Saturday, 5 March 2011

இலங்கையின் போர்க்குற்றத்தில் இந்தியாவின் பங்கு - வீ எஸ் சுப்பிரமணியம்

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலர் பான் கீ மூன் அமைத்த ஆலோசனைக்குழுவின் செயற்பாடுகளை இலங்கைக்கு சாதகமாக திருப்ப பான் கீ மூனின் உதவியாளரான விஜய் நம்பியார் செயற்படுவதாக பிரபல அரசியல் விமர்சகர் திரு வீ எஸ் சுப்பிரமணியம் குற்றம் சாட்டியுள்ளார். "ஐநாவின் பானிற்கான சவால்: போர்க்குற்ற விசாரணையை முறியடிக்க இந்தியாவின் சதி" என்ற தலைப்பில் திரு வீ எஸ் சுப்பிரமணியம் எழுதிய கட்டுரையில் இந்தியாவைப்பற்றிய பல உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளார். எம் கே நாராயணனுக்குப் புதிய பட்டம் இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஆலோசகர் எம் கே நாராயணனை தனது கட்டுரை முழுக்க திரு வீ எஸ் சுப்பிரமணியம் அவர்கள் முள்ளிவாய்க்கால் நாராயணன் என்றே குறிப்பிட்டுள்ளார். கொலைக்குழு Ground Reportஇல் வீ எஸ் சுப்பிரமணியம் எழுதிய கட்டுரையில் கோத்தபாய ராஜபக்ச, சிவ் சங்கர மேனன், எம். கே. நாராயணன், விஜய் நம்பியார் ஆகியோர் 2009இல் நடந்த போரில் இணைந்து செயற்பட்டதாக தெரிவிக்கிறார். வில்லங்கமான வில்லன் விஜய் நம்பியார் விஜய் நம்பியார் டில்லி தென்மண்டலத்தின் (Delhi’s South Block) ஒரு முகவராக செயற்படுகிறார் என்றும் கட்டுரையில் குறிபிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல விஜய் நம்பியார் இலங்கைக்கு ஐநாவின் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான ஆலோசனைக் குழுவை எப்படி தவிர்ப்பது என்பது பற்றி ஆலோசனை வழங்கும் சாத்தியமும் உண்டு என்றும் சுப்பிரமணியம் தெரிவிக்கிறார். பிரபாகரனைக் கொல்ல உத்தரவிட்ட ராஜீவ் காந்தி இந்திய "அமைதிப்படை" இலங்கையில் இருந்த வேளை ராஜீவ் காந்தி (எனப்படும் ராஜீவ் கான்) பிரபாகரனைக் பேச்சு வார்த்தைக்கு வரும்படி அழைத்துக் கொல்ல உத்தரவிட்டதையும் அதை அமைதிப்படைக்குப் பொறுப்பாக இருந்த ஹரிக்கிரத் மறுத்ததையும் கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சோனியாவின் பழிவாங்கல் சோனியாவின் பழிவாங்கல் விடுதலைப்புலிகளை அழிப்பதற்க்கு மேலாக தமிழர் போராட்டத்தை ஒழிப்பது வரை சென்றது என்கிறார் கட்டுரையாளர் டில்லிப் பேராசிரியர் பிரம்மா செல்லனியை மேற்கோள் காட்டி. பன்னாட்டு நீதி விசாரணை தேவை கோத்தபாய ராஜபக்ச, சிவ் சங்கர மேனன், எம். கே. நாராயணன், விஜய் நம்பியார் ஆகியோர் அடங்கிய குழு 2009இல் நடந்த கொலைகளில் எப்படிச் சம்பந்தப்பட்டன என்பதை ஒரு பன்னாட்டு நீதி மன்ற விசாரணையால் மட்டுமே கண்டறிய முடியுமென்று தெரிவிக்கின்றார் சுப்பிரமணியம். 2G அலைக்கற்றை ஊழலும் அடங்கிய திமுகவும் 2007இற்குப் பிறகு 2G அலைக்கற்றை ஊழலை வைத்து காங்கிரஸ் திமுகவை மிரட்டிப் பணிய வைத்துவிட்டதாம். பிரணாப் முகர்ஜீ கருணாநிதியைச் சந்தித்து மிரட்டி தமிழ்நாட்டில் எழும் தமிழர்களுக்கு ஆதரவான செயற்பாடுகளை அடக்கும்படி கட்டளையிட்டாராம். (இப்போது தெரிகிறதா கலைஞர் ஆ ஊ என்றால் சீமானை ஏன் கைது செய்தார் என்று? இப்போது தெரிகிறதா கலைஞர் யாரை ஏன் சொக்கத் தங்கம் என்றார் என்று? ஏன் பாரதிராஜாவின் பணிமனை உடைபட்டது என்று? )இந்தச் சந்தர்ப்பத்தை சோனியா திமுக மீது தமிழர் நலன்பேணும் என்ற நம்பிக்கையைத் தகர்க்க சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். (ஐயா தந்தை பெரியார் அவர்களே உங்கள் வாரிசுகளின் சுயமரியாதை என்னாச்சு?)
 • Thus the TN protests that gathered momentum in 2008 quietened. M’kal Narayanan also visited Chennai frequently to make clear to TN CM that Delhi’s pro SL stance even after the Mullivaykal massacres required the TN CM to keep Tamil sentiments calm even though Delhi diplomatically worked to stall the international UNHRC war crimes initiatives in May 2009. M’kal Narayanan and other South Block accomplices have a vested interest in stalling all war crimes initiatives.
2008இற்குப்பிறகு தமிழ்நாட்டு எதிர்ப்பு அடக்கப்பட்டுவிட்டது. முள்ளிவாய்க்கால் நாராயணன் அடிக்கடி சென்னை வந்து முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பிறகும் டில்லியின் சிங்கள் ஆதரவு நிலைப்பாடுடுக்கு எதிராக கிளம்பும் தமிழ்நாட்டுத் தமிழர் உணர்வுகளை அடக்கி வைக்குப் படி பணிப்பார். போர்குற்றத்தில் தமக்கும் பங்கிருப்பதால் நாராயணன் போர்க்குற்ற விசாரணை முடக்க முற்பட்டார். போர்க்குற்றத்தில் நம்பியாரும் பங்காளி வீ எஸ் சுப்பிரமணியம் அவர்களின் முக்கிய பந்திகளில் ஒன்று:
 • Nambiar’s coziness with the Rajapakses resulted in his May 2009 involvement in the plot that led to the massacre of the ‘white flag’ waving resistance leaders - a war crime. The Rajapakses expectation that Nambiar’s membership in the Delhi South Block partnership in SL crimes will give them the leverage to extricate him and his partners from those crimes working from within the UN establishment. SL sees merits in dragging Delhi in, to share culpability for those crimes committed in SL. The Rajapakses expect overt assistance from Nambiar here.
இலங்கையில் நடந்த போர்க்குற்றத்தில் நம்பியாருக்கும் பங்கிருப்பதால் அவர் அது தொடர்பான மூடிமறைப்பு வேலைகளில் பங்கு பற்றியே ஆக வேண்டும். கோத்தபாயவின் பொறிக்குள் இந்தியா வீ எஸ் சுப்பிரமணியம் இத்துடன் நிற்கவில்லை எம் கே நாராயணன் இலங்கைப் போரில் இலங்கையோடு இணைந்து செயற்பட்டபடியால் கோத்தபாய ராஜபக்சவின் பொறிக்குள் இந்தியா அகப்பட்டுள்ளது என்கிறார். இலங்கையில் நடந்த போர்க்குற்றத்தில் இந்தியாவின் சம்பந்தம் தொடர்ப்பன பதிவுகளை கோத்தபாய ராஜபக்ச வைத்துக் கொண்டு அவர் இந்தியாவை மிரட்டுகிறார் என்று கூறப்படுகிறது. இலங்கையின் பணயக் கைதிகளாக நாராயணனும் நம்பியாரும். M’kal Narayanan was similarly entrapped by the Rajapakses in the M’kal massacres with Gothabhaya Rajapakse making explicit his ‘in the loop’ involvement charge. This explains Delhi over appeasing Colombo, post resistance. M’kal Narayanan was acting on the specific orders of his Delhi bosses (Sonia faction in the ruling Congress) for which he used his frequent visits to Colombo in early 2009 for the ‘in the loop’ sessions with the Rajapakses. It is not just coincidence that Nambiar joined M’kal Narayanan for the May 2009 ‘in the loop’ sessions that resulted not only in the white flag massacres but the equally severe Mullivaykkal massacres. By these acts M’kal Naraynan and Nambiar became hostages to the Rajapakse blackmail. கொழும்பில் நிருபாமா பல்லை இளிப்பது ஏன்? போர்க்குற்றத்தில் நாராயணனையும் நம்பிராரையும் சம்பந்தப்படுத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாகவே இலங்கையைத் திருப்திப்படுத்தும் வகையில் இந்தியா போருக்குப் பின்னர் நடந்து கொள்கிறதா? இப்போது தெரிகிறது படங்களில் நிருபாம ராவ் ஏன் ராஜபக்சமுன் பல்லை இளித்துக் கொண்டு நிற்கிறார் என்று. 2009இல் நடந்த லோக் சபா தேர்தலுக்கு முன் இலங்கைப் போரை முடிக்க வேண்டும் என்று டில்லி அவசரப்பட்டதாம். அதற்கான அழுத்தம் இலங்கைமீது இந்தியாவால் கொடுக்கப்பட்டதாம். அதற்காக இலங்கை பல நடவடிக்கைகளை மேற் கொண்டது. அவை போர்க்குற்றங்களாக கருதப்படக்கூடியவையாம். இலங்கை மீது வரும் போர்க்குற்றச் சாடுக்களை இந்தியா தடுத்தே ஆகவேண்டுமாம். அல்லது இந்தியாவும் போர்க்குற்றத்தில் சம்பத்தப்படுத்தப் படலாமாம். இந்த மாதிரிப் போகிறது கதை. தப்பித் தவறி தேர்தலில் தோல்வியடைந்தால் ராஜீவ் கான் குடும்பத்தின் பாது காப்பு எப்படியாகும் என்ற அச்சமோ? போரின் இறுதிக்கட்டத்தில் பெரிய மனித அழிவு நிகழ்வதைத் தடுக்க விஜய் நம்பியாரை இலங்கை அனுப்பினார். அவர் சந்தித்தது தனது சகோதரரும் இலங்கையின் படைத்துறைக் கூலி ஆலோசகருமான சதீஸ் நம்பியார், கோத்தபாய, நாராயணன், சிவ்சங்கர மேனன் ஆகியோரச் சந்தித்தமையையும் வீ எஸ் சுப்பிரமணியம் தனது கட்டுரையில் தெரிவிக்கிறார். எஸ் சுப்பிரமணியம் அவர்களின் கட்டுரையின் மிக முக்கியமான வாசகம்: sufficient details are out in the open now that Delhi knowingly partnered in the SL genocide and the massacres. இலங்கை இனக்கொலையிலும் படுகொலைகளிலும் இந்தியா தெரிந்து கொண்டே பங்குபற்றியதுபற்றிய போதிய விபரங்கள் வெளிவந்துள்ளன. பின்குறிப்புக்கள்:
 1. பான் கீ மூன் ஒரு நேர்மையற்றவர்; இலங்கை அரசுக்குச் சார்பாக நடப்பவர் என்ற உண்மைகளை கட்டுரையாளர் கருத்தில் கொள்ளவில்லையா?
 2. இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக பல ஊடகங்கள் செயற்படும் வேளையில் தமிழர்களுக்கு இந்தியா இழைத்த அநீதிகளை தொடர்ந்து அம்பலப்படுத்தும் திரு. வீ எஸ் சுப்பிரமணியம் பெரிதும் பாராட்டப்பட வேண்டியவர்.

Friday, 4 March 2011

கடாபியுடனான தொடர்பால் தலை கவிழ்ந்த இலண்டன் பல்கலைக் கழகம்.


எகிப்தின் முன்னாள் அதிபர்கள் அன்வர் சதாத்தும் ஹொஸ்னி முபராக்கும் மேற்கத்திய சார்பானவர்களாக மாற்றப்பட்டவர்கள். அன்வர் சதாத் துரோகி எனக் குற்றம் சாட்டப்பட்டு தீவிரவாதிகளால் கொல்லப்பட்டவர். இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரித்த ஒரே ஒரு அரவு நாடு எகிப்துத்தான். எகிப்த்து ஒரு மேற்குலக சார்பு நாடாக இருப்பதை உறுதி செய்ய எகிப்தியப் படைவீரர்கள் பலருக்கு அமெரிக்காவில் பயிற்ச்சி அளிக்கப்பட்டது.

லிபியத் தலைவர் கடாபியை ஒரு மேற்கத்திய சார்பாளராக மாற்ற பல சதிகள் திரை மறைவில் நடந்தன. கடாபி வித்தியாசமான பேர்வழி தனது படைவீரர்களுக்கு அவர் பயிற்ச்சி அளிப்பது குறைவு. தன்னையே கவிழ்த்து விடுவார்கள் என்ற அச்சம். இதற்காக அவர் மேற்குலகம் அவரை இந்தப்பாணியில் அணுகிய போது அவர் வேறு விதமாக செயற்பட்டார். தனது மகன் சயிf அல் இஸ்லாமிற்கு London School of Economics கல்வி பயில ஏற்பாடு செய்தார். சயிf கடாபி London School of Economicsஇல் "பயின்று" கலாநிதிப்பட்டமும் பெற்றார். சயிf கடாபி ஒரு மேற்கத்திய ஆதரவாளராக உருவெடுப்பார் என்று அமெரிக்க பிரித்தானியக் வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்கள் நம்பினார்கள். சயிf கடாபி லிபியாவில் மேற்குலக அரசு பாணிச் சீர்திருத்தங்களை செய்வார் என்றும் நம்பினர். ஆனால் கடாபி தனது மகனையே நம்பவில்லை. சயிf கடாபி தன்னைக் காவிழ்க்கலாம் என்ற அச்சம் அவரிடம் இருந்தது. அதனால் தனது மற்ற மகனாகிய முத்தாசிம் கடாபியை ஒரு தீவிர மேற்குலக எதிர்ப்பாளராக உருவாக்கி அவரையே படைத்துறைக்கும் பொறுப்பாக்கினார். ஆனால் லிபியாவில் மக்கள் எழுச்சி தொடங்கிய பின் சயிf கடாபி ஆற்றிய உரை அவரும் லிபியாவில் ஆட்சி முறை மாற்றத்தை வெறுப்பவர் என்றும் தந்தையின் ஆட்சி முறையையே அவர் நம்புகிறார் என்றும் சுட்டிக்காட்டியது. இவரை London School of Economics சரியாக மூளைச் சலவை செய்யவில்லையா என்ற கேள்வி எழுந்து விட்டது. உலகப் பிரசித்த பெற்ற பல்கலைக் கழகங்களுள் London School of Economicsஉம் ஒன்று. இதற்கு சயிf கடாபி கலாநிதிப் பட்டம் பெற்றபின் ஒன்றரை மில்லியன் பவுண்கள் இனாமாக லிபியாவில் இருந்து கிடைத்தது. அது மட்டுமல்ல 2.2மில்லியன் பவுண்கள் பெறுமதியான ஒப்பத்தம் ஒன்றை லிபிய அரசும் London School of Economicsஉம் செய்து கொண்டன. அதன்படி லிபிய அரச அதிகாரிகளுக்கு London School of Economics பயிற்ச்சி வழங்கும். அதுவும் மூளைச் சலவைதான். அந்தச் சலவையும் வேலை செய்யவில்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

லிபிய அரசுடன் London School of Economicsக்கு இருக்கும் தொடர்புகள் இப்போது அம்பலப் படுத்தப் பட்டு இப்போது விசாரணைகள் ஆரம்பமாகிவிட்டன. London School of Economicsஇன் இயக்குனர் ஹாவார்ட் டேவிஸ் லிபிய அரசிற்கு பொருளாதார ஆலோசகராகவும் செயற்பட்டுள்ளார். இந்தத் தொடர்புகளால் London School of Economicsஇன் இயக்குனர் ஹாவார்ட் டேவிஸ் பதவி விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லிபியாவிடம் இருந்து இனாமாகப் பணம் பெற்றமையும் London School of Economicsஇன் இயக்குனராக இருந்து கொண்டு லிபிய அரசின் ஆலோசகராகவும் செயற்பட்டமை தனது தவறு என்கிறார் ஹாவார்ட் டேவிஸ்.

Thursday, 3 March 2011

கடாபியின் 1,000மும் ராஜபக்சவின் 40,000மும்


பெப்ரவரி 15-ம் திகதியில் இருந்து லிபியாவின் அரசிற்கு எதிராக அந்த நாட்டு மக்கள் கிளர்ச்சி செய்து வருகின்றனர். லிபியாவில் இப்போது இருக்கும் அரசு மக்களால் தெரிவு செய்யப்பட்டதல்ல, ஊழல் நிறந்தது, குடும்ப ஆதிக்கம் கொண்டது, லிபியாவில் ஒர் ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கை. அவர்களுக்கு எதிராக லிபிய அரசு கட்டவிழ்த்து விட்ட அடக்கு முறையின் விளைவாக 1,000 பேர்வரை கொல்லப்பட்டிருக்கலாம என்று ஐக்கிய நாடுகள் சபையின் கணிப்புத் தெரிவிக்கிறது. ஆனால் உண்மையில் கொல்லப்பட்டவர்கள் இரண்டாயிரத்துக்கு மேல் இருக்கலாம்.

லிபியாவில் அரச வன்முறை அதிகரித்துவிட்டது என்று பெப்ரவரி 26-ம் திகதி ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை கூட்டப்பட்டது. அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானம்-1970இன் படி லிபியாவிற்கு ஆயுத விற்பனை செய்யக் கூடாது என்று உறுப்பு நாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டது; உறுப்பு நாடுகளில் உள்ள சகல லிபிய சொத்துக்களும் முடக்கப்படவேண்டும் என்று பணிக்கப்பட்டது. லிபியத் தலைவர் மும்மர் கடாபியும் அவரது அரசைச் சேர்ந்த வேறு 16 பேருக்கு உறுப்பு நாடுகளுக்கு பயணம் செய்வதைத் தடுக்கும் படி உறுப்பு நாடுகள் பணிக்கப்பட்டன. மேலும் ஐநா பாதுகாப்புச் சபை லிபியா மீது விசாரணை நடாத்தும் படி பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றைக் கேட்டுக் கொள்வதாகவும் முடிவு செய்யப்பட்டது.

ஐநாவில் வேண்டுகோளின்படி இன்று பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றின் பிரதம வழக்குத் தொடுநர் லுயிஸ் மொரெனொ ஓகம்போ (Luis Moreno Ocampo) லிபியத் தலைவர் மும்மர் கடாபிமீது மானிடத்திற்கு எதிரான குற்றங்கள்(crimes against humanity) இழைத்தமைக்கான விசாரணையை ஆரம்பித்துவிட்டதாக அறிவித்தார். ஆயிரம் பேருக்கு மேல் கொல்லப்பட்டமை பாரிய குற்றம். அதை விசாரித்து அதைப் புரிந்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும். விரைவில் லிபியத் தலைவரைக் கைது செய்வதற்கான ஆணையை பன்னாட்டு நீதி மன்றம் பிறப்பிக்கலாம்.

ஆனால்:
 • லிபியாவில் மருத்துவ மனைகள் மீது குண்டுகள் வீசப்படவில்லை.
 • லிபியாவில் மக்களுக்கான உணவு, குடிநீர், மருத்துவ வசதிகளுக்கான விநியோகம் தடைசெய்யப்படவில்லை.
 • லிபியாவில் கலவரம் செய்தவர்கள் மீது மட்டுமே தாக்குதல்கள் நடாத்தப்பட்டன.
 • லிபியாவில் தடைசெய்யப்பட்ட கொத்தணிக் குண்டுகள் பாவிக்கப்படவில்லை.
 • லிபியாவில் கலவரம் செய்யாமல் வீடுகளில் இருந்தவர்கள் எவராவது தாக்கப்படவில்லை, காயப்படவில்லை, கொல்லப் படவில்லை.
 • லிபியாவில் பாதுகாப்பு வலயம் என்று ஒன்றை அறிவித்து விட்டு அதற்குள் மக்களை வரச் சொல்லி அங்கு கடல் தரை ஆகாய மார்க்கமாக அப்பாவிகள் மீது தாக்குதல் நடாத்தப்படவில்லை.
 • லிபியாவில் ஒரு குழந்தை தன்னும் கொல்லப்படவில்லை.
 • லிபியாவில் ஒரு கற்பிணிப் பெண்தன்னும் கொல்லப்படவில்லை.
 • லிபியாவில் ஒரு தள்ளாத வயோதிபர் தன்னும் கொல்லப்படவில்லை.
 • லிபியாவில் ஒரு மதத் தலமாவது அழிக்கப்படவில்லை.
 • லிபியாவில் ஒரு நாளில் மட்டும் 25,000பேர் கொல்லப்படவில்லை.
 • லிபியாவில் இறுதிப் போரில் 40,000பேர் கொல்லப்படவில்லை.
 • லிபியாவில் உயிரோடு மக்கள் புதைக்கப்படவில்லை.
 • லிபியாவில் சரணடையுங்கள் உங்களை பன்னாட்டு நியமங்களுக்கு அமைய போர்க்கைதிகள் போல் நடாத்துகிறோம் என்ற உறுதி மொழியை ஐநா மூலமாக வழங்கிவிட்டுப் பின்னர் சரணடைய வந்தவர்களைக் கொல்லவில்லை.
இவையாவும் இலங்கையில் நடந்ததாகப் பலதரப்பினரும் கூறுகிறார்கள். இலங்கையில் உக்கிரமாகப் போர் நடக்கும் போது நாளாந்தம் 5,000பேர் வரை கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் போது ஐநா இது தொடர்பான கலந்துரையாடல்களை பகிரங்கமாக நடாத்தாமல் நிலத்துக்குக் கீழ் உள்ள அறையில் மிக இரகசியமாக நடாத்தியது. இலங்கையில் எத்தனைபேர் கொல்லப்பட்டனர் என்று கேட்டபோது நாம் பிணங்களை எண்ணுவதில்லை எனப் பதிலளிக்கப்பட்டது.

லிபியாவிற்கு எதிரான நடவடிக்கை இன்னும் விரைவாக மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆனால் மேற்குலக நாடுகள் தங்கள் குடிமக்களை லிபியாவில் இருந்து வெளியேற்றும் வரை காத்திருந்தனர். இருந்தும் 11 நாட்களில் லிபியாவிற்கு எதிரான நடவடிக்கையில் ஐநா இறங்கிவிட்டது. இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் 22 மாதங்களாகியும் ஐநா இன்றும் அசமந்தப் போக்கையே கடைப்பிடிக்கிறது. இதற்குக் காரணம் ஐநா அதிபர் பான் கீ மூனின் பிரத ஆலோசகர் ஒரு இந்தியரான விஜய் நம்பியார் என்பதலா? அல்லது ஐநா அதிபர் பான் கீ மூனின் மருமகன் சித்தார்த் சட்டர்ஜி என்ற இந்தியர் என்பதலா? ஐநா பாதுகாப்புச் சபையில் இலங்கைக்கு எதிராக ஏதாவது தீர்மானம் கொண்டுவந்தால் இந்தியாவின் வேண்டுதலில் இரசியா அதை இரத்து(வீட்டோ) செய்யும் அதற்குப் போட்டியாக சீனா இரத்து செய்யும் என்றே இலங்கைக்கு எதிராக எந்த தீர்மானமும் கொண்டுவர முடியவில்லை என ஒர் ஐரோப்பிய நாட்டின் ஐநா பிரதிநிதி கூறினார்.

பன்னாட்டு நீதி மன்றம் அமைப்பதற்கான உடன்படிக்கையில் இலங்கையும் கையொப்பம் இடவில்ல; இந்தியாவும் கையொப்பம் இடவில்லை; லிபியாவும் கையொப்பம் இடவில்லை. லிபியாவில் நடந்தவற்றை விசாரிக்க ஐநா பன்னாட்டு நீதி மன்றத்தைக் கேட்டுக் கொண்டது. இலங்கைக் கொலைகளை விசாரிக்கக் கூடாதா?

ஐநா மனித உரிமைக்கழகத்தில் இலங்கையை கண்டிக்க ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவந்த தீர்மானத்தை இந்தியா பாராட்டும் தீர்மானமாக மாற்றியதை எந்த ஒரு தமிழனும் மன்னிக்கமாட்டான். தமிழ்நாட்டிலுள்ள தமிழர்கள் தேர்தலில் வாக்களிக்கும் போது இதையும் கருத்தில் கொள்வார்களா?

இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர் குற்றம் தொடர்பாக ஒரு பன்னாட்டு மட்ட விசாரணை தேவை என சர்வதேச மன்னிப்புச் சபை, பன்னாட்டு நெருக்கடிக் குழு, ஐநா மனித உரிமைக் கழகம் ஆகியன தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இது தொடர்பான சாட்சியங்களையும் அவை முன்வைத்தன. இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று தென்னாபிரிக்காவைச் சேர்ந்த ஐநா மனித உரிமைக் கழக ஆணையாளர் செல்வி நவநீதம் பிள்ளை, ஐநாவின் அரசியல் விவகார உதவிச் செயலாளர் லின் பஸ்கோ போன்றோர் தொடர்ச்சியாக வேண்டுதல் விடுத்தனர். ஐநா செய்ததெல்லாம் ஒரு அதிகாரம் எதுவுமற்ற ஆலோசனைக் குழுவை அமைத்தது மட்டும்தான். அதன் விசாரணை தொடர்பாக பான் கீ மூன் முன்னுக்குப் பின் முரண்பட்ட கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்.

உலகத் தமிழர்கள் எல்லாரும் ஒன்றுபட்டு நீதி கேட்டுக் கிளர்ந்து எழுவார்களா?

அதிகரிக்கும் எரி பொருள் விலைகள்


தற்போது $110 இற்கும் $120 இற்கும் இடையில் இருக்கும் ஒரு பீப்பாய் எரிபொருள் விலை $220ஆக ஏறும் சாத்தியங்கள் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். இந்த விலை அதிகரிப்பு எதிர்பார்பிற்கான காரணங்கள்:

மத்திய கிழக்கு நெருக்கடி.
துனிசியா, எகிப்த்து, லிபியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட மக்கள் எழுச்சியும் அவை மற்ற எரிபொருள் உற்பத்தி நாடுகளுக்கு முக்கியமாக சவுதி அரோபியா, ஈரான் பரவலாம் என்ற அச்சமும் எரிபொருள் விலையை அதிகரித்தது. பாஹ்ரெயினில் நிலமை மோசமடையாமல் போனது எரிபொருள் விலை அதிகரிப்பைத் தணித்தது உண்மை. வெனிசுலேவியா முன் வைத்த சமாதானத் திட்டத்திற்கு லிபிய அதிபர் கடாபி ஒத்துக்கொண்டுள்ளதாக இன்று செய்திகள் கிடைக்கின்றன. ஆனால் கடாபிக்கு எதிரான ஆர்ப்பாட்டக் காரர்கள் தாம் கடாபி பதவி விலகும் வரை ஓயப் போவதில்லை என்று கூறியுள்ளனர். லிபிய எரிபொருள் உற்பத்தி இப்போது வழமையில் பாதியே செய்யப்படுகிறது. லிபியாவில் உற்பத்தியில் ஒரு பில்லியன் பீப்பாய்கள் குறைந்து உள்ளதாக பன்னாட்டு வலு முகவரகம் தெரிவித்துள்ளது. இந்த மாதம் 11-ம் 20-ம் திகதிகளில் சவுதி அரேபியாவில் ஆர்ப்பாட்டங்கள் செய்வதற்க்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. இதுவும் எரிபொருள் விலைகள் மீதான அச்சத்தை அதிகரித்துள்ளது. இரசியா தனது எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்கிம் என்று சில ஆய்வாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். அப்படிச் செய்தால் அது மத்திய கிழக்கில் ஏற்பட்ட உற்பத்தி இழப்பைச் சரிசெய்தால் எரிபொருள் விலை அதிகரிப்பைக் குறைக்கலாம்.

வளரும் சீனப் பொருளாதாரம்.
உலக அரங்கில் ஏற்பட்டபொருளாதர நெருக்கடியைத் தொடர்ந்து சீனாவின் பொருளாதாரம் பின்னடைவைச் சந்தித்திருந்தது. அது மீண்டும் விரைவில் வளர்ச்ச்சிப்பாதையில் இயங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இது எரிபொருளுக்கான தேவையை அதிகரித்து எரி பொருள் விலைகளை மேல் நோக்கித் தள்ளும் என்ற எதிர்பார்ப்பே பலமாக இருக்க்கிறது.

பலவீனமான அமெரிக்க டொலர் நாணயம்.
எரிபொருள்களின் விலைகள் அமெரிக்க டொலரிலேயே நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால் அமெரிக்க டொலரின் பெறுமதி எரிபொருள்களின் விலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. டொலரின் பெறுமதி குறையும் போது எரிபொருள்களின் விலை அதிக்கரிக்க்கும். அமெரிக்க டொலர் நாணயத்தின் பெறுமதி அதிகரிக்கும் சாத்தியக் கூறுகள் இல்லை. மேலும் பெறுமானத் தேய்வடையும் சாத்தியங்களே அதிகம். இது எரிபொருள் விலைய அதிகரிக்கும்.

Wednesday, 2 March 2011

ஹைக்கூ : நான் போடும் கடலைகள் கடலலைகளாகும்நான் போடும் கடலைகள்
நீர்த்துளிகளாக மாற்றம் பெற்றால்
இன்னொரு கடல் இங்கு

என்னிலும் ஏழைகள் மூடர்கள்
என்னிலும் செல்வந்தர்கள் திருடர்கள்
நொண்டிச்சாட்டு.

தாங்காத துக்கம் பிரிந்தால்
தாளாத இன்பம் இணைந்தால்
அவள்

காதலில் விழ வைக்க அவன்
கல்யாணத்தில் மாட்ட வைக்க அவள்
உறவுச் சந்தை

இயற்கையின் செல்வம்
மகிழ்ச்சியின் மூலம்
உள்ளதோடு திருப்தியடைதல்

உலகம் அழிந்ததென நினைத்தது ஒன்று
உலகம் தோன்றியதென நினைத்தது இன்னொன்று
கூட்டுப்புழுவும் பட்டாம் பூச்சியும்

பிரபாகரனின் தாயாருக்கு பேராசிரியர் அரசேந்திரன் அவர்கள் தீட்டிய இரங்கல் கவிதை.


பேராசிரியர் அரசேந்திரன் அவர்கள் தீட்டிய இரங்கல் கவிதையின் வரிகள்:


உலகத் தமிழரெல்லாம் உள்ள உணர்வால்
உகுக்கும் கண்ணீரால்
உம் பாதம் பற்றி நின்று
உரைக்கும் சொல் ஒன்று
உரைக்கும் சொல் ஒன்று
கொள்ளி வைப்பானா பிள்ளை?
கொள்ளி வைப்பானா பிள்ளை?

எனக் கோடி முறை நினைந்து
நனைந்திருப்பாய்,
நலிந்திருப்பாய் நாடி தளர்ந்திருப்பாய்
கொள்ளி வைப்பான் பிள்ளை

குமுறும் எரிமலையாய் வெடித்து
கோடை இடியாய் முழக்கமிட்டுக்
கொக்கரிக்கும் சிங்களனைக்
கொன்று தீயிலிட்டுக்
கொள்ளி வைப்பான் உன் பிள்ளை
கொள்ளி வைப்பான் உன் பிள்ளை

கொண்ட உன் தவம் பலிக்கும்
தாயே,
கோடி ஆண்டு உன் பெயர் நிலைக்கும்
தாயே வணக்கங்கள்
தலை தாழ்ந்த வணக்கங்கள்.

Tuesday, 1 March 2011

நகைச்சுவைக் கதை: இத்தாலிச் சனியாளின் இறுதி நாள்.


ஒரு நாள் இத்தாலிச் சனியாள் காலையில் எழுந்து தனது கருவாட்டு முகத்தை கண்ணாடியில் பார்த்தாள். முகத்தில் பல சுருக்கங்கள் விழுந்திருந்தன. தான் விரைவில் மண்டையைப் போட்டுவிடுவேனோ என்றபயம் சனியாளைப் பிடித்துக் கொண்டுவிட்டது. தன் மகனை அரசனாக்கி டில்லி அரியாசனத்தில் அமர்த்திப் பார்க்காமல் போய்த் தொலைந்து விடுவேனோ என்ற பயம் அவள் மனதை ஆட்டிப் படைத்தது. நீண்ட நேரம் அவள் யோசித்துக் கொண்டே இருந்தாள்.

சனியாளது உதவியாளர்கள் நீண்ட நேரம் அவள் படுக்கை அறையில் இருந்து வெளிவராததால் பயமடைந்து அவள் மகளையும் மகனையும் தொடர்பு கொண்டனர். கதவில் நன்றாக உரக்கத் தட்டுங்கள் என்று அவர்கள் கூறினார்கள். பிறகு ஒரு உயர் அதிகாரி தொலைபேசி மூலம் சனியாளைத் தொடர்பு கொண்டார். அவரிடம் தனது உயர் மட்ட ஆலோசகர்களையெல்லாம் உடன் கூட்டும்படி கட்டளையிட்டாள். சகல உயர் மட்ட ஆலோசகர்களும் வந்தபின் அவர்களிடம் தான் எப்போது இறப்பேன் என்று கேட்டாள். அவர்கள் எல்லோரும் கூடி ஆலோசித்து விட்டு உடனடியாக ஒரு அரச படை விமானம் ஒன்றில் கேரளாவில் இருந்து ஒரு சோதிடரை டில்லிக்கு அழைத்தனர். சோதிடரும் தன்னிடம் இருந்த சனியாள் குடும்ப சோதிடப் பத்திரங்களுடன் டில்லி போய்ச் சேர்ந்தார்.

சனியாள் சோதிடரிடம் எனது குடும்பம் எந்தளவு பெரிய குடும்பம். எவ்வளவு செல்வாக்கு மிகுந்த குடும்பம். இருந்தும் யாரும் நிம்மதியாக இல்லையே. இது ஏன் என்று சோதிடரிடம் கேட்டாள். அதற்கு சோதிடர் நான் நீண்ட நாளாகவே உங்களிடம் ஒன்ற சொல்ல வேண்டும் என்றிருந்தேன் ஆனால் எப்படிச் சொல்வது என்று தெரியாமல் தவிக்கிறேன் என்றார். அதற்கு சனியாள் எனது வாழ்வின் இறுதிக்கட்டத்திற்கு வந்து விட்டேன் என்று நினைக்கிறேன். நான் பல நாட்கள் இருப்பேன் என்று நினைக்க வில்லை. எதுவாகிலும் பயப்படாமல் சொல்லு என்றாள். மடம் உங்கள் குடும்பத்திற்கு பெரியதோர் பிதிர் சாபம் உண்டு அதாவது Curse by your foreparents உள்ளது. உங்கள் குடும்பம் foreparentsஇன் பெயரைத் தூக்கி எறிந்து விட்டு உங்கள் குடும்பத்திற்கு சம்பந்தம் இல்லாத ஒரு மகானின் பெயரைக் குடும்பப் பெயராக்கி கொண்டது. இதனால் உங்கள் குடும்பத்தின் மூதாதையரையும் கேவலப் படுத்தி அந்த மகானையும் கேவலப்படுத்தி விட்டார்கள் உங்கள் குடும்பத்தினர். இந்தச் சாபத்தால் உங்கள் குடும்பத்தில் பலருக்கு அற்ப ஆயுளில் அவலச் சாவு ஏற்பட்டது இந்தச் சாபத்திற்கு எந்தவித பரிகாரமும் இல்லை என்று சொல்லி முடித்தார்.

சோதிடர் கூறுவதைக் கேட்ட சனியாள் சில நிமிடங்கள் தனது கருவாட்டு மூஞ்சியைத் தொங்கப் போட்டபடி அமைதியாக இருந்தாள். பின்னர் கேட்டாள் நான் எப்போது இறப்பேன் என்று. சோதிடர் மீண்டும் ஒரு முறை அவளது கட்டத்தைப் பார்த்துவிட்டு இன்று எனக்குத்தான் கட்டம் சரியில்லை என்று தனக்குள் நினைத்துக் கொண்டு மடம் நீங்கள் இந்தியாவில் ஒரு புனித நாளில் இறப்பீர்கள் என்றார். அவள் அது எப்போது என்று கேட்டாள். அதற்குச் சோதிடர் அதை என்னால் கூற முடியாது நீங்கள் ஒரு புனித நாளில் இறப்பீர்கள் என்றார். மீண்டும் சனியாள் கேட்டாள் நான் எப்போதைய்யா மண்டையைப் போடுவேன். அதற்கு மீண்டும் சோதிடர் சொன்னார் நீங்கள் இந்தியாவில் ஒரு புனித நாளில் இறப்பீர்கள். இந்த ஆள் சரிப்பட்டு வரமாட்டான் என்று தனக்குள் சொல்லிக் கொண்ட சனியாள் சரி போய்வாருங்கள் என்றாள்.

சோதிடர் தனக்குள் நினைத்துக் கொண்டார் "சனியனே நீ என்றைக்கு மண்டையைப் போடுகிறாயோ அதுதான் இந்தியாவின் புனித நாள். எல்லா இந்திய மக்களும் அன்று புனித நீராடி இந்தியாவின் பாவத்தைப் போக்க வேண்டும்."

Monday, 28 February 2011

கடாபி பற்றிய நகைச்சுவைகள்

மத்திய கிழக்கு நாடுகளில் ஆட்சி மாற்றம் வேண்டுமென்று மக்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். தமக்குத் தாமே தீ மூட்டுகிறார்கள். அங்குள்ள ஆட்சியாளர்களுக்கு ஒரு ஆலோசனை: நீங்கள் எல்லோரும் ஒன்று கூடி மக்கள் மாற்றம் வேண்டும் என்று போராட்டம் நடத்துங்கள். உங்கள் நாட்டிலுள்ள மக்களைக் விரட்டி விட்டு தென் இந்தியாவிலும் வட கிழக்கு இலங்கையிலும் உள்ளது போல் சொரணையற்ற மக்கள் உங்களுக்கு வேண்டும் என்று போராட்டம் நடத்துங்கள். உங்கள் போராட்டத்தின் உச்சக் கட்டமாக மும்மர் கடாபியை உயிரோடு கொழுத்துங்கள். 

கடாபிக்குத் இப்போது அவசியம் தேவையானவை. 
இரு வார்த்தைகள்: Diplomatic immunity (அரசதந்திரிகளுக்குரிய பாதுகாப்பு). 
இரு கருவிகள்: ஐ-போன்(புரட்சி எதிர்ப்பு Application) காலப் பயண இயந்திரம்(Time Travel machine) ஒரு 30 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல. 
இரு குழுக்கள்: நல்ல ஆடை வடிவமைப்பாளர்கள் ( அவர் இப்போது அணியும் மோசமான ஆடைகள்தான் அவர் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்படக் காரணம்) பாதுகாப்பிற்கு இத்தாலியப் பிரதம மந்திரியின் இளம் காதலிகள். கடாபிக்கு பெண் பாதுகாவலர்கள் மீதுதான் நம்பிக்கை. இவை எதுவும் கைகூடாதவிடத்து இருபொருட்கள்: ஒரு போத்தலும் ஒரு நாயும். தேவதாஸ் போல். இரசியாவின் கிரெம்ளினைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு உயர் அதிகாரி மும்மர் கடாபியை வாழும் பிணம் என்று வர்ணித்தார். கடாபி இறுதியில் தற்கொலை செய்து கொள்வார் என்று சொல்கிறார்கள். நான் நினைக்கிறேன் கடாபி கடைசியில் தன்னிடம் உள்ள பழைய சோவியத் ஒன்றிய விமானத்தில் தப்பி ஓடும் போது விமானம் பழுதடைந்து விழுந்து இறப்பார். 

கடாபி சொன்ன நகைச்சுவைகள்: 1. இந்தப் பூமிப்பந்தில் லிபியாவில் மட்டும்தான் மக்களாட்சி நிலவுகிறது. 2. நான் லிபியாவின் அதிபர் அல்ல நான் வெறும் லிபியப் புரட்ச்சியின் நாயகன் மட்டுமே. 3. "They love me. All my people with me, they love me," he said. "They will die to protect me, my people."  

கடாபி ஐபோன்களுக்குத் தேவையான அப்பிளிக்கேசன்கள்போல லிபியர்களுக்குத் தேவையானவை: "Top 10 iRevolt apps and innovations" 
10. iMob. 
 9. iRule. 
 8. facebook Coup. 
 7. Social Political Networking . 
 6. idemocracy. 
 5. iOverthrow. 
4 . iTweet-YouTube-WeAllMeetForIRevolt. 
 3. iRevolt. 
 2. iProtest. ... and the #
1 iRevolt yet toinvented is: 1. iLike-Freedom.  

கடாபி பற்றி உண்மையான ஒரு தகவல்: கடாபி 2009 செப்டம்பர் 26-ம் திகதி ஐநா சபையில் உரையாற்றும் போது அவரது மொழிபெயர்ப்பாளர் மயங்கி விழுந்தார். அவர் மயங்கி விழ முன் கூறிய வசனம்: "I just can't take it any more." என்னால் இனியும் தாங்க முடியாது. 

Sunday, 27 February 2011

பார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.

வாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் கொண்டு வருவார்கள்.

ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு ஈடாகும் என்பார்கள்.
அந்தமாதிரி சில படங்கள் சிலவற்றை இங்கு பகிர்கிறேன்.

சுத்தம் சுகம் தரும்

கழிப்பறைகளில் விழிப்புணர்வு

ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே!!!!

ஆசீர்வாதம் பண்ணிவிட்டு காசு கொடுக்குமா யனை?
சூரிய சக்தியில்....

கரட்தான் வேறு ஒன்றுமில்லை 2 - 3 =ஆம் 23 கரட்


தேகம் யாவும் தீயின் தாகம்

சரியாத் தெரியவில்லை இன்னும் கொஞ்சம் குனிய வேண்டும்......


படத்தில் சொடுக்க்ப் பெரிதாக்கிப் பார்க்கவும்.....


not now darlingசும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவேன்.......நீ கமராவை வைச்சிருந்தால்...

.
எல்லாம சரி இது ஒன்றும் அசிங்கமாக இல்லையே எல்லாம் நல்லாத்தானே இருக்கிறது. நல்ல கற்பனையான படங்கள். சிந்தித்து எழுதப் பட்ட சுலோகங்கள் என்று சொல்றீங்களா.


இருக்குதுங்க ஒரு அசிங்கமான படம்

பார்க்கக் கூடாத படமுங்க.

?????????

இந்தக் கண்றாவியை யாரிடம் சொல்லி அழுவது.

?????????

அந்த அளவு அசிங்கமான படமுங்க.

?????????

பார்த்தாலே குமட்டுமுங்க.

?????????

அவ அவனைப் பிடிச்சா பிடிச்ச பிடியிலை மூன்று இலட்சம் பேர் செத்துப் போனாங்கள்

???????

அந்த அளவு மோசமான படமுங்க.

??????????????

சரி சரி

????????????????

பார்க்க வேண்டுமா அந்தக் கண்றாவிக் காட்சியை.

??????????????

கீழே இருக்குது.

?????????????????????

பார்த்துத் தொலையுங்க.


Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...