Lift Tube - உயர்த்திக் குழாய்க்குள் நிலை எடுத்து தாக்குதலில் இருந்து தப்பி தொடர்ந்து தமது தாக்குதல்களை மேற் கொள்கின்றனர். இப்போது அமெரிக்கக் கடற்படையினர் கட்டிடத்திற்கு அண்மையாக தமது நிலைகளை எடுத்துக் கொள்கின்றனர். இப்போது மேலும் ஒரு போராளிகளின் பிரிவு ஆப்கானிஸ்தானின் பாராளமன்றத்துக்கு அண்மையில் தாக்குதல் நடாத்துகிறது. மதியம் 12 மணிக்கு போராளிகள் இருவரைப் பிடித்ததாக ஆப்கனிஸ்தான் காவல் துறை தெரிவிக்கிறது. 12-30 இற்கு காபுலில் உள்ள Abdul Haq roundabout இற்கு அண்மையாக பெரும் சண்டை நடக்கிறது. இப்போது ஆப்கானிஸ்தானின் Mi35 உலங்கு வானூர்திகள் 13 மாடிக்கட்டிடத்தில் தாக்குதல் நடாத்துகின்றன. 1-30 பி.ப ஒரு ஆப் படை விரனும் இரு போராளிகளும் கொல்லப்படுகின்றன்ர். 1-40 பி. ப காபுல் காவற்துறை நிலையம் மீது தற்கொலைத்தாக்குதல். பி.ப 2 மணி: 13 மாடிக்கட்டிடத்துக்குள் இருந்து 4 போராளிகள் தொடர்ந்தும் தாக்குகின்றனர். 14-40 பாடாசாலைப் பிள்ளைகளுடன் வந்த பேருந்து மீது போராளிகள் தாக்குதல் நடாத்துகின்றனர். பி.ப 3-40 மேலும் இரு போராளிகள் கொல்லப்படுகின்றனர். இப்போது இருவர் மட்டும் கட்டிடத்துக்குள் இருந்து தாக்குதல் நடாத்துகின்றனர். பி.ப 5-00 போராளிகள் இருக்கும் கட்டிடத்துக்குள் படையினர் நுழைகின்றனர். தற்கொலைத் தாக்குதலுக்குப் பயந்து அவர்களின் நகர்வு நத்தை வேகத்திலேயே நடக்கிறது. இரவு பத்து மணி பத்தாம் மாடியில் இரு போராளிகள் மட்டுமே இருந்து சண்டையைத் தொடர்ந்து நடாத்துகின்றனர். நள்ளிரவு வரை சண்டை தொடர்கிறது.

அமெரிக்கா-ஆப்கானிஸ்தான் அரசுகளுக்கு இது ஒரு மானக்கேடு
அமெரிக்கா-ஆப்கானிஸ்தான் அரசுகள் இரு முனையில் தோற்றுவிட்டன. ஒன்று காபுலின் முக்கிய இடத்தில் பாதுகாப்புக் குறைபாடு. அங்கு தீவிரவாதிகள் நுழந்து 20 மணித்தியாலங்கள் சண்டையிடக் கூடிய ஆயுதங்களை எப்படிப் பெற்றனர் என்ற கேள்விக்கு என்ன பதில்? அடுத்தது இப்படி ஒருதாக்குதல் நடக்க்ப்போகிறது என்பதை அவர்களின் உளவுத் துறையால் கண்டு பிடிக்காமல் போனது எப்படி?

தலிபானால் அமெரிக்கவிற்கு சேதம் ஏற்படுத்த முடியவில்லை
காபுல் தாக்குதல் ஒரு புதிய இயக்கத்தினரால் நடாத்தப் பட்டது என்று அமெரிக்கா கூறுகிறது.  ஆனால் இத்தாக்குதலுக்கு தலிபான் உரிமை கோருகிறது.  தலிபான் போராளிகளால் அமெரிக்காவிலோ அல்லது ஐரோப்பவிலோ தாக்குதல்களைச் செய்ய முடியவில்லை. நன்கு திட்டமிட்ட காபுல் தாக்குதலில் ஒரு அமெரிக்கரைக் கூடக் காயப் படுத்த முடியவில்லை. அமெரிக்காவிற்கு மூக்குடைக்க வேண்டிய தலிபானால் அமெரிக்காவின் முகத்தில் கரியைப் பூச மட்டுமே முடிந்தது.

Wednesday, 14 September 2011

நகைச்சுவைக் கலவை

தமிழ்ப்பட நடிகைளின் இமெயில் இப்படி இருக்குமா:
 அஞ்சலி: namma@peN.com
தமனா: goldengirl@mozhumozhu.com
நயன்தாரா: seruppu@chimpu.com
நமீதா: fatima@thodai.com
அனுஷ்க்கா: skin@smooth.com
சிநேகா: sweet@smile.com
ஸ்ரேயா: top@hip.com

 இப்படி எனது ஐடியா. உங்கள் ஐடியாக்கள் ஏதாவது இருந்தால் கூறுங்களேன்.


 வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம்
கடமையைச் செய்தால் வெற்றி
கடமைக்குச் செய்தால் தோல்வி - சற்குரு

Husband was throwing knives on his wife’s photo,
while wife was out.
No knife hit wife’s photo!
Suddenly wife called, Hi honey, what’s up?
Husband: MISSING YOU DARLING.Airlines Acronyms Explained
Alitalia:
Airplane Landed In Tokyo And Luggage In Atlanta
American: Airline Meals Eaten Regularly Induces Cramps and Nausea
BOAC: Better On A Camel
Delta: Don't Ever Leave The Airport
Delta: Don't Expect Luggage To Arrive
El Al: Every Landing Always Late
Olympic: Onassis Likes Your Money Paid In Cash
PIA: Perhaps I'll Arrive
Sabena: Such A Bad Experience - Never Again
SAS: Sex After Service
TAP: Take Another Plane
TWA: Try With Another இந்தி நடிகர்களின் இப்படி இருக்குமாம்:

AbhishekBacchan: I_can_act_too@yuva.com
AmitabhBacchan: accept_any_role@after.kaunbanegacrorepati.tv
AnilKapoor: expert@copyingsouthindianmovies.com
SalmanKhan: why_do_I_always_get_into_trouble@needagirlfriend.com
ShahRukhKhan: over_emotions@mostmovies.com
RamGopalVarma: same_formula@bombayunderworld.co.in
HritikRoshan: main_aisa_kyon_hoon@howtheheckdoweknow.com
HritikRoshan(alternateaddress): main_aisa_kyon_hoon@askyourdad.com
AjayDevgan: finally_I_started_to_act@aftersomanyyears.com
BobbyDeol: noone_thinks_I_can_act@getanotherjob.com
Urmila: ramgopalvarma_has_forgotten_me@nomorerangeela.coMallikaSherawat: I_dont_need_to_act@overexposureworks.com
KareenaKapoor: oh_iam_so_cute_and_talented@nobodyelsethinksso.com
                                from: dinesh.com


விட்டுக் கொடுப்பது என்பது
நான் சரி அவன் பிழை என்பதல்ல
என் ஆணவத்திலும் பார்க்க அவனுடைய நட்பைப் பெரிதாக மதிப்பதே.

Tuesday, 13 September 2011

முறிவடையும் கிரேக்கமும் நலிவடையும் ஐரோப்பிய ஒன்றியமும்.

அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளால் மட்டுமே பொருளாதரத்தில் வளர்ச்சியடைந்து உலக வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்று உணர்ந்த மேற்கு ஐரோப்பிய நாடுகள் தாம் ஒன்றிணைந்து ஒரு பெரும் சந்தையாகவும் அரசாகாவும் உருவெடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஐரோப்பிய ஒன்றியம் என்ற பெயரில் இணைந்து கொண்டன. ஐரோப்பிய ஒன்றியம் எப்படி இருக்க வேண்டும் என்பதில் இன்றும் நாடுகளிடை கருத்து வேறுபாடுகள் உண்டு. சில கிழக்கு ஐரோப்பிய நாடுகள் உட்பட 27 நாடுகள் இப்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ளன. இவையாவற்றையும் ஒன்றிணைத்தால் மொத்த தேசிய உற்பத்தி ரீதியில் ஐரோப்பிய ஒன்றியம் உலக பொருளாதாரத்தில் முதலிடம் வகிக்கிறது.

பொருளாதார் ரீதியில் ஒன்றிணைந்த 27 நாடுக்ளும் தமது அதிகாரங்களை விட்டுக் கொடுத்து ஒரு மத்திய அரசுக்குக் கீழ் கட்டுப்பட்டு நடக்க தயக்கம் காட்டுகின்றன. பதின் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு என்று யூரோ என்ற தனி நாணயம் உருவாக்கப்பட்டபோது 17 நாடுகள் மட்டுமே அதில் இணைந்து கொண்டன. முழு நாடுகளும் இணையாதது ஐக்கிய ஐரோப்பிய அரசு உருவாக்கத்திற்கு ஒரு பின்னடைவே. அடுத்த பெரும் பின்னடைவு ஒரு நாணயத்தை ஏற்றுக் கொண்ட 17 நாடுகளும் ஒரு நாட்டுப் பொருளாதரத்துக்குரிய கட்டுப் பாடுகளை இறுக்கமாகக் கடைப் பிடிக்காமல் தமது தேர்தல் அரசியலுக்கு ஏற்ப ஒவ்வொரு நாடுகளும் தமது பொருளாதாரக் கொள்கைகளைக் கடைப்பிடித்தன. சில நாடுகள் மக்களுக்கு பெரும் பணச் செலவில் அதிக சமூக நன்மைகளைச் செய்தும் சிலநாடுகள் தமது அரச செலவீனங்களை குறைத்தும் செயற்பட்டன. ஆனால் நாணய ஒன்றியமானது ஒரு சிறந்த பொருளாதாரக் கட்டுப்பாடுன் இருக்க வேண்டும். பொருளியலாளர்கள் கூறுகிறார்கள்: Currency union should go hand in hand with fiscal policy union.

பெரியண்ணன் வைத்ததுதான் சட்டம்.
யூரோ நாணயத்தை ஏற்றுக் கொண்ட நாடுகளை யூரோ வலய நாடுகள் என்று அழைப்பர். இந்த யூரோ வலய நாடுகளில் பொருளாதாரத்திலும் மக்கள் தொகையிலும் முதலாம் இடத்தில் இருப்பது ஜேர்மனியே. யூரோ நாணயத்தின் பெறுமதியும் அதன் வட்டி வீதமும் ஜேர்மனியப் பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்புடையதாக நிர்ணயிக்கப்பட்டன. ஒரு நாட்டின் பொருளாதார சூழ் நிலைகளுக்கு ஏற்ப அதன் வட்டி வீதவும் நாணய மதிப்பும் இருந்தால்தான் அந்நாடு தன் பொருளாதார ஏற்ற இறக்கங்களைச் சரியான முறையில் எதிர் கொள்ள முடியும். ஜேர்மனை தனது நாட்டின் செலவீனங்களைக் கட்டுப்படுத்தி தொழிலாளர் உரிமைகளயும் நலன்களையும் மட்டுப்படுத்தி தனது நாட்டின் உற்பத்தித் திறனை அதிகரித்து உலகின் முதல்தர ஏற்றுமதி நாடாக தன்னை நிலை உயர்த்திக் கொண்டது. பிரெஞ்சு விவசாயிகளை வீடுகளில் ஜேர்மனியக் கார்கள் அழகு படுத்தின. யூரோ வலய நாடுகளிடை பெரும் பொருளாதார வேறுபாடுகள் தோன்றின. யூரோ வலய நாடுளில் மற்ற பெரிய நாடான பிரான்சில் வேலையற்றோர் தொகை 10% ஜெர்மனியில் 7%. பிரான்சில் ஒரு ஊழியர் ஒரு வாரத்தில் அதிக பட்சம் 35 மணித்தியாலங்கள் மட்டு மே வேலை செய்ய முடியும். ஜேர்மனியில் அது 39 மணித்தியாலங்கள்.பொருளாதாரத்தில் ஜேர்மன் பிரான்சிலும் பார்க்க பலமாக இருந்தாலும் சமூக உரிமைகளில் அது பிரான்சிலும் பின் தங்கியே உள்ளது. ஒரு நாட்டுக்குள் வேலையற்றோர் ஒரு பிரதேசத்தில் இருந்து மற்றப் பிரதேசத்துக்கு இடம் பெயர்வது போல் யூரோ வலய நாடுகளிலும் வேலையற்றோர் ஒரு நாட்டில் இருந்து மற்ற நாட்டுக்குப் போய் வேலைசெய்ய முடியும். ஆனால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஊழியர்கள் இப்படி நாடுகளை மொழி கலாச்சாரப் பிரச்சனைகளால் மாற்றிக்  கொள்வது குறைவு. பல நாடுகள் ஒன்றிணைந்து ஒரு நாணயக் கூட்டமைப்பை உருவாக்கும் போது இந்தப் பிரச்சனைகள் சமாளிக்கக் கடினமானவயே.

ஜேர்மனியின் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப வகுத்துக் கொண்ட யூரோ நாணய மதிப்பும் யூரோ வலய வட்டி வீதமும் கிரேக்கம், வட அயர்லாந்து, ஸ்பெயின், இத்தாலி, போர்த்துக்கல் போன்ற நாடுகளுக்கு ஒத்து வரவில்லை. இவற்றின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டு அங்கு நிறுவனங்கள் மூடப்பட்டு வங்கிகள் வங்குரோத்து நிலையடைந்து, அரசுகள் நிதி நெருக்கடியில் தவிக்கின்றன.  இவற்றில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடு கிரேக்கம். இது இப்போது கடன் சுமைகளைச் சமாளிக்க முடியாமல் தள்ளாடுகிறது. கிரேக்கத்தின் கடன் முறிகளுக்கான வட்டி 60% மாக உயர்ந்துள்ளது. பொதுவாக இது ஐந்திலும் குறைவாக இருக்க வேண்டும். இப்போது கிரேக்கக் கடன் முறிகளை யாரும் வாங்கத் தயாராக இல்லை. யூரோ வலய நாடுகளுக்கு என்று ஒரு பொதுவான கடன் முறிகளை உருவாக்கி அதை விற்று வரும் பணத்தைக் கிரேக்கத்திற்கு கொடுக்க மற்ற யூரோ வலயநாடுகள் அதில் முக்கியமாக ஜேர்மனி தாயாராக இல்லை. ஜேர்மனி கிரேக்கத்திற்கு கடன் கொடுக்கவோ அல்லது மான்யம் வழங்கவோ தயாராக இல்லை. இதை ஜெர்மன் வாக்காளர்கள் விரும்பவில்லை என்பதை அடுத்த ஆண்டு தேர்தலை எதிர் கொள்ளும் ஜேர்மன் ஆட்சியாளர்கள் உணர்ந்துள்ளனர். .இதனால் கிரேக்கம் பொருளாதாரம் எந்நேரமும் முறிவடையலாம என்று எதிர் பார்க்கம் படுகிறது. மற்ற யூரோ வலய நாடுகள் கிரேக்கம் முறிவடைவதைக் தடுக்க முயலவில்லை. கிரேக்கம் தனது பொருளாதார சீர்திருத்தங்களை உறுதி அளித்தபடி செய்யவில்லை என்பதை மற்ற நாடுகள் ஒரு சாட்டாகக் கொள்கின்றன. கிரேக்கம் முறிவடைந்தால் அதற்குக் கடன் கொடுத்த பிரெஞ்சு வங்கிகள் வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்படலாம். இது பிரான்சில் ஒரு நிதி நெருக்கடியைத் தோற்றுவிக்கலாம். பிரான்சின் நிதி நெருக்கடி மற்ற யூரோ வலய நாடுகளிற்குப்பரவி அது ஒரு உலகப் பொருளாதார நெருக்கடியாக உருவெடுக்கலாம்.

சீனாவிடம் கையேந்தும் இத்தாலி
கடன் நெருக்கடிக்கு கிரேக்கம் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்க இத்தாலி தனது கடன் பிரச்சனையைத் தீர்க்க சீனாவை தனது நாட்டுக் கடன் முறிகளை வாங்கும் படி கேட்டு நிற்கிறது. சீனாவும் தனது பாரிய வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பான 3.2ரில்லியன் டொலகளை முதலிட நல்ல இடங்களைத் தேடி நிற்கிறது. இத்தாலிய கடன் முறிகள் 5% இற்கு மேல் இலாபம் தரக்கூடியவையாக இருக்கின்றன. யூரோ வலய நாடுகளின் ஆண்டுக்கடன் அதன் மொத்த தேசிய உற்பத்தியின் 3%இற்கும் குறைவாகவும் அதன் மொத்தக்கடன் 60% இற்கு குறைவாகவும் இருக்க வேண்டும் ஆனால் இத்தாலியின் கடன் அதன் மொத்தத் தேசிய உற்பத்தியின் 100%ஐத் தாண்டிவிட்டது

அவசர சிகிச்சைப் பிரிவில் சில நாடுகள்
இத்தாலி, வட அயர்லாந்து, ஸ்பெயின், போர்த்துக்கல் ஆகிய நாடுகளின் பொருளாதாரங்கள் இப்போதும் அவசர சிகிச்சைப் பிரிவிலேயே இருக்கின்றன. வட அயர்லாந்து சிறிதளவு தேறியுள்ளது. பிரான்சும் பிரித்தானியாவும் எந்நேரமும் அவசர நோயாளர் காவு வண்டியில் ஏறலாம். பிரித்தானியாவிற்கும் பிரான்சுக்கும் வரும் நோய் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு விரைவாகப் பரவும். பிரித்தானியாவின் ஓரளவு கட்டுக்கோப்பான நிதிக் கொள்கையும் அது யூரோ வலயத்தில் இல்லமல் இருப்பதும் அதன் கடன்களை கட்டுக்கடங்கி வைத்திருக்கிறது. ஆனால் அதன் பொருளாதார வளர்ச்சி மிகவும் குறைந்த நிலையிலேயே காணப்படுகின்றது. பிரித்தானிய தனது வங்கித்துறைக்கு அவசர அவசரமாக சுயாதீன வங்கை ஆணைக்குளுவை அமைத்து கால் கட்டுப் போட்டுள்ளது.


யூரோ நாணயத்தின் எதிர்காலமும் ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலமும்
கடந்த சில நாட்களாக யூரோ நாணத்தின் மதிப்பு குறைவடைந்து வருகிறது.யூரோ நாணக் கட்டமைப்பில் இருந்து சில நாடுகள் வெளியேறும் சூழ்நிலைகள் இப்போது உருவாகியுள்ளது. அவை வெளியேறி இன்னொரு நாணயக் கூட்டமைப்பை உருவாக்கலாம் அல்லது தமது பழைய நாண்யத்தை மீண்டும் கொண்டுவரலாம். யூரோவில் எஞ்சி இருக்கும் நாடுகள் அதிக பொருளாதாரக் கட்டுப்பாட்டை தமக்கிடையே உருவாக்கலாம்.

Monday, 12 September 2011

துருக்கி: மத்திய கிழக்கில் அமெரிக்கா திறக்கும் புதிய களமுனை

துருக்கி மற்றைய இசுலாமிய நாடுகளிலிருந்து வேறுபட்டு நிற்கிறது. அது ஒரு குடியரசு நாடு தேர்தல் மூலம் தனது பிரதம மந்திரியைத் தேர்ந்தெடுக்கிறது. சம்பிரதாய குடியரசுத் தலைவர் கூட தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப் படுகிறார்.  அதன் அரசு மதசார்பற்றது. மேற்கு நாடுகளின் படைத்துறைக் கூட்டமைப்பான நேட்டோவில் உறுப்புரிமை கொண்ட ஒரே இசுலாமிய மக்களைப் பெரும்பான்மையினர்களாகக் கொண்ட நாடு.  அமரிக்காவுடன் நீண்டகால நட்புறவைக் கொண்ட நாடு.


மூன்று கணடங்கள் மத்தியில் துருக்கி
பூகோள ரீதியிலும் துருக்கி ஒரு முக்கியமான இடம் வகிக்கிறது. எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கு, பால்க்கன் பிராந்தியம், வளைகுடாப் பிராந்தியம், கோக்கஸ் பிராந்தியம் ஆகியவற்றிக்கு அண்மையில் துருக்கி அமைந்துள்ளது. மேற்குலகின் கிழக்கு வாசல் துருக்கி என விபரிக்கப்படுகிறது. அத்துடன் ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் ஆபிரிக்காவிற்கும் இடையில் உள்ள அனட்டோலியன் குடாப் பிராந்தியத்தில் துருக்கி இருக்கிறது. மேற்குலகிற்கும் இசுலாமிய உலகிற்கும் ஒரு பாலமாக துருக்கி செயற்படுகிறது. கருங்கடல், மத்திய தரைக்கடல், ஈகன் கடல் (Aegean Sea) ஆகியவற்றிடை துருக்கி அமைந்துள்ளது. மத்திய கிழக்கில் இருந்தும் வளைகுடாவில் இருந்தும் ஐரோப்பிய நாடுகளிற்கான எரிபொருள் விநியோகத்திற்கு துருக்கி முக்கியத்துவம் பெறுகிறது.


வளரும் துருக்கி
துருக்கி தொழில் நுட்ப ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கடந்த சில பத்தாண்டுகளாக வளர்ந்து வருகிறது. தற்போதைய உலகப் பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்ட நாடுகளில் துருக்கியும் ஒன்று என்றாலும் அது கிரேக்கம், இத்தாலி போன்றவற்றுடன் ஒப்பிடுகையில் பரவாயில்லை என்று சொல்லலாம். துருக்கியின் 74 மில்லியன் மக்கட்தொகை ஒரு சிறந்த சந்தையுமாகும். அத்துடன் துருக்கி தன்னை ஒரு பிராந்திய வல்லராசாக வளர்த்தெடுப்பதில் பெரும் அக்கறை காட்டுகிறது. சில பிராந்தியப் பிரச்சனைகளில் அது தன் பிராந்தியத் தலமைத்துவத்தையும் நிரூபித்துள்ளது.

அமெரிக்காவின் மத்திய கிழக்கின் முதல்தரத் தேர்வு.
மத்திய கிழக்கில் அமெரிக்காவின் கேந்திரோபாய நண்பனான எகிப்த்தின் முன்னாள் அதிபர் ஹஸ்னி முபராக் பதவியில் இருந்து விரட்டப்பட்ட பின்னரும் பாஹ்ரெயின் அமெரிக்கக் கடற்படையின் எதிர்காலம் கேள்விக்குறியான நிலையிலும் மத்திய கிழக்குப் பிராந்திய ஆதிக்கத்திற்கு அமெரிக்காவிற்கு ஒரு புதிய நண்பன் அவசியம் தேவைப்படுகிறான். அதற்கு துருக்கிதான் அமெரிக்காவின் முதல்தரத் தேர்வாக அமைகிறது.
துருக்கியில் அமெரிக்க விமானப்படைத் தளம்
அமெரிக்கா தனது உலக ஆதிக்கத்திற்கும் தனக்கு எதிரான தீவிரவாத இயக்கங்களை ஒழித்துக் கட்டவும் தனது ஆளில்லா விமானங்களை நவீன மயப் படுத்தி வருகிறது. காணொளி விளையாட்டுக்களை(Video Games) மழலைப் பருவத்தில் இருந்தே பழகிவந்த அமெரிக்காவின் புதிய தலைமுறையினருக்கு இது உகந்த படைத்துறைச் செயற்பாடாக அமைகிறது. ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்கா ஆளில்லா விமானங்கள் மூலம் அல் கெய்தாவிற்கும் தலிபானிற்கும் எதிராக பெரும் வெற்றியை ஈட்டி வருகிறது. துருக்கி குர்திஷ் இனத்தவர்களின் போராளிகளால் பெரும் தொல்லைகளை அனுபவிக்கிறது. குர்திஷ் கிளர்ச்சிக்காரர்களை இலகுவாக ஒழிக்க அமெரிக்காவால் தனது ஆளில்லா விமானங்கள் மூலம் துருக்கிக்கு உதவ முடியும். இந்த நிலமையை  அமெரிக்கா தனக்குச் சாதகமாக்கி துருக்கியில் ஒரு ஆளில்லா விமானத் தளத்தை கட்டி எழுப்ப முயல்கிறது. அந்தத் தளம் அமெரிக்கப் படைகள் ஈராக்கில் இருந்து வெளியேறிய பின்னர் ஈராக்கில் உருவாகும் அமெரிக்க எதிர்ப்பு இசுலாமியப் புனிதப் போராளிகளை அடக்கவும் அமெரிக்காவிற்கு உதவும். அது மட்டுமல்ல துருக்கியைச் சூழவுள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளில் அமெரிக்க எதிர்ப்பு இசுலாமியத் தீவிரவாதிகளை அடக்கவும் பெரும் உதவியாக இருக்கும்.

Sunday, 11 September 2011

இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் சிஐஏயின் பயங்கரவாதம்


பன்னாட்டு அரங்கில் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் திருப்பத்தைக் கொண்டுவந்தது 9-11எனப்படும் 2001 செம்படம்பர் 11-ம் திகதி அமெரிக்காவில் நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதல்தான் என்று கூறலாம். உலகெங்கும் உள்ள தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராக தன்னுடன் ஒன்று சேருமாறு அமெரிக்கா பல நாடுகளையும் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டது. அதற்குப் மும்மர் கடாஃபியின் லிபியா உடபடப் பலநாட்டு அரசுகள் ஒத்துக் கொண்டன.

உலகெங்கும் உள்ள தீவிரவாத இயக்கங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ தீவிரமாக ஈடுபட்டது. சிஐஏ இற்கு யாரும் அதிகாரம் வழங்கத் தேவையில்லை அது தனக்குத் தேவையான அதிகாரங்களைத் தானே பெற்றுக் கொள்ளும். 9-11இற்குப் பின்னர் சிஐஏயில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப் பட்டன.


சிஐஏயின் வதை முகாம்கள்
தடுப்பு முகாம்கள் எனப்படும் வதை முகாம்களை சிஐஏ அமெரிக்காவிற்கு வெளியே பல நாடுகளில் நிறுவி அங்கு தான் சந்தேகிப்பவர்களைத் தடுத்து வைத்திருந்து பல சித்திர வதைகளைச் செய்தது. ஜோர்ஜ் புஷ் அமெரிக்க அதிபராக இருந்த போது அமெரிக்காவில் அல் கெய்தா சந்தேக நபர்களிடம் இருந்து தகவல்களைப் பெற சி ஐ ஏ உளவு நிறுவனம் Waterboarding Interrogation Techniques எனப்படும் Simulated drowning ஐப்பாவித்தது.
இந்த சித்திரவதையை விக்கிபீடியா இப்படிக் கூறுகிறது:
The prisoner is bound to an inclined board, feet raised and head slightly below the feet. Cellophane is wrapped over the prisoner’s face and water is poured over him. Unavoidably, the gag reflex kicks in and a terrifying fear of drowning leads to almost instant pleas to bring the treatment to a halt. According to the sources, CIA officers who subjected themselves to the water boarding technique lasted an average of 14 seconds before caving in. They said al Qaeda’s toughest prisoner, Khalid Sheik Mohammed, won the admiration of interrogators when he was able to last over two minutes before begging to confess.
சுருங்கக் கூறுவதானால் கைதி நீருள் மூழ்கி இறப்பது போன்ற ஒரு உணர்வைப் போலியாக ஏற்படுத்தி அதன் மூலம் அவருக்கு இறக்கப் போகிறேன் என்றபயத்தை ஏற்படுத்தி அவரை உண்மைகளைக் கக்க வைப்ப்துதான் இந்த water boarding சித்திரவதை. ஐரோப்பாவில் மட்டும் 14 நாடுகளில் சிஐஏயின் இரகசியத் தடுப்பு முகாம்கள் இருந்தன. இவை எந்த நாட்டுச் சட்டத்திற்கும் உட்பட்டவை அல்ல. போலந்தில் சிஐஏ இரகசியத் தடுப்பு முகாம்களில் அல் கெய்தா சந்தேக நபர்களைச் சித்திரவதை செய்ததை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியது. சிஐஏயின் "கைதுகளும் சிறை வைத்தலும்" எந்த ஒரு நாட்டுச் சட்டத்திற்கும் இசைய நடப்பவை அல்ல.


பலம் பெற்ற பயங்கரவாத எதிர்ப்பு நிலையம்.
சிஐஏயின் ஒரு பிரிவான பயங்கரவாத எதிர்ப்பு நிலையத்தில் 09-11-2001இல் 300பேர் மட்டுமே பணி புரிந்தனர். 9-11 தாக்குதல் நடத்தப்பட்டவுடன் அதில் 1200பேர் உடனடியாக இணைக்கப்பட்டனர். இப்போது அதில் 2000இற்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர். இதைவிட ஒப்பந்த அடிப்படையில் வேலைசெய்யும் வெளிநாட்டினர்களின் பலர் உள்ளனர். உலகெங்கும் உள்ள அல் கெய்தா இயக்கத்து உறுப்பினர்களின் எண்ணிக்கையிலும் பார்க்க சிஐஏயின்  பயங்கரவாத எதிர்ப்பு நிலையத்தில் அதிகம் பேர் பணி புரிகிறார்கள் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்-பாக் பிரிவு
அல் கெய்தாவின் முக்கிய களம் ஆப்கானிஸ்த்தானிற்கும் பாக்கிஸ்த்தானிற்கும் இடையிலான எல்லைப் பிரதேசமாகும். இப்பிரதேசம் பாக்கிஸ்தானின் கட்டுப்பாட்டிலோ அல்லது ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டிலோ இல்லை. 9-11இன் பின்னர் சிஐஏயின் பிஏடி எனப்படும் பாக்கிஸ்த்தான் ஆப்கானிஸ்தான் பிரிவு உருவாக்கப்பட்டது. இதற்கிணங்க அமெரிக்க வெளியுறவுத்துறையும் ஆப்-பாக் கொள்கை ஒன்றை வகுத்துக் கொண்டது. சிஐஏயின் பயங்கரவாத எதிர்ப்பு நிலையமும் பிஏடியும் இணைந்து ஆப்கானிஸ்தானில் பல அல் கெய்தா எதிர்ப்பு நடவடிக்க்கைகள வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளன.

மோசமான படை அமைப்பாக மாறிய சிஐஏ
வெறும் உளவு நிறுவனமாக இருந்து கொண்டு முதலாளித்துவக் கட்டமைப்புக்கு எதிராகச் செயற்படும் அரசுகளைக் கவிழ்த்தல் ஆட்சியாளர்களைக் கொல்லுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த சிஐஏ  9-11இற்குப்பின்னர் ஒரு படைப்பிரிவையும் தனக்கென அமைத்துக் கொண்டது. அமெரிக்காவின் படைத்துறையினர் அமெரிக்க சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அமெரிக்கப் பாராளமன்றத்திற்கு பொறுப்புக் கூறவும் வகை சொல்லவும் கடப்பாடுடையவர்கள். ஆனால் சிஐஏயின் படைப்பிரிவு அப்படி அல்ல. அப்படி ஒரு பிரிவு இருப்பதாக சிஐஏ பகிரங்கமாக சொல்வதுமில்லை. அமெரிக்க அரசைப் பொறுத்தவரை அப்படி ஒரு படைப்பிரிவு இல்லை என்றே கூறமுடியும். இதனால் சிஐஏயின் படைப்பிரிவு தன்னிச்சையாக பயங்கர நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது.

சிஐஏயின் படைப்பிரிவு ஒரு ஒட்டுக் குழுபோல் செயற்படுகிறது.
சில அமெரிக்க மனித உரிமை ஆர்வலர்கள் சிஐஏயின் படைப்பிரிவு எந்தவிதக் சட்டக் கட்டுப்பாடுமின்றி ஒரு ஒட்டுக் குழுபோல் செயற்படுகிறது என்று பகிரங்கமாகக் கூறுகின்றனர்.

சிஐஏயின் ஆளில்லா விமானங்கள்
சிஐஏயின் படைப் பிரிவினர் ஆளில்லாப் போர் விமானங்கள் பலவற்றைத் தம்வசம் வைத்திருக்கின்றன. இவை உண்மையில் கொல்லும் எந்திரங்கள். ஆப்கானிஸ்தானிலும் பாக்கிஸ்தானிலும் அல் கெய்தாவிற்கு எதிரான வெற்றியில் இந்த ஆளில்லாப் போர் விமானங்களுக்குப் பெரும் பங்கு உண்டு. சிஐஏ மேலும் நவீன மயப்படுத்தப்பட்ட ஆளில்லாப் போர் விமானங்களை உற்பத்தி செய்வதற்கான ஆராச்சிக்குப் பெரும் பணம் செலவழித்துள்ளது. ஆப்-பாக் எல்லையில் உள்ள அல் கெய்தாவினர் பற்றிய தகவல்களை அறிந்து அதை அமெரிக்கப்படியினருக்கு அறிவித்து அவர்கள் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட முன்னர் அல் கெய்தாவினர் நகர்ந்து விடுவார்கள். தாக்குதலுக்கான பெரிய விமானங்கள் தளத்தில் இருந்து கிளம்பும் தகவல் அல் கெய்தாவினருக்குச் சென்று விடும். சிஐஏ தனது சொந்த ஆளில்லா விமானங்கள் மூலம் உடனடித் தாக்குதல்களை மேற் கொள்ளலாம். சிஐஏயின் ஆளில்லாப் போர்விமானங்கள் இதுவரை இரண்டாயிரத்திற்கும் அதிகமான அல் கெய்தா உறுப்பினர்களைக் கொன்றுவிட்டன. அல் கெய்தாவில் இணைபவர்களிலும் பார்க்க அதிகமானவர்களைத் தாம் கொல்கிறோம் என்று சிஐஏ பெருமைப்பட்டுக் கொள்கிறது. கடந்த ஒரு வருடமாக யேமனிலும் சிஐஏயின் ஆளில்லா விமானங்கள் பல தாக்குதல்களை மேற் கொண்டன. ஆப்கானிஸ்த்தானிலும் பாக்கிஸ்தானிலும் சிஐஏ தளங்களை அமைத்து இந்த ஆளில்லா விமானங்களை இயக்குகின்றது. சிஐஏயின் படைப்பிரிவினர் பாக்கிஸ்தான் அரசுக்கோ படைத்துறைக்கோ தெரியாமல் அங்கு பல தாக்குதல்கள், கைதுகள், கடத்தல்கள், கொலைகள் பலவற்றைச் செய்கின்றனர். இதன் உச்சக்கட்டம்தான் பில் லாடன் கொலை.

பிடித்துக் கொல்லுதலும் கொன்று பிடித்தலும்

அல் கெய்தாவினருக்கு எதிரான சிஐஏயின் நடவடிக்கைகள் பிடித்துக் கொல்லுதல் என்ற செயற்பாட்டில் இருந்து கொன்று பிடித்தல் என்ற செயற்பாட்டுக்கு மாறியுள்ளதாகச் சிலர் தெரிவிக்கின்றனர். சிஐஏ தேவை ஏற்படும் போது தடை செய்யப்பட்ட நிலக்கண்ணி வெடிகளையும் பாவிக்கத் தயங்குவதில்லை என்றும் சில செய்திகள் கூறுகின்றன. பின் லாடனைப் பிடித்துக் கொல்லப் போன அமெரிக்க சீல் படையினர் பின் லாடனின் மனைவி தற்கொலை அங்கி அணிந்திருக்கலாம் என்ற அச்சத்தில் பின் லாடனைக் கொன்று பிடித்தனர்.

கோழியா? முட்டையா?
சிஐஏ 9-11 இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் தனது நடவடிக்கைகளை பலமாகவும் தீவிரமாகவும் மேற்கொள்கிறதா அல்லது தனது நடவடிக்கைகளை பலமாகவும் தீவிரமாகவும் மேற்கொள்ள இரட்டைக் கோபுரத்தாக்குதலை சிஐஏ ஒழுங்கு செய்ததா என்ற கேள்வியும் உண்டு. Andreas von Bulow என்ற ஜெர்மனியர் த்னது  The CIA and September 11என்ற நூலில் இந்தக் கேள்வியையே முன்வைக்கிறார்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...