Thursday, 6 January 2011

12 வயதிற்கு முன் பூப்படையும் பெண்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப் படுவார்களாம்


பிரித்தானியாவில் உள்ள பிறிஸ்டல் பல்கலைக்கழகம் செய்த ஆய்வின்படி பதினொரு வயது ஆறு மாதத்திற்கு முன் பூப்படையும் பெண்கள் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. பெண்களின் பூப்படைவதற்கு உகந்த வயது 12வருடம் 6 மாதம் என்றும் தெரிவிக்கின்றனர். Avon Longitudinal Study of Parents and Children என்ற பெயரில் 2184 பெண்களிடை நீண்ட கால அடிப்படையில் செய்த ஆய்வில் இருந்து இந்த முடிவை ஆய்வுத்தலைவர் Dr Carol Joinson வெளியிட்டுள்ளார். பதினொன்றரை வயதிற்கு முன்னர் பூப்படையும் பெண்கள் 13, 14 வயதளவில் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். பதின்முன்றரை வயதிற்கு பிறகு பூப்படையும் பெண்கள் மிகக்குறைந்த அளவிலேயே மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். பூப்படைவது பெண்களின் உடலிலும் உள்ளத்திலும் பல மாறுதல்களை ஏற்படுத்துகிறது.
The study found that girls who mature early are more vulnerable to developing depressive symptoms by the time they reach their mid-teens. This suggests that later maturation may be protective against psychological distress.

மாற்றமடையும் ஹோமோன்களும் பெற்றோருடன் ஏற்படும் முரண்பாடுகளும் தனது உடல்பற்றிய உருவப் பதிவும் பூப்படையும் பெண்களைப்பாதிக்கிறது. இவை சிறு வயதில் பூப்படையும் பெண்களுக்கு பல மன உளைச்சல்களைக் கொடுக்கிறது.

Dr Joinson concluded: 'If girls who reach puberty early are at greater risk of psychological problems in adolescence, it may be possible to help them with school- and family-based programmes aimed at early intervention and prevention.'

பிற்கால வாழ்க்கையிலும் இளவயதில் பூப்படைதல் மன அழுத்தத்தை கொண்டுவருமா என்பதை பற்றி அறிய இன்னும் ஆய்வுகள் தேவைப்படுகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

Wednesday, 5 January 2011

நகைச்சுவை: மணமகன் விற்பனைக்கு

அது ஒரு ஆறு மாடிக் கடை அங்கு மணமகன் விற்பனை செய்வதாக விளம்பரப்படுத்தப் பட்டிருந்தது. அங்கு ஒரு பெண் மணமகன் வாங்கச் சென்றாள். அங்கு மணமகன் வாங்குவதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப் பட்டிருந்தன. மணமகன் வாங்க வருபவர் ஆறு மாடியில் ஒரு மாடிக்கு மட்டும் செல்ல முடியும். ஆறு மாடிகளிலும் மணமகன்கள் அவர்களின் தரவரிசைக்கு ஏற்ப ஒவ்வொரு மாடியிலும் விற்பனைக்கு உண்டு. கீழ் மாடியில் விற்கப் படுபவர்களின் தரத்திலும் பார்க்க மேல் மாடியில் இருக்கும் தரம் உயர்ந்தது.

மணமகன் வாங்கச் சென்ற பெண் முதலாம் மாடியில் எப்படிப் பட்ட ஆண்கள் இருக்கிறார்கள் என்று வினவினாள். முதலாம் மாடியில் நல்ல வேலையுள்ள ஆண்கள் இருக்கிறார்கள் என்று பதிலளிக்கப்பட்டது.

இரண்டாம் மாடியில் எப்படி என்று வினவினாள். இரண்டாம் மாடியில் நல்ல வேலையுள்ள குழந்தைகளைப் பராமரிக்கக் கூடிய திறனுள்ள ஆண்கள் என்று பதில் கூறப்பட்டது.

சரி இரண்டாம் மாடிக்கு போவோம் என்று கூறிய அப்பெண் திடீரென மனம் மாறி முன்றாம் மாடியில் எப்படி என்றாள். மூன்றாம் மாடியில் நல்ல வேலையுள்ள குழந்தைகளைப் பராமரிக்கக் கூடிய திறனுள்ள கட்டழகானஆண்கள் உள்ளனர் என்று பதில் கூறப்பட்டது.

சரி மூன்றாம் மாடிக்கு போவோம் என்று கூறிய அப்பெண் திடீரென மீண்டும் மனம் மாறி நாலாம் மாடியில் எப்படி என்றாள். நாலாம் மாடியில் நல்ல வேலையுள்ள குழந்தைகளைப் பராமரிக்கக் கூடிய திறனுள்ள வீட்டு வேலைகள் கச்சிதமாகச் செய்யக் கூடிய கட்டழகானஆண்கள் உள்ளனர் என்று பதில் கூறப்பட்டது. அப்பெண் மிக மகிழ்ச்சியடைந்து சரி சரி அங்குதான் கட்டாயம் போக வேண்டும் என்றாள்.

திடீரென மீண்டும் மனம் மாறி ஐந்தாம் மாடியில் எப்படி என்றாள். ஐந்தாம் மாடியில் நல்ல வேலையுள்ள குழந்தைகளைப் பராமரிக்கக் கூடிய திறனுள்ள வீட்டு வேலைகள் கச்சிதமாகச் செய்யக் கூடிய கட்டழகான காதல் மன்னர்கள் உள்ளனர் என்று பதில் கூறப்பட்டது.

ஐய்யோ! ஐய்யோ!! எனக்கு கட்டாயம் அப்படி ஒருவன் தான் தேவை என்று துள்ளிக் குதித்த பெண் ஆறாம் மாடியில் இன்னும் நல்ல ஆண்கள் இருப்பார்களே அது எப்படி என்று பரபரப்ப்புடன் கேட்டாள். அது அங்கு போய்ப் பார்த்தால்தான் தெரியும் என்று பதில் கூறப்பட்டது.

அந்தப் பெண் பாய்ந்து கொண்டு ஆறாம் மாடிக்கு ஓடினாள். அங்கு அவளுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவள் அங்கு போனதும். நீங்கள் இங்கு வரும் 6,975,853,327வது வருகையாளர். இங்கு ஆண்கள் எவரும் இல்லை. பேராசை பிடித்த பெண்களுக்கு ஒரு பாடமாக இருக்கவே இந்த ஏற்பாடு. எமது நிபந்தனைப்படி நீங்கள் வெளியே செல்லலாம் என்று சொல்லி வெளியேற்றப் பட்டாள்.

இந்தக் கதையின் நீதி: பெண்கள் கிடைக்கும் ஆணுடன் மகிழ்ச்சியாக எப்படி வாழ்வது என்று அறிந்து கொள்வதே மேல் அல்லது காலமெல்லாம் கன்னியாகவே கழிக்க வேண்டி வரும்.

Tuesday, 4 January 2011

விஞ்ஞானி: மூதாதையர்களை நினைவு கூர்ந்தால் தேர்வில் சித்தியடையலாம்


எமக்குப் பிரச்சனைகள் வரும்போதோ அல்லது தேர்வின் போதோ அல்லது நேர்முகத் தேர்வின் போதோ எமது மூதாதையர்களைச் சிந்தித்தால் எமது புத்தி சிறந்த முறையில் செயற்படும் என்று விஞ்ஞான ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
The ancestor effect: Thinking about our genetic origin enhances intellectual performance என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரை இந்தத் தகவலைத் தெரிவிக்கிறது.

அக்கட்டுரையின் சாராம்சம்:
The present research hypothesizes that thinking about one's genetic origin (i.e. ancestors) provides people with a positive psychological resource that increases their intellectual performance. To test this line of reasoning, we manipulated whether participants thought about their ancestors or not (manipulation of ancestor salience), and measured their expected as well as actual intellectual performance in a variety of intelligence tasks. Four studies supported our assumptions: participants show higher expected (Study 1) and actual intellectual performance (Studies 2–4) when they are reminded about their ancestors. We also have initial evidence that this effect may be fuelled by increased levels of perceived control and promotion orientation. Theoretical and practical implications are discussed. It is certainly desirable to be well descended, but the glory belongs to our ancestors. (Plutarch 46–120 AD) Copyright © 2010 John Wiley & Sons, Ltd.

ஆஸ்திரிய University of Graz ஐச் சேர்ந்த விஞ்ஞானி பிட்டர் பிஸர் நிகழ்த்திய ஆய்வின் முடிவிலேயா இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது. எமது முன்னோர்கள் பல பிரச்சனைகளைத் தாண்டி மீண்டெழுந்த உண்மையை உணரும் போது எமக்கு அது ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுப்பதுடன் சிந்திக்கும் திறனையும் அதிகரிக்கிறது.

The tests, using 80 volunteers, found that those who were tasked with recalling things about their ancestors performed significantly better than those asked to think of a more mundane memory (a recent shopping trip, or a day out). Those thinking about their ancestors also claimed to feel more confident about their performance before taking the research tests.
“We showed that an easy reminder about our ancestors can significantly increase intellectual performance,” said one of the researchers. “Whenever people are in a situation where such performance is extraordinarily important, such as exams or job interviews, they have an easy technique to increase their success.”
Dr Peter Fischer, from the research team, summed up his findings like this: “'Our ancestors managed to overcome a multitude of problems, such as severe illnesses, wars, loss of loved ones or severe economic declines. So when we think about them, we are reminded that humans who are genetically similar to us can successfully overcome a multitude of problems and adversities.”

இருதய நோய்க்கு புதிய சிகிச்சை முறைஇரத்தக் குழாய் அடைப்பு (Blocked arteries) நீக்குவதற்கான புதிய சிகிச்சை முறை இந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப் படவிருக்கிறது. இந்த ஆண்டின் சிறந்த மருத்துவப் புரட்சியாகக் கருதப் படவேண்டிய இந்த முறை ஐந்தில் ஒரு ஆண்களுக்கும் எட்டில் ஒரு பெண்களுக்கும் ஏற்படும் இருத நோய்களையும் மற்றும் நீரழிவு நோய்களால் அங்கங்கள் அகற்றப்படுதல் போன்றவை தவிர்க்கப்பட்டு நிவாரணம் கிடைக்கும்.
Blocked arteries in the legs, or peripheral arterial disease (PAD), affect one in five men and one in eight women aged over 50. It’s estimated that PAD results in 100 amputations a week in Britain, mostly in diabetics with poor blood circulation.
இப்போது இருக்கும் சிகிச்சை முறையில் சிறு குழாய்(a catheter) செலுத்தி அடைப்புக்கள் நீக்கப்படும். இதில் சிலசமயங்களில் அடைப்புக்கள் கடினமடைதல் அல்லது கல்சியமடைதல் ஏற்படலாம்.

புதிய Crosser Catheter ­System இன் படி குழாய்க்குள் ஒரு சிறு கம்பியைச் செலுத்தப்பட்டு அடைப்பு உள்ள இடத்தில் கம்பியின் முனை ஒரு நெடிக்கு 20,000 அதிர்வுகளை (vibrate 20,000 times a second) ஏற்படுத்தி அடைப்பை நீக்கும். இந்த அதிர்வுகளின் மூலம் அடைப்பில் துளை ஏற்படுத்தப்படும். பின்னர் சிறு பலூன் மூலம் துளை விரிவாக்கப்படும்.

The new device, the Crosser Catheter ­System, also inserts a wire. Once it is up against the blockage, the tip of the wire is made to vibrate 20,000 times a second.

This punches a hole through the middle of the deposit, allowing doctors to inflate a tiny balloon to displace the blockage.

Each procedure costs around £1,000 and the technology is being rolled out to NHS hospitals from this month.

Dr Sumaira Macdonald, who has ­trialled the device at the Freeman Hospital in Newcastle-upon-Tyne, says: ‘It has great potential.

Monday, 3 January 2011

நகைச்சுவைக் கதை: மதுவுடன் போன பாக்கிஸ்த்தானி, நிரோத்துடன் போன இந்தியன்


மத்திய கிழக்கு நாடொன்றில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு பாக்கிஸ்த்தானிய இளைஞனும், இந்திய இளைஞனும், இலங்கை இளைஞனும் வாகனமொன்றில் சென்று கொண்டிருக்கையில் பாலைவனத்துக்குள் வாகனம் பழுதடைந்து நின்று விட்டது. மூவரும் மிகுதிப் பயணத்தை நடந்து செல்வதாக முடிவு செய்து கொண்டனர்.

பாக்கிஸ்த்தானிய இளைஞன் வாகனத்தில் இருந்து ஒரு மது புட்டியை எடுத்துக் கொண்டு இறங்கி நடந்தான்.

இந்திய இளைஞன் வாகனத்தில் இருந்து ஆணுறைகளை எடுத்துக் கொண்டு இறங்கி நடந்தான்.

இலங்கை இளைஞன் வாகனத்தின் கதவை கழற்றிக் கொண்டு அதனைச் சுமந்து கொண்டு நடந்தான். மற்ற இருவரும் அதைப் பார்த்து ஆச்சரியப் பட்டனர்.

நடக்கும் வழியில் தாகம் எடுத்தால் குடிக்க நான் மது பானம் எடுத்தேன் என்றான் பாக்கிஸ்த்தானிய இளைஞன். போகும் வழியில் யாராவது பலான பெண்கள் அகப்பட்டால் முன்னேற்பாடாக நான் ஆணுறைகளை எடுத்தேன் என்றான் இந்திய இளைஞன்.

இலங்கை இளைஞன் இருவரையும் கேவலமாகப் பார்த்து உங்களுக்கு மதுவை மாதுவையும் தவிர வேறு திசையில் சிந்தனை செல்லாது. பாலைவனத்தில் நடக்கப் போகிறோம் மிகுந்த வெட்பமாக இருந்தால் அதை குறைப்பதற்காக நான் கதவைக் கொண்டு வருகிறேன். வெட்பம் அதிகரித்தால் நான் யன்னல் கண்ணாடியை கீழே இறக்கி வெட்பத்தைக் குறைப்பேன் என்றான் இலங்கை இளைஞன்.

Sunday, 2 January 2011

Googleஐ முந்தியது Facebook


பழைய நண்பர்களைத் தேடியறிந்து கொள்ளவும் புகைப்படங்களை நண்பர்களுடன பகிர்ந்து கொள்ளவும் என்று ஆரம்பிக்கப்பட்ட Facebook இப்போது உலகெங்கும் மிகப் பிரபலமடைந்துள்ளது.

தேடு பொறி வலைத்தளமான Googleஇனின் பிரபல்யத்தை சமூக வலைத்தளமான Facebook முந்திவிட்டது. 2010-ம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையிலாக அமெரிக்காவில் எடுத்த கணிப்பின்படி மொத்த வலைப் பணங்களில் கூகிள் 7.2%ம் ஆனால் முகப்புத்தகம் 8.9%. ஆறு வருடங்களில் Facebook உலகின் சிறந்த வலைத்தளமாக மாறி விட்டது. தற்போது அரை பில்லியன் பாவனையாளர்களை Facebook கொண்டுள்ளது. Facebookஐ ஆரம்பித்த Mark Zuckerberg 2010-ம் ஆண்டின் சிறந்த மனிதராக ரைம்ஸ் சஞ்சிகையால் தெரிந்தெடுக்க்ப்பட்டுள்ளார். அத்துடன் இவரை அடிப்படையாக வைத்து ஹொலிவூட் திரைப்படமும் எடுக்கப் படவிருக்கிறது.

வலைப் பாவனையாளர்கள் பலர் இப்போது தேடு பொறிகளைப் பாவிப்பதைத் தவிர்த்து தங்கள் நண்பர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளும் முறையைப் பின்பற்றுவதால் இப்போது Googleபாவனையில் சிறு சரிவு ஏற்பட்டுள்ளது.

Facebookஇல் பாவனையாளர்கள் தொடர்பான தகவல்கள் திருடப்படுவதாக குறை கூறுவோரும் உண்டு. Facebook நீங்கள் பகிரங்கப் படுத்தும் உங்கள் மின்னஞ்சல் முகவரி தொடர்பாக நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்த முகவரியை நீங்கள் Facebookஇற்கு மட்டும் பாவிப்பது நல்லது. அல்லது இதற்கென்று உருவாக்கிய ஒரு மின்னஞ்சலை பவிப்பது நல்லது. உங்கள் உறைவிட விலாசத்தை பகிரங்கப்படுத்துவதையோ அல்லது உங்கள் அன்றாட நடவடிக்கை பற்றி Facebookஇல் பகிரங்கப் படுத்துவதையோ தவிர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் விடுமுறையில் வேறு இடத்திற்கு செல்வதை Facebookஇல் பகிரங்கப் படுத்தினால் உங்கள் விட்டில் திருட்டுப் போகலாம். உங்கள் வங்கி நடவடிக்கைகளுக்கு நீங்கள் பாவிக்கும் மின்னஞ்சலை Facebookஇல் எந்தச் சந்தர்ப்பத்திலும் பகிரங்கப் படுத்தக் கூடாது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...