Saturday, 21 May 2011

ஐ-போன் - 5 வருகிறது


ஐ-போன்கள் ஒரு சிறந்த கருவி என்பதிலும் பார்க்க அது சிறந்த விளையாட்டுப் பொருள் என்று சொல்வொரும் உண்டு. கருவியோ விளையாட்டுப் பொருளோ விற்பனையில் பெரும் சாதனை படைத்து வருகின்றன ஐ-போன்கள்.

ஆப்பிளின் அடுத்த ஐ-போன் எப்படி இருக்கும் என்பது பற்றிய தகவல்களை அறியப்பலர் ஆவலாக உள்ளனர். அதுபற்றிய செய்திகள் இப்போது கசியத் தொடங்கிவிட்டன:
  • அடுத்த ஐ-போன் iPhone 4S எனப் பெயரிடப்படும்.
  • இப்போது உள்ள ஐ-போன்களிலும் பார்க்க தடித்ததாகவும் விரைவாகச் செயற்படக்கூடியதாகவும் இருக்கும்.
  • சில அழகுபடுத்தல் வேலை இருக்கும்.
  • அதில் A5 dual-processorஉம் HSPA+ support உம் இருக்கும் ஆனால் LTE இருக்காது.
  • NFC chipஇருக்காது அதாவது Near-field technology. Near-field technologyஇன்னும் பிரபலமாகும்வரை ஐ-போன் காத்திருக்குமாம்.
  • திரை பெரிதாகும்.
  • 8MP ஒளிப்பதிவுத்திறன் கொண்டிருக்கும்.
ஐ-போனிற்கு பிறகு வந்த சம்சங் கைப்பேசிகளில் அடொப் ஃபிளாஸ் பிளேயர் செயற்படக்கூடியதாக உள்ளன. புதிய iPhone 4S இல் அடொப் ஃபிளாஸ் பிளேயர் செயற்படக்கூடியதாக இருக்குமா என்று தெரியவில்லை.

2011 நவம்பரில் iPhone 4S வெளிவரலாம். நத்தார் அதிரடியாக இருக்கும்.

Thursday, 19 May 2011

விஞ்ஞானம்: பெண்கள் உயரமான ஆண்களை விரும்புவது ஏன்?


கலாநிதி டேவிட் கரியர் என்னும் விஞ்ஞானி பெண்கள் உயரமான ஆண்களை விரும்புவதற்கான காரணத்தை ஆய்வு செய்து கண்டறிந்துள்ளார். அவர் இந்த உயரமான ஆண்களிடம் பெண்களுக்கு உள்ள ஈர்ப்பு நெடுங்காலமாக இருந்து வருகிறது என்கிறார். உயரமான ஆண்கள் தங்களையும் தங்கள் பிள்ளைகளையும் எதிரிகளிடமிருந்தும் ஆபத்தில் இருந்தும் பாதுகாக்க வ்ல்லவர்கள் என்று பெண்கள் தொன்று தொட்டே நம்பி வந்துள்ளனர். மனித இனம் கூர்ப்படைய ஆரம்பித்ததில் இருந்தே இந்த ஈர்ப்பு தொடங்கிவிட்டதாம். உயரமான ஆண்கள் தங்கள் நீண்ட கைகளால் எதிரிகளை பலமாகத் தாக்கக்கூடியவர்கள் என்று பெண்கள் நம்புகின்றனர் என்கிறார் கலாநிதி டேவிட் கரியர் என்னும் விஞ்ஞானி. இதன் காரணமாக பெண்கள் உயரமான ஆண்களை விரும்புகிறார்கள். இந்த விருப்பம் அவர்கள் மரபணுக்களின் பதிந்துள்ளது.

விஞ்ஞானி டேவிட் கரியர் ஆண்கள் நடுத்தரமான உயரமுள்ள அல்லது குள்ளமான பெண்களையே விரும்புகிறார்கள் என்கிறார்.

காணொளி: இலண்டனில் முள்ளிவாய்க்கால் இனஒழிப்பு நினைவு நாள்


இந்திய காங்கிரசுக் கட்சிப் பேயாட்சியின் உதவியுடன் சிங்களவர்கள் இலங்கையில் செய்த இன ஒழிப்பு நினைவு நாள் நிகழ்வுகள் மே மாதம் 18-திகதி இலண்டன் ட்ரஃபல்கர் சதுக்கத்தில் நடந்தது. அங்கு பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று கூடி ஈகைச் சுடரேற்றி அக வணக்கம் செலுத்தி இனக்கொலையாளிகளை நீதிக்கு முன் நிறுத்தித் தண்டிப்பதாக உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

இவற்றின் காணொளிப்பதிவுகளை இங்கு காணலாம்:

ஈகைச் சுடரேற்றம்

அக வணைக்கம்


நெடுமாறன் ஐயா

பிரித்தானிய தொழிற்கட்சி பா. உ

குற்றவியல் சட்ட நிபுணர்

சிறப்புரை

Tuesday, 17 May 2011

மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம்


ஒன்றல்ல இரண்டல்ல முன்னூறாயிரம்
கொன்றொழித்தீர் கொன்றொழித்தீர்
மறக்கவும் மாட்டோம்
மன்னிக்கவும் மாட்டோம்

உணவும் தடுத்தீர் மருந்தும் தடுத்தீர்
குடிசைகள் அழித்தீர் மாளிகைகள் அழித்தீர்
மறக்கவும் மாட்டோம்
மன்னிக்கவும் மாட்டோம்

துணையென வந்தீர் துரோகிகளாயினீர்
காக்கவென வந்தீர் கருவறுத்தீர்
மறக்கவும் மாட்டோம்
மன்னிக்கவும் மாட்டோம்

பூவையும் கருக்கினீர் பிஞ்சையும் கருக்கினீர்
தாயையும் கசக்கினீர் தந்தையைக் கந்தலாக்கினீர்
மறக்கவும் மாட்டோம்
மன்னிக்கவும் மாட்டோம்

எம்மினம் ஒழித்த சிங்கள நாய்களே
ஆதரவு கொடுத்த் காங்கிரசுப் பேய்களே
மறக்கவும் மாட்டோம்
மன்னிக்கவும் மாட்டோம்

சொர்க்கம் என்பது வெறும் கட்டுக் கதை என்கிறார் பிரபல விஞ்ஞானி Stephen Hawking


பிரித்தானியாவைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானி Stephen Hawking சொர்க்கம் இறப்பின் பின் வாழ்வு என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதை என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். நாம் இறக்கும் போது எமது மூளை கணனி ஒன்று நிறுத்தப் படுவது போல நிறுத்தப்படுகிறது என்கிறார் அவர்: "I regard the brain as a computer which will stop working when its components fail," he told the British newspaper. "There is no heaven or afterlife for broken-down computers."

சென்ற ஆண்டு பிரபஞ்சம் கடவுளால் படைக்கப்படவில்லை என்று சொல்லி பல மதவாதிகளை ஆத்திரப்படுதியவர் Stephen Hawking.

Motor Neurone Disease என்னும் நோயால் ப்ல வருடங்களாகப் பாதிக்கப்பட்டு சாவின் நிழலில் தான் வாழுவதாகக் குறிப்பிடுகிறார் Stephen Hawking. தான் இப்போது இறக்கவிரும்பவில்லையாம் இன்னும்பல தான் செய்ய இருக்கிறாராம் Brief History of Time என்ற அதிக பிரதிகள் விற்பனையான நூலை எழுதிய இந்த விஞ்ஞானி.

சொர்க்கம் என்பது இருட்டுக்குப் பயந்தவர்களினிதும் இறப்பிற்குப் பயந்தவர்களினதும் கட்டுக்கதை என்கிறார் Stephen Hawking. கடவுளை நம்புவது இருட்டுக்கான பயத்தையும் இறப்பிற்கான பயத்தையும் நீக்குகிறது என்கிறார் இந்த கேம்பிரிட்ஜ் பேராசிரியர்.

Sunday, 15 May 2011

நகைச்சுவைக் கதை: மோகன் சிங் மன்னுடன் ஓடிய இத்தாலிச் சனியாள்


மோகன் சிங் மன் ஒவ்வொரு நாளும் மாலைவேளையில் வீட்டிலிருந்து புறப்பட்டு இரண்டு கிலோ மீட்டர் ஓடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். முதல் தடவை அவர் முதலாவது சந்தில் திரும்பியவுடன் அங்கு ஒரு பாலியல் தொழில் செய்யும் கட்டழகி அவருடன் ஓடி வந்து ஒரு இரவிற்கு பத்தாயிரம் ரூபா என்றாள். இவளை விரட்ட ஒரு வழி தேவை என்று அவர் யோசித்தார். அவள் இனி தனக்குக் கிட்டவராமல் இருக்க நூறு ரூபா என்றால் வா என்றார். அதற்கு அவள் அட தூ... என்று விட்டு விலகிவிட்டாள். ஆனால் தனது முயற்ச்சியில் சற்றும் மனம் தளராத அந்தப் கட்டழகுப் பாலியல் தொழிலாளி ஒவ்வொரு நாளும் அவர் ஓடும் போது அவருடன் ஓடுவது போல் ஓடி ஒரு இரவிற்கு பத்தாயிரம் ரூபா என்பாள். மோகன் சிங் மன்னும் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நூறு ரூபாய் என்பார். அவள் ஒவ்வொரு நாளும் வேறு வேறு விதமான கெட்ட வார்த்தையால் திட்டுவாள். அதைப்பற்றியெல்லாம கவலைப் பட அவர் என்ன சொரணையுள்ளவரா?

ஒரு நாள் மோகன் சிங் மன்னின் வீட்டிற்கு வந்த இத்தாலிச் சனியாள் நீண்ட நேரமாக பல உத்தரவுகளை வழங்கிக் கொண்டிருந்தாள். சனியாளை வீட்டிலிருந்து விரட்ட மன் மோகன் சிங்கின் மனைவி ஏங்க நீங்க ஜாக்கிங் போகிற நேரமாயிடுச்சிங்க என்றாள். அதற்க்குச் சனியாள் தானும் இந்த நேரம் ஜாக்கிங் போவேன் நானும் உன்னுடன் கூட ஜாக்கிங் வருகிறேன் என்றாள். சனியாள் சொன்னால் தலையாட்டுவதுதானே அவர் வேலை. இருவரும் ஓடத் தொடங்கினர். மோகன் சின் மன்னிற்கு நெஞ்சு திக் திக் என அடிக்கத் தொடங்கியது. அந்தப் பாலியல் தொழில் செய்யும் கட்டழகி தன்னை இன்று எந்தக் கெட்டவார்த்தையால் திட்டப் போகிறாளோ என்று எண்ணிக் கலங்கினார். அவர்கள் சந்தில் திரும்பியவுடன் மோகன் சிங் மன்னையும் சனியாளையும் கண்டவுடன் இருவருடனும் தானும் ஓடத் தொடங்கினாள். சனியாளை ஏற இறங்கப் பார்த்தாள்.பின்னர் மோகன் சிங் மன்னைப் பார்த்துச் சொன்னாள் பாரடா கஞ்சப்பயலே நூறு ரூபாய்க்கு இப்படி ஒரு அட்டு பிகர் தாண்டா உனக்குக் கிடைப்பாள்.

தமிழ்நாட்டை என்று தமிழன் ஆள்வான்?


துள்ளிக் குதிக்க இங்கு ஒன்றுமில்லை
தோற்கடிக்கப்படவேண்டியவன்
தோற்கடிக்கப்பட்டான் இங்கே
வெல்லக் கூடாதவள் - இங்கு
வென்றுவிட்டாள்.
தமிழர்களின் வெற்றியல்ல
பார்ப்பனக் கும்பலின் வெற்றியிது
சோ என்னும் சொறிநாயின்
ஆலோசனைப்படி நடக்கும் ஆட்சி
தமிழ்நாட்டை என்று தமிழன் ஆள்வான்?

எம்மினம் அழிக்கப்பட்டபோது
உண்ணாவிரத நாடகமாடியவன் தோற்றான்
தமிழன் செத்துத்தான் ஆகவேண்டும் என்றவள்
வெற்றிக்கனி பறித்து நிற்கிறாள்
ராஜபக்ச தமிழரை கொல்லவில்லை
புலிகளைத்தான் கொல்கின்றான்
ஆதரவு நாம் கொடுப்போம் என்ற
பார்ப்பனக் கும்பலின் கை ஓங்குதல் தகுமோ?
தமிழ்நாட்டை என்று தமிழன் ஆள்வான்?

உழைக்க வேண்டிய நேரத்தில்
கட்சிக்காக உழைத்தாய்
ஒதுக்க வேண்டியவர்களை
ஒதுக்க வேண்டிய நேரத்த்ல்
ஒதுக்கி வைத்தாய்
கொள்ளை அடிக்க வேண்டிய நேரத்தில்
அடித்தாய் கொள்ளை கொள்ளையாக
சொத்துச் சேர்க்க வேண்டிய நேரத்தில்
குடும்பத்திற்கு சொத்து சேர்த்தாய்
திருந்த வேண்டிய நேரத்தில்
திருந்தவில்லை
ஒதுங்க வேண்டிய நேரத்தில்
ஒதுங்கவுமில்லை
உதைக்க வேண்டிய நேரத்தில்
உதைத்தனர் மக்கள்

நரியூருக்கஞ்சி கரடியூர் சேர்ந்தோம்
கொதிக்கும் பானையில் இருந்து
குதித்தோம் துள்ளி
தவறி விழுந்தோம்
சுடு நெருப்பில்
தமிழ்நாட்டை என்றுதான்
தமிழன் ஆள்வான்?

My Nerves Get on Fire


I hear the melody you sing
Even from thousands miles away
I can feel your heart-beat
Even though I am not in it.

Without you here, baby
Nothing left to say
Nothing left to enjoy
All are here is to decoy

My nerves get on fire
On a single wink of your eyes
A new spring in my life
In the shape of you
I am in love
I feel so high
I do not know where to fly

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...