Tuesday, 2 August 2011

பின் லாடன் கொலைபற்றிப் புதிய தகவல்கள்

பின் லாடனைக் கொன்றபின் அவரது உடலை ஒரு பையில் போட்டு எடுத்துச் சென்றனர். முதல் வேலையாக அவரது எலும்புக்குள் இருந்து டி.என்.ஏ மாதிரிகளை எடுத்தனர். பின் லாடனைக் கொன்றவுடன் அவர்கள் அனுப்பிய செய்தி "Geronimo E.K.I.A" . பின் லாடனுக்கு அமெரிக்க உளவுத் துறை வைத்த குறியீட்டும் பெயர்Geronimo.  E.K.I.A என்பது enemy killed in action எதிரி நடவடிக்கையில் கொல்லப்பட்டான். இது போன்ற பல புதிய தகவல்களை நியூயோர்க்கர் வெளியிட்டுள்ளது.


தலைக்கவசத்தில் காணொளிக் கருவிகள் இருந்திருக்கவில்லை.
அமெரிக்க சீல் படையினர் தலைக்கவசத்தில் காணொளிக் கருவிகள் இருந்திருக்கவில்லை என இப்போது கூறப்படுகிறது. முன்பு பின் லாடனைக் கொன்ற அமெரிக்க சீல் படையினரின் தலைக் கவசத்தில் காணொளிப் பதிவு-ஒளிபரப்புக் கருவிகள் பொருத்தப்பட்டிருந்ததாகவும் அவற்றின் மூலம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பின் லாடனுக்கு எதிரான படை நடவடிக்கையை நேரடியாகப் பார்த்துக் கொண்டிருந்தார் என்றும் கூறப்பட்டது. பின் லாடனின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி இங்குகாணலாம்: பின்லாடன் இருப்பிடம் அறிந்த விபரமும் தாக்குதல் விபரமும்.

பின் லாடனைக் கொன்றவர் விபரம் யாருக்கும் தெரியாது.
பின்லாடனைக் கொன்றவர் யார் என்பது பற்றி பராக் ஒபாமா அறிய முற்படவில்லையாம். அவரது பெயர் இன்றுவரை வெளியிடப்படவில்லை. இது ஒரு குழுவினரின் துணீகர முயற்ச்சி தனிப்பட்ட ஒருவருக்கு மட்டும் அதற்கான பெயரும் புகழும் போய்ச் சேர்வதை விரும்பவில்லை என்று விளக்கமளிக்கப்பட்டது. ஆனால் அவருக்கோ அவரது குடும்பத்தினருக்கோ ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாகவும் இருக்கலாம்.

23பேரின் 25நிமிட வேலை.
இறுதிப் படை நடவடிக்கையில் நிலம்-நீர்-ஆகாயம் ஆகிய மூன்றிலும் செயற்படும் திறன் கொண்ட அமெரிக்க கடற்படையின் சிறப்புப் பயிற்ச்சி பெற்ற சீல் படையினர் 23பேர் 25 நிமிடத்தில் தங்களுக்கு இட்ட பணியைச் செய்து முடித்தனர்.

முதற் கோணல் முற்றும் கோணல் அல்ல்.
தாக்குதலின் முதல் நிமிடத்தில் ஒரு Black Hawkஎன்னும் உழங்கு விமானம்(ஹெலிக்கொப்டர்) விபத்தில் சிக்கி வீழ்ந்தது. அதனால் படை நடவடிக்கை தோல்வியில் முடியுமா என்ற அச்சம் சில கணங்கள் நிலவியது. இறுதியில் தோல்வியே வெற்றியில் முதல் படியானது.

தற் கொலைத் தாக்குதலுக்கு எதிராக ஒரு சீல் படையினரின் துணிகரச் செயல்.
தாக்குதலுக்கு சென்றவர்களின் பெரும் அச்சுறுத்தலாக விளங்கியது பின் லாடனின் மூன்று மனைவியரில் யாராவது ஒருவராவது தற்கொலை அங்கியுடன் இருப்பார்களா என்பதே. இதிலிருந்து தப்ப சீல் படையினரில் ஒருவர் மூன்று மனைவிகளையும் தனிமைப்படுத்தி தனியாக ஓரிடத்தில் பின் லாடனைக் கொல்லும் வரை தன்னுடன் வைத்திருந்தாராம்.

பின் லாடனை உயிருடன் பிடிக்க முயலவில்லையாம்.
 நியூயோர்க்கர் மேலும் கூறுகையில் பின் லாடனை உயிருடன் பிடிக்கும் எண்ணம் சிஐஏக்கு இருந்திருக்கவில்லை என்கிறது. ஆனால் பின் லாடனை ஏன் அமெரிக்கா அவர் இருந்த மாளிகையைக் குண்டு வீச்த் தாக்கிக் கொல்லவில்லை என்ற கேள்வி இன்றும் இருக்கிறது. பராக் ஒபாமா பின் லாடன் தங்கி இருந்த அழகிய நகரான அபோட்டாபாத்தில் குண்டு வீச்சால் ஒரு பெரும் குழி ஏற்படுவதை விரும்பவில்லையாம்.


பராக் ஒபாமா கொடுத்த பரிசு.
பின் லாடனின் உடலத்தை பெற்ற படைத் தளபதிக்கு உடலத்தின் உயரத்தை அளப்பதற்கு அவரிடம் அப்போது அளவு நாடா இருந்திருக்கவில்லை. பின் லாடனின் அடையாளங்களில் முக்கியமானது அவரது ஆறடி நாலு அங்குல உயரமே. அதை உறுதி செய்ய முடியாமல் ஒரு திண்டாட்டம் ஏற்பட்டதாம். பின்னர் கடறபடையினரை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சந்தித்த போது தளபதிக்கு ஒரு அளவு நடா ஒபாமாவால் பரிசாகக் கொடுக்கப்பட்டதாம்.


சீல் படையினர் பாவித்த கருவிகள்
Desert digital camouflage gear,  laminated map of the compound. silenced Sig Saucer P226 pistol, silenced M4 rifle போன்றவற்றை சீல் படையினர் வைத்திருந்தனர்.

நம்பமுடியாத பாக்கிஸ்த்தானியர்.
பின் லாடன் இருந்த மாளிகைக்குள் சுரங்கப்பாதை அமைத்து உள்புகும் திட்டமும் இருந்ததாம். ஆனால் இதற்கான காலம் அதிகம் எடுக்கும். அத்துடன் பாக்கிஸ்தானியரின் உதவியும் தேவைப்படும். பாக்கிஸ்தானியர் இந்த திட்டத்தை அம்பலப்படுத்திவிடுவார்கள் என்பதால் அது கைவிடப்பட்டது. இதுபற்றி குறிப்பிட்டது: There was a real lack of confidence that the Pakistanis could keep this secret for more than a nanosecond. பாக்கிஸ்தானியர் ஒரு நொடியின் பில்லியனில் ஒரு பங்கு நேரமாவது இரகசியத்தைக் காப்பாற்ற மாட்டார்கள்.{ A nanosecond (ns) is one billionth of a second}

இரு வாரப் பயிற்ச்சி
 வட கரோலினாவில் பின் லாடன் தங்கி இருந்த மாளிகை போல் ஒன்று அமைக்கப்பட்டது. வைஸ் அட்மிரல் பில் மக்ரவென் தலைமையில் இரு வாரங்கள் அங்கு 23 சீல் படையினருக்கும் பயிற்ச்சி அளிக்கப்பட்டது.  பின்னர் நெவேடாவில் உள்ள ஒரு பாலை வனத்திலும் ஒத்திகை பார்க்கப்பட்டது. உழங்கு வானூர்திகள்(ஹெலிக்கொப்டர்கள்) இதற்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்டன. ரடார்களில் தென்படாமல் இருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. உழங்கு வானூர்திகளில் இருந்து வரும் ஒளி, ஒலி, வெப்பம் போன்றவை பாக்கிஸ்தானியப் படையினரால் உணரப்படாமல் இருக்கும் படியும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கடைசி நேரத்தில் அஹமட் என்பவர் தாக்குதல் அணியில் 24வது ஆளாகச் சேர்க்கப்பட்டார். மொழி பெயர்ப்பாளராக. அதற்கு முன்பு வானூர்திகளில் இருந்து கயிற்றின் மூலம் இறங்கும் அனுபவமற்றவர் அஹமட் ஆனால் விரைவில் அதைப்பயின்று கொண்டார். இன்னும் ஒரு கெய்ரோ என்னும் நாயும் அணியில் இணைக்கப்பட்டது. அதன் வேலை பின் லாடனின் மாளிகைக்குள் வெளி ஆட்கள் வராமல் பார்த்துக் கொள்வது. 

கட்டளைப் பணியகங்கள்.
ஏப்ரல் 26-ம் திகதி ஜேர்மனியூடாக சீல் படையின்ர ஆப்கானிஸ்தான் சென்றனர். இவர்களுக்கான கட்டளைப்பணியங்கள். பெண்டகன், சிஐஏ தலமையகம்,  ஜலலாபாத்(மக்ரவென் என்னும் வைஸ் அட்மிரல்), இஸ்லாமபத் அமெரிக்கத் தூதுவரகம், என்பவை செயற்பட்டன இவ்ற்றிற்கிடையே காணொளித் தொடரபாடல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. சிஐஏ தலமையக்த்தில் இருந்து நேரடியாக நடவடிக்க்கைகள் பற்றி வெள்ளை மாளிகை போர்-அறைக்கு விளக்கிக் கொண்டிருந்தார்.


பாக்கிஸ்தானியருடன் போருக்குத் தாயார்.
சீல் படை நடவடிக்கைக்கு  பாக்கிஸ்தானியப் படையினரிடம் இருந்து எதிர்ப்புக் கிளம்பினால் அதற்கு எதிரான படை நடவடிக்கைகளுக்கு அமெரிக்க விமானங்கள் பல தயாராக இருந்தன. படை நடவடிக்கையின் போது சில விமானங்கள் அபோட்டாபாத்தின் மேல் பறந்து கொண்டிருந்தன. Black Hawk என்னும் உழங்கு வானூர்திகளின் செலுத்துனர்கள் ஒளி ஏதும் இன்றி இரவில் பார்க்கும் கண்ணாடி அணிந்தபடி செயற்பட்டனர்.


அதிகாலை 4-00மணி அப்போதைய சிஐஏ தலவர் பராக் ஒபாமாவிற்கு அறிவிக்கிறார்: சீல் படையினர் பின் லாடனின் மாளிகையை அண்மிக்கிறார்கள். 
உடனே ஒபாமா எழுந்து தான் இதை நேரடியாகப் பார்க்க வேண்டும் என்கிறார். பின் லாடன் மாளிகையின் மேல் 15,000அடி உயரத்தில் மிதந்து கொண்டிருந்த அமெரிக்க ஆளில்லா விமானமூலம் தகவல்கள் பெறப்படுகின்றன.


முதற் பலியான தகவல் தொடர்பாளர்.
சீல் படையினர் முதலில் சிறு பிரிவுகளாகப் பிரிகின்றனர். ஒரு பிரிவினர் பின் லாடனின் மாளிகையின் விருந்திரகத்தில் (guest house) இறங்குகின்றனர். அங்கு பின் லாடனின் நம்பிக்கைக்கு பாத்திரமானவரும் பின் லாடன் மற்ற அல் கெய்தாவினருடன் தொடர்பு ஏற்படுத்தப் பயன்பட்டவருமான messenger ஒரு ஏகே47 துப்பாக்கியுடன் மனைவி சகிதம் வருகிறார். இருவரும் உடனே சுட்டுக் கொல்லப்படுகின்றனர்.


முன் வந்த மூன்றாம் மனைவி
மூன்று சீல்கள் ஒரு இரும்புக் கதவை குண்டு வைத்துத் தகர்க்கின்றனர். படிகளில் அவர்கள் ஏறும் போது பின் லாடனின் 23 வயது மகன் ஒரு ஏகே-47 உடன் வருகிறார். அவர் சுட்டுக் கொல்லப்படுகிறார். மாடிக்குச் சென்ற சீல் படையினருக்கு தாடியும் நெடிய உருவமும் கொண்ட பின் லாடனை அடையாளம் காண்பதில் சிரமம் இருக்கவில்லை. முதலில்  பின் லாடனின் மனைவியரில் இருவர் பின் லாடனை மறைக்கின்றனர். இளைய மனைவி அமல் அல் ஃபற்றா முன்னர் நகருகிரார். அவரது காலில் சுடப்படுகிறது. அவர் விழ ஒரு சீல் வீரன் மற்ற இரு மனைவியரையும் கட்டிப் பிடித்துக் கொள்கிறார். அவர் அவர்கள் மூவரையும் பிரித்து தனைமைப்படுத்துகிறார். மனைவியர் தற்கொலை அங்கி அணிந்திருக்கலாம் என்ற பயத்தில் அவர்களை அவர் விலக்கிக் கொள்கிறார். பதினொரு வருடங்கள் பல மில்லியன் டொலர்கள் செலவளித்துத் தேடித்திரிந்த அமெரிக்காவின் முதலாம் எதிரி பில் லாடன் தொழுகைத் தொப்பியும் சல்வார் கம்மீஸும் அணிந்தபடி ஆயுதமின்றி சீல் படையினரின் துப்பாக்கி முனையில். முதலில் நெஞ்சிலும் பின்னர் இடது கண்ணிலும் பின் லாடன் சுடப்படுகிறார். For God and country - Geronimo, Geronimo, Geronimo - கடவுளுக்காகவும் நாட்டிற்காகவும் ஜெரோனிமோ, ஜெரோனிமோ, ஜெரோனிமோ என்று ஒலி பரப்பப்படுகிறது. ஒபாமா முதற் சொன்னது அங்குள்ள அனைத்து சீல் படையினரும் பாதுகாப்பாக வரும்வரை எனக்கு நிம்மதியில்லை என்பதே.


பின்னர் சீல் படையினர் மிக விரைவாகச் செயற்படுகின்றனர். பல கணனிகளும் இலத்திரனியல் பதிவேடுகளும் வாரி அள்ளப்படுகின்றன. நீலப் படங்கல் பல அங்கு இருந்தனவாம்.  இன்னொரு வானூர்தி வந்து பின் லாடனின் டி.என்.ஏ மாதிரிகளைச் சேகரிக்கிறது. பின் லாடனின் எலும்பு மொச்சை எடுக்கப்படுகிறது. ஜலலா பாத்தில் பின் லாடனின் உடலை வைஸ் அட்மிரல் மக்ரவன் அடையாளம் காண்கிறார். பின் லாடனின் உடல் ஆப்கானிஸ்தான் கொண்டு செல்லப்படுகிறது.

சவுதி அரேபியாவிற்கு அறிவிக்கப்படுகிறது.
பின் லாடனைக் கொன்ற செய்தி சவுதி உளவுத் துறைக்கு அறிவிக்கப்படுகிறது.  அவரது உடலை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று வினவப் பட்டது. அதற்கு அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. உடல் பின்னர் கடறபடைக் கப்பல் U.S.S CARL VINSON இற்கு கொண்டு செல்லப்பட்டு கடலில் வீசப்பட்டது.


நாயைச் சந்திக்க விரும்பிய பராக் ஒபாமா
சீல் பிரிவினரின் படை நடவடிக்கையில் நாயும் பங்கு பெற்றதை அறிந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தான் அந்த நாயைச் சந்திக்க விரும்புவதாகச் சொன்னார்.

1 comment:

வசந்தவாசல் அ.சலீம்பாஷா said...

அடங் கொக்கமக்கா...
புதுசு புதுசா அவிழ்த்து விடறாய்ங்கப்பா!

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...