Saturday, 29 October 2011

பாக்கிஸ்த்தான் அதிபர் சார்தாரிக்கு எதிராகக் கிளர்ந்தெழும் மக்கள்.

சர்தாரி பிள்ளைகளுடன்
உங்கள் தலைவிதியை மாற்ற வாருங்கள்! உங்கள் நாட்டைக் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாக்க வருங்கள்!! என்ற கோரிக்கைகளுடன் பாக்கிஸ்த்தானிய அதிபர் அசிஃப் அல் சர்தாரிக்கு எதிராக மக்களைக் கிளர்ந்து எழச் செய்கிறார் பாக்கிஸ்தானிய முன்னாள் பாக்கிஸ்தானியப் பிரதம மந்திரி நவாஸ் சரிஃப். பாக்கிஸ்த்தானின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் நவாஸ் சரிஃப்பின் பாக்கிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சி {Pakistan Muslim League-Nawaz (PML-N) party} ஆட்சியில் உள்ளது. அதன் தலை நகரமான லாகூரில் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

அசிஃப் அல் சர்தாரி

2008-ம் ஆண்டு நடந்த தேர்தல் மூலம் பதவிக்கு வந்த பாக்கிஸ்தான் அதிபர் அசிஃப் அல் சர்தாரி பாக்கிஸ்தானின் முன்னாள் பிரதமர் சுல்பிகார் அலி பூட்டோவின் மகளும் முன்னாள் பிரதம மந்திரியுமான பெனாஸீர் பூட்டோவைத் திருமணம் செய்ததன் மூலம் அரசியலில் பிரபலாமானவர். 1996இல் ஊழலுக்காக கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டவர். 1990இல் பாராளமன்றத்திற்கும் 1997இல் மூதவைக்கும் தெரிவு செய்யப்பட்டவர். 2008இல் அமெரிக்க உப அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் பெண் வேட்பாளர் சேரா பெயினுடன் கிசுகிசுக்கப்பட்டவர் அசிஃப் அல் சர்தாரி. முன்னாள் பாக்கிஸ்தானிய அதிபர் பெர்வஸ் முசரஃப்பை பதவியில் இருந்து விரட்டியவர் அசிஃப் அல் சர்தாரி. முன்னள் அதிபர் முசரஃப் அதிபர்  சல்தாரியை ‘Asif Zardari is a criminal and a fraud. He’ll do anything to save himself. He’s not a patriot and he’s got no love for Pakistan. He’s a third-rater’ என்று விமர்சித்தார். 2003இல் சுவிஸ் நீதிமன்றில் நிதி மோசடிக்காக ஆறு மாதச் சிறைத்தண்டனையும் $50,000 அபராதமும் விதிக்கப்பட்டவர் அசிஃப் அல் சர்தாரி. இதில் இருந்து அசிஃப் அல் சர்தாரியை முசரப்பே விடுவித்தார். பாக்கிஸ்த்தானில்


வசூல்ராசா சர்தாரி

சர்தாரியை அவரது ஊழலுக்காக Mr. Ten Percent என்று அழைப்பர். சர்தாரிக்கு எதிராக நகைச்சுவைகள் கிண்டல்களைப் பகிரங்கப் படுத்தினால் 14 மாதச் சிறைத்தண்டனைக்குள்ளாகலாம். சர்தாரிக்கு பணம் கொடுக்க வேண்டிய ஒருவரிடம் பணத்தை வசூலிப்பதற்கக அவரது அடியாட்கள் அவரது காலில் ரிமோட் கொன்ரூலில் வெடிக்கக் கூடிய குண்டைப் பொருத்தி விட்டு அவரை அவரது வங்கிக்குச் சென்று பணம் எடுத்துத் தராவிடில் அதை வெடிக்க வைப்போம் என மிரட்டிப் பணத்தைப் பெற்றனர். பாக்கிஸ்த்தானில் முகவேடு போன்ற சமூக வலைத் தளங்களும் யூரியூப்பும் தடைச் செய்யப்பட்டுள்ளன. இவற்றினூடாக சர்தாரிக்கு எதிரான பிரச்சாரங்களை முன்னெடுக்கப்படுவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை.


அசிஃப் அல் சர்தாரியின் அமெரிக்காவுடனான இரட்டை வேட நட்பு

அமெரிக்காவின் நெருங்கிய நண்பரான அசிஃப் அல் சர்தாரி அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிகாவுடன் ஒத்துழைத்துக் கொண்டே பாக்கிஸ்த்தானில் செயற்படும் இசுலாமியத் தீவிரவாதிகளுடனும் தொடர்புகளை வைத்திருப்பவர். அமெரிக்காவிற்கு சர்தாரியின் இரட்டை வேடம் நன்கு புரியும். அப்படி ஒரு இரட்டை வேடம் போடாமல் பாக்கிஸ்த்தானில் ஆட்சியில் இருக்க முடியாதென்பதை அமெரிக்க உணர்ந்து கொண்டுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவும் பாக்கிஸ்த்தானும் பகிரங்கமாக அடிக்கடி முரண்பட்டு அறிக்கை விடுவது இரண்டு பகுதியினரதும் இரட்டை வேடம்.

அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதல்
பாக்கிஸ்த்தான் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் அடிக்கடி பாக்கிஸ்த்தான் பிரதேசத்துக்குள் புகுந்து அங்குள்ள இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தும். அதில் பல அப்பாவிகள் கொல்லப் படுவதுண்டு. அப்பிரதேசங்களில் வாழும் மக்கள் அல் கெய்தா, தலிபன் போன்ற தீவிரவாதிகளால் கொல்லப்படும் அப்பாவிகளிலும் பார்க்க அமெரிக்கரகளால் கொல்லப் படும் அப்பாவிகளின் எண்ணிக்கை அதிகம் என்று ஆட்சேபம் தெரிவிக்கின்றனர். அசிஃப் அல் சர்தாரிக்கு எதிராக பாக்-ஆப் எல்லைப் பகுதி வாழ் மக்கள் மிகவும் ஆத்திரம் அடைந்துள்ளனர். பல ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதல்களுக்கு எதிராக நடக்கின்றன.

பாக்கிஸ்த்தானிலும் மல்லிகைப் புரட்சி
சர்தாரி ஆட்சியின் ஊழலுக்கும் நாட்டில் அதிகரிக்கும் விலைவாசிக்கும் எதிராக 28-10-2011 வெள்ளிக் கிழமை பாக்கிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரமும் பாக்கிஸ்தானிய அரசியல் அதிகார மையமுமான லாகூரில் எதிர்க்கட்சியான முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சி ஆயிரக் கணக்கில் மக்களைத் திரட்டி பெரும் ஆர்ப்பாட்டத்தைச் செய்தது. பாக்கிஸ்தானிலும் ஒரு மல்லிகைப் புரட்சியை ஏற்படுத்தி சர்தாரியைப் பதவியில் இருந்து விரட்ட முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியினர் முயல்கின்றனர். கூட்டத்தில் போ! சர்தாரி போ!! என்ற முழக்கம் அதிர்ந்தது. கொள்ளையிட்ட நாட்டுச் சொத்தை திருப்பிக் கொடு என்றனர். சர்தாரி பதவி விலகாவிடில் கைபரில் இருந்து கராச்சிவரை எகிப்திய தரிஹ் சதுக்கமாக மாறிப் பெரும் ஆர்ப்பாட்டம் வெடிக்கும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. பிற்பகல் இரண்டு மணிக்கு ஆரம்பமாக இருந்த கூட்டம் 5.30 இற்குப் பிறகுதான் ஆரம்பித்தது. முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பாக்கிஸ்தானில் ஊழலற்ற ஆட்சியை ஏற்படுத்த முடியாது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...