Saturday, 12 March 2011

பிரித்தானிய இந்துக் கோவில்களில் தமிழில் பூசை செய்யும் விவாதம்.© 2011 Vel Tharmaபிரித்தானியாவில் உள்ள கோவில்களில் தமிழில் பூசை செய்வது பற்றி பல வாதப் பிரதிவாதங்கள் இப்போது நடக்கின்றன. பூசை என்ற சொல் தமிழில் இருந்து சமஸ்கிருதத்திற்கு சென்ற ஒரு சொல். பூ+செய் என்பதுதான் பூசை என்பதாகும். பூக்களை வைத்து வழிபடும் முறையை தமிழர்கள் ஆரியக் கலாச்சாரம் தமிழர்களிடை வர முன்னரே பின்பற்றினர். அதே போல் தூம வழிபாடு வாசனைப் புகை மூலம் வழிபடுதலும் தமிழர்களுடையதே. அதையே "ஹோமம்" என்று சொல்கிறார்கள். ஆரியர் வரமுன் தமிழர்கள் கோவில்களில் பூசாரியார் தான் சகலதும் செய்வார்.

ஆரியர் வருகைக்குப்பின்னர் பல மாற்றங்கள் நடந்தது. புதிய (அ)நீதிகள் உருவாக்கப்பட்டன. அந்த அநியாயத்திற்கு அவர்கள் கொடுத்த பெயர் மனு தர்ம சாஸ்திரம். "அவாள் சாஸ்த்திரங்கள்" சமஸ்கிருதத்தை "தேவ பாஷா" என்றும் மற்றவை "நீச்ச பாஷா" என்றும் கூறுகின்றன. "நீச்ச பாஷா"வினால் இறைவனை வழிபட்டால் தீட்டு உண்டாகி "லோகத்தில்" பெரும் அனர்த்தங்கள் நிகழும் என்கின்றனர்.

இதற்கு சில உதாரணங்கள் உண்டு:

1. தமிழில் கதைத்தால் தீட்டு.
இந்துக்களின் உயர் பீடங்களில் ஒன்றாகக் கருதப்படும் காஞ்சி காமகோடி பீடத்தில் நடந்தது இது. அங்கு வேலை செய்தவர் ஒருவர் அங்கு நடந்தவற்றை அம்பலப்படுத்தி வருகிறார். அவர் எழுதியது:
சில பக்தர்கள் சங்கராச்சாரியாரைப் பார்த்தே தீருவது, அருளாசி பெற்றே தீருவது என்ற முடிவில் காத்திருந்தார்கள். அவர்களில்... நாட்டுக்கோட்டை செட்டிநாட்டிலிருந்து வந்திருந்த அருணாசலம் என்ற பக்தர்... மகாபெரியவரை பார்த்து அவரிடம் அருள்மொழிகள் வாங்கிவிட்டுத்தான் போவது என்ற உறுதியோடு இருந்தார்.
அந்த நேரம் நானும் மடத்தில் இருந்ததால், அருணாசலத்திடம் சொன்னேன்... ‘இதோ பாரப்பா, இன்றைக்கு நீ மகாபெரியவரை பார்க்க முடியாது. நாளை வாயேன்..’ என்றேன்.

‘இல்லை சாமி இப்பவே அவரை பார்க்கணும்’ என்றார் பக்தர்.எங்கள் பேச்சுச் சத்தத்தை கேட்ட சிலர்... விஷயத்தை மகாபெரியவரிடம் சொல்ல அவர் என்னை உள்ளே அழைத்தார். போனேன். கேட்டார் சொன்னேன்.

  • ‘இதோ பாரும் தாத்தாச்சாரி... அவரை பாக்கறதுக்கு நேக்கு ஒண்ணுமில்லை. பாத்தால் ஏதாவது கேப்பார். பதிலுக்கு நான் தமிழ் பேசவேண்டிவரும். நோக்குதான் தெரியுமே. தமிழ் பேசினால் எனக்கு தீட்டு. மறுபடியும் ஸ்நானம் பண்ணணும். பூஜைக்கு நேரமாயிடுத்துல்யோ... அதனால் நான் மௌனம் அனுஷ்டிக்கிறேன்னு சொல்லி அனுப்ச்சிடுங்கோ...” என என்னோடு சமஸ்கிருத சம்பாஷணை நிகழ்த்தினார் மகாபெரியவர்.

நானும் வெளியே வந்தேன். சுவாமிகள் மௌனத்தில் இருக்கார். நாளைக்கு வாயேன்.. என்றேன்.( நன்றி: thathachariyar.blogspot.com) இங்கு கவனிக்க வேண்டியது: தமிழில் பேசுவதிலும் பார்க்கப் பொய் சொல்லலாம் என்பது சங்கராச்சாரியாரின் கொள்கை. பொய்பேசுவது ஐம் பெரும் பாவங்களில் ஒன்று அதிலும் பாவம் தமிழில் பேசுவதா?

2. தமிழில் பாடுவதற்கு எதிராக வழக்கு

தில்லை சிதம்பரத்தில் வள்ளலார் தனது அருட்பாக்களைப் பாடி வந்தார். அங்கு தமிழில் பாடுவது தில்லை வாழ் அந்தணர்களுக்குப் பிடிக்கவில்லை. அதற்கு எதிராக அவர்கள் தூண்டியது நாம் தமிழ் வளர்த்தார் எனக் கூறும் ஆறுமுக நாவலரை. ஆறுமுக நாவலரும் அருட்பாவை மருட்பா என வர்ணித்து அது சிதம்பரத்தில் பாடக் கூடாது என்று வழக்குத் தொடர்ந்தார். இதே பார்பனக் கும்பல் தமிழில் எழுதிய திருமுறைகளை சிதம்பரத்தில் பூட்டி வைத்து விட்டு அடம்பிடித்த கதையும் உண்டு.

3. தமிழிற்கு எதிராக தடை உத்தரவு
சிதம்பரம் கோவில் தீக்ஷிதர்கள் எனப்படும் பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. சிதம்பரம் கோவில் தீக்ஷிதர்கள் மீது இன்று பல்வேறு சர்ச்சைகள் நிலவுகின்றன. இந்நிலையில் மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தை சிதம்பரம் நடராஜர் கோவிலில் பாட ஆறுமுகச்சாமி புலவர் என்ற ஒதுவார் 2008இல் தீர்மானித்தார். ஆனால் இதை அனுமதிக்க மாட்டோம் என தீக்ஷிதர்கள் தெரிவித்தனர். மேலும் சிதம்பரம் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக தடை உத்தரவும் வாங்கினர். பின்னர் இது பெரிய கலவரத்தில் முடிந்ததையும். அரசு தமிழில் பாடலாம் என்று உத்தரவிட்டதையும் நாம் அறிவோம்.

பிராமணர்களைத் தவிர மற்றவர்கள் வேதம் ஓதக் கூடாதா?
கிருத்தவர்கள் யாவரும் பைபிள் படிப்பர். இசுலாமியர் யாவரும் குரான் படிப்பர். ஆனால் இந்துக்கள் எல்லாரும் வேதம் படிக்கலாம் என்று "அவாள் சாஸ்திரங்கள் கூறவில்லை. பிராமணர்கள் மட்டும்தான் வேதம் ஓதலாம் என்கிறார்கள். இந்த விதி இடையில் புகுத்தப் பட்ட விதி. வேதம் என்றவுடன் எமக்கு நினைவுக்கு வருபவர் வியாச முனிவர். இவர் வேதங்களை நான்காக வகுத்தவர். இவர் வேதம் படித்தார். வேதம் ஓதினார். ஆனால் இவர் பிராமணர் அல்ல. முதல் மரியாதை படத்தில் வந்த ராதா போல் ஆற்றின் ஒரு கரையில் இருப்பவர்களை தன் படகின் மூலம் மறுகரைக்கு அழைத்துச் செல்லும் தொழில் செய்து வந்த திருமணமாகாத மீனவப் பெண்ணான சத்தியவதிக்குப் பிறந்த வியாச முனிவர் பிராமணன் அல்லர்.

மந்திரங்கள் மொழிகளுக்கு அப்பால் பட்டவை
ஒம் என்னும் பிரணவ மந்திரம் எந்த மொழிக்கும் உரியதல்ல. இவ்வாறே மற்ற பீட மதிரங்களான விநாயகருக்குரிய கம், கலைமகளுக்குரிய எய்ங். திருமகளுக்குரிய சிறீம், துர்க்கைக்குரிய தும் போன்ற மதிரங்கள் ஒரு குறிப்பிட்ட அதிர்வலையை ஏற்படுத்தும் ஒலி வடிவங்கள். அந்த ஒலி வடிவங்கள் கொடுக்கும் அதிர்வுகள் வலுமிக்கவை; எமது உடலிலும் உள்ளத்திலும் மாற்றங்கள் செய்யக் கூடியவை என்று சொல்கிறார்கள். இந்த மந்திரங்கள் மிருகங்கள் எழுப்பும் ஓசைகளில் இருந்துதான கண்டுபிடித்தார்களாம்.

விதிகளை மாற்றுங்கள் அவாள் சாஸ்த்திரங்களைக் கொழுத்துங்கள்.
இலண்டனில் ஜீரீவி தொலைக்காட்சியில் தோன்றிய ஒரு பார்ப்பனர் சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட படியே தாங்கள் செய்ய முடியும் என்றார். அவர்களது மனு தர்ம சாஸ்திரம் சொல்கிறது ஒரு தந்தை தனது மகள் பூப்படைய முன்னர் திருமணம் செய்து வைக்க வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் அந்த தகப்பனுக்குத் தண்டனையாக அந்த மகள் திருமணமாகும் வரை தகப்பன் அவள் மாதவிலக்கை அருந்த வேண்டும். இந்த "சாஸ்திரத்தை" எவன் கடைப்பிடிக்கிறான்? கால்பந்தாட்டம் விளையாடுவதாயின் கையால் பந்தைத் தொடக்கூடாது என்ற விதியைக் கடைப்பிடிக்க வேண்டும். அதை மீற முடியாது. இல்லைக் கையால்தான் தொடுவேன் என்று அடம்பிடிப்பதாயின் அந்த விதியை மாற்ற வேண்டும். தமிழில் வழிபாடு செய்வதாயின் இந்த "சாஸ்த்திரங்களை" கொழுத்துங்கள். காஞ்சி மடத்தைப் பின்பற்றுவதா காஞ்சித் தலைவன் சொல்லைக் கேட்டு ஈரோட்டுப் பக்கம் திரும்புவதா?

விஞ்ஞானம்: மூன்று பெற்றோர்கள் பெறப்போகும் ஒரு குழந்தை.


பிரித்தானியாவின் நியூகாஸில் பல்கலைக்கழகம் ஒரு தந்தை இரு தாய்களுக்கு ஒரு குழந்தை பெறும் முறைமையைக் உருவாக்கியுள்ளது. சில பரம்பரைக் குறைபாடுகளுடன் பிள்ளைகள் பிறப்பதைத் தவிர்ப்பதற்கு இந்த Three Parent IVF எனப்படும் இம் முறைமை பெரிதும் உதவும் என்று பேராசிரியர் அலிஸன் மேர்டோக் நம்புகிறார்.

இப்படித்தான் செய்கிறார்கள்
குறைபாடு கொண்ட பரம்பரை அலகுள்ள தாயின்(பெண்-1) சூலை அவள் கணவனின் விந்துடன் இணைத்து முதலில் கருவை உருவாக்குகிறார்கள். அதிலுள்ள குறைபாடுள்ள DNAக்களை நீக்கி அதிலுள்ள பரம்பரை அலகுகளை ஆரோக்கியமான பரம்பரை அலகுள்ள இன்னோரு பெண்ணின்(பெண்-2) சூலுடன் இணைத்து இன்னொரு கரு உருவாக்கப்படும். பின்னர் புதிய கருவில் உள்ள பெண்-2இன் பரம்பரை அலகுகளை நீக்குகிறார்கள். இந்தக் கரு பெண்-1இன் கருப்பையில் செலுத்தப் படும். இதன் மூலம் பிறக்கும் குழந்தை பெண்-1இனதும் அவள் கணவனினதும் பரம்பரை அலகுகளையே கொண்டிருக்கும் ஆனால் பெண்-1இன் பரம்பரை நோயால பாதிக்கப்படமாட்டாது.

விஞ்ஞானிகளின் கருத்துப்படி தீராத நோய்கள் பரம்பரை பரம்பரையாகத் தொடர்வதை இந்த Three Parent IVF முறைமை தடுக்கும். அதிலும் முக்கியமாக மூளை, இருதயம், ஈரல் போன்றவற்றில் ஏற்படும் பரம்பரை நோய்களில் இருந்து பிள்ளைகள் விடுபடுவார்கள். பெற்றோர்களின் 98%மான DNAஐப் பிள்ளை கொண்டிருக்கும். பிள்ளையின் தோற்றம் குணம் போன்றவை பெற்றோரைப் போலவே இருக்கும்.

Three Parent IVFமுறைமைக்கு எதிர்ப்பும் உண்டு. மனித DNA எந்த மாற்றமும் செய்யக் கூடாது என்று வாதிடுபவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவின் நியூகாஸில் பல்கலைக்கழகம் Three Parent IVFமுறைமைக்கான அரச அங்கீகாரத்தைக் கோரி நிற்கிறது. அரச அங்கீகாரம் கிடைத்ததும் இது ஒரு ஆண்டுக்குள் நடைமுறைப்படுத்தப் படும்.

வாழ்க்கையே நீயும் ஒரு பெண் போலே


வரும்போது வேதனையுடன் வருவதால்
தேவைகளும் நச்சரிப்பும் நிறைந்திருப்பதால்
போகும் போது உயிரையே எடுத்துக் கொள்வதால்
வாழ்க்கையே நீயும் ஒரு பெண் போலே

வாழ்க்கை ஒரு கண்ணாடிக் கடை
காதல் ஒரு ஜல்லிக்கட்டுக் காளை

முகப்புத்தகம்
வீடிருக்கும் சாப்பாடிருக்காது
கணக்குண்டு பணமிருக்காது
சுவருண்டு முட்டிக்க முடியாது
காதலியுண்டு கட்டிக்க முடியாது
Statusஉண்டு செல்வாக்கிருக்காது

Thursday, 10 March 2011

நகைச்சுவைக் கதை: MohanMan Shitஉம் பக்சராஜனும்


பாதக நாட்டின் சுதந்திர தினம். அதற்கு தன்னையும் அழைக்க செங்கம்பளம் வரவேற்பளித்துக் கௌரவிக்க வேண்டும் அல்லது தனது நாட்டில் தமிழர்களை கொல்ல பாதக நாடு உதவியதை அம்பலப்படுத்துவேன் என்று ஒரு மல்லு ஆண்டி மூலமாக பக்சராஜன் பாதகநாட்டுப் பிரதமர் மோகன்மன்ஷிற்றுக்கு(MohanMan Shit) மிரட்டல் விடுத்தான். வேறு வழியில்லாமல் மோகன்மன்ஷிற் பக்சராஜனை வரவழைத்தான். படை அணிவகுப்பு ஆரம்பித்தது. பக்சராஜன் மோகன் மன்ஷிற்றுக்கு அருகில் நின்று அணிவகுப்பை ஏற்றுக் கொண்டான்.
முதலில் a battalion of tanks,
பின்னர் a division of infantry,
பின்னர் armored personnel carriers and mobile artillery
பின்னர் mobile ballistic missile launchers,
பின்னர் electronic jamming vehicles,
பின்னர் the most advanced interceptors,
பின்னர் fighters, and long-range tactical and strategic bombers

அதன் பின்னர் ஒரு 50 வயதானவர்கள் நடந்து வந்தனர்.
பக்சராஜன் வாயைப் பிளந்தபடி மோகன்மன்ஷிற்றைக் கேட்டான் யார் இந்த 50 கிழட்டுப் பயல்கள் என்று. இவர்கள் எமது நாட்டின் பொருளாதார ஆலோசகர்கள். இவர்கள் ஒரு நாட்டுக்கு விளைவிக்கும் அழிவைப் போல் இவர்களுக்கு முன்னால் போன எந்த ஒரு படைகளாலும் செய்ய முடியாது என்பதை நான் எமது பாதக நாட்டிற்கு இவர்கள் செய்த அழிவில் இருந்து அறிந்து இவர்களையும் எங்க நாட்டுப் படையில் சேர்த்துக் கொண்டேன் என்றான் மோகன்மன்ஷிற்

ஒரு தொழிற்சாலையில் அங்கு வேலை செய்யும் பெண்களுக்காக எழுதிவைக்கப்பட்ட அறிவித்தல்:
உங்கள் பாவாடைகள் அளவிற்கு அதிகமாக நீண்டிருந்தால் இங்குள்ள எந்திரங்களிடமிருந்து உங்களைப் பாது காத்துக் கொள்ளுங்கள். உங்கள் பாவாடைகள் அளவிற்கு அதிகமாக குட்டையாக இருந்தால் இங்குள்ள ஆண்களிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.


அவன் வழமையிலும் பார்க்க முந்தி வீடு வந்தான். தனது நண்பன் தன் மனைவியுடன் இருப்பதைப் பார்த்துவிட்டு ஆத்திரமடைந்து தன் நண்பனச் சுட்டுக் கொண்டு விட்டான். மனைவி சொன்னாள் இப்படியே போனால் கடைசியில் நண்பர் எவரும் இல்லாமல் தனித்து விடப்படுவாய்.

போக்குவரத்து காவல்துறையில் வேலை செய்யும் பெண்ணை(traffic police woman) திருமணம் செய்த நண்பனை அவர்களின் முதலிரவு எப்படி இருந்தது என்று கேட்டதற்கு அவர் கூறிய பதில் அளவிற்கு மிஞ்சிய வேகத்திற்காக(over speed) தண்டப் பணம் கட்டும் படி கேட்டாள்.

உலகப் பணக்காரர் பட்டியலில் பில் கேட் 2-ம் இடம் அம்பானி 9-ம் இடம்Forbes சஞ்சிகை உலகச் செல்வந்தர்கள் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. இதில் மெக்சிக்கோவைச் சேர்ந்த கார்லோஸ் சிலிம் ஹெலு இம்முறையும் முதலாம் இடத்தைப் பிடித்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு 74பில்லியன் அமெரிக்க டொலர்கள். சென்ற ஆண்டு இவரது சொத்து மதிப்பு 53.5பில்லியன் டொலர்கள். இதன்படி இவரது சொத்து 38% அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டு அதிக சொத்து சேர்த்தவரும் இவரே. பொருளாதாரப் பிரச்சனை உனக்கும் எனக்கும் தாண்டா தம்பி!!

Microsoft இன் பில் கேட்ஸ் தொடர்ந்தும் இரண்டாம் இடத்தில் இருக்கின்றார். இவரது சொத்து மதிப்பு 53பில்லியன் டொலர்களில் இருந்து 56 பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது.

முதல் பத்து செல்வந்தர்களி இருவர் இந்தியர்
BRIC நாடுகள் எனப்படும் சனத் தொகை மிகுந்த நாடுகளான பிரேசில், இரசியா, இந்தியா, சீன ஆகிய நாடுகளில் இருந்து பல செல்வந்தர்கள் உருவாகி வருகிறார்கள். ஆனால் முதல் பத்து செல்வந்தர்களில் சீனர் எவரும் இல்லை. இரண்டு இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். சென்ற ஆண்டு 25 பில்லியன் டொலர்களுடன் நாலாம் இடத்தில் இருந்த முகேஷ் அம்பானி இந்த ஆண்டு 23 பில்லியன்களுடன் 9-ம் இடத்திற்கு இறங்கியுள்ளார். சென்ற ஆண்டு 28 பில்லியன்களுடன் 5-ம் இடத்தில் இருந்த லக்ஷ்மி மிட்டல் இந்த ஆண்டு 31.1 பில்லியன்களுடன் 6-ம் இடத்தில் இருக்கிறார்.

பில்லியன் டொலர் சொத்துள்ளவர்கள்
பிராந்திய ரீதியில் ஐக்கிய அமெரிக்கா அதிக பில்லியன் டொலருக்கு மேல் சொத்துக் கொண்ட நாடாக இருக்கிறது.
ஐக்கிய அமெரிக்கா 413
மற்ற அமெரிக்கா 76
ஐரோப்பியா 300
ஆசிய பசுபிக் 332
ஆபிரிக்கா ம/கிழக்கு 89

அதிக செல்வந்தர்களைக் கொண்ட நகரமாக மொஸ்க்கோ திகழ்கிறது.
இரசியாவில் 101 பில்லியன் சொத்துக்கு மேல் உள்ளவர்கள் இருக்கிறார்கள். சினாவில் இத்தொகை 115.

Facebook நிறுவுனர் Mark Zuckerberg
Facebook நிறுவுனர்களில் ஒருவரான Mark Zuckerberg இந்த ஆண்டு பலரது கவனத்தை ஈர்த்துள்ளார். இவர் உலகப் பணக்காரர் பட்டியலில் 52-ம் இடத்தில் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு 13.5பில்லியன் அமெரிக்க டொலர்கள்.

Wednesday, 9 March 2011

பான் கீ மூனின் திருகு தாளத்தின் இரகசியத்தை அவரே அம்பலப் படுதினார்.


இலங்கையில் ஒரு நாளில் மட்டும் 25,000 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்ட போது அமைதியாக இருந்த ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலர் பான் கீ மூன் அவர்கள் சென்ற ஆண்டு ஜனவரி மாதத்தில் இலங்கைத் தேர்தலின் போது நான்கு சிங்களவர்கள் கொல்லப்பட்டபோது ஒப்பாரி வைத்தார்.

2009-ம் ஆண்டின் முற்பகுதியில் இலங்கையில் போர் நடந்து கொண்டிருக்கும் போது அங்கு சென்று பேச்சு வார்த்தை நடாத்தும் படி பலர் ஐக்கிய நாடுகளின் செயலர் பான் கீ மூனைக் கேட்டிருந்தனர். மூன்று இலட்சத்திற்கு மேற்பட்டோர் போர் முனையில் அகப்பட்டிருந்தபடியால பல பொது அமைப்புக்கள் இந்த வேண்டுகோளை பான் கீ மூனிடம் விடுத்தனர். அதை கவனத்தில் எடுக்காத பான் கீ மூன் பல கண்டனங்கள் ஊடகங்களால் தெரிவிக்கப் பட்டதை அடுத்து விஜய் நம்பியார் என்ற தமிழ் மக்களின் வில்லனை இலங்கைக்கு அனுப்பினார். அவர் அங்கு சென்று பின் இந்தியா சென்றார். அதன் பின்னர் ஐநா வந்த அவர் தனது அறிக்கையைப் பாதுகாப்புச் சபைக்கு சமர்ப்பிக்காமல் காலத்தை இழுத்தடித்தார். அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க பிரித்தானியா முற்பட்ட போது அவர் தமது அறிக்கையை ஐநா அதிபரிடம் சமர்ப்பித்தார். அந்த அறிக்கை பற்றி மூடப்பட்ட அறைக்குள் கலந்துரையாடப் பட்டது. இந்த இழுத்தடிப்புக்கள் யாவும் இலங்கைக்கு போரை முடிக்க வழங்கப்பட்ட அவகாசமாகும். போர் முடிந்த பின் இலங்கைக்கு சென்ற பான் கீ மூன் இலங்கைக் குடியரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில் உறுதியளிக்கப் பட்டவையை இலங்கை குடியரசுத் தலைவர் ஏன் நிறைவேற்றவில்லை என்ற கேள்வி ஐக்கிய நாடுகளின் செயலர் பான் கீ முனிடம் அதன் பின் பல தடவை எழுப்பப்பட்டு வருகிறது.
அந்த கூட்டறிக்கையின் படி இலங்கை அரசு:
  • போரினால் பாதிக்கப் பட்டவர்களை மீள் குடியேற்றுதல்.
  • சர்வ தேச நியமங்களுக்கு அமைய இலங்கையில் மனித உரிமைகளை மதித்து நடத்தல்.
  • இலங்கை வாழ் சகல சமூகங்களின் அபிலாசைகள் பிரச்சனைகளை அறிந்து அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுத்தல்.
  • இலங்கையின் நீண்டகால சமூக பொருளாதார வளர்ச்சிக்காக இனப்பிரச்சனைக்கு தீர்வுகாணுதல்.
  • இலங்கைக் குடியரசின் அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்தை நிறைவேற்றுதல். இதற்காக தமிழ் மக்களுடன் பரந்த அளவில் பேச்சு வார்த்தை நடாத்துதல்.
இந்தக் கூட்டறிக்கையில் சொல்லப்பட்டவை எதுவும் நிறைவேற்றப்படவில்லை. முகாம்களி இருந்தவர்களை மோசமான இடங்களில் வற்புறுத்தி இருக்கச் செய்துவிட்டு மீள் குடியேற்றப்பட்டனர் என்கின்றனர்.

இலங்கையின் போர்க் குற்றம் தொடர்பாக பான் கீ மூன் அமைத்த ஆலோசனைக் குழு இலங்கை செல்லுமா என்பது பற்றி முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களை அவர் வெளியிட்டார்.

இந்த பான் கீ மூன் ஏன் இப்படி நடக்கிறார்? ஏன் இத்தனை திருகு தாளம்? அவரது ஆலோசகர் ஒரு இந்தியர் என்பதாலா? அல்லது அவரது இளைய மகளின் கணவன் இந்தியாவின் "அமைதிப்படை" யில் இலங்கையில் செயற்பட்ட ஒரு படைத்துறை அதிகாரி என்பதாலா? இப்படிப் பல கேள்விகள் எம்மத்தியில் எழுந்தது. ஆனால் பான் கீ மூன் தனது திருகுதாளத்தின் காரணத்தை இப்போது அம்பலப்படுத்தியுள்ளார். அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் பிரபல வயலின் கலைஞர் எல். சுப்பிரமணியத்தின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றிய பான் கி மூன், "ராஜந்திரத்தைக் கற்றுக் கொண்டதும், இந்திய இசையை ரசித்ததும் டெல்லியில் தான்," என்றார். இப்போது தெரிகிறதா அவர் ஏன் இத்தனை திருகுதாளம் செய்கிறார் என்று!!!

Tuesday, 8 March 2011

துடுப்பாட்டப் பகிடிகள் - Cricket Jokes


கிரிக்கெட் ரசித்த அமெரிக்கர்
சென்னையில் நடந்த கிரிக்கெட் ஆட்டத்தை இரசிக்க அமெரிக்கத் துணைத் தூதுவரகத்தைத் சேர்ந்த ஒரு அதிகாரியை அழைத்தனர். அவருக்கு முன் பின் கிரிக்கெட் பற்றித் தெரியாது. அவரும் மிக விரும்பிப் போய் இருந்தார் பார்த்து ரசிப்பதற்கு. ஆட்டம் தொடங்கியது ஆறு பந்துகள் வீசப்பட்டன. நடுவர் அன்று வழமையிலும் பார்க்க சற்று உரத்து "OVER" என்று கத்தினார். அமெரிக்கர் நல்ல விளையாட்டுத்தான் ஆனால் இவ்வளவு விரைவாக முடியும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று சொல்லிவிட்டு எழுந்து சென்று விட்டார்.
மழை வருவிக்க செய்ய வேண்டியது
ஒரு ஆபிரிக்க நாட்டில் மழையின்றி பெரும் வரட்சி ஏற்பட்டது. உள்ளூரில் உள்ள சாமியார்களை வைத்து மழையை வரவழைக்க எல்லம் செய்து பார்த்தார்கள் சரிவரவில்லை. பலர் கூடி யோசித்துவிட்டு இங்கிலந்தில் மழைவரவழைக்கிறார்கள் என்பதைப் பற்றி அறிந்து கொள்ள உள்ளூர் சாமியார்களை இங்கிலாந்திற்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் அங்கு சென்று திரும்பி வந்து தங்கள் மன்னரிடம் மழை வரவழைக்க இங்கிலாந்தில் செய்வதை விபரித்தனர்:
ஒரு பசும்புல் உள்ள பெரிய மைதானத்தின் நடுவில் இடைவெளிவிட்டு ஆறு தடிகளை ஒரு புறம் மூன்று மறுபுறம் மூன்றாக நட்டு வைப்பார்கள். அந்தக் தடிகளுக்கு இடையில் இருவர் கையில் கட்டைகளுடன் நிற்பார்கள். அவர்களைச் சூழ 13 பேர் நிற்பார்கள். ஒருவர் ஒரு சிவந்த உருண்டையான பொருளை வீசுவார் அதை மூன்று கட்டைகளுக்கு முன் நிற்பவர் தன் கையில் இருக்கும் கட்டையால் அடிப்பார். வெளியில் அதைப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் கைதட்டி ஆர்ப்பரிப்பார்கள். உடனே மழை பெய்யும். நாமும் அப்படியே செய்வோம். (இலண்டனில் மழை எதிர்பாராமல் வந்து துடுப்பாட்ட விளையாட்டைக் குழப்புவதால் மனம் நொந்தவர் எழுதிய கதை இது)


செயலாளரின் படுக்கையில் ஆடிய கிரிக்கெட்.
அவர் ஒரு நிறுவனத்தின் அதிகாரி. அவருக்கு ஒரு அழகிய
பெண் செயலாளர் (secretary) சற்றுக் கொடூரமான மனைவி. அன்று அவரது பெண் செயலாளருக்கு அன்று பிறந்த நாள். அவர் ஒரு ஐ-பாட்-2 ஐ தனது பெண் செயலாளருக்கு பரிசாக வழங்கினார். பெண் செயலாளர் மனம் மகிழ்ந்து அவரைத் தனது வீட்டிற்கு இரவு விருந்திற்கு வரும்படி அழைத்தார். அவரும் சென்று நல்ல உணவருந்திப் பின்னர் படுக்கை அறையிலும் உல்லாசமாக இருந்தார். முடிவில்தான் நேரம் நல்லாகச் சென்று விட்டது என்பதை உணர்ந்தார். உடனே பெண் செயலாளர் ஐயோ உங்க மனைவி உங்களை இன்றைக்கு நன்றாக வறுத்தெடுத்து வாட்டி வாதைக்கப் போகிறாள் என்றாள். அவர் சற்று யோசித்துவிட்டு பெண் செயலாளரின் லிப்ஸ்டிக்கை எடுத்து தனது காற்சட்டையின் தொடையடியில் மூன்றுதடவை தடவினார். பின்னர் வெளியே வந்து தனது காலணியிலும் காற்சட்டைக் காலடியிலும் சேற்றை அள்ளிப் பூசினார். புல்லைப் பிடுங்கி தனது உடுப்புக்களில் ஆங்காங்கு தேய்த்தார். பின்னர் வீடு சென்றார். அவரது மனைவி வீட்டில் கதவைத் திறந்ததும். சாரி டியர்! எனது பெண் செயலாளரின் பிறந்த நால் இன்று அவள் வீடு சென்று அவளுடன ஜாலியாக இருந்து விட்டு வருகிறேன் என்றார். அவரை ஏற இறங்கப் பார்த்த மனைவி. மவனே, போர் கிரிக்கெட் ஆடிவிட்டு எனக்கே பொய் சொல்கிறாயா என்று அவரை ஒரு வாங்கு வாங்கிவிட்டு விட்டு விட்டிட்டார்.


Q:) How does a cricketer describe a nude woman?
A:) No cover, no extra cover, two silly points, two fine legs and a gully.


Who is a fielder?
One who miss catches and catches misses.

What is the difference between a fielder and a condom? The fielder drops a catch and the condom catches a drop.
APPEAL- A 250 decibel scream made to overcome the obvious congen-
ital deafness so common in the umpiring profession

அடுத்த வாரம் பூமிக்கு மிக நெருக்கமாக வரும் சந்திரன்-ஆபத்தானதா?


அடுத்த வாரம்(மார்ச் 19) சந்திரன் பூகிக்கு மிக அண்மையாக வருகிறது. சந்திரன் அப்போது பூமியில் இருந்து 354,507கி. மீ அல்லது 221,567மைல்கள் தொலைவில் இருக்கும். இதனால் பூமியில் சில அனர்த்தங்கள் ஏற்படலாம் என சில விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். இப்படி பூமிக்கு அண்மையாக சந்திரன் 1955, 1974, 1992, 2005 ஆகிய ஆண்டுகளில் வந்தது. 1974-ம் ஆண்டு பூமிக்கு மிக அண்மையில் சந்திரன் வந்தபோது டார்வின் எனப்பெயரிடப்பட்ட சூறாவளி அவுஸ்திரேலியாவைத் தாக்கியது. 2005இல் வந்தபோது சுனாமி ஏற்பட்டுப் பேரழிவு நிகழ்ந்தது என்று கூறி சில சோதிடர்கள் அபாயச் சங்கொலி ஊதுகின்றனர்.

சில விஞ்ஞானிகள் மேற்படி நிகழ்வுகள் சந்திரனுடன் தொடர்பற்றவை என்று சொல்கின்றனர். பூமியில் நடக்கும் எந்த ஒவ்வொரு நிகழ்வையும் வானில் உள்ள உடுக்கள், கிரகங்கள், உபகிரகங்களின் நிலைகளுடன் சம்பந்தப்படுத்தலாம் ஆனால் அவற்றிற்கிடையில் எந்த விஞ்ஞான பூர்வ தொடர்பும் கிடையாது என்கின்றனர். பூமிக்கு மிக அண்மையில் சந்திரன் வரும்போது வழமைக்கு மாறானசில கடற்பெருக்கு ஏற்படலாம் என்கின்றனர் அவர்கள். மற்றும் படி அழிவு ஏற்படும் என்பதை அந்த விஞ்ஞானிகள் மறுக்கின்றனர்.

நம்ம சோதிடர்கள் நடந்ததின் பின்னர் தங்கள் வசதிக்கு ஏற்ப அதற்கான விளக்கம் தருவார்கள் எதையாவது சம்பந்தப்படுத்தி.

அசிங்கத்தில் மாட்டுப்பட்ட பிரித்தானியக் இள(கிழ)வரசர்


ஐம்பது வயதான பிரித்தானிய இளவரசர் அண்ரூ பிரித்தானிய அரசின் சம்பளம் வாங்காத வர்த்தகத் தூதுவராக கடமையாற்றுகிறார். பிரித்தானியாவின் வெளிநாட்டு வர்த்தகத்தை வளர்ப்பது அவரது பணி. சம்பளம் வாங்குவதில்லை என்ற பெயர்தான் ஆனால் ஆண்டொன்றுக்கு அவரது ஆடம்பரப் போக்குவரத்து மற்றும் தங்குமிடச் செலவுகள் மில்லியன் பவுண்களை எட்டும். இவர் தனது விமானப் பயணங்களுக்கு பெருந்தொகைப் பணத்தை அரசிடம் இருந்து கறப்பதால் இவர் Air miles Andy என்று கிண்டல் செய்யப்படுவார்.

வர்த்தகத் தூதுவர் பணியை அண்ரூ ஆற்றும் போதுபல வெளிநாட்டு வர்த்தகப் பிரமுகர்களைச் சந்திப்பது வழக்கம். இவர் 2001இல் அமெரிக்க வர்த்தகரான ஜெப்ரி எப்ஷ்ரீன் என்பவரைச் சந்தித்ததும் அவரது "விருந்தோம்பலை" அனுபவித்ததும் இளவரசர் அண்ரூவை வில்லங்கத்தில் மாட்டியுள்ளது. விருந்தோம்பலில் ஒரு பகுதியாக 17வயது அழகி வெர்ஜீனியா ரொபெர்ட்ஸ் இடம் பெற்றார். ஜெப்ரி எப்ஷ்ரீன் தனது விருந்தாகிய 17வயது அழகி வெர்ஜீனியா ரொபெர்ட்ஸ்ஐ ஒரு பாலியல் தொழிலாளியாக பயிற்றுவித்திருந்தாராம். விருந்தோம்பிய ஜெப்ரி எப்ஷ்ரீன்ஏற்கனவே சிறுவர் பாலியல் குற்றதிற்காக தண்டிக்கப்பட்டு சிறை சென்றவர். ஓர் இரவு அண்ரூவை வெர்ஜீனியா சந்தித்தார். மறு நாள் காலை ஜெப்ரி எப்ஷ்ரீன் வெர்ஜீனியாஐச் சந்தித்து நீ இரவு சிறப்பாகச் செயற்பட்டாய் என்று கூறிப் பெரும்தொகைப்பணத்தையும் வழங்கினாராம். இது தொடர்பாக அமெரிக்க FBI விசாரணையை ஆரம்பித்துள்ளது. இதைத் தொடர்ந்து அண்ரூவைப்பற்றி காரசாரமான விவாதங்கள் எழத் தொடங்கின.

FBIயின் விசாரணையில் ஜெப்ரி எப்ஷ்ரீனின் பணிப்பெண்கள் இருவர் அண்ரூ வயது குறைந்த பெண்களுடன் உடலுறவு கொண்டுள்ளதை மறுப்பதை நிராகரித்துவிட்டனர். FBIயின் விசாரணைக்கு எதிராக அண்ரூ அரசதந்திரப்பாதுகாப்புக்(diplomatic immunity) கோருவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஜெப்ரி எப்ஷ்ரீன் அண்ரூவின் முன்னாள் மனைவி சேராவின் கடன் ஒன்றை செலுத்தியதாகவும் செய்திகள் வெளிவந்தன

2007இல் அண்ரூ தனது மாளிகையை உண்மையான பெறுமதியிலும்பார்க்க மூன்று மில்லியன் பவுண்கள் கூடுதலாக விற்றது பல சந்தேகங்களைக் கிளப்பியது.

இளவரசர் அண்ரூ லிபியத் தலைவர் மும்மர் கடாபியுடனும் அவரது மகன் சய்f கடாபியுடனும் தொடர்புகளை வைத்திருந்தார். லிபிய அரச செலவில் உல்லாசப் பயணங்களையும் மேற்கொண்டார்.

பதவியில் இருந்து விரட்டப்பட்ட துனீசிய அதிபர் மகன் மருமகன்களுடன் அண்ரூ தொடர்புகளை வைத்திருந்தார். மருமகனுக்கு பக்கிங்காம் அரண்மனையில் விருந்தும் வழங்கப்பட்டது.

இளவரசர் அண்ரூவின் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களால் சில மத்திய கிழக்கு நாடுகளில் கோமாளி இளவரசர் என்று பல அரச தந்திரிகள் இவரைக் கிண்டலடிப்பதும் உண்டு.

இவை போதாது என்று அண்ரூவின் மகள் பீர்ரீஸ் இலண்டனில் உள்ள ஒரு மட்டரகமான போதைப்பொருள்கள் புளக்கத்தில் உள்ள கேளிக்கை விடுதிக்குச் சென்றதாகச் செய்திகள் அடிபடுகின்றன


கேளிக்கை விடுதியால் வரும் அண்ரூவின் மகள். கண்ணில் என்ன கார்காலம்?

Sunday, 6 March 2011

நகைச்சுவைக்கதை: மெரீனா கடற்கரையில் நாய்மீது விடுதலைப் புலி தாக்குதல்


காலை நேரம். சென்னை மெரீனா கடற்கரையில் பலர் நடந்து கொண்டிருந்தனர். அதில் ஒருவர் ஒரு பெரிய பயங்கரத் தோற்றமுடைய நாயுடன் நடந்து கொண்டிருந்தார். அந்த நாய் திடீரென்று வெறிபிடித்து அங்கு நடந்து கொண்டிருந்த ஒரு சிறுமி மீது பாய்ந்தது. அந்தச் சிறுமி அலற அங்கு நடந்து கொண்டிருந்த ஒரு இளைஞன் அந்த நாயுடன் நீண்ட நேரம் போராடி அந்தச் சிறுமியைக் காப்பாற்றினான்.

அப்போது அங்கு நடந்து கொண்டிருந்த குந்து பத்திரிகையின் ஆசிரியர் சிங்களரத்தினா சொறிநாய்ராம் அதைப்பார்த்து வியந்து அந்த இளைஞனிடம் சென்று அம்பி உன்னைப் பாராட்டுகிறேன்டா நீ ஷேமமாய் இருப்பாய்டா. நாளை எனது குந்துப் பத்திரிகையில் உனது படமும் பெயரும் பெரிதாக வரவேண்டும். "சிறுமியை உயிரைக் கொடுத்துக் காப்பாற்றிய சென்னையச் சேர்ந்த இளைஞன்" என்ற தலைப்பில் செய்திவரும் என்றார். அதற்க்கு அந்த இளைஞன் நான் சென்னையைச் சேர்ந்தவன் அல்ல என்றான். அதற்கு சிங்களரத்தினா சொறிநாய்ராம் அப்படியாயின் "சிறுமியை உயிரைக் கொடுத்துக் காப்பாற்றிய தமிழ்நாட்டு இளைஞன்" என்று செய்திவரும் என்றார். அதற்கு அந்த இளைஞன் நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் அல்ல என்றான். ஓ அப்படியா! "சிறுமியை உயிரைக் கொடுத்துக் காப்பாற்றிய இந்திய இளைஞன்" என்று செய்தி வரும் எனது குந்துப் பத்திரிகையில் என்றார் சிங்களரத்தினா சொறிநாய்ராம். இப்போது அந்த இளைஞன் நான் இந்தியன் அல்ல என்றான். அந்த இளைஞனை இப்போது சிங்களரத்தினா ஏற இறங்கப் பார்த்து அப்போ நீ எந்த நாடடா அம்பி என்றார். அதற்கு அந்த இளைஞன் நான் ஈழத்தைச் சார்ந்தவன் என்றான். இப்போது குந்து பத்திரிகையின் ஆசிரியர் சிங்களரத்தினா சொறிநாய்ராம் இரண்டு மீட்டர் பின்னால் நகர்ந்து நின்று கொண்டு தலையில் அடித்துக் கொண்டு அந்த இளைஞனை ஏற இறங்கப் பார்த்து விட்டுப் பின்னர் அவ்விடத்தில் இருந்து நழுவி விட்டார்.

அடுத்த நாள் குந்துப் பத்திரிகையில் வந்த செய்தித் தலையங்கம்: "மெரீனா கடற்கரையில் அப்பாவி நாய்மீது வெறி கொண்டு பாய்ந்து தாக்கிய விடுதலைப்புலிப் பயங்கரவாதி".

இந்தச் செய்தியை திரித்து வெளியிட்ட்மைக்காக கொழும்பில் இருந்து குந்துப் பத்திரிகை ஆசிரியருக்கு வழமையாக அனுப்பும் பணத்திலும் பார்க்க மேலும் ஒருஇலட்சம் சேர்த்து அனுப்பப்பட்டது.

இலங்கையில் போர்க்குற்றமும் அதிகாரப்பரவலாக்கமும்.


சர்வதேச மன்னிப்புச் சபை, பன்னாட்டு நெருக்கடிக் குழு, ஐநா மனித உரிமைக் கழகம் ஆகியன இலங்கையில் போர்க்குற்றம் நடந்ததாக குற்றம் சாட்டுகின்றன. வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் பலர் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக போர்க்குற்றம் நடந்ததாக கூறுகின்றனர். இதற்கென வெளிநாடுகளில் வாழும் தமிழர்களால் அமைக்கப்பட்ட இனக்கொலைக்கு எதிரான தமிழர் அமைப்பு இலங்கை அரசின் போர்க்குற்றம் தொடர்பான பல ஆதாரங்கள் பல இருப்பதாகக் கூறுகிறது. பிரித்தானிய சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட போர்க்குற்றம் தொடர்பான காட்சிப்பதிவுகள் போர்க்குற்றச் சாட்டி இலங்கையை சட்டத்தின் முன் நிறுத்த போதுமான ஆதாரங்கள் என்று பிரபல போர்க்குற்ற சட்டவாளரான பிரபல சட்டத்துறை நிறுவனமான Matrix Chambers ஐச் சேர்ந்த Julian Knowles என்பவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொல்லப்பட்டவர்கள் 300,000இற்கும் அதிகம்

இலங்கையின் ஆறு முக்கிய ஊடக அமைப்புகள் மேற்கொண்ட சுயாதீன ஆய்வின் போது இறுதிக்கட்ட யுத்தத்தில் எண்பதினாயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டதாக ஆதாரபூர்வமான தகவல்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதற்கு மேலதிகமாக யுத்தத்தின் காரணமாக இருபத்தி ஏழாயிரம் பிள்ளைகள் தமது பெற்றோர் இருவரையும் இழந்து வாழ்வதாகவும் புள்ளி விபரங்கள் வெளிவந்துள்ளன. இலங்கையில் மொத்தமாகக் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்கள் மூன்று இலட்சத்திற்கும் அதிகம்.


பலதரப்பிலும் இலங்கைப் போர்க்குற்றத்தில் ஆர்வம்
இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பாக பல மனித உரிமை அமைப்புக்களும் தொண்டர் அமைப்புக்களும் கருத்துத் தெரிவித்துள்ளன. இதில் சர்வதேச மன்னிப்புச் சபை, பன்னாட்டு நெருக்கடிக் குழு, ஐநா மனித உரிமைக் கழகம் ஆகியன இவற்றில் முக்கியமானவ. சுயாதீன சர்வதேச விசாரணை ஒன்றுக்கு இலங்கை முகங்கொடுக்க வேண்டிய ஆபத்திருக்கின்றது என்று தெரிவித்தார் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்கச் செயலர் ரெபேர்ட் ஓ பிளேக். இலங்கைப் போர்க்குற்றம் தொடர்பான விசாரணை தேவை எனஅமெரிக்க செனட் சபையில் தீமானம் நிறைவேற்றப்பட்டது. பிரித்தானியப் பிரதமர் இலங்கைப் போர்க்குற்றம் தொடர்பாக சுயாதீன விசாரணை தேவை என்று கருத்துத் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பாக ஒரு விசாரணை தேவை என்னும் தீர்மானம் விரைவில் நிறைவேற்றப்படலாம்.

தமிழ் அரசியல்வாதிகள் மட்டும் போர்க்குற்றம் தொடர்பாக மௌனமாய் இருக்கிறார்கள். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றம் தொடர்பாக பன்னாட்டு மட்டத்தில் கதைபட்டுக்கொண்டிருக்கும் வேளையில் இலங்கையில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் எவரும் இது தொடர்பாக மௌனமாகவே இருக்கிறார்கள். இலங்கையில் தமிழ் அரசியல்வாதிகள் சுதந்திரமாகக் கருத்துக்கள் வெளியிடவோ அல்லது செயற்படவோ முடியாது. அப்படிச் செய்பவர்களுக்கு என்ன நடக்கும் என்பதற்கு படுகொலை செய்யப்பட்ட குமார் பொன்னம்பலம், ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ் போன்ற நாடாளமன்ற உறுப்பினர்களுக்கு நடந்தவை நல்ல உதாரணம். இப்போது இலங்கையில் இருக்கும் தமிழ் அரசியல்வாதிகளில் பெரும்பாலோனோர் இலங்கை அரசு அல்லது இந்திய அரசுகளின் தயவில்தான் இருக்கின்றனர். இந்த இரு நாடுகளின் விருப்பத்திற்கு மாறாக செயற்பட்டால் அவர்களுக்கு என்ன நடக்கும் என்று அவர்களுக்கு நன்கு தெரியும். இந்த இரு நாடுகளின் கட்டளைகளுக்குப் பணிந்தே இவர்கள் போர்க்குற்றம் தொடர்பாக மௌனமாக இருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் சபை அமைத்த போர்க்குற்றம் தொடர்பான ஆலோசனைக் குழுவை தமிழத் தேசியக் கூட்டமைப்பு தொடர்பு கொண்டாதாகத் தகவல் இல்லை.போர்க்குற்றம் தொடர்பாக இந்த இரு நாடுகளும் என்ன நிலையில் இருக்கின்றன எனபதை இங்கு சொடுக்கி அறியலாம்: இலங்கைப் போர்க்குற்றத்தில் இந்தியாவின் பங்கு.

விக்கிலீக் வெளியிட்ட தகவல்களின்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போர்க்குற்றம் தொடர்பாக அக்கறை இன்றி இருப்பதாகவே தெரிகிறது. இலங்கையில் இருந்து வரும் செய்திகளின்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு அதிகாரப் பரவலாக்கம் இலங்கையில் ஏற்படுத்துவதற்காக இலங்கை அரசிற்கு எதிரான் போர்க்குற்றத் கைவிட்டு விட்டதாகத் தெரிகிறது.

போர்க்குற்றம் மீண்டும் நடக்காமல் இருப்பதை தமிழர்கள் உறுதி செய்ய வேண்டும்.
இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்தவேளை பிரபாகரனை தந்திரமாக பேச்சு வார்த்தைக்கு அழைத்து அவரை கொன்றுவிடும்படி ராஜிவ் காந்தி 1987இல் உத்தரவிட்டார். அதை இந்திய அமைதிப்படைத் தளபதி ஒரு போர்க்குற்றம் என்று மறுத்துவிட்டார். அவர் ஏற்கனவே வேறு போர்களில் நடந்தவற்றை உதாரணமாக வைத்தே இதற்கு மறுத்தார். இலங்கையில் மீண்டும் போர்க்குற்றம் நடக்காமல் இருக்க இப்போது உள்ள போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும். எமது எதிர்காலச் சந்ததியினரை பாதுகாக்க நாம் ஒவ்வொருவரும் செய்யவேண்டிய கடமை இது. இப்போது பன்னாட்டு மட்டத்தில் போர்க்குற்றம் தொடர்பாக எழும் சாதகமான சூழ்நிலையை நாம் பயன்படுத்தி பாக்குநீரிணையின் இருபுறமும் உள்ள போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும்.

அதிகாரப்பரவலாக்கம்.
இலங்கையில் தமிழர்கள் பல வாக்குறுதிகளை சிங்களத் தலைவர்களிடம் இருந்து பல சந்தர்ப்பங்களில் பெற்று அதற்காக பல விட்டுக் கொடுப்புக்களைச் செய்தனர். ஆனால் சிங்களத் தலைவர்கள் எந்த ஒரு கட்டத்திலும் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதிகாரப்பரவலாக்கத்திற்காக போர்க்குற்றத்தை விட்டுக் கொடுப்பதும் ஒரு முட்டாள்த்தனமான நடவடிக்கையே. முதலில் இலங்கைப் பாராளமன்றில் அதிகாரப் பரவலாக்கம் நிறைவேற்றப்படவேண்டும், பின்னர் அது நிறைவேற்றப்படவேண்டும். இப்போது போர்க்குற்ற குற்றச் சாட்டைக் கைவிட்டுவிட்டு ஒரு அதிகாரப் பரவலாக சட்ட மூலத்தை இலங்கைப் பாராளமன்றத்தில் நிறைவேற்றலாம். பின்னர் அது நிறைவேற்றப்ப்டாமல் போகலாம். அல்லது பின்னர் வேறு ஒரு அரசு பதவிக்கு வந்து அந்த அதிகாரப் பரவலாக்கத்தையே இல்லாமல் செய்யலாம். அரசியல் முட்டாள் ராஜிவ் காந்தி எமக்குக் கொடுத்த இலங்கை அரசியல் அமைப்பின் 13வது திருத்தத்திற்கு என்ன நடந்தது என்பதை நாம் நன்கு அறிவோம்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...