Saturday, 20 August 2011

இலண்டன் கலவரம் பற்றிய நகைச்சுவைகள்.

இலண்டனில் இடம்பெற்ற கலவரங்கள் பற்றிய நகைச்சுவைகள் பல வெளிவந்தவண்ண்முள்ளன. The Apple store has just been looted, Police are said to be looking for iWitnesses என்பது போன்ற சிறந்த நகைச்சுவைகள் வந்தாலும் பெரும்பாலானவை இனக்குரோத உணர்வு கொண்டவையாக இருப்பது மிக வருத்தமளிக்கின்றன. These rioting niggers are a f-----g disgrace. Where are their parents when they’re out on the streets causing mayhem?
Oh yeah, in jail. என்பது போன்ற நகைச்சுவைகள் கண்டிக்கப்படவேண்டியவை.

மேலும் பல நகைச்சுவைகள்:
I’d like to congratulate the rioters on making us even more racist. Well done.
xx
பல ஆங்கில நகைச்சுவைகள் An Englishman, an Irishman and a Scotsman …என்று தொடங்கி ஐரிஸ் மக்களைக் கிண்டலடிப்பதாக இருக்கும் ஆனால் இந்த நகைச்சுவை வித்தியாசமாக இருக்கிறது
An Englishman, an Irishman and a Scotsman …

… had nothing to do with the London riots.

பிரித்தானிய நகர்கள் அழகற்றவை என்று கிண்டலடிக்கும் நகைச்சுவை:
Can we make sure the “Before” and “After” riot pictures of Croydon are clearly labelled, as it’s confusing to tell which is which?

Click on the picture below to enlarge:

Carlsbergஎன்னும் beerஐயும் நகைச்சுவை எழுதுபவர்கள் விட்டு வைக்கவில்லை
1527 thieving rioting looters shot dead by the Army, many in the back of the head. Over 1000 in hospital with cracked skulls due to baton use by the police. Hundreds of scrotes torn apart by police dogs. The Army are moving in to finish rioters off in affected areas with bayonets, to save tax payers money on bullets. Carlsberg doesn’t do headlines but if they did…..

இனக்குரோதம் காவற்துறையில் உள்ள கறுப்பினத்தவர்களையும் விட்டுவைக்கவில்லை
I wonder how many black policemen are praying that all the good stuff isn’t gone before their day off
xxx
So Cameron wants to stop these riots?

I’ve heard that the Taliban, Iraq and Libya had a pretty efficient way of quelling them – why don’t we ask them?
xxxxx
உதைபந்தாட்டக் கழகங்களையும் விட்டு வைக்கவில்லை.
1.  I said to my mate “We’re in the middle of a huge recession, we’ve got Noel Edmonds on TV and we’ve got rioting on the streets of London. It’s like being back in the 80′s”

He said “Yeah, what’s next, Liverpool win the league?”

Oh how we both laughed.

2.  Manchester police say the looters are not from Manchester.
Hmm, they must be Manchester United fans then?

உதைபந்தாட்ட வீரர்களையும் விட்டுவைத்தார்களா?
Six shots fired in London, all missed.

Police are looking to question Fernando Torres.
xxxx
ஒலிம்பிக்கில் பிரித்தானியா சார்பில் கறுப்பினத்தவர்கள் பலர் விளையாடுவதுண்டு. அதை இப்படியா கிண்டலடிப்பது?
Niggers running everywhere, throwing things, complete waste of taxpayers money.

And I thought the Olympics was next year?
xxxx
இது ரெம்ப ஓவர்:
Following the riots in Tottenham I think its important to remind ourselves that not all black people are stereotypical thieves and arsonists. The vast majority are in fact drug dealers and rapists.

Aldi என்ற மலிவு விலைக்கடையை இப்படி கலாய்த்தார்கள்
An Aldi store was devastated by fire last night.

A spokesmen for the store said the extent of the damage could run into tens of pounds.


வேலை செய்ய விருப்பமில்லாதவர்கள்தான் கலவரத்தில் ஈடுபட்டார்கள் என்பதை இப்படிக் கூறுகிறார்கள்:
When I saw all those niggers rioting on Tottenham high street I knew I had to find somewhere safe to hide where they wouldn’t go.

I’m still stuck in the job centre(வேலை வாய்ப்பகம்)


 லிவர்ப்பூல் நகரில் கலவரம் அடிக்கடி நடக்குமாம்.
1.  News reports in London branded the rioting an “abomination”, Birmingham branded it “upsetting and soul destroying” and Liverpool simply called it Monday.

2.  BBC NEWS: Rioting and stealing begins in Liverpool.

Begins? I can't remember the last time it stopped. - Chris, Newcastle.
xxxxx
Tottenhamநகரம் போதைப்(drug) பொருள் விற்பனைக்குப் பெயர் போனதாம்.
After rioters loot Carpet Right..Police say Tottenham now has Rug dealers on every street corner..
xxxx
After the rioters had set up all their looted brand new Sony home entertainment system, they were distraught that they forgot to rob a set of 3D glasses too.
xxx
பொருளாதார நெருக்கடியிலும் வாகனக் கண்ணாடிகள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் பங்குவிலைகள் உயர்ந்துவிட்டனவாம்.
It isn’t all bad news in London. Shares in Autoglass just shot up 300%
xxxx
What’s rectangular, black and useless? The thousand laptops the stupid rioters stole, but haven’t figured out how to turn on
xxxx
Stuart Pereira in facebook:
On the third day of riots my true love gave to me - 3 Nike trainers, 2 Apple iPods and a big screen Samsung TV.
xxx

I wish I was poor enough to have a Blackberry to organise a riot!
xxxx
Glasgow நகரை இப்படிக் கலாய்க்கிறார்கள்:
Three nights with no riots in any Scottish cities.

Conclusive proof that Glaswegians don’t watch the news.

ஐரிஸ் மக்களையும் விட்டு வைக்கவில்லை:
1.  During last night’s riots, Paddy and Murphy broke into Ladbrokes and lost £50.
2.  Bad news, the rioting has spread to Ireland.
Poor Paddy has just smashed his laptop screen, after trying to loot ebay

xx
Why would anyone want to ruin their own country ?

Oh yeah its London, and none of them are in their own country!
xxx
Sky News: Police to use Plastic Bullets.

F--k me, the Recession has hit us harder than I thought. உலோகக் குண்டுகள் வாங்க காசில்லையாம்.


Friday, 19 August 2011

கடாஃபி தப்பி ஓடத் தயாராகிறாராம்.

திரிப்போலியில் இருக்கும் இரு விமானநிலையங்களில் நடக்கும் ஏற்பாடுகளையும் அங்கு செல்லும் ஆடம்பர வண்டிகளையும் பார்க்கும் போது லிபியத் தலைவர் தளபதி மும்மர் கடாஃபி தப்பி ஓடுவதற்குத் தயாராகிறார் என்று அவருக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். இது கடாஃபிக்கு ஆதரவான படைகளின் மனோபலத்தைக் குறைக்கப் பரப்பப்படும் பொய்ப்பிரச்சாரமாகவும் இருக்கலாம்.

தென் ஆபிர்க்காவில் இருந்தும் ஒரு ஐரோப்பிய நாட்டிலிருந்தும் விமானங்கள் வந்து திரிப்போலி விமான நிலையங்களில் தரை இறங்கியுள்ளதாகவும் மேற்படி தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெப்ரவரி மாதம் மும்மர் கடாஃபி விமானம் ஒன்றில் தென் அமெரிக்க நாடான வெனிசுலேவியாவிற்கு தப்பி ஓடிக்கொண்டிருக்கிறார் என்றான் பிரித்தானிய வெளிநாட்டமைச்சர்.


நேற்று மும்மர் கடாஃபியின் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி எண்ணெய் வள நகரான ஜவியா கிளர்ச்சிக்காரர்களின் வசமானது என்று தகவல்கள் தெரிவித்தன. இனி கடாஃயின் படைகளுக்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் சில படைத்துறை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். காடாஃபியைப் பற்றி நன்கறிந்தவர்கள் இனிக் கடும் போர் நிகழலாம் என்கின்றனர்.

ஊடகங்களை கடாஃபி நாய்கள் என்று விமர்சித்தார். அதை எதிர்க்கும் கருத்துப்படம்.

ஆகஸ்ட் 13-ம் திகதியில் இருந்து திரிப்போலிக்கும் துனிசியாவிற்கும் இடையிலான தொடர்புகளை கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள் துண்டித்து விட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் கடாஃபி ஆதரவுப் படைகளுக்கான கடைசி வழங்கல் பாதை துண்டிக்கப்பட்டுவிட்டது. இதைத் தொடர்ந்து திரிப்போலியில் எரிபொருளுக்கும் மின்சாரத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. திரிப்போலியில் ஒரு வாகனத்தை பெற்றோலால நிரப்ப $150 செலவாகிறதாம். உணவுப் பொருள்களுக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவிகிறது கடாஃபியின் தலைநகரில்

இதற்கிடையில் வெள்ளிக்கிழமை(இன்று) காலை திரிப்போலியில் கடாஃபியின் இருப்பிடத்தை இலக்கு வைத்து நேட்டோ விமானங்கள் குண்டுகள் வீசியதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

Thursday, 18 August 2011

பிரித்தானிய நீதி மன்றில் இந்தியச் சாதிப் பிரச்சனை

பிரித்தானியவில் இந்தியக் கலாச்சாரம் ஒரு அடையாளமாக உருவெடுத்துவிட்டது. இந்துக் கோவில்கள் சுற்றுலாப்பயணிகளைக் கவர்கின்றன. இந்திய உணவகங்கள் இல்லத நகரங்களே இல்லை.  இந்திய ஆடைகள் அணிந்தவர்களை எங்கும் காணலாம். இப்போது இந்தியச் சாதிப் பிரச்சனையும் பிரித்தானியாவில் வேரூன்றி விட்டது. அந்த அந்த சாதிகளைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கிடையில் நிகழ்வுகளை ஒழுங்கு செய்து தங்கள் பிள்ளைகளை தங்கள் சாதியைச் சேர்ந்தவர்களுடன் பழகவிட்டு திருமண ஏற்பாடுகளைச் செய்கிறார்கள்.

பிரித்தானிய நீதமன்றத்திற்கு ஒரு இளம் இந்தியத் தம்பதிகளின் சாதிப் பிரச்சனை வந்துள்ளது. இந்த வழக்கை பிரித்தானிய உள்துறை அமைச்சர் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஹீர் மனக் என்னும் ஓர் இந்தியருக்கு சொந்தமான சட்ட நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த விஜய் பேர்க்ராஜ் என்னும் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர் அதே இடத்தில் வேலை செய்யும் அமர்தீப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இது இவர்கள் வேலை செய்யுமிடத்தில் மற்ற உயர் சாதி இந்துக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பை கிளப்பியது.

விஜய்-அமர்தீப் திருமணத்திலேயே பல உயர் சாதி இந்தியர்கள் திருமணத்தைப் பற்றி கடுமையாகப் பேசினார்கள். திருமணத்தின் போது மதுக்கிண்ணத்தை உயர்த்தி மணமக்களை வாழ்த்துவது வழக்கம். அப்போது ஒருவர் 'raised a toast to Jat girls going down the drain' சாக்கடைக்குப் போது உயர்ச் சாதிப் பெண்ணுக்காக உங்கள் மதுக் கிண்ணத்தை உயர்த்துங்கள் என்றாராம்.

விஜய்-அமர்தீப் காதலிக்கத் தொடங்கியதை அறிந்தவுடனேயே அவர்களுக்கு வேலையிடத்தில் பல தொல்லைகள் கொடுக்கத் தொடங்கிவிட்டனராம். அமர்தீப்பிற்குத் தண்டனையாக அவருக்கு அதிக வேலைகள் கொடுக்கப்பட்டு அவரது உதவியாளர்களும் குறைக்கப்பட்டனர். இந்தியர்களின் நிறவெறி
விஜய்-அமர்தீப் திருமணத்தைத் தொடர்ந்து விஜய் வேலையில் இருந்து விலக்கப்பட்டார். இதனால் அவர் நீதிமன்றம் சென்றுள்ளார். பிரித்தானியாவில் சாதி அடிப்படையில் ஒருவர் பாதிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று வந்தது இதுவே முதற்தடவை. பிரித்தானிய ஊடகங்களுக்கு இந்திய மாமி மருமகள் பிரச்சனை, பெண் அடிமை, சாதி போன்றவை பற்றி எழுதுவதில் நல்ல பிரியம். அவர்களுக்கு இப்போது அல்வா கிடைத்துள்ளது. இந்தியாவில் நிறப்பிரச்சனை பெரிய பிரச்சனை என்று விஜய்-அமர்தீப் திருமணத்தின் சாதிப் பிரச்சனைபற்றி எழுதிய டெய்லி மெயில் என்னும் பத்திரிகை தெரிவித்துள்ளது. கரிய நிறத் தோலை வெள்ளை நிறமாக்கும் முகப்பூச்சு ஆசியாவில் பன்னிரண்டு பில்லியன் பவுண்களுக்கு விற்பனையாகிறது என்று எழுதிய டெய்லி மெயில் இந்தியாவில் கருமையான நிறத்தவர்கள் தாழ்ந்த சாதியினர் என்றும் வெள்ளைத் தோல் உள்ளவர்கள் உயர் சாதியினர் என்றும் கிண்டலடித்தது.

Wednesday, 17 August 2011

மாதக் கணக்காக எண்ணப்படும் கடாஃபியின் நாட்கள்

லிபியத் தலைவர் மும்மர் கடாஃபியின் முடிவுக்கான நாட்கள் எண்ணப்படுகின்றன என்று அமெரிக்க வெள்ளை மாளிகைப் பேச்சாளர்  ஜே கார்ணி செவ்வாயன்று தெரிவித்தார். 

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கரிஜாம், திஜி என்னும் இரு நகர்களைக் காடாஃபிக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் 15-08-2011இலன்று கைப்பற்றி விட்டார்கள்; லிபியத் தலைநகர் திரிப்போலிக்கான வழங்கற்பாதைகள் இதனால் காடாஃபிக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் வந்துவிட்டன என்று சில ஊடகங்கள் கூறின. அது மட்டுமல்ல கடாஃபியின் படையின் உயர் அதிகாரி ஒருவர் எகிப்திற்கு தப்பி ஒட்டிவிட்டார் என்றும் கூறின. ஆனால் கடாஃபி அப்படி ஒன்றும் சாதாரணமானவர் அல்லர். உடன் பதிலடியாக கடாஃபி கிளர்ச்சிக்காரர்கள் மீது முதன் முறையாக ஸ்கட் ஏவுகணைகளை வீசி அவரது எதிரிகளின் நம்பிக்கைகளைத் தவிடு பொடியாக்கினார். கடாஃபியிடம் இருநூறு ஸ்கட் ஏவுகணைகள் இருக்கின்றன. இன்னும் என்ன ஆயுதங்களை அவர் வைத்திருக்கிறார்? நேட்டோப் படைகள் வீசிய குண்டுகளால் கடாஃபியின் ஆயுதக் கிடங்குகளை ஏன் அழிக்க முடியவில்லை? கடாஃபியின் ஸ்கட் ஏவுகணை இலக்குத் தவறிவிட்டது என்றும் எந்தவித சேதங்களையும் விளைவிக்கவில்லை என்றும் நேட்டோப் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த மாதக் கடைசியில் கடாஃபியைக் கவிழ்ப்போம்
கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களின் தலைவர் அப்தல் ஜலீல் ஆகஸ்ட் மாத முட்வுக்குள் கடாஃபியின் அரசைக் கவிழ்த்து விடுவோம் என்றார். துனிசியாவில் கடாஃபியின் அரச பிரதிநிதிகளுடன் தாம் பேச்சு வார்த்தை நடாத்தியதாக வெளிவந்த செய்திகளையும் அவர் மறுத்தார்.

சூட்டிகையான வல்லரசின் தந்திரோபாயப் பொறுமை.
ஹிலரி கிளிண்டன் ஐக்கிய அமெரிக்க ஒரு சூட்டிகையான வல்லரசு(Smart power) என்கிறார். அமெரிக்காவை உயர் வல்லரசு(supper power) என்ற நிலையில் இருந்து உயர்த்தி அதை ஒரு சூட்டிகையான வல்லரசு(Smart power) ஆக்கிவிட்டார்களாம். அதனால் அமெரிக்கா இப்போது லிபியா சம்பந்தமாகவும் சிரியா சம்பந்தமாகவும் (strategic patience) தந்திரோபாயப் பொறுமையைக் கடைப்பிடிக்கிறார்களாம்.

2011 மார்ச் 24-ம் திகதி ஃபிரெஞ்சு வெளிநாட்டமைச்சர் லிபியத் தலைவர் மும்மர் கடாஃபியின் படைபலம் சில நாட்கள் அல்லது வாரங்களுக்குள் நொருக்கப்பட்டுவிடும் என்றார். ஆனால் கடாஃபி இன்றுவரை தாக்குப் பிடிக்கிறார். பெப்ரவரி 21-ம் திகதி பிரித்தானிய வெளி நாட்டமைச்சர் கடாஃபி வெளி நாட்டுக்குத் தப்பி ஓடிவிட்டார் என்றார். கடாஃபி இன்றும் லிபியாவில்தான் இருக்கிறார்.

ஜவியா (Zawiyah) நகர் பற்றி முரண்பட்ட செய்திகள்
துனிசிய லிபிய எல்லை நகரான ஜவியா நகர் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது தொடர்பாக முரண்பட்ட செய்திகள் வருகின்றன. ஜவியா (Zawiyah) நகர் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களால் கைப்பற்றப்பட்டால் அது திரிப்போலி நகரின் கழுத்துக்கு ஒரு சுருக்குக் கயிறாக அமையும் என்று ஜோர்ஜ் ஜொஃப் என்னும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் லிபிய அறிவியலாளர் தெரிவித்தார். ஆனால் இது ஒரு நீண்டகாலப் போருக்கான ஆரம்பமே என்றும் அவர் தெரிவித்தார். ஜவியா (Zawiyah) நகரை கடாஃபி இழந்தால் அவரது வெளியுலகத் தொடர்புகள் யாவும் துண்டிக்கப்படும் என்றும் சில படைத்துறை ஆய்வாளர்கள் சொல்லுகிறார்கள். துனிசிய லிபிய எல்லை நகரான ஜவியா நகர் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது தொடர்பாக முரண்பட்ட செய்திகள் வருகின்றன. ஜவியா (Zawiyah) நகர் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களால் கைப்பற்றப்பட்டால் அது திரிப்போலி நகரின் கழுத்துக்கு ஒரு சுருக்குக் கயிறாக அமையும் என்று ஜோர்ஜ் ஜொஃப் என்னும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் லிபிய அறிவியலாளர் தெரிவித்தார். கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் இன்னும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட படையாக உருவாகவில்லை. கைப்பற்றி நில நகரங்களைத் தக்க வைப்பதற்கே அவர்கள் பெரும்பாடு பட வேண்டி இருக்கிறது.


கடாஃபியின் பலம்.

கடாஃபியின் கையில் 144 தொன் தங்கம் இருக்கிறது அதன் மதிப்பு ஏழு பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் இருக்கும். அவற்றை வைத்துக் கொண்டு கடாஃபியால் மேற்குலகின் பொருளாதாரத் தடைகளின் மத்தியிலும் இன்னும் தாக்குப் பிடிக்க முடியும். இன்னும் கடாஃபியின் கட்டுப்பாட்டில் எண்ணெய் வளங்கள் உள்ளன. இவை எல்லாவற்றையும் விடப் பெரியபலம் திரிப்போலியைச் சூழவுள்ள பல இனக் குழுமங்கள்(Tribes). இந்த இனக் குழுமங்கள் கடாஃபியின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளன. கடாஃபியின் அரசு கவிழ்ந்தால் தமது இருப்புக்கு ஆபத்து என்று அவை நம்புகின்றன. காடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக் காரர்களால் இந்த இனக்குழுமங்களைத் தாண்டி திரிப்போலியைக் கைப்பற்றுவது சிரமமான பணி. கடாஃபியின் நாட்கள் இன்னும் பல மாதங்கள் எண்ணப்படும்.

Monday, 15 August 2011

பொருளாதாரம்: பிழையாகிப் போன மேற்குலக வட்டிக்கடைகள்.

சுதந்திரப் பொருளாதார அல்லது முதலாளித்துவப் பொருளாதாரத் தத்துவங்கள் முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் மற்றும் முன்னாள் பிரித்தானியப் பிரதமர் மார்கரட் தட்சர் காலத்தில் புதுவடிவங்கள் பெற்றன. பொருளாதார நடவடிக்கைகளில் மேற்கத்திய அரசுகள் தலையீடுகளைக் குறைத்துக் கொண்டன. தனியார் நிறுவனங்களுக்கு அதிக சுதந்திரங்கள் வழங்கப்பட்டன.

அரசின் பணிகளில் முக்கியமானது தனது மத்திய வங்கிகளினூடாக வட்டி வீதத்தையும் பணப்புழக்கத்தையும் தனியார் பொருளாதர நடவடிக்கைகளுக்கு வசதியாக கட்டுப்படுத்துவது.

தற்போது பெரும் நிதி நெருக்கடியில் இருக்கும் மேற்கு நாட்டு அரசுகள் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான கருவிகள் பற்றாக்குறையால் திண்டாடுகின்றன. தொடர்ச்சியான பாதிட்டுப் பற்றாக் குறைகளால் கட்டுக்கு மிஞ்சி கடன் பளுக்கள் மேற்கு நாடுகளின் அதிகரித்துவிட்டன.

உலகெங்கும் எரிபொருள் விலை அதிகரித்தபோது அது பணவீக்கத்தைக் கொண்டுவரும் என்று அஞ்சி மேற்கு நாடுகள் வட்டி வீதங்களைக் குறைக்கத் தயங்கின. எரி பொருள் விலையால் அதிகரித்த உற்பத்திச் செலவு உற்பத்திகளையும் குறைத்தன. வேலைவாய்ப்புக்கள் குறைக்கப்பட்டன.

வலது சாரி அரசியல்வாதிகள் தங்கள் நாடுகளில் வரி அதிகரிப்பை எதிர்த்தனர். இதற்காக அரச செலவீனங்களைக் குறைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதுவும் வேலை வாய்ப்புக்களை குறைத்தன.

இப்போது பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் மேற்கு நாடுகள் பல தமது வட்டி வீதத்தை குறைத்துவிட்டன. சில நாடுகளில் அவை பூச்சியத்தை அண்மித்து விட்டன. வட்டி வீதத்தைக் குறைத்தால் ஏற்கனவே கடன்பட்ட பொது மக்களும் தனியார் நிறுவனங்களும் குறைந்த வட்டியை செலுத்தலாம். இதனால் அவர்கள் கைகளில் அதிக அளவு பணம் புழங்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது. பணப்புழக்கம் அதிகரித்தால் மக்களின் கொள்வனவு அதிகரிக்கும். மக்களின் கொள்வனவு அதிகரிக்கும் போது நாட்டின் உறப்த்தி அதிகரிக்கும். மக்கள் கடன் பட்டு கொள்வனவு செய்வர். நிறுவங்கள் கடன்பட்டு அதிக முதலீடு செய்யும். இப்படி எல்லாம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஏற்கனவே நிறையக் கடன் பட்டிருந்த பொதுமக்களும் தனியார்  நிறுவனங்களும் தங்கள் கடன் பளுவைக் குறைக்கவே முயல்கின்றனர். கடன் வழங்கு நிறுவனங்களும் ஏற்கனவே கொடுத்த கடனை எப்படி அறவிடுவது என்பதிலேயே அதிக கவனம் செலுத்துகின்றன.

அமெரிக்காவில் ஆகஸ்ட் 2008இல் பொதுமக்கள் கடன்12.41ரில்லியன் டொலர்களாக இருந்தது. இப்போது அது 12.21ரில்லியன்களாகக் குறைந்துள்ளது. இது மக்கள் தங்கள் கடன்களை அடைப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றனர் என்று சுட்டிக்காட்டுகிறது.

 பிரித்தானியாவில் பணவீக்கம்  5% இற்கு உயர்ந்துள்ளது. ஐரோப்பியாவின் வலிமைமிக்க பொருளாதரமான ஜெர்மனியப் பொருளாதாரம் இரண்டாம் காலாண்டில்  0.1% மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளது. இது எதிர்பார்க்கப்பட்டதிலும் குறைவான அளவே. அண்மையில் அயர்லாந்து, கிரேக்கம், இத்தாலி ஆகிய நாடுகள் கடன் பளுவால் சிரமப்பட்ட போது ஜேர்மனியே முன்னின்று உதவியது.

வீட்டுக் கடன்கள்
பல மேற்கு நாடுகளில் இப்போது வீட்டுக் கடன்கள் பெறுவோர் தொகை என்றுமில்லாத அளவு குறைந்துள்ளது. வீடுகளுக்கு தளபாடங்கள் வாங்குவதும் மிகக் குறைந்துள்ளது. மேற்கு நாடுகளில் வீட்டுக்கடன் பெறுவோர் தொகை குறையும் போது பொருளாதார வீழ்ச்சி ஏற்படும். அமெரிக்காவில் புதிதாக வீட்டுக் கடன் பெறுவது 19% விழுக்காட்டை அடைந்துள்ளது. ஏற்கனவே கடன் கொடுத்து கைகளைச் சுட்டுக் கொண்ட வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனங்கள் இப்போது கடன் வழங்குவதில் மிகக் கவனமாகவே செயற்படுகின்றன.

கடன் அட்டைகள்
மத்திய வங்கிகள் வட்டி வீதத்தைக் குறைத்த போதும் கடன் அட்டை வழங்கும் நிறுவனங்கள் தங்கள் வட்டி வீத்ததை குறைக்கவில்லை. மத்திய வங்கியின் வட்டி வீதம் இரண்டிற்கும் குறைவாக இருக்கையில் கடன் அட்டைகளுக்கான வட்டி வீதங்கள் 15ஆக இருக்கின்றன.

கார் வாங்குவோர்
மேற்கு நாடுகளின் பொருளாதர வளர்ச்சிக்கான ஒரு சரியான சுட்டியாக கார் விற்பனை இருக்கிறது. பொதுமக்கள் கார் வாங்குவது இனிக் குறையுன் என்று பொருளாதார நிபுணர்கள் எதிர்வு கூறுகிறார்கள்.

வரப்பு பதிய நீர் பதியும். நீர் பதிய நெல் பதியும்.
பொருளாதாரம் வீழ்ச்சியடைவது என்பது ஒரு தனி நிகழ்வு அல்ல. பொருளாதார நடவடிக்கைகள் குறைய வேலையில்லாதோர் அதிகரிப்பர். வேலையில்லாதோர் அதிகரிக்க மொத்தக் கொள்வனவு குறையும். கொள்வனவு குறைய உற்பத்தி குறையும். உற்பத்தி குறைய வேலையில்லாதோர் மேலும் அதிகரிப்பர். இதனால் மேலும் பொருளாதாரம் வீழ்ச்சி காணும். இது தொடர் சுற்றாக நடக்கும்.

அரசு தலையீடு அவசியம்.
இனி வரும் காலங்களில் தனியார் துறைகளில் மட்டும் நம்பிக்கை வைத்திராம மேற்குலக அரசுகள் பொருளாதர நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடவேண்டி வரும். அப்படிச் செய்யாவிடில் சமூக அரசியல் பிரச்சனைகள் தலைதூக்கும்.

Motorolaவை Google வாங்குகிறது

கைப்பேசி தாயரிக்கும் நிறுவனமான Motorolaவை  Google 12.5பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வாங்குகிறது. கூகிள் இதுவரை செய்தவற்றில் இது மிகப்பெரிய முதலீடாகும். உலகெங்கும் பொருளாதார நெருக்கடிகள் நிறைந்த இந்த வேளையில் Motorolaவின் பங்குகளை 63% அதிக விலை கொடுத்து கூகிள் வாங்குகிறது.

கூகிளின் Android மென்பொருள் இப்போது 150மில்லியன் கருவிகளில் உலகெங்கும் பாவிக்கப்படுகிறது. 39 வெவ்வேறு உறப்பத்தியாளர்கள் Android மென்பொருளை தங்கள் கருவிகளில் இணைக்கிறார்கள். தற்போது 43% மேற்பட்ட கைப்பேசிகள் Android மென்பொருளுடன் வருகின்றன. இந்த வளர்ச்சி கூகிளை கைப்பேசித் உற்பத்தித் துறையில் ஈடுபடச் செய்கிறது. இதன் மூலம் கூகிள் ஆப்பிள் நிறுவனத்திற்கு ஒரு சவாலை விடுக்கிறது. கூகிள் உலக கணனி/கைப்பேசித் துறைகளில் மைக்குரோசொப்ற்றிக்கும் ஆப்பிளிற்கும் போட்டியாக விளங்குகிறது.

Motorola 17,000இற்கும் அதிகமான ஆக்கவுரிமைகளைக்(patent) கொண்டது.

இந்த முதலீடு கூகிளின் Android மென்பொருளை மற்ற கைப்பேசி உற்பத்தி நிறுவனங்கள் பாவிப்பதைப் பாதிக்காது என கூகிள் கூறுகிறது.

ஹைக்கூ: சுயநிர்ணய உரிமை இல்லை

சொல்பவை பற்பல
சொல்லாதது உன் பெயர்
உன் கண்கள்

பலம் தரும்
பாடங்களும் தரும்
தோல்வி

அவள் வார்த்தைகள் உணவாகிறது
பார்வைகள் பானங்களாகின்றன
காதலில் நான்.

என்னை எனக்கு உணர்த்தியது
என்னை மறக்கவும் வைத்தது
உன் அருகாமை

பேச்சுரிமையில்லை
சுயநிர்ணய உரிமையும் இல்லை
கணவன்

Sunday, 14 August 2011

நகைச்சுவை: சுட்டவை இருபது

தெரிந்தவன் எல்லாம் நண்பனல்லன்
புரிந்தவனே நல்ல நண்பன்.

LOVE Has 4 Letters,
But So Does HATE
FRIENDS Have 7 Letters,
But So Does ENEMIES
TRUTH Has 5 Letters,
But So Does LYING;
It Hurts When One Changes
Into Another- Rahman Suratதிங்கள் எஸ்.எம்.எஸ் அனுப்பினாள்
செவ்வாய் மிஸ்ட் கால் விட்டாள்
புதன் போன் போட்டுப் பேசினாள்
வியாழன் நான் போன் போட்டுப் பேசினேன்
வெள்ளி என்கேஜ்ட்
சனி எண் தடத்தில் இல்லை
ஞாயிறு அவளுக்கு வீக்கெண்ட் எனக்கு லவ்-எண்ட்

A couple had a fight one night
Going to bed Husband says:
Good night mother of my 3 kids.
Wife Replied: Good night father of none.

 
புது மாப்பிள்ளை என்ன கவலையாய் இருக்கிறாய்?
மனைவிக்கு உடம்பு சரியில்லை.
மருத்துவரிடம் காட்ட வேண்டியதுதானே!
நான் சொன்ன து அவள் ஃபிகரை.


Road has Speed

Bank has Money

Exam has Time

Buliding has Height

But Love has NO


பேருந்தைப் பின்னால் தள்ளினால் என்ன ஆகும்?
"பின்" நெளிஞ்சு போகும்.

 It’s the thing that satisfies
Your mind, body & soul!
Do it on bed, on a sofa,
In the car or anywhere!
It’s called Prayer!

God bless your naughty mind!


பாரதியார் அன்று சொன்னதை நாம் இன்று செய்கிறோம்.
ஓடி(ODI - One day international) விளையாடுகிறோம்.

Doctor to Lady: You r looking so weak and exhausted!
Are you properly taking 3 meals a day as I had advised?
Lady: Oh my God! I heard 3 males per day! அவள் மழையில் நனைந்து வந்தபோது கடவுளுக்கு நன்றி சொன்னேன்.
இவ்வளவு நாளாய் மேக்கப்புடன் பார்த்து ஏமாந்து விட்டன்.

Scientific Question For U..
How Does Blood Reach Ur Brain
Simple
Direction Of Liquid Is Always
Towards The EMPTY SPACE.

 

நிலநடுக்கம் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
நிலத்துக்கு நல்ல தடித்த போர்வையால் போர்க்க வேண்டும்.

Mosquitoes wont bite you this night,
Because My 'Goodnight' will take care of you'.
But sometimes ant may bite,
Because, I wish you 'Sweet Dreams.

பத்தாவது விக்கட் விழுந்தவுடன் ஏன் எல்லாரும் எழுந்து போறாங்க?
ஆல் அவுட் என்று சொல்லீட்டாங்க

A strange fact:
Its very easy to hurt someone and then say"sorry"

but its really very difficult to get hurt and say
"no problem"....!

ஒரு மெஸேஜ் வந்தவுடன் செல் ஆஃப் ஆயிடுச்சி
அப்படி என்னதான் வந்தது
பட்டரி லோ என்று வந்தது.


Mother, to her teenage daughter, -
I think its right time, we should talk about sex.
Daughter: Sure mom, what do you want to know?


மூன்று நாளாக ஒரே தலையிடியும் வாந்தியும்.
பொன்னர் சங்கர் படம் பார்த்தீங்களா

From Mon to Sun, From Jan To Dec,
From birth till my death, my feelings for u
have never changed.
For me, you've always been
a headache

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...