தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் அமெரிக்காவின் உன்னத கருவிகளாகப் பாவிக்கப் பட்டு வந்த ஆளில்லாப் போர் விமானங்கள் கணனிக் கிருமிகளால்(வைரஸ்) பாதிப்படைந்திருந்தன. இப்போது அவை மீண்டும் தாக்குதல்களை நடாத்தியுள்ளன. பாக்கிஸ்த்தானிலும் யேமனிலும் அவை இரு வெற்றீகரமான தாக்குதல்களை நிறைவேற்றியுள்ளன.
பாக்கிஸ்த்தானின் வடமேற்குப் பிராந்தியத்தில் உள்ள ஆப்கான் எல்லை அண்டியுள்ள பிரதேசத்தில் இருந்த ஹக்கானி வலையமைப்பின் உறுப்பினர்கள் எனச் சந்தேகிக்கப்படுபவர்கள் ஆறுபேர் இன்று(15-10-2011) கொல்லப்பட்டனர். அங்கோர அத்தா என்னும் நகரில் அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்கள் நடாத்திய ஏவுகணைத் தாக்குதல் மௌலவி நஜீர் என்பவரின் தலைமையில் இயங்கும் தீவிரவாதிகளை இலக்கு வைத்துத் தாக்குதல் நடாத்தியது மௌலவி நஜீர் தலைமையில் இயங்கும் குழுவினர் பாக் அரசுடன் ஒரு உடன்பாட்டுடன் இருப்பதாகக் கருதப்படுகிறது. அவர்கள் பாக் அரசுக்கு எதிராக எந்தத் தாக்குதல்களையும் மேற் கொள்ள மாட்டார்கள். பதிலாக பாக் அரசு அவர்களை சுதந்திரமாக இயங்க அனுமதித்துள்ளது.
அமெரிக்க ஆளில்லா விமானங்கள் தொடர்பான முந்திய பதிவைக் காண இங்கு சொடுக்கவும்
இதே வேளை இன்று சனிக்கிழமை யேமனில் அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்கள் நடாத்திய தாக்குதலில் அல் கெய்தா அமைப்பைச் சேர்ந்த ஏழு உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களுள் எகிப்தியரான இப்ராஹிம் அல் பன்னா என்ற அல் கெய்தாவின் முக்கியஸ்த்தர் ஒருவரும் அடக்கம். இவர் பன்னாட்டு ரீதியில் பல தாக்குதல்களுக்கு திட்டமிடுபவர்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...

-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
-
“எரிபொருள் இன்றி கைவிடப்பட்ட போர்த்தாங்கிகள், உணவின்றி தவிக்கும் படையினர், சுட்டு வீழ்த்தப்பட்ட விநியோக விமானங்கள்” இப்படிப்பட்ட செய்திகள...
-
உலகத்தி லேயே சீனர்கள் அதிகம் வெறுக்கும் நாடாக ஜப்பான் இருக்கின்றது. 1937இல் இருந்து 1945வரை ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையில் கடும் போர்...
1 comment:
fuck off america.
Post a Comment