Saturday, 16 July 2011

இலங்கையின் "நாய்க் கொலை மக்களாட்சியும்" இந்தியாவும்.

எங்கெங்கு என்றென்று
தமிழ்த் தேசியம் தலை துாக்குகிறதோ
அங்கங்கே அன்றன்றே
ஆரியப் பேய்கள் தலையிட்டு
தமிழ்த் தேசியத்தை அடக்கும்
தமிழனை அழித்தொழிக்கும்
அநியாயத்தை நிலை நாட்டும்


பிரித்தானிய சனல்-4 தொலைக்காட்சியின் இலங்கைப் போர்க்குற்றம் தொடர்பான காணொளிப்பதிவு இந்தியாவில் ஒளிபரப்பானதைத் தொடர்ந்து இந்தியாவில் சிலருக்கு இலங்கையின் நடந்த அட்டூழியங்கள் தெரியவந்துள்ளன. இது தொடர்பாக முதலில் இந்தியா கருத்துக் கூற ம|றுத்தது. பின்னர் இந்தியாவின் சில மக்களிடையே இது தொடர்பான கரிசனை ஏற்படத் தொடங்கியதை அடுத்து இந்தியாவின் அரச மட்டத்தில் இருந்து கருத்து வெளியிடப்பட்டுள்ளது. "கொழும்பு முரண்பாடுகளை பரீட்சிக்க வேண்டும்" என்று இதியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
An Indian foreign ministry spokesman in New Delhi said Colombo must examine the controversy.
"The sequence of events during the last days of the conflict is unclear (and) the government of Sri Lanka would need to go into the matter in greater detail," the foreign ministry said in a statement on Friday.
"The concerns that are being expressed in this regard need to be examined," it added. என்று செய்திச் சேவை ஒன்று தெரிவித்துள்ளது.
  இந்தியாவில் ஆளும் கட்சி மந்திரிகள் மட்டத்தில் கருத்துக்கள் எதுவும் வெளிவிடப்படவில்லை. முதலில் நிருபாமா ராவ் சனல்-4 காணொளி தொடர்பாக கருத்துக் கூற மறுத்திருந்தார்.  கருத்துத் தெரிவித்திருந்தால் அடுத்த முறை இலங்கை போகும்போது "கவனிப்பு" குறைந்து விடும் என்ற பயமா?

கருத்து வெளிவிட்ட இந்திய அதிகாரி ஒரு பன்னாட்டு மட்ட விசாரணையைக் கோரவில்லை. இலங்கையில்தான் விசாரணை மேற்கொள்ளப் படவேண்டும் என்கிறார். இந்தியாவில் செங்கம்பள வரவேற்புப் பெற்ற இலங்கை அரச அதிபர் மஹிந்த ராஜபக்ச இலங்கையில் ஒரு அப்பாவிப் பொது மகன் தன்னும் கொல்லப்படவில்லை படையின் போரில் ஈடுபடும் போது ஒரு கையில் ஆயுதமும் மறுகையில் மனித உரிமை பற்றிய புத்தகத்தையும் வைத்துக் கொண்டுதான் செயற்பட்டனர் என்கிறார். அது மட்டுமல்ல இலங்கையில் போர்க்குற்றம் நடக்கவுமில்லை அங்கு எந்த ஒரு படைவீரன் தன்னும் தண்டிக்கப் படமாட்டான் என்றும் சூளுரைத்துள்ளார். இப்படி இருக்கையில் இலங்கையில் இலங்கையில் எப்படி நீதிவிசாரணை நடக்கும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது.

 இலங்கையின் "நாய்க் கொலை" மக்களாட்சி
இந்தியாவின் பகவதியின் தலைமையில் நியமித்த விசாரணைக்குழுவிற்கு என்ன நடந்தது என்று இந்தியாவிற்கு தெரியாதா? இலங்கையில் கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுக்கள் எல்லாம் பயனற்றும் போனதை பல மனித உரிமை அமைப்புக்கள் பல முறை சுட்டிக்காட்டியதை இந்தியா அறியாதா? இலங்கையில் இறந்த தமிழரின் கிரியை நடந்த இடத்தில் நாய்களைக் கொன்று போடுவதும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வீட்டு வாசல்களில் நாய்களை கொன்று உடல் வேறு தலை வேறாகப் போடுவதும் தான் இலங்கையின் மக்களாட்சி. இப்படிப்பட்ட இலங்கையில் நீதியான விசாரணை நடக்கும் என்று இந்தியா நம்புகிறது.

இந்தியா பயப்படுகிறதா?
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போர் இந்தியாவின் உதவியுடன் நடத்தப் பட்ட போர். இந்தியாவிற்காக இலங்கை நடாத்திய போர் என்று இலங்கை அரச மட்டத்தில் பல தடவை தெரிவிக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு மட்டத்தில் ஒரு விசாரணை நடந்தால் இலங்கையின் இனக்கொலையில் இந்தியாவின் பங்களிப்பு வெளிவந்துவிடும் என்று இந்தியா பயப்படுகிறதா?

Friday, 15 July 2011

ஹைக்கூ: எளிதில் உடையக் கூடியது கவனமாகக் கையாளவும்

இதயங்களின் பாலம்
கண்களின் அலைவரிசை
காதல்


கோடை மழை
குளிர்காலக் கதிரவன்
அவள் வரவு


உணர்ச்சியின் பெருக்கம்
வார்த்தைகளின் வரட்சி
முத்தம்


பிடித்தது பட்டாம் பூச்சி
கொட்டும் குழவி
காதல் முறிவுஎளிதில் உடையக் கூடியது
கவனமாகக் கையாளவும்
என் மனது

Thursday, 14 July 2011

நகைச்சுவை: தேர்ந்தெடுத்த கணனிப் பகிடிகள்.

  தெரிந்து சுட்டெத்த கணனிப் பகிடிகள்.
பிழையான சுண்டெலி-----------------------------------
Girls are like Internet domain names, the ones I like are already taken.

----------------------------------
Whats the chemical formula of compressed liquid oxygen?

O2.zip

--------------------------------

எவன் சொன்னான் சீன மொழி கடினம் என்று?
--------------------------------
The Internet: where men are men, women are men, and children are the FBI ...

-------------------------------
Ive just loaded COLIN MCRAE HELICOPTER SIMULATOR on to my PC ... but it keeps crashing ...'

-------------------------------
A computer technician says "Why even have a 3-chip Hi-Def camcorder if you can't calibrate the white balance"!!!!!!!

-------------------------------
நேரம் கெட்ட நேரத்தில்!!!!

தரவேற்றி 9 மாதத்தில் தரவிறக்கம்!!!

கணனி மயம்
-------------------------------
- How do two programmers make money?
- One writes viruses, the other anti-viruses

-----------------------------------F1 = help!!!Who knows???

-----------------------------------
A system administrator has 2 problems:

- dumb users
- smart users

----------------------------------------
What's the difference between a computer salesman and a used-car salesman?

The used-car salesman KNOWS when he's lying.

Wednesday, 13 July 2011

போலித் தடுப்பூசித் திட்டத்தின் மூலம் பின் லாடனைப் பிடிக்க முயன்ற அமெரிக்கா.

பின் லாடன்

அமெரிக்க சிஐஏ உளவு நிறுவனம் பின் லாடன் தனது சகாக்களுடன் ஒரு தொடராபாளர் மூலம் தகவல்களையும் உத்தரவுகளையும் பரிமாறிக் கொள்கிறார் என்று குவாட்டமானோ சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அல் கெய்தா கைதிகளைச் சித்திரவதை செய்து அறிந்து கொண்டது. இந்த தொடர்பாளரின் பெயரை அறிவதற்கு அமெரிக்காவிற்கு மூன்று வருடங்கள் எடுத்தன.  பாக்கிஸ்த்தானில் இருந்து அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களில் இருந்து  இந்த மர்ம தொடர்பாளர் குடும்பப் பெயரை சிஐஏ அறிந்து கொண்டது.

அது முழுப்பெயர் அல்ல. தொடர்ந்த பல நடவடிக்கைகளினால் அவரது முழுப்பெயரும் வாகன இலக்கமும் குடும்பப் பெயரும் பெறப்பட்டது. அவர் குவைத்தில் பிறந்த பாக்கிஸ்தானியரான ஷேக் அபு அகமத். அவரது வாகனத்தை பல நாட்கள் பல தடவைகள் தொடர்ந்த போது. 2010 ஆகஸ்ட் மாதம் மர்மத் தொடர்பாளரின் இருப்பிடம் அறியப்பட்டது. அது அபத்தாபாத் என்னும் அழகிய நகரம். அந்த் இருப்பிடம் மூன்று மாடி மாளிகை வழமைக்கு மாறாக ஏழு அடிச்சுவரால் அந்த மாளிகை வளாகமும் ஒவ்வொரு மாடியும் மறைக்கப் பட்டிருந்தன.

மூன்று மாடி மாளிகையை செய்மதி மூலமும் நவீன கருவிகள் மூலமும் வேவு பார்த்த தேசிய பாதுகாப்பு முகவரகம் ஏமாற்றமடைந்தது. அந்த மாளிகைக்கு தொலைபேசித் தொடர்போ அல்லது இணையத் தொடர்பு வசதிகளோ இருக்கவில்லை. அதனால் அங்கிருந்து எந்தத் தகவல்களையும் பெறமுடியவில்லை. ஆனால் அப்படி ஒரு மாளிகைக்கு அப்படிப்பட்ட வசதிகள் இல்லாதிருப்பது சந்தேகத்தை வளர்த்தது. அங்கிருந்து குப்பைகள் வெளியில் வீசப்படுகிறதா என்று பார்த்தார்கள். குப்பைகளுக்குள் ஏதாவது தகவல் பெறலாம் என்று. அதுவும் இல்லை. மொட்டை மாடியில் வைத்து குப்பைகள் எரிக்கப்படுவதைக் கண்டனர். அங்குதான் பின் லாடன் இருக்கிறார் என்று அமெரிக்க உளவுத் துறை நம்பியது.

அம்மாளிகைக்குள் தாக்குதல் நடாத்தி பின் லாடனைக் கொல்லவோ அல்லது உயிருடன் பிடிக்கவோ அமெரிக்கா திட்டம் தீட்டியது. அதற்கு முன்னர் அங்கு இருப்பது பின் லாடன் தான் எபதை டி.என்.ஏ சோதனைமூலம் உறுதி செய்ய அமெரிக்கா விரும்பியது. அமெரிக்கா திட்டமிட்ட தாக்குதல் ஆபத்து நிறைந்தது அதனால் பின் லாடன் தான் அங்கு இருக்கிறார் என்பதை உறுதி செய்ய அமெரிக்கா ஒரு தடுப்பூசித் திட்டம் ஒன்றை அங்கு செயற்படுத்த விரும்பியது. பின் லாடனின் மாளிகைக்குள் ஒரு தாதியை தடுப்பூசி போட அனுப்பி அங்குள்ளவர்களின் டி.என்.ஏ மாதிரிகளைச் சேகரிக்கும் முயற்ச்சியில் அமெரிக்கா ஈடுபட்டது.
பின் லாடனின் இரண்டாம் மனைவியும் பிள்ளைகளும்

மருத்துவர் சக்ரி அல்ஃபிடியை இதற்காக அமெரிக்கா வேலைக்கு அமர்த்தியது அபொட்டாபாத் நகர் முழுவதும் Hepatitis B vaccine இற்கான விளம்பரங்கள் மருத்துவரால் செய்யப்பட்டது. பின் லாடன் மாளிகைக்கு ஒரு தாதியை ஒளிப்பதிவுக் கருவிகள் பூட்டப்பட்ட கைப்பையுடன் அனுப்பி அங்குள்ள பிள்ளைகளின் டி.என்.ஏ மாதிரிகளையாவது சேகரித்தால் போதும் என்று அமெரிக்கா நம்பியது. தாதிக்கு எப்படி தடுப்பூசி மருந்து செலுத்திய பின் இரத்தம் ஊசிமூலம் எடுப்பது என்றும் பயிற்ச்சி  அளிக்கப்பட்டது. பிள்ளைகளின் டி.என்.ஏ மாதிரிகள் பின் லாடனின் மாதிரியுடன் ஒத்துப் போனால் அதிலிருந்து பின் லாடன் அங்கிருப்பதை உறுதி செய்யாலாம் என்பது சிஐஏயின் திட்டம். ஆனால் அவர்களால் எந்தஓரு டி.என்.ஏ மாதிரிகளையும் சேகரிக்க முடியவில்லை.  உள் சென்ற தாதி அங்கு நின்ற விலை உயர்ந்த வாகனங்கள் பற்றி விசாரித்தமை சந்தேகத்தை ஏற்படுத்தியதால் அவர் வெளியேற்றப்பட்டார். மருத்துவர் சக்ரி அல்ஃபிடியை இப்போது பாக் அரசு கைது செய்து விசாரித்து வருகிறது.

Tuesday, 12 July 2011

முச்சந்தியில் மூச்சடக்கி நிற்கும் பாக்கிஸ்த்தான்


பாக்கிஸ்த்தானின் படைத்துறைக்கும் அங்குள்ள தீவிரவாத அமைப்புக்களுக்கும் தொடர்பு உண்டு என்று எழுதிய ஊடகர் சலீம் சஹ்ஜாட் கொல்லப்பட்டமை தொடர்பாக அமெரிக்கப் படைத்துறை அதிகாரி சலீம் சஹ்ஜாட்டின் கொலைக்கும் பாக்கிஸ்த்தானிய உளவுத் துறைக்கு சம்பந்தம் உண்டு என்று தெரிவித்த கருத்து அமெரிக்க-பாக் உறவை மோசமான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.

சலீம் சஹ்ஜாட் Asia Times Onlineஇல் பாக் உளவுத்துறையினருக்கும் தீவிர வாத அமைப்புக்களுக்கும் இடையினால தொடர்புகள் அம்பலப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர் கடத்தப்பட்டு கொடூரமாக் கொல்லப்பட்டார். அவர் மீது விழுந்த அடிகள் அவர் விலா எழும்புகளை முறித்து ஈரலைக் கிழித்திருந்தன. அமெரிக்க கடற்படையின் Admiral Mike Mullen பாக்கிஸ்தானின் ISI எனப்படும் Inter-Service Intelligenceமீது வெளிப்படையாகவும் பகிரங்கமாகவும் நாடுகளுக்கிடையிலான வரம்புகளை மீறி குற்றம் சுமத்தியது பாக் அரசை ஆத்திரமடையச் செய்துள்ளது. இது தொடர்பாக "The torture and murder “was sanctioned by the government,” Adm. Mullen told the Pentagon Press Association at an on-the-record luncheon, although he said he had no evidence trail that implicated the ISI. As a veteran Beltway warrior, there can be no doubt Adm. Mullen knew exactly the sort of diplomatic damage his bombshell would cause." என்று ஒரு ஊடகம் கருத்துத் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அட்மிரல் அத்துடன் நிற்கவில்லை இந்த மாதிரியான கொலைகள் தொடர்ந்து நடக்கின்றன என்றார்.

ஏற்கனவே ஒரு அமெரிக்க உளவுத்துறையான சிஐஏயின் முகவர் Raymond Davis பாக்கிஸ்த்தானிய மண்ணில் வைத்து ஒரு பாக்கிஸ்தானியரை சுட்டுக் கொன்றமை, அமெரிக்க கடற்படையின் சீல் பிரிவினர் பாக்கிஸ்தானிற்குள் அத்து மீறிப் பிரவேசித்து பின்லாடனைக் கொன்றமை, அமெரிக்க ஆளில்லா விமானங்கள் அடிக்கடி பாக்கிஸ்த்தானிற்குள் புகுந்து அடிக்கடி தாக்குதல் செய்பவை போன்றவற்றால் பாக்கிஸ்தானிய அரசு தனது மக்கள் முன் தலை குனிந்து நிற்கிறது.

அமெரிக்க அட்மிரலின் கருத்தும் பாக்கிஸ்த்தானுக்கான தனது உதவிகளை இடை நிறுத்தப் போவதாக அமெரிக்கா 10/07/2011இலன்று விடுத்த அறிக்கையும் அமெரிக்க-பாக் உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டுகிறது. 11/09/2001இல் அமெரிக்க இரட்டைக் கோபுரங்களின் மீதான தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து வளர்ந்து வந்த அமெரிக்க-பாக் உறவு 02/05/2011இல் அத்தாக்குதலின் காரணகர்தா பின் லாடனைக் கொன்றதைத் தொடர்ந்து மோசமடையத் தொடங்கியது. சிஐஏயின் முகவர் Raymond Davis பாக்கிஸ்த்தானிய மண்ணில் வைத்து ஒரு பாக்கிஸ்தானியரை சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து பாக்கிஸ்த்தான் தனது நாட்டில் தனது படையினருக்குப் பயிற்ச்சி வழங்கிக் கொண்டிருந்த  பல அமெரிக்கப் படையினரை வெளியேற்றியது. பின் லாடனைக் கொல்ல வந்த அமெரிக்க கடற்படையின் சீல் பிரிவினர் பின் லாடன் தங்கி இருந்த மாளிகையில் இருந்து பல கணனிகளையும் கைப்பேசிகளையும் எடுத்துச் சென்றனர். அதிலிருந்து பாக் படையினர் மற்றும் உளவுத் துறையினருக்கும் தீவிரவாதிகளுக்கும்இடையிலான தொடர்புகள் பற்றிய தகவல்களை அமெரிக்கா பெற்றுக் கொண்டது. அவற்றின் அடிப்படையில் பாக்கிஸ்தான் அரசு தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா வற்புறுத்தி வருகிறது.

ஹிலரி கிளிண்டனின் பாக்கிஸ்தானியப் பயணம்
மே 2இல் பின் லாடன் கொல்லப்பட்ட சில வாரங்களுக்குள் அமெரிக்க அரசுச் செயலர் ஹிலரி கிளிண்டன் பாக்கிஸ்தானிற்கு ஒரு சடுதியான பயணம் மேற்கொண்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. பாக்கிஸ்த்தானில் உள்ள இசுலாமியத் தீவிரவாதிகளின் பட்டியல் பாக்கிஸ்தானிடம் ஹிலரியால் கையளிக்கப் பட்டது. பின் லாடனின் உதவியாளர் ஐமன் அல் ஜவகிரி, தலிபான் தலைவர் முல்ல, தலிபான் தளபதி ஒமர் சிராஜ் ஹக்கானி, லிபிய அல் கெய்தாத் தலைவர் அதியா அப்துல் ரஹ்மான் போன்றவர்கள் அப்பட்டியலில் இருக்கின்றனர். இப்பட்டியல் கையளிக்கப் பட்டதன் நோக்கம் இவர்களை நீ பிடிக்கிறாயா அல்லது நான் பிடிக்கட்டுமா என்பதுதான் என்று சொல்லப்படுகிறது. அமெரிக்காவின் பாக்கிஸ்த்தானுக்கான இரண்டு பில்லியன் டொலர் உதவி இந்த ஒத்துழைப்புடன் சம்பந்தப்பட்டதாக இருக்கும் என்றும் அப்போது கருதப்பட்டது அந்த உதவி இப்போது இடை நிறுத்தப் பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானுடனான பாக்கிஸ்த்தானின் எல்லைக்குள் ஒரு இலட்சம் அமெரிக்கப் படையினர் இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்கு பாக்கிஸ்த்தனிற்கு அமெரிக்கா கொடுக்கும் கைக்கூலியே பலமில்லியன் டாலர்கள் உதவி. அந்த உதவி இடைநிறுத்தப் படுவது பாக்கிஸ்தானியப் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அமெரிக்காவின் புதிய பாதுகாப்புச் செயலரும் முன்னாள் சிஐஏ இயக்குனருமான லியோன் பானெற்றா "அமெரிக்க பாக்கிஸ்த்தான் உறவு ஒரு மோசமான சவால். தேவையான உறவு. இருந்தும் மிகச்சிக்கலானதும் மிக ஏமாற்றமளிப்பதாகவும் இருக்கிறது.

பாக் பதிலடி
அமெரிக்கா பாக்கிஸ்தானுக்கான உதவிகளை நிறுத்தினால் தாம் தமது படைகளை ஆப்க்கனிஸ்த்தான் எல்லைகளில் இருந்து விலக்க வேண்டி வரும் என்று பாக்கிஸ்தானிய பாதுகாப்பு அமைச்சர் அஹமட் முக்தார் அமெரிக்காவை 12-07-2011இலன்று மிரட்டினார். ஆனால் பாக் பாதுகாப்புத் துறை அமைச்சரிலும் பார்க்க படைத்துறைத் தளபதிகள் அதிக அதிகாரம் உள்ளவர்கள். இன்று (12-07-2011) பாக்கிஸ்த்தானுக்குள் வந்து தாக்கிய 3 ஏவுகணைகள் பல தீவிரவாதிகளைக் கொன்றன. இவை ஆப்கானிஸ்த்தான் எல்லையில் உள்ள அமெரிக்கப் படைகளால் ஏவப்பட்டிருக்கலாம்.சீனாவின் பக்கம் பாக்கிஸ்த்தான் திரும்புமா?
பாக்கிஸ்த்தானின் தென் கிழக்கு மூலை மோசமான் எதிரியாகிய இந்தியாவைக் கொண்டுள்ளது. பாக்கிஸ்த்தானியாவிற்கு பாதகமில்லா மூலை வட கிழக்கு மூலையே. பாக்கிஸ்தானிய மக்களில் 87%மானோர் சீனாவுடன் சிறந்த உறவைப்பேணுவதை விரும்புகிறார்கள். 12%மானவர்கள் மட்டுமே அமெரிக்காவுடன் சிறந்த உறவை விரும்புகின்றனர். சீன வர்த்தக ரீதியில் பாக்கிஸ்தானைச் சுரண்ட விரும்புகிறது.  சீனாவின் முத்து மாலைத் திட்டத்தில் பாக்கிஸ்தானிய குவாடர் துறைமுகமும் ஒன்று. அது கட்டி முடிக்கப்பட்டபின்னர் அப்பிரதேசம் அடுத்த துபாயாக மாறும் என்று அப்போதைய பாக்கிஸ்த்தனிய அதிபர் பார்வஸ் முஸரஃப் தெரிவித்தார். குவாடர் துறைமுகாம் 2008 இல் கட்டி முடிக்கப்பட்டது. எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. அது பிரச்சனைக்குரிய பாலுச்சிஸ்த்தான் மாகாணத்தில் அமைந்தமையே இதற்கான காரணங்களில் முக்கியமானது. குவாடரில் ஒரு கடற்படையை அமைக்கும் படி பாக்கிஸ்தான் சீனாவை வேண்டியது சீனா அதை மறுத்துவிட்டது.சீனாவிற்கு இப்போது குவாடர் துறைமுகம் வர்த்தக நோக்கங்களுக்காக மட்டும் பயன்படுத்தும் எண்ணம் மட்டும்தான் உண்டு. ஆனால் வருங்காலத்தில் இந்தியாவிற்கு எதிரான தேவை ஏற்படின் அது படைத்துறை நோக்கங்களுக்காக பயன்படுத்தும். குவாடர் துறைமுகத்தை தனது ஹரக்ஹோரம் நெடுஞ்சாலையுடன் இணைத்த திட்டம் சீனாவிற்கு எதிர்பார்த வர்தக இலாபத்தைக் கொடுக்கவில்லை. சீனாவின் பூகோள அரசியலிற்கும் படைத்துறை உபாயங்களுக்க்கும் பாக்கிஸ்த்தான் முக்கியமானது. ஆனால் இப்போது அமெரிக்காவுடன் பாக்கிஸ்த்தானில் ஒரு ஆதிக்கப் போட்டிக்கு சீனா தயாரில்லை.

இசுலாமியத் தீவிரவாதம்
பாக்கிஸ்த்தான் அமெரிகாவிற்கு ஆதரவாகச் செயற்படுகிறது அது இசுலாமிய மார்கத்திற்கு எதிரானது என்ற உணர்வு பாக்கிஸ்தானில் வளர்வதைப் பாக் அரசு விரும்பவில்லை. அமெரிக்கா விரும்புவது போல் தனது படைத்துறையிலும் உளவுத்துறையிலும் உள்ள இசுலாமியத் தீவிரவாத இயக்க ஆதரவாளர்களைக் களையெடுத்தால் பாக்கிஸ்த்தானிய இசுலாமியத் தீவிரவாதம் பாக் அரசுக்கும் ஆட்சியாளர்களுக்கும் பெரும் அச்சுறுத்தாலாக அமையும்.

மூன்று தலைக் கொள்ளி எறும்பு.
ஒரு புறம் அமெரிக்கா மறுபுறம் சீனா உள்ளே இசுலாமியத் தீவிரவாதம் இந்த மூன்றுக்கும் நடுவில் வேகமாக வளரும் எதிரி இந்தியா. பாக்கிஸ்தான் அமெரிக்க வேண்டுதலான இசுலாமியத் திவிரவாதிகளுக்கு எதிரான கடும் நடவடிக்கையை நிராகரித்து சீன பக்கம் சார்வதா? ஒரு அமெரிக்க கைகூலி நாடாக செயற்படுவதா? இரண்டையும் விடுத்து நாட்டை இசுலாமியத் தீவிரவாதிகளிடம் பறி கொடுப்பதா? மூன்றாம் தெரிவை அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய மூன்றும் விரும்பாது.

Monday, 11 July 2011

Facebookஐப் பாவித்து ஆர்பாட்டக் குழுவினரைத் தடுத்தது இஸ்ரேல்.

எகிப்திய மக்கள் தங்கள் 18நாள் எழுச்சியால் ஹஸ்னி முபராக்கை பதவியில் இருந்து விரட்டுவதற்கு முகவெடு (Facebook) சமூக வலைத்தளத்தைப் பவித்தனர். இதனால் Facebookஇற்கு எகிப்தில் பெரும் புகழ் கிடைத்தது. சிலர் தங்கள் பிள்ளைகளுக்கு Facebook என்று பெயரும் வைத்தனர். எகிப்தியக் கிளர்ச்சிக்காரர்கள் முகவெடு (Facebook) சமூக வலைத்தளத்தைப் பவித்து மக்களுடன் தகவல் பரிமாற்றங்களை மேற்கொண்டன்ர்.

எகிப்தில் கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிராக முகவெடு (Facebook) சமூக வலைத்தளத்தைப் பாவிக்க இஸ்ரேல் அதையே கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகப் பாவித்தது. இஸ்ரேலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய உலகெங்கிலும் இருந்து  பாலஸ்த்தீனிய விடுதலை ஆதரவாளர்கள் இஸ்ரேல் செல்வதற்கான விமானப் பயணச் சீட்டுக்களைப் பெற்றிருந்தனர். முகவெடு (Facebook)மூலம் இவர்களின் பெயர்களை இஸ்ரேல் திரட்டி ஆர்ப்பாட்டம் செய்யவிருந்தவர்கள் பயணம் செய்ய இருந்த விமானச் சேவையினருக்கு அவர்களின் பெயர்களைக் கொடுத்து இவர்கள் வந்தால் இஸ்ரேலுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அறிவுறுத்தியது. இதனால் விமான நிலையங்களுக்கு சென்ற் 340ஆர்ப்பாட்டக்காரர்கள் விமாங்களில் ஏற அனுமதி மறுக்கப்பட்டனர். இந்த தடையையும் தாண்டிச் சென்றவர்களை இஸ்ரேல் ரெல் அவீவ் விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்தது.

முகவெடு (Facebook) உரிமையாளர்கள் தாம் இஸ்ரேலுக்கு எந்த தகவல்களையும் வழங்கவில்லை என்கிறார்கள். பயணம் செய்ய விருந்தவர்கள் செய்த  status updateமூலம் இஸ்ரேலிய உளவுத்துறை இவர்களைக் கண்டு பிடித்திருக்கலாம்.

Sunday, 10 July 2011

ஒரு பெரிய இடத்து விபசாரி ஆடை மாற்றுகிறாள்

பிரித்தானியாவில் அதிக விற்பனையைக் கொண்ட பத்திரிகையான News of the World பத்திரிகை இன்றுடன் மூடப்படுகிறது. The Guardian, Independent போன்ற தரமான பத்திரிகைகள் தங்களது விற்பனைக்குத் தடுமாறிக் கொண்டிருக்கும் வேளையில் தரக்குறைவான அரை நிர்வாணப் படங்களையும் பிரபலமானவர்களின் அந்தரங்க செயற்பாடுகள் தொடர்பான தகவல்களைத் திருடிப் பிரசுரிப்பது Rubert Murdoch என்ற பத்திரிகை முதலாளி(முதலை)யின்News of the World இன் வெற்றியின் பின்னணி. வலதுசாரி அரசியல்வாதிகளை ஆதரிப்பது இப்பத்திரிகையின் வெற்றியின் இன்னும் ஒரு இரகசியம்.

2004-ம் ஆண்டு Clare Short என்னும் (பெண்) தொழிற்கட்சியின் பாராளமன்ற உறுப்பினர் சன் என்னும் Rubert Murdoch இன் பத்திரிகையின் மூன்றாம் பக்கத்தில் பிரசுரிக்கப்படும் மேலாடை அற்ற பெண்களின் படங்களுக்கு எதிராக ஒரு தனிப்பட்ட மதிய உணவு விருந்து உபசாரத்தில் கருத்துத் தெரிவித்தார். மறுநாள்  ‘Fat, Jealous’ Clare Brands Page 3 Porn” என்று சன் பத்திரிகை முதற்பக்க தலைப்புச் செய்தி. அத்துடன் சன் நிற்கவில்லை. Clare Short படத்தின் தலையை மேலாடை இல்லாத ஒரு பெண்ணின் படத்தில் ஒட்டிப் பிரசுரித்து Clare Shortஇற்கும் மார்பு உண்டு ஆனால் அது எங்களுடையதைப் போல் இல்லை என்று ஒரு page - 3அழகி கூறுவதாகப் பிரசுரித்திருந்தது. அப்போது சன் பத்திரிகையின் ஆசிரியப் பதவியில் இருந்தது Rebekah என்னும் பெண்மணி. அவர் பின்னர் Rubert Murdochஇன் News of the Worldஇன் ஆசிரியை ஆனார்.

168 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்டது News of the World. இதை 1969-ம் ஆண்டு Rubert Murdoch இன் News Ltd வாங்கிக் கொண்டது. 1969இல் 6மில்லியன் பிரதிகள் விற்பனையைக் கொண்டிருந்தது.  அது 1980இல் 4மில்லியன்களாகக் குறைந்தது. படவாய்ப்புப் குறைந்த தமிழ்ச் சினிமா நடிகை ஆடைக் குறைப்புச் செய்வதைப் போல் 1981இல் News of the World பரந்த தாள் வடிவத்தில் இருந்து மடிப்புத் தாள்(broadsheet to tabloid format)வடிவத்திற்கு மாறிக்கொண்டது. மடிப்புத்தாள் பத்திரிகைக்கு கவர்ச்சிப் படங்களுக்காக பத்திரிகை வாங்குவோரிடம் வரவேற்பு அதிகம்.

அந்தரங்கத் தகவல்கள் திருட்டுக்கள்
பிரித்தானிய மக்களிடை மற்றவர்களின் அந்தரந்கச் செய்திகளுக்கு வரவேற்பு அதிகம். அதிலும் அரச குடும்பத்தினர், அரசியல்வாதிகள், கலைத் துறையில் உள்ளோர், விளையாட்டுத் துறையில் உள்ளோர் சம்பந்தப்பட்ட அந்தரங்கச் செய்திக்கு பெரும் வரவேற்பு. இதை உணர்ந்த News of the World இவர்களின் அந்தரங்கச் செய்திகளைத் திரட்டிப் பிரசுரிக்கத் தொடங்கியது. 2002இல் பிரித்தானிய இளவரசர் (டயானாவின் இரண்டாம் மகன்) குறைந்த வயதில் மது அருந்தினார் என்ற செய்தியைப் பிரசுரித்தது. பல பிரபல்யங்களின் அந்தரங்கச் செய்திகளைப் பிரசுரிப்பதை தனது வாடிக்கையாக்கிக் கொண்டது. இந்தத் தகவல்கள் அவர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பதன் மூலம் பெற்றுக்கொண்டது News of the World. Clive Goodman and Glenn Mulcaire என்னும் இரு News of the World ஊழியர்கள் தொலைபேசி ஒற்றுக் கேட்டலுக்காக கைது செய்யப்பட்டனர். அப்போது News of the World ஆசிரியராக இருந்த Andy Coulson பதவி விலகினார். இவர் பின்னர் தற்போதைய பிரித்தானிய பிரதம மதிரியின் பத்திரிகைத் துறைத் தொடர்பாளராகப் பதவி வகித்தார். ஏப்ரில் 2011இல் News of the World இன் நிருபர்களான Ian Edmondson and Neville Thurlbeck தொலை பேசி ஒற்றுக் கேட்டல்களுக்காக கைது செய்யப்பட்டனர். பிரபல்யங்களின் தொலைபேசியை ஒற்றுக் கேட்டவர்களுக்கு அது அலுத்துவிட்டது. குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களது தொலைபேசிகளை ஒற்றுக் கேட்கத் தொடங்கினர். ஆப்கானிஸ்தானில் இறந்த பிரித்தானியப் படை வீரர்களின் குடும்பத்தினரின் தொலைபேசி உரையாடல்கள், தீவிரவாதிளின் குண்டுத்தாக்குதல்களால் இறந்தவர்களின் குடும்பத்தினரின் உரையாடல்கள், வெறியனால் கொல்லப்பட்ட குழந்தையின் குடும்பத்தினர்களின் உரையாடல்கள்.... எதையும் விட்டுவைக்கவில்லை News of the World. பிரித்தானியக் காவல்துறையினருக்கு இலஞ்சம் கொடுதும் News of the World பல தகவல்களைத் திருடிக் கொண்டது.

News of the Worldஇற்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் அம்பலமான நிலையில் வர்த்தக நிறுவனங்கள் அதற்கு கொடுக்கும் விளம்பரங்களை நிறுத்துவதாக அறிவித்தன. பாராளமன்றம், வானொலிகள், தொலைக்காட்சிகள் எனப் பட்டி தொட்டியெங்கும் News of the Worldஇற்கு எதிராக கருத்துக்கள் பரவின். பல பத்திரிகைகளின் உரிமையாளரான Rubert Murdoch தனது மற்றப் பத்திரிகைகளுக்கு எதிராகவும் கருத்துக்கள் கிளம்பும் என்று எதிர்பார்த்தார். மற்றும் பிரித்தானியாவின் SkyTv தொலைக்காட்சிச் சேவையையும் அவர் வாங்கும் முயற்ச்சியில் பாதி வெற்றி கண்டுகொண்டிருக்கிறார். தனது முதலுக்கே ஆபத்து வரும் என்று உணர்ந்த Rubert Murdoch தனது News of the World முடுவதாக அறிவித்தார். ஆனால் News of the Worldஆனது Sun on Sunday என்னும் இன்னொரு பெயரில் வரவிருக்கிறது. ஒரு மேலிடத்து விபச்சாரி ஆடையை மாற்றிக் கொள்கிறாள்


Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...